18-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
பிதாஸ்ரீ அவர்களின் புனித நினைவு நாளன்று
படிப்பதற்கான பாப்தாதாவின் இனிய மகாவாக்கியங்கள்.
கேள்வி:
வருங்காலத்திற்காக குழந்தைகள் தந்தையிடம் என்ன வியாபாரம்
செய்துள்ளீர் கள்? அந்த வியாபாரத்தினால் சங்கமத்தில் என்ன லாபம்
இருக்கிறது?
பதில்:
தேகம் உள்பட எதெல்லாம் பழையது இருக்கிறதோ, அவை அனைத்தையும்
தந்தைக்கு அர்ப்பணம் செய்து பாபா, நாங்கள் உங்களிடமிருந்து பின்
அங்கு (வருங்காலத்தில்) எல்லாமே எடுத்துக் கொள்வோம் என்று
பாபாவிடம் கூறுகிறீர்கள். இது எல்லாவற்றையும் விட நல்ல
வியாபாரம் ஆகும். இதனால் உங்களுடைய அனைத்தும் பாபாவின்
இரும்புப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு விடும், மேலும்
இப்பொழுது இங்கு நாம் சிறிது நேரத்திற்கு இருப்போம். பின்னர்
நாம் நமது இராஜதானியில் இருப்போம் என்ற அளவற்ற மகிழ்ச்சி
இருக்கும். உங்களிடம் யாராவது கேட்டார்கள் என்றால் ஆகா! நாங்களோ
எல்லையில்லாத தந்தையிட மிருந்து, எல்லையில்லாத சுகத்தின் ஆஸ்தி
பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று கூறுங்கள். இப்பொழுது நாம்
எவர்ஹெல்தி, எவர் வெல்தி - என்றும் ஆரோக்கிமானவராகவும்,
செல்வந்த ராகவும் ஆகிறோம்.
ஓம் சாந்தி.
ஆன்மீக தந்தை, ஆன்மீக குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார்.
இனிமையான குழந்தைகளே, இங்கு வந்து அமரும் பொழுது நீங்கள் ஆத்ம
உணர்வுடையவராக ஆகி, தந்தையின் நினைவில் அமருங்கள். இந்த (அட்டென்ஷன்)
கவனம் உங்களை பொறுத்தவரை (ஃபார் எவர்) என்றைக்குமே உள்ளது.
உயிருள்ளவரையும் தந்தையை நினைவு செய்துக் கொண்டே இருங்கள்.
நினைவு செய்யாமல் இருந்தீர்கள் என்றால், ஜென்ம ஜென்மாந்திரங்
களின் பாவங்கள் கூட அழியாது. படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்
இடை கடை பற்றிய முழு சுயதரிசன சக்கரம் உங்களுடைய புத்தியில்
சுற்ற வேண்டும். நீங்கள் (லைட் ஹவுஸ்) கலங்கரை விளக்கம்
ஆவீர்கள் அல்லவா? ஒரு கண்ணில் சாந்திதாமம் மற்றும் இன்னொரு
கண்ணில் சுகதாமம் உள்ளது. எழுந்தாலும், அமர்ந்தாலும்,
நடந்தாலும், சென்றாலும் தங்களை லைட் ஹவுஸ் என்று
உணர்ந்திருங்கள். தங்களை லைட் ஹவுஸ் என்று உணர்ந்திருக்கும்
பொழுது, தங்களுக்கும் நன்மை செய்கிறீர்கள், மேலும்
மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறீர்கள். பாபா பல்வேறு (யுக்திகள்)
வழிமுறைகளை கூறுகிறார். யாரையாவது வழியில் சந்தித்தாலும்,
அவர்களுக்கு கூற வேண்டும், இது துக்கதாமம் ஆகும் - சாந்திதாமம்,
சுகதாமம் செல்ல விரும்பு கிறீர்களா? சமிக்ஞை கொடுக்க வேண்டும்.
லைட் ஹவுஸ் கூட சமிக்ஞை கொடுக்கிறது அல்லவா? வழி காண்பிக்கிறது.
நீங்கள் கூட சுகதாமம், சாந்தி தாமத்திற்கான வழியை கூற வேண்டும்.
இரவு பகலாக இதே ஆர்வம் இருக்க வேண்டும். யோகத்தின் பலத்தினால்,
நீங்கள் யாருக்காவது சிறிதளவு கூட புரிய வைத்தீர்கள் என்றால்,
அவர்களுக்கு உடனே அம்பு போல பதிந்து விடும். யாருக்கு அம்பு
போல பதிகிறதோ, அவர்கள் ஒரேயடியாக காயப்பட்டு விடு கிறார்கள்.
முதலில் காயப்பட்டு விடுகிறார்கள், பிறகு பாபாவினுடையவர்களாக
ஆகி விடுகிறார் கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அன்புடன்
நினைவு செய்யும் பொழுது, தந்தைக்கும் கவர்ச்சி ஏற்படுகிறது. ஒரு
சிலரோ முற்றிலும் நினைவே செய்வதில்லை. ஆக தந்தைக்கு இரக்கம்
ஏற்படுகிறது. பிறகும் கூறுகிறார், இனிமை யான குழந்தைகளே,
முன்னேற்றம் அடைந்து கொண்டே இருங்கள். புருசார்த்தம் (முயற்சி)
செய்து, முன்னால் நம்பரில் வாருங்கள். பதீத பாவனர், சத்கதி
அளிக்கும் வள்ளல் ஒரேயொரு தந்தை ஆவார். அந்த ஒரேயொரு தந்தையைத்
தான் நினைவு செய்ய வேண்டும். தந்தையை மட்டுமல்ல, கூட கூடவே (ஸ்வீட்
ஹோம்) இனிமையான இல்லத்தையும் நினைவு செய்ய வேண்டும். ஸ்வீட்
ஹோம் மட்டுமல்ல, சொத்து கூட வேண்டும். எனவே சொர்க்க தாமத்தையும்
நினைவு செய்ய வேண்டும்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளை பர்ஃபெக்ட் - சம்பூர்ணமாக
ஆக்குவதற் காக தந்தை வந்துள்ளார். எனவே எதுவரை நாம் பர்ஃபெக்ட்
ஆகி உள்ளோம் என்பதை நேர்மையான வராக ஆகி, உண்மையுடன் தங்களை
சோதிக்க வேண்டும். பர்ஃபெக்ட் ஆவதற்கான யுக்தி கூட தந்தை கூறிக்
கொண்டே இருக்கிறார். முக்கியமான குறையே தேக அபிமானத்தினுடையது
ஆகும். தேக அபிமானமே நமது நிலையை முன்னேற விடுவ தில்லை. எனவே
தேகத்தையும் மறக்க வேண்டும். தந்தைக்கு குழந்தைகளிடம் எவ்வளவு
(லவ்) அன்பு இருக்கிறது. தந்தை குழந்தைகளை பார்த்து
சந்தோசப்படுகிறார். எனவே குழந்தைகள் கூட அந்த அளவு மகிழ்ச்சி
யாக இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்து உள்ளுக்குள்
நெகிழ்ந்து போய் விட வேண்டும். நாளுக்கு நாள் மகிழ்ச்சியின்
அளவு அதிகரித்தபடியே இருக்க வேண்டும். நினைவு யாத்திரை மூலமாகவே
மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கும். அந்த அளவு மெல்ல மெல்ல ஏறும்.
வெற்றி தோல்வி ஏற்பட்டு ஏற்பட்டு, பிறகு வரிசை கிரமப்படி,
புருசார்த்தத் திற்கேற்ப முந்தைய கல்பத்தை போல அவரவர் பதவியை
அடைந்து விடுங்கள். பாப்தாதா குழந்தைகளின் நிலையை சாட்சியாக (பார்வையாளர்)
இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். மேலும் புரிய வைத்துக்
கொண்டும் இருக்கிறார். பாப்தாதா இருவருக்குமே குழந்தைகள் மீது
மிகுந்த அன்பு உள்ளது. ஏனெனில் கல்ப கல்பமாக அன்பான சேவை
செய்கிறார், மேலும் மிகுந்த அன்புடன் செய்கிறார். ஆனால்
குழந்தைகள் ஸ்ரீமத்படி நடப்ப தில்லை என்றால், தந்தை என்ன தான்
செய்ய முடியும்? தந்தைக்கு மிகவுமே இரக்கம் ஏற்படுகிறது. மாயை
தோற்கடித்து விடுகிறது. தந்தை மீண்டும் நிற்க வைத்து விடுகிறார்.
எல்லோரையும் விட இனிமையிலும் இனிமை யானவர் அந்த ஒரு தந்தை ஆவார்.
எவ்வளவு இனிமையானவர், எவ்வளவு பிரியமானவர், சிவ போலா (கள்ளம்
கபடமற்ற) பகவான் ஆவார். சிவ போலா என்பதோ, ஒரே ஒருவருடைய பெயர்
ஆகும்.
இனிமையான குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் மிக மிக மதிப்புடைய
வைரம் ஆகிறீர்கள். மதிப்புடைய வைரம் வைடூரியங்களை
பாதுகாப்பிற்காக எப்பொழுதும் வங்கியில் வைக் கிறார்கள். பிராமண
குழந்தைகளாகிய நீங்களும் மதிப்பிற்குரியவர்கள் ஆவீர்கள்.
நீங்களும் சிவபாபாவின் வங்கியில் பாதுகாப்பாக அமர்ந்துள்ளீர்கள்.
இப்பொழுது நீங்கள் பாபாவின் பாதுகாப்பில் இருந்து அமரர்
ஆகிறீர்கள். நீங்கள் காலன் மீது கூட வெற்றி அடைந்து
கொண்டிருக்கிறீர்கள். சிவபாபாவினுடையவராக ஆன உடனேயே,
பாதுகாப்புடையவர்கள் ஆகி விட்டீர்கள். மற்றபடி உயர்ந்த பதவி
பெறுவதற்காக புருசார்த்தம் செய்ய வேண்டும். உலகத் தில்
மனிதர்களிடம் எவ்வளவு தான் பணம் செல்வம் இருந்தாலும் சரி, ஆனால்
அவை அனைத்தும் முடிந்து விடப் போகிறது. எதுவுமே இருக்காது.
குழந்தைகளாகிய உங்களிடமோ இப்பொழுது எதுவும் இல்லை. இந்த தேகம்
கூட இல்லை. இதையும் தந்தைக்கு கொடுத்து விடுங்கள். ஆக யாரிடம்
எதுவுமே இல்லையோ, அவர்களிடம் எல்லாமே இருப்பது போலாகும்.
நீங்கள் எல்லையில்லாத தந்தையிடம் வியாபாரம் செய்திருப்பதே,
வருங்கால புதிய உலகத் திற்காக. பாபா தேகம் உற்பட இந்த பழையது
எதெல்லாம் இருக்கிறதோ, அது அனைத்தையுமே உங்களுக்கு கொடுக்கிறோம்
மற்றும் உங்களிடமிருந்து பிறகு அங்கே எல்லாமே பெற்றுக் கொள்வோம்
என்று கூறுகிறீர்கள். எல்லாமே பாபாவினுடைய இரும்பு பெட்டியில்
பாதுகாப்பானதாக ஆகி விட்டது. குழந்தைகளாகிய உங்களுக்குள்
எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். இன்னும் மீதம் சிறிது சமயமே
உள்ளது. பிறகு நாம் நமது ராஜதானியில் இருப் போம். உங்களை
யாராவது கேட்டால் சொல்லுங்கள், ஆகா, நாங்களோ எல்லையில்லாத தந்தை
யிடமிருந்து, எல்லையில்லாத சுகத்தின் ஆஸ்தி எடுத்துக் கொண்டி
ருக்கிறோம். எவர்ஹெல்தி, வெல்தி ஆகிறோம். நமது எல்லா மனோ
விருப்பங்களும் பூர்த்தி ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த தந்தை
எவ்வளவு (லவ்லி ப்யூர்) அன்பானவராக, தூய்மை யானவராக இருக்கிறார்.
அவர் ஆத்மாக்களையும் தனக்கு சமானமாக ப்யூர் - தூய்மையாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். நீங்கள் எந்த அளவிற்கு தந்தையை நினைவு
செய்வீர்களோ, அந்த அளவிற்கு மிகவுமே (லவ்லி) அன்பானவர் ஆவீர்கள்.
தேவதைகள் எவ்வளவு லவ்லி ஆக இருக்கிறார்கள். அதனால் தான்
இதுவரையும் அவர்களது ஜட சித்திரங்களை பூஜித்துக் கொண்டே
இருக்கிறார்கள். எனவே இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அந்த
அளவு லவ்லி ஆக வேண்டும். எந்தவொரு தேகதாரி, எந்தவொரு பொருள்
கடைசியில் நினைவிற்கு வரக்கூடாது. பாபா உங்களிட மிருந்தோ
எங்களுக்கு எல்லாமே கிடைத்து விட்டுள்ளது. நம் மனதை உறுத்திக்
கொண்டே இருக்கும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்தவொரு விகர்மமும்
நம் மூலம் ஏற்படக் கூடாது என்று இனிமையான குழந்தைகள் தங்களிடமே
தாங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக கூடுமானவரை
தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். உயர்ந்த பதவியை பெறுவதற்கான
புருசார்த்தம் செய்ய வேண்டும். வரிசைக் கிரமமாகவே இருப்பார் கள்.
இரத்தினங்களில் கூட வரிசைக்கிரமமாக இருக்கும் அல்லவா? ஒரு
சிலவற்றில் நிறைய குறை இருக்கும். ஒரு சில முற்றிலும் (ப்யூர்)
தூய்மையாக இருக்கும். தந்தை கூட வைர வியாபாரி ஆவார் அல்லவா?
எனவே தந்தை கூட ஒவ்வொரு இரத்தினத்தையும் பார்க்க வேண்டி உள்ளது.
இது எப்பேர்ப்பட்ட இரத்தினம்? இதில் எந்தவொரு (டிஃபெக்ட்) பழுது
உள்ளது. நல்ல நல்ல (ப்யூர்) தூய இரத்தினங்களை தந்தை கூட மிகவும்
அன்புடன் பார்ப்பார். நல்ல நல்ல ப்யூர் இரத்தினங்கள் தங்க
டப்பாவில் வைக்கப்படுகிறது. நான் எப்பேர்ப்பட்ட இரத்தினம் ஆவேன்.
என்னிடம் என்ன (டிஃபெக்ட்) குறை உள்ளது என்பதை சுயம் குழந்தைகள்
கூட புரிந்திருப் பார்கள்.
இப்பொழுது நீங்கள் ஆகா, சத்குரு ஆகா, எங்களுக்கு இந்த வழியை
அவர் கூறி உள்ளார் என்பீர்கள். ஆகா அதிர்ஷ்டமே ஆகா. ஆகா டிராமா
ஆகா. உங்களுடைய இதயத் திலிருந்து வெளிப்படுகிறது - நன்றி பாபா
உங்களுக்கு - எங்களுடைய இரண்டு பிடி அரிசியை பெற்றுக் கொண்டு
எங்களுக்கு (சேஃப்ட்டி) பாதுகாப்புடன் வருங்காலத்தில் நூறு
மடங்கு (ரிடர்ன்) கைமாறு அளிக்கிறீர்கள். ஆனால் இதில் கூட
குழந்தைகளுக்கு மிகவும் விசாலமான புத்தி வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏராளமான ஞான செல்வத்தின் கஜானா கிடைத்துக்
கொண்டே இருக்கிறது. எனவே அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்
அல்லவா? எந்த அளவிற்கு இதயம் தூய்மையாக இருக்குமோ, அந்த
அளவிற்கு மற்றவர்களையும் தூய்மை ஆக்குவீர்கள். யோகத்தின்
நிலையால் தான் இதயம் தூய்மையாகிறது. குழந்தைகளாகிய உங்களுக்க
யோகியாக ஆவதற்கும், ஆக்குவதற்குமான ஆர்வம் இருக்க வேண்டும்.
தேகத்தின் மீது மோகம் இருக்கிறது, தேக அபிமானம் இருக்கிறது
என்றால், நமது நிலை மிகவுமே பக்குவமற்று இருக்கிறது என்பதை
புரிந்து கொள்ளுங்கள். தேஹீ அபிமானி - ஆத்ம உணர்வுடைய
குழந்தைகள் தான் உண்மையான டைமண்டு (வைரம்) ஆகிறார்கள். எனவே
கூடுமானவரை தேஹீ அபிமானி ஆவதற்கான அப்பியாசம் செய்யுங்கள்.
தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா என்ற வார்த்தை எல்லாவற்றையும்
விட மிகவும் இனிமையானது ஆகும். தந்தை மிகுந்த அன்புடன்
குழந்தைகளை கண்ணிமைகளில் அமர்த்தி கூட அழைத்து செல்வார்.
அப்பேர்ப்பட்ட தந்தையின் நினைவின் போதையில் சுக்கு நூறாகி விட
வேண்டும். தந்தையை நினைவு செய்து செய்து மகிழ்ச்சியில்
குளிர்ந்து போய் விட வேண்டும். எப்படி தந்தை அபகாரிகள் மீதும்
உபகாரம் செய்கிறார் - நீங்களும் ஃபாலோ ஃபாதர் - தந்தையை
பின்பற்றுங்கள். சுகம் அளிப்பவராக ஆகுங்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நாடகத்தின் இரகசியத்தையும்
அறிந்துள்ளீர்கள் - தந்தை உங்களுக்கு நிராகாரி, ஆகாரி மற்றும்
சாகாரி உலகத்தின் அனைத்து சமாசாரங்களையும் கூறுகிறார்.
இப்பொழுது புது உலகத்திற்கு செல்வதற்காக நாம் புருசார்த்தம்
செய்து கொண்டி ருக்கிறோம் என்று ஆத்மா கூறுகிறது. நாம்
சொர்க்கம் செல்வதற்கு தகுதி உடையவர் களாக அவசியம் ஆகிடுவோம்.
தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வோம். நல்லது - தந்தை
இனிமையான குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். தந்தை (துக்கஹர்த்தா
சுககர்த்தா) துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆவார். எனவே
குழந்தைகள் கூட அனைவருக்கும் சுகம் அளிக்க வேண்டும். தந்தைக்கு
(ரைட் ஹேண்டு) வலது கரம் ஆக வேண்டும். அப்பேர்ப்பட்ட குழந்தைகள்
தான் தந்தைக்கு பிரியமானவர்களாக படுகிறார்கள். சுப காரியங்களில்
வலது கையை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே தந்தை கூறுகிறார்,
ஒவ்வொரு விசயத்திலும் ரைட்டியஸ் .சரியாக செய்பவராக ஆகுங்கள்.
ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது அந்த் மதி, சோ கதி
- கடைசியில் புத்தி எவ்வாறோ, அவ்வாறே கதி ஆகி விடும். இந்த
பழைய உலகத்தின் மீதுள்ள பற்றை நீக்கி விடுங்கள். இதுவோ சுடுகாடு
ஆகும். தொழில், குழந்தைகள் ஆகியோரின் சிந்தனையில் இருந்தீர்கள்
என்றால், வீணாக உங்களுக்கு அழிவு ஏற்படுத்திக் கொண்டு
விடுவீர்கள். சிவ பாபாவை நினைவு செய்வதால், நீங்கள் மிகவும்
செழிப்புடையவர்கள் ஆகி விடுவீர்கள். தேக அபிமானத் தில் வருவதால்
நாசம் ஏற்பட்டு விடுகிறது. தேஹீ அபிமானி ஆகும் பொழுது
முன்னேற்றம் ஏற்படுகிறது. பணத்தின் மீது கூட மிகுந்த பேராசை
கொள்ளக் கூடாது. அதே கவலையில் சிவபாபாவை கூட மறந்து விடு
கிறார்கள். எல்லாமே தந்தைக்கு அர்ப்பணம் செய்த பிறகு, எனது
ஸ்ரீமத்படி எதுவரை நடக்கிறார்கள் என்பதை பாபா பார்க்கிறார்.
ஆரம்பத்தில் தந்தை கூட டிரஸ்டியாக இருந்து காண்பித்தார் அல்லவா?
அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டு சுயம் டிரஸ்டி
ஆகி விட்டார். அவ்வளவே. இறைவனுடைய காரியத்தில் தான் ஈடுபடுத்த
வேண்டும். தடைகளுக்கு ஒரு பொழுதும் பயப்படக் கூடாது. கூடுமானவரை
சேவையில் தங்களது அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
இறைவனுக்கு அர்ப்பணம் செய்து டிரஸ்டி ஆகி இருக்க வேண்டும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகு காலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
அவ்யக்த மகாவாக்கியம் - 1977
அனைவரும் சப்தத்திற்கு அப்பாற்பட்டு தங்களது அமைதியான
சொரூபத்தின் நிலை யில் நிலைத்திருப்பதற்கான அந்த அனுபவத்தை
உங்களால் வெகு நேரம் செய்ய முடியுமா? சப்தத்தில் வருவதற்கான
அனுபவம் அதிகமாக செய்ய முடிகிறதா? இல்லை சப்தத்திற்கு
அப்பாற்பட்டு இருப்பதற்கான அனுபவம் அதிக நேரம் செய்ய முடிகிறதா?
எந்த அளவிற்கு (லாஸ்ட் ஸ்டேஜ்) கடைசி நிலை அல்லது கர்மாதீத்
நிலை நெருங்கி கொண்டு இருக்குமோ, அந்த அளவு சப்தத்திற்கு
அப்பாற்பட்ட சாந்த சொரூபத்தின் நிலை அதிகமாக பிரியமானதாக
தோன்றும். இந்த நிலையில் சதா அதீந்திரிய சுகத்தின் உணர்வு
ஏற்படும். இதே அதீந்திரிய சுகமய நிலை மூலமாக அநேக
ஆத்மாக்களுக்கு எளிதாகவே அழைப்பு விடுக்க முடியும். இந்த
பவர்ஃபுல் ஸ்திதி தான் விஷ்வ கல்யாணகாரி ஸ்திதி என்று
கூறப்படுகிறது. எப்படி தற்காலத்தில் அறிவியல் சாதனங்கள் மூலமாக
எல்லா பொருட்களும் சமீபத்தில் இருப்பதாக அனுபவம் ஆகிக் கொண்டே
போகிறது, தூரத்தின் குரல் தொலைபேசியின் சாதனங்கள் மூலமாக
சமீபத்தில் கேட்கிறது. தொலைக் காட்சி (டீ.வி) மூலமாக தூரத்தின்
காட்சி சமீபத்தில் தென்படுகிறது. அதே போல சைலன்ஸின் ஸ்டேஜ்
மூலமாக எவ்வளவு தூரத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு கூட உங்களால்
செய்தியை சேர்ப்பிக்க முடியும். சாகாரத்தில் யாரோ நேரிடை யாக
வந்து செய்தி கொடுத்தார்கள் என்பது போல அவர்கள் அனுபவம்
செய்வார்கள். தூரத்தில் அமர்ந்திருந்தாலும், சிறந்த
ஆத்மாக்களாகிய உங்களது தரிசனம் மற்றும் பிரபுவின் சரித்திரங்
களை நேரிடையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அனுபவம்
செய்வார்கள். சங்கல்பத் தின் மூலமாக தென்படும் அதாவது
சப்தத்திற்கு அப்பாற்பட்ட சங்கல்பத்தின் சித்தியின் பாகம் ஏற்று
நடிப்பார்கள். ஆனால் சித்தியின் விதி - மிகவும் அதிகமாக தங்களது
சாந்த சொரூபத்தில் நிலைத்திருப்பது ஆகும். எனவே சைலன்ஸ் இஸ்
கோல்டு - அமைதி தங்கத்திற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதற்கு
தான் கோல்டன் ஏஜ்ட் ஸ்திதி - தங்க யுகத்தின் நிலை என்று
கூறப்படுகிறது. இந்த ஸ்டேஜில் நிலைத்திருப்பதால் குறைந்த
செலவில் அதிக பலன் பெறுபவர்களாக ஆகி விடுவீர்கள். சமயம் என்ற
பொக்கிசம், எனர்ஜி - சக்தியின் பொக்கிசம் மற்றும் ஸ்தூல
பொக்கிசங்கள் - அனைத்திலும் குறைந்த செலவில் அதிக பலன்
பெறுபவர்கள் ஆகி விடுவீர்கள். இதற்காக ஒரேயொரு வார்த்தை
நினைவில் கொள்ளுங்கள். அது எது? பேலன்ஸ் - சமநிலை. ஒவ்வொரு
செயலிலும், ஒவ்வொரு எண்ணம் மற்றும் சொல், சம்பந்தம் அல்லது
தொடர்பில் பேலன்ஸ் இருக்க வேண்டும். அப்பொழுது சொல், செயல்,
எண்ணம், சம்பந்தம் அல்லது தொடர்பு சாதாரண நிலைக்கு பதிலாக
அலௌகீகமானதாக தென்படும் அதாவது அதிசயம் தென்படும். இதுவோ
அற்புதம் ஆகும் என்று ஒவ்வொருவருடைய வாயிலி ருந்தும்
மனதிலிருந்தும் இதே குரல் வெளிப்படும். சமயத்திற்கேற்ப
சுயத்தின் புருசார்த்தத்தின் வேகம் மூலம் உலக சேவையின் வேகம்
தீவிர கதியினுடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதே விஷ்வ
கல்யாணகாரி ஆக முடியும்.
உலகத்தின் பெரும்பான்மையான ஆத்மாக்கள் தந்தை மற்றும் இஷ்ட
தேவதைகளின் (பிரத்யட்சதா) வெளிப்பாட்டிற்கான அழைப்பு அதிகமாக
விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இஷ்டதேவர்கள்
அவர்களுக்கு குறைவான அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன? தங்களுடைய எல்லைக்குட்பட்ட சுபாவம்
சம்ஸ்காரங்களில் குடும்பத்தில் நிறைய நேரத்தை ஈடுபடுத்தி
விடுகிறார்கள். எப்படி அஞ்ஞானி ஆத்மாக்களுக்கு ஞானம் கேட்க
நேரமில்லையோ, அதே போல நிறைய பிராமணர்களுக்கு கூட இந்த பவர்ஃபுல்
ஸ்டேஜ்-ல் நிலைத்திருப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. எனவே
இப்பொழுது ஜ்வாலா ரூபம் ஆக வேண்டிய அவசியம் உள்ளது.
பாப்தாதா ஒவ்வொருவருடைய குடும்பத்தை (பிரவிருத்தி) பார்த்து
புன்முறுவல் செய்கிறார். எப்படி (டூ மச் பிஸி) மிகவுமே
மும்முரமாக ஆகி விட்டுள்ளார்கள். மிகவும் பிஸியாக இருக்
கிறீர்கள் அல்லவா? உண்மையான ஸ்டேஜ்-ல் எப்பொழுதுமே (ஃப்ரி)
சுதந்திரமாக இருப்பீர்கள். சித்தியும் ஏற்படும். மேலும்
சுதந்திரமாகவும் இருப்பீர்கள்.
அறிவியலின் சாதனங்களால் பூமியில் அமர்ந்தபடியே விண்வெளியில்
செலுத்தப் பட்டிருக்கும் இயந்திரங்களை கட்டுப்படுத்த முடிகிறது.
எப்படி வேண்டுமோ? எங்கு வேண்டுமோ, அங்கு திரும்ப முடிகிறது -
எனவே சைலன்ஸின் சக்தி சொரூபம் இந்த சாகார சிருஷ்டியில் சிரேஷ்ட
சங்கல்பத்தின் ஆதாரத்தில் என்ன சேவை வேண்டுமோ, எந்த ஆத்மாவிற்கு
சேவை செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்ய முடியாதா? ஆனால்
முதலில் அவரவர் பிரவிருத்தி (குடும்பத்திற்கு) அப்பாற்பட்டு
அதாவது விடுபட்டு இருங்கள்.
இப்பொழுது கூறிய எல்லா பொக்கிசங்களையும் சுயத்திற்காக அல்ல,
உலக நன்மையின் பொருட்டு பயன்படுத்துங்கள். புரிந்ததா? இப்பொழுது
என்ன செய்ய வேண்டும். சப்தத்தின் மூலமாக சர்வீஸ், ஸ்தூல
சாதனங்கள் மூலமாக சர்வீஸ், மேலும் சப்தத்திற்கு அப்பாற்பட்ட
சூட்சும சாதனங்கள் - சங்கல்பத்தின் சிறந்த தன்மை, சங்கல்ப சக்தி
மூலமாக சர்வீஸ் - இவற்றின் பேலன்ஸ் (சமநிலையை) (பிரத்யட்ச)
கண்கூடான ரூபத்தில் காண்பியுங்கள். அப்பொழுது விநாசத்தின்
முரசொலி ஒலிக்கும். புரிந்ததா? பிளான் - திட்டங்களோ நிறைய
அமைத்து கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா கூட பிளான் கூறிக்
கொண்டிருக்கிறார். பேலன்ஸ் சரியில்லாத காரணத்தால், அதிகமான
உழைப்பு செய்ய வேண்டி இருக்கிறது. விசேஷ காரியத்திற்கு பிறகு,
விசேஷ ரெஸ்ட் - ஓய்வு கூட எடுக்கிறீர்கள் அல்லவா? ஃபைனல் பிளான்
- கடைசி திட்டத்தில் களைப்பற்ற நிலையை அனுபவம் செய்வீர்கள்.
நல்லது. இது போல சர்வ சக்திகளை உலக நன்மையின் பொருட்டு
ஈடுபடுத்த கூடிய, சங்கல்பத்தின் சித்தி சொரூபம், சுயத்தின்
பிரவிருத்தியிலிருந்து சுதந்திரமாக ஆகி, சதா சாந்தமாக மற்றும்
சக்தி சொரூப நிலையில் நிலைத்திருக்கக் கூடிய அனைத்து சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கும், பாப்தாதா வின் அன்பு நினைவுகள் மற்றும்
நமஸ்காரம்.
வரதானம்:
சைலன்ஸின் சக்தி மூலமாக புதிய படைப்பின் ஸ்தாபனைக்கு கருவியாக
ஆகி விடும் மாஸ்டர் சாந்தி தேவன் ஆவீர்களாக.
சைலன்ஸின் சக்தியை சேமிப்பதற்காக இந்த சரீரத்திற்கு
அப்பாற்பட்டு அசரீரி ஆகி விடுங்கள். இந்த சைலன்ஸின் சக்தி
மிகவுமே மகான் சக்தி ஆகும். இதன் மூலம் புதிய சிருஷ்டியின்
ஸ்தாபனை ஆகிறது. எனவே யார் சப்தத்திற்கு அப்பாற்பட்டு சைலன்ஸ்
ரூபத்தில் நிலைத் திருப்பார்களோ, அவர்களால் தான் ஸ்தாபனையின்
காரியம் செய்ய முடியும். எனவே சாந்தி தேவன் அதாவது சாந்த
சொரூபம் ஆகி அசாந்த ஆத்மாக்களுக்கு அமைதியின் கிரணங்களை
கொடுங்கள். விசேசமாக அமைதியின் சக்தியை அதிகரியுங்கள். இதுவே
எல்லாவற்றையும் விட பெரியதிலும் பெரிய மகா தானம் ஆகும். இதுவே
எல்லாவற்றையும் விட பிரியமான மற்றும் சக்திசாலி பொருள் ஆகும்.
சுலோகன்:
ஒவ்வொரு ஆத்மா மற்றும் இயற்கையின் மீதும் சுபபாவனை கொள்வது தான்
விஷ்வ கல்யாணகாரி ஆவது ஆகும்.
|
|
|