18-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் கொண்ட குழந்தைகளே, உங்களுக்கு எந்த நினைவு எப்போதும் இருக்க வேண்டும்?

பதில்:

நம்முடைய இந்த சரீரம் சீச்சீ (கீழான) நிலையில் உள்ளது,, இதை விடுத்து வீடு திரும்ப வேண்டும் என்ற இந்த நினைவு இருக்க வேண்டும். தந்தை மற்றும் ஆஸ்தியின் நினைவு இருக்க வேண்டும், வேறு எதுவும் நினைவில் வரக்கூடாது. இது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் ஆகும். கர்மங்கள் செய்தபடி, பாவங்களின் சுமை தலையிலிருந்து இறங்கி விடும் அளவு நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஆத்மா தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானமாக ஆகி விட வேண்டும்.

ஓம் சாந்தி. தந்தை குழந்தைகளுக்கு தினம்தோறும் மிகவும் சகஜமான விஷயங்களைப் புரிய வைக்கிறார். இது ஈஸ்வரிய பாடசாலையாகும். கீதையிலும் கூட பகவானுடைய மகாவாக்கியம் என சொல்கின்றனர். பகவான் ஆகிய தந்தை அனைவருக்கும் ஒருவரே ஆவார். அனைவரும் பகவான் ஆக முடியாது. ஆம், அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் ஆக முடியும். தந்தை சொர்க்கமாகிய புதிய உலகத்தைப் படைக்கக் கூடியவர் என்பது கண்டிப்பாக புத்தியில் வர வேண்டும். அந்த தந்தையிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கண்டிப்பாக கிடைத் திருக்கும். பாரதத்தில்தான் சிவ ஜெயந்தி புகழ் பாடப்படுகிறது. ஆனால் சிவ ஜெயந்தி எப்படி ஏற்படுகிறது என்பதை தந்தைதான் வந்து புரிய வைக்கிறார். தந்தை கல்பத்தின் சங்கம யுகத்தில் வருகிறார். குழந்தைகளை மீண்டும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குவதற் காக அதாவது ஆஸ்தியைக் கொடுப்பதற்காக. இந்த சமயத்தில் அனைவருக்கும் இராவணனின் சாபம் கிடைத்திருக்கிறது, ஆகையால் அனைவரும் துக்கமுற்றவராக இருக்கின்றனர். இப்போது கலியுகத் தின் பழைய உலகமாக உள்ளது. நாம் பிரம்மாவின் வாய் வழி வம்சாவளியினர் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பிரம்மாகுமார், குமாரி என தங்களைப் புரிந்து கொண்டிருப் பவர்கள் இதனைக் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் - ஒவ்வொரு கல்பமும் தாத்தா விடமிருந்து பிரம்மாவின் மூலம் ஆஸ்தியை எடுக்கிறோம். இவ்வளவு அளவற்ற குழந்தைகள் வேறு யாருக்கும் இருக்க முடியாது. அவர் அனைவருக்கும் தந்தை ஆவார். பிரம்மாவும் கூட குழந்தையே. அனைத்து குழந்தைகளுக்கும் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அவருடைய ஆஸ்தி சத்யுகத்தின் இராஜ்யம். இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொர்க்கத் தைப் படைப்பவர் எனும்போது கண்டிப்பாக நமக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் இருக்க வேண்டும். ஆனால் இதனை மறந்து விட்டனர். நமக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் இருந்தது. ஆனால் நிராகாரரான தந்தை எப்படி கொடுப்பார், கண்டிப்பாக பிரம்மாவின் மூலம் கொடுப்பார். பாரதத்தில் இவர்களின் இராஜ்யம் இருந்தது. இப்போது கல்பத்தின் சங்கம யுகமாக உள்ளது. சங்கமயுகத்தில் பிரம்மா இருக்கிறார், ஆகவே தான் பி.கு. என்று சொல்லிக் கொள்கிறீர்கள். குருட்டு நம்பிக்கையின் விஷயம் எதுவும் இருக்க முடியாது. தத்தெடுத்தல் நடக்கிறது. நாம் பிரம்மாகுமார், குமாரிகளாக உள்ளோம். பிரம்மா சிவபாபாவின் குழந்தை யாவார், நமக்கு சிவபாபாவிடமிருந்து மீண்டும் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. முன்னரும் கூட கிடைத்திருந்தது, அதற்கு இப்போது 5 ஆயிரம் வருடங்கள் ஆகியுள்ளன. நாம் தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தோம். கடைசி வரை (எண்ணிக்கை) அதிகரித்தபடி இருக்கும். கிறிஸ்து வந்தது போல, கிறிஸ்தவர்கள் இன்று வரை இருக்கின்றனர். அதிகரித்தபடி இருக்கிறது. கிறிஸ்துவின் மூலம் நாம் கிறிஸ்தவர்கள் ஆகினோம் என அவர்கள் அறிந்துள்ளனர். இன்றிலிருந்து 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து வந்திருந்தார். இப்போது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. முதன் முதலில் சதோபிரதானமாக, பிறகு ரஜோ தமோவில் வரவேண்டும். நீங்கள் சத்யுகத்தில் சதோபிரதானமாக இருந்தீர்கள், பிறகு ரஜோ, தமோவில் வந்தீர்கள். தமோபிரதானமான சிருஷ்டி அதிலிருந்து மீண்டும் சதோபிரதானமாக கண்டிப்பாக ஆகும். புதிய உலகில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. முக்கியமான தர்மங்கள் நான்கு. உங்களுடைய தர்மம் அரைக் கல்பத்திற்கு நடக்கிறது. இங்கும் கூட நீங்கள் அந்த தர்மத்தைச் சேர்ந்தவர் களே. ஆனால் விகாரிகளாக இருக்கும் காரணத்தால் நீங்கள் தங்களை தேவி தேவதைகள் என சொல்லிக் கொள்வதில்லை. நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தீர்கள், ஆனால் வாம (தவறான) மார்க்கத்தில் சென்ற காரணத்தால் நீங்கள் தூய்மை யற்றவர்களாக ஆகியுள்ளீர்கள், ஆகையால் தங்களை இந்துக்கள் என சொல்லி விடுகிறீர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார். பிறகு பிராமணர்களாகிய நீங்கள். பிராமணர் களாகிய உங்களின் வர்ணம் உயர்ந்ததிலும் உயர்ந்தது ஆகும். பிரம்மாவின் குழந்தை களாக ஆகியுள்ளீர்கள். ஆனால் பிரம்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. சிவபாபா பிரம்மா வின் மூலம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆத்மா இப்போது தந்தையைத் தெரிந்து கொண்டது. என் மூலமாக என்னை அறிவதன் மூலம் சிருஷ்டி சக்கரத்தின் முதல் இடை கடைசியின் ஞானத்தைப் புரிந்து கொள்வீர்கள் என தந்தை சொல்கிறார். அந்த ஞானம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நான் ஞானக் கடலாக, ஆனந்தக் கடலாக, தூய்மையின் கடலாக இருக்கிறேன். 21 பிறவிகளுக்கு நீங்கள் தூய்மையடைகிறீர்கள், பிறகு விஷக் கடலில் விழுந்து விடுகிறீர்கள். இப்போது ஞானக்கடல் தந்தை உங்களை தூய்மையற்ற வரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். கங்கையின் நீர் ஏதும் தூய்மையாக்க முடியாது. நீராடச் செல்கின்றனர், ஆனால் அந்த நீர் ஏதும் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கு வது அல்ல. இந்த நதிகள் சத்யுகத்திலும் இருக்கின்றன, கலியுகத்திலும் இருக்கின்றன. நீரில் வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு ராமன் என சொல்லவும் செய்கின்றனர். அவரே ஞானக்கடல் பதித பாவனர் ஆவார்.

பாபா வந்து ஞானத்தைப் புரிய வைக்கிறார், அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் எஜமான் ஆகிறீர்கள். சத்யுகத்தில், திரேதாவில் பக்தி, சாஸ்திரம் முதலான எதுவும் இருக்காது. நீங்கள் தந்தையிடமிருந்து சதா சுகமாக இருப்பதற்கான ஆஸ்தியை எடுக்கிறீர்கள். அங்கே நீங்கள் கங்கையில் நீராட வேண்டும் என்பதோ ஏதோ யாத்திரை செல்லவேண்டியதோ கிடையாது. இது உங்களுடைய ஆன்மீக யாத்திரையாகும், இதனை எந்த மனிதரும் கற்றுத் தர முடியாது. தந்தை அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாவார். ஸ்தூலமான தந்தையாக பலர் உள்ளனர். ஆன்மீகத் தந்தை ஒருவரே ஆவார். இதனை உறுதியிலும் உறுதியாக நினைவில் வையுங்கள். உங்களுக்கு எத்தனை தந்தைமார் உள்ளனர் என பாபாவும் கேட்கும்போது இவர் என்ன கேட்கிறார் என குழம்பிப் போகின்றனர். ஆத்மாக்களின் தந்தை அனைவருக்கும் ஒருவரே ஆவார். இரண்டு மூன்று தந்தைமார் எப்படி இருப்பார்கள்? அந்த பரமாத்மா தந்தையை துக்கத்தில் நினைவு செய்கின்றீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். துக்கத்தில் எப்போதும் ஓ பரமபிதா பரமாத்மா எங்களை துக்கத் திலிருந்து விடுவியுங்கள் என சொல்கிறீர்கள். ஆக இரண்டு தந்தைகள் உள்ளனர் அல்லவா. ஒருவர் சரீரத்தின் தந்தை, மற்றவர் ஆன்மீகத் தந்தை. அவருடைய மகிமையைப் பற்றி நீங்கள்தான் தாயும் தந்தையும், நாங்கள் உங்களின் பாலகர்கள், உங்களின் இரக்கத்தால் எங்களுக்கு அளவற்ற சுகம் என பாடுகின்றனர். லௌகிக தாய் தந்தையிடமிருந்து அளவற்ற சுகம் கிடைப்ப தில்லை. துக்கம் ஏற்படும்போது அந்த தந்தையை நினைக்கின்றனர். இந்த தந்தை தான் இப்படிப் பட்ட கேள்விகள் கேட்க முடியும், வேறு யாரும் கேட்க முடியாது.

பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடுகிறீர்கள் - பாபா நீங்கள் வந்தால் நாங்கள் உங்களிடமிருந்தே கேட்போம், வேறு யாருடைய பேச்சையும் கேட்க மாட்டோம். மற்ற அனைவரும் துக்கத்தைக் கொடுக்கின்றனர், நீங்கள்தான் சுகத்தைக் கொடுப்பவர். ஆக, தந்தை வந்து, நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என நினைவூட்டுகிறார். நீங்கள் அறிவீர்கள், நீங்கள்தான் பிரம்மாகுமார், குமாரி என சொல்லிக் கொள்கிறீர்கள். பி.கு. என்றால் என்ன, மம்மா பாபா யார் என்பதும் புரியாத அளவு கல்புத்தியுள்ள மனிதர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஏதும் சாது சன்னியாசிகள் அல்ல. சாது சன்னியாசிகளை குரு என்று சொல்வார்கள், தாய்-தந்தை என சொல்ல மாட்டார்கள். இந்த தந்தை வந்து தெய்வீக தர்மத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். அங்கே இந்த லட்சுமி நாராயணர் ராஜா ராணியாக இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர். முதலில் தூய்மையாய் இருந்தனர், பின்னர் தூய்மையற்றவராகின்றனர். பூஜைக்குரியவர்களாய் இருந்தவர்கள், பிறகு 84 பிறவி கள் எடுக் கின்றனர். முதலில் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் சுகத்தின் ஆஸ்தி 21 பிறவிகளுக்கு கிடைக் கிறது. 21 குலத்திற்கு முன்னேற்றம் கொடுக்கும் குமாரி - இது உங்களைப் பற்றிய பாடலாகும். நீங்கள் குமாரிகள், இல்லறவாசிகள் அல்ல. பெரியவர்களாக இருக்கலாம், ஆனால் மறுபிறவி அடைந்து அனைவரும் தந்தையின் குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் அளவற்ற குழந்தைகள் உள்ளனர், மேலும் அதிகரித்தபடி இருப்பார்கள். பிறகு இவர்கள் அனைவரும் தேவதைகள் ஆகி விடுவார்கள். இது சிவபாபாவின் யக்ஞமாகும். இது ராஜஸ்வ (சுயராஜ்யத்தின்) யக்ஞம், சுயராஜ்யம் அடைவதற்கான யக்ஞம். ஆத்மாக்களுக்கு தந்தையிட மிருந்து சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இந்த ராஜஸ்வ அஸ்வமேத ஞான யக்ஞத்தில் என்ன செய்ய வேண்டும்? சரீரத்துடன் சேர்த்து, இருக்கும் அனைத்தையும் பலியாக்க வேண்டும் அல்லது ஸ்வாஹா செய்ய வேண்டும். இந்த யக்ஞத்தின் மூலம் நீங்கள் மீண்டும் இராஜ்யத்தை அடையப் போகிறீர்கள். பக்தி மார்க்கத்தில், ஓ பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் பலியாகி விடுவோம், அர்ப்பணம் ஆவோம் என பாடிக்கொண்டிருந்தீர்கள் என தந்தை நினைவூட்டுகிறார். இப்போது நீங்கள் அனைவரும் தம்மை பிரம்மா குமார், குமாரிகள் என புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தனது இல்லற விஷயங்களில் இருங்கள், ஆனால் தாமரை மலர் போல் தூய்மையாக இருக்க வேண்டும். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். நாம் பாபாவின் குழந்தைகள். ஆத்மாக்களாகிய நீங்கள் பிரியதர்ஷினிகள். ஒரு பிரியதர்ஷனாக நான் இருக்கிறேன் என தந்தை கூறுகிறார். நீங்கள் பிரியதர்ஷனாகிய என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் அரை கல்பத்தின் பிரியதர்ஷினிகள், பரமபிதா பரமாத்மா என அழைக்கப்படுபவர் நிராகாரியாக (உடலற்றவராக) இருப்பவர். ஆத்மாவும் நிராகாரியாக இருந்து, பிறகு இந்த சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கிறது. பக்தி மார்க்கத்திலும் கூட நீங்கள் நடிப்பை நடிக்க வேண்டும். பக்தி என்பதே இரவாகும், இருளில் மனிதர்கள் அடி வாங்கியபடி இருக்கின்றனர். துவாபரத்தில் தொடங்கி நீங்கள் அடிகளை வாங்கினீர்கள் (ஏமாற்றங்களை அடைந்தீர்கள்). இந்த சமயத்தில் மகா துக்கமிக்கவர்களாக ஆகியுள்ளீர்கள். இப்போது பழைய உலகத்தின் இறுதிக்காலமாக உள்ளது. இந்த பணம் அனைத்தும் மண்ணோடு மண்ணாக ஆகவுள்ளது. யாரேனும் கோடீஸ்வரராக இருக்கலாம், ராஜாவாக இருக்கலாம், குழந்தைகள் பிறந்தால் இந்த செல்வங்கள் அனைத்தும் நம்முடைய குழந்தை களுக்காக என புரிந்து கொள்வார்கள். நம்முடைய பேரன், பேத்திகள் சாப்பிடு வார்கள். தந்தை சொல்கிறார் - எதுவும் சாப்பிடப் போவதில்லை. இந்த உலகமே முடிவடைய உள்ளது. இன்னும் குறைந்த நேரமே உள்ளது. அதிகமான தடைகள் ஏற்படும். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். இரத்த ஆறு ஓடுமளவு இறுதியில் சண்டையிடுவார்கள். உங்களுக்கோ யாருடனும் யுத்தமில்லை. நீங்கள் யோகபலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைவில் இருந்தீர்கள் என்றால் யாராவது உங்கள் முன்னே கெட்ட சிந்தனையோடு வந்தாலும் அவர்களுக்கு பயங்கரமான காட்சி தெரியும், அவர்கள் ஓடிப் போய்விடுவார்கள். நீங்கள் சிவ பாபாவை நினைவு செய்வீர்கள், அவர்கள் ஓடிப்போய் விடுவார்கள். யார் உறுதியான குழந்தை களாக இருப்பார்களோ அவர்கள் என்னுடையவர் ஒரு சிவபாபா, வேறு யாருமில்லை என முயற்சி செய்வார்கள். கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும், உள்ளம் பாபாவை நினைவு செய்ய வேண்டும். . . குழந்தைகள் வீட்டையும் பராமரிக்க வேண்டும். ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்களின் சுமையும் கூட இறங்கி விடும். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள், ஆனால் வரிசைக் கிரமமான முயற்சியின்படி. . . பிறகு நீங்கள் அனைவரும் இந்த சரீரத்தை விடுவீர்கள், பாபா அனைத்து ஆத்மாக்களையும் கொசுக்களைப் போல அழைத்துச் செல்வார். மிகுந்திருக்கும் முழு உலகமும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். பாரதத்தில் கொஞ்சம் பேர் மட்டுமே மிகுந்திருப்பார்கள். அதற்காக இந்த மகாபாரதச் சண்டை நடக்கிறது. இங்கே மிகவும் வளர்ச்சி ஏற்படும். கண்காட்சி, ப்ரொஜக்டர் மூலமாக எவ்வளவு பேர் கேட்கின்றனர். அவர்கள் பிரஜைகளாகியபடி இருப்பார்கள். ஒருவர் ராஜாவாக ஆவார், மற்றவர்கள் பிரஜைகளாவார்கள். மந்திரிகள் கூட பிரஜைகளின் வரிசையில் வந்துவிடுவர். அளவற்ற பிரஜை கள் ஆவார்கள். ஒரு ராஜாவுக்கு அளவற்ற எண்ணிக்கையில் பிரஜைகள் ஆவார்கள். ஆக, ராஜா, ராணி ஆகப் போகிறவர்கள் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா.

அனைத்தும் செய்தபடி நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார் - பிரியதர்ஷன் பிரியதர்ஷினி போல. அவர்களுக்கு ஸ்தூலமான (சரீரத்தின் மீது) அன்பு இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது பிரியதர்ஷினிகளாக இருக்கிறீர்கள். உங்களின் பிரியதர்ஷன் வந்துவிட்டார். உங்களை படிப்பித்துக் கொண்டிருக் கிறார். படித்து படித்து நீங்கள் தேவதைகள் ஆகி விடுவீர்கள். நினைவின் மூலம் பாவ கர்மங்கள் அழியும் மேலும் நீங்கள் எப்போதும் நோயற்றவர் ஆகி விடுவீர்கள். பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவில் வைக்க வேண்டும். சத்யுகத்தில் இத்தனை பிறவி, திரேதாவில் இத்தனை. . . தேவி தேவதா தர்மத்தவர் களாகிய நாம் முழுமையாக 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றியுள்ளோம். முன்னே செல்லச் செல்ல நீங்கள் அதிகமாக வளர்ச்சியடைவீர்கள். உங்களுடைய சேவை மையங்கள் (சென்டர்கள்) ஆயிரக்கணக்கில் ஆகிவிடும். ஒவ்வொரு தெருவிற்கும் சென்று தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யுங்கள் என புரிய வைத்துக் கொண்டே இருப்பீர்கள். இப்போது வீடு திரும்புங்கள். இது அசுத்தமான சரீரமாகும். இது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம். சன்னியாசி கள் வெறும் எல்லைக்குட்பட்ட வீடு வாசலை விட்டு விடுகின்றனர். அவர்கள் ஹடயோகிகள். அவர்கள் இராஜயோகத்தை கற்றுக் கொடுக்க முடியாது. இந்த பக்தியும் கூட அனாதியானது என்று சொல்கின்றனர். இந்த பக்தி துவாபரத்திலிருந்து தொடங்குகிறது என தந்தை சொல்கிறார். 84 பிறவிகள் கீழிறங்கி நீங்கள் இப்போது தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள். நீங்களே தேவி தேவதைகளாக இருந்தீர்கள். கிறிஸ்தவர்கள் நாங்களே கிறிஸ்தவர்களாக இருந்தோம் என சொல்வார்கள். நாம் சத்யுகத்தில் இருந்தோம் என நீங்கள் அறிவீர்கள். தந்தை தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தார். லட்சுமி நாராயணராக இருந்த இவர்கள் இப்போது பிராமணர் களாகி உள்ளனர். சத்யுகத்தில் ஒரு ராஜா ராணி இருந்தனர், ஒரு மொழி இருந்தது. இதனையும் குழந்தைகள் காட்சியில் பார்த்தனர். நீங்கள் அனைவரும் ஆதி சனாதன தர்மத்தவர்கள். நீங்கள் தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். ஆத்மாவில் எதுவும் ஒட்டாது, ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் என்று அவர்கள் சொல்வதெல்லாம் தவறாகும். அனைவருக்குள்ளும் ஆத்மா உள்ளது பிறகு எங்களுக்குள் பரமாத்மா இருக்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்? பிறகு அனைவருமே தந்தை என்றாகி விடுவார்கள். எவ்வளவு தமோபிரதானமாக ஆகி விட்டனர். முன்னர், எதைக் கேட்டாலும் அதனை ஏற்றுக் கொண்டபடி இருந்தனர். இப்போது தந்தை வந்து சத்தியத்தை உரைக்கிறார். உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுக்கிறார், அதன் மூலம் நீங்கள் சிருஷ்டியின் முதல், இடை, கடைசியைப் பற்றி அறிகிறீர்கள். அமர கதையும் கூட இதுவேயாகும். அங்கே (சத்யுகத்தில்) நீங்கள் மகிழ்ச்சியுடன் சரீரத்தை விட்டுச் சென்று மற்றொன்றை எடுப்பீர்கள். இங்கே யாராவது இறந்து விட்டால் அழுது புலம்புகின்றனர். அங்கே நோய்கள் எதுவும் வருவதில்லை. எப்போதும் ஆரோக்கியமிக்கவர்களாக இருப்பார்கள். ஆயுளும் கூட நீண்டதாக இருக்கும். அங்கே தூய்மையற்ற தன்மை (பதித தன்மை) இருப்பதில்லை. நாம் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி முடித்துள்ளோம் என்பதை இப்போது உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இப்போது பாபா நம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளார். தூய்மை யடைவதற்கான யுக்திகளையும் கூட கூறுகிறார். தந்தையான என்னையும் ஆஸ்தியை யும் மட்டும் நினைவு செய்யுங்கள். சத்யுகத்தில் 16 கலைகளிலும் நிரம்பியிருந்து, பிறகு குறையத் தொடங்குகிறது. இப்போது உங்களுக்குள் எந்தக் கலையும் இல்லை. தந்தைதான் துக்கத்திலிருந்து விடுவித்து சுகத்திற்கு அழைத்துச் செல்கிறார், ஆகையால் அவர் விடுவிப்பவர் என அழைக்கப் படுகிறார். அனைவரையும் தம்முடன் அழைத்துச் செல்கிறார். உங்களுடைய குரு உங்களை அவருடன் அழைத்துச் செல்ல மாட்டார். அந்த குரு போய் விட்டால் சீடர் சிம்மாசனத்தில் அமருகிறார், பிறகு சீடர்களுக்குள் மிகவும் சச்சரவுகள் ஏற்படு கின்றன. தங்களுக்குள் சிம்மாசனத்திற்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர். நான் ஆத்மாக்களாகிய உங்களை என்னுடன் அழைத்துச் செல்வேன் என தந்தை சொல்கிறார். நீங்கள் சம்பூரணமாகாவிட்டால் தண்டனைகளை அனுபவிப்பீர்கள் மேலும் பதவியும் கீழானதாகி விடும். இங்கே ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. கெட்ட சிந்தனையுடன் யாராவது வந்தாலும் அவர்கள் மாறிவிடும் அளவு நினைவின் பயிற்சி செய்ய வேண்டும். என்னுடையவர் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற முயற்சியில் இருக்க வேண்டும்.

2. சுயராஜ்யத்தை அடைவதற்காக சரீரத்துடன் இருக்கும் அனைத்தையும் பலியாக்க வேண்டும். இந்த ருத்ர யக்ஞத்தில் அனைத்தையும் ஸ்வாஹா செய்யும்போது இராஜ்ய பதவி கிடைக்கும்.

வரதானம்:

ஞானம் நிறைந்த ஆத்மாவாகி ஞான கடல் மற்றும் ஞானத்தில் மூழ்கக் (ஊடுருவ) கூடிய அனைத்து பிராப்திகளின் சொரூபம் ஆகுக.

யார் ஞானம் நிறைந்த ஆத்மாவாக இருக்கிறார்களோ, அவர்கள் எப்பொழுதுமே ஞானக் கடலில் மற்றும் ஞானத்தில் மூழ்கி இருக்கிறார்கள், அனைத்து பிராப்திகளின் சொரூபம் ஆனதின் காரணத்தினால் ஆசையை பற்றி அறியாதவர் மனநிலை இயல்பாகவே இருக்கிறது. யார் சிறிதளவு கூட எந்த சுபாவ சம்ஸ்காரத்தில் அடிமையாக இருக்கிறார்கள், பெயர், மரியாதை, கௌரவத்தை யாசிக்கிறார்களோ, ஏன், என்ன என்ற கேள்விகளில் தவித்துக் கொண்டிருக் கிறார்களோ, கூக்குரலிடுகிறார்களோ, உள்ளொன்று, வெளில் ஒன்று இருக்கிறார்களோ அவர்களை ஞானம் நிறைந்த ஆத்மா என்று சொல்ல முடியாது.

சுலோகன்:

இந்த வாழ்க்கையில் அதீந்திரிய சுகம் மற்றும் ஆனந்தத்தை அனுபவம் செய்யக் கூடியவர்கள் தான் சகஜயோகி.