18.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் மீண்டும் தங்களது புகலிடத்திற்கு (வசிப்பிடத்திற்கு) வந்தடைந்து விட்டீர்கள், நீங்கள் தந்தையின் மூலம் படைப்பவர் மற்றும் படைப்புகளைப் பற்றி அறிந்து கொண்டதால் மகிழ்ச்சியில் மெய்சிலிர்த்துப் போக வேண்டும்.

 

கேள்வி:

இந்த நேரத்தில் தந்தை குழந்தைகளாகிய உங்களை ஏன் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்?

 

பதில்:

ஏனெனில் இப்பொழுது அலங்காரம் செய்து கொண்டு விஷ்ணுபுரிக்குச் (மாமியார் வீட்டிற்குச்) செல்ல வேண்டும். இந்த ஞானத்தின் மூலம் அலங்கரிக்கப்பட்டு உலகிற்கு மகாராஜா, மகாராணி ஆகிறீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், பாபா ஆசிரியராகி தாய்வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக கற்பித்துக் கொண்டிருக்கின்றார்.

 

பாட்டு:

கடைசியில் அந்த நாள் வந்ததது .......

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிய ஸ்வீட் சில்டரன் இனிமையிலும் இனிய செல்லமான குழந்தைகளே! பாடல் கேட்டீர்கள். அரைக்கல்பமாக எந்த நாயகனை நினைவு செய்தோமோ, கடைசியில் அவரை அடைந்து விட்டோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாம் அரைக்கல்பமாக பக்தி செய்கிறோம், நாயகனாகிய தந்தையை அழைத்தோம் என்பதை உலகத்தினர் அறியவில்லை. நாம் நாயகிகள், அவர் நாயகனாக இருக்கின்றார் என்பதையும் யாரும் அறியவில்லை. இராவணன் உங்களை முற்றிலும் கீழான புத்தியுடையவர்களாக ஆக்கி விட்டான் என்று தந்தை கூறுகின்றார். குறிப்பாக பாரதவாசிகளை. நீங்கள் தேவி தேவதைகளாக இருந்தீர்கள் என்பதையும் மறந்து விட்டீர்கள் எனில் கீழான புத்தி அல்லவா! தனது தர்மத்தை மறந்து விடுவது, இது தான் கீழான புத்தியின் காரியமாகும். இதை இப்பொழுது நீங்கள் மட்டுமே அறிவீர்கள். பாரதவாசிகளாகிய நாம் சொர்க்கவாசிகளாக இருந்தோம், இந்த பாரதம் சொர்க்கமாக இருந்தது. சிறிது காலம் தான் இருந்தது. 1250 ஆண்டு காலம் சத்யுகம் இருந்தது, மேலும் 1250 ஆண்டு காலம் இராம இராஜ்யம் நடைபெற்றது. அந்த கால கட்டத்தில் அளவற்ற சுகம் இருந்தது. சுகத்தை நினைவு செய்து மெய்சிலிர்த்துப் போக வேண்டும். சத்யுகம், திரேதா ...... இவைகள் கடந்து விட்டன. சத்யுகத்தின் ஆயுள் எவ்வளவு? என்பதையும் யாரும் அறியவில்லை. இலட்சம் ஆண்டுகள் எவ்வாறு இருக்க முடியும்? உங்களை மாயை எவ்வளவு கீழான புத்தியுடையவர்களாக ஆக்கி விட்டது! என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். உலகில் யாரும் தன்னை கீழான புத்தியுடையவர் என்று புரிந்து கொள்வது கிடையாது. நாம் நேற்று கீழான புத்தியுடையவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது பாபா அந்த அளவிற்கு புத்தி கொடுத்து விட்டார், அதாவது படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையை நாம் அறிந்து கொண்டோம். நேற்று அறியாமல் இருந்தோம், இன்று அறிந்து கொண்டோம். எந்த அளவிற்கு அறிந்து கொண்டே செல்கிறோமோ அந்த அளவிற்கு மெய்சிர்த்துப் போவீர்கள். நாம் மீண்டும் நமது வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். உண்மையில் தந்தை நமக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் கொடுத்திருந்தார். பிறகு நாம் இழந்து விட்டோம். இப்பொழுது பதீதமாக ஆகிவிட்டோம். சத்யுகத்தை பதீதம் என்று கூறுவது கிடையாது. அது பாவன உலகமாகும். ஹே! பதீத பாவனனே வாருங்கள் என்ற மனிதர்கள் கூறுகின்றனர். இராவண இராஜ்யத்தில் பாவனமாகவும், உயர்ந்தவர்களாகவும் யாரும் இருக்க முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள் எனில் உயர்ந்தவர்களாக ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிந்திருக் கிறீர்கள், அதுவும் வரிசைக்கிரமமாக. அதிகாலையில் எழுந்து தனது மனதைக் கேளுங்கள், அமிர்த வேளை நேரம் நல்ல நேரமாகும். அதிகாலையில் அமிர்தவேளையில் அமர்ந்து இந்த சிந்தனை செய்யுங்கள். பாபா நமக்கு பாபாவாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார். இறைதந்தையே! ஹே பரம்பிதா! என்றும் கூறுகின்றனர். யாரை ஹே பகவான்! என்று நினைவு செய்தோமோ அவர் நமக்கு கிடைத்து விட்டார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாம் மீண்டும் எல்லையற்ற ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். அவர் லௌகீக தந்தை, இவர் எல்லையற்ற தந்தையாவார். உங்களது லௌகீக தந்தையும் அந்த எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறார். ஆக தந்தைகளுக்கெல்லாம் தந்தை, பதிகளுக்கெல்லாம் பதியாக அவர் இருக்கின்றார். இதையும் பாரதவாசிகள் தான் கூறுகின்றனர். ஏனெனில் நான் இப்பொழுது தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக, பதிகளுக்கெல்லாம் பதியாக ஆகின்றேன். இப்பொழுது நான் உங்களது தந்தையாகவும் இருக்கிறேன். நீங்கள் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். பாபா, பாபா என்று கூறிக் கொண்டே இருக்கிறீர்கள். இப்பொழுது மீண்டும் உங்களை விஷ்ணுபுரி என்ற மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். இது உங்களது தந்தையின் வீடு, பிறகு மாமியார் வீட்டிற்குச் செல்வீர்கள். நாம் நன்றாக அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் தாய் வீட்டில் இருக்கிறீர்கள் அல்லவா! உங்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் அலங்கரிக்கப்பட்டு உலகிற்கு மகாராஜா, மகாராணியாக ஆகிறீர்கள். உலகிற்கு எஜமானர்களாக ஆவதற்காகவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். சத்யுகம் இருந்த பொழுது பாரதவாசிகளாகிய நீங்கள் தான் உலகிற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் இவ்வாறு கூறமாட்டீர்கள் - நாம் இப்பொழுது உலகிற்கு எஜமானர்களாக இருக்கிறோம். பாரதத்திற்கு எஜமானர்களாக இருப்பவர்கள் கலியுகத்தினர் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். நாம் சங்கமயுகத்தினர்களாக இருக்கிறோம். பிறகு நாம் சத்யுகத்தில் முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆவோம். இந்த விசயங்கள் குழந்தைகளாகிய உங்களது புத்தியில் வர வேண்டும். உலக இராஜ்யம் கொடுக்கக் கூடியவர் வந்திருக்கின்றார் என்பதை அறிவீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தில் அவர் வந்திருக்கின்றார். ஞானம் கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். தந்தையைத் தவிர எந்த மனிதனையும் ஞானம் கொடுக்கும் வள்ளல் என்று கூற முடியாது. ஏனெனில் தந்தையிடத்தில் அப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது, அதாவது இதன் மூலம் முழு உலகிற்கும் சத்கதி ஏற்பட்டு விடுகிறது. தத்துவங்கள் மற்றும் அனைவருக்கும் சத்கதி ஏற்பட்டு விடுகிறது. மனிதர்களிடத்தில் சத்கதிக்கான ஞானம் கிடையாது.

 

இந்த நேரத்தில் தத்துவங்களின் கூடவே முழு உலகமும் தமோ பிரதானமாக இருக்கிறது. இதில் இருக்கக் கூடியவர்களும் தமோ பிரதானமாக இருக்கின்றனர். புது உலகம் என்றால் சத்யுகம் ஆகும். அதில் வசிக்கக் கூடியவர்கள் தேவதைகளாக இருந்தனர், பிறகு இராவணன் வெற்றியடைந்து விட்டான். இப்பொழுது தந்தை மீண்டும் வந்திருக்கின்றார். நாம் பாப்தாதாவிடம் செல்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை நமக்கு தாதாவின் (பிரம்மாவின்) மூலம் சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி கொடுக்கின்றார். தந்தை சொர்க்க இராஜ்யம் தான் கொடுப்பார், வேறு என்ன கொடுப்பார்! குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இது வர வேண்டும் அல்லவா! ஆனால் மாயை மறக்க வைத்து விடுகிறது. நிலையான குஷியுடன் இருக்க விடுவது கிடையாது. யார் நல்ல முறையில் படித்து, கற்பிக்கின்றார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவி அடைவார்கள். விநாடியில் ஜீவன்முக்தி என்றும் பாடப்பட்டிருக்கிறது. புரிந்து கொள்வது ஒரே ஒருமுறை அல்லவா! அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையானவர் ஒருவர் தான், அனைத்து ஆத்மாக்களின் தந்தையான அவர் இப்பொழுது வந்திருக்கின்றார். ஆனால் அனைவரும் சந்தித்து விட முடியாது. முடியாத காரியமாகும். தந்தை கற்பிப்பதற்கு வருகின்றார். நீங்கள் அனைவரும் ஆசிரியர்களாக இருக்கிறீர்கள். கீதா பாடசாலை என்று கூறப்படுகிறது அல்லவா! இந்த வார்த்தையும் பொதுவானதாகும். கிருஷ்ணர் கீதையைக் கூறியதாக கூறுகின்றனர். இப்பொழுது இது கிருஷ்ணரின் பாடசாலை கிடையாது. கிருஷ்ணரின் ஆத்மா படித்துக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் யாராவது கீதா பாடசாலையில் படிப்பார்களா? அல்லது கற்பிப்பார்களா என்ன? கிருஷ்ணர் இருப்பது சத்யுகத்தில், பிறகு 84 பிறவிகள் எடுக்கின்றார். ஒரு சரீரம் மற்றொரு சரீரம் போன்று இருக்க முடியாது. நாடகப்படி ஒவ்வொரு ஆத்மாவிலும் 84 பிறவிகளின் பாகம் பதிவாகியிருக்கிறது. ஒரு விநாடி போன்று மற்றொரு விநாடி இருக்காது. 5 ஆயிரம் ஆண்டிற்கான பாகம் நீங்கள் நடிக்கிறீர்கள். ஒரு விநாடிக்கான பாகம் போன்று அடுத்த விநாடியின் பாகம் இருக்காது. எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்! நாடகம் அல்லவா! அதே பாகம் திரும்பவும் அடுத்த கல்பத்தில் நடிக்கப்படுகிறது. மற்றபடி அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது. அரைக்கல்பம் பக்தி நடைபெற்றது, பிறகு நான் வந்து தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறேன். 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு இராஜ்யம் செய்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்கதியில் இருந்தோம். துக்கத்தின் பெயர் கிடையாது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் துக்கமாக இருக்கிறது. இது துக்கதாமம் என்று கூறப்படுகிறது. சாந்திதாமம், சுகதாமம் மற்றும் துக்கதாமம். வந்து பாரதவாசிகளுக்குத் தான் சுகதாமத்திற்கான வழி கூறுகின்றேன். கல்ப கல்பத்திற்கு நான் வர வேண்டியிருக்கிறது. பலமுறை வந்திருக்கிறேன், வந்து கொண்டே இருப்பேன். இதற்கு முடிவே கிடையாது. நீங்கள் சுற்றி வந்து துக்கதாமத்திற்கு வருகிறீர்கள், பிறகு நான் வர வேண்டியிருக்கிறது. இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தின் நினைவு உங்களுக்கு வந்து விட்டது. தந்தை தான் படைப்பவர் என்று கூறப்படுகின்றார். நாடகத்தைப் படைக்கின்றார் என்பது கிடையாது. படைப்பவர் என்றால் இந்த நேரத்தில் வந்து சத்யுகத்தை படைக்கின்றார். சத்யுகத்தில் யார் இராஜ்யம் செய்து பிறகு இழந்தார்களோ அவர்களுக்குத் தான் வந்து கற்பிக்கின்றேன். குழந்தைகளை தத்தெடுக்கின்றார். நீங்கள் எனது குழந்தைகள் அல்லவா! உங்களுக்கு எந்த சாது, சந்நியாசிகளும் படிப்பு கற்பிப்பது கிடையாது. கற்பிப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார், அவரைத் தான் அனைவரும் நினைவு செய்கின்றனர். யாரை நினைவு செய்கிறார்களே அவர் கண்டிப்பாக ஒருநாள் வருவார் அல்லவா! ஏன் நினைவு செய்கிறோம்? என்பது கூட யாருக்கும் புரியவில்லை. ஆக பதீத பாவனாகிய தந்தை அவசியம் வருகின்றார். மீண்டும் வாருங்கள் என்ற கிறிஸ்துவை ஒருபொழுதும் கூறமாட்டார்கள். ஐக்கியமாகி விட்டதாக அவர்கள் நினைக்கின்றனர். மீண்டும் வருவதற்கான விசயமே கிடையாது. நினைவு செய்வது பதீத பாவனனைத் தான். ஆத்மாக்களாகிய எங்களுக்கு மீண்டும் ஆஸ்தி கொடுங்கள். பாபா வந்திருக்கின்றார் என்ற நினைவு இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு வந்திருக்கிறது. புது உலகை ஸ்தாபனை செய்வார். அவர் மீண்டும் தகுந்த நேரத்தில் இரஜோ, தமோவில் வருவார்கள். நாம் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.

 

ஒரே ஒரு தந்தை தான் குழந்தைகளுக்குக் கற்பித்து உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். சுயம் தான் ஆவது கிடையாது. அதனால் தான் அவர் சுயநலமற்ற சேவாதாரி என்று கூறப்படுகின்றார். நாங்கள் பலனை விரும்புவது கிடையாது, சுயநலமில்லாமல் சேவை செய்கிறோம் என்று மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு இருப்பது கிடையாது. எப்படிப்பட்ட சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறார்களோ அவ்வாறு பிறப்பு எடுக்கின்றனர். காரியத்தின் பலன் கண்டிப்பாக கிடைக்கும். சந்நியாசிகளும் மறுபிறப்பு குடும்பஸ்தர்களிடம் எடுத்து பிறகு சம்ஸ்காரத்தின்படி சந்நியாசி தர்மத்திற்குச் சென்று விடுவர். யுத்தம் செய்பவர்களுக்குக்கான உதாரணம் பாபா கொடுக்கின்றார். யார் யுத்த மைதானத்தில் இறப்பார்களோ அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்று கீதையில் எழுதப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் சொர்க்கத்திற்கான நேரம் இருக்கிறது அல்லவா! சொர்க்கத்திற்கு இலட்சம் ஆண்டுகள் ஆயுள் என்று கூறிவிட்டனர். தந்தை என்ன புரிய வைக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். கீதையில் என்னவெல்லாம் எழுதி வைத்து விட்டனர்! பகவானின் மகாவாக்கியம் - நான் சர்வவியாபி என்று கூறுகின்றனர். நான் சர்வவியாபி என்று என்னை நானே எவ்வாறு நிந்தனை செய்து கொள்வேன்? நாய், பூனை அனைத்திலும் இருக்கிறேன் என்று கூறிவிட்டனர் தந்தை கேட்கின்றார்-என்னை ஞானக் கடல் என்று கூறுகிறீர்கள், பிறகு நான் என்னை இவ்வாறு எப்படி கூறிக் கொள்ள முடியும்? எவ்வளவு பொய் இருக்கிறது! யாரிடத்திலும் ஞானம் கிடையவே கிடையாது. சந்நியாசி போன்றவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது! ஏனெனில் தூய்மையாக இருக்கின்றனர். சத்யுகத்தில் எந்த குருமார்களும் இருக்கமாட்டார்கள். இங்கு மனைவியிடம் கூறுகின்றனர் - உனது கணவன் தான் குருவாக, ஈஸ்வரனாக இருக்கின்றார், வேறு எந்த குருவிடமும் செல்லக் கூடாது. எப்பொழுது பக்தி சதோ பிரதானமாக இருந்ததோ, அப்பொழுது இவ்வாறு புரிய வைக்கப்பட்டன. சத்யுகத்தில் குருமார்கள் கிடையாது. பக்தியின் ஆரம்பத்திலும் குருமார்கள் கிடையாது. கணவன் தான் அனைத்துமாக இருந்தார். எந்த குருமார்களும் கிடையாது. இவ்விசயங்கள் அனைத்தையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.

 

சில மனிதர்கள் பிரம்மா குமார், குமாரி என்ற பெயர் கேட்டதும் பயந்து விடுகின்றனர். ஏனெனில் இவர்கள் சகோதர சகோதரிகளாக ஆக்கிவிடுகின்றனர் என்று நினைக்கின்றனர். அரே, பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தையாக ஆவது நல்லது அல்லவா! பி.கு தான் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைகின்றனர். இப்பொழுது நீங்கள் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பி.கு. ஆகியிருக்கிறீர்கள். நாம் சகோதர சகோதரிகள் என்று இருவரும் கூறுகிறீர்கள். சரீர உணர்வு, விகாரங்களின் துர்நாற்றம் நீங்கி விடுகிறது. நாம் ஒரு தந்தையின் குழந்தைகள், சகோதர சகோதரிகள் விகாரத்தில் எப்படி செல்ல முடியும்? இது மகா பாவமாகும். இவ்வாறு தூய்மையாக இருப்பதற்கான யுக்தி நாடகத்தில் இருக்கிறது. சந்நியாசிகளுடையது துறவற மார்க்கமாகும். நீங்கள் இல்லற மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். இப்பொழுது நீங்கள் இந்த சீ சீ உலகின் சடங்குகளை விட்டு விட்டு இந்த உலகையே மறந்துவிட வேண்டும். நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். பிறகு இராவணன் எவ்வளவு சீ சீ ஆக ஆக்கிவிட்டான். இதையும் பாபா புரிய வைத்திருக்கின்றார். நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? என்று சிலர் கேட்கின்றனர். 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள் என்ற நல்ல விசயத்தை தானே நாம் கூறுகிறோம். 84 பிறவிகள் எடுத்திருக்கவில்லையெனில் நிலைத்திருக்க மாட்டார்கள். இவர் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொர்க்கத்திற்கு வர முடியாது. பிரஜைகளிலும் குறைந்த பதவி தான் அடைவர். பிரஜைகளிலும் நல்ல பதவி, குறைந்த பதவி இருக்கிறது அல்லவா! இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. பகவான் வந்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எஜமானராக இருந்தார். தந்தை தான் ஸ்தாபனை செய்கின்றார். தந்தை கீதை கூறியிருந்தார், அதன் மூலம் தான் இந்த பதவி அடைந்திருக்கின்றார், பிறகு படிப்பது, கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் படித்து விட்டு பதவியடைந்து விடுகிறீர்கள். பிறகு கீதை ஞானம் படிக்கமாட்டீர்கள். ஞானத்தின் மூலம் சத்கதி கிடைத்து விட்டது, எந்த அளவு முயற்சியோ அந்த அளவு உயர்ந்த பதவி. கல்பத்திற்கு முன் எவ்வளவு முயற்சி செய்திருந்தீர்களோ அதை செய்து கொண்டிருக்கிறீர்கள். சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். ஆசிரியரையும் பார்க்க வேண்டும், இவர் எனக்கு கற்பித்திருக்கிறார், நான் இவரை விட புத்திசாலியாக ஆக வேண்டும். அதிக இடைவெளி (மார்ஜின்) இருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த நிலை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மூல விசயம் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானம் ஆவதாகும். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! இல்லற மார்க்கத்திலும் இருக்க வேண்டும், தந்தையையும் நினைவு செய்ய வேண்டும், பாவனம் ஆகிவிடுவீர்கள். இங்கு அனைவரும் பதீதமாக இருக்கின்றனர், இங்கு துக்கம் தான் இருக்கின்றன. சுகத்தின் இராஜ்யம் எப்பொழுது இருந்தது? என்பது யாருக்கும் தெரியாது. ஹே பகவான்! ஹே ராம்! இந்த துக்கம் ஏன் கொடுத்தீர்கள்? என்று துக்கத்தின் பொழுது கூறுகின்றனர். பகவான் யாருக்கும் துக்கம் கொடுப்பது கிடையாது. இராவணன் தான் துக்கம் கொடுப்பது.. நமது இராஜ்யத்தில் வேறு எந்த தர்மமும் கிடையாது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். பிறகு தான் மற்ற தர்மங்கள் வருகின்றன. நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லுங்கள். படிப்பை கூடவே வைத்துக் கொள்ளுங்கள், மன்மனாபவ என்ற இலட்சியம் கிடைத்திருக்கிறது, தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையிடமிருந்து நாம் சொர்க்க ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். இதைக் கூட நினைக்க முடியாதா? இந்த நினைவு உறுதியாக இருக்க வேண்டும். பிறகு கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) அதிகாலையில் அமிர்தவேளையில் எழுந்து சிந்தனை செய்ய வேண்டும் - பாபா எனக்கு தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார். என்னை ஞான இரத்தினங்களினால் அலங்கரிப்பதற்காக இப்பொழுது பாபா வந்திருக்கின்றார். அவர் தந்தைகளுக்கெல்லாம் தந்தையானவர், பதிகளுக்கெல்லாம் பதியானவர். இப்படிப்பட்ட சிந்தனை செய்து அளவற்ற குஷியின் அனுபவம் செய்ய வேண்டும்.

 

2) ஒவ்வொருவரின் முயற்சியையும் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். உயர்ந்த பதவியடைவதற்கு இடைவெளி (மார்ஜின்) இருக்கிறது. ஆகையால் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

சங்கமயுகத்தில் கைமேல் பலன் மூலமாக சக்திசாலி ஆகக்கூடிய சதா சக்திசாலி ஆத்மா ஆகுக.

 

சங்கமயுகத்தில் எந்த ஆத்மாக்கள் எல்லையற்ற சேவைக்கு நிமித்தமாகியிருக்கின்றனவோ, அவர்களுக்கு நிமித்தமானதன் கைமேல் பலன் சக்தியாக பிராப்தி ஆகிறது. இந்த கைமேல் பலன் தான் சிரேஷ்ட யுகத்திற்கான பழமாகும். அப்படிப்பட்ட பழம் உண்ணக் கூடிய சக்திசாலி ஆத்மா எந்த ஒரு பிரச்சனை மீதும் எளிதாகவே வெற்றியடைந்து விடுகிறது, அவர் பாபாவுடன் இருக்கக் கூடிய காரணத்தால் வீணானவைகளிலிருந்து எளிதாக விடுபட்டுவிடுகின்றனர், விஷமுள்ள பாம்பைப் போன்ற சூழ்நிலைகளின் மீதும் அவர்களுக்கு வெற்றி ஏற்பட்டுவிடுகிறது. எனவே நினைவுச் சின்னத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் பாம்பின் தலைமீது நடனமாடியதாகக் காட்டுகின்றனர்.

 

சுலோகன்:

பாஸ் வித் ஆனர் ஆகி நடந்து முடிந்ததைக் கடந்து செல்லுங்கள். மேலும் எப்போதும் பாபாவிடம் இருங்கள்.

 

ஓம்சாந்தி