18-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தனக்கு 21 பிறவிகளுக்கு சுயராஜ்ய திலகம் அணிவித்துக் கொள்ள வேண்டுமானால் தேகத்தின் அனைத்து உணர்வுகளையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
ஏழைக் குழந்தைகளின் எந்த புத்திசாலித் தனத்தினால் பாபா குஷி அடைகிறார்? அவர் களுக்கு எந்த ஓர் அறிவுரை தருகிறார்?

பதில்:
ஏழைக் குழந்தைகள் - தங்களிடமுள்ள சோழிகளை பாபாவின் சேவையில் பயனுள்ள தாக்கி, வரப் போகும் 21 பிறவிகளுக்குத் தங்களின் பாக்கியத்தைச் சேமித்துக் கொள்கின்றனர். பாபாவும் அந்தக் குழந்தைகளின் இந்த புத்திசாலித் தனத்தினால் மிகவும் குஷியடைகிறார். பாபா, பிறகு அத்தகைய குழந்தைகளுக்கு முதல் தரமான அறிவுரை தருகிறார் - குழந்தைகளே, டிரஸ்டி ஆகுங்கள். தன்னுடையது என நினைக்காதீர்கள். குழந்தைகள் முதலானவர்களையும் டிரஸ்டியாக இருந்து பராமரித்து வாருங்கள். ஞானத் தினால் நீங்கள் தங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்தி இராஜாவுக்கெல்லாம் மேலான இராஜா ஆகுங்கள்.

பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்....

ஓம் சாந்தி.
குழந்தைகள் இரண்டு வார்த்தைகள் கேட்டீர்கள். குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் இங்கே புது உலகிற்காக அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொண்டு வந்துள் ளோம். அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் அறிவார்கள், இங்கே ஸ்ரீமத் கிடைக்கிறது, மன்மனாபவ என்ற மகாமந்திரம் கிடைக் கிறது. வார்த்தையோ உள்ளது இல்லையா? இந்த மந்திரத்தை யார் தருகிறார்? அவர் தான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர், வழிமுறை தருவதற்கான கடலாகவும் உள்ளார். அவருடைய வழிமுறை ஒரே ஒரு முறை கிடைக்கின்றது. டிராமாவில் ஒரு முறை எது நடந்து முடிந்து விட்டதோ, அது பிறகு 5000 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் நடைபெறும். இந்த ஒரே மகாமந்திரத்தின் மூலம் துன்பம் விலகி விடும். பதீத-பாவனர் பாபா ஒரே ஒரு முறை வந்து ஸ்ரீமத் தருகிறார். பதீத-பாவனர் யார்? பரமபிதா பரமாத்மா தான் தூய்மை இல்லாதவர்களை தூய்மைபடுத்தி தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவர் தான் பதீத-பாவனர், சத்கதி அளிக்கும் வள்ளல் எனச் சொல்லப்படுகிறார். நீங்கள் அவருக்கு முன்னால் அமர்ந்திருக் கிறீர்கள். அவர் தான் நமக்கு எல்லாமே என அறிந்திருக்கிறீர்கள். நமக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குபவர். உங்களுக்கு நிச்சயம் உள்ளது-இந்த மகாமந்திரம் எல்லையற்ற தந்தையிடமிருந்து கிடைக் கிறது என்று. அவர் தந்தை அல்லவா? ஒருவர் நிராகார் (சரீரமற்றவர்) மற்றவர் சாகார் (சரீரமுடையவர்) குழந்தைகளும் நினைவு செய் கின்றனர், தந்தையும் நினைவு செய்கிறார். கல்ப-கல்பமாகத் தம்முடைய குழந்தைகளுக்குத் தான் சொல்கிறார். பாபா சொல்கிறார், அனைவரின் சத்கதிக்காக மந்திரம் ஒன்று தான், அதைக் கொடுப்பவரும் ஒருவர் தான். சத்குரு தான் சத்தியமான மந்திரம் தருபவர். நீங்கள் அறிவீர்கள், நாம் இங்கே வந்துள்ளோம், நம்முடைய சுகதாமத்திற்கான அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள் வதற்காக. சத்யுகம் தான் சுகதாமம் எனச் சொல்லப்படுகிறது. இது துக்கதாமம். யாரெல்லாம் பிராமணர் ஆகின்றனரோ, அவர்களுக்குத் தான் சிவபாபா பிரம்மாவின் வாய் மூலமாக மந்திரம் தருகிறார். நிச்சயமாக சரீரத்தில் வந்தாக வேண்டும். இல்லையென்றால் எப்படிக் கொடுக்க முடியும்? அவர் சொல்கிறார், கல்ப-கல்பமாக உங்களுக்கு இந்த மகா மந்திரத்தைத் தருகிறேன் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அனைத்து தேகத்தின் தர்மங்களைத் தியாகம் செய்து விட்டு தேகம் மற்றும் தேகத்தின் அனைத்து தர்மங்களையும் மறந்து விடுங்கள். தன்னை தேகம் என உணர்வதன் மூலம் பிறகு தேகத்தின் உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா, மாமா, குரு-கோஸாயி அனைவருடைய நினைவும் வந்து விடும். இதையும் சொல்கிறார், நீங்கள் இறந்து விட்டால் உலகம் இறந்து விட்டது. பாபா சொல்கிறார், நான் உங்களுக்கு மந்திரமே அந்த மாதிரி கொடுக்கிறேன். தன்னை ஆத்மா என உணர்ந்து அசரீரி ஆகி விடுங்கள். சரீர உணர்வை விட்டு விடுங்கள். இங்கே இருப்பவர்கள் தேக அபிமானிகள். சத்யுகத்தில் இருப்பவர்கள் ஆத்ம அபிமானிகள். இந்த சங்கமயுகத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாகவும் ஆகிறீர்கள், பரமாத்மாவை அறிந்து கொள்ளும் ஆஸ்திகராகவும் ஆகிறீர்கள். யார் பரமபிதா பரமாத்வையும் அவரது படைப்பு பற்றியும் அறிந்துள்ளனரோ, அவர்கள் தான் ஆஸ்திகர் எனச் சொல்லப் படுவார்கள். ஆஸ்திகர்கள் கலியுகத்திலும் இருப்பதில்லை, சத்யுகத்திலும் இருப்ப தில்லை. சங்கமயுகத்தில் தான் உள்ளனர். பாபாவிடம் ஆஸ்தி பெற்று அவர்கள் தான் பிறகு சத்யுகத்தில் இராஜ்யம் செய்கின்றனர். இங்கே நாஸ்திகர் மற்றும் ஆஸ்திகரின் விசயம் நடக்கிறது, அங்கே நடப்பதில்லை. ஆஸ்திகர்கள் பிராமணர் ஆகின்றனர். அவர்கள் முதலில் நாஸ்திகராக இருந்தவர்கள். இச்சமயம் முழு உலகமுமே நாஸ்திகராக (ஆஸ்திக்கு அருகதை யற்றதாக) உள்ளது. எவருமே தந்தையையோ தந்தையின் படைப்பையோ அறிந்திருக்க வில்லை. சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரே ஓர் எல்லையற்ற தந்தையுடன் தான் வேலை. அவரது ஸ்ரீமத் கிடைக்கிறது அல்லது முயற்சி செய்விக்கிறார். பாபா சொல்கிறார், குழந்தைகளே, தேகத்தோடு கூடவே தேக உணர்வை மறந்து, மற்ற யாரையும் நினைவு செய்யாதிருங்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். இது தான் மகாமந்திரம் எனச் சொல்லப் படுகின்றது. இதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் உருவாகின்றது. உங்களுக்கு சுயராஜ்ய திலகம் கிடைக்கிறது - 21 பிறவிகளுக்காக. அது பிராலப்தமாகும் (முயற்சியின் பலன்). கீதை என்பதே நரனில் இருந்து நாராயணனாக, மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கானது.

குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இவ்வுலகம் மாறிக் கொண்டிருக்கிறது. புது உலகத் திற்காக அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இது மரண உலகம். இங்கே பாருங்கள், மனிதர்களின் அதிர்ஷ்டம் எவ்வாறு உள்ளது! இதன் பெயரே துக்க உலகம். இதை யார் சொன்னது? ஆத்மா. இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகியிருக்கிறீர்கள். ஆத்மா சொல்கிறது, இது துக்க உலகம். நமது பரந்தாமம் அது, அதில் நம்முடைய பாபா வசிக்கிறார். இப்போது பாபா ஞானம் சொல்கிறார், மேலும் அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறார். பாபா ஒரு மகாமந்திரம் தருகிறார் - என்னை நினைவு செய்யுங்கள். எந்த ஒரு தேகதாரி சொல்வதைக் கேட்டாலும். விதேகியான (தேக மில்லாத) என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தேகதாரியிடம் தான் கேட்க வேண்டியதிருக்கும். பிரம்மா குமார்-குமாரிகளும் கூட வாயின் மூலம் தான் சொல்வார் கள் - பதீத-பாவனரை நினைவு செய்யுங்கள் என்று. உங்கள் தலை மீதுள்ள விகர்மங்களின் சுமையை நினைவின் பலத்தினால் தான் பஸ்மம் செய்ய வேண்டும். நோயற்றவராக ஆக வேண்டும். குழந்தைகள் நீங்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், பாபா வந்துள்ளார், அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக, மேலும் மிகவும் சுலபமான வழி சொல்கிறார். பாபாவின் நினைவு மறந்து போகிறது எனச் சொல்கின்றனர். அட, வெட்கம் வரவில்லையா? உங்களை தூய்மையை இழக்கச் செய்கின்ற லௌகிக் தந்தையின் நினைவு இருக்கிறது, உங்களைத் தூய்மையாக்குகிற பரலௌகிக் தந்தை சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்தால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகி விடும். அவருக்குச் சொல்கிறீர்கள், பாபா, மறந்து விடு கிறோம்! பாபா சொல்கிறார், நான் உங்களை கோவிலில் வைத்து வழிபடத் தகுதியானவர் களாக ஆக்குவதற்காக வந்திருக்கிறேன். நீங்கள் அறிவீர்கள், பாரதம் சிவாலயமாக இருந்தது. நாம் அங்கே இராஜ்யம் செய்திருந்தோம். பிறகு நம்முடைய ஜடசித்திரங்களைக் கோவில்களில் பூஜை செய்தே வந்துள்ளோம். நாம் தான் தேவதையாக இருந்தோம் என்பதை மறந்து விட்டுள்ளோம். உங்களுடைய மம்மா-பாபா பூஜைக்குரியவர் களாக இருந்தவர்கள் மீண்டும் பூஜாரி ஆகியுள்ளார்கள். இந்த ஞானம் புத்தியில் உள்ளது. கல்ப விருட்சத்திலும் முக்கியமாகக் காட்டப் பட்டுள்ளது. முதலில் அஸ்திவாரத்தில் ஆதி சநாதன தேவி-தேவதைகள் இருந்தனர். இப்போது இல்லை. 5000 ஆண்டுகளுக்கு முன் சத்யுகம் இருந்தது. இப்போது கலியுகம். கலியுகத்திற்குப் பிறகு மீண்டும் சத்யுகம் வர வேண்டும். நிச்சயம் ஸ்ரீமத்தை அளிப்பவர் வர வேண்டும். உலகம் நிச்சயமாக மாற வேண்டும். தண்டோரா போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். மரமோ விரைவாக வளராது. விக்னங்கள் ஏற்படுகின்றன. வெவ்வேறு பெயர்-வடிவங்களில் சிக்கிக் கொள்கின்றனர். பாபா சொல்கிறார், சிக்கிக் கொள்ளா தீர்கள். இல்லற விவகாரங்களில் இருங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள், தூய்மையாக இருங்கள். பகவான் சொல்கிறார் - காமம் மகா சத்ரு. முன்பும் கூட கீதையின் பகவான் சொல்லியிருந்தார் - இப்போது மீண்டும் சொல்கிறார். கீதையின் பகவான் நிச்சயமாக காமத்தின் மீது வெற்றி கொள்ளச் செய்திருப்பார். ஒன்று இராவண இராஜ்யம். இன்னொன்று இராமராஜ்யம். இராமராஜ்யம் பகல், இராவண இராஜ்யம் இரவு. இப்போது இந்த இராவண இராஜ்யம் முடிந்துவிடப் போகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பாபா படிப்பு சொல்லித் தந்து உடன் அழைத்துச் செல்வார். பிறகு உங்களுக்கு இராஜ்யம் வேண்டும். இந்தப் தூய்மை இல்லாத பூமியில் இராஜ்யம் செய்ய மாட்டிர்கள். இங்கே வந்து கால் வைப்பதற்கு. சிவபாபாவுக்கு கால்கள் கிடையாது. தேவதைகளின் கால்கள் இந்த தூய்மை இல்லாத உலகில் வர முடியாது. நீங்கள் அறிவீர்கள், நாம் தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் பாரதத்தில் தான் வருவோம். ஆனால் சிருஷ்டி மாற்றமடைந்து கலியுகத்திலிருந்து சத்யுகம் ஆகி விடும். இப்போது நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகக் குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, புயல்கள் வரு கின்றன. பாபா சொல்கிறார், நீங்கள் பாபாவை மறந்து விடுகிறீர்கள். பாபாவின் வழிமுறைப்படி நடப்பதில்லை. உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான பாபாவின் வழிமுறை கிடைக்கிறது - குழந்தைகளே, பிரஷ்டாச் சாரி (மிகத் தாழ்ந்தவர்களாக) ஆகாதீர்கள். உங்களுக்குப் படிப்பைச் சொல்லித் தருபவர் ஒருவர். அவர் சொல்கிறார், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். இவருடைய ரதத்தையும் கூட (பிரம்மா) நினைவு செய்யாதீர்கள். பிரம்மா மற்றும் சிவபாபா (தேர் மற்றும் தேரில் இருப்பவர்) குதிரைவண்டியின் விசயமோ கிடையாது. அதில் அமர்ந்து ஞானம் தரப்படுகிறதா என்ன? தற்சமயமோ ஏரோப்ளேன் மீது சவாரி நடைபெறுகின்றது. விஞ்ஞானம் முற்றிலும் வேகமாக உள்ளது. மாயாவின் பகட்டு மிக வேகமாக உள்ளது. இச்சமயம் ஒருவர் மற்றவருக்கு எவ்வளவு வரவேற்பு செய்கின்றனர்! இன்ன இடத்தின் பிரதம மந்திரி வந்தார், கௌரவம் கிடைத்தது. 15 நாளுக்குப் பின் அவரைக் கீழே இறக்கி விடுகின்றனர். மகாராஜாக்களுக்கும் கூடக் கஷ்டங்கள் உள்ளன. பயந்து கொண்டே இருக் கின்றனர். உங்களுக்கு எவ்வளவு சகஜ ஞானம் கிடைக்கிறது! நீங்கள் எவ்வளவு ஏழைகள்! ஒரு சோழியும் கூட உங்களிடம் இல்லை. பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை என்று டிரஸ்டி ஆக்குகிறீர்கள். பாபா சொல்கிறார், நல்லது, நீங்களும் டிரஸ்டி ஆகி இருங்கள். உங்களுடையது எனப் புரிந்து கொள்வீர்களானால் இது உங்களுக்கு அறிவுடைமை ஆகாது. ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். யார் டிரஸ்டியாக உள்ளனரோ, அவர்கள் ஸ்ரீமத்படி நடப்பார்கள். நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள், இந்தக் கல்லையும் கிளிஞ்சலையும் (ஒன்றுக்கும் உதவாதவற்றை) பாபாவுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாபா பிறகு முதல் தரமான அறிவுரை தருகிறார். குழந்தைகளைப் பராமரிக்கவும் வேண்டும். இச்சமயம் உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுடைய வருங்காலம் சீராகிறது. இராஜாக்களுக்கெல்லாம் மேலான இராஜா ஆகி விடுவீர்கள். பிறகு அறிவுரை தருவதற்கான கடமையும் பாபாவுக்கு உள்ளது. பாபாவை நினைவு செய்யுங்கள், இரக்கம் வர வேண்டும். சாக்கடையில் விழ இருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும். மிகவும் யுக்தி யுடன் நடக்க வேண்டியுள்ளது. சூர்ப்பனகை, புத்னா, அஜாமில், துரியோதனன் இவை யனைத்தும் இப்போதைய பெயர்களாகும். இபபோதைய காட்சி மீண்டும் கல்பத்திற்குப் பின் நடைபெறும். அதே தந்தை நேராகவே வந்து ஞானம் தருகிறார். மனிதரிலிருந்து தேவதை பதவியை அடையச் செய்கிறார். 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே ஆஸ்தி பெறுவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். முன்பும் கூட மகாபாரத யுத்தம் நடைபெற்றி ருந்தது. அவர்கள் இதைத்தான் தொடர்பு படுத்துகின்றனர். பாபா நல்லபடியாகப் புரிய வைத்து மனிதரில் இருந்து தேவதை பதவி பெறச் செய்கிறார். பாபாவிடம் ஆஸ்தி பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள். பிரம்மா அல்லது ஜெகதம்பா அல்லது பி.கே.க்களிடம் இருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. இவர்களும் ஆஸ்தியை பாபாவிடம் இருந்து தான் பெறுகின்றனர். மற்றவர்களுக்கும் புரிய வைக்கின்றனர். நீங்களும் ஜெகத்பிதாவின் குழந்தைகள் ஆகி அவரிடம் இருந்து ஆஸ்தி பெறுகிறீர்கள். அனைவருக்கும் தனித்தனியாகச் சொல்கிறார், குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். இது நேரடியாக அம்புபோல புத்தியில் பதிகின்றது. பாபா சொல்கிறார், குழந்தைகளே, ஆஸ்தியை நீங்கள் என்னிடமிருந்து பெற வேண்டும். யாராவது உற்றார்-உறவினர் முதலானோர் இறந்து போகலாம், ஆஸ்தியை நீங்கள் பாபாவிடம் இருந்து பெற வேண்டும். இதில் மிகுந்த குஷி இருக்க வேண்டும். அட, அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள், பாபா நம்மை மீண்டும் சொர்க்கத்தின் அதிபதி ஆக்குகிறார் என்பதை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே அந்த குணம், நன்னடத்தை முத-யவற்றை தாரணை செய்ய வேண்டும். விகாரங்களில் இருந்து தப்பிக்க வேண்டும். நாம் தூய்மையான நிர்விகாரி யாக ஆகிக் கொண்டிருக்கிறோம். டிராமா மற்றும் கல்பவிருட்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த ஒரு கஷ்டமும் இல்லை, எளிதிலும் எளிதானது. பிறகும் சொல் கின்றனர், பாபா, மறந்து விட்டோம், பூதம் வந்து விட்டது என்று. பாபா சொல்கிறார், இந்த பூதங்களை வெளியேற்றுங்கள். மனம் என்ற கண்ணாடியில் பாருங்கள் - நாம் தகுதி உள்ளவராக ஆகியிருக்கிறோமா? நரனில் இருந்து நாராயணன் ஆக வேண்டும். பாபா அமர்ந்து புரிய வைக்கிறார் - இனிமையான சௌபாக்கியசாலி குழந்தைகளே, நீங்கள் சௌ பாக்கியசாலி ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். இப்போதோ அனைவரும் துர்பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள் அல்லவா? பாரதவாசிகள் தான் சௌபாக்கியசாலிகளாக இருந்தனர். எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தனர்! இது பாரதத்தின் விசயமாகும். பாபா சொல்கிறார், நீங்கள் தங்களை ஆத்மா என உணருங்கள் - ஏனென்றால் நீங்கள் என்னிடம் வர வேண்டும். அப்போது கடைசியில் புத்தியில் என்ன இருந்ததோ அதுவே கிடைத்து விடும் (அந்த் மதி ஸோ கதி) . இப்போது நாடகம் முடிவடைகின்றது. நாம் இதோ, இப்போது சென்றே விட்டோம். அதற்கான உபாயத்தையும் சொல்கிறார். அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டுப் புண்ணியாத்மா ஆகி விடுவீர்கள். புண்ணியாத்மாக்களின் உலகம் இருந்தது இல்லையா? அது மீண்டும் இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பழைய உலகம் மாறி இப்போது புதியதாக ஆக வேண்டும். புரிந்து கொண்டுள்ளனர், பாரதம் புரா தனமானதாக இருந்தது, சொர்க்கமாக இருந்தது. ஹெவன்லி காட் ஃபாதர் (சொர்க்கத்தைப் படைப்பவராகிய தந்தை) சொர்க்கத்தை உருவாக்கியிருந்தார். அவர் எப்போது வந்தார்? இச்சமயம் (சங்கமத்தில்) தான் வருகிறார். இது கல்யாண்காரி (நன்மை) தரக்கூடிய பாபா வரும் சமயம் எனச் சொல்லப்படுகின்றது. இதுவோ இராவணனின் சம்பிரதாயம், எவ்வளவு பெரியதாக உள்ளது ! இராமரின் சம்பிரதாயம் எவ்வளவு குறைவாக உள்ளது! இங்கே பெருகிக் கொண்டே இருக்கின்றனர். குழந்தைகள் மீண்டும் பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்காக வந்து கொண்டே இருப்பார்கள் கண்காட்சி அல்லது புரொஜக்டர் வைத்துப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இப்போதோ அதிக சேவை செய்ய வேண்டும். பாபா சொல்லிக் கொண்டே இருக்கிறார் - செல்லக் குழந்தைகளே, இது டிராமா. ஆனால் இந்தச் சமயம் வரை எது உருவாகியுள்ளதோ, அது மிகச் சரியாக நடந்தேறிய டிராமா என்றே சொல்வார்கள். டிராமாவின் விதி பற்றி பாபா சொல்கிறார் - நானும் அதில் இருக்கிறேன். குழந்தைகளே, தூய்மை இல்லாத உலகத்திற்கு நானும் கூட வர வேண்டி உள்ளது. பாருங்கள், பரந்தாமத்தை விட்டு நான் எப்படி இங்கே வருகிறேன், குழந்தை களுக்காக! பிளேக் நோயிலிருந்து டாக்டர்கள் தூரத்தில் ஓடிப்போய் விடுவதில்லை. அவரோ வந்தே ஆக வேண்டும். பாடவும் செய்கின்றனர், பதீத-பாவனா வாருங்கள், வந்து 5 விகாரங்களில் இருந்து விடுவித்துப் தூய்மையாக்குங்கள், அதாவது விடுவியுங்கள். துக்கதாமத்தில் இருந்து சுகதாமத் திற்கு அழைத்துச் செல்லுங்கள். காட் இஸ் லிபரேட்டர் (கடவுள் துக்கத்தில் இருந்து விடுவிப் பவர்). அவர் அனைவரின் லிபரேட்டராகவும் உள்ளார் இல்லையா? மேலும் வழிகாட்டி ஆகி உடன் அழைத்துச் செல்கிறார். பிறகு நம்பர்வார் வருகின்றனர். சூரியவம்சி, பிறகு சந்திரவம்சி, பிறகு துவாபரயுகம் ஆரம்பமாகிறது என்றால் நீங்கள் பூஜாரி ஆகி விடுகிறீர்கள். பாடப்படவும் செய்கிறது, தேவதைகள் வாம மார்க்கத்தில் (விகாரத்தில்) சென்று விட்டனர். அதன் சித்திரங் களையும் காண்பிக்கின்றனர். இப்போது நீங்கள் நடைமுறையில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் - நாம் தான் தேவதையாக இருந்தோம், எவ்வளவு சுலபமான வியம், புரிநது கொள்வதற்கு! இதுவோ நல்லபடியாக புத்தியில் தாரணை ஆக வேண்டும். இப்போது குழந்தைகள் நீங்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள். இங்கே பாபா முன்பாக அமர்ந்திருக்கிறார். மற்றப்படி ஆசிரியர்கள் நம்பர்வார் உள்ளனர். இங்கே பிரஜாபிதா பிரம்மாவின் வாயின் மூலம் பகவான் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்லியிருக்கிறார். முதலிலோ பிரம்மா கேட்பார் இல்லையா? பிரம்மா, விஷ்ணு, சங்கரை சூட்சுமவதனத்தில் காட்டி யுள்ளனர். இப்போது விஷ்ணுவோ சத்யுகத்தின் அரசர். பிரம்மாவோ சங்கமயுகத்தவர். பிரம்மாவோ இங்கே இருக்க வேண்டும் இல்லையா? அப்போது பிராமணர்கள் மீண்டும் தேவதை ஆவார்கள். இது ருத்ர ஞான யக்ஞமாகும். இதற்கு முன்பும் யக்ஞம் படைக்கப்பட்டது. இதில் தான் முழு உலகமும் ஸ்வாஹா ஆகும். அனைவரும் அழிந்து போவார்கள். குழந்தைகள் நீங்கள் பிறகு இங்கே வந்து புது உலகில் இராஜ்யம் செய்வீர்கள்.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உள்ளுக்குள் இருக்கும் பூதங்களை வெளியேற்றி நரனில் இருந்து நாராயணன் ஆவதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக வேண்டும். மனம் என்ற கண்ணாடியில் பார்க்க வேண்டும் - நாம் எது வரை தகுதி உள்ளவராக ஆகியிருக்கிறோம்? .

2. தன்னை ஆத்மா என உணர்ந்து அசரீரி ஆகி பாபாவை நினைவு செய்ய வேண்டும். சரீர உணர்வு இல்லாதிருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
தூய்மையின் இராயல்டி மூலம் சதா மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய மகிழ்ச்சியான உள்ளம், மகிழ்ச்சியான முகம் உடையவர் ஆகுக.

தூய்மையின் இராயல்டி அதாவது ரியாலிட்டி (உண்மையான சொரூபம்) உடைய ஆத்மாக்கள் சதா மகிழ்ச்சியில் நடனம் ஆடுவார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி சில நேரம் குறைவாகவும், சில நேரம் அதிகமாகவும் இருக்காது. நாளுக்குநாள் ஒவ்வொரு நேரமும் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும், அவர்களுடைய உள்ளத்தில் ஒன்றும் வெளியில் மற்றொன்றும் இருக்காது. உள் உணர்வு, பார்வை, பேச்சு மற்றும் நடத்தை ஆகிய அனைத்தும் சத்தியமானதாக இருக்கும். அத்தகைய உண்மையான இராயல் ஆத்மாக்கள் உள்ளத்தில், பார்வையில் மற்றும் நடத்தையில் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகிழ்ச்சியான உள்ளம், மகிழ்ச்சியான முகம் அழிவற்றதாக இருக்கும்.

சுலோகன்:
உலகத்தில் சர்வ சிரேஷ்ட பலம் தூய்மையின் பலம் ஆகும்.