18-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஆன்மீக சர்ஜனாகவும் பேராசிரியராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் ஹாஸ்பிடல்-கம்-யுனிவர்சிட்டி (மருத்துவமனை இணைந்த பல்கலைகழகம்) திறந்து அநேகருக்கு நன்மை செய்ய வேண்டும்.

கேள்வி:
பாபாவும் தர்ம ஸ்தாபனை செய்கிறார், மேலும் மற்ற தர்ம ஸ்தாபகர்களும் தர்ம ஸ்தாபனை செய்கின்றனர். இருவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

பதில்:
பாபா தர்ம ஸ்தாபனை மட்டும் செய்து விட்டுத் திரும்பிச் சென்று விடுகிறார். ஆனால் மற்ற தர்ம ஸ்தாபகர்கள் தங்களுடைய பிராப்தியை அமைத்துக் கொண்டு செல் கின்றனர். பாபா தம்முடைய பிராப்தியை உருவாக்கிக் கொள்ளவில்லை. பாபாவும் கூட தம்முடைய பிராலப்தத்தை அமைத்துக் கொள்கிறார் என்றால் அவருக்கும் கூட யாராவது புருஷார்த்தம் செய்விப்பவர் வேண்டும். பாபா சொல்கிறார், நான் இராஜ்யம் செய்வதில்லை. நானோ குழந்தை களுக்கு முதல் தரமான பிராலப்தத்தை உருவாக்குகிறேன்.

பாடல்:
இரவு நேரப் பயணி களைத்துப் போகக் கூடாது

ஓம் சாந்தி.
இந்தப் பாடல் குழந்தைகள் உருவாக்கியது போலவே உள்ளது. பாடலின் அர்த்தத்தையோ வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகள் அறிவார்கள், இப்போது பயங்கர இருள் முடிவடைகிறது. மெது மெதுவாக இருட்டாகியது. இச்சமயம் பயங்கர இருள் என்று தான் சொல்வார்கள். இப்போது நீங்கள் பயணி ஆகியிருக்கிறீர்கள், ஒளிப் பிரகாசத்தில் செல்வதற்காக அல்லது சாந்திதாமம், தந்தை வீடு செல்வதற்காக. அது தூய்மையான தந்தை வீடு. இது தூய்மையில்லாத தந்தை வீடு. பிரஜாபிதாவுக்குள் அமர்ந்திருக்கும் நாயகனை நீங்கள் தந்தை எனச் சொல்கிறீர்கள். அவர் உங்களை தூய்மை யாக்கித் தம்முடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். தந்தையாக அவரும் இருக்கிறார், தந்தையாக இவரும் இருக்கிறார். அவர் நிராகார், இவர் சாகார். குழந்தைகளே என அழைப் பவர் எல்லையற்ற தந்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. தந்தை தான் அது போல் அழைக்கிறார். ஏனென்றால் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். தூய்மையாக்கினார். ஞானத்தைக் கொடுத்தார். குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், தூய்மையாகவோ அவசியம் ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும். மேலும் முழு சிருஷ்டிச் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். இந்த ஞானத்தி னால் நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாக ஆகிறீர்கள். சிலர் சொல்கின்றனர், எங்களுக்கு ஏதேனும் சேவை சொல்லுங்கள் என்று. சேவை இது தான் - மூன்றடி நிலம் கொடுத்து அதில் ஆன்மிகக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறந்து வையுங்கள். அப்பொழுது, அதில் எந்த ஒரு சுமையும் வராது. இதில் கேட்டுப் பெறு வதற்கான விசயமோ கிடையாது. அறிவுரை தருகிறார் - உங்களிடம் பணம் இருக்குமானால் ஆன்மிக மருத்துவமனை திறந்து வையுங்கள். இப்படியும் அநேகர் உள்ளனர், அவர்களிடம் பணம் எதுவும் கிடையாது. அவர்களும் மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் திறக்க முடியும். இன்னும் போனால் நீங்கள் பார்ப்பீர்கள், நிறைய மருத்துவ மனைகள் திறக்கப் படும். உங்கள் பெயர் ஆன்மிக சர்ஜன் என எழுதப்படும். ஆன்மிக சர்ஜன் மற்றும் பேராசிரியர். ஆன்மிகக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பதில் எந்த ஒரு செலவும் கிடையாது. ஆண் அல்லது பெண் இருவரும் ஆன்மிக சர்ஜன் மற்றும் பேராசிரியராக ஆக முடியும். முன்பு பெண்கள் ஆன தில்லை. விவகாரங்கள், காரியம் எல்லாம் ஆண்களிடம் இருந்தன. தற்சமயமோ மாதாக்கள் வெளிப்பட்டுள்ளனர். ஆக, நீங்களும் இப்போது இந்த ஆன்மிக சேவை செய்கிறீர்கள். ஞானத்தின் பிடிப்பு ஏற்பட்டு விட்டால் பிறகு யாருக்கும் புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். வீட்டில் போர்டு எழுதி வையுங்கள். சில பெரிய மருத்துவமனைகள், சில சிறிய தாகவும் இருக்கும். பார்க்கிறீர்கள், பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக் கூடிய நோயாளி என்றால், நாங்கள் உங்களைப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம், வாருங்கள் என்று சொல்லுங்கள். அங்கே பெரிய-பெரிய சர்ஜன்கள் இருக்கிறார்கள். சிறிய சர்ஜன் பெரிய சர்ஜனிடம் அனுப்பி வைக்கிறார். தனது கட்டணத்தைப் பெற்றுக் கொள் கிறார். பிறகு புரிந்து கொள்கிறார், இந்த நோயாளி அந்த மாதிரி இருக்கிறார், இவரைப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை தருகிறார். ஆகவே அது போல் சென்டர் திறந்து போர்டு எழுதி வையுங்கள். ஆக, மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள் இல்லையா? இதுவோ பொதுவாகப் புரிந்து கொள்வதற்கான விஷயம். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் கண்டிப்பாக வரும். பகவானாகிய தந்தை தான் புது உலகை ஸ்தாபனை செய்பவர். இத்தகைய தந்தை கிடைத்துள்ளார் என்றால் நாம் ஏன் ஆஸ்தியை அடையக் கூடாது? மனம்-சொல்-செயலால் இந்த பாரதத்திற்கு சுகம் கொடுக்க வேண்டும். மனம்-சொல்-செயல் அதுவும் ஆன்மிக சுகம் தர வேண்டும். மனம் என்றால் நினைவு மற்றும் இரண்டு வார்த்தைகள் சொல்கிறார் - மன்மனாபவ மற்றும் மத்யாஜீபவ. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்றால் இரண்டு வார்த்தை கள் ஆகின்றன இல்லையா? ஆஸ்தியை எப்படி அடைந்தோம், எப்படி இழந்தோம்? - இது தான் சக்கரத்தின் ரகசியம். வயதான பெண்களுக்கும் கூட ஆர்வம் இருக்க வேண்டும். எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் எனக் கேட்க வேண்டும். மிகவும் வயதானவர்களும் கூட இதைப் புரிய வைக்க முடியும். இதை வேறு எந்த வித்வான் அல்லது பண்டிதர் முதலானோர் புரிய வைக்க முடியாது. அப்போது பெயர் பெறுவார்கள். சித்திரங்களும் மிகவும் சுலபமானவை. யாருடைய அதிர்ஷ்டத்திலும் இல்லை என்றால் புருஷார்த்தம் செய்வதில்லை. நான் பாபாவுடைய வனாக ஆகி விட்டேன் என்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டாம். ஆத்மாக்களோ தந்தை யுடையவர்கள் தான். ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா. இதுவோ ஒரு விநாடியின் விஷயம். ஆனால் அவரிடமிருந்து ஆஸ்தி எப்படி கிடைக்கிறது, அவர் எப்போது வருகிறார் - இதை புரிய வைக்க வேண்டும். வருவதும் சங்கமயுகத்தில் தான். சத்யுகத்தில் நீங்கள் இத்தனை-இத்தனைப் பிறவிகள் எடுத்தீர்கள் என்று புரிய வைக்கிறார். திரேதாவில் இத்தனைப் பிறவிகள், 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்து விட்டீர்கள். இப்போது மீண்டும் சொர்க்கத்தின் ஸ்தாபனை நடைபெற வேண்டும். சத்யுகத்தில் வேறு எந்த ஒரு தர்மமும் இருக்காது. எவ்வளவு சுலபமான விஷயங்கள்! மற்றவர்க்குப் புரிய வைப்பதால் குஷி அதிகம் இருக்கும். ஆரோக்கியமானவராக ஆகி விடுவார்கள். ஏனென்றால் ஆசிர்வாதம் கிடைக்கிறது இல்லையா? வயதான மாதாக் களுக்கோ மிகவும் சுலபம். இவர்கள் உலகத்தை அறிந்த அனுபவஸ்தர்களும் ஆவார்கள். யாருக்காவது இவர்கள் அமர்ந்து புரிய வைப்பார்களானால் அற்புதம் செய்து காட்டுவார்கள். பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும், பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற வேண்டும். பிறவி எடுத்த பிறகு வாயினால் மம்மா பாபா எனச் சொல்லத் தொடங்குகின்றனர். உங்களுடைய உறுப்புகளோ பெரிய-பெரியவையாக உள்ளன. நீங்களோ புரிந்து கொண்டு பிறகு புரிய வைக்க முடியும். வயோதிக மாதாக்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும் - நாமோ பாபாவின் பெயரை விளங்கச் செய்ய வேண்டும், மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். மோகம் பற்றுதல் நீங்கிவிட வேண்டும். இறந்து தான் ஆக வேண்டும். இன்னும் இரண்டு-நான்கு நாள் தான் வாழ்வோம் என்றால் நாம் ஏன் ஒருவரிடமே புத்தியோகத்தை வைக்கக் கூடாது? சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாபாவின் நினைவில் இருப்பதோடு அனைத்துத் தரப்பில் இருந்தும் மோகத்தை நீக்கி விட வேண்டும். 60 வயது ஆகும் போது வானப்ரஸ்தம் மேற்கொள்கின்றனர். அவர்களோ மிக நன்றாகப் புரிய வைக்க முடியும். ஞானத்தை தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். நல்ல-நல்ல வீட்டின் பெண்குழந்தைகள் அது போல் புருஷார்த்தம் செய்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று புரிய வைப்பார்களானால் எவ்வளவு பேரும் புகழும் வெளிப்படும்! புருஷார்த்தம் செய்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆர்வம் வைக்க வேண்டும்.

இந்த ஞானம் மிகவும் அற்புதமானது. சொல்லுங்கள் - பாருங்கள், கலியுகம் இப்போது முடிவடைகிறது. அனைவரின் மரணமும் முன்னால் உள்ளது. கலியுகக் கடைசியில் தான் பாபா வந்து சொர்க்கத்தின் ஆஸ்தி தருகிறார். கிருஷ்ணரையோ தந்தை எனச்சொல்ல மாட்டார்கள். அவரோ சிறு குழந்தை. அவருக்கு சத்யுகத்தின் ஆஸ்தி எப்படிக் கிடைத்தது? நிச்சயமாக முந்தைய ஜென்மத்தில் அந்த மாதிரி கர்மம் செய்திருப்பார். நீங்கள் புரிய வைக்க முடியும், நிச்சயமாக இவர்கள் புருஷார்த்தத்தின் மூலம் இந்தப் பிராப்தியை உருவாக் கியுள்ளனர். கலியுகத்தில் புருஷார்த்தம் செய்து,சத்யுகத்தில் பிராப்தியை அடைந்தார்கள். அங்கோ புருஷார்த்தம் செய்விப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். சத்யுக திரேதாவின் பிராப்தி இவ்வளவு பலனாக கிடைத்துள்ளது. கண்டிப்பாக உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான தந்தை கிடைத்துள்ளார். அவர் தான் கோல்டன் மற்றும் சில்வர் ஏஜின் எஜமானர்களாக ஆக்குகிறார். வேறு யாரும் உருவாக்க முடியாது. நிச்சயமாக பாபாவே தான் கிடைத்துள்ளார். லட்சுமி-நாராயணர் தாமாகவே கிடைக்க மாட்டார்கள். பிரம்மா அல்லது சங்கரும் கிடைப் பார்கள் என்பதில்லை. பகவான் கிடைத்தார். அவர் நிராகார். பகவான் தவிர வேறு யாரும் இது போல் புருஷார்த்தம் செய்விப்பவர் கிடையாது.

பகவான் சொல்கிறார் - நான் உங்களுக்கான பலனை முதல் தரமானதாக உருவாக்கு கிறேன். இந்த ஆதி சநாதன தேவி- தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஸ்தாபனை இங்கேயே தான் செய்ய வேண்டும். செய்விப்பவரோ ஒரே ஒரு தந்தை தான். மற்ற தர்ம ஸ்தாபகர்களோ ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டே இருக்கின்றனர். தர்ம ஸ்தாபனை செய்பவர்கள், அவர்களுக்கான பலனை உருவாக்கிக் கொண்டு செல்கின்றனர். பாபாவோ தமக்காக பலனாக எதையும் உருவாக்க வேண்டிய தில்லை. பலனை உருவாக் கினார் என்றால் அவரையும் கூடப் புருஷார்த்தம் செய்ய வைப்பவர் யாராவது வேண்டும். சிவபாபா சொல்கிறார், என்னை யார் புருஷார்த்தம் செய்ய வைப்பார்? எனது பார்ட்டே அவ்வாறு உள்ளது. நான் இராஜ்யம் செய்வதில்லை. இந்த டிராமா ஏற்கனவே உருவாக்கப் பட்டதாகும்.

பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், நான் உங்களுக்கு அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். இப்போது பக்தி மார்க்கம் முடிவடைகிறது. அது இறங்கும் கலை. இப்போது உங்களுக்கு உயரும் கலை. உயரும் கலையால் அனைவருக்கும் நன்மை எனச் சொல்கின்றனர் இல்லையா? அனைவரும் முக்தி-ஜீவன் முக்தி அடைகின்றனர். பின்னால் 16 கலையில் இருந்து இறங்கி- இறங்கி கலையே இல்லாத நிலைக்கு வந்தாக வேண்டும். கிரகணம் பிடிக்கிறது இல்லையா? கிரகணம் சிறிது-சிறிதாகப் பிடிக்கின்றது. இதுவோ எல்லையற்ற விசயம். இப்போது நீங்கள் சம்பூர்ணம் ஆகிறீர்கள். பிறகு திரேதாயுகத்தில் 2 கலைகள் குறைகின்றன. கொஞ்சம் கருப்பாக ஆகி விடுகின்றனர். அதனால் புருஷார்த்தம் சத்யுக ராஜ்யத்திற்காகச் செய்ய வேண்டும். குறைவாக ஏன் பெற வேண்டும்? ஆனால் அனைவரும் 16 கலை சம்பூர்ணம் ஆகிற அளவுக்குப் பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாது. குழந்தைகள் புருஷார்த்தம் செய்யவும் செய்விக்கவும் வேண்டும். இந்தச் சித்திரங்களால் மிக நல்ல சேவை நடைபெற முடியும். மிகத் தெளிவாக எழுதப் பட்டுள்ளது. சொல்லுங்கள் - பாபா சொர்க்கத்தின் படைப்பைப் படைக்கிறார் என்றால் பிறகு நாம் ஏன் நரகத்தில் இருக்கிறோம்? இந்த பழைய உலகம் நரகம் இல்லையா? இதில் துக்கத்தின் மேல் துக்கம் தான் உள்ளது. பிறகு கண்டிப்பாக புது உலகம் சத்யுகம் வர வேண்டும். குழந்தைகள் நிச்சயபுத்தி உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கே எந்த ஒரு குருட்டு நம்பிக்கையின் விஷயமும் கிடையாது. எந்த ஒரு கல்லூரியிலும் குருட்டு நம்பிக்கையின் விஷயம் இருப்பதில்லை. நோக்கம்-குறிக்கோள் முன்னால் உள்ளது. அந்த கல்லூரி முதலியவற்றில் இந்தப் பிறவியில் படிக்கின்றனர். இந்தப் பிறவியிலேயே அதன் பலனை அடைகின்றனர். இங்கே இந்த படிப்பின் பிரதி பலனை விநாசத்திற்குப் பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் அடைவீர்கள். தேவதைகள் கலியுகத்தில் எப்படி வர முடியும்? குழந்தைகள் இதை புரிய வைப்பது மிகவும் சுலபம். சித்திரங்களும் மிக நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. கல்ப விருட்சமும் மிக நன்றாக உள்ளது. கிறிஸ்தவர்களும் கூட விருட்சத்தை ஏற்றுக் கொள்கின்றனர். தங்கள் தேசத்தின் குஷியைக் கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் அவரவர் பாகம் உள்ளது. இதையும் அறிவீர்கள் - பக்தியும் அரைகல்பம் இருந்தாக வேண்டும். அதில் யக்ஞம், தவம், தீர்த்தம் அனைத்தும் உள்ளன. பாபா சொல்கிறார், நான் அவற்றால் கிடைப்பதில்லை. எப்போது உங்கள் பக்தி முடிவடைகிறதோ, அப்போது பகவான் வருகிறார். அரைகல்பம் ஞானம், அரைகல்பம் பக்தி. கல்பவிருட்சத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. எதுவும் எழுதப் படாமல் சித்திரம் மட்டும் உள்ளதென்றால் அதை வைத்தும் புரிய வைக்க முடியும். சித்திரங்களின் பக்கம் கவனம் வேண்டும். இவற்றில் எவ்வளவு அற்புதமான ஞானம் உள்ளது! சரீரத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டிருந்தால் அதை தமது ஆஸ்தியாகப் புரிந்து கொள்வார் என்பது கிடையாது. நான் வாடகைதாரர் எனப்புரிந்து கொள்வார். இந்த பிரம்மா தாமும் அமர்ந்துள்ளார், அவரையும்(சிவபாபா) அமர்த்த வேண்டும். எப்படி ஏதாவது கட்டடத்தில் உரிமையாளரும் வசிக்கிறார் மற்றும் வாடகைக்கு இருப்பவரும் வசிக்கிறார். பாபாவோ முழு நேரமும் இதில் அமர்ந்திருப்பதில்லை. இவர் ஹுசைனின் ரதம் என சொல்லப்படுகிறார். எப்படி கிறிஸ்துவின் ஆத்மா ஏதோ பெரிய சரீரத்தில் பிரவேசமாகி கிறிஸ்தவ தர்மத்தை ஸ்தாபனை செய்தது. சிறு வயதில் சரீரம் வேறொருவருடையதாக இருந்தது. அவர் சிறு வயதில் அவதாரமாக இல்லை. குருநானக்கினுள்ளும் பின்னால் ஆத்மா பிரவேசமாகி சீக்கிய தர்மத்தை ஸ்தாபனை செய்கிறது. இந்த விஷயங்களை இந்த மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங் களாகும். பவித்திர ஆத்மா தான் வந்து தர்ம ஸ்தாபனை செய்கிறது. இப்போது கிருஷ்ணரோ சத்யுகத்தின் முதல் இளவரசர். அவரை துவாபரயுகத்திற்கு ஏன் கொண்டு சென்றனர்? சத்யுகத்தில் லட்சுமி- நாராயணரின் இராஜ்யத்தைக் காட்டுகின்றனர். இதையும் நீங்கள் அறிவீர்கள் - இராதை-கிருஷ்ணர் தான் லட்சுமி-நாராயணர் ஆகின்றனர். பிறகு உலகத்தின் எஜமானர்களாக ஆகின்றனர். அவர்களின் இராஜதானி எப்படி ஸ்தாபனை ஆயிற்று? இது யாருடைய புத்தியிலும் இல்லை. நீங்கள் அறிவீர்கள், பாபா ஒரே ஒரு முறை அவதரிக்கிறார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகின்றார். கிருஷ்ண ஜெயந்தி பற்றியும் உறுதிப்படுத்த வேண்டும். அவரோ ஞானம் கொடுக்கவில்லை. யார் அவரை உருவாக் கினாரோ, அவருக்கு முதலில் ஜெயந்தி கொண்டாட வேண்டும். சிவஜெயந்தி அன்று மனிதர்கள் விரதம் முதலியன வைக்கின்றனர். அபிஷேகம் செய்கின்றனர். முழு இரவு கண் விழிக்கின்றனர். இங்கிருப்பதோ இரவு தான். அதில் வாழ்நாள் முழுவதும் தூய்மையின் விரதம் இருக்க வேண்டும். விரதத்தை மேற்கொள்வதன் மூலம் தான் தூய்மையான இராஜ்யத்திற்கு அதிபதி ஆகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியின் போது புரிய வைக்க வேண்டும் - கிருஷ்ணர் வெள்ளையாக

(தூய்மையாக) இருந்தார், இப்போது கருப்பாக(தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளார். அதனால் ஷ்யாம்-சுந்தர் என சொல்கின்றனர். எவ்வளவு சுலபமான ஞானம்! ஷ்யாம்-சுந்தர் என்பதன் அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டும். சக்கரம் எப்படி சுற்றுகிறது? (இவற்றை எடுத்துச் சொல்வதற்காக) குழந்தைகள் நீங்கள் துணிந்து நிற்க வேண்டும். சிவசக்திகள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கியுள்ளனர். இது யாருக்கும் தெரியாது. பாபாவும் குப்தமாக உள்ளார், ஞானமும் குப்தமாக உள்ளது மற்றும் சிவசக்திகளும் குப்தமாக உள்ளனர். நீங்கள் சித்திரங்களை எடுத்துக் கொண்டு யார் வீட்டுக்கும் செல்ல முடியும். சொல்லுங்கள், நீங்கள் சென்டருக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்துள்ளோம் - உங்களுக்கு சுகதாமத்திற்கான வழி சொல்வதற்காக. அப்போது அவர்கள் புரிந்து கொள்வார் கள், இவர்கள் நம்முடைய சுப சிந்தனையாளர்கள். இங்கே காதுக்கு இரசனை தரும் விஷயம் கிடையாது. கடைசியில் மனிதர்கள் புரிந்து கொள்வார்கள், நிச்சயமாக நாம் வாழ்க்கையை வீணாக்கி விட்டோம்., உண்மையான வாழ்க்கை என்றால் இவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை தான். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பற்றுதலை வென்றவராகி ஒரு பாபாவிடம் மட்டுமே தனது புத்தியோகத்தை வைக்க வேண்டும். தேகி அபிமானி ஆகி இதே கல்வியை(அறிவுரையை) தாரணை செய்யவும் செய்விக்கவும் வேண்டும்.

2. மனம்-சொல்-செயலால் பாரதத்திற்கு சுகம் கொடுக்க வேண்டும். வாயினால் ஒவ்வொருவருக்கும் ஞானத்தின் இரண்டு வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். சுபசிந்தனையாளர் ஆகி அனைவருக்கும் சாந்திதாமம், சுகதாமத்திற்கான வழி சொல்ல வேண்டும்.

வரதானம்:
கவலையற்ற மகாராஜாவின் மனநிலையில் நிலைத்திருந்து வாயுமண்டலத்தில் (சுற்றுபுற சூழ்நிலையில்) தனது பிராபவத்தை (தாக்கத்தை) ஏற்படுத்தக்கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.

பாபாவிற்கு மிகப்பெரிய குடும்பம் இருக்கிறது, ஆனாலும் கூட அனைத்தையும் தெரிந்திருந்தாலும், பார்த்தாலும் கூட கவலையற்ற மகாராஜாவாக இருக்கிறார். அவ்வாறு தந்தையை பின்பற்றுங்கள். வாயுமண்டலத்தில் தனது தாக்கத்தை ஏற்படுத்துங்கள். வாயு மண்டலத்தின் தாக்கம் நம் மீது வரக் கூடாது. ஏனெனில் வாயுமண்டலம் என்பது படைப்பாக இருக்கிறது, ஆனால் நீங்கள் மாஸ்டர் படைப்பவராக இருக்கிறார். படைப்பவரின் தாக்கம் படைப்பின் மீது இருக்க வேண்டும். எந்தவிதமான விஷயம் வந்தாலும் நான் வெற்றியடைந்த ஆத்மா என்ற நினைவில் இருங்கள். இதன் மூலம் கவலையற்ற மகாராஜா வாக இருப்பீர்கள். பயப்பட மாட்டீர்கள்.

சுலோகன்:
மகிழ்ச்சியின் நிழல் மூலம் குளிர்ச்சித்தன்மையை அனுபவம் செய்தீர்கள் என்றால் கலங்கமற்றவராகவும், பணிவானவராகவும் இருப்பீர்கள்.