18.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! இப்போது நீங்கள் சத்தியமான தந்தையின் மூலம் உண்மையான தேவதைகளாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள், ஆகையினால் சத்யுகத்தில் சத்சங்கம் செய்வதற்கான அவசியம் இல்லை.

 

கேள்வி:

சத்யுகத்தில் தேவதைகளின் மூலம் எந்தவொரு விகர்மமும் நடக்க முடியாது, ஏன்?

 

பதில்:

ஏனென்றால் அவர்களுக்கு சத்தியமான தந்தையின் வரதானம் கிடைத்திருக் கிறது. இராவணனுடைய சாபம் கிடைக்கும்போது தான் விகர்மங்கள் நடக்கிறது. சத்யுகம்-திரேதாவில் தான் சத்கதியாகும், அந்த சமயத்தில் துர்கதி என்ற வார்த்தையே இல்லை. விகர்மங்கள் நடப்பதற்கு விகாரமே அங்கு இல்லை. துவாபர-கலியுகத்தில் அனைவருக்கும் துர்கதி ஏற்பட்டுவிடுகிறது ஆகையினால் விகர்மம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூட புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு தந்தை வந்து புரிய வைக்கின்றார் - இவர் பரம தந்தையாகவும் இருக்கின்றார், பரம ஆசிரியராகவும் இருக்கின்றார், பரம சத்குருவாகவும் இருக்கின்றார். இப்படி தந்தையின் மகிமையை கூறுவதின் மூலம் கிருஷ்ணர் யாருக்கும் தந்தையாக ஆக முடியாது என்பது நிரூபணம் ஆகிறது. அவர் சிறிய குழந்தையாக இருக்கின்றார், சத்யுகத்தின் இளவரசன் ஆவார். அவர் டீச்சராக வும் இருக்க முடியாது. அவரே அமர்ந்து டீச்சரிடம் படிக்கின்றார். அங்கே குருமார்கள் இருப்பதில்லை, ஏனென்றால் அங்கே அனைவரும் சத்கதியில் இருக்கிறார்கள். அரைக்கல்பம் சத்கதி, அரைக் கல்பம் துர்கதியாகும். எனவே அங்கே சத்கதியில் இருக்கின்ற காரணத்தினால் அங்கே ஞானத்திற்கு அவசியம் இருப்பதில்லை. அந்த வார்த்தையே இல்லை ஏனென்றால் ஞானத்தின் மூலம் 21 பிறவிகளுக்கு சத்கதி கிடைக்கிறது. பிறகு துவாபர யுகத்திலிருந்து கலியுக கடைசி வரை துர்கதியாகும். அப்படி எனும்போது கிருஷ்ணர் துவாபர யுகத்தில் எப்படி வர முடியும். இதுவும் யாருடைய கவனத்திலும் வருவதில்லை. ஒவ்வொரு விசயத் திலும் மிகுந்த ஆழமான இரகசியங்கள் நிறைந்துள்ளன, அதை புரியவைப்பது மிகவும் அவசியமாகும். அவர் பரம தந்தை, பரம ஆசிரியரும் ஆவார். ஆங்கிலத்தில் சுப்ரீம் என்றே சொல்லப்படுகிறது. சில ஆங்கில வார்த்தைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. டிராமா என்ற வார்த்தையைப் போல் ஆகும். டிராமாவை நாடகம் என்று சொல்ல முடியாது, நாடகத்தில் மாற்றம் நடக்கிறது. இந்த சிருஷ்டி சக்கரம் சுற்றுகிறது என்றும் சொல்கிறார்கள், ஆனால் எப்படி சுற்றுகிறது, அப்படியே சுற்றுகிறதா அல்லது மாறுகிறதா, என்பது யாருக்கும் தெரிய வில்லை. உருவாக்கப் பட்டது உருவாகிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்........ கண்டிப்பாக ஏதோ ஒரு விளையாட்டு இருக்கிறது, அது மீண்டும் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த சக்கரத்தில் மனிதர்கள் தான் சுற்றி வர வேண்டியிருக்கிறது. நல்லது, இந்த சக்கரத்தின் ஆயுள் என்ன? எப்படி திரும்ப நடக்கிறது? இது சுற்றி வருவதற்கு எவ்வளவு காலம் ஆகிறது? இதை யாரும் தெரிந்திருக்க வில்லை. இஸ்லாமியர்கள்- பௌத்தர்கள் போன்ற இவர்கள் அனைவரும் அந்தந்த வம்சத்தவர்களாவர், இவர்களுக்கும் நாடகத்தில் நடிப்பு இருக்கிறது.

 

பிராமணர்களாகிய உங்களுடைய இராஜ்யம் (அரச பரம்பரை) இல்லை, இது பிராமண குலமாகும். சர்வோத்தம பிராமண குலம் என்று சொல்லப்படுகிறது. தேவி-தேவதை களுடைய குலமும் இருக்கிறது. இதை புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். சூட்சும வதனத்தில் ஃபரிஸ்தாக்கள் இருக்கிறார்கள். அங்கே எலும்பு-சதை இருப்பதில்லை. தேவதை களுக்கு எலும்பு-சதை இருக்கிறது அல்லவா. பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணு விலிருந்து பிரம்மா. விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா வந்ததாக ஏன் காட்டுகிறார்கள். சூட்சும வதனத்தில் இந்த விசயங்கள் நடப்பதில்லை. ஆபரணங்கள் போன்றவையும் இருக்க முடியாது, ஆகையினால் தான் பிரம்மாவை வெள்ளை உடை அணிந்தவராக காட்டப்பட்டிருக்கிறது. பிரம்மா சாதாரண மனிதர் நிறைய பிறவிகளின் கடைசியில் ஏழையாக இருக்கிறார் அல்லவா. இந்த சமயத்தில் இருப்பதே காதி துணிகளே ஆகும். சூட்சும சரீரம் என்ன என்பதே பாவம் அவர்களுக்கு புரிவதே இல்லை. அங்கு இருப்பதே ஃபரிஸ்தாக்கள், அவர்களுக்கு எலும்பு-சதை இருப்பதில்லை. சூட்சுமவதனத்தில் இந்த அலங்காரங்கள் போன்றவைகள் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் சித்திரங்களில் காட்டப்பட்டிருக்கிறது எனும்போது பாபா அதையே காட்சியாக காட்டி பிறகு அர்த்தத்தைப் புரிய வைக்கின்றார். ஹனுமானுடைய காட்சியை காட்டுவதைப் போலாகும். ஹனுமானைப் போல் மனிதர்கள் யாரும் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் அனேக விதமான சித்திரங்களை உருவாக்கியுள்ளார்கள், அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது, அவர்களை அப்படி ஏதாவது சொல்லி விட்டால் கோபித்துக் கொள்கிறார்கள். தேவிகளுக்கு எவ்வளவு பூஜை செய்கிறார்கள் பிறகு நீரில் மூழ்கச் செய்து விடு கிறார்கள். இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். பக்தி மார்க்கத்தின் புதைகுழியில் கழுத்து வரை மூழ்கி யிருக்கிறார்கள் எனும்போது எப்படி வெளியே கொண்டு வர முடியும். வெளியில் கொண்டு வருவதே கடினமாகி விடுகிறது. சிலர் மற்றவர்கள் வெளியே வருவதற்கு கருவியாகிவிட்டு பிறகு அவர்களே மூழ்கி விடுகிறார்கள். அவர்கள் கழுத்து வரை சேற்றில் மாட்டிக் கொள்கிறார்கள் அதாவது காம விகாரத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். இது தான் மிகப்பெரிய புதை குழியாகும். சத்யுகத்தில் இந்த விசயங்கள் இருப்பதில்லை. இப்போது நீங்கள் சத்தியமான தந்தையின் மூலம் உண்மையான தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு அங்கே சத்சங்கம் நடப்பதில்லை. இங்கே பக்தி மார்க்கத்தில் தான் சத்சங்கம் செய்து கொண்டே இருக்கிறார்கள், அனைவரும் ஈஸ்வரனுடைய ரூபங்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். எதையும் புரிந்து கொள்வதில்லை. கலியுகத்தில் அனைவரும் பாவாத்மாக்கள், சத்யுகத்தில் அனைவரும் புண்ணியாத்மாக்கள் என்று பாபா வந்து புரிய வைக்கின்றார். இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக் கின்றீர்கள். கலியுகம் மற்றும் சத்யுகம் இரண்டையும் தெரிந்துள்ளீர்கள். முக்கியமான விசயம் இந்தக்கரை யிலிருந்து அந்தக் கரைக்குச் செல்வதாகும். பாற்கடல் மற்றும் விஷக்கடலைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது, ஆனால் அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது பாபா அமர்ந்து கர்மம்-அகர்மத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். மனிதர்கள் கர்மத்தை செய்கிறார்கள் பிறகு அதில் சில கர்மங்கள் அகர்மங்களாக இருக்கிறது, சில கர்மங்கள் விகர்மங்களாகி விடுகிறது. இராவண இராஜ்யத்தில் அனைத்து கர்மங்களும் விகர்மங்களாக ஆகி விடுகிறது, சத்யுகத்தில் விகர்மங்கள் நடப்பதில்லை, ஏனென்றால் அங்கே இராம இராஜ்யமாகும். பாபா விடமிருந்து வரத்தை பெற்றுள்ளார்கள். இராவணன் சாபம் கொடுக்கின்றார். இது சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டு அல்லவா. துக்கத்தில் அனைவரும் பாபாவை நினைவு செய்கிறார்கள். சுகமாக இருக்கும்போது யாரும் நினைவு செய்வதில்லை. அங்கே விகாரம் இருப்பதில்லை. நாற்று நடப்படுகிறது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்று நடும் வழக்கம் கூட இப்போது ஏற்படுகிறது. பாபா நாற்று நட ஆரம்பித்தார். முன்பு ஆங்கில அரசாங்கம் இருந்தபோது மரக்கன்றுகள் நடு கிறார்கள் என்ற செய்தி நாளேடுகளில் வரவில்லை. இப்போது பாபா வந்து தேவி-தேவதா தர்மத்தின் நாற்றை நடுகிறார், வேறு யாரும் நாற்று நடுவதில்லை. நிறைய தர்மங்கள் இருக்கின்றன, தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டது. தர்மமும் கர்மமும் கீழானதாகி விட்ட காரணத்தினால் பெயரையே தலைகீழாக வைத்து விட்டார்கள். யார் தேவதா தர்மத்தவர்களோ அவர்கள் பிறகு அதே தேவி-தேவதா தர்மத்தில் வர வேண்டும். ஒவ்வொருவரும் அவரவருடைய தர்மத்தில் தான் செல்ல வேண்டும். கிறிஸ்துவ தர்மத்திலிருந்து விலகி பிறகு தேவி-தேவதா தர்மத்தில் வர முடியாது. முக்தி அடைய முடியாது. யாராவது தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மாறி கிறிஸ்துவ தர்மத்திற்கு சென்று விட்டிருந்தார்கள் என்றால் அவர்கள் திரும்பி தங்களுடைய தேவி-தேவதா தர்மத்திற்கு வந்து விடுவார்கள். அவர்களுக்கு இந்த ஞானம் மற்றும் யோகம் மிகவும் நன்றாக இருக்கும், இதன்மூலம் அவர்கள் நம்முடைய தர்மத்தவர்கள் என்பது நிரூபணமாகிறது. இதை புரிந்து கொள்வதற்கும் புரிய வைப்பதற்கும் விசாலமான புத்தி வேண்டும். தாரணை செய்ய வேண்டும், புத்தகத்தைப் படித்து சொல்லக் கூடாது. யாராவது கீதை படிக்கிறார்கள் என்றால் மனிதர்கள் அமர்ந்து கேட்பதைப் போல் ஆகும். சிலர் கீதையின் சுலோகங்களை மனனம் செய்து விடுகிறார்கள். மற்றபடி அதனுடைய அர்த்தத்தை அவரவருக்கு தோன்றிய படி எழுதுகிறார்கள். அனைத்து சுலோகங்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. சமுத்திரத்தை மையாக்குங்கள், காடு முழுவதையும் பேனாவாக மாற்றினாலும் ஞானத்தை முடிக்க முடியாது என்று பாடப்பட்டுள்ளது. கீதை மிகவும் சிறியதாக இருக்கிறது. 18 அத்தியாயங்கள் இருக்கின்றன. சிறிய கீதையை செய்து கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். மிகவும் சிறிய எழுத்துக்களாக இருக்கின்றன. கழுத்தில் அணிந்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. எவ்வளவு சிறிய லாக்கெட் செய்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் ஒரு வினாடியின் விசயமாகும். பாபாவினுடையவர்களாக ஆகினீர்கள் என்றால் உலகத்திற்கு எஜமானர்களாக ஆனது போலாகும். பாபா நான் தங்களுடைய ஒரு நாள் குழந்தையாவேன், இப்படி கூட எழுத ஆரம்பிப்பார்கள். ஒரு நாளில் நம்பிக்கை ஏற்பட்டது உடனே கடிதம் எழுதுவார்கள். குழந்தையாக ஆகி விட்டால் உலகத்திற்கு எஜமானர்களாவர். இது கூட சிலருடைய புத்தியில் கஷ்டப்பட்டு நிற்கிறது. நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். அங்கே வேறு எந்த கண்டமும் இருப்பதில்லை, பெயர்-அடையாளம் கூட மறைந்து விடுகிறது. இந்த கண்டம் இருந்தது என்பதே யாருக்கும் தெரியாது. ஒருவேளை இருந்திருந்தால் கண்டிப்பாக அதனுடைய வரலாறு-புவியியல் இருக்க வேண்டும் அல்லவா. அங்கே இவை இருப்பதே இல்லை ஆகையினால் தான் நீங்கள் உலகத்திற்கு எஜமானர் களாகக் கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் உங்களுடைய தந்தையாகவும் இருக்கின்றேன், ஞானக்கடலாகவும் இருக்கின்றேன் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இது உயர்ந்ததிலும் உயர்ந்த ஞானமாக இருக்கிறது, அதன்மூலம் நாம் உலகத்திற்கு எஜமானர் களாக ஆகின்றோம். நம்முடைய தந்தை சுப்ரீமாக (உயர்ந்ததிலும் உயர்ந்தவராக) இருக் கின்றார், சத்தியமான தந்தை, சத்தியமான டீச்சர், சத்தியத்தை கூறுகின்றார். எல்லையற்ற படிப்பினையை கொடுக்கின்றார். எல்லையற்ற குருவாக இருக்கின்றார், அனைவரையும் சத்கதி அடைய வைக்கின்றார். ஒருவரை மகிமை பாடினீர்கள் என்றால் அந்த மகிமை மற்றவருக்கு ஆக முடியாது. பிறகு அவர் தனக்குச் சமமாக மாற்றும் போது தான் அவருக்கும் பொருந்தும். எனவே நீங்களும் கூட தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவராக ஆகிவிடுவீர்கள். சத்தியம் என்று பெயர் எழுதுகிறார்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் கங்கைகள் இந்த தாய்மார்கள் ஆவர். சிவசக்தி என்றும் சொல்லலாம் சிவவம்சத்தவர் என்று சொல்லலாம். சிவவம்சத்தவர் பிரம்மாகுமார-குமாரிகளாவர். அனைவரும் சிவ வம்சத்தவர்களே ஆவர். மற்றபடி பிரம்மாவின் மூலம் படைப்பை படைக்கின்றார் எனும் போது சங்கமயுகத்தில் தான் பிரம்மாகுமார-குமாரிகள் இருக்கிறார்கள். பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றார். முதல்-முதலில் பிரம்மாகுமார-குமாரிகள் இருக்கிறார்கள். யாராவது ஆட்சேபம் தெரிவிக்கின்றார்கள் என்றால் இவர் பிரஜாபிதா பிரம்மா, இவருக்குள் சிவபாபா பிரவேசிக்கின்றார் என்று சொல்லுங்கள். நிறைய பிறவிகளின் கடைசியில் நான் பிரவேசிக் கின்றேன் என்று பாபாவே கூறுகின்றார். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் என்று காட்டுகிறார்கள். பிறகு விஷ்ணு யாருடைய நாபியிலிருந்து வந்தார்? அதில் அம்புக் குறியிட்டு ஒருவர்-மற்றவரிடத்திலிருந்து வருகின்றார் என்று காட்டலாம். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. இவர் அவரிடத்திலிருந்தும், அவர் இவரிடத்திலிருந்தும் பிறக்கிறார்கள். பிரம்மாவிற்கு விஷ்ணுவாக ஆவதற்கு ஒரு வினாடி ஆகிறது, விஷ்ணு பிரம்மாவாக ஆவதற்கு 5 ஆயிரம் ஆண்டுகளாகிறது. இவை அதிசயமான விசயங்களாக இருக்கின்றன அல்லவா. நீங்கள் அமர்ந்து புரிய வைப்பீர்கள். லஷ்மி-நாராயணன் 84 பிறவிகள் எடுக்கிறார்கள் பிறகு அவர்களுடைய நிறைய பிறவிகளின் கடைசியில் நான் பிரவேசித்து பிரம்மாவாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா. இவரை ஏன் பிரம்மா என்று சொல்கிறோம் என்பதை நீங்கள் வந்து அமர்ந்தீர்கள் என்றால் புரிய வைப்போம். முழு உலகத்திற்கும் காட்டுவதற்காக இந்த சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் புரிய வைக்கமுடியும், புரிந்து கொள்ளக் கூடியவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ளாதவர்களை, இவர்கள் நம்முடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொல்லலாம். பாவம் ஒருவேளை அங்கே வந்தாலும் பிரஜையாகத் தான் ஆவார்கள். நம்மை பொறுத்தவரை அவர்கள் அனைவருமே பரிதாபத்திற்குரியவர்கள் - ஏழைகளை பாவம் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகள் எவ்வளவு கருத்துகளை தாரணை செய்ய வேண்டியிருக்கிறது. தலைப்புகளை எடுத்துக் கொண்டு சொற்பொழிவு செய்யப்படுகிறது. இந்த தலைப்பு குறைந்ததா என்ன? பிரஜாபிதா பிரம்மா மற்றும் சரஸ்வதிக்கு 4 கைகளை காட்டுகிறார்கள். எனவே 2 கைகள் குழந்தையினுடையதாகி விடுகிறது. ஜோடி அல்ல. உண்மையில் விஷ்ணு மட்டுமே ஜோடி ஆவர். பிரம்மாவின் குழந்தை சரஸ்வதியாவார். சங்கரருக்கு கூட ஜோடி இல்லை, இந்த காரணத்தினால் தான் சிவ-சங்கரன் என்று சொல்லி விடுகிறார்கள். சங்கரர் என்ன செய்கின்றார்? வினாசம் என்பது அணுகுண்டுகளின் மூலம் நடக்கிறது. தந்தை எப்படி குழந்தைகளை மரணமடைய வைப்பார், இது பாவச் செயலாகி விடும். இன்னும் சொல்லப்போனால் பாபா அனைவரையும் எந்த உழைப்புமின்றி சாந்திதாமம் திரும்பி அழைத்துச் செல்கின்றார். கணக்கு-வழக்குகளை முடித்து அனைவரும் வீட்டிற்குச் செல்கின்றனர் ஏனென்றால் அழிவிற்கான நேரமாக இருக்கிறது. பாபா சேவைக்காகவே வருகின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுத்து விடுகின்றார். நீங்களும் கூட முதலில் கதிக்கும்(முக்திக்கும்) பிறகு சத்கதிக்கும் (ஜீவன் முக்திக்கும்) வருவீர்கள். இந்த விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டியவைகளாகும். இந்த விசயங்களை கொஞ்சம் கூட யாரும் தெரிந்திருக்கவில்லை. சிலபேர் முற்றிலும் புரிந்து கொள்வதே இல்லை மூளையை குழப்பிக் கொள்வதை நீங்கள் பார்க்கின்றீர்கள். யார் நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்களோ, அவர்கள் வந்து புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு விசயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேரம் ஒதுக்குங்கள் என்று சொல்லுங்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுங்கள் என்பது இங்கே கட்டளையாகும். இந்த உலகமே முட்கள் நிறைந்த காடாகும் ஏனென்றால் ஒருவர்-மற்றவருக்கு துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள், இதனை துக்கதாமம் என்று சொல்லப்படுகிறது. சத்யுகம் சுகதாமமாகும். துக்கதாமத்திலிருந்து சுகதாமமாக எப்படி ஆகின்றது என்பதை உங்களுக்குப் புரிய வைக்கின்றோம். லஷ்மி-நாராயணன் சுகதாமத்தில் இருந்தார்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து துக்கதாமத்திற்கு வருகிறார்கள். இந்த பிரம்மாவினுடைய பெயர் எப்படி வைக்கப்பட்டது? பாபா கூறுகின்றார், நான் இவருக்குள் பிரவேசித்து எல்லையற்ற சன்னியாசம் செய்ய வைக்கின்றேன். உடனே சன்னியாசம் செய்ய வைத்து விடுகின்றேன் ஏனென்றால் பாபா அவரை சேவை செய்ய வைக்க வேண்டும், அவர் தான் செய்ய வைக்கின்றார். இவருக்குப் (பிரம்மாவிற்குப்) பின்னால் நிறைய பேர் வந்தார்கள், அவர்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பூனையின் குட்டிகளை காட்டுகிறார்கள். இவையனைத்தும் கட்டுக் கதைகளாகும். பூனையின் குட்டிகளாக எப்படி இருக்க முடியும். பூனை அமர்ந்து ஞானம் கேட்குமா என்ன? பாபா நிறைய யுக்திகளை கூறிக் கொண்டே இருக்கின்றார். எந்த விசயமாவது யாருக்காவது புரியவில்லை என்றால், எதுவரை அல்லாவை புரிந்து கொள்ள வில்லையோ அது வரை எதையும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லுங்கள். ஒரு விசயத்தை நம்புங்கள் மற்றும் எழுதுங்கள், இல்லையென்றால் மறந்து விடுவீர்கள். மாயை மறக்கச் செய்து விடும். முக்கியமான விசயம் பாபாவின் அறிமுகமாகும். நம்முடைய தந்தை பரம-தந்தை, பரம் ஆசிரியராக இருக்கின்றார் அவர் முழு உலகத்தின் முதல்-இடை- கடைசியின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார், இதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை. இதை புரிய வைப்பதற்கு நேரம் வேண்டும். எதுவரை பாபாவை புரிந்து கொள்ள வில்லையோ, அதுவரை கேள்வி எழுந்து கொண்டே தான் இருக்கும். அல்லாவை புரிந்து கொள்ள வில்லையென்றால் ஆஸ்தி (இராஜ்யத்தையும்) புரிந்து கொள்ள மாட்டார்கள். இது ஏன் இப்படி, சாஸ்திரங்களில் இப்படி சொல்கிறார்களே என்று வெறுமனே சந்தேகம் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள், ஆகையினால் முதலில் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் ஆழமான நிலைகளை புத்தியில் வைத்து இப்போது விகர்மங்கள் எதையும் செய்யக் கூடாது, ஞானம் மற்றும் யோகத்தினை தாரணை செய்து மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

 

2) சத்தியமான தந்தையின் சத்தியமான ஞானத்தைக் கொடுத்து மனிதர்களை தேவதைகளாக்கும் சேவை செய்ய வேண்டும். விகாரங்கள் எனும் சேற்றிலிருந்து அனைவரையும் வெளியில் கொண்டு வர வேண்டும்.

 

வரதானம் :

தனது சக்திசாலி ஸ்திதி மூலம் மனசா சேவைக்கான சான்றிதழ் பெறக்கூடிய சுய முயற்சியாளர் ஆகுக.

 

உலகத்திற்கு ஒளி மற்றும் சக்தியின் (லைட்-மைட்) வரதானம் கொடுப்பதற்காக அமிர்த வேளையில் நினைவின் சுய முயற்சியின் மூலம் சக்திசாலி வாயுமண்டலத்தை உருவாக்குங் கள். அப்போது மனசா சேவையின் சான்றிதழ் (சர்ட்டிஃபிகேட்) கிடைத்து விடும். கடைசி சமயத்தில் மனதின் மூலம் தான் பார்வையிலேயே முழுத் திருப்தியளித்து விடுபடச் செய்வதற்கான, தனது உள்ளுணர்வு மூலம் அவர்களின் உள்ளுணர்வை மாற்றுவதற்கான சேவை செய்ய வேண்டும். தனது சிரேஷ்ட ஸ்மிருதி மூலம் அனைவரையும் சக்திசாலி ஆக்க வேண்டும். அந்த மாதிரி லைட்-மைட் கொடுப்பதற்கான பழக்கம் ஆகி விடுமானால் அப்போது நிர்விக்ன வாயுமண்டலம் உருவாகும் மற்றும் அந்தக் கோட்டை வலிமை பெற்று விடும்.

 

சுலோகன் :

யார் மனம்-சொல்-செயல் மூன்றின் மூலமாகவும் ஒரே நேரத்தில் சேவை செய்கிறார்களோ, அவர்கள் தான் புத்திசாலிகள்.

 

ஓம்சாந்தி