18-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! மனிதர்களை
தேவதைகளாக மாற்றக் கூடிய சேவையில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம்
இருக்க வேண்டும். ஆனால் இந்த சேவைக்காக தனக்குள் மிகவும் ஆழமான
தாரணை வேண்டும்.
கேள்வி:
ஆத்மா எவ்வாறு அழுக்கு அடைகிறது?
ஆத்மாவில் எம்மாதிரியான அழுக்கு ஏற்பட்டிருக் கிறது?
பதில்:
உறவினர்கள் தொடர்புகளின்
நினைவினால் ஆத்மா அழுக்காகிறது. முதல் நம்பர் அழுக்கு தேக
அபிமானம் ஆகும். பிறகு பேராசை, பற்று போன்ற அழுக்குகள் சேர
ஆரம்பிக்கிறது. இந்த விகாரங்கள் என்ற அழுக்கு ஆத்மாவில்
படிகிறது. பிறகு பாபாவின் நினைவு மறந்து போகிறது. சேவை செய்ய
முடியாது.
பாடல்:
உங்களை அழைக்க மனம் விரும்புகிறது...........
ஓம் சாந்தி.
இந்த பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது. தாங்கள் கூறுவதைக்
கேட்டு இந்த ஞானத்தை மற்றவர்களுக்கு கூறுவதை மனம் விரும்புகிறது
என குழந்தைகள் உத்திரவாதம் அளிக்கிறார்கள். குழந்தைகள் தான்
நினைக்கிறார்கள். இது அவசியமும் கூட. சிலர் நினைக் கிறார்கள்.
சந்தித்தும் இருக்கிறார்கள். கோடியில் ஒரு சிலர் தான் வந்து
இந்த சொத்தை அடை கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இப்போது புத்தி
மிகவும் விசாலமாகி விட்டது. நிச்சயம் 5000 வருடங்களுக்கு முன்பு
கூட பாபா இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வந்திருக்கிறார்.
ஞானத்தை யார் சொல்லி இருப்பார்கள் என்பதை முதன் முதலில் புரிய
வைக்க வேண்டும். ஏனென்றால் இதில் தான் மிகப்பெரிய தவறு
ஏற்பட்டுள்ளது. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயான கீதையே பாரத
வாசிகளின் சாஸ்திரம் என பாபா புரிய வைத்துள்ளார். அனைத்து
சாஸ்திரங்களுக்கும் தாயான கீதையை யார் கூறினார்கள்? அதன் மூலம்
என்ன தர்மம் ஸ்தாபனையாகியது என்பதை மட்டும் மனிதர்கள் மறந்து
விட்டனர். ஓ, பகவான்! நீங்கள் வாருங்கள் என்று மட்டும் நிச்சயம்
பாடுகிறார்கள். புதிய பாவன உலகத்தைப் படைப்பதற்காக பகவான்
கண்டிப்பாக வருகின்றார். உலகத்திற்கே தந்தை அல்லவா! தாங்கள்
வந்தால் சுகம் கிடைக்கும் அல்லது அமைதி கிடைக்கும் என பக்தர்கள்
பாடுகிறார்கள். சுகம் மற்றும் சாந்தி இரண்டு விசயங்கள் ஆகும்.
சத்யுகத்தில் கண்டிப்பாக சுகம் இருக்கின்றது. மற்ற அனைத்து
ஆத்மாக்களும் சாந்தி தேசத்தில் இருக்கிறார்கள். இந்த
அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். புதிய உலகத்தில் புதிய பாரதம்
இராம இராஜ்யம் இருந்தது. அதில் சுகம் இருக்கிறது. அதனால் தான்
இராம இராஜ்யத்திற்கு மகிமை இருக்கிறது. அதை இராம இராஜ்யம் என்று
கூறினால் இதற்கு இராவண இராஜ்யம் என்று கூற வேண்டும். ஏனென்றால்
இங்கே துக்கம் இருக்கிறது. அங்கே சுகம் இருக்கிறது. தந்தை வந்து
சுகம் கொடுக்கிறார். மற்ற அனைவருக்கும் சாந்திதாமத்தில் சாந்தி
கிடைத்து விடுகிறது. சாந்தி மற்றும் சுகத்தின் வள்ளல் தந்தை
அல்லவா! இங்கே அசாந்தி, துக்கம் இருக்கிறது. எனவே, புத்தியில்
இந்த ஞானம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதில் நல்ல
மனநிலை வேண்டும். இவ்வாறு சிறிய குழந்தைகளுக்கு கூட கற்றுத்
தரப்படுகிறது. ஆனால் பொருள் புரிந்துக் கொள்ள முடியாது. இதில்
ஆழமான தாரணை வேண்டும். யாராவது கேள்வி கேட்டாலும் புரிய வைக்க
முடியும். நிலை நன்றாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சில
நேரம் தேக அபிமானத்தில், சில நேரம் கோபத்தில், மோகத்தில்
விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பாபா இன்று நாங்கள் கோபத்தில்
விழுந்து விட்டோம், இன்று நாங்கள் பேராசையில் விழுந்து விட்டோம்
என்றும் எழுதுகிறார்கள். மனநிலை உறுதியாக இருந்தால் விழ
வேண்டிய அவசியமே கிடையாது. மனிதனை தேவதையாக மாற்றக் கூடிய சேவை
செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். பாபா தாங்கள்
வந்து விட்டால் நாங்கள் சுகம் அடைவோம் என்ற பாட்டு மிகவும்
நன்றாக இருக்கிறது. அவசியம் பாபா வர வேண்டும். வர வில்லை
என்றால் பதீத சிருஷ்டியை யார் பாவனமாக மாற்றுவார்கள்? கிருஷ்ணரோ
தேகதாரி. அவர் அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கரின் பெயரைச் சொல்ல
முடியாது. பதீத பாவனா வாருங்கள் என்று பாடுகிறார்கள்.
அவர்களிடம் நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் எனக் கேட்க வேண்டும்.
பதீத பாவனன் யார்? மேலும் அவர் எப்போது வருவார்? பதீத பாவனரை
அழைக்கிறீர்கள் என்றால் இது நிச்சயம் பதீத உலகம் ஆகும்.
சத்யுகத்திற்கு பாவனமான உலகம் என்று பெயர். பதீத உலகத்தை யார்
பாவனமாக மாற்றுவார்கள்? பகவான் தான் இராஜயோகத்தைக் கற்பித்தார்.
இந்த விகாரங்கள் மீது வெற்றி அடையச் செய்தார். காமம் மகா சத்ரு
என்று கீதையிலும் இருக்கிறது. நான் இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன்
என்று யார் கூறியது? எனக் கேட்க வேண்டும். நான் சர்வ வியாபி
என்று யார் கூறியது? எந்த சாஸ்திரத்தில் எழுதப் பட்டிருக்கிறது?
பதீத பாவனர் என்று யாருக்கு பெயர்? பதீத பாவனி கங்கையா அல்லது
வேறு ஏதாவதா? பதீத பாவனா வருங்கள் என்று காந்திஜி கூட கூறினார்.
கங்கையோ எப்போதும் இருக்கிறது. அது ஒன்றும் புதியது அல்ல.
கங்கையை அழியாதது என்பார்கள். அது தமோ குண தத்துவமாக மாறி
விடுகிறது. அதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. வெள்ளமாக பெருகி
விடுகிறது. தனது வழியை விட்டு விடுகிறது. சத்யுகத்தில் மிகவும்
ஒழுங்காக அனைத்தும் நடக்கும். மழை குறைவாகவோ அதிகமாகவோ
பொழிவதில்லை. அங்கே துக்கத்தின் விஷயமே கிடையாது. எனவே பதீத
பாவனர் நம்முடைய தந்தை தான் என புத்தியில் வைத்துக் கொள்ள
வேண்டும். பதீத பாவனரை நினைவு செய்யும் போது ஏ, பகவான், ஏ, பாபா
என கூறுகிறார்கள். இதை யார் கூறியது? ஆத்மா. பதீத பாவனர்
சிவபாபா வந்திருக்கிறார் என நீங்கள் அறிகிறீர் கள். நிராகாரர்
என்ற வார்த்தையை நிச்சயமாகப் போட வேண்டும். இல்லையென்றால்
சாகாரத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆத்மா பதீதமாகி இருக்கிறது.
அனைவரும் ஈஸ்வர் என்று கூற முடியாது. அகம் பிரம்மாஸ்மி அல்லது
சிவோஹம் என்று கூறுவது விஷயம் ஒன்று தான். ஆனால் படைப்பிற்கு
அதிபதி ஒரேயொரு படைப்பவர் தான். மனிதர்கள் ஏதாவது நீட்டி (விரிவாக)
பொருள் கூறலாம். என்னுடைய விஷயமோ ஒரு நொடி தான். ஒரு நொடியில்
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பாபாவின் ஆஸ்தி
சொர்கத்தின் இராஜ்ய பதவி ஆகும். அதற்கு ஜீவன் முக்தி என்று
பெயர். இது ஜீவன் பந்தனம். எப்போது அவர் வருவாரோ அப்போது
நிச்சயமாக நமக்கு சொர்க்கம், முக்தி, ஜீவன் முக்தி சொத்து
கொடுப்பார் என்பதைப் புரிய வைக்க வேண்டும். முக்தி ஜீவன்
முக்தியின் வள்ளல் ஒருவர் தான் என்று அப்போது தான்
எழுதுகிறார்கள். சத்யுகத்தில் ஒரே ஒரு ஆதி சதாதன தேவி தேவதா
தர்மம் இருந்தது. அங்கே துக்கத்தின் பெயர் கிடையாது. அதுவே
சுகதாமம் ஆகும். சூரிய வம்சத்தின் இராஜ்யம் நடக்கிறது. பிறகு
திரேதாவில் சந்திர வம்சத்தின் இராஜ்யம். பின் துவாபர யுகத்தில்
தான் இஸ்லாமியம், பௌத்தத்தினர் வருகின்றனர். அனைத்து நடிப்பும்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புள்ளி போன்ற ஆத்மாவில்
பரமாத்மாவில் எவ்வளவு பாகம் பதிவாகி இருக்கிறது. நான் ஜோதிர்
லிங்கத்தை போன்று பெரியதாக இல்லை. நான் சிறிய நட்சத்திரம்
போன்றவன் என்பதை சிவனின் சித்திரத்தில் எழுத வேண்டும். ஆத்மா
நட்சத்திரம் போன்று இருக்கிறது. புருவ மத்தியில் மின்னக் கூடிய
அதிசயமான நட்சத்திரம்...... எனப் படுகிறார்கள். அது ஆத்மா. நான்
பரம்பிதா பரமாத்மா ஆனால் நான் சுப்ரீம், பதீத பாவனர். என்னுடைய
குணம் தனிப்பட்டது. எனவே குணங்களைக் கூட எழுத வேண்டும். ஒரு
புறம் சிவனின் மகிமை, இன்னொரு புறம் ஸ்ரீகிருஷ்ணரின் மகிமை.
எதிரான விஷயங்கள். எழுத்துக்களை மிகவும் நன்றாக எழுத வேண்டும்.
அப்போது தான் மனிதர்கள் நன்கு படித்து புரிந்து கொள்ள முடியும்.
சொர்க்கம் மற்றும் நரகம், சுகம், மற்றும் துக்கம், கிருஷ்ணனின்
பகல் அல்லது இரவு என்றாலும் அல்லது பிரம்மாவினுடையது என்றாலும்
சரி. சுகம் மற்றும் துக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை நீங்கள்
அறிகிறீர்கள். 16 கலைகளை உடையவர் சூரிய வம்சத்தினர். சந்திர
வம்சத்தினர் 14 கலைகள் உடையவர். அவர்கள், சம்பூரண
சதோபிரதானமானவர். அவர்கள், சதோபிரதானமானவர்கள், சூரிய
வம்சத்தினர் தான் பிறகு சந்திர வம்சத்தினர் ஆகிறார்கள். சூரிய
வம்சத்தினர் திரேதாவில் வருகிறார்கள் என்றால் நிச்சயம் சந்திர
வம்ச குலத்தில் பிறவி எடுப்பார்கள். இராஜ்ய பதவியை அடையலாம்.
இந்த விஷயங்களை புத்தியில் நன்கு பதிய வைக்க வேண்டும். யார்
எவ்வளவு நினைக் கிறார்களோ ஆத்ம அபிமானி ஆகிறார்களோ அவ்வளவு
தாரணை ஆகும். அந்த சேவையும் நன்கு செய்வார்கள். நாங்கள் இவ்வாறு
உட்காருகிறோம், இவ்வாறு தாரணை செய்கிறோம், இவ்வாறு புரிய வைக்
கிறோம், மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக இவ்வாறெல்லாம்
சிந்திக்கின்றோம் என்று தெளிவு படுத்திக் கூற வேண்டும். முழு
நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் யாருக்குள் ஞானம்
இல்லையோ, அவர்களின் விஷயம் வேறு. தாரணை ஆகாது. தாரணை
செய்கிறார்கள் என்றால் சேவை செய்ய வேண்டும். இப்போது சேவை
மிகவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் மகிமை அதிகமாகிக் கொண்டே
போகிறது. பின் உங்கள் படக் கண்காட்சிகளிலும் எவ்வளவு பேர்
வருவார்கள். எவ்வளவு படங்களை உருவாக்க வேண்டியிருக்கும். மிகப்
பெரிய மண்டபத்தை உருவாக்க வேண்டும். இதில் புரிய வைப்பதற்கு
தனிமை வேண்டும். நம்முடைய முக்கிமான படங்கள் மரம், சக்கரம்
மற்றும் இலஷ்மி நாராயணன் ஆகும். இராதை கிருஷ்ணரின் படத்தில்
இவர்கள் யார் என அவ்வளவாகப் புரிய வைக்க முடியாது. இப்போது பாபா
இவ்வாறு பாவனமாக்கிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள்.
அனைவரும் ஒன்று போல சம்பூரணம் ஆக மாட்டார்கள். ஆத்மா
தூய்மையாகும். மற்றபடி ஞானத்தை அனைவரும் தாரணை செய்ய
மாட்டார்கள். தாரணை ஆகவில்லை என்றால் இவர்கள் குறைந்த பதவியைப்
பெறுவார்கள் எனப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்களுடைய புத்தி எவ்வளவு கூர்மையாகி விட்டது.
ஒவ்வொரு வகுப்பிலும் வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள். சிலர்
கூர்மையாக, சிலர் மந்தமாக என வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள்.
ஒரு வேளை ஒரு நல்ல மனிதரிடம் மூன்றாம் தரமாக புரிய வைக்கக்
கூடியவர் கிடைத்து விட்டால் அவர் இங்கே ஒன்றும் இல்லை என
நினைப்பார். ஆகவே நல்ல மனிதர்களுக்குப் புரிய வைக்கக்
கூடியவரையும் நல்லவராக (புத்திசா-யாக) கொடுக்க வேண்டும்
என்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது. அனைவரும் ஒன்று போல
தேர்ச்சி அடைய மாட்டார்கள். பாபாவிடம் எல்லை இருக்கிறது. கல்ப
கல்பமாக இந்த படிப்பின் ரிசல்ட் வெளிவருகிறது. முக்கிய
மானவர்கள் 8 பேர் தேர்ச்சி அடைகிறார்கள். பிறகு 100, பிறகு
16000, பிறகு பிரஜை. அவர்களிலும் கூட பணக்காரர், ஏழை என
அனைவரும் இருக்கிறார்கள். இச்சமயம் இவர்கள் எந்த முயற்சியில்
இருக்கிறார்கள் எனப் புரிய வைக்கப்படுகிறது. எந்தப் பதவியை
அடைவதற்கு தகுதி உடையவர் கள். ஆசிரியருக்கு தெரிய வரும் அல்லவா!
ஆசிரியர்களிலும் கூட வரிசைக்கிரமம் இருக்கிறது. யாராவது
ஆசிரியர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால் அனைவரும் குஷி
அடைகிறார்கள். இவர்கள் நன்கு படிக்கவும் வைக்கிறார்கள், நன்கு
அன்பும் காண்பிக்கிறார்கள். சிறிய சென்டரை பெரியதாக பெரிய
டீச்சர் தான் மாற்றுவார் அல்லவா! எவ்வளவு புத்தியினால் வேலை
செய்ய வேண்டியிருக்கிறது. ஞான மார்கத்தில் மிகவும் இனிமையாக
மாற வேண்டும். இனிமையான தந்தையுடன் முழுமையாக தொடர்பு இருந்தால்
தாரணை ஆகும். அப்போது இனிமையாக மாறலாம். இப்படிப்பட்ட இனிமையான
தந்தையுடன் நிறைய பேருக்கு தொடர்பு இல்லை. இல்லறத்தில் இருந்து
கொண்டே பாபாவிடம் முழு தொடர்பு வைக்க வேண்டும் என்பதைப்
புரிந்துக் கொள்வதில்லை. மாயாவின் புயல் வரும் தான். சிலருக்கு
பழைய நண்பர்கள் உறவினர்கள் நினைவு வரும். சிலருக்கு வேறு ஏதாவது
நினைவு வந்துக் கொண்டே இருக்கும். நண்பர்கள் உறவினர்களின்
நினைவு ஆத்மாவை அழுக்காக்குகிறது. அழுக்காகும் போது மிகவும்
பயப்படு கிறார்கள் இதில் பயப்படக்கூடாது. இதை மாயை செய்யும்.
நம்மீது தான் அழுக்கு படியும். ஹோலியில் கூட அழுக்காகிறது
அல்லவா! நாம் பாபாவின் நினைவில் இருந்தால் அழுக்கு ஏற்படாது.
பாபாவை மறந்து விட்டால் முதல் நம்பர் தேக அபிமானம் என்ற அழுக்கு
ஏற்படும். பிறகு பேராசை, மோகம் போன்ற அனைத்தும் வரும். தனக்காக
முயற்சி செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். பிறகு தனக்குச்
சமமாக மாற்றுவதற்காக உழைக்க வேண்டும். சென்டர்களில் சேவை
நன்றாக நடக்கிறது. இங்கே வரும் போது நாங்கள் சென்று ஏற்பாடு
செய்வோம், சென்டர் திறப்போம் என்பார்கள். இங்கிருந்து சென்றதும்
அவ்வளவு தான். நீங்கள் அனைத்து விஷயங்களையும் மறந்து போவீர்கள்
என்று பாபாவே கூறுகின்றார். புரிந்துக் கொண்டு தகுதி அடையும்
வரை இங்கே பட்டியில் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட இனிமை
யான தொடர்பு சிவபாபாவுடன் அல்லவா! எந்த விதமான சேவை செய்தார்கள்
என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஸ்தூல சேவையின் பலன்
நிச்சயம் கிடைக்கிறது. மிகவும் எலும்பு தேய சேவை செய்தார்கள்.
ஆனால் பாடங்கள் இருக்கிறது அல்லவா! அந்த (உலகாய) படிப்பிலும்
பாடங்கள் இருக்கிறது. இந்த ஆன்மீகப் படிப்பிலும் பாடம்
இருக்கின்றது. முதல் நம்பர் பாடம் நினைவாகும். பிறகு படிப்பு.
மற்ற அனைத்தும் குப்தமாக இருக்கிறது. இந்த நாடகத்தைப் புரிந்து
கொள்ள வேண்டும். ஒவ்வொரு யுகத்திலும் 1250 வருடங்கள் உள்ளன
என்பது கூட யாருக்கும் தெரிய வில்லை. சத்யுகம் எவ்வளவு காலம்
இருந்தது. சரி, அங்கே எந்த தர்மம் இருந்தது? அனைவரையும் விட
அதிகமான பிறவிகள் இங்கே யார் எடுக்கிறார்கள்? பௌத்தர்கள்,
இஸ்லாமியர்கள் இவ்வளவு ஜென்மங்கள் எடுக்க முடியாது. இந்த
விஷயங்கள் யாருடைய புத்தியிலும் இல்லை. நீங்கள் பகவான் வாக்கு
என யாருக்கு கூறுகிறீர்கள் என சாஸ்திரவாதிகளிடம் கேட்க வேண்டும்.
அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக விளங்குவது கீதையாகும்.
பாரதத்தில் முதன் முதலில் தேவி தேவதா தர்மம் இருந்தது.
அவர்களுடைய சாஸ்திரமாகிய இந்த கீதையை யார் கூறியது? கிருஷ்ண
பகவான் கூறியிருக்க முடியாது. ஸ்தாபனை செய்வதும் அழிப்பது
பகவானின் வேலை யாகும். கிருஷ்ணரை பகவான் எனக் கூற மாட்டார்கள்.
சரி, அவர் எப்போது வந்தார். இப்போது எந்த ரூபத்தில் இருக்கிறார்?
சிவபாபாவிற்கு முன்பாக கிருஷ்ணரின் மகிமைகளை எழுத வேண்டும்,
சிவன் கீதையின் பகவான் ஆவார். அவரிடமிருந்து ஸ்ரீகிருஷ்ணருக்கு
பதவி கிடைத்தது. கிருஷ்ணரின் 84 பிறவிகளைக் காண்பிக்கிறார்கள்.
கடைசியில் பிரம்மாவின் தத்தெடுக்கபட்ட சித்திரத்தையும் காட்ட
வேண்டும். நம்முடைய புத்தியில் 84 பிறவிகளின் மாலை இருக்கிறது.
இலஷ்மி நாராயணனுக்கு கூட 84 பிறவிகளை காட்ட வேண்டும். இரவில்
இன்னும் நன்கு சிந்திக்க வேண்டும். ஒரு நொடியில் ஜீவன் முக்தி
கிடைக்கிறது. இதற்கு நாம் என்ன எழுதுவது? ஜீவன் முக்தி என்றால்
சொர்க்கத்திற்குச் செல்வதாகும். பாபா சொர்க்கத்தை படைக்கக்
கூடியவர் வந்தால் தான் அவருடைய குழந்தையாக முடியும். பிறகு
சொர்க்கத்திற்கு அதிபதியாகலாம். சத்யுகம் என்பது புண்ணிய
ஆத்மாக்களின் உலகம் ஆகும். இந்த கலியுகம் பாவ ஆத்மாக்களின்
உலகம் ஆகும். அது நிர்விகார உலகம் ஆகும். அங்கே மாயா இராவணனின்
இராஜ்யம் இல்லை. அங்கே இந்த ஞானம் முழுவதும் இருக்காது. ஆனால்
நாம் ஆத்மா, இந்த சரீரத்திற்கு வயதாகி விட்டது, இப்போது இந்த
உடலை விட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கின்றது அல்லவா! இங்கே
ஆத்மா என்ற ஞானம் கூட யாருக்குள்ளும் இல்லை. பாபாவிடமிருந்து
ஜீவன் முக்தி என்ற சொத்து கிடைக்கிறது. எனவே அவரைத் தான்
நினைக்க வேண்டும் அல்லவா! பாபா - மன்மனா பவ என்று கட்டளை இடு
கிறார். கீதையில் மன்மனாபவ என்று யார் கூறியது? என்னை
நினையுங்கள், விஷ்ணுபுரியை நினையுங்கள் என்று யார் கூற முடியும்?
கிருஷ்ணரை பதீத பாவனர் என்று கூற முடியாது. 84 பிறவிகளின்
இரகசியத்தை யாரும் அறியமுடியாது. நீங்கள் அனைவருக் கும் புரிய
வைக்க வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு
தனக்கும் அனைவருக்கும் நன்மை செய்தால் உங்களின் மதிப்பு
அதிகமாகும். பயமற்றவராகி இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டே
இருங்கள். நீங்கள் மிகவும் குப்தமாக இருக்கிறீர்கள் உடையை
மாற்றிக் கொண்டு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். சித்திரங்கள்
எப்போதும் பக்கத்திலேயே இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இனிமையான தந்தையிடம் முழுமையாக தொடர்பு வைத்து
மிகவும் இனிமையாகவும் ஆத்மஅபிமானியாகவும் மாற வேண்டும். ஞானம்
என்ற கடலைக் கடைந்து முதலில் தான் கடைபிடிக்க வேண்டும். பிறகு
மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
2. தன்னுடைய மனநிலையை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
பயமற்றவராக வேண்டும். மனிதர்களை தேவதையாக மாற்றக் கூடிய
சேவையில் ஆர்வம் இருக்க வேண்டும்.
வரதானம்:
சதா குஷி என்ற சத்துணவை உண்ணக் கூடிய மற்றும் பிறருக்கு
கொடுக்கக்கூடிய ஆரோக்கியமானவர் மற்றும் அதிர்ஷ்டசாலியானவர்
ஆகுக.
குழந்தைகளாகிய உங்களிடத்தில் உண்மையான, அழிவற்ற செல்வம்
இருக்கின்றது, ஆகவே, அனை வரையும் விட செல்வந்தர் நீங்கள் தான்.
சாப்பிடுவதோ காய்ந்து போன ரொட்டி, ஆனால், குஷி என்ற சத்துணவு
அந்த காய்ந்து போன ரொட்டியில் நிறைந்திருக்கின்றது, அதற்கு
முன்னால் எதுவும் சத்தான உணவு அல்ல. நீங்கள் அனைவரையும் விட
நல்ல சத்துணவு சாப்பிடக்கூடியவர்கள், சுகத்தினுடைய ரொட்டி
சாப்பிடக்கூடியவர்கள். எனவே, சதா நலமுடன் இருக்கின்றீர்கள்.
யார் அவ்வாறு நலமுடன் இருக்கின்றார்களோ, அவர்களைப் பார்த்து
பிறரும் நலமாக ஆகிவிடுகின்றார்களோ, அப்பொழுதான் அதிர்ஷ்டசாலி
ஆத்மாக்கள் என்று கூறுவார்கள்.
சுலோகன்:
யாருடைய ஒரு எண்ணம் மற்றும் வார்த்தை கூட வீணாகவில்லையோ அவர்கள்
ஞானம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.
|
|
|