19.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது சாந்திதாமம், சுகதாமத்திற்கு செல்வதற்காக ஈஸ்வரிய தாமத்தில் அமர்ந்துள்ளீர்கள், இது சத்தியமான சங்கமாகும், இங்கே நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை விட உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் அல்ல - எப்படி?

 

பதில்:

பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, நான் உலகத்திற்கு எஜமானராக ஆவதில்லை, உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றேன் என்றால் பிரம்மாண்டத்திற்கும் எஜமானர்களாக்குகின்றேன். உயர்ந்த திலும் உயர்ந்த தந்தையாகிய நான் குழந்தைகளாகிய உங்களுக்கு நமஸ்காரம் செய்கின்றேன், ஆகை யினால் நீங்கள் என்னை விடவும் உயர்ந்தவர்களாகின்றீர்கள், நான் எஜமானர்களாகிய உங்களுக்கு சலாம் போடுகின்றேன். பிறகு நீங்கள் அப்படி மாற்றக்கூடிய தந்தைக்கு சலாம் போடுகிறீர்கள்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு நமஸ்காரம். பாபா நமஸ்காரம் என்று பதிலுரைப் பதும் கூட இல்லை, ஏனென்றால் பாபா நம்மை பிரம்மாண்டத்திற்கும் எஜமானர்களாக மாற்றுகின்றார் மற்றும் உலகத்திற்கும் எஜமானர்களாக மாற்றுகின்றார் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். பாபா பிரம்மாண்டத்திற்கு மட்டும் தான் எஜமானராக ஆகின்றார், உலகத்திற்கு எஜமானராக ஆவதில்லை. குழந்தைகளை பிரம்மாண்டம் மற்றும் உலகம் இரண்டிற்கும் எஜமானர்களாக மாற்றுகின்றார் என்றால் யார் பெரியவர்கள்? சொல்லுங்கள்! குழந்தைகள் தான் பெரியவர்கள் அல்லவா ஆகையினால் குழந்தைகள் பிறகு நமஸ்காரம் செய்கிறார்கள். பாபா தாங்கள் தான் எங்களை பிரம்மாண்டம் பிறகு உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றீர்கள் ஆகையினால் தங்களுக்கு நமஸ்காரம்!. முஸ்லீம் மக்கள் கூட மாலேக்கம் சலாம், (நீங்கள் நலமாக இருக்க விருப்பம்) சலாம் மாலேக்கம் என்று சொல்கிறார்கள் அல்லவா!. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த குஷி இருக்கிறது. யாருக்கு நிச்சயம் இருக்கிறதோ, நிச்சயம் இல்லாமல் யாரும் இங்கே வரக்கூட முடியாது. யார் இங்கே வருகிறார்களோ, அவர்கள் நாம் எந்த மனித குருவிடம் செல்லவில்லை என்று தெரிந்துள்ளார்கள். மனித தந்தையிடம், ஆசிரியரிடம் அல்லது மனித குருவிடம் செல்வதில்லை. நீங்கள் ஆன்மீகத் தந்தை, ஆன்மீக ஆசிரியர், ஆன்மீக சத்குருவிடம் வருகின்றீர்கள். அந்த மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர் ஒருவர் தான் இருக்கின்றார். இந்த அறிமுகம் யாருக்குமே இருக்கவில்லை. பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களில் கூட படைப்பவர் மற்றும் படைப்பை யாரும் தெரிந்திருக்கவில்லை என்பது இருக்கிறது. தெரிந்திருக்காத காரணத்தினால், அவர்களை அநாதைகள் என்று சொல்லப்படுகிறது. யார் நன்கு எழுத-படிக்கத் தெரிந்தவர்களோ அவர்கள் நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒரு நிராகாரமானவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் வந்து தந்தை, ஆசிரியர், சத்குருவாகவும் ஆகின்றார். கீதையில் கிருஷ்ணருடைய பெயர் புகழ் பெற்றிருக்கிறது. கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய், அனைத்திலும் உத்தமத்திலும் உத்தமமானதாகும். கீதையைத் தான் தாய்-தந்தை என்று சொல்லப்படுகிறது, மற்றபடி எந்த சாஸ்திரங்களானாலும், அவற்றை தாய்-தந்தை என்று சொல்ல முடியாது. ஸ்ரீமத் பகவத் கீதை தாய் என்று பாடப்பட்டுள்ளது. பகவானுடைய கமலவாயிலிருந்து வந்த கீதை ஞானமாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என்றால் கண்டிப்பாக உயர்ந்ததிலும் உயர்ந்தது என்று பாடப்படும் கீதை படைப்பவர் ஆகி விட்டது. மற்ற அனைத்து சாஸ்திரங்களும் அதனுடைய இலைகள், படைப்புகளாகும். படைப்பிடமிருந்து ஒருபோதும் ஆஸ்தி கிடைக்க முடியாது. அப்படியே கிடைத்தாலும் அல்ப காலத்திற்கானதாக இருக்கும். மற்ற இவ்வளவு சாஸ்திரங்கள் இருக்கின்றன, அவற்றைப் படிப்பதின் மூலம் அல்பகால சுகம் ஒரு பிறவிக்குக் கிடைக்கிறது. அதை மனிதர்கள் மனிதர்களுக்குப் படிப்பிக்கிறார்கள். பல விதமான எந்த படிப்பெல்லாம் இருக்கிறதோ அதை மனிதர்கள், மனிதர்களுக்குப் படிப்பிக்கிறார்கள். அல்பகால சுகம் கிடைத்தது பிறகு அடுத்த பிறவியில் வேறு படிப்பைப் படிக்க வேண்டும். இங்கே ஒரு நிராகார தந்தை தான் இருக்கின்றார் அவர் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். எந்த மனிதனும் கொடுக்க முடியாது. அவர்கள் ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாதவர்களாக மாற்றி விடுகிறார்கள். பாபா ரூபாய்க்கு ஒப்பானவர்களாக (மதிப்பு மிக்கவர்களாக) மாற்றுகின்றார். இப்போது பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நீங்கள் அனைவரும் ஈஸ்வரனுடைய குழந்தைகள் அல்லவா. சர்வவியாபி என்று சொல்வதின் மூலம் அர்த்தம் எதையும் புரிந்துகொள்வதில்லை. அனைவருக்குள்ளும் பரமாத்மா இருக்கின்றார் என்றால் பிறகு அனைவருமே தந்தை ஆகி விடுகின்றனர். எல்லோரும் தந்தை என்றால் பிறகு ஆஸ்தி எங்கிருந்து கிடைக்கும்! யாருடைய துக்கத்தை யார் நீக்குவது! பாபாவைத் தான் துக்கத்தைப் போக்கி, சுகத்தை அளிப்பவர் என்று சொல்லப்படுகிறது. தந்தையே தந்தை என்பதற்கு எந்த அர்த்தமும் வருவதில்லை. இது இராவண இராஜ்யம் என்பதை பாபா வந்து புரிய வைக்கின்றார். இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது ஆகையினால் சித்திரங்களில் கூட தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

 

நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா புருஷோத்தமர்களாக மாற்ற வந்துள்ளார். வக்கீலுக்கு, டாக்டர் போன்றவைகளுக்கு படித்து அதன்மூலம் பதவியை அடைவதைப் போலாகும். இந்தப் படிப்பின் மூலம் நான் இன்னாராக ஆவேன் என்று புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் இங்கே சத்யமானவருடைய சேர்க்கையில் அமர்ந்துள்ளீர்கள், இதன்மூலம் நீங்கள் சுகதாமத்திற்குச் செல்கிறீர்கள். சத்தியமான தாமம் (வசிக்குமிடம் ) இரண்டாகும் - ஒன்று சுகதாமம், மற்றொன்று சாந்திதாமமாகும். இவை ஈஸ்வரனுடைய தாமமாகும் (சங்கமயுகம்). பாபா படைப்பவர் அல்லவா! யார் தந்தையின் மூலம் புரிந்து கொண்டு புத்திசாகளாக ஆகி விடுகிறார்களோ, அவர்களுடைய காரியம் சேவை செய்வதாகும். நீங்கள் இப்போது புரிந்துகொண்டு புத்திசாகளாக ஆகியுள்ளீர்கள் என்றால் சிவனுடைய கோயிலுக்கு சென்று புரிய வையுங்கள், இவர் மீது பழம், பூ, வெண்ணெய், நெய், அரளிப்பூ, ரோஜா மலர் போன்றவைகளை ஏன் போடுகிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள் என்று பாபா கூறுகின்றார். கிருஷ்ணருடைய கோயிலில் அரளிப் பூவைப் போடுவதில்லை. அங்கே மிகவும் வாசனை மிக்க மலர்களைக் கொண்டு செல்கிறார்கள். சிவனுக்கு முன்னால் அரளிப் பூவை போடுகிறார்கள் என்றால் ரோஜா மலரையும் போடுகிறார்கள். அர்த்தம் எதையும் தெரிந்திருக்கவில்லை. இந்த சமயத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைக்கின்றார், எந்த மனிதனும் புரிய வைப்பதில்லை. மற்றபடி முழு உலகத்திலும் மனிதர்கள் மனிதர்களுக்குப் படிப்பிக்கின்றார்கள். உங்களுக்கு பகவான் படிப்பிக்கின்றார். எந்த மனிதனையும் பகவான் என்று சொல்ல முடியாது. இலஷ்மி- நாராயணனையும் கூட பகவான் என்று கூறுவதில்லை, அவர்களை தேவி-தேவதைகள் என்று சொல்லப்படுகிறது. பிரம்மா- விஷ்ணு-சங்கரைக் கூட தேவதைகள் என்று தான் சொல்ல முடியும். பகவான் ஒருவரே ஆவார், அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றார். அனைவருமே ஹே! பரமபிதா பரமாத்மாவே என்று சொல்கிறார்கள். அவருடைய உண்மையிலும் உண்மையான பெயர் சிவன் மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் சாலிகிராமங்களாவீர்கள். பண்டிதர்கள் ருத்ர ஞான யக்ஞம் உருவாக்குகிறார்கள் என்றால் சிவனுடைய பெரிய லிங்கத்தை உருவாக்குகிறார்கள் மற்றும் சாலிகிராமங்களை சிறியது-சிறியதாக உருவாக்குகிறார்கள். ஆத்மாவைத் தான் சாலிகிராமங்கள் என்று சொல்லப்படுகிறது.சிவனை பரமாத்மா என்று சொல்லப்படுகிறது. அவர் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார், நாம் அனைவரும் சகோதர- சகோதரர்களாவோம், சகோதரத்துவம் என்று சொல்கிறார்கள் அல்லவா. தந்தையினுடைய குழந்தைகளாகிய நாம் சகோதர-சகோதரர்களாவோம். பிறகு எப்படி சகோதர-சகோதரி களானோம்? பிரஜாபிதா பிரம்மாவின் வாய் மூலமாக பிரஜைகள் படைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிராமணர்கள் மற்றும் பிராமணிகளாவர். நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், ஆகையினால் தான் பிரம்மாகுமார-குமாரிகள் என்று சொல்லப்படுகிறோம். நல்லது, பிரம்மாவை உருவாக்கியது யார்? பகவான் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கர்......... இவர்கள் அனைவரும் படைப்புகளாவர். சூட்சுமவதனமும் படைப்பாக ஆகி விட்டது. பிரம்மாவின் கமல வாயிலிருந்து குழந்தைகளாகிய நீங்கள் வந்துள்ளீர்கள். பிராமண-பிராமணிகள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிரம்மாவின் வாய் வம்சாவழியினர், தத்தெடுக்கப்பட்டவர்கள். பிரஜாபிதா பிரம்மா எப்படி குழந்தைகளை உருவாக்குவார், கண்டிப்பாக தத்தெடுப்பார். எப்படி குருவின் சிஷ்யர்கள் தத்தெடுக்கப்படுகிறார்கள் அல்லவா! அவர்களை சிஷ்யர்கள் என்று சொல்வார்கள். எனவே பிரஜாபிதா பிரம்மா முழு உலகத்தின் தந்தையாகி விட்டார். அவரை தாத்தாவிற்கு தாத்தா என்று சொல்லப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா இங்கு தான் வேண்டும் அல்லவா! சூட்சுமவதனத்திலும் கூட பிரம்மா இருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் என்று பெயர் பாடப் பட்டுள்ளது ஆனால் சூட்சுமவதனத்தில் பிரஜைகள் இருப்பதில்லை. பிரஜாபிதா பிரம்மா யார், என்பன போன்ற அனைத்தையும் பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். அந்த பிராமணர்களும் கூட தங்களை பிரம்மாவின் குழந்தைகள் என்று சொல்கிறார்கள். பிரம்மா எங்கு இருக்கிறார்? இவர் அமர்ந்திருக்கிறார் என்று நீங்கள் சொல்வீர்கள், அவர்கள் இருந்து விட்டு சென்றுள்ளார் என்று சொல்வார்கள். அவர்கள் தங்களை பூஜாரி பிராமணர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் இப்போது நடைமுறையில் இருக்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் தங்களுக்குள் சகோதர-சகோதரிகளாகி விட்டீர்கள். பிரம்மாவை சிவபாபா தத்தெடுத்துள்ளார். நான் இந்த வயதான உடலில் பிரவேசித்து உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன் என்று கூறுகின்றார். மனிதர்களை தேவதைகளாக்குவது என்பது எந்த மனிதனுடைய காரியமும் இல்லை. பாபாவைத் தான் படைப்பவர் என்று சொல்லப்படுகிறது. சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது என்பதை பாரதவாசிகள் தெரிந்துள்ளார்கள். சிவன் தந்தையாவார். தேவி-தேவதைகளுக்கு இந்த இராஜ்யத்தைக் கொடுத்தது யார் என்பது கூட மனிதர்களுக்குத் தெரியாது. சொர்க்கத்தைப் படைப்பவரே பரம் ஆத்மா ஆவார், அவரைத் தான் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் ஆத்மா தூய்மையடைகிறது, பிறகு சதோ-இரஜோ-தமோவில் வருகிறது. இந்த சமயத்தில் கலியுகத்தில் அனைவரும் தமோபிரதானமானவர்களாக இருக்கிறார்கள். சத்யுகத்தில் சதோபிரதானமானவர்களாக இருந்தார்கள். இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இலஷ்மி- நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது. 2500 ஆண்டுகள் தேவதை களுடைய இராஜ்யம் நடந்தது. அவர்களுடைய குழந்தைகள் கூட இராஜ்யம் செய்தார்கள் அல்லவா இலஷ்மி-நாராயணன் ஒன்று, இரண்டு, என்று நடந்து வருகிறது அல்லவா! மனிதர்களுக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை. இந்த சமயத்தில் அனைவரும் தமோபிரதானம், தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். இங்கே ஒரு மனிதன் கூட தூய்மையாக இருக்கவே முடியாது. ஹே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று அனைவரும் அழைக்கிறார்கள். எனவே தூய்மையற்ற உலகமாக ஆகிறது அல்லவா! இதைத்தான் கலியுக நரகம் என்று சொல்லப்படுகிறது. புதிய உலகத்தை சொர்க்கமென்றும், தூய்மையான உலமென்றும் சொல்லப்படுகிறது. பிறகு எப்படி தூய்மை யற்றவர்களாக ஆனார்கள் என்பதை யாரும் தெரிந்திருக்க வில்லை. பாரதத்தில் தங்களுடைய 84 பிறவிகளையும் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. மனிதர்கள் அதிகபட்சம் 84 பிறவிகளை எடுக்கிறார்கள், குறைந்த பட்சம் ஒரு பிறவியாகும்.

 

பாரதத்தை அழிவற்ற கண்டம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது ஏனென்றால் இங்கே தான் சிவபாபாவின் அவதாரம் நடக்கிறது. பாரத கண்டம் ஒருபோதும் விநாசம் ஆக முடியாது. மற்றபடி இருக்கின்ற அனைத்து கண்டங்களும் விநாசமாகி விடும். இந்த சமயத்தில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டது. யாருமே தங்களை தேவதைகள் என்று சொல்வதில்லை ஏனென்றால் தேவதைகள் சதோபிரதான தூய்மை யானவர்களாக இருந்தார்கள். இப்போது அனைவரும் தூய்மையற்ற பூஜாரிகளாக ஆகி விட்டார்கள். இதையும் பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார், பகவானுடைய மகாவாக்கியம் அல்லவா! பகவான் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார், இது சங்கமயுகமாகும், கலியுகத்திலிருந்து சத்யுகமாக, தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாவதற்கான யுகமாகும். கலியுகத்தில் தூய்மையற்ற மனிதர்கள் இருக்கிறார்கள், சத்யுகத்தில் தூய்மையான தேவதைகள் இருக்கிறார்கள் ஆகையினால் இதனை புருஷோத்தம சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது, இப்போது பாபா வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக மாற்றுகின்றார். நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக புருஷோத்தமர்களாக ஆவதற்கு ஆகும். ஆத்மாக்களாகிய நாம் நிர்வாண தாமத்தில் இருக்கின்றோம் என்பதை கூட மனிதர்கள் தெரிந்திருக்கவில்லை. அங்கிருந்து நடிப்பை நடிக்க வருகின்றோம். இந்த நாடகத்தின் ஆயுள் 5 ஆயிரத்தினுடையதாகும். நாம் இந்த எல்லையற்ற நாடகத்தில் நடிப்பை நடிக்கின்றோம். இவ்வளவு மனிதர்கள் அனைவரும் நடிகர்களாவார்கள். இந்த நாடகத்தின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒருபோதும் நிற்காது. முதல்-முதலில் இந்த நாடகத்தில் நடிப்பை நடிக்க தேவி-தேவதைகள் வருகிறார்கள். பிறகு திரேதாவில் சத்திரியர்கள் வருகிறார்கள். இந்த நாடகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. இது முட்கள் நிறைந்த காடாகும். மனிதர்கள் அனைவரும் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வருகிறது. கலியுகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள், சத்யுகத்தில் எவ்வளவு பேர் இருப்பார்கள்? மிகவும் குறைவானவர்களே இருப்பார்கள். ஆதி சநாதன சூரியவம்ச தேவி-தேவதைகள் தான் இருப்பார்கள். இந்த பழைய உலகம் இப்போது மாற வேண்டும். மனித உலத்திலிருந்து பிறகு தேவதைகளின் உலகமாக ஆகும். ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. ஆனால் இப்போது தங்களை தேவி- தேவதைகள் என்று சொல்வதில்லை. தங்களுடைய தர்மத்தையே மறந்து விட்டார்கள். இந்த பாரதவாசிகள் மட்டும் தான் தங்களுடைய தர்மத்தை மறந்து விட்டார்கள், ஹிந்துஸ்தானத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஹிந்து தர்மம் என்று சொல்லிவிடுகிறார்கள். தேவதைகள் தூய்மையாக இருந்தார்கள், இவர்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகையினால் தங்களை தேவதைகள் என்று சொல்ல முடியாது. தேவதைகளின் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களை பாவிகள் கீழானவர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் தான் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள் பிறகு நீங்கள் தான் பூஜாரியாக தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். ஹம் சோ என்பதின் அர்த்தத்தையும் புரிய வைத்துள்ளார். அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா என்று சொல்லி விடுகிறார்கள். இது பொய்யான அர்த்தமாகும், பொய்யான உடல், பொய்யான மாயை...... சத்யுகத்தில் அப்படி சொல்ல மாட்டார்கள். பாபா சத்தியமான கண்டத்தை ஸ்தாபனை செய்கின்றார், பிறகு பொய்யான கண்டத்தை இராவணன் உருவாக்குகின்றான். ஆத்மா என்ன, பரமாத்மா என்ன என்பதையும் பாபா வந்து புரிய வைக்கின்றார். இதைக் கூட யாரும் தெரிந்திருக்கவில்லை. பாபா கூறுகின்றார், ஆத்மாவாகிய நீங்கள் புள்ளியாக இருக்கின்றீர்கள், உங்களுக்குள் 84 பிறவிகளின் நடிப்பு பதிவாகியுள்ளது. ஆத்மாக்களாகிய நாம் எப்படி இருக்கிறோம் என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. நான் வக்கீலாக இருக்கின்றேன், இன்னாராக இருக்கின்றேன் என்பதை தெரிந்திருக்கிறார்கள், மற்றபடி ஆத்மாவை யாரும் தெரிந்திருக்கவில்லை. பாபா தான் வந்து அறிமுகத்தை அளிக்கின்றார். உங்களுடைய ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு அழிவற்றதாகப் பதிவாகியுள்ளது, அது ஒரு போதும் அழியவே முடியாது. இதே பாரதம் தான் மலர்களின் தோட்டமாக இருந்தது. சுகமே சுகம் தான் இருந்தது, இப்போது துக்கமோ துக்கமாகும். இந்த ஞானத்தை பாபா கொடுக்கின்றார்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது பாபாவின் மூலம் புதிய-புதிய விஷயங்களைக் கேட்கின்றீர்கள். அனைத்திலும் புதிய விஷயம் - நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக ஆக வேண்டும். மனிதனிலிருந்து தேவதையாவதற்கான படிப்பை எந்த மனிதனும் படிப்பிப்பதில்லை, பகவான் படிப்பிக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அந்த பகவானை சர்வவியாபி என்று சொல்வது என்பது திட்டுவது (அவமரியாதை) போலாகும். இப்போது பாபா புரிய வைக்கின்றார் - நான் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகின்றேன். இராவணன் நரகமாக்குகின்றான். இந்த விஷயங்களை உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை. பாபா தான் வந்து உங்களை மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுகின்றார். அழுக்குத் துணிகளை துவைத்தார்..... இதுபோன்று புகழும் கூட இருக்கிறது. அங்கே விகாரம் இருப்பதில்லை. அந்த உலகமே சம்பூரண நிர்விகார உலகமாகும். இப்போது விகார உலகமாக இருக்கிறது. தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்றும் அழைக்கிறார்கள். நம்மை இராவணன் தூய்மையற்றவர்களாக்கி விட்டான் ஆனால் இராவணன் எப்போது வந்தான், என்னவாயிற்று போன்ற எதுவும் தெரியாது. இராவணன் எவ்வளவு ஏழ்மையானவர்களாக மாற்றி விட்டான்! பாரதம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு செல்வம் நிறைந்ததாக இருந்தது!. தங்கம், வைர-வைடூரியங்களினால் ஆன மாளிகைகள் இருந்தன! எவ்வளவு செல்வம் இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது! அதுவும் பாபாவைத் தவிர வேறு யாரும் கிரீட மணிந்தவர்கள் போலாக்க முடியாது. சிவபாபா பாரதத்தை சொர்க்கமாக்குகின்றார் என்று இப்போது நீங்கள் கூறுகின்றீர்கள். இப்போது மரணம் முன்னால் நிற்கிறது என்று பாபா கூறுகின்றார். நீங்கள் வானப்பிரஸ்திகளாவீர்கள். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் ஆகையினால் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் சாம்பலாகிவிடும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நாம் பிரம்மாவின் வாய்வம்சாவழி பிராமணர்களாவோம், சுயம் பகவான் நம்மை மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுவதற்காக படிப்பை படிப்பிக்கின்றார், இந்த போதை மற்றும் குஷியில் இருக்க வேண்டும். புருஷோத்தம சங்கமயுகத்தில் புருஷோத்தமர்களாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

 

2) இப்போது நம்முடைய வானப்பிரஸ்த நிலையாகும், மரணம் முன்னால் நிற்கிறது, திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும்......... ஆகையினால் பாபாவின் நினைவின் மூலம் அனைத்து பாவங்களையும் சாம்பாலக்க வேண்டும்.

 

வரதானம்:

ஆன்மீக பயணி ஆவேன் என்ற நினைவின் மூலமாக எப்பொழுதும் (உபராம்) விடுபட்டவராகவும் (ந்யாரா) விலகி இருப்பவராகவும் (நிர்மோஹி) பற்றுதல் அற்றவராகவும் இருப்பீர்களாக.

 

ஆன்மீக பிரயாணி எப்பொழுதும் நினைவு யாத்திரையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பயணம் எப்பொழுதுமே சுகம் அளிக்கக் கூடியது ஆகும், யார் ஆன்மீக யாத்திரையில் ஆர்வத்துடன் இருக்கின்றனரோ, அவர்களுக்கு வேறு எந்த யாத்திரையும் செல்ல வேண்டிய அவசியமில்லை, இந்த யாத்திரையில் எல்லா யாத்திரைகளுமே அடங்கி உள்ளன. மனதாலோ அல்லது உடலாலோ அலைவது நின்று விடுகிறது. எனவே நாம் ஆன்மீக யாத்திரீகர்கள் என்ற இதே நினைவு எப்பொழுதும் இருக்கட்டும். பிரயாணிக்கு யார் மீதும் மோகம் இருக்காது. அவருக்கு சுலபமாகவே விடுபட்டு (உபராம்) விலகி (ந்யாரா) மற்றும் மோகமற்றவராக (நிர்மோகி) ஆவதற்கான வரதானம் கிடைத்து விடுகிறது.

 

சுலோகன்:

எப்பொழுதும் ஆஹா பாபா, ஆஹா அதிர்ஷ்டம் மற்றும் ஆஹா இனிமையான குடும்பம் என்ற இதே பாடலை பாடிக் கொண்டே இருங்கள்.

 

ஓம்சாந்தி