19.06.22    காலை முரளி            ஓம் சாந்தி   06.04.91      பாப்தாதா,   மதுபன்


இதயசிம்மாசனதாரி மற்றும் உலக சிம்மாசனதாரி ஆவதற்காக சுகம் கொடுங்கள் மற்றும் சுகம் பெறுங்கள்

இன்று விஷ்வத்தின் எஜமானன், தன்னுடைய பாலகன் மற்றும் எஜமானனாக இருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். அனைத்து குழந்தைகளும் இந்த சமயத்தில் சுயத்திற்கு எஜமானனாக மற்றும் அனேக பிறவிகள் விஷ்வத்திற்கு எஜமானனாக இருக் கின்றார்கள். பரமாத்ம குழந்தைகள் எஜமானனாக ஆகின்றார்கள். பிராமண ஆத்மாக்கள் என்றால் எஜமான ஆத்மாக்கள். இந்த சமயம் அனைத்து கர்மேந்திரியங் களுக்கும் எஜமானன் ஆவீர்கள், அடிமையான ஆத்மாக்கள் அல்ல. அதிகாரி அதாவது எஜமானன் ஆவீர்கள். கர்மேந்திரியங்களுக்கு வசமாகுவது இல்லை, ஆதலால், பாலகன் மற்றும் எஜமானனாக இருக் கின்றீர்கள். குழந்தையாக இருப்பதன் ஈஸ்வரிய போதையையும் அனுபவம் செய்கின்றீர்கள் மற்றும் சுயராஜ்யத்திற்கு எஜமானன் என்ற போதையையும் அனுபவம் செய்கின்றீர்கள். இரட்டை போதை உள்ளது. அழிவற்ற ஆன்மிகக் குஷியே போதையின் அடையாளம் ஆகும். சதா தங்களை உலகத்தில் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் என்று புரிந்திருக்கிறீர்களா? ஆஹா எனது சிரேஷ்டமான பாக்கியம் அதாவது சிரேஷ்டமான அதிர்ஷ்டம்! அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கின்றீர்கள் மற்றும் சதா குஷி என்ற உணவை சாப்பிடுகின்றீர்கள் மற்றும் பிறருக்குக் கொடுக்கின்றீர்கள். கூடவே சதா குஷியினுடைய ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருக்கின்றீர்கள். பிறருக்கும் கூட குஷியின் மகாதானத்தைக் கொடுத்து அதிர்ஷ்டசாலி ஆக்குகின்றீர்கள். அத்தகைய விலைமதிப்பற்ற வைரத்திற்கு சமமான வாழ்க்கையை உருவாக்குபவர்களாக நீங்கள் ஆகிவிட்டீர்களா? அல்லது இப்பொழுது ஆக வேண்டுமா? பிராமண வாழ்க்கையின் அர்த்தமே மகிழ்ச்சியாக இருப்பது, மகிழ்ச்சி என்ற உணவை சாப்பிடுவது மற்றும் குஷி என்ற ஊஞ்சலில் இருப்பது என்பதாகும். அத்தகைய பிராமணர்கள் ஆவீர்கள் அல்லவா? குஷி இல்லாத வாழ்க்கை வாழ்க்கையா என்ன! வாழ்க்கையே குஷி தான். குஷி இல்லை எனில் பிராமண வாழ்க்கை இல்லை. மகிழ்ச்சியுடன் இருப்பது தான் வாழ்வது என்பதாகும்.

இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளுடைய புண்ணியத்தின் கணக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள், ஏனெனில், நீங்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள். அனேக பிறவிகளுக்காக புண்ணியத்தின் கணக்கை சேமித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். முழு நாளில் எவ்வளவு புண்ணியத்தை சேமித்து இருக்கின்றீர்கள்? இதை சுயம் தானே சோதனை செய்ய முடியும் அல்லவா. ஒன்று தானம் செய்வது, மற்றொன்று புண்ணிய கர்மம் செய்வது. தானத்தை விட புண்ணிய கர்மத்திற்கு மகத்துவம் அதிகம். புண்ணிய கர்மம் என்பது சுய நலமற்று, சேவை உணர்வுடன் செய்யப்படும் கர்மம் ஆகும். புண்ணிய கர்மம் வெளிப் பகட்டுக்காக செய்யப்படுவது அல்ல, ஆனால், உள்ளப்பூர்வமாக செய்யப்படுவது ஆகும். தானம் என்பது வெளிப்பகட்டுக்காகவும் செய்யப்படுகிறது, உள்ளப்பூர்வமாகவும் செய்யப் படுகிறது. புண்ணிய கர்மம் என்றால் ஒரு ஆத்மாவிற்குத் தேவையான நேரத்தில் சகயோகி ஆகுவது அதாவது பயன்படுவது என்பதாகும். புண்ணிய கர்மம் செய்யக்கூடிய ஆத்மாவிற்கு அனேக ஆத்மாக் களுடைய உள்ளத்தின் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. வாயினால் நன்றி அல்லது தேங்ஸ் என்று மட்டும் சொல்வதில்லை, ஆனால், மறைமுகமான பிராப்தியாக உள்ளத்தில் ஆசீர்வாதங் கள் சேமிப்பு ஆகின்றன. புண்ணிய ஆத்மா, தான் பெற்ற பரமாத்மாவின் ஆசீர்வாதங்கள் மற்றும் ஆத்மாக்களின் ஆசீர்வாதங்கள் என்ற பிரத்யட்ச பலனால் நிறைந்து இருப்பார்கள். புண்ணிய ஆத்மாவின் உள்ளுணர்வு மற்றும் பார்வையானது பிறருக்கும் கூட ஆசீர்வாதங் களின் அனுபவத்தை செய்விக்கிறது. புண்ணிய ஆத்மாவின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியின் ஜொலிப்பு தென்படும். புண்ணிய ஆத்மா பலனைப் பெற்றிருக்கும் காரணத்தினால் சதா அபிமானம் மற்றும் அவமானத்தில் இருந்து கடந்து இருப்பார்கள், ஏனெனில், அவர்கள் பரிபூரணமான சக்கரவர்த்தியாக இருப்பார்கள். அபிமானம் மற்றும் அவமானத்தைக் கடந்த கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பார்கள். புண்ணிய ஆத்மா, புண்ணியத்தின் சக்தி மூலம் தன்னுடைய ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு நேரத்தை யும், ஒவ்வொரு கர்மத்தையும் வெற்றிகரமானதாக ஆக்குபவர்கள். புண்ணியத்தின் கணக்கு சேமிப்பு ஆகிறது. வீணானது முடிவடைவதே சேமிப்பின் அடையாளம் ஆகும். அத்தகைய புண்ணிய ஆத்மா விஷ்வத்தினுடைய இராஜ்ய சிம்மாசனதாரி ஆகின்றார்கள். எனவே, அத்தகைய புண்ணிய ஆத்மாவாக எந்தளவு ஆகியிருக்கின்றேன் என்று தன்னுடைய கணக்கை சோதனை செய்யுங்கள். நீங்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்களா என்று ஒருவேளை கேட்டால் அனைவரும் ஆம் என்று கூறுவீர்கள் அல்லவா. அனைவருமே புண்ணிய ஆத்மாக் கள் தான். ஆனால், வரிசைக் கிரமமாக இருக்கின்றீர்களா? அல்லது அனைவரும் முதல் எண்ணில் இருக்கின்றீர்களா? வரிசைக் கிரமமாக இருக்கின்றீர்கள் அல்லவா. சத்யுக, திரேதா யுகத்தில் உலக சிம்மாசனத்தில் எத்தனை பேர் அமர்வார்கள்? அனைவரும் சேர்ந்து அமர்வார் களா? எனில், வரிசைக்கிரமம் உள்ளது அல்லவா. ஏன் நம்பர் உருவாகிறது, காரணம் என்ன? குழந்தைகளுடைய ஒரு விசேமான விசயத்தை பாப்தாதா சோதித்தார்கள். மேலும், அதே விசயம் முதல் எண்ணில் வருவதில் தடை ஏற்படுத்துகிறது. இப்பொழுது தபஸ்யா வருடத்தில் அனைவருக்கும் சம்பூரணம் ஆகுவதற்கான இலட்சியம் உள்ளதா அல்லது வரிசைக்கிரமத்தில் வருவதற்கான இலட்சியம் உள்ளதா? சம்பூரணம் ஆகவேண்டும் அல்லவா. இப்பொழுது அனைவரும் ஒரு சுலோகனை சொல்லவும் செய்கிறீர்கள் மற்றும் எழுதியும் மாட்டுகின்றீர்கள். அது என்னவென்றால் சுகம் கொடுங்கள் மற்றும் சுகம் பெறுங்கள், துக்கம் கொடுக்காதீர்கள், துக்கப்படாதீர்கள் என்பதாகும். இந்த சுலோகன் உறுதியாக உள்ளது. ரிசல்ட்டில் என்ன பார்த்தார்கள்? துக்கத்தை கொடுக் காதீர்கள் என்பதில் பெரும்பான்மையினருக்கு கவனம் உள்ளது. ஆனால், பாதி சுலோகன் சரியாக உள்ளது. கொடுப்பதற்கு யோசிக்கின்றார்கள், கொடுக்கக் கூடாது என்று யோசிக் கின்றார்கள். ஆனால், பெறும்போது, அவர்கள் கொடுத்தார்கள் அதனால் துக்கம் ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றார்கள். இவர்கள் இதைச் சொன்னார்கள், அவர்கள் இப்படிச் சொன்னார்கள், அதனால் இவ்வாறு ஆகிவிட்டது என்று தீர்ப்பு வழங்கு கிறீர்கள் அல்லவா. தனக்குத் தானே வக்கீல் ஆகி வழக்கில் (கேஸில்) இதையே சொல் கின்றீர்கள். பாதி சுலோகன் மீது கவனம் சரியாக உள்ளது, இன்னும் அடிக்கோடிட வேண்டும். பிறகும், பாதி சுலோகன் மீது கவனம் உள்ளது, ஆனால், மீதம் உள்ள பாதி சுலோகன் மீது கவனம் பெயரளவில் உள்ளது. பிறர் கொடுத்தார்கள், ஆனால், நீங்கள் ஏன் பெற்றுக் கொண்டீர்கள்? நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று யார் கூறியது? துக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள், துக்கத் தால் பையை நிறைத்துக் கொள்ளுங்கள் என்று தந்தையின் ஸ்ரீமத் உள்ளதா என்ன? துக்கம் கொடுக்காதீர்கள், துக்கத்தைப் பெறாதீர்கள், அப்பொழுதே புண்ணிய ஆத்மா ஆகுவீர்கள், தபஸ்வி ஆகுவீர்கள். தபஸ்வி என்றால் மாற்றம் என்பதாகும், எனவே, அவர்கள் அளிக்கும் துக்கத்தையும் கூட நீங்கள் சுகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்றம் செய்யுங்கள், அப்பொழுதே தபஸ்வி என்று கூற முடியும். இகழ்ச்சியை புகழ்ச்சியாகப் புரிந்து கொள்ளுங்கள், அப்பொழுதே புண்ணிய ஆத்மா என்று சொல்ல முடியும். நிந்திக்கக் கூடிய அல்லது துக்கம் கொடுக்கக் கூடிய ஆத்மாவையும் கூட தன்னுடைய கருணை உள்ளத்தோடு, கருணை பார்வையோடு பாருங்கள், நிந்திக்கும் பார்வை யோடு பார்க்காதீர்கள் என்ற இந்தப் பாடத்தை சதா, தாய் ஜெகதம்பா அனைத்து குழந்தைகளுக்கும் உறுதி செய்தார்கள். அவர்கள் நிந்தனை செய்யட்டும், நீங்கள் மலர் தூவுங்கள். அப்பொழுதே புண்ணிய ஆத்மா என்று சொல்ல முடியும். நிந்திப் பவர்களை உள்ளத்தால் அரவணைத்துக் கொள்ளுங்கள், வெளிப்படையாக அரவணைத்துக் கொள்ளக்கூடாது. ஆனால், மனதால் அரவணைத்துக் கொள்ளுங்கள். புண்ணியத்தின் கணக்கை சேமிப்பு செய்வதில் இந்த விசயமே தடை ரூபம் ஆகிறது. நான் துக்கத்தைப் பெறவே கூடாது. கொடுப்பது என்பது கூடவே கூடாது, ஆனால், பெறவும் கூடாது. நல்ல பொருளாக இல்லை என்றால் பிறகு குப்பையைப் பெற்று ஏன் சேமித்துக் கொள் கின்றீர்கள்? துக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள், குப்பையை சேமித்துக் கொண்டீர்கள் என்றால் குப்பை யிலிருந்து என்ன உருவாகும்? பாவத்தின் அம்சம் என்ற கிருமிகள் உருவாகும். இப்பொழுது பெரிய பாவத்தை செய்வது இல்லை அல்லவா. இப்பொழுது பாவத்தின் அம்சம் மீதம் உள்ளது, ஆனால், அம்சம் கூட இருக்கக் கூடாது. சில குழந்தைகள் மிகவும் இனிமை யிலும் இனிமையான விசயங்களை சொல்கின்றார்கள். அனைவரும் உரையாடல் செய் கின்றார்கள் அல்லவா. விரும்பவில்லை, ஆனால் நடந்துவிட்டது. என்ற சுலோகன் அனைவரிடத்திலும் உறுதியாக ஆகிவிட்டது. நீங்கள் விரும்பவில்லை என்றால் விரும்பியது வேறு யார்? நடந்து விட்டது என்று கூறுகின்றீர்கள் என்றால் வேறு ஒரு ஆத்மா உள்ளதா என்ன? நடக்கக் கூடாது ஆனால் நடந்துவிடுகிறது என்று சொல்வது யார்? வேறு ஒரு ஆத்மா சொல்கிறதா அல்லது நீங்கள் சொல்கிறீர்களா? எனவே, இந்த விசயங்களின் காரணத்தினால் தபஸ்யாவை நிரூபிக்க முடியாது. எது நடக்கக் கூடாதோ, எதைச் செய்ய விரும்பவில்லையோ அது நடக்காமல் இருப்பதுவே, அதைச் செய்யாமல் இருப்பதுவே புண்ணிய ஆத்மாவின் அடையாளம் ஆகும். பாப்தாதாவிடம் தினமும் குழந்தைகளுடைய அத்தகைய கதைகள் அனேகம் வருகின்றன. சொல்லும் போது கேட்டுக் கொண்டே இருக்கும்படியாக சுவாரஸ்ய மான கதைகளாக்கிச் சொல்கின்றார்கள். சிலர் நீண்ட கதையை சொல்வதில் பழக்கம் உடையவர்கள், சிலரோ சிறிய கதை சொல்கின்றார்கள். ஆனால், கதைகளை அதிகமாகச் சொல் கின்றார்கள். இன்று இந்த வருடத்தினுடைய சந்திப்பின் கடைசி முழுக்கு அல்லவா. அனைவரும் மூழ்குவதற்காகவே வந்திருக்கின்றீர்கள் அல்லவா. பக்தி மார்க்கத்தில் கூட முழுக்கு போடும்பொழுது எதையாவது அர்ப்பணம் செய்வதற்கான அல்லது ஏதாவதொரு சுயநலத்துடன் ஏதாவது ஏதாவது ஒரு எண்ணத்தைக் கட்டாயம் கொண்டு வருவார்கள். இரண்டிற்காகவும் எண்ணத்தைக் கொண்டு வருவார்கள். இரண்டு விதமான எண்ணமும் கொண்டு வருவார்கள். எனவே, இந்த தபஸ்யா வருடத்தில் முழு நாளும் எண்ணத்தின் மூலம், வார்த்தைகள் மூலம், கர்மத்தின் மூலம் புண்ணிய ஆத்மா ஆகி புண்ணிய காரியம் செய்வேன் என்ற சங்கல்பம் செய்யுங்கள். மேலும், ஒவ்வொரு ஆத்மாவின் ஆசீர்வாதங்களே, புண்ணியத் தின் பிரத்யட்சபலனாகும் என்பதை புண்ணியத்தின் அடையாளமாகச் சொல்லப் பட்டது. ஒவ்வொரு எண்ணத்திலும் புண்ணியம் சேமிப்பு ஆகவேண்டும், பேச்சில் ஆசீர்வாதங் கள் சேமிப்பு ஆக வேண்டும், சம்பந்தம், தொடர்பிடமிருந்து, உள்ளத்திலிருந்து செய்யப்பட்ட சகயோகத்திற்கான நன்றி வெளிப்பட வேண்டும், இதையே தபஸ்யா என்று சொல்லப்படுகிறது. அத்தகைய தபஸ்யா உலக மாற்றத்திற்கு ஆதாரமாக ஆகும். அத்தகைய ரிசல்ட்டிற்குப் பரிசு கிடைக்கும். பிறகு, இப்படி ஆகிவிட்டது . . . என்ற கதை சொல்லக்கூடாது. முதல் எண் பரிசை அனைத்து டீச்சர்களும் பெற வேண்டும் மற்றும் அவர்களுடன் சேர்த்து மதுபன் நிவாசிகளும் பெற வேண்டும். ஏனென்றால், மதுவனத்தின் அலை, நிமித்த டீச்சர்களின் அலை இல்லறத்தில் இருப்பவர்கள் வரை, இறை மாணவர்கள் வரை சகஜமாகச் சென்ற டைகிறது. எனவே, நீங்கள் அனைவரும் முதல் எண்ணில் தானாகவே வந்துவிடுவீர்கள். பரிசு பெறுபவர்கள் பட்டியலில் யார் யாருடைய பெயர் வருகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம். டீச்சர்களுடையது வருகிறதா அல்லது மதுபன் நிவாசிகளுடையதா அல்லது இறை மாணவர்களுடையது வருகின்றதா? என்று பார்க்கலாம். இரட்டை அயல்நாட்டினரும் தீவிர முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். பாப்தாதாவிடம் நிறைய பரிசுகள் இருக்கின்றன, எவ்வளவு விரும்பு கின்றீர்களோ, அவ்வளவு பெற முடியும். பரிசுகளுக்குக் குறை கிடையாது. களஞ்சியங்கள் நிறைந்து இருக்கின்றன. நல்லது.

அனைவரும் திருவிழாவிற்கு (மேளாவிற்கு) வந்துவிட்டீர்கள். மேளா நன்றாக இருந்ததா? அல்லது கஷ்டம் இருந்ததா? மழை கூட வரவேற்றது, இயற்கைக்குக் கூட உங்கள் மீது அன்பு இருந்தது. பயப்படவில்லை தானே? பிரம்மா போஜனம் நன்றாகக் கிடைத்தது அல்லவா. 63 பிறவிகளாக ஏமாற்றத்தை அடைந்திருக்கின்றீர்கள். இப்பொழுதோ புகலிடம் கிடைத்து விட்டது அல்லவா. மூன்றடி நிலம் கிடைத்துவிட்டது அல்லவா. கட்டப்பட்டுள்ள இவ்வளவு பெரிய ஹாலின் அழகு அதிகரித்துள்ளது அல்லவா. ஹாலை வெற்றிகரமானதாக ஆக்கி விட்டீர்கள் அல்லவா. யாருக்கும் கஷ்டம் எதுவும் ஏற்படவில்லை தானே? ஆனால், மேளா செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது கிடையாது. படைப்புடன் சாதனமும் கூடவே வருகின்றது. நல்லது.

இதய சிம்மானதாரி மற்றும் விஷ்வ சிம்மாசனத்தின் அதிகாரியான விசே ஆத்மாக் களுக்கு சதா சுகம் கொடுக்கக்கூடிய மற்றும் சுகம் பெறக்கூடிய மாஸ்டர் சுகக் கடல் ஆத்மாக்களுக்கு, சதா குஷியில் இருக்கக்கூடிய மற்றும் குஷியைக் கொடுக்கக்கூடிய மாஸ்டர் வள்ளல் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாதிகளுடன்: அனைத்து மகாரதிகளும் அனைவரையும் சக்திசாலி ஆக்கக்கூடிய சேவையை மிகவும் நன்றாக உள்ளப்பூர்வமாக செய்திருப்பதை பாப்தாதா பார்த்தார்கள். இதற்காக நன்றி என்ன கூற! ஆனால், கணக்கு அதிகமாக சேமிப்பு ஆகியுள்ளது. மிகப் பெரிய கணக்கு சேமிப்பாகி உள்ளது. பாப்தாதா மகாவீர் குழந்தைகளுடைய தைரியம் மற்றும் ஊக்க உற்சாகத்தைப் பார்த்து பல கோடி மடங்கை விட அதிகமாக மகிழ்ச்சி அடைகின்றார்கள். தைரியம் வைத்திருக்கின்றார் கள், குழுவானது சதா அன்பு என்ற நூலில் கட்டப்பட்டுள்ளது, ஆதலால், வெற்றி கிடைத்துள்ளது. குழு உறுதியாக உள்ளது அல்லவா. சிறிய மாலை உறுதி யானதாக உள்ளது. கங்கணமாக ஆகியிருக்கிறது அல்லவா. மாலை உருவாகவில்லை, கங்கணம் உள்ளது அல்லவா. ஆகை யினால், சிறிய மாலை கூட பூஜிக்கப்படுகிறது. பெரிய மாலையானது நன்றாகத் தயார் ஆகிக் கொண்டு இருக்கின்றது, அதுவும் தயார் ஆகிவிடும், ஆகத் தான் வேண்டும். பெரிய மாலையின் மணிகள் தயாராக உள்ளன, ஆனால், மணியோடு மணி இணைவதில் கொஞ்சம் இடைவெளி உள்ளது என்று ஏற்கனவே சொல்லப்பட்டது அல்லவா. சிறிய மாலை நன்றாகத் தயார் ஆகியிருக்கிறது, இந்த மாலையின் காரணத் தினாலேயே வெற்றி சகஜமாகக் கிடைக்கிறது மற்றும் வெற்றியானது சதா மாலையின் மணி களுடைய கழுத்தில் தவழ்கின்றது. வெற்றித் திலகம் வைக்கப்பட்டுள்ளது. பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள், கோடி மடங்கு வாழ்த்துக் கள். நிமித்தமானவர்கள் நீங்களே ஆவீர்கள் அல்லவா. தந்தையோ செய்விப்பவர். செய்பவர்கள் யார்? செய்வதற்கு நிமித்தமானவர்கள் நீங்கள், தந்தையோ முதுகெலும்பாக இருக்கின்றார், ஆகையினால், அன்பு கொடுப்பதை மிகச் சிறப்பாக செய்ததோடு பாலனை கொடுப்பதையும் சிறப்பாகச் செய்தீர்கள். நல்லது.

வரதானம்:
நல்ல எண்ணங்கள் என்ற விதை மூலம் நல்ல பலனைப் பெறக்கூடிய வெற்றி சொரூப ஆத்மா ஆகுக.

வெற்றி சொரூப ஆத்மாக்களுடைய ஒவ்வொரு எண்ணமும் தனக்காக மற்றும் பிறருக்காக வெற்றி கொடுக்கக்கூடியதாக இருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு கர்மத்திலும் வெற்றி கிடைக்கும். அவர்கள் என்ன வார்த்தை பேசுகின்றார்களோ, அது வெற்றி அடைகின்றது, ஆகையினால், சத்திய வாக்கு என்று சொல்லப்படுகிறது. வெற்றி சொரூப ஆத்மாக்களுடைய ஒவ்வொரு எண்ணம், வார்த்தை மற்றும் செயல் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும், வீணான தாக இருக்காது. ஒருவேளை, எண்ணம் என்ற விதை மிகவும் நன்றாக உள்ளது, ஆனால், நல்ல பலன் கிடைக்கவில்லை என்றால் உறுதியான தாரணை என்ற நிலம் சரியாக இல்லை அல்லது கவனம் என்ற பத்தியத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

சுலோகன்:
துக்கத்தின் அலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் கர்மயோகி ஆகி ஒவ்வொரு கர்மம் செய்யுங்கள்.

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. அனைத்து இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை விசே யோகப் பயிற்சிக்கான சமயத்தில் தன்னுடைய ஆகாரி ஃபரிஸ்தா சொரூபத்தில் நிலைத்திருந்து, உலகத்தை வலம் வந்துகொண்டே, இயற்கையுடன் சேர்த்து அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒளி மற்றும் சக்தியைக் (லைட், மைட்) கொடுப்பதற்கான சேவை செய்ய வேண்டும்.