19.07.2020    ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,      ரிவைஸ்    25.02.1986 மதுபன்


 

இரட்டை அயல்நாட்டு சகோதர, சகோதரிகளின் சமர்ப்பண விழாவில்

அவ்யக்த பாப்தாதாவின் மகாவாக்கியம்

 

இன்று பாப்தாதா விசேஷமாக சிரேஷ்ட நாளிற்கான விசேசமான அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இன்று எந்த விழா கொண்டாடினீர்கள்? வெளிக் காட்சிகள் அழகாகவே இருந்தன. ஆனால் அனைவரின் ஆர்வம், உற்சாகம் மற்றும் திட சங்கல்பம், உள்ளத்தின் ஓசைகள் திலாராம் தந்தையிடம் சென்றடைகிறது. ஆக இன்றைய நாள் விசேஷமாக ஆர்வம், உற்சாகம் நிறைந்த திட சங்கல்பத்திற்கான விழா என்று கூறலாம். எப்போதிலிருந்து பாபாவினுடையவர்களாக ஆனீர்களோ அப்பொழுதிலிருந்து சம்பந்தம் இருக்கிறது மற்றும் இருக்கும். ஆனால் இந்த விசேச நாளை விசேசமான முறையில் கொண்டாடியிருக்கிறீர்கள். இது தான் திட சங்கல்பம் என்று கூறப்படுகிறது. எது நடந்தாலும், மாயையின் புயல்கள் வந்தாலும், மனிதர்களின் வித விதமான பிரச்சனைகள் வந்தாலும், இயற்கையின் ஏதாவது குழப்பங்களின் காட்சிகளாக இருக்கட்டும். லௌகீகம் அல்லது அலௌகீக சம்பந்தங்களில் எந்த ஒரு சூழ்நிலையாக இருக்கட்டும், மனதின் எண்ணங்களில் மிக வேகமான புயல்களாகவும் இருக்கட்டும், இருப்பினும் ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை. ஒரே பலம் ஒரே நம்பிக்கை என்ற திட சங்கல்பம் செய்திருக்கிறீர்களா அல்லது மேடையில் மட்டுமே அமர்ந்திருந்தீர்களா? டபுள் மேடையில் அமர்ந்திருந்தீர்களா? அல்லது ஒரு மேடையில் அமர்ந்திருந்தீர்களா? ஒன்று இந்த ஸ்தூல மேடை, இரண்டாவது திட சங்கல்பத்தின் மேடை, திட தன்மை என்ற மேடையாகும். ஆக இரட்டை மேடையில் அமர்ந்திருந்தீர்கள் தானே? மாலையும் மிக அழகானதாக அணிந்திருந்தீர்கள். இந்த மாலை மட்டுமே அணிந்திருந்தீர்களா? அல்லது வெற்றி மாலையும் அணிந்திருந்தீர்களா? வெற்றி கழுத்து மாலையாகும். இந்த திட தன்மை தான் வெற்றிக்கு ஆதாரமாகும். இந்த ஸ்துல மாலையின் கூடவே வெற்றிக்கான மாலையும் அணிந்திருந்தீர்கள் தானே? பாப்தாதா இரண்டுக் காட்சிகளை பார்க்கின்றார். சாகார ரூபத்தின் காட்சிகளை மட்டுமே பார்க்கவில்லை. ஆனால் சாகார காட்சிகளின் கூடவே ஆன்மீக மேடையில் மனதின் திட சங்கல்பம் மற்றும் வெற்றிக்கான சிரேஷ்ட மாலை இரண்டையும் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு மாலை, இரண்டு மேடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் திட சங்கல்பம் செய்தீர்களா? மிகவும் நல்லது. என்ன நடந்தாலும் சம்பந்தத்திலேயே இருக்க வேண்டும். பரமாத்மாவின் அன்பான சம்பந்தத்தில் இருந்து கொண்டு சதா வெற்றி அடைய வேண்டும். வெற்றி என்பது கழுத்து மாலை என்று நிச்சயிக்கப்பட்டதாகும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்பது திட சங்கல்பமாகும். ஒரே ஒருவர் தான் எனில் பிறகு ஏக்ரஸ் ஸ்திதி தானாகவே மற்றும் எளிதாகவே உருவாகிவிடும். அனைத்து சம்பந்தங்களின் அழிவற்ற தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறீர்கள் அல்லவா! ஒருவேளை ஒரே ஒரு சம்பந்தத்தில் குறையிருந்தால் குழப்பம் ஏற்படும். ஆகையால் சர்வ சம்பந்தங்களின் கயிறு கட்டியிருக்கிறீர்கள், தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சங்கல்பம் செய்திருக்கிறீர்கள். சர்வ சம்பந்தம் வைத்திருக்கிறீர்களா? அல்லது முக்கியமான 3 சம்பந்தங்கள் மட்டும் வைத்திருக்கிறீர்களா? சர்வ சம்பந்தம் இருக்கிறது எனில் சர்வ பிராப்திகளும் இருக்கிறது. சர்வ சம்பந்தம் இல்லையெனில் பிராப்திகளில் ஏதாவது குறை இருந்து விடுகிறது. அனைவருக்கும் சமர்ப்பண விழா கொண்டாடப் பட்டது அல்லவா! திட சங்கல்பம் செய்வதன் மூலம் முயற்சியில் முன்னேறுவதற்கு விசேச கிப்ட் கிடைத்து விட்டது. இந்த விதியும் விசேச ஆர்வம், உற்சாகத்தை அதிகப்படுத்துகிறது. பாப்தாதாவும் அனைத்து குழந்தை களுக்கும் திட சங்கல்பம் செய்வதற்கான விழாவிற்கு வாழ்த்துக்களை வழங்குகின்றார். மேலும் சதா அழிவற்றவர்களாக ஆகுங்கள், அமரர் ஆகுங்கள் என்ற வரதானம் கொடுக்கின்றார்.

 

இன்று ஆசிய குழுவினர் அமர்ந்திருக்கின்றனர். ஆசியாவின் விசேசதா என்ன? அயல்நாட்டு சேவைக்கான முதல் குழு ஐப்பான் சென்றது. இது விசேஷமானதாக ஆகிவிடுகிறது அல்லவா! சாகார பாபாவின் பிரேரணையின் படி விசேசமாக அயல்நாட்டு சேவைக்கான அழைப்பு மற்றும் சேவை ஐப்பானில் ஆரம்பமானது. ஆக ஆசியாவின் நம்பர் ஸ்தாபனையின் நம்பரில் முன்னேறி விட்டது அல்லவா! முதல் அயல்நாட்டு அழைப்பாகும். பிற தர்மத்தினரும் அழைப்பு கொடுத்தனர், அது ஆசியாவிலிருந்து தான் ஆரம்பமானது. ஆக ஆசியா எவ்வளவு அதிஷ்டசாலியாக இருக்கிறது! மேலும் இரண்டாவது விசேஷத்தன்மை - ஆசியாவில் அனைத்திற்கும் நெருங்கிய தேசமாக பாரதம் இருக்கிறது. நெருக்கத்தில் இருப்பவர்களை செல்லவமானவர்கள் என்று கூறுவர். செல்லமான குழந்தைகள் மறைந்திருக்கின்றனர், ஒவ்வொரு ஸ்தானத்திலிருந்தும் எவ்வளவு நல்ல நல்ல இரத்தினங்கள் உருவாகியிருக்கின்றன! எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் தரமானமானவர்களாக இருக்கின்றனர். முயற்சிக்கான பலன் நன்றாக இருக்கிறது. இதே போன்று சிறிது சிறிதாக இப்போது எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவரை விட மிக அன்பானவர்களாக இருக்கிறீர்கள். இதுவே பிராமண குடும்பத்தின் விசேஷமாகும். அனைவரையும் விட எனக்குத் தான் அதிக அன்பு இருக்கிறது என்றும், பாபாவிற்கும் என் மீது தான் அதிக அன்பு இருக்கிறது என்றும் ஒவ்வொருவரும் அன்பவம் செய்கிறீர்கள். என்னைத் தான் பாப்தாதா முன்னேற்று கின்றார், ஆகையால் பக்தி மார்க்கத்தினரும் ஒரு சித்திரத்தை மிக நன்றாக பொருள் நிறைந்ததாக உருவாக்கி யிருக்கின்றனர். ஒவ்வொரு கோபிகையின் கூடவே கோபியனும் இருக்கின்றார். ஒரே ஒரு இராதையுடன் மட்டுமல்ல அல்லது 8 பட்டத்து ராணிகளுடன் மட்டுமல்ல. ஒவ்வொரு கோபிகையுடனும் கோபிவல்லப் இருக் கின்றார். தில்வாலா கோயிலுக்குச் சென்றால் இது என்னுடைய சித்திரம் அதாவது இது என்னுடைய குடில் என்று குறிப்பெடுக்கிறீர்கள் அல்லவா! ஆக இந்த ராச லீலையிலும் (நடனம்) உங்கள் அனைவரின் சித்திரம் இருக்கிறதா? இதைத் தான் மகா லீலை (ராஸ்) என்று கூறப்படுகிறது. இந்த மகா லீலைக்கு மிகுந்த மகிமை இருக்கிறது. பாப்தாதாவிற்கு ஒவ்வொருவர் மீதும் ஒருவரை விட மற்றொருவர் மீது அதிக அன்பு இருக்கிறது. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சிரேஷ்ட பாக்கியத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார். யாராக இருக்கட்டும், ஆனால் கோடியில் சிலராக இருக்கின்றார். பத்மாபதம் பாக்கியவான்களாக இருக்கின்றனர். உலகீய கணக்கில் பார்க்கின்ற போது இவ்வளவு கோடியில் மிகச் சிலராக இருக்கிறீர்கள் அல்லவா! ஐப்பான் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! ஆனால் தந்தையின் குழந்தைகளாக எத்தனை பேர் இருக்கிறீர்கள்? ஆக கோடியில் சிலர்களாக ஆகிவிடுகிறீர்கள் அல்லவா! பாப்தாதா ஒவ்வொருவரின் விசேஷத்தன்மை மற்றும் பாக்கியத்தைப் பார்க்கின்றார். கோடியில் சிலராக இருப்பவர்கள் செல்லமானவர்களாக இருக்கின்றனர். தந்தைக்கு அனைவரும் விசேஷமான ஆத்மாக்கள். தந்தை சிலரை சாதாரணமானவர்களாக, சிலரை விசேஷமானவர்களாகப் பார்ப்பதில்லை. அனைவரும் விசேஷமானவர்கள். இந்த பக்கம் மேலும் அதிகரிக்கும், ஏனெனில் இந்த முழு பக்கமும் விசேஷமாக டபுள் சேவை நடைபெறுகிறது. ஒன்று பல விதமான தர்மங்கள் இருக்கின்றன. மேலும் இந்த பக்கம் சிந்தியிலிருந்து வந்த ஆத்மாக்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களுக்கும் சேவை நன்றாக செய்ய முடியும். அவர்களை நெருக்கத்தில் கொண்டு வந்தால் அவர்களது உதவியின் மூலம் மற்ற தர்மத்தினர்களை தொடர்பு கொள்வது எளிதாகி விடும். டபுள் சேவையின் மூலம் டபுள் விருத்தி செய்ய முடியும். அவர்களுக்கு ஏதாவது ஒரு முறையில் தலை கீழான முறையில் அல்லது நேர் மறையான முறையில் விதை தெளிக்கப்பட்டிருக்கிறது. அறிமுகம் இருக்கின்ற காரணத்தினால் எளிதாக சம்பந்தத்தில் கொண்டு வந்து விட முடியும். அதிக சேவை செய்ய முடியும். ஏனெனில் அனைத்து ஆத்மாக்களின் குடும்பமாகும். பிராமணர்கள் அனைத்து தர்மங்களிலும் பரவி சென்றிருக்கின்றனர். பிராமணர்கள் செல்லாத தர்மமே எதுவும் கிடையாது. இப்போது அனைத்து தர்மங்களிலிருந்தும் வெளிப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் யார் பிராமண குடும்பத்தினர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் தன்னுடையவர்கள் என்று தோன்றுகிறது அல்லவா! ஏதோ ஒரு கணக்கின் காரணத்தினால் சென்றிருக்கிறார்கள், மீண்டும் தன்னுடைய குடும்பத்திடம் வந்து சேர்ந்து விட்டார்கள். எங்கெங்கிருந்து வந்து தனது சேவைக்கான பாக்கியத்தை எடுத்துக் கொள்ள நிமித்தமானவர்களாக ஆகிவிட்டார்கள்! இது ஒன்றும் குறைந்த பாக்கியம் கிடையாது. மிகவும் சிரேஷ்ட பாக்கியமாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடுகிறார்கள். மகாதானிகள், மகான் சேவாதாரிகள் என்ற பட்டியலில் வந்து விடுகிறார்கள். ஆக நிமித்தமாக ஆவதும் ஒரு விசேஷ பரிசாகும். இரட்டை அயல்நாட்டினருக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது. சிறிது அனுபவம் செய்ததும் சென்டர் திறப்பதற்கு நிமித்தமாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் கடைசியில் வந்திருந்தாலும் வேகமாகச் செல்வதற்கான விசேஷ பரிசாகும். சேவை செய்வதால் அதிகமானவர்களுக்கு இந்த நினைவு இருக்கிறது - நான் நிமித்தமாகி என்ன செய்கிறேனோ என்னைப் பார்த்து மற்றவர்கள் செய்வார்கள். ஆக இது இரட்டை கவனமாக ஆகிவிடுகிறது. இரட்டை கவனத்தின் காரணத்தினால் இரட்டை -ப்ட் ஆக ஆகிவிடுகிறது. இரட்டை அயல்நாட்டினரின் இரட்டைபடை புரிந்து கொண்டீர்களா! இப்போது அனைத்து இடங்களிலும் பூமி நன்றாக ஆகி விட்டது. குழப்பங்களுக்குப் பிறகு பூமி சரியாகி விடும் அல்லவா! பிறகு பழங்களும் நல்லதாக மற்றும் எளிதாக உருவாகும். நல்லது, ஆசியாவின் பெரிய மைக்கின் ஓசை பாரதத்தில் விரைவாகவே வந்து சேர்ந்து விடும். ஆகையால் அப்படிப்பட்ட மைக் தயார் செய்யுங்கள். நல்லது.

 

பெரிய தாதிகளுடன்: உங்களுக்கு எப்படி மகிமை செய்வது! தந்தையைப் பற்றி கூறும் போது கடல் நீரை மையாக, பூமியை காகிதமாக . இது போன்றே தாதிகளாகிய உங்கள் அனைவரின் மகிமையாகும். மகிமை பாட ஆரம்பித்தால் இரவு பகல் ஒரு வாரத்திற்கான பாடமாக ஆகிவிடும். நன்றாக இருக்கிறீர்கள், அனைவரின் ராச லீலையும் நன்றாக இருக்கிறது. அனைவரின் ராசியும் சேர்கின்றது மற்றும் அனைவரும் நடனமாடுவதும் நன்றாக இருக்கிறது. கை மீது கை கோர்ப்பது என்றால் கருத்துக்களில் ஒத்துபோவது - இது தான் நடனமாகும். பாப்தாதா தாதிகளின் இந்த நடனத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றார். அஷ்ட இரத்தினங்களின் நடனமே இது தான். தாதிகளாகிய நீங்கள் தான் குடும்பத்தின் விசேச அலங்காரங்களாக இருக்கிறீர்கள். அலங்காரம் இல்லையெனில் அழகாக இருக்காது. எனவே அனைவரும் அதே அன்புடன் பார்க்கின்றனர்.

 

பிரிஜேந்திரா தாதியுடன்: குழந்தை பருவத்திலிருந்தே லௌகீகம் மற்றும் அலௌகீகத்தில் அலங்காரத்துக் கொண்டே இருந்தார், அலங்கரித்து அலங்கரித்து அலங்காரமானவராக ஆகிவிட்டார். அப்படித் தானே! பாப்தாதா மகாவீர், மகாரதி குழந்தைகளை சதா நினைவு செய்வதோடு மட்டுமின்றி அவர்கள் நினைவிலேயே கலந்து இருக்கின்றனர். யார் கலந்திருக்கின்றார்களோ அவர்களை நினைவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. பாப்தாதா சதா ஒவ்வொரு விசேச இரத்தினத்தையும் உலகிற்கு முன் பிரத்ட்சயம் செய்கின்றார். உலகிற்கு முன் பிரத்ட்சயம் ஆகக் கூடிய விசேச இரத்தினங்களாக இருக்கிறீர்கள். அனைவரின் குஷி என்ற அதிகப்படியான உதவியும் இருக்கிறது. உங்களது குஷியைப் பார்த்து அனைவருக்கும் குஷி என்ற சத்தான உணவு கிடைத்து விடுகிறது. அதனால் தான் உங்கள் அனைவரின் ஆயுளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அனைவரின் அன்பு என்ற ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்போது இன்னும் அதிக காரியம் செய்ய வேண்டும். ஆகையால் குடும்பத்தின் அலங்காரமாக இருக்கிறீர்கள். அனைவரும் எவ்வளவு அன்பாகப் பார்க்கின்றனர்! ஒருவரது குடை நீக்கப்பட்டு விட்டால் அவரது தலை எப்படியிருக்கும்! குடையுடன் இருப்பவர் குடையற்றவராக ஆகிவிட்டால் எப்படியிருக்கும்? ஆக நீங்கள் அனைவரும் குடும்பத்தில் குடை போன்றவர்கள்.

 

நிர்மல் சாந்தா தாதியிடம்: தனது நினைவுச் சின்னத்தை மதுவனத்தில் சதா பார்த்துக் கொண்டிருக்கின்றாய். நினைவுச் சின்னம் இருப்பது நினைவு செய்வதற்காகவே.! ஆனால் உன்னுடைய நினைவு நினைவுச் சின்னத்தை உருவாக்கி விடுகிறது. குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் நிமித்தமாக இருக்கும் ஆதாரமூர்த்தின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. ஆக ஆதாரமூர்த்தியாக இருக்கின்றாய். ஸ்தாபனைக்கான காரியத்தில் ஆதாரமூர்த்தி உறுதியாக இருக்கின்ற காரணத்தினால் இந்த கட்டிடத்தின் முன்னேற்றம் எவ்வளவு உறுதியானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. காரணம்? ஆதாரமூர்த்தி உறுதியாக இருப்பதாகும். நல்லது

 

டபுள் லைட் ஆகுங்கள். (அவ்யக்த முரளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற இரத்தினங்கள்) டபுள் லைட் என்றால் ஆன்மீக சொரூபத்தில் நிலைத்திருப்பதன் மூலம் இலேசான நிலை தானாகவே ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு டபுள் லைட் ஆக இருப்பவர்கள் தான் பரிஸ்தாக்கள் என்று கூறப்படுகின்றனர். பரிஸ்தாக்கள் ஒருபோதும் யாருடைய பந்தனத்திலும் மாட்டிக் கொள்வது கிடையாது. இந்த பழைய உலகம், பழைய தேகத்தின் கவர்ச்சியில் வரமாட்டார்கள். ஏனெனில் டபுள் லைட் ஆக இருக்கின்றார்கள்.

 

டபுள் லைட் என்றால் சதா பறக்கும் கலையின் அனுபவம் செய்யக் கூடியவர்கள். ஏனெனில் எது லேசாக இருக்கிறதோ அது சதா உயரத்தில் பறக்கும், சுமையுடையது கீழே சென்று விடும். ஆக டபுள் லைட் ஆத்மாக் கள் என்றால், எந்த சுமையும் இருக்கக் கூடாது. ஏனெனில் ஏதாவது சுமை இருந்தால் உயர்ந்த ஸ்திதியில் பறக்க விடாது. டபுள் பொறுப்பு இருந்தாலும் கூட டபுள் லைட்டாக இருப்பதன் மூலம் லௌகீக பொறுப்புகள் ஒருபோதும் களைப்படையச் செய்யாது, ஏனெனில் டிரஸ்டியாக இருக்கிறீர்கள். டிரஸ்டியாக இருப்பவர்களுக்கு என்ன களைப்பு இருக்கும்? எனது குடும்பம், எனது இல்லறம் என்று நினைத்தீர்கள் எனில் சுமை. எனதே கிடையாது எனில், எந்த விசயத்தின் சுமை இருக்கப் போகிறது? முற்றிலும் விடுபட்டவர் மற்றும் அன்பானவர். குழந்தை மற்றும் எஜமான்.

 

சதா தன்னை தந்தையிடம் பலியாக்கி விடுங்கள், சதா இலேசாக இருப்பீர்கள். தனது பொறுப்புகளை தந்தையிடம் கொடுத்து விடுங்கள், அதாவது தனது சுமைகளை தந்தையிடம் கொடுத்து விட்டால் சுயம் இலேசாகி விடுவீர்கள். புத்தியினால் சரண்டர் ஆகிவிடுங்கள். புத்தியினால் சமர்ப்பணம் ஆகிவிட்டால் புத்தியில் வேறு எந்த விசயமும் வராது. அனைத்தும் பாபாவினுடையது, அவ்வளவு தான். அனைத்தும் பாபாவினுடையது எனில் பாக்கி வேறு எதுவும் கிடையாது. டபுள் லைட் என்றால் சன்ஸ்காரம், சுபாவத்தின் சுமையும் கிடையாது, வீண் எண்ணங்களின் சுமையும் கிடையாது - இது தான் லைட் என்று கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இலேசாக இருப்பீர்களோ அந்த அளவிற்கு எளிதாகப் பறக்கும் கலையின் அனுபவம் செய்வீர்கள். யோகாவில் சிறிதளவு கடின உழைப்பு செய்ய வேண்டியிருக்கிறது எனில், கண்டிப்பாக ஏதோ சுமையிருக்கிறது. ஆக பாபா பாபாவை ஆதாரமாக ஆக்கிக் கொண்டு பறந்து கொண்டே இருங்கள்.

 

நான் பாப்சமான் ஆக வேண்டும் என்ற இலட்சியம் சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாபா எவ்வாறு லைட் ஆக இருக்கின்றாரோ அதே போன்று டபுள் லைட் ஆக வேண்டும். மற்றவர்களைப் பார்ப்பதால் பலவீனம் ஆகிவிடுகிறீர்கள். தந்தையைப் பாருங்கள், தந்தையைப் பின்பற்றுங்கள். பறக்கும் கலைக்கான சிரேஷ்ட சாதனம் ஒரே ஒரு வார்த்தை - அனைத்தும் உன்னுடையதாகும். எனது என்ற வார்த்தை மாறி உனது என்று ஆக்கி விடுங்கள். உனது என்றால் ஆத்மா இலேசாகி விடும். மேலும் அனைத்தும் உன்னுடையது எனில், லைட்டாக ஆகிவிட்டது. ஆரம்ப கால கட்டத்தில் இந்த பயிற்சி செய்து வந்தீர்கள் - நடந்து கொண்டிருப்பீர்கள், ஆனால் ஏதோ ஒளி நடந்து போவது போன்று, மற்றவர்கள் உண்ர்ந்தனர், அந்த அளவிற்கு ஸ்திதி இருந்தது. அவர்களுக்கு சரீரம் தென்படவில்லை. இந்த பயிற்சியின் மூலம் ஒவ்வொரு வகையான சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றனர். இப்போது மோசமான நேரம் வந்து கொண்டிருக்கிறது, ஆகையால் டபுள் லைட் ஆக இருக்கும் பயிற்சியை அதிகப்படுத்துங்கள். மற்றவர்களுக்கு உங்களது ஒளி தென்பட வேண்டும் - இது தான் பாதுகாப்பாகும். உள்ளுக்குள் வந்ததும் ஒளியின் கோட்டையைப் பார்க்க வேண்டும்.

 

எவ்வாறு ஒளியின் மூலம் தான் பெரிய பெரிய இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறதோ, நீங்கள் அனைவரும் ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் தொடர்பின் ஆதாரத்தில் சுயம் டபுள் லைட் ஆகி முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். எங்கு டபுள் லைட் ஸ்திதி இருக்கிறதோ அங்கு கடின உழைப்பு மற்றும் முயற்சி என்ற வார்த்தை அழிந்து விடும். தனது என்பதை சமாப்தி செய்து டிரஸ்டி என்ற உணர்வு மற்றும் ஈஸ்வரிய சேவைக்கான உணர்வு இருக்கும் போது டபுள் லைட் ஆகிவிடுவீர்கள். உங்களது நெருங்கிய சம்பந்தம், தொடர்பில் யார் வந்தாலும், இவர்கள் ஆன்மீகமானவர்கள், அலௌகீகமானவர்கள் என்று உணர வேண்டும். அவர்களுக்கு உங்களது பரிஸ்தா ரூபம் தென்பட வேண்டும். பரிஸ்தாக்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். பரிஸ்தாக்களை சித்திரங்களில் காண்பிக்கும் போது இறக்கையுடன் இருப்பதாக காண்பிப் பார்கள். ஏனெனில் பறக்கும் பறவைகளாக இருக்கின்றனர்.

 

எப்போது எண்ணங்களில் உறுதித்தன்மை மற்றும் ஸ்திதியில் டபுள் லைட் ஆக இருப்பீர்களோ அப்போது தான் சதா குஷியாக இருப்பீர்கள் மற்றும் அனைவரது தடைகளையும் அழிக்கக் கூடியவர்களாக அல்லது அனைவரின் கடினமானதை எளிதாக்கக் கூடியவர்களாக ஆவீர்கள். எனது என்பது எதுவும் கிடையாது, அனைத்தும் பாபாவினுடையது. சுமைகளை தன்மீது வைத்துக் கொள்ளும் போது தான் அனைத்து வகையான தடைகளும் வருகின்றன. எனது கிடையாது எனும் போது தடைகளற்றவர்களாக ஆகிவிடுவீர்கள். சதா தன்னை டபுள் லைட் என்று புரிந்து கொண்டு சேவை செய்து கொண்டே செல்லுங்கள். எந்த அளவிற்கு சேவையில் இலேசான நிலை இருக்குமோ அந்த அளவிற்கு எளிதாக பறப்பீர்கள், பறக்க வைப்பீர்கள். டபுள் லைட் ஆகி சேவை செய்வது, நினைவில் இருந்து சேவை செய்வது - இது தான் வெற்றிக்கு ஆதாரமாகும்.

 

பொறுப்புகளை கவனித்துக் கொள்வது தான் அவசியமானது, ஆனால் எவ்வளவு பெரிய பொறுப்பு அந்த அளவிற்கு டபுள் லைட். பொறுப்புகளுடன் இருந்தாலும் பொறுப்பின் சுமைகளிலிருந்து விடுபட்டு இருங்கள். இதைத் தான் பாபாவிற்கு பிரியமானவர்கள் என்று கூறப்படுகிறது. என்ன செய்வது, பெரிய பொறுப்பு இருக்கிறதே, இதை செய்வதா வேண்டாம்! இது மிகவும் கடினம், என்று பயப்படாதீர்கள். இவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள் எனில் சுமை ஆகிவிட்டது. டபுள் லைட் என்றால் இதி-ருந்தும் விடுபட்டிருப்பது. எந்த ஒரு பொறுப்பான காரியத்தின் குழப்பம், சுமை இருக்கக் கூடாது. சதா டபுள் லைட் ஸ்திதியில் இருப்பவர்கள் நிச்சய புத்தியுடன், கவலையற்று இருப்பார்கள். பறக்கும் கலையில் இருப்பார்கள். பறக்கும் கலை என்றால் உயர்ந்ததிலும் உயர்ந்த ஸ்திதியாகும். அவர்களது புத்தி என்ற கால்கள் இந்த பூமியில் இருக்காது. பூமி என்றால் தேக உணர்விலிருந்து விடுபட்டிருப்பார்கள். தேக உணர்வு என்ற பூமியிலிருந்து விலகியிருப்பவர்கள் தான் சதா பரிஸ்தாக்களாக இருப்பார்கள்.

 

இப்போது டபுள் லைட் ஆகி, தெய்வீக புத்தி என்ற விமானத்தின் மூலம் அனைத்தையும் விட மிக உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருந்து உலகின் அனைத்து ஆத்மாக்களுக்கும் லைட் மற்றும் மைட்டின் சுப பாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பத்திற்கான உதவியின் அலைகளைப் பரப்புங்கள். இந்த விமானத்தில் பாப்தாதாவின் சிரேஷ்ட வழிகள் என்ற புதுப்பிக்கப்பட்ட (ரிபைன்) சாதனம் இருக்க வேண்டும். அதில் சிறிதளவும் மன வழி, பிறரது வழிகள் என்ற அசுத்தங்கள் இருக்கக் கூடாது.

 

வரதானம்:

ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு எண்ணத்தின் மகத்துவத்தை அறிந்து புண்ணிய கணக்கை சேமிக்கக் கூடிய பத்மாபதம்பதி (பலமடங்கு பாக்கியசாலி) ஆகுக.

 

புண்ணிய ஆத்மாக்களாகிய உங்களது சங்கல்பத்திலும் விசேஷ சக்தி இருக்கிறது, இந்த சக்தியின் மூலம் அசம்பவத்தையும் கூட சம்பவம் ஆக்கி விட முடியும். இன்றைய நாட்களில் இயந்திரங்களின் மூலம் காய்ந்த நிலைத்தை செழிப்பானதாக ஆக்கி விடுகிறார்கள், மலைகளில் கூட மலர் பூக்கச் செய்கிறார்கள். அதே போன்று நீங்கள் தங்களது சிரேஷ்ட சங்கல்பத்தின் மூலம் நம்பிக்கையற்றவர்களைக் கூட நம்பிக்கையுடையவர்களாக ஆக்கி விட முடியும். ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பத்தின் மதிப்பை உணர்ந்து, சங்கல்பம் மற்றும் விநாடியைப் பயன்படுத்தி புண்ணிய கணக்கை சேமியுங்கள். உங்களது சங்கல்பத்தின் சக்தி அந்த அளவிற்கு உயர்ந்தது அதாவது ஒரே ஒரு சங்கல்பம் பத்மாபதம்பதி ஆக்கி விடும்.

 

சுலோகன்:

ஒவ்வொரு செயலும் அதிகாரத்தன்மையின் நம்ம்பிக்கை மற்றும் போதையுடன் செய்தால் கடின உழைப்பு முடிந்து விடும்.

 

அறிவிப்பு:

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமை. இராஜயோகி தபஸ்வி சகோதர - சகோதரிகள் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை, விசேஷமாக யோக பயிற்சியின் சமயத்தில் பக்தர்களின் கூக்குரலை கேட்டு மேலும் தனது இஷ்ட தேவதையாகி கருணை மனமுடையவர், வள்ளல் சொரூபத்தில் நிலைத்திருந்து அனைவரின் மனவிருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய சேவை செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி