19-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்போது உங்களுக்கு முழு உலகத்தின் முதல், இடை, கடையின் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. நீங்கள் ஞானத்தை புத்தியில் வைத்து சதா மகிழ்ச்சியுடன் இருங்கள்.

கேள்வி:
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் பிரமாண்டமான அதிர்ஷ்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எது? எப்படி?

பதில்:
இப்போது நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து 21 பிறவிகளுக்கு பாபாவிடமிருந்து எல்லையற்ற சொத்தை அடைந்துக் கொண்டிக்கிறீர்கள். ஸ்ரீமத்படி உங்களுடைய அனைத்து மனோவிருப் பங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இது உங்களுடைய பிரமாண்டமான அதிர்ஷ்டம் ஆகும். 84 பிறவிகள் எடுக்கக் கூடிய குழந்தைகளாகிய நீங்கள் தான் சக்கரத்தில் சுழன்று இப்போது பிராமணர்களாகி இருக்கிறீர்கள், பிறகு தேவதை யாவீர்கள். புத்தியோகத்தின் பலம் மற்றும் ஞான பலத்தினால் மாயை இராவணன் மீது வெற்றி அடையும் போது உயர்ந்த அதிர்ஷ்டம் உருவாகிறது. நாம் பாபாவிடம் நம்முடைய அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக, அதாவது லஷ்மி நாராயணன் பதவி பெறுவதற்காக வந்திருக்கின்றோம் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது..

பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்திருக்கிறேன்......

ஓம் சாந்தி.
இது பகவானின் பாடசாலை ஆகும். இங்கே தான் குழந்தைகளுக்காக பகவான் வாக்கு. இந்த ஈஸ்வரிய பாடசாலைக்காக அல்லது எல்லையற்ற தந்தையின் பாடசாலையில் தான் பாடலின் முதல் வரியான அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்திருக்கிறேன் என்பதாகும். ஒருவருக்குத் தான் பகவான் என கூறப்படுகிறது. பகவான் பலர் கிடையாது. அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவரே. இப்போது ஒரு தந்தை மற்றும் பல குழந்தைகளின் குழு அல்லது சந்திப்பு ஆகும். ஞானக் கடல் மற்றும் ஞான நதிகள். தண்ணீரின் கடலை ஞானக் கடல் என கூற முடியாது. ஞானக் கடலிருந்து இந்த ஞான நதிகள் வருகின்றன. இது அவைகளின் சந்திப்பு ஆகும். அது பக்தி, இது ஞானம் ஆகும். ஞானத்தை பிரம்மாவின் பகலான சத்யுகம் திரேதா என்றும் பக்தியை இரவாகிய துவாபர் கலியுகம் என்றும் கூறப்படுகிறது. சத்யுகம் திரேதாவில் சத்கதி தான் இருக்கிறது. சுகதாமத்திற்குப் போக வேண்டும். ஒரு தந்தையே சத்கதி அளிப்பார். அவரே சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார். இப்போது உங்களுக்கு சத்கதி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பதீததிலிருந்து பாவனம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இராஜயோகம் கற்றுக் கொண்டு தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானமாக மாறும் போது தான் சொர்க்கத்திற்குப் போவீர்கள். பிறகு சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானத்திற்கு நீங்கள் எப்படி வருகிறீர்கள்? இது சக்கரம் அல்லவா? பாரதம் சொர்க்கமாக இருந்தது. அதில் லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இதுவரைக்கும் கூட அவர்களது கோவில்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றனர். சத்யுகத் தில் நிச்சயம் இவர்கள் இருந்தார்கள். இப்போதோ கலியுகமாக இருக்கிறது. சத்யுகத்தில் மகாராஜா மகாராணி எப்படி இருந்தனரோ அதே போன்று பிரஜைகள் தூய்மையாக இருந்தனர். லஷ்மி நாராயணனுக்கு மகாராஜா மகாராணி என்று கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் அவர்கள் மகாராஜகுமார் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் மகாராஜகுமாரி ராதை ஆவார்.

இன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்கிறார்கள். அஷ்டமி என்று ஏன் கூறுகிறார்கள் சாஸ்திரங்களின் சாரம் எதுவோ அது உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் என சித்திரங்களில் காண்பிக்கிறார்கள். விஷ்ணு அமர்ந்து பிரம்மாவின் மூலமாக சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார் என்பது இல்லை.. பரம்பிதா பரமாத்மா சிவன் பரந்தாமத்திலிருந்து வந்து பிரம்மாவின் உடலை ஆதாரமாக எடுத்து உங்களுக்கு இந்த இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். மனிதர்கள் இவ்வளவு உழைக்கிறார்கள். பக்தி செய்கிறார்கள். எதுவும் கிடைப்பதில்லை. ஆகவே, எப்போது பக்தி முடிவடைகிறதோ அப்போது நான் மீண்டும் வருகிறேன் என பகவான் கூறுகிறார். ஏனென்றால், முழுமையாக நீங்கள் துர்கதியை அடைந்திருக் கிறீர்கள். சத்யுகம் திரேதாவில் நீங்கள் உங்களுடைய இராஜ்ய பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் பிறகு நீங்கள் விழுந்து கொண்டே போகிறீர்கள். இவை அனைத்தையும் புத்தியில் வைக்க வேண்டும். குழந்தை களாகிய உங்களுக்கு இப்போது முழு உலகத்தின் முதல், இடை, கடையின் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. வேறு யாருடைய புத்தியிலும் இந்த வெளிச்சம் இல்லை. அனைவருக்கும் மேலாக சிவபாபா இருக்கிறார் என அறிகிறீர்கள். பிறகு சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கர், ஸ்தூல வதனத்தில் இந்த மனித சிருஷ்டி இருக்கிறது. மனித சிருஷ்டியில் கூட முதன் முதலில் ஜகதம்பா, ஜகத்பிதா பெயர் பாடப்பட்டிருக்கிறது. சூட்சும வதனத்தில் பிரம்மாவை மட்டும் தான் காண்பிக் கிறார்கள். அவருக்கு பிரம்ம தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ என்கிறார்கள். இங்கே இந்த பிரம்மா சரஸ்வதி இருக்கிறார்கள். இவர்கள் யார்? பிரம்மாவிற்கு நிறைய மகிமை இருக்கிறது. நீங்களும் பிரம்மாவின் மகளே, பிரஜாபிதா நிச்சயமாக இங்கே தான் இருப்பார். சூட்சும வதனத்தில் இருக்க மாட்டார். பாபா பிரஜாபிதா மூலமாகத் தான் ஞானத்தை அளிக்க வேண்டும். விஷ்ணுவிற்கோ அல்லது சங்கரருக்கோ ஞானக்கடல் என்று கூற முடியாது பாபாவிற்குத் தான் ஸ்ரீஸ்ரீ என கூறப்படுகிறது. அவரே உயர்ந்ததிலும் உயர்ந்தவர், உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். பிறகு அவர் ஸ்ரீ இராதை ஸ்ரீ கிருஷ்ணரைப் படைக்கிறார். அவர்கள் சுயம் வரத்திற்குப் பிறகு மகாராஜா ஸ்ரீ நாராயணன் மற்றும் மகாராணி ஸ்ரீ லஷ்மி ஆகிறார்கள். சத்யுகத்தில் அவர்களின் இராஜ்ஜியம் நடக்கிறது. திரேதாவில் இராம் சீதாவின் இராஜ்யம் நடக்கிறது. சத்யுகத்திற்கு சொர்க்கம் என்று கூறப் படுகிறது. பிறகு இரண்டு கலைகள் குறைந்து போகிறது. 16 கலையிலிருந்து 14 கலைக்கு வந்து விட்டார்கள். பிறகு துவாபர யுகத்திலிருந்து பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகிறது.

குழந்தைகளாகிய உங்களை நான் சத்கதிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று பாபா இப்போது கூறுகின்றார். பாரதம் தூய்மையாக இருந்தது. பிறகு பதீதமாக யார் மாற்றியது? இராவணன். ஆகவே, நான் தான் கல்ப கல்பமாக வரவேண்டி இருக்கிறது, வந்து பதீதர்களை பாவனமாக மாற்ற வேண்டியிருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வதற்காக அதாவது உலகத்திற்கு அதிபதியாவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். நீங்களே தேவி தேவதை யாக இருந்தீர்கள். இப்போது பிராமணன் ஆகியிருக்கிறீர்கள். மீண்டும் தேவதையாக வேண்டும் என்பதை புத்தியில் வையுங்கள் என பாபா புரிய வைக்கின்றார். இது குட்டிக் கரணம் ஆகும். முதன் முதலில் உச்சிக் குடுமி, அதற்கு மேலே சிவபாபா இருக்கிறார், பிறகு இந்த பிராமணர் களைப் படைக்கிறார். தத்தெடுக் கிறார். எப்படி குழந்தைகளுக்கு தந்தை இருக்கிறார் அவரோ எல்லைக்குட்பட்ட தந்தை, இவரோ எல்லைக்கப்பாற்பட்டவர். பிரஜாபிதா பிரம்மாவிற்கு கிரேட் கிரேட் கிரண்ட் பாதர் என கூறப்படு கிறது. இந்த சங்கமத்தில் தான் சிவபாபாவின் மகிமை இருக்கிறது. இப்போது தான் அவர் வந்து பிரம்மா சரஸ்வதி மற்றும் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கிறார். இப்போது மீண்டும் உங்களைத் தூய்மையாக மாற்றிக் கொண்டிருக் கிறார். நாம் பாபாவிடமிருந்து மீண்டும் சொத்தை அடைவதற்காக வந்திருக்கிறோம் என அறிகிறீர்கள். கல்ப கல்பமாக எடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகும் போது தான் கீழே விழுவது ஆரம்பமாகிறது. அதாவது தூய்மையிலிருந்து அழுக்காகின்றோம். இப்போது முழு சிருஷ்டியிலும் இராவண இராஜ்ஜியம் இருக்கிறது. அனைவரும் துக்கத்தில் இருக்கிறார்கள். சோகவனத்தில் இருக்கிறார்கள். சத்யுகத்தில் துக்கத்தின் விஷயம் எதுவும் கிடையாது.

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆகும். தேவகிக்கு 8வது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார் என்கிறார்கள். இப்போது 8வது நம்பரில் கிருஷ்ணர் பிறப்பாரா? ஸ்ரீ கிருஷ்ணர் சத்யுகத்தில் தான் பிறப்பார். அவர் வைகுண்டத்தின் முதல் இளவரசர். பிறகு அவரை துவாபர யுகத்தில் கொண்டு சென்று விட்டனர். எனவே, இது கட்டுக்கதை அல்லவா? இப்போது அந்த ஆத்மா கடைசி பிறவியில் படித்துக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் கிருஷ்ணரின் தாய் தந்தைக்கு 8 குழந்தைகள் இருப்ப தில்லை. இந்த சாஸ்திரம் கூட நாடகத்தின்படி அனைத்தும் முதலிலிருந்தே உருவாக்கப் பட்டிருக்கிறது. இப்போது பாபா அனைத்து சாஸ்திரங் களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். பகவான் வாக்கு-இந்த ஞானத்தைக் உங்களுக்கு கூறுகிறேன். இதில் பாட்டு அல்லது சுலோகன் போன்றவற்றின் விஷயம் கிடையாது. இது படிப்பாகும். மற்றபடி இந்த சாஸ்திரம் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருளாகும். பக்தி ஆரம்பம் ஆகியதுமே முதன் முதலில் சிவபாபாவின் சோம்நாத் கோவிலைக் கட்டு கிறார்கள். முதன் முதலில் சிவாபாபாவின் தூய்மையான பக்தி நடக்கிறது, மற்றும் இது சிவபாபாவின் தூய்மையான ஞானம் ஆகும். இதன் மூலமாக நீங்கள் தூய்மை அடைகிறீர்கள். பக்திக்கு பிறகு வைராக்கியம் என பாடப்படுகிறது. இந்த முழு பழைய சிருஷ்டியின் மீது வைராக்கியம் இருக்கிறது. பழைய சிருஷ்டி நிச்சயமாக அழியப் போகிறது. பிறகு புதியது ஸ்தாபனை ஆகிறது. இது அதே மகாபாரத யுத்தமாகும்.. இது போன கல்பத்திலும் நடந்தது. ஏவுகணைகள், இயற்கை சீற்றங்கள் போன்ற எதெல்லாம் நடந்ததோ அது மீண்டும் நடக்கும். தேவதைகள் ஒரு போதும் பதீத உலகத்தில் கால் வைக்க மாட்டார்கள். மகாலஷ்மியை அழைக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அவரிடமிருந்து செல்வத்தைக் கேட்கிறார்கள். லஷ்மி நாராயணன் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். மகாலஷ்மிக்கு நான்கு புஜங்கள் காண்பிக்கிறார்கள். தீபாவளி அன்று அவர்களுடைய பூஜையை செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பாரதவாசிகள் பிச்சை கேட்கிறார்கள். இது விஷ்ணுவின் இரட்டை ரூபமாகும். மனிதர்கள் யாரும் இந்த விஷயங்களை அறிய வில்லை. இச்சமயம் பிரஜாபிதா ஆதி தேவ் மற்றும் ஜகதம்பா ஆதி தேவி இருக்கிறார்கள். இப்போது ஸ்ரீமத் படி உங்களுடைய அனைத்து மனோ விருப்பங்களும் நிறைவேறுகின்றது. நீங்கள் 21 பிறவிகளுக்கு இராஜயோகத்தை அடை கிறீர்கள். இந்த பிரம்மா சாகார தந்தையாக இருக்கிறார். சிவபாபா நிராகார தந்தையாக இருக்கிறார். அவரிடமிருந்து தான் உங்களுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. அவர் சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர். நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு அரிய அதிர்ஷ்டம். யார் 84 பிறவிகளின் சக்கரத்தில் வந்தார்களோ அவர்களே வருவார்கள். அவர்களே வந்து பிராமணர்கள் ஆவார்கள். பிராமணர்கள் தான் மீண்டும் தேவதை யாவார்கள் என்பதை அறிகிறீர்கள்.

இப்போது குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய ஜெயந்தியைக் கொண்டாடுவீர்கள்? நீங்கள் ஞானத்துடன் லஷ்மி நாராயணனுடைய ஜெயந்தியைக் கொண்டாட வேண்டி யிருக்கும். அவர்களே சிறு வயதில் ராதை கிருஷ்ணராக இருக்கிறார்கள். எனவே, இருவருடையதும் கொண்டாட வேண்டியிருக்கும். ஏன் கிருஷ்ண ஜெயந்தியை மட்டும் கொண்டாடுகிறார்கள்? அவர்களோ கிருஷ்ணரை துவாபர யுக்ததில் கொண்டு வந்து விட்டனர். இராதை மற்றும் கிருஷ்ணர் இருவரும் தனித்தனி வீட்டினர் ஆவர். பிறகு சந்திக்கிறார்கள் என்றால் இருவருடைய தையும் சேர்த்து கொண்டாட வேண்டும். இல்லையென்றால் கிருஷ்ணரின் பிறப்பு எப்போது? என்பதை அவர்கள் அறியவில்லை. கிருஷ்ணரின் பிறவி சத்யுகத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டது என்பதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள் இராதையின் பிறவியும் சத்யுகத்தின் ஆரம்பத்தில் என்பீர்கள். இரண்டு நான்கு வருடங்கள் வித்தியாசம் இருக்கும். உங்களுக்கு அனைத்தையும் விட உயர்ந்தது சிவஜெயந்தி ஆகும். எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை அவ்வளவு தான். இப்போது நீங்கள் தேவதையாகிக் கொண்டிருக்கிறீர்கள். லஷ்மி நாராயணன், இராமர் சீதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இராமர் சீதைக்கு சத்திரியர், சந்திர வம்சத்தினர் என ஏன் கூறப்படுகிறது? என்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. யார் தேர்ச்சி அடைவதில்லையோ அவர்கள் சந்திர வம்சத்தில் வருகிறார்கள். இது மாயாவுடனான யுத்தம் ஆகும். இந்த யுத்த மைதானத்தில் இராவணனின் மீது வெற்றி அடைகிறீர்கள். மற்றபடி பாண்டவர்கள் கௌரவர்களின் போர் கிடையாது. நீங்கள் மாயாவின் மீது வெற்றி அடைய வேண்டும். என்னை மட்டும் நினைவு செய்தால் உங்களுடைய விகர்மம் அழியும் மற்றும் மாயாவின் மீது வெற்றி அடைந்து விடுவீர்கள் என ஆத்மாக்களுக்கு பாபா கூறுகின்றார். புத்தியோக பலம் மற்றும் ஞான பலத்தினால் மாயாவின் மீது வெற்றி அடைய வேண்டும். பாரதத்தின் பழமையான யோக பலம் புகழ் வாய்ந்தது. அதன் மூலமாக நீங்கள் இராவணனை வெற்றி அடைந்து இராஜ்யத்தை அடைகிறீர்கள். மிகப் பெரியதிலும் பெரிய அதிர்ஷ்டம் அல்லவா? முக்கியமான விஷயம் எல்லையற்ற தந்தை மற்றும் 21 பிறவிகளுக்குக்கான சதா சுகத்தின் ஆஸ்தியை நினைக்க வேண்டும். நொடியில் சொர்க்கத்தின் இராஜ்ய பதவி. எதுவரை பாபாவின் அறிமுகம் புத்தியில் பதிய வில்லையோ அது வரை புரிந்து கொள்ள முடியாது. இங்கே யாரும் சாது சன்னியாசி போன்றோர் இல்லை. சாதுக்கள் கூறுவது போன்று கீதை அல்லது சாஸ்திரம் போன்ற வைகளைக் கூறவில்லை. காந்தி கூட கீதையைக் கூறினார். பிறகு பதீத பாவனா சிதாராம் என்று பாடினார். இப்போது கீதையையோ பகவான் கூறினார். ஒரு வேளை கீதையின் பகவான் கிருஷ்ணன் என்றால், இராமர் சீதையை ஏன் நினைத்தார்கள்? உண்மையில் நீங்கள் தான் சீதைகள். இராமர் நிராகார் பகவான் ஆவார். அனைவரும் பக்தர்கள், ஏ, இராமா, ஓ, பகவான் தாங்கள் வந்து சீதைகளாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள் என்று அழைக் கிறார்கள். பிறகு இரகுபதி ராகவ ராஜா ராம் என்றும் கூறுகிறார்கள். கேள்விப் பட்ட விஷயங்களைப் பிடித்து வைத்து இருக்கிறார்கள். பிறகு கங்கையை பதீத பாவனி என ஏன் கூறுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் பலர் அங்கே செல்கிறார்கள். வருடா வருடம் மேளா நடக்கிறது. அங்கே சென்று அமர்கிறார்கள். நீங்கள் ஞானக் கடலிடம் அமர்ந்திருக்கிறீர்கள். பிறகு அவர்கள் தண்ணீரில் சென்று நீராடி விட்டு வருகிறார்கள். தூய்மை யாவதில்லை. பதீதமாகத் தான் ஆகி வந்துள்ளார்கள். இப்போது நீங்களோ ஞான மார்க்கத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அங்கே செல்ல மாட்டீர்கள். உண்மையிலும் உண்மையான சங்கமம்(சந்திப்பு) இது ஆகும். இதுவரை ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலமாக பிரிந்து இருந்தனர். பரம்பிதா பரமாத்மாவை விட்டு நீண்ட காலம்.... என யாருக்காக கூறுகிறார்கள். யார் முதன் முதலில் சத்யுகத்தில் இருந்தனரோ அவர்களே! எனவே நிச்சயமாக அவர்களைத் தான் முதலில் பகவான் சந்திப்பார். முதலில் அவர்களே வருவார்கள். இங்கே நிச்சமயாகப் படிக்க வேண்டியிருக்கிறது. யார் பள்ளிக் கூடத்திற்கு வருவதில்லையோ அவர்கள் என்ன கேட்பார்கள். ஆழமான கருத்துக்களை எப்படி புரிந்துக் கொள்வார்கள். சிலர் நேரம் இல்லை என்கிறார்கள். இது உண்மையான வருமானம் ஆகும், அது பொய்யானது என பாபா கூறுகிறார். நீங்கள் பதமாபதி (பலமடங்கு கோடீஸ்வரன்) ஆகிறீர்கள். மற்றபடி இச்சமயம் இவர்களோ பொய்யான பணக்காரர்கள். எவ்வளவு தான் லட்சாதிபதியாக. கோடீஸ்வரனாக இருக்கலாம். அரசாங்கம் கூட அவர்களிடம் கடன் வாங்குகிறது. ஆனால் அனைத்தும் பொய்யான மாயை..... முழு உலகமும் பொய்யானது. குழந்தைகளே உங்களை எவ்வளவு பணக்காரராக மாற்றுகிறேன் என பாபா புரிய வைக்கிறார். இப்போது இராவணன் உங்களை எவ்வளவு துக்கம் உடையவராக மாற்றுகிறான். இப்போது அவனை வெற்றி அடைய வேண்டும். சண்டையினுடைய விஷயம் எதுவும் இல்லை. சண்டையினால் உலகத்திற்கு அதிபதி ஆக முடியாது. நீங்கள் யோக பலத்தினால் உலகத்திற்கு அதிபதியாகிறீர்கள். பாபா யோகத்தைக் கற்பிக்கின்றார். இவருடைய ஆத்மாவும் கற்கிறது. பாபா இவருக்குள் பிரவேசம் ஆகி உங்களுக்கு ஞானத்தைக் கூறுகின்றார். நான் பிறப்பு இறப்பு அற்றவன் எனக் கூறுகின்றார். பாபா எல்லையற்ற தந்தை ஆவார். எனவே, உங்கள் மூலமாக மாயா என்னென்ன செய்ய வைத்தது என்ற எல்லையற்ற இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். நீங்கள் 5 பூதங்களுக்கு வசமாகிக் கொண்டே போனீர்கள். நிலைமை என்னவாயிற்று. நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தீர்கள். பக்தி மார்க்கத்தில் வீணான செலவுகளை செய்து செய்து உங்களுடைய நிலைமை எப்படி ஆகியிருக்கிறது. இப்போது பக்திக்குப் பிறகு பகவான் வந்து சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அளிக்கிறார். ஆகவே, சத்கதி அளிப்பதற்காக பாபா தான் வர வேண்டியிருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பதமாபதம்பதி ஆவதற்காக உண்மையான வருமானத்தை சம்பாதிக்க வேண்டும். படிப்பில் நேரத்தின் சாக்கு போக்கு கூறக் கூடாது. படிப்பதற்கு நேரம் இல்லை என்பது கூடாது. தினந்தோறும் நிச்சயம் படிக்க வேண்டும்.

2. ஒரு பாபாவின் தூய்மையான நினைவிலிருந்து ஆத்மாவை சதோபிரதானமாக மாற்ற வேண்டும். எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை..... இந்த பாடத்தை உறுதியாக்க வேண்டும்.

வரதானம்:
சதா ஒரு தந்தையின் அன்பில் மூழ்கியிருந்து அனைத்து பிராப்திகளிலும் நிறைந்தவர் மற்றும் திருப்தியானவர் ஆகுக.

எந்தக் குழந்தை ஒரு தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கின்றாரோ - தந்தை அவரிடமிருந்து பிரிந்திருக்க மாட்டார், அவர் தந்தையிடமிருந்து பிரிந்திருக்கமாட்டார். ஒவ்வொரு நேரத்திலும் தந்தையின் அன்பிற்கு கைமாறாக அனைத்துப் பிராப்திகளிலும் சம்பன்னம் மற்றும் திருப்தியாக இருப்பார். எனவே அவரை வேறு எந்த வகையான ஆதாரமும் ஈர்க்க முடியாது. அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் அனைத்துப் பிராப்திகளும் நிறைந்திருக்கும் காரணத்தினால் எளிதாகவே ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற அனுபவத்தில் இருப்பர். மூழ்கியிருக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு தந்தை மட்டுமே உலகமாக இருப்பார்.

சுலோகன்:
எல்லைக்குட்பட்ட பெயர்-புகழுக்குப் பின்னால் ஓடுவதை விட, சுயமரியாதையில் இருப்பது தான் உயர்ந்த புகழாகும்.