19.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது மிக சாதாரணமாக இருக்க வேண்டும். நவ நாகரீக உடைகளை உடுத்துவதால் தேக அபிமானம் வந்துவிடுகின்றது.

 

கேள்வி:

அதிர்ஷ்டத்தில் உயர்ந்த பதவி இல்லையென்றால், குழந்தைகள் எந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பார்கள்?

 

பதில்:

தன்னை மாற்றுவதற்கு பதிவேடு (சார்ட்) வைப்பதற்கு பாபா கூறுகின்றார். நினை விற்கான சார்ட் வைப்பதில் மிகுந்த லாபம் இருக்கின்றது. நோட்டு புத்தகம் சதா தன்னுடன் வைத்துக் கொள்ளவும். எவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்தேன் என்று நோட் செய்யவும். என்னுடைய பதிவேடு எவ்வாறு உள்ளது? தெய்வீக நடத்தை உள்ளதா? கர்மங்களைச் செய்தாலும் பாபா நினைவு உள்ளதா? நினைவு மூலமாகத்தான் துரு விலகும். உயர்ந்த அதிர்ஷ்டம் உருவாகும்.

 

பாட்டு: கள்ளம் கபடமற்ற தந்தை தனிப்பட்டவர்...

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளிடம் இந்த லெட்சுமி, நாராயணனுடைய சித்திரம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டும். இதனைப் பார்த்து நீங்கள் மிகுந்த சந்தோஷம் அடைய வேண்டும் ஏனென்றால் அதுதான் உங்களுடைய படிப்பின் லட்சிமாகும். நாம் மாணவர்கள் ஈஸ்வரன் நமக்கு கல்வியை கற்றுத் தருகின்றார் என்பது நமக்குத் தெரியும். ஈஸ்வரிய மாணவர்கள் நாம் இதனை படிக்கின்றோம். அனைவருடைய லட்சியமும் ஒன்று தான். இதனைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். பாட்டைக் கூட குழந்தைகள் கேட்டீர்கள். மிகவும் கள்ளம் கபடமற்றவராக இருக்கின்றார். ஒருசிலர் சங்கரரை போலாநாத் என்று கூறுகின்றார்கள், சிவனையும் சங்கரரையும் ஒன்றாக்கி விடு கின்றார்கள். சிவன் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான், சங்கரர் தேவதா, பிறகு இருவரும் எப்படி ஒன்றாக முடியும்? என்பதை இப்பொழுது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பக்தர்களை பாதுகாக்கக் கூடியவர் என்ற பாடலைக் கேட்டீர்கள். அப்படியென்றால் பக்தர் களுக்கு ஏதோ ஆபத்து உள்ளது என்று தானே அர்த்தம். 5 விகாரங்களின் ஆபத்து அனைவரின் மீதும் உள்ளது. அனைவருமே பக்தர்கள். ஞானிகள் என்று யாரையுமே கூற முடியாது. ஞானம், பக்தி இரண்டுமே வெவ்வேறு ஆகும். எப்படி சிவனும், சங்கரரும் வெவ்வேறானவர்கள். அதுபோல, எப்பொழுது ஞானம் கிடைக்கின்றதோ, அப்பொழுது பக்தி இருப்பதில்லை. நீங்கள் சுகதாமத்திற்கு எஜமானர் ஆகிவிடுகின்றீர்கள். அரைக் கல்பத்திற்கு சத்கதி கிடைத்துவிடு கின்றது. ஒரே ஒரு தூண்டுதலின் மூலம் நீங்கள் அரைக் கல்பத்திற்கான ஆஸ்தியை அடைகின்றீர்கள். பக்தர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் தேவதை ஆகின்றீர்கள், பிறகு பக்தர்களுக்கு எப்பொழுது துக்கம் ஆரம்பமாகின்றதோ அப்பொழுது பாபா வருகின்றார். நாடகத்தின் படி எது நடந்து முடிந்ததோ? அது மீண்டும் நடைபெறும். மீண்டும் பக்தி ஆரம்பம் ஆகின்றது, அதாவது விகார மார்க்கம் ஆரம்பமாகின்றது. பதீதமாகும் வழி ஆரம்பம் ஆகின்றது. இதில் முதல் நம்பர் விகாரம் காமம். இதற்குத்தான் காம விகாரத்தை வென்றால் உலகை வெல்லலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. அவர்கள் வெற்றி அடைகின்றார்களா என்ன? இராவண இராஜ்யத்தில் விகாரமில்லாமல் சரீரம் கிடைப்பதில்லை. சத்யுகத்தில் இராவணன் இருப்பதில்லை. அங்கேயும் ஒருவேளை இராவணன் இருந்தால் பாபா இராம ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து என்ன பலன்? பாபாவிற்கு எவ்வளவு அக்கறையிருக்கின்றது. என்னுடைய குழந்தைகள் சுகமாக இருக்க வேண்டும். சுகமாக இருப்பதற்காக செல்வத்தை சேர்த்து குழந்தைகளுக்குத் தருகின்றார். ஆனால் இங்கு அப்படி நடக்க முடியாது. இது துக்கமான உலகம். நீங்கள் அங்கு பல பிறவிகளாக சுகத்தை அனுபவித்து வந்தீர்கள். எல்லையற்ற செல்வம் கிடைத்து விடுகின்றது, 21 ஜன்மத்திற்கு எந்தவிதமான துக்கமும் இருக்காது. நஷ்டம் ஏற்படாது. இந்த விஷயங்களை புத்தியில் வைத்து உள்ளார்ந்த மகிழ்ச்சியில் இருக்க வேண்டும். உங்களுடைய ஞானம், யோகம் அனைத்துமே மறைமுகமானது. ஸ்தூலமான ஆயுதங்கள் எதுவுமே கிடையாது. இதுதான் ஞான ஆயுதம் என்று பாபா புரிய வைக்கின்றார். அவர்கள் பிறகு ஸ்தூல ஆயுதங்களை தேவிகளின் கைகளில் காட்டியிருக்கின்றார்கள். இது ஞான ஆயுதம், ஞான வாள் என்று சாஸ்திரங்கள் படிப்பவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. இதனை எல்லை யற்ற தந்தை வந்துதான் புரிய வைக்கின்றார். சக்தி சேனைகள் வெற்றியடைந்தார்கள் என்றால் அவசியம் ஏதோ ஆயுதம் இருந்திருக்கும் என்று பக்தியில் நினைக்கின்றார்கள். பாபா வந்து இந்த அனைத்து தவறுகளையும் கூறுகின்றார். உங்களுடைய இந்த விஷயங்களை நிறைய மனிதர்கள் கேட்பார்கள். வித்வான் போன்றவர்களும் ஒருநாள் வருவார்கள். எல்லையற்ற தந்தையல்லவா? குழந்தைகள் நீங்கள் ஸ்ரீமத் படி நடப்பதில் தான் நன்மை இருக்கின்றது. அப்பொழுது தான் தேக அபிமானம் விலகும். எனவேதான் செல்வந்தர்கள் வருவதில்லை. தேக அகங்காரத்தை விட்டு விடுங்கள் என்று பாபா கூறுகின்றார். நல்ல உடைகளின் மீது ஆசையுள்ளது. நீங்கள் இப்பொழுது வனவாசத்தில் உள்ளீர்களல்லவா? இப்பொழுது மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் நிறைய நகைகளை அணிவீர்கள். இங்கு உயர்ந்த ஆடையை அணிய வேண்டாம். மிகவும் சாதாரணமாக இருங்கள். என்று பாபா கூறு கின்றார். இல்லையென்றால் தேக அபிமானம் வந்துவிடும். அது மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். நாம் மாமனார் வீட்டிற்குச் செல்கின்றோம் என்பது நமக்குத் தெரியும். அங்கு நமக்கு நிறைய நகைகள் கிடைக்கும். இங்கு நீங்கள் எந்த ஆபரணமும் அணிய வேண்டாம். தற்சமயம் திருட்டு, களவு எவ்வளவு நடக்கின்றது. வழியில் திருடர்கள் கொள்ளையடித்து விடுகின்றார்கள். நாளுக்கு நாள் இந்த தொல்லைகள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கும். எனவே பாபா கூறுகின்றார் தன்னைத்தான் ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள். தேக அபிமானத்தில் வருவதால் பாபாவை மறந்து விடுகின்றீர்கள். இந்த முயற்சி இப்பொழுதுதான் செய்ய முடியும். பிறகு பக்தி மார்க்கத்தில் இந்த முயற்சி செய்ய முடியாது.

 

நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் உள்ளீர்கள். பாபா புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் வருகின்றார். யுத்தம் அவசியம் ஏற்படும். அணு குண்டுகள் கூட நிறைய தயார் செய் கின்றார்கள். இதனை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் நிறுத்த முடியவில்லை. நாடகத்தில் பதிவாகியுள்ளது. புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதில்லை. மரணம் ஏற்பட்டுத்தான் ஆக வேண்டு மென்றால் எப்படி நிறுத்த முடியும்? புரிந்து கொண்டாலும் கூட நிறுத்துவதில்லை. யாதவர்கள், கௌரவர்களின் முடிவு ஏற்பட்டுத்தான் ஆக வேண்டும். யாதவர்கள் என்றால் யூரோப்பியவாசிகள், அவர்களுக்கு அறிவியலின் கர்வம் எவ்வளவு உள்ளது. இதனால் வினாசம் ஏற்படுகின்றது. பிறகு அமைதியின் கர்வத்திற்குத்தான வெற்றி கிடைக்கின்றது. நீங்கள் சாந்தியாக இருப்பதற்கு கற்றுத்தரப் படுகின்றது. பாபாவை நினைவு செய்வது ஆழமான அமைதி. நான் ஆத்மா சரீரத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றேன். சரீரத்தை விடுவதற்கு நாம் என்ன முயற்சி செய்கின்றோமோ? அப்படி யாராவது முயற்சி செய்கின்றார்களா என்ன? இந்த முழு உலகத்திலும் தேடிப்பாருங்கள்! ஹே! ஆத்மா இப்பொழுது நீ சரீரத்தைவிட்டு செல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் யாராவது இருக்கின்றார்களா? தூய்மையாகவும். இல்லை யென்றால் பிறகு தண்டனையடைய நேரிடும். தண்டனையடைவது யார்? ஆத்மாதான். இந்த இந்த பாவ கர்மங்கள் செய்தாய் எனவே தண்டனை அடை ! என்று சாட்சாத்காரம் ஏற்படும். அந்த நேரம் உணர்வு ஏற்படும். எப்படி ஜன்ம ஜன்ம தண்டனை கிடைக்கின்றது. அவ்வளவு துக்கத்தை அடையும். மற்றபடி சுகத்தின் கணக்கு என்ன இருக்கும்? எனவே இப்பொழுது எந்த பாவ கர்மமும் செய்யாதீர்கள் என்று பாபா கூறுகின்றார். தன்னுடைய பதிவேட்டினை வைக்கவும். ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தைக்கான பதிவேடு உள்ளதல்லவா? பாரதத்தின் நடத்தை சரியில்லை என்று கல்வியமைச்சர் கூட கூறுவார். நாங்கள் இவர்களைப் போல் (லட்சுமி. நாராயணன்) நடத்தையை உருவாக்குகின்றோம் என்று நீங்கள் சொல்லுங்கள். இந்த லட்சுமி நாராயணனுடைய சித்திரம் எப்பொழுதும் தன்னுடைனேயே வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுடைய நோக்கம். நாங்கள் இப்படி ஆகின்றோம். இந்த ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்ரீமத்படி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம்; இங்கு நடத்தை மாற்றியமைக்ககப் படுகின்றது. இங்கு உங்களுக்குள் கருத்து பரிமாற்றம் கூட நடைபெறுகின்றது. அனைத்து சென்டரிலும் குழந்தைகள் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும். சார்ட் எழுதுவது மிகவும் நல்லது.

நாம் 84 பிறவிகளின் சக்கரத்தை தெரிந்து கொள்வதால் சக்கரவர்த்தி ராஜா ஆகின்றோம் என்பதை நாம் தெரிந்திருக்கின்றோம். எவ்வளவு சகஜமானது பிறகும் கூட பவித்திரமாக வேண்டும். நினைவு யாத்திரைக்கான சார்ட் வைக்கவும், இதில் தான் மிகுந்த பலன் உள்ளது. நோட் புக் இல்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் நினைவு செய்யவில்லை. நோட் புக் சதா கூடவே வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்தேன் என்ற சார்ட் எழுதவும். நினைவு செய்யாமல் துரு போகாது. துருவைப் போக்க பொருட்களை மண் எண்ணையில் போடுகின்றார்களல்லவா? கர்மங்களைச் செய்தாலும் பாபாவை நினைவு செய்தீர்களென்றால் முயற்சிக்கான பலன் கிடைக்கும். முயற்சி வேண்டுமல்லவா? அப்படியே தலை மீது கிரீடத்தை வைத்துவிடுவார்களா என்ன? பாபா எவ்வளவு உயர்ந்த பதவி தருகின்றார். கொஞ்சமாவாது முயற்சி செய்ய வேண்டுமல்லவா? இதற்கு கை கால்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. படிப்பு முற்றிலும் சகஜ மானது. சிவபாபா பிரம்மா மூலமாக என்னை இப்படியாக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது நம் புத்தியில் உள்ளது. எங்கு சென்றாலும் பேட்ஜ் அணிந்திருங்கள். உண்மையில் நாம்தான் ஆன்மீக சேனைகள். மேன்மை தன்மையுடன் புரிய வைக்க வேண்டும். மிக இனிமையாகப் புரிய வைக்க வேண்டும். உலகாய சேனைகளுக்கும் புரிய வைக்கவும். அன்பான புத்தி, விபரீதமான புத்தி என்று யாருக்கு சொல்லப்படுகின்றது. நீங்கள் பாபாவை தெரிந்திருக் கின்றீர்களா? லௌக்கீக தந்தையை பகவான் என்று கூற முடியாது. எல்லையற்ற தந்தைதான் பதீத பாவனன், சுகத்தின் கடலாக உள்ளார். அவரிடமிருந்துதான் முழுமையான சுகம் கிடைக்கின்றது. தாய், தந்தை சுகம் தருகின்றார்கள் என்று அஞ்ஞான காலத்தில் நினைத்தோம். மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்கள். எல்லைக்கப்பாற்பட்ட மாமனார் வீடு உங்களுடையது. அது எல்லைக்குட்பட்டது. அந்த தாய் தந்தை ஏதோ 5, 7 லட்சம் அல்லது கோடி தான் தருவார்கள். பத்மாபதம்பதி ஆகக்கூடிய குழந்தைகள் என்று பாபா நமக்கு பெயர் வைத்துள்ளார். அங்கு பைசாவிற்கான விஷயமே கிடையாது. அனைத்துமே கிடைத்து விடுகின்றது. பெரிய பெரிய நல்ல மாளிகைகள் இருக்கும். பல பிறவிகளுக்கு உங்களுக்கு மாளிகை கிடைக்கின்றது. குசேலருடைய உதாரணம் இருக்கின்றதல்லவா? ஒரு பிடி என்று கேட்டவுடன் இங்கேயும் அதனை கொண்டு வருகின்றார்கள். வெறும் அரிசியை மட்டும் சாப்பிட முடியுமா? அதற்கு மசாலா வகைகளையும் எடுத்து வருகின்றார்கள். எவ்வளவு அன்பாக எடுத்து வருகின்றார்கள். பாபா உங்களுக்கு பல பிறவிகளுக்குத் தருகின்றார், எனவே தான் வள்ளல் என்று அவர் அழைக்கப்படுகின்றார். பக்தி மார்க்கத்தில் கூட நீங்கள் ஈஸ்வரனுக்கு என்று கொடுக்கும் போது அல்ப காலத்திற்கு அதற்கு மறுபிறவியில் பலன் கிடைக்கின்றது. சிலர் ஏழைகளுக்கு கொடுக்கின்றார்கள், கல்லூரி கட்டுகின்றார்கள் என்றால் மறுபிறவியில் படிப்பிற்கான தானம் கிடைக்கின்றது. தர்மசாலை கட்டுகின்றார்கள் என்றால் மறுபிறவியில் வீடு கிடைக்கின்றது, ஏனென்றால் அதில் பலர் வந்து இருந்து சுகத்தை அனுபவிக்கின்றார்கள். அது பல பிறவிகளுக்கான விஷயம். சிவ பாபாவிற்கு நாம் என்ன கொடுக்கின்றோமோ அதனை அவர் நம்முடைய சேவைக்காகத்தான் பயன்படுத்துகின்றார். சிவபாபா தன்னிடம் வைத்துக்கொள்வது இல்லை. அனைத்தையும் கொடு, விஷ்வத்திற்கு எஜமானன் ஆகலாம் என்று இவருக்குக் கூட கூறினார். வினாசத்திற்கான காட்சியும் காட்டினார், ஸ்தாபனைக்கான காட்சியும் காட்டினார். அவ்வளவு தான், பிரம்மா பாபாவிற்கு போதை ஏறிவிட்டது. பாபா என்னை உலகத்திற்கே எஜமானன் ஆக்குகின்றார். அர்சுனனுக்கு காட்சி கிடைத்ததாக கீதையில் கூட உள்ளது. என்னை நினைவு செய்தால் நீ இப்படியாகி விடுவாய். வினாசம் மற்றும் ஸ்தாபனைக்கான காட்சி கிடைத்தது. இவருக்கு ஆரம்பத்தி லேயே குஷி கடந்து விட்டது. நாடகத்தில் இந்த பாகம் இருந்தது. பாக்ய ரதத்தைக்கூட யாரும் தெரிந்துகொள்ளவில்லை. குழந்தைகளுக்கு நோக்கம் புத்தியில் இருக்க வேண்டும். நான் இப்படியாகின்றேன். எவ்வளவு முயற்சி செய்கின்றோமோ அவ்வளவு உயர்ந்த பதவி யடைகின்றோம். தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகின்றது. அது இந்த நேரத்திற் கான விஷயம்தான். நான் என்ன வழி தருகின்றேனே அதனை பின்பற்றவும் என்று பாபா கூறுகின்றார். இவர் என்ன செய்தார் அதையும் பாபா நமக்கு எடுத்துரைக்கின்றார். பாபாவை இரத்ன வியாபாரி மந்திரவாதி என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. பாபா திடீரென்று தான் அனைத்தையும் விட்டார். முதலில் அவர் ரத்தின வியாபாரியாக இருந்தார். இப்பொழுது அழிவற்ற ஞான ரத்தின வியாபாரியாக உள்ளார். நரகத்தை சொர்க்கமாக்குவது எவ்வளவு பெரிய மந்திரம். பிறகு வியாபாரியும் கூட ! ஏனென்றால் குழந்தைகளிடம் நல்ல வியாபாரம் செய்கின்றார். மதிப்பற்ற ஒரு பிடி அரிசியை பெற்று மாளிகை தருகின்றார். எவ்வளவு நல்ல வருமானத்தை அடைய வைக்கின்றார். நகை வியாபாரத்தில் கூட அப்படித்தான் செய் கின்றார்கள். யாராவது அமெரிக்கன் வந்தால் 100 ரூபாய் பொருளை 500, 1000 ரூபாய்க்கு கொடுத்து விடுகின்றார்கள். அவர்களிடம் அதிகமாக ரூபாய் வாங்குகின்றார்கள். பழைமையான யோகமே உங்களிடம் மிகப் பழைமையான பொருள்.

 

உங்களுக்கு போலாநாத் பாபா கிடைத்துள்ளார். எவ்வளவு கள்ளம் கபடமற்றவர். உங்களை என்னவாக ஆக்குகின்றார். மதிப்பற்ற பொருளுக்குப் பதிலாக உங்களை 21 ஜன்மத்திற்கு என்னவாக ஆக்குகின்றார். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. போலாநாத் கொடுத்தார் என்று ஒரு நேரம், அம்பா கொடுத்தார்கள், குரு கொடுத்தார்கள் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றார்கள். இங்கு படிப்பு தான். நீங்கள் ஈஸ்வரிய பாடசாலையில் அமர்ந்துள்ளீர்கள். கீதைக்குத்தான் ஈஸ்வரிய பாடசாலை என்று கூறப்படுகின்றது. பகவானுடைய மகா வாக்கியம் என்பது கீதையில்தான் இருக்கின்றது. பகவான் என்று யாருக்கு சொல்லப்படுகின்றது என்பது கூட யாருக்கும் தெரியாது. பரம்பிதா பரமாத்மா என்று யாருக்கு சொல்லப்படுகின்றது என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். பாபாதான் தோட்டக்காரனாக இருக்கின்றார். உங்கனை முள்ளிலிருந்து மலராக ஆக்குகின்றார். அவருடையதைத்தான் அல்லாவின் தோட்டம் என்று சொல்லப்படுகின்றது. ஐரோப்பியவாசிகள் கூட சொர்க்கம் (பாரடைஸ்) என்று கூறுகினறார்கள். பாரதம் பரிஸ்தானாக (சொர்க்கம்) இருந்தது இப்பொழுது சுடுகாடாகிவிட்டது. இப்பொழுது நீங்கள் மீண்டும் சொர்க்கத்திற்கு எஜமானன் ஆகின்றீர்கள். பாபா வந்து உறங்கிக் கொண்டி ருப்பவர்களை விழிக்கச் செய்கின்றார். நீங்கள் கூட இதனை நம்பர்வார் முயற்சியின் அனுசார மாகத் தான் புரிந்துள்ளீர்கள். யார் விழிப்படைந்தவர்களாக இருப்பார்களோ, அவர்கள் தான் பிறரையும் எழுப்புகின்றார்கள். யார் மற்றவர்களையும் விழிப்படைய செய்யவில்லையோ, அவர்கள் தன்னையும் விழிப்படைய செய்யவில்லை என்று தான் பொருளாகும். இந்த பாடல் கள் எல்லாம் கூட நாடகத்தில் பதிவானது. சில பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. எப்பொழுது மனத்தளர்வு ஏற்படுகின்றதோ அப்பொழுது இந்த பாடல்களை கேட்டீர்களென்றால் மகிழ்ச்சி ஏற்படும். இரவு பயணிகளே களைப்படையாதீர்கள், இதுவும் நன்றாக உள்ளது. இப்பொழுது இரவு முடிவடைகின்றது. எவ்வளவு பக்தி செய்கின்றோமோ அவ்வளவு விரைவில் பகவான் கிடைப்பார் என்று மனிதர்கள் நினைகின்றார்கள். ஹனுமான் போன்ற காட்சி கிடைத்தால் பகவான் கிடைத்துவிட்டார் என்று நினைக்கின்றார்கள். இந்த சாட்சாத்காரங்கள் அனைத்தும் நாடகத்தில் பதிவானது என்று பாபா புரிய வைக்கின்றார். என்ன பாவனை வைக்கின்றார்களோ அதனுடைய சாட்சாத்காரம் கிடைக்கின்றது. மற்றபடி வேறு எதுவும் நடப்பதில்லை. இந்த பேட்ஜ் எப்பொழுதுமே நீங்கள் அணிந்திருக்க வேண்டும். விதவிதமாக தயாராகி உள்ளது. இது புரிய வைக்க மிகவும் நல்ல பொருள்.

 

நீங்கள் ஆன்மீக சேனைகள் அல்லவா? சேனைகள் எப்பொழுதும் அடையாளம் போட்டி ருப்பார்கள். குழந்தைகள் கூட பேட்ஜ் அணிந்திருந்தால் நான் இப்படியாகப் போகின்றேன் என்ற போதையிருக்கும். நாம் மாணவர்கள். பாபா நம்மை மனிதனிலிருந்து தேவதையாக்கிக் கொண்டிருக்கின்றார். மனிதர்கள் தேவதைகளுக்கு பூஜை செய்கின்றார்கள். தேவதைகள் தேவதைகளுக்கு பூஜை செய்வதில்லை. இங்கு மனிதர்கள் தேவதைகளுக்கு பூஜை செய்கின்றார்கள். ஏனென்றால் தேவதைகள் மிகவும் சிரேஷ்டமானவர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப்பிறகு கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) புத்தியில் தன்னுடைய இலட்சியம், குறிக்கோளை நினைவில் வைக்க வேண்டும். லட்சுமி, நாராயணனின் சித்திரத்தை சதா தன்னுடன் வைத்திருக்க வேண்டும். நான் இப்படி ஆவதற்காக படித்துக்கொண்டிருக்கின்றேன் என்ற குஷி இருக்க வேண்டும், நாம் இறை மாணவர்களாக இருக்கின்றோம்.

 

2) தன்னுடைய மதிப்பற்ற ஒருபிடி அரிசியை (பழைய குப்பைகளை) கொடுத்து மாளிகைளை அடைய வேண்டும். பிரம்மா பாபாவைப் பின்பற்றி அழியாத ஞானரத்தினங்களின் வியாபாரி ஆகவும்.

 

வரதானம்:

அசரீரி தன்மை என்ற ஊசியின் மூலம் மனதை கட்டுபடுத்தக் கூடிய ஒருமுகப்படுத்தும் ஆகுக.

 

இன்றைய காலத்தின் ஒருவேளை யாரையாவது கட்டுபாட்டில் வரவில்லை, தொல்லை செய்கிறார்கள், பைத்தியமாகி விடுகிறார்கள் என்றால் அவர்களை அமைதிபடுத்துவதற்காக ஊசி போடப்படுகிறது. அவ்வாறு ஒருவேளை எண்ணங்களின் சக்தி உங்களுடைய கட்டு பாட்டில் வரவில்லையென்றால் அசரீரி தன்மையின் ஊசியை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு எண்ணங்களின் சக்தி வீண் ஆகாது. எளிதாகவே ஒருமுகப்படுத்தும் தன்மை ஆகி விடும். ஆனால் ஒருவேளை புத்தி என்ற கடிவாளத்தை பாபாவிடம் கொடுத்துவிட்டு, பிறகு அதனை வாங்கிவிட்டீர்கள் என்றால் மனம் வீணானவற்றில் போய் விடுகிறது. இப்பொழுது வீணானதின் முயற்சியிலிருந்து விடுபட்டு விடுங்கள்.

 

சுலோகன்:

தனது பூஜ்ய சொரூபத்தின் நினைவில் இருந்து அனைத்து ஆத்மாக்கள் மீதும் கருணை காட்டுங்கள்.

 

ஓம்சாந்தி