19.11.23 காலை முரளி
ஓம் சாந்தி 03.04.96 பாப்தாதா,
மதுபன்
சேவைகளின் கூடவே எல்லையற்ற வைராக்கிய விருத்தி மூலம் பழைய
மற்றும் வீணான சமஸ்காரங்களில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள்
இன்று எல்லைக்கப்பாற்பட்ட தந்தை தன்னுடைய எல்லைக்கப்பாற்பட்ட
சதா சகயோகி துணைவர் களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.
நாலாபுறங்களிலும் உள்ள சதா சகயோகி குழந்தைகள், சதா தந்தையின்
உள்ளத்தில் இருக்கும் இதய சிம்மாசனதாரிகளைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்றார். நிராகார தந்தைக்கு தனக் கென்று அழிவற்ற
சிம்மாசனம் கூட கிடையாது, ஆனால், குழந்தைகளாகிய உங்களுக்கு
எத்தனை சிம்மாசனங்கள் உள்ளன? ஆஹா! என்னுடைய சிம்மாசன தாரி
குழந்தைகள்! என்று பாப்தாதா சிம்மாசனதாரி குழந்தைகளைப் பார்த்து
சதா மகிழ்ச்சி அடைகின்றார்கள். குழந்தைகள் தந்தையைப் பார்த்து
குஷி அடைகின்றார்கள், நீங்கள் அனைவரும் பாப்தாதாவைப் பார்த்து
குஷி அடைகின்றீர்கள், ஆனால், பாப்தாதா குழந்தைகளைப் பார்த்து
எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றார்கள், ஏனென்றால், ஒவ்வொரு
குழந்தையும் விசேˆ ஆத்மா ஆவார்கள். கடைசி நம்பராக இருக்கட்டும்,
ஆனாலும், கடைசியில் இருக்கும்பொழுதும் விசேˆமாக கோடியில் ஒரு
சிலர், ஒரு சிலரிலும் ஒரு சிலர் என்ற பட்டியலில் உள்ளனர்.
ஆகையினால், ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து தந்தைக்கு அதிகமாக
குஷி ஏற்படுகிறதா அல்லது உங்களுக்கு ஏற்படுகிறதா? (இருவருக்கும்
ஏற்படுகிறது) தந்தைக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்! எத்தனை
குழந்தைகள் உள்ளனரோ, அவ்வளவு மகிழ்ச்சி உள்ளது, மேலும்,
உங்களுக்கோ இரட்டை குஷி மட்டும் உள்ளது, அவ்வளவுதான்.
உங்களுக்கு பரிவாரத்தினுடைய குஷி உள்ளது, ஆனால், தந்தையினுடைய
குஷி சதாகாலத்திற்குமானது, மேலும், உங்களுடைய குஷி சதா
காலத்திற்கும் உள்ளதா அல்லது சில சமயம் ஏற்ற இறக்கமாக உள்ளதா?
பிராமண வாழ்க்கையின் சுவாசமே மகிழ்ச்சியாகும் என்பதை பாப்தாதா
புரிந்திருக்கின்றார்கள். குஷி இல்லையென்றால் பிராமண வாழ்க்கை
இல்லை. மேலும், அழிவற்ற குஷி, சில நேரக் குஷி அல்ல, சதவிகிதத்
திலும் அல்ல, குஷி என்பது குஷி தான். இன்று 50 சதவிகிதம் குஷி
உள்ளது, நாளை 100 சதவிகிதம் உள்ளது என்றால் வாழ்க்கையினுடைய
சுவாசம் ஏற்றம் இறக்கமாக உள்ளது அல்லவா! சரீரமே போகட்டும்,
ஆனால், குஷி போகக்கூடாது என்று பாப்தாதா முன்பே
கூறியிருக்கின்றார்கள். இந்தப் பாடம் சதா உறுதியாக (பக்காவாக)
உள்ளதா அல்லது கொஞ்சம் கொஞ்சம் உறுதியற்றதாக (கச்சாவாக) உள்ளதா?
சதா அடிக்கோடு உள்ளதா? சில நேரம் மகிழ்ச்சி யுடன் இருப்பவர்கள்
என்ன ஆவார்கள்? சதா மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் மதிப்புடன்
தேர்ச்சி பெறுவார்கள் மற்றும் சிலநேரம் மகிழ்ச்சியில்
இருப்பவர்கள் தர்மராஜபுரியைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
மதிப்புடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு நொடியில் தந்தையின் கூடவே
செல்வார்கள், நிற்கமாட்டார்கள். எனில், நீங்கள் அனைவரும் யார்?
கூடவே செல்லக்கூடியவர்களா அல்லது நிற்கக்கூடியவர்களா? (கூடவே
செல்லக் கூடியவர்கள்) சார்ட் அதற்கேற்றாற் போல் உள்ளதா? ஏனெனில்,
விசேˆமாக வைரவிழா ஆண்டில் பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தை
மீதும் என்ன ஆசை உள்ளது என்பதை அறிவீர்கள் அல்லவா?
பாப்தாதா அனைத்துக் குழந்தைகளுடைய சார்ட்டைப் பார்த்தார்கள்.
அதில், நிகழ்கால சமயத்திற்கேற்ப ஒரு விசயத்தின் மீது இன்னும்
அதிக கவனம் தேவை என்பதைப் பார்த்தார்கள். சேவையில் மிகுந்த
ஊக்க உற்சாகத்துடன் முன்னேறிக் கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும்
வைர விழாவில் விசேஷமாக சேவைக்கான ஊக்க உற்சாகம் உள்ளது, இதில்
தேர்ச்சி பெற்று இருக்கிறீர் கள். ஒவ்வொருவரும் அவரவர்
சக்திக்கேற்ப சேவை செய்துகொண்டு இருக்கின்றீர்கள், மேலும்,
செய்துகொண்டே இருப்பீர்கள். ஆனால், இப்பொழுது விசேஷமாக என்ன
தேவை உள்ளது? சமயம் அருகாமையில் உள்ளது, சமயத்தினுடைய
அருகாமையின் அனுசாரம் இப்பொழுது என்ன அலை இருக்க வேண்டும்? (வைராக்கியத்தின்
அலை) என்ன வைராக்கியம் - எல்லைக் குட்பட்டதா அல்லது
எல்லைக்கப்பாற்பட்டதா? எந்தளவு சேவைக்கான ஊக்க உற்சாகம் உள்ளதோ,
அந்தளவு சமயத்தின் தேவைக்கேற்ப சுயஸ்திதியில் எல்லையற்ற
வைராக்கியம் எந்தளவு உள்ளது? ஏனெனில், உங்களுடைய சேவையின்
வெற்றியே சீக்கிரத்திலும் சீக்கிரமாக பிரஜைகள் தயாராகி
விடவேண்டும் என்பதாகும், ஆகையினாலேயே சேவை செய்கின்றீர்கள்
அல்லவா? எதுவரை நிமித்த ஆத்மாக்களாகிய உங்களுக்குள் எல்லையற்ற
வைராக்கிய விருத்தி இல்லையோ, அதுவரை மற்ற ஆத்மாக்களுக்குள்ளும்
வைராக்கிய விருத்தி வரமுடியாது.. மேலும், எதுவரை வைராக்கிய
விருத்தி வராதோ, அதுவரை தந்தையின் அறிமுகம் அனைவருக்கும்
கிடைத்து விட வேண்டும் என்று நீங்கள் என்ன விரும்புகின்றீர்களோ,
அது நடக்காது. எல்லையற்ற வைராக்கியம் சதாகாலத்திற்கான
வைராக்கியம் ஆகும். ஒருவேளை, சமயத்தின் அனுசாரம் அல்லது
சூழ்நிலையின் அனுசாரம் வைராக்கியம் வருகிறது என்றால் சமயம்
முதல் நம்பரில் வந்துவிட்டது மற்றும் நீங்கள் இரண்டாவது நம்பர்
ஆகிவிட்டீர்கள். சூழ்நிலை அல்லது சமயம் வைராக் கியத்தைக்
கொடுத்தது. சூழ்நிலை மாறியது, சமயம் கடந்தது எனில்
வைராக்கியமும் கடந்து விட்டது என்றால் அதை என்னவென்று சொல்லலாம்
- எல்லையற்ற வைராக்கியமா அல்லது எல்லைக்குட்பட்டதா? எனவே,
இப்பொழுது எல்லையற்ற வைராக்கியம் தேவை. ஒருவேளை, வைராக்கியம்
துண்டிக்கப்பட்டுவிடுகிறது என்றால் அதற்கான முக்கிய காரணம் தேக
உணர்வு ஆகும். எதுவரை தேக உணர்வின் மீது வைராக்கியம் வரவில்லையோ,
அதுவரை எந்த விசயத்தின் மீதும் வைராக்கியம் சதாகாலத்திற்கும்
இருக்காது, அல்பகாலத்திற்கானதாக இருக்கும். சம்பந்தத் தின் மீது
வைராக்கியம், இது பெரிய விசயம் அல்ல, அது உலகத்திலும் கூட
சிலருக்கு உள்ளத்தில் இருந்து வைராக்கியம் வந்துவிடுகிறது,
ஆனால், இங்கே தேக உணர்வினுடைய விதவிதமான ரூபங்கள் என்ன உள்ளனவோ,
அந்த விதவிதமான ரூபங்களை அறிந்திருக்கின்றீர்கள் இல்லையா? தேக
உணர்வின் ரூபங்கள் எத்தனை உள்ளன, அதனுடைய விஸ்தாரத்தையோ
அறிந்துள்ளீர்கள், ஆனால், இந்த அனேக தேக உணர்வின் ரூபங்களை
அறிந்துகொண்டு, எல்லையற்ற வைராக்கியத் தில் இருக்க வேண்டும்.
தேக உணர்வானது ஆத்ம உணர்வாக மாற வேண்டும். எவ்வாறு தேக உணர்வு
இயல்பாகிவிட்டதோ, அதுபோல் ஆத்ம உணர்வு இயல்பாக ஆகவேண்டும்.
ஏனெனில், ஒவ்வொரு விசயத்திலும் முதல் வார்த்தையாக தேகம் தான்
வருகிறது. அது சம்பந்தமானாலும், அது தேகத் தினுடைய சம்பந்தம்
ஆகும், பொருளானாலும் அது தேகத்திற்கான பொருள் ஆகும். எனவே, மூல
ஆதாரம் தேக உணர்வு ஆகும். எதுவரை ஏதாவது ஒரு ரூபத்தில் கூட தேக
உணர்வு உள்ளதோ, அதுவரை வைராக்கிய விருத்தி வர முடியாது.
நிகழ்கால சமயத்தில் தேக உணர்வின் தடை என்ன வருகிறதோ, அதற்கான
காரணம் - தேகத்தின் பழைய சமஸ்காரங்கள் என்ன உள்ளனவோ, அவற்றின்
மீது வைராக்கியம் வரவில்லை என்பதாக பாப்தாதா பார்த்தார்கள்.
முதலில் தேகத்தின் பழைய சமஸ்காரங்களின் மீது வைராக்கியம் தேவை.
சமஸ்காரம் ஸ்திதியிலிருந்து கீழே இறக்கி விடுகிறது.
சமஸ்காரத்தின் காரணத்தினால் சேவையில் மற்றும் சம்பந்தம்,
தொடர்பில் தடை ஏற்படுகிறது. எனவே, தேகத்தின் பழைய
சமஸ்காரங்களில் இருந்து எதுவரை வைராக்கியம் வரவில்லையோ, அதுவரை
எல்லையற்ற வைராக்கியம் சதா இருக்காது என்பதை ரிசல்ட்டில்
பார்த்தார்கள். எங்கே எதன் மீதாவது கவர்ச்சி உள்ளதோ, அங்கே
வைராக்கியம் இருக்க முடியாது. நான் என்னுடைய பழைய சமஸ்காரம்
மற்றும் வீணான சமஸ்காரத்தில் இருந்து விடுபட்டு இருக்கின்றேனா?
என்று சோதனை செய்யுங்கள். வைராக்கிய விருத்தியுடன் இருக்க
வேண்டும் என்று முயற்சியும் செய்கின்றார்கள். எவ்வளவு தான்
முயற்சி செய்தாலும், சமஸ்காரமானது சிலரிடம் அல்லது
பெரும்பான்மையினரிடம் ஏதாவது ரூபத்தில் அப்படி தீவிரமாக உள்ளது,
அது தன் பக்கம் இழுக்கிறது. எனவே, முதலில் பழைய சமஸ்காரத்தின்
மீது வைராக்கியம் வரவேண்டும். சமஸ்காரம் விரும்பாமலேயே
வெளிப்படுகிறது, ஏன்? நீங்கள் விரும்பவில்லை, ஆனால்,
சூட்சுமத்தில் சமஸ்காரங்களை எரிக்கவில்லை. ஆங்காங்கே
அம்சமாத்திரத்தில் தங்கியுள்ளன, மறைந்துள்ளன, அது நேரம்
வரும்பொழுது நீங்கள் விரும்பா மலேயே வெளிப்படுகின்றன. பிறகு,
விரும்பவில்லை, ஆனால், என்ன செய்வது, நடந்துவிட்டது, நடந்து
விடுகிறது, . . . என்று கூறுகின்றீர்கள். இதைச் சொல்வது யார் -
தேக உணர்வா அல்லது ஆத்ம உணர்வா?
சமஸ்காரங்கள் மீது வைராக்கிய விருத்தி கொண்டு வருவதில்
பலவீனங்கள் உள்ளன என்பதை பாப்தாதா பார்த்தார்கள்.
அழித்துள்ளீர்கள், ஆனால், அம்சம் கூட இருக்கக்கூடாது, அப்படி
அழிக்க வில்லை, மேலும், எங்கு அம்சம் உள்ளதோ, அங்கு வம்சம்
இருக்கும். இன்று அம்சம் உள்ளது, சமயத்திற்கேற்ப வம்சமாக
ஆகிவிடுகிறது. பரவசம் (சமஸ்காரத்தின் வசம்) ஆக்கிவிடு கிறது.
சொல்லும்போது அனைவரும் என்ன சொல்கின்றீர்கள்? தந்தை எப்படி
ஞானம் நிறைந்து இருக்கின்றாரோ, அப்படி நானும் ஞானம் நிறைந்து
இருக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள். ஆனால், எப்பொழுது
சமஸ்காரத்தின் யுத்தம் நடக்கிறதோ, அப்பொழுது ஞானம் நிறைந்தவராக
(நாலெட்ஜ்ஃபுல்) இருக்கின்றீர்களா அல்லது ஞானத்தை இழுப்பவராக (நாலெட்ஜ்
புல்) இருக்கின்றீர் களா? என்னவாக இருக்கின்றீர்கள்? ஞானம்
நிறைந்தவர் என்பதற்கு பதிலாக ஞானத்தை இழுப்பவராக
ஆகிவிடுகிறீர்கள். அந்த சமயம் யாரிடம் கேட்டாலும் என்ன
சொல்வார்கள்? ஆம், நடந்திருக்கக் கூடாது, செய்திருக்கக் கூடாது
என்று நானும் புரிந்திருக்கிறேன், ஆனால், நடந்துவிடுகிறது என்று
சொல்வார்கள். எனில், ஞானம் நிறைந்தவராக ஆகியிருக்கின்றீர்களா
அல்லது ஞானத்தை இழுப்பவராக ஆகியிருக்கின்றீர்களா? (நாலெட்ஜ்
புல் என்றால் ஞானத்தை இழுப்பவர்கள்) யார் நாலெட்ஜ்ஃபுல் ஆக
இருக்கின்றார்களோ, அவர்களுடன் எந்தவொரு சமஸ்காரம், சம்பந்தம்,
பொருள் யுத்தம் செய்ய முடியாது.
வைரவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள், வைரவிழா என்றால்
வைரம் ஆகுவது அதாவது எல்லையற்ற வைராக்கியம் உடையவர் ஆகுவது
என்று அர்த்தம். எந்தளவு சேவைக்கான ஊக்கம் உள்ளதோ, அந்தளவு
வைராக்கிய விருத்தியின் மீது கவனம் இல்லை. இதில் கவனக்குறைவு
உள்ளது. இருக்கிறது . . . நடக்கிறது . . . சரி ஆகிவிடும் . . .
நேரம் வரும்பொழுது சரியாகிவிடும் . . . என்று சொல்கின்றீர்கள்.
எனில், சமயம் உங்களுடைய ஆசிரியரா அல்லது பாபா ஆசிரியரா? யார்
ஆசிரியர்? ஒருவேளை, சமயம் வரும்போது மாற்றம் செய்தீர்கள்
என்றால், உங்களுடைய ஆசிரியராக சமயம் ஆகிவிட்டது. உங்களுடைய
படைப்பு உங்களுடைய ஆசிரியராக ஆகிவிட்டது - இது சரியா? எப்பொழுது
அத்தகைய சூழ்நிலை வருகிறதோ, அப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?
நேரம் வரும்பொழுது சரி செய்துவிடுவேன், மாறிவிடும். கவலைப்
படாதீர்கள், மாறிவிடும், நேரம் வரும்பொழுது முன்னேறிவிடுவேன்
என்று தந்தையையே தேற்று கிறீர்கள். சமயத்தை ஆசிரியராக ஆக்குவது
- இது மாஸ்டர் படைப்பாளராகிய உங்களுக்கு அழகாக உள்ளதா? நன்றாக
உள்ளதா? இல்லை. சமயம் படைப்பு ஆகும், நீங்கள் மாஸ்டர்
படைப்பாளர் ஆவீர்கள். எனவே, படைப்பு மாஸ்டர் படைப்பாளரின்
ஆசிரியர் ஆகுவது என்பது மாஸ்டர் படைப்பாளராகிய உங்களுக்கு அழகு
அல்ல. எனவே, இப்பொழுது பாப்தாதா சமயம் என்ன
கொடுத்திருக்கிறார்களோ, அதில் வைராக்கிய விருத்தியை எமர்ஜ்
செய்யுங்கள். ஏனெனில், சேவையினுடைய ஓட்டத்தில் வைராக்கிய
விருத்தி அழிந்துவிடுகிறது. சேவையில் குஷியும் கிடைக்கிறது,
சக்தியும் கிடைக்கிறது, பிரத்யட்ச பலனும் கிடைக்கிறது, ஆனால்,
எல்லையற்ற வைராக்கியம் அழிந்துபோவதும் சேவையில் தான் நடக்கிறது.
ஆகையினால், இப்பொழுது தனக்குள் இந்த வைராக்கிய விருத்தியை
விழித்தெழச் செய்யுங்கள். கல்பத்திற்கு முன்பும் கூட நீங்கள்
தான் ஆகியிருந்தீர்களா அல்லது வேறு யாரும் ஆகியிருந்தார்களா?
நீங்கள் தான் ஆகியிருந்தீர்கள் அல்லவா. மெர்ஜாகி மட்டும் உள்ளது,
அதை எமர்ஜ் செய்யுங்கள். எவ்வாறு சேவைக்கான திட்டத்தை எமர்ஜ்
செய்கின்றீர்கள், அப்பொழுதே வெற்றி கிடைக்கிறது அல்லவா. அதுபோல்
இப்பொழுது எல்லையற்ற வைராக்கிய விருத்தியை எமர்ஜ் செய்யுங்கள்.
எவ்வளவு தான் சாதனங்கள் கிடைக்கட்டும், மேலும், சாதனங்களோ
உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகவே கிடைக்கப் போகின்றன, ஆனால்,
எல்லையற்ற வைராக்கிய விருத்திக்கான சாதனா (தவம்) மெர்ஜ்
ஆகிவிடக் கூடாது, எமர்ஜ் ஆகவேண்டும். சாதனம் மற்றும்
சாதனாவினுடைய சமநிலை இருக்க வேண்டும், ஏனெனில், போகப்போக இயற்கை
உங்களுக்கு பணி செய்பவர் ஆகிவிடும். மரியாதை கிடைக்கும்,
சுயபெருமை கிடைக்கும். ஆனால், அனைத்தும் கிடைத்த போதிலும்
வைராக்கிய விருத்தி குறைந்து விடக்கூடாது. எல்லையற்ற வைராக்கிய
விருத்தியின் வாயுமண்டலத்தை தனக்குள் அனுபவம் செய்கின்றீர்களா
அல்லது சேவையில் பிஸி ஆகிவிட்டீர்களா? எவ்வாறு உலகத்தினருக்கு
சேவையினுடைய பிரபாவம் தென்படுகிறது அல்லவா. அதுபோல் எல்லையற்ற
வைராக்கிய விருத்தியின் பிரபாவம் தென்பட வேண்டும். ஆரம்பத்தில்
உங்கள் அனைவருடைய ஸ்திதி எப்படி இருந்தது? கராச்சியில்
எப்பொழுது இருந்தீர்களோ, அப்பொழுது வெளி சேவைகள் எதுவும்
கிடையாது, சாதனங்கள் இருந்தன, ஆனால், எல்லையற்ற வைராக்கிய
விருத்தியின் வாயு மண்டலம் சேவையை அதிகப்படுத்தியது. யாரெல்லாம்
வைரவிழா கொண்டாடுபவர்களோ, அவர்களிடத்தில் ஆதி சமஸ்காரங்கள்
உள்ளன, இப்பொழுது மெர்ஜ் ஆகிவிட்டன. இப்பொழுது மீண்டும் இந்த
விருத்தியை எமர்ஜ் செய்யுங்கள். ஆதி இரத்தினங்களின் எல்லையற்ற
வைராக்கிய விருத்தி ஸ்தாபனை செய்தது, இப்பொழுது புது உலகத்தின்
ஸ்தாபனைக்காக மீண்டும் அதே விருத்தி, அதே வாயுமண்டலத்தை எமர்ஜ்
செய்திடுங்கள். என்ன தேவை உள்ளது என்று கேட்டீர்களா?
சாதனமே இல்லை, ஆனால், எனக்கு வைராக்கியம் உள்ளது என்று
கூறினீர்கள் என்றால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? சாதனமும்
இருக்க வேண்டும் மற்றும் வைராக்கியமும் இருக்க வேண்டும். முன்பு
இருந்த சாதனங்கள் மற்றும் இப்பொழுது உள்ள சாதனங்களுக்கு இடையில்
எவ்வளவு வேறுபாடு உள்ளது? தவம் (சாதனா) மறைந்துவிட்டது மற்றும்
சாதனங்கள் பிரத்யட்சம் ஆகி விட்டன. நல்லது, சாதனங்களை பெரிய
உள்ளத்தோடு பயன்படுத்துங்கள், ஏனெனில், சாதனங்கள் உங்களுக்காகத்
தான், ஆனால், சாதனாவை (தவம்) மெர்ஜ் (அமிழ்த்திவிடுதல்)
செய்யாதீர்கள். சமநிலை முழுமையாக இருக்க வேண்டும். தாமரை
மலருக்கு சமமாக ஆகுங்கள், சாதனங்கள் இருந்த போதிலும் தாமரை
மலருக்கு சமமாக ஆகுங்கள் என்று உலகத்தினருக்கு கூறுகின்றீர்கள்.
சாதனங்கள் தீயவை கிடையாது, சாதனங்களோ, உங்களுடைய கர்மத்திற்கான,
யோகத்திற்கான பலன் ஆகும். ஆனால், வளர்ச்சிக்கான விசயம் ஆகும்.
சாதனத்தின் இல்லறத்தில், சாதனங்களுக்கு வசப்பட்டு மாட்டிக்
கொள்ளாமல் இருக்கின்றீர்களா? தாமரை மலருக்கு சமமாக
விடுபட்டவராக மற்றும் தந்தைக்கு அன்பான வராக இருக்க வேண்டும்.
பயன்படுத்தும் போதும் அதன் பிரபாவத்தில் வரக்கூடாது, விடுபட்டு
இருக்க வேண்டும். சாதனமானது, எல்லையற்ற வைராக்கிய விருத்தியை
மெர்ஜ் செய்துவிடக் கூடாது. இப்பொழுது உலகம் மிகவும் தீவிரமாக
சென்று கொண்டிருக்கிறது, ஆகையினால், இப்பொழுது உண்மையான
வைராக்கிய விருத்தியினுடைய அவசியம் உள்ளது. மேலும், அந்த
வாயுமண்டலத்தை உருவாக்கக் கூடியவர்கள் நீங்கள், முதலில்
தனக்குள், பிறகு, உலகத்தில் உருவாக்கக் கூடியவர்கள்.
வெள்ளிவிழா கொண்டாடக் கூடியவர்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
அலையை பரப்புவீர்கள் அல்லவா? நீங்களோ அனுபவிகள். துவக்கத்தின்
அனுபவம் உள்ளது அல்லவா! அனைத்தும் இருந்தது, எவ்வளவு முடியுமோ,
உள்நாட்டு நெய் (தேஷி கீ) சாப்பிடுங்கள் என்று கூறப்பட்டது,
ஆனாலும், எல்லையற்ற வைராக்கிய விருத்தி இருந்தது. உலகத்தினர்
உள்நாட்டு நெய்யை சாப்பிடுகிறார்கள், ஆனால், நீங்களோ
குடித்தீர்கள். நெய்யின் நதிகளைப் பார்த்தீர்கள். வைரவிழா
கொண்டாடுபவர்கள் விசேஷ காரியம் செய்ய வேண்டும் - தங்களுக்குள்
ஒன்று சேர்ந்திருக்கிறீர் கள், ஆதலால், உரையாடல் செய்ய வேண்டும்.
எவ்வாறு சேவைக்கான கூட்டம் போடுகிறீர்களோ, அதுபோல் இதற்கான
கூட்டம் போடுங்கள். ஒரு நொடியில் அசரீரி ஆகி விடவேண்டும் என்று
விரும்புகின்றீர்கள் - அதற்கான அஸ்திவாரம் இந்த எல்லையற்ற
வைராக்கிய விருத்தி ஆகும், இல்லையெனில், எவ்வளவு தான் முயற்சி
செய்தாலும், ஒரு நொடியில் ஆக முடியாது. யுத்தத்திலேயே
கழிந்துவிடும். எங்கு வைராக்கியம் உள்ளதோ, அந்த வைராக்கியம்
தகுதியான நிலம் ஆகும், அதில் என்ன போடுகின்றீர்களோ, அதன் பலன்
உடனடியாக வெளிப்படுகின்றது. எனவே, என்ன செய்ய வேண்டும்? நாமும்
இப்பொழுது வைராக்கிய விருத்தியைக் கொண்டு வரவேண்டும் என்று
அனைவருக்கும் உணர்வு ஏற்பட வேண்டும். நல்லது. என்ன செய்ய
வேண்டும் என்பது புரிந்ததா? சுலபமா அல்லது கடினமா? கொஞ்சம்
கொஞ்சம் கவர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா? சாதனம் தன் பக்கம்
கவர்ச்சிக்காதா?
இப்பொழுது பயிற்சி வேண்டும் - எப்பொழுது விரும்புகின்றீர்களோ,
எங்கு விரும்புகின்றீர்களோ, எப்படி விரும்புகின்றீர்களோ - அங்கே
ஸ்திதியை ஒரு நொடியில் நிலைநிறுத்த முடிய வேண்டும். சேவையில்
வரவேண்டும் என்றால் சேவையில் வரவேண்டும். சேவையில் இருந்து
விடுபட வேண்டும் என்றால் விடுபட்டு விடவேண்டும். சேவை நம்மை
இழுக்கின்றது, சேவை இல்லாமல் இருக்கவே முடியாது, இப்படி
இருக்கக்கூடாது. எப்பொழுது விரும்பிகின்றீர்களோ, எப்படி
விரும்புகின்றீர்களோ, வில் பவர் (மனோ சக்தி) வேண்டும். மனோசக்தி
இருக்கின்றதா? நிறுத்து என்றால் நின்று விடவேண்டும். நீங்கள்
புள்ளி வைக்கின்றீர்கள், ஆனால், கேள்விக்குறியாக ஆகிவிடுகிறது,
இப்படி இருக்கக்கூடாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புள்ளி
கூட இல்லை, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்ன
விரும்புகின்றீர்களோ, அதை நடைமுறையில் செய்ய முடியவேண்டும்.
விரும்புகின்றீர்கள் ஆனால், ஆகுவது கடினமாக இருக்கிறது என்றால்
இதை என்னவென்று சொல்லலாம்? மனோசக்தி இருக்கின்றதா அல்லது சக்தி
மட்டும் இருக்கின்றதா? வீணானது முடிந்துவிட வேண்டும் என்று
சங்கல்பம் செய்தீர்கள் என்றால் ஒரு நொடியில் முடிந்துவிட
வேண்டும்.
நாங்கள் யோகத்தில் அமர்கின்றோம், ஆனால், யோகத்திற்கு பதிலாக
யுத்தம் செய்கின்றோம் என்று சில குழந்தைகள் கூறுவதாக பாப்தாதா
சொன்னார்கள் அல்லவா. யோகி ஆகவில்லை, போர்வீரர்கள் ஆகின்றீர்கள்,
மேலும், யுத்தம் செய்வதற்கான சமஸ்காரம் ஒருவேளை வெகுகால மாக
இருக்கிறது என்றால் என்ன ஆகுவீர்கள்? சூரியவம்சத்தினர்
ஆகுவீர்களா அல்லது சந்திர வம்சத்தினர் ஆகுவீர்களா? நினைத்தேன்,
நடந்துவிட்டது. நினைப்பது மற்றும் நடப்பது, ஒரு நொடிக்கான வேலை
ஆகும். இதைத் தான் மனோசக்தி என்று கூறப்படுகிறது. மனோசக்தி
இருக்கிறது என்றால் மிகவும் நன்றாக திட்டம் போடுகின்றார்கள்,
ஆனால், திட்டம் போடுவதோ 10 மற்றும் நடைமுறையில் நடப்பதோ 5,
இவ்வாறு ஆகுவது இல்லை தானே? இதைச் செய்வேன், இது நடந்துவிடும்,
இது ஆகிவிடும் என்று மிக நன்றாக யோசிக்கின்றார்கள், ஆனால், நடை
முறையில் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, இப்பொழுது
அப்பேற்பட்ட மனோசக்தி இருக்க வேண்டும், அதாவது சங்கல்பம்
செய்யப்பட்டது மற்றும் கர்மத்தில் நடைமுறையில் வந்து விட்டது,
இவ்வாறு அனுபவம் ஏற்பட வேண்டும்.. இல்லையெனில், அமிர்தவேளையில்
எப்பொழுது தந்தையிடம் உரையாடல் செய்கின்றார்களோ, அப்பொழுது
இதைச் செய்வேன், அதைச் செய்வேன், . . . என்று மிக நல்ல, நல்ல
விசயங்களை சொல்கின்றார்கள், ஆனால், எப்பொழுது இரவு ஏற்படு கிறதோ,
அப்பொழுது ரிசல்ட் எப்படி உள்ளது? என்பது பார்க்கப்படுகிறது.
தந்தையை மிகவும் மகிழ்விக்கின்றார்கள், அவ்வளவு இனிமையிலும்
இனிமையான விசயங்களை சொல்கின்றார்கள், அவ்வளவு நல்ல நல்ல
விசயங்களை சொல்கின்றர்கள், அதைக் கேட்டு ஆஹா, என்னுடைய
குழந்தைகள்! என்று தந்தையும் மகிழ்ச்சி அடைந்துவிடுகின்றார்.
பாபா, நீங்கள் என்ன சொன்னீர் களோ, அது நடந்தே ஆகவேண்டும்,
நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள். இப்படி மிகவும்
நல்ல விசயங்களை சொல்கின்றார்கள். சிலரோ, நாங்கள் ஆகவில்லை
என்றால் யார் ஆவார்கள், பாபா கல்ப கல்பமாக நாங்கள் தான்
ஆகியிருந்தோம் என்று மகிழ்ச்சியுடன் தந்தைக்கு இவ்வாறு ஆறுதல்
கொடுக்கின்றார்கள். (ஹாலில் பின்னால் அமர்ந்திருப்பவர்களிடம்)
பின்னால் அமர்ந்திருப்பவர்கள் நல்ல முறையில் கேட்டுக் கொண்டு
இருக்கின்றீர்கள் அல்லவா?
முன்னால் இருப்பவர்களை விட முதலில் பின்னால் இருப்பவர்கள்
செய்வீர்களா? அமர்ந்திருப் பதோ பின்னால் ஆனால், அனைவரையும் விட
அருகாமையில், உள்ளத்தில் இருக்கின்றீர்கள். ஏன்? பிறருக்கு
வாய்ப்பு கொடுப்பது, இது சேவையாகிவிட்டது அல்லவா! சேவாதாரி சதா
தந்தையின் உள்ளத்தில் இருக்கின்றார்கள். நாமும் ஒருவேளை
தாதிகளாக இருந்திருந்தால் கொஞ்சம் . . . என்று ஒருபொழுதும்
இவ்வாறு நினைக்க வேண்டாம். ஆனால், எதிரில் இருப்பதென்ன,
உள்ளத்தில் இருக்கின்றீர்கள். மேலும், உள்ளமும் சாதாரண உள்ளம்
அல்ல, சிம்மாசனம் ஆகும். எனவே, சிம்மாசனதாரிகள் ஆவீர்கள் அல்லவா.
நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் சரி, இந்த மூலையில்
அமர்ந்திருக்கின்றீர்களோ, கீழே அமர்ந்திருக்கின்றீர்களோ,
கேபினில் அமர்ந்திருக்கின்றீர்களோ . . . ஆனால், தந்தையின்
உள்ளத்தில் இருக்கின்றீர்கள். நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள சிம்மாசனதாரி, சிரேஷ்ட பாக்கியவான்
ஆத்மாக்களுக்கு, சதா எல்லையற்ற வைராக்கிய விருத்தி மூலம்
வாயுமண்டலத்தை உருவாக்கக் கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா
தன்னுடைய சிரேஷ்ட விசேஷத்தன்மைகளை காரியத்தில்
ஈடுபடுத்தக்கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா ஒரு தந்தையின் துணை
மற்றும் ஸ்ரீமத் என்ற கையை அனுபவம் செய்யக்கூடிய சமீபமான
ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
வரதானம்:
ஏக்விரதாவினுடைய இரகசியத்தை அறிந்து வரங்களை வழங்கும் வள்ளலை
திருப்திப்படுத்தக் கூடிய அனைத்து ஸித்தி சொரூபமானவர் ஆகுக.
வரங்களை வழங்கும் வள்ளல் தந்தையிடம் அளவிட முடியாத வரதானங்கள்
இருக்கின்றன. யார் எந்தளவு பெற விரும்பினாலும் நிறைத்துக்
கொள்ளுமளவு திறந்த களஞ்சியமாக இருக்கின்றார். அப்படிப்பட்ட
திறந்த களஞ்சியத்தின் மூலம் சில குழந்தைகள் சம்பன்னம்
ஆகின்றார்கள் மற்றும் சிலர் அவரவர் சக்திக்கேற்ப சம்பன்னம்
ஆகின்றார்கள். அனைவரையும்விட அதிகமாக பையை நிறைத்துக் கொடுப்பது,
கள்ளங்கபடமற்ற வரத்தை வழங்கும் வள்ளல் ரூபம் தான், அவரை மட்டும்
திருப்திபடுத்துவதற்கான விதியை அறிந்துகொண்டீர்கள் என்றால்,
அனைத்து ஸித்திகளும் (வெற்றி களும்) கிடைத்துவிடும். வரத்தை
வழங்கும் வள்ளலுக்கு ஒரு வார்த்தை அனைத்தையும் விட பிரியமானதாக
இருக்கின்றது - ஏக்விரதா (ஒருவரை மட்டும் நினைக்கும் விரதம்
இருப்பவர்). சங்கல்பம், கனவில் கூட இன்னொருவரை நினைப்பவராக
இருக்கக் கூடாது. எனக்கோ ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை என்பது
விருத்தியில் இருக்க வேண்டும், யார் இந்த இரகசியங்களை
அறிந்திருக்கின்றார்களோ, அவர்களுடைய பை வரதானங்களால்
நிறைந்திருக்கும்.
சுலோகன்:
மனம் மற்றும் வார்த்தை ஆகிய இரண்டினுடைய சேவைகளையும் இணைத்து
செய்தீர்கள் என்றால் இரட்டை பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.