20-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

அனேக விதமான மோதல்களுக்கான (சண்டை சச்சரவு) காரணம் மற்றும் அதற்கான நிவாரணம் என்ன?

பதில்:

தேக-அபிமானத்தில் வரும்போது அனேக விதமான மோதல்கள் நடக்கின்றன. மாயையின் கிரகச்சாரம் பிடித்துக் கொள்கிறது. ஆத்ம-அபிமானிகளாக ஆகுங்கள் சேவையில் ஈடுபடுங்கள் என்று பாபா கூறுகின்றார். நினைவு யாத்திரையில் இருந்தீர்கள் என்றால் கிரகச்சாரம் அழிந்து விடும்.

ஓம் சாந்தி. ஆன்மீக குழந்தைகளுக்கு ஸ்ரீமத் அளிப்பதற்காக அல்லது புரிய வைப்பதற் காக வந்துள்ளார். தந்தை நாடகத்தின் திட்டப்படி எல்லா காரியங்களும் நடக்க வேண்டும் என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கிறது. இந்த பாரதத்தை இராவணபுரியிலிருந்து விஷ்ணுபுரியாக ஆக்க வேண்டும். இப்போது பாபாவும் மறை முகமாக இருக்கின்றார். படிப்பும் மறைமுகமாக இருக்கிறது, நிறைய சேவை நிலையங்கள் இருக் கின்றன, சிறிய-பெரிய கிராமங்களில் சிறியதும்- பெரியதுமான சேவை நிலையங்கள் இருக்கின்றன மேலும் குழந்தைகளும் அதிகமாக இருக்கிறார்கள். இப்போது குழந்தைகள் சவால் விட்டுள்ளார் கள் மேலும் எழுதவும் கூட வேண்டும், ஏதாவது புத்தகம் உருவாக்கினீர்கள் என்றால் நாங்கள் நம்முடைய பாரத பூமியை சொர்க்கமாக்கி விட்டுத் தான் விடுவோம் என்று அதில் எழுத வேண்டும். உங்களுக்கும் கூட நம்முடைய பாரத பூமி மிகவும் பிரியமானதாக இருக்கிறது ஏனென்றால் இந்த பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, சொர்க்கம் இருந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாரதம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது, இதனை சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது. பிரம்மா வாய் வம்சாவழியினர்களாகிய உங்களுக்குத் தான் ஞானம் இருக்கிறது. இந்த பாரதத்தை நாம் ஸ்ரீமத்படி கண்டிப்பாக சொர்க்கமாக்க வேண்டும். அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும், வேறு எந்த பிரச்சனைக்கான விசயமே இல்லை. இந்த கண்காட்சியின் சித்திரங்களின் மூலம் நாளேட்டில் இந்த சித்திரங்களை கொடுத்து விளம்பரம் செய்வது எப்படி என்று அமர்ந்து தங்களுக்குள் வழியை யோசிக்க வேண்டும், இதைப்பற்றி தங்களுக்குள் கலந்தாய்வு செய்ய வேண்டும். எப்படி காங்கிரஸ்காரர்கள், பாரதத்தை எப்படி மாற்றுவது? என்று தங்களுக்குள் சந்தித்து வழி காண்கிறார்கள். இவ்வளவு கிறிஸ்துவர்கள் போன்றவர்கள் ஆகி விட்டார்கள், அவர்களை நமக்குள் ஒன்று சேர்த்து சரி செய்ய வேண்டும் மற்றும் பாரதத்தில் அமைதி சுகத்தை எப்படி ஸ்தாபனை செய்வது என்று பேச வேண்டும். அந்த அரசாங்கத்தின் முயற்சி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் கூட பாண்டவ கவர்மெண்ட் என்று பாடப் பட்டுள்ளீர்கள். இது பெரிய ஈஸ்வரிய கவர்மெண்டாகும். உண்மையில் இதை தூய்மை யான ஈஸ்வரிய கவர்மெண்ட் என்றே சொல்லப்படுகிறது, பதீத-பாவனன் பாபா தான் தூய்மையற்ற குழந்தைகளை தூய்மையான உலகத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். இதை குழந்தைகள் தான் தெரிந்துள்ளார்கள். பாரதத்தின் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் தான் முக்கியமான தாகும். இது ருத்ர ஞான யக்ஞம் என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். ஈஸ்வரன் தந்தை, சிவனைத் தான் ருத்ரன் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பாபா வந்து ருத்ர ஞான யக்ஞத்தைப் படைத்தார் என்று பாடப்பட்டுள்ளது. அவர்கள் காலத்தை அதிகமாக சொல்- விட்டார் கள். அஞ்ஞான இருளில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது பாபா உங்களை விழிக்கச் செய்துள்ளார், பிறகு நீங்கள் மற்றவர்களை விழிக்கச் செய்ய வேண்டும். நாடகத்தின் திட்டப்படி நீங்கள் விழிப்புடன் இருக்க வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இந்த சமயம் வரை யார் எப்படி-எப்படி, எந்தெந்த அளவிற்கு முயற்சி செய்துள்ளார்களோ, அவ்வளவு தான் கல்பத்திற்கு முன்னால் கூட செய்திருந்தார்கள். யுத்த மைதானத்தில் வீழ்ச்சி எழுச்சி என்பது நடக்கத் தான் செய்கிறது. சில நேரங்களில் மாயையின் வேகம் அதிகமாகி விடுகிறது, சில நேரங்களில் ஈஸ்வரிய குழந்தை களின் வேகம் அதிகமாகி விடுகிறது. சில நேரங்களில் சேவை மிக நன்றாக நடக்கிறது. சில நேரங் களில் ஆங்காங்கே குழந்தைகளிடத்தில் மாயையின் தடை ஏற்பட்டு விடுகிறது. மாயை ஒரேயடி யாக மயக்கமுறச்செய்து விடுகிறது. யுத்த மைதானம் அல்லவா. இராவணன் மாயை இராமனின் குழந்தைகளை மயக்கமுறச் செய்து விடுகிறது. லஷ்மணனின் கதை கூட இருக்கிறது அல்லவா.

மனிதர்கள் அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஈஸ்வரிய சம்பிரதாயத்தைச் சேர்ந்த நீங்கள் தான் சொல்கிறீர்கள், யாருக்கு ஞான சூரியன் கிடைத்திருக்கிறாரோ மற்றும் விழித்துள்ளார்களோ, அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். இதில் ஒருவர் மற்றவருக்கு சொல்வதற்கும் கூட எந்த விசயமும் இல்லை. உண்மையில் ஈஸ்வரிய சம்பிரதாயத்தைச் சேர்ந்த நாம் விழித்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மீதமுள்ள மற்ற அனைவரும் உறங்கிக் கொண்டிருக் கிறார்கள். பரமபிதா பரமாத்மா குழந்தை களுக்கு ஆஸ்தியை கொடுக்க வந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாது. பாபா பாரதத்தில் தான் வருகின்றார் என்பதை முற்றிலும் மறந்து விட்டார்கள். வந்து பாரதத்தை சொர்க்கத்தின் எஜமானனாக மாற்றுகின்றார். பாரதம் சொர்க்கத்தின் எஜமானனாக இருந்தது, இதில் எந்த சந்தேகமும் இல்லை. பரமபிதா பரமாத்மாவின் பிறவியும் இங்கு தான் நடக்கிறது. சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள் அல்லவா. எனவே கண்டிப்பாக அவர் வந்து ஏதாவது செய்திருப்பார் அல்லவா. கண்டிப்பாக வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார் என்று புத்தி சொல்கிறது. பிரேரணையின் (தூண்டுதல்) மூலம் ஸ்தாபனை நடக்குமா என்ன. குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கே இராஜயோகம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நினைவு யாத்திரை பற்றி புரிய வைக்கப் படுகிறது. பிரேரணையின் மூலம் சப்தம் எதுவும் எழுவதில்லை. சங்கரரின் பிரேரணை கிடைக்கிறது, ஆகையினால் தான் யாதவர்கள் ஏவுகணைகள் போன்றவற்றை உருவாக்கு கிறார்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இதில் பிரேரணையின் விசயம் எதுவுமே இல்லை. இந்த நாடகத்தில் அவர்களுடைய நடிப்பு ஏவுகணைகள் போன்ற வற்றை தயாரிப்பது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். பிரேரணையின் விசயம் கிடையாது. நாடகத்தின் படி வினாசம் நடக்கத் தான் வேண்டும். மகாபாரத சண்டையில் ஏவுகணை பயன்படுத்தப் பட்டது என்று பாடப் பட்டுள்ளது. எனவே எது கடந்ததோ அது மீண்டும் நடக்கும். நாங்கள் பாரதத்தில் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வோம், அங்கே ஒரு தர்மம் இருக்கும் என்று நீங்கள் உத்திரவாதம் அளிக்கின்றீர்கள். அனேக தர்மங்கள் வினாசம் ஆகும் என்று நீங்கள் எழுதுவதில்லை. சொர்க்கம் ஸ்தாபனை ஆகிறது என்றால் மற்ற தர்மங்கள் எதுவும் இருப்பதில்லை என்று சித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்போது உங்களுக்குப் புரிய வருகிறது. அனைத்திலும் பெரிய நடிப்பு சிவனுக்கும், பிரம்மாவிற்கும் மற்றும் விஷ்ணுவிற்குமாகும். பிரம்மா விலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா - இது மிகவும் ஆழமான விசயங்களாகும். விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக எப்படி ஆகின்றார், பிரம்மா விலிருந்து பிறகு விஷ்ணுவாக எப்படி ஆகின்றார், என்பது புத்திசாலி குழந்தைகளின் புத்தியில் உடனே வந்து விடுகிறது. தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக ஆகத்தான் செய்கிறார் கள். ஒருவருடைய விசயம் இல்லை. இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர் கள். உலகத்தில் ஒரு மனிதர் கூட புரிந்து கொள்வதில்லை. லஷ்மி - நாராயணன் மற்றும் விஷ்ணுவின் பூஜை கூட செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு விஷ்ணுவின் இரண்டு ரூபம் தான் லஷ்மி-நாராயணன், அவர்கள் புதிய உலகத்தில் இராஜ்யம் செய்கிறார்கள் என்பது தெரிவதில்லை. மற்றபடி 4 கைகளையுடைய மனிதன் யாரும் இல்லை. சூட்சும வதனத்தில் குடும்ப மார்க்கத்தின் குறிக்கோளை காட்டுகிறார்கள். இந்த முழு உலகத்தின் வரலாறு-புவியியல் எப்படி சுற்றுகிறது, என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. தந்தையையே தெரிந்திருக்கவில்லை எனும்போது தந்தையின் படைப்புகளை எப்படி தெரிந்து கொள்ள முடியும். பாபா தான் படைப்பினுடைய முதல்-இடை- கடைசியின் ஞானத்தைக் கூறுகின்றார், ரிஷிகளும் முனிவர்களும் கூட எங்களுக்குத் தெரியாது என்று தான் சொன்னார்கள். தந்தையை தெரிந்து கொண்டார்கள் என்றால் படைப் பினுடைய முதல்-இடை- கடைசியையும் தெரிந்து கொள்வார்கள். நான் கல்பத்தில் ஒரு முறை மட்டுமே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கும் முழு ஞானத்தையும் புரிய வைக்கின்றேன் பிறகு வருவதே இல்லை என்று பாபா கூறுகின்றார். என்னை சங்கமயுகத்தில் தான் அழைக் கிறார்கள். தூய்மையானது என்று சத்யுகத்தையும் தூய்மையற்றதை கலியுகம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கண்டிப்பாக தூய்மையற்ற உலகத்தின் கடைசியில் தான் நான் வருவேன் அல்லவா. கலியுகத்தின் கடைசியில் வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆக்குகின்றேன். சத்யுக ஆரம்பத்தில் தூய்மை இருக்கிறது, இது சகஜமான விசயம் அல்லவா. தூய்மையற்றவர் களை தூய்மையாக்கும் தந்தை எப்போது வருவார் என்று மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாது. இப்போது கலியுகத்தின் கடைசி என்று தான் சொல்ல முடியும். ஒருவேளை கலியுகம் இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கிறது என்று சொன்னால் இன்னும் எவ்வளவு தூய்மையற்ற வர்களாக ஆவீர்கள். எவ்வளவு துக்கம் ஏற்படும். சுகம் இருக்கவே இருக்காது. எதுவுமே தெரியாத காரணத்தினால் முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். நீங்கள் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகள் தங்களுக்குள் ஒன்றாக சந்திக்க வேண்டும். படங்களை வைத்து நன்றாகப் புரிய வைக்க வேண்டும். இந்த சித்திரங்கள் போன்றவையும் நாடகத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த காலம் கடந்ததோ, அது அப்படியே நாடகம் நடந்து கொண்டி ருக்கிறது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளின் நிலை கூட சில நேரங்களில் கீழேயும், சில நேரங்களில் மேலானதாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது. மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். சில நேரங்களில் கிரகச்சாரம் பிடித்துக் கொள்கிறது என்றால் அதை அழிப்பதற்கு எவ்வளவு பிரயத்தனம் செய்கிறார்கள். பாபா அடிக்கடி கூறுகின்றார் - குழந்தைகளே, நீங்கள் தேக-அபிமானத் தில் வந்து விடுகிறீர்கள் ஆகையினால் தான் மோதல் நடக்கிறது. இதில் ஆத்ம-அபிமானிகளாக ஆக வேண்டும். குழந்தைகளிடத்தில் அதிக தேக-அபிமானம் இருக்கிறது. நீங்கள் ஆத்ம-அபிமானிகளாக இருந்தீர்கள் என்றால் பாபாவின் நினைவு இருக்கும் மற்றும் சேவையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். யார் உயர்ந்த பதவி அடைய வேண்டுமோ அவர்கள் எப்போதும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் பிறகு முயற்சியும் நடக்காது. பாபா தாரணை ஆக வில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். புத்தியில் நிற்பதில்லை, யாருக்கு தாரணை ஆகிறதோ அவர்களுக்கு குஷியும் அதிகம் ஏற்படுகிறது. சிவபாபா வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்கிறார்கள், இப்போது பாபா கூறுகின்றார், குழந்தைகளே நீங்கள் நல்ல விதத்தில் புரிந்து கொண்டு பிறகு மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். சிலர் சேவையிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். எந்த வினாடி கடந்து செல்கிறதோ, அது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது பிறகு அப்படியே திரும்பவும் நடக்கும் என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். வெளியில் சொற்பொழிவை கேட்பதற்கு நிறைய பலதரப்பட்ட புதியவர்கள் வருகிறார்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. கீதை, வேத சாஸ்திரங்களை பற்றி எவ்வளவு மனிதர்கள் சொற்பொழிவாற்று கிறார்கள், அவர்களுக்கு ஈஸ்வரன் தன்னுடைய மற்றும் படைப்பினுடைய முதல் இடை கடைசியின் இரகசியத்தை புரிய வைக்கின்றார் என்பது தெரியுமா என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். படைப்பவர் தான் வந்து முழு ஞானத்தையும் கூறுகின்றார். திரிகாலதரிசி யாக ஆக்குவது, என்பது பாபாவின் காரியமே ஆகும். சாஸ்திரங்களில் இந்த விசயம் இல்லை. இவை புதிய விசயங்களாகும். பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார், எங்கேயும் முதல்-முதலில் கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணரா அல்லது நிராகார சிவனா என்பதை புரிய வையுங்கள். இந்த விசயங்களை நீங்கள் புரொஜக்டரில் புரிய வைக்க முடியாது. கண்காட்சியில் படம் முன்னால் வைக்கப் பட்டிருக்கிறது, அதைப்பற்றி புரிய வைத்து நீங்கள் கேட்கலாம். இப்போது சொல்லுங்கள் கீதையின் பகவான் யார்? ஞானக்கடல் யார்? கிருஷ்ணரை சொல்ல முடியாது. தூய்மை, சுகம்-சாந்தியின் கடல், விடுவிப்பவர், வழிகாட்டி யார்? முதல்-முதலில் எழுதி வாங்க வேண்டும், படிவம் நிரப்ப வைக்க வேண்டும் பிறகு அனைவரிடத்திலும் உண்மையை எழுதி வாங்க வேண்டும்.

(சிட்டுக் குருவிகளின் ஒலி ஏற்பட்டது) பாருங்கள் எவ்வளவு சண்டையிடுகின்றன. இந்த சமயத்தில் முழு உலகத்திலும் சண்டைதான் நடக்கிறது. மனிதர்கள் கூட தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மனிதர்களிடத்தில் தான் புரிந்து கொள்ளும் புத்தி இருக்கிறது. 5 விகாரங்களும் மனிதர்களிடத்தில் இருக்கிறது என்று பாடப்பட்டுள்ளது. விலங்குகளின் விசயம் இல்லை. இது விகார உலகமாகும். இந்த உலகம் மனிதர் களுக்காகவே என்று சொல்லப்படுகிறது. கலியுகத்தில் அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் தெய்வீக சம்பிரதாய மாகும். இப்போது உங்களுக்கு இந்த வித்தியாசம் அனைத்தும் தெரியும். நீங்கள் நிரூபித்துச் சொல்லலாம். ஏணிப்படியில் கூட மிகவும் தெளிவாக காட்டப் பட்டுள்ளது. இதில் மிகத்தெளிவாக இருக்கிறது. இறங்கும் கலை மற்றும் ஏறும் கலையை பற்றிய முக்கியமான படம் ஏணிப்படியாகும். இந்த ஏணிப்படி மிகவும் நன்றாக இருக்கிறது, உண்மையில் இது தூய்மையற்ற உலகமாக இருக்கிறது, தூய்மையான உலகமாக இருந்தது என்று மனிதர்கள் முற்றிலும் நல்ல விதத்தில் புரிந்து கொள்ளும் படி இதில் அப்படி என்ன எழுதுவது அல்லது வரைவது? இங்கே அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள், ஒருவர் கூட தூய்மையானவர் இல்லை. இதைப்பற்றி இரவும்- பகலும் சிந்தனை செல்ல வேண்டும். ஆத்ம பிரகாஷ் குழந்தை எழுதுகிறார் - பாபா இந்த சித்திரத்தை உருவாக்கியுள்ளேன், பாபா கூறுகின்றார், ஞானத்தை சிந்தனை செய்து எந்த சித்திரம் வேண்டுமானாலும் உருவாக்குங் கள், ஆனால் ஏணிப்படி மிகவும் நன்றாக உருவாக வேண்டும். இதில் அதிகம் புரிய வைக்க முடியும். 84 பிறவிகளை முடித்து பிறகு முதல் பிறவி எடுக்கிறார்கள் பிறகு இறங்கும் கலை யிலிருந்து ஏறும் கலைக்கு செல்ல வேண்டும், இதில் ஒவ்வொருவருக்கும் சிந்தனை செல்ல வேண்டும். இல்லையென்றால் எப்படி சேவை செய்ய முடியும். சித்திரங்களை வைத்து புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். சத்யுகத்திற்குப் பிறகு ஏணிப்படியில் இறங்க வேண்டியிருக்கிறது. நாம் நடிகர்கள் என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இங்கிருந்து மாறி நேராக சத்யுகம் செல்வதில்லை, முதலில் சாந்திதாமத் திற்கு செல்ல வேண்டும். இந்த நாடகத்தில் தங்களை நடிகர்கள் என்று உங்களில் வரிசைக் கிரமமாகத் தான் புரிந்துள்ளீர்கள். உலகத்தில் யாருமே தங்களை நடிகர்கள் என்று சொல்ல முடியாது. நடிகர்களாக இருந்து கொண்டும் கூட நாடகத்தின் படைப்பாளர், டைரக்டர், நாடகத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்து கொள்ள இயலவில்லை என்றால் அவர்கள் முதல்தரமான முட்டாள்கள் ஆவர் என்றும் நாம் எழுதுகிறோம். இது பகவானுடைய மகா வாக்கியமாகும். சிவபகவானுடைய மகாவாக்கியம் பிரம்மாவின் உடலின் மூலம் ஆகும். ஞானக்கடல் அந்த நிராகாரமானவர் ஆவார்,அவருக்கு தன்னுடைய சரீரம் இல்லை. மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய யுக்திகளாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த போதை இருக்க வேண்டும், நாம் யாரையும் நிந்தனை செய்கிறோமா என்ன. இது சரியான விசயம் அல்லவா.யாரெல்லாம் பெரிய-பெரியவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருடைய சித்திரங்களையும் போடலாம். ஏணிப்படியை யாருக்கு வேண்டுமானாலும் காட்டலாம். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பாரதத்தில் சுகம்-சாந்தியை ஸ்தாபனை செய்ய அல்லது பாரதத்தை சொர்க்கமாக்குவதற்கு தங்களுக்குள் ஸ்ரீமத்படி இப்படி பாரதத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று கலந்தாய்வு செய்ய வேண்டும்.

2) சேவையில் முன்னேற்றம் காண அல்லது சேவையின் மூலம் உயர்ந்த பதவியை அடைவதற்கு ஆத்ம-அபிமானியாக இருப்பதற்கு உழைக்க வேண்டும். ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும்.

வரதானம்:

தனது சிரேஷ்ட தாரணைகளுக்காக செய்யும் தியாகத்தில் பாக்கியத்தின் அனுபவம் செய்யக்கூடிய உண்மையான தியாகி ஆகுக.

பிராமணர்களின் சிரேஷ்டமான தாரணை சம்பூரண தூய்மை ஆகும். இந்த தாரணைக் காகவே உயிரே போனாலும் தர்மத்தை விடக்கூடாது” என்ற மகிமை உள்ளது. எவ்வித சூழ் நிலையிலும் தன்னுடைய இந்த தாரணைக்காக எதைத் தியாகம் செய்ய வேண்டியது இருந்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டியதிருந்தாலும், எதிர்கொள்ள வேண்டியதிருந்தாலும் குஷி குஷியாக செய்யுங்கள். இதில் தியாகத்தை தியாகம் எனப் புரிந்து கொள்ளாமல் பாக்கியத்தின் அனுபவம் செய்யுங்கள். அப்பொழுதே உண்மையான தியாகி என்று சொல்ல முடியும். அத்தகைய தாரணை உடையவர்களே, உண்மையான தியாகி என்று அழைக்கப்படுகின்றார்கள்.

சுலோகன்:

சர்வ சக்திகளை தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பவர்களே மாஸ்டர் சர்வசக்திவான் ஆவார்கள்.