20-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தேகத்துடன் சேர்த்து இந்த கண்களால் பார்க்கக் கூடிய அனைத்தையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், ஏனென்றால் இவையனைத்தும் அழிந்து போகக் கூடியவை ஆகும்.

கேள்வி:
சத்யுகத்தில் இராஜ்ய பதவியின் இலாட்டரியை வெல்லக் (அடையக்) கூடிய முயற்சி எது?

பதில்:
சத்யுகத்தில் இராஜ்ய பதவியை அடைய வேண்டும் என்றால் தன் மீது முழுமையான பார்வையை (கவனத்தை) வையுங்கள். உள்ளுக்குள் எந்த பூதமும் இருக்கக் கூடாது. எந்த பூதமாவது இருந்தது என்றால் இலட்சுமியை மணமுடிக்க இயலாது. இராஜா ஆவதற்காக பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். 2. இங்கேயே தான் அழுகையிலிருந்து விடுபட்டவர் ஆக வேண்டும். எந்த தேகதாரியின் நினைவிலாவது பற்றுதலால் பலவீனமாகி விட்டீர்கள் என்றால் பதவி கீழானதாகி விடும். ஆகையால் தந்தையின் நினைவில் இருக்கக் கூடிய முயற்சியை செய்ய வேண்டும்.

பாடல்:
இன்றில்லையேல் நாளை. . .

ஓம் சாந்தி.
சிவபாபா ஓம் சாந்தி சொல்கிறார், பிறகு இவருடைய (பிரம்மாவுடைய) ஆத்மாவும் சொல்லும் - ஓம் சாந்தி. அவர் பரமபிதா, இவர் பிரஜாபிதா. இவருடைய ஆத்மா ஓம் சாந்தி என சொல்கிறது. குழந்தைகளும் ஓம் சாந்தி என சொல்கின்றனர். தன்னுடைய சுயதர்மத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! மனிதர் கள் தம்முடைய சுய தர்மத்தைக் கூட தெரிந்து கொள்ளவில்லை. ஓம் சாந்தி என்றால் நான் ஆத்மா சாந்த (அமைதி) சொரூப மானவன். ஆத்மா மனம், புத்தியுடன் இருப்பதாகும். இதனை மறந்து மனதின் பெயரை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். ஆத்மாவுக்கு அமைதி எப்படி கிடைக்கும் என கேட்டார்கள் என்றால் சொல்லுங்கள் - ஆஹா! இதுவும் ஒரு கேள்வியா? ஆத்மா சுயம் சாந்தி சொரூபமானது, சாந்தி தாமத்தில் வசிப்பது. அமைதி அங்கே கிடைக்கும் அல்லவா! ஆத்மா சரீரத்தை விட்டு சென்று விடும், அப்போது அமைதியில் இருக்கும். இந்த முழு உலகத்திலும் ஆத்மாக்கள் நடிப்பை நடிக்க வேண்டும். எப்படி அமைதியாக இருப்பார்கள். வேலை செய்ய வேண்டும். மனிதர்கள் அமைதிக் காக எவ்வளவு அலை கின்றனர். ஆத்மாக்களாகிய நம்முடைய சுயதர்மம் அமைதி என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இப்போது உங்களுக்கு ஆத்மாவின் சுயதர்மத்தைப் பற்றி தெரியும். தந்தை புரிய வைத்திருக்கிறார் - ஆத்மா புள்ளி போல இருக்கும். நிராகார பரமாத்மாய நமஹ என அனைவரும் சொல்கின்றனர். பரமபிதா என அவரைத்தான் சொல்லப்படுகிறது. அவர் நிராகாரமானவர். அவருக்கு சிவ பரமாத்மாய நமஹ என சொல்லப்படுகிறது. இப்போது உங்களின் புத்தியின் தொடர்பு அந்தப் பக்கம் உள்ளது. மனிதர்கள் அனைவரும் தேக அபிமானிகளாக உள்ளனர். அவர்களின் நினைவின் தொடர்பு தந்தையின் பக்கமாக இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து விஷயங்களும் புரிய வைக்கப்படுகிறது. பிரம்மா தேவதாய நமஹ என்று. என பாடவும் செய்கின்றனர், பிரம்மாவின் பெயரை எடுத்து இப்படி ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் - பிரம்மா பரமாத்மாய நமஹ. ஒருவர் மட்டுமே பரமாத்மா என சொல்லப்படுகிறார். அவர் படைப்பவர் ஆவார். நாம் சிவபாபாவின் குழந்தை கள் என நீங்கள் அறிவீர்கள். அவர் நம்மை பிரம்மாவின் மூலம் படைத்திருக்கிறார், தன்னுடையவர் களாக ஆக்கியிருக்கிறார். பிரம்மாவின் ஆத்மாவையும் தன்னுடையதாக ஆக்கியுள்ளார் - ஆஸ்தியை கொடுப்பதற்காக. என்னை நினைவு செய்வாயாக என பிரம்மாவின் ஆத்மாவுக்கும் கூட சொல்கிறார். பி.கு. க்களுக்கும் கூட சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என. தேகத்தின் அபிமானத்தை விட்டு விடுங்கள். இவை ஞானத்தின் விஷயங்கள் ஆகும். 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்போது இந்த சரீரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நோயாளியாக ஆகிவிட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு நோயற்றவர்களாக இருந்தீர்கள், சத்யுகத்தில் எந்த நோயும் இருக்க வில்லை. எப்போதும் ஆரோக்கியம் மிக்கவர் களாக இருந்தீர்கள். ஒரு போதும் திவால் ஆகவில்லை. இப்போதிலிருந்தே தன்னுடைய ஆஸ்தியை 21 பிறவிகளுக்கு எடுத்துக் கொள்கிறீர்கள், ஆகையால் திவால் ஆக முடியாது. இங்கேயோ திவால் ஆகிக் கொண்டே இருக்கின்றனர். குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக் கிறார் - பரமபிதா பரமாத்மா சிவாய நமஹ என பாடவும் செய்கின்றனர், பிரம்மாவை பரமாத்மா என சொல்வதில்லை. அவர் பிரஜாபிதா என சொல்லப்படுகிறார். தேவதைகள் சூட்சும வதனத்தில் இருக்கின்றனர். இந்த பிரஜாபிதாதான் பிறகு சென்று பரிஸ்தாவாக ஆகிறார் என்பது யாருக்கும் தெரியாது. சூட்சுமவதனவாசி ஆகிறார் அதாவது சூட்சும தேகதாரி. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என இப்போது தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார். நீங்களும் நிராகாரமானவர்கள், நானும் நிராகாரமாக இருக்கிறேன். என்னை மட்டும் நினைவு செய்ய வேண்டும், மற்ற தேகதாரிகள் அனைவரிட மிருந்தும் புத்தியின் தொடர்பை நீக்க வேண்டும். தேகத்தையும் சேர்த்து இந்த கண்களால் பார்க்கக் கூடிய அனைத்தும் அழியப் போகின்றன. பிறகு நீங்கள் சாந்தி தாமத்தின் வழியாக சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும். அந்த சுகதாமம் அல்லது கிருஷ்ணபுரியின் மீதுதான் உங்களின் விருப்பம் உள்ளது. ஆக தந்தை சொல்கிறார் - சாந்தி தாமத்தையும் சுகதாமத்தையும் நினைவு செய்யுங் கள். சத்யுகத்திலும் கூட தூய்மை, சுகம், அமைதி இருக்கும், ஆனால் அதனை சாந்திதாமம் என சொல்ல மாட்டோம். கர்மங் களை அனைவரும்தான் செய்ய வேண்டும். இராஜ்யம் செய்ய வேண்டும். சத்யுகத்திலும் கூட கர்மங்கள் செய்கின்றனர், ஆனால் அவை பாவ கர்மங்கள் ஆவ தில்லை, ஏனென்றால் அங்கே மாயையே இருப்பதில்லை. இது சகஜமான புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பிரம்மாவின் பகல் இருக்கிறது, பகலில் அடிகள் வாங்குவ தில்லை (தவறுகள் நடப்பதில்லை). இரவின் அந்தகாரத்தில் அடிகள் வாங்கப்படுகின்றன (தவறு நடைபெறு கிறது). ஆக அரைக் கல்பம் பக்தி, பிரம்மாவின் இரவு. அரைக் கல்பம் பிரம்மாவின் பகல். பாபா சொல்லியிருக்கிறார் - ஒரு இடத்தில் 6 மாதங்கள் பகலாகவும், 6 மாதங்கள் இரவாகவும் இருக்கும். ஆனால் அந்த விஷயம் சாஸ்திரங்களில் பாடப் படுவ தில்லை. இந்த பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு பாடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இரவு என ஏன் சொல்வதில்லை? அங்கே அவருக்கு இந்த ஞானமே இருப்பதில்லை. பிராமணர் களுக்குத் தெரியும் - பிரம்மா மற்றும் பிரம்மாகுமார், குமாரிகளின் இந்த எல்லைக்கப்பாற்பட்ட பகல் மற்றும் இரவு. சிவபாபாவின் பகல் மற்றும் இரவு என சொல்ல மாட்டார்கள். அரைக் கல்பம் நம்முடைய பகல் பிறகு அரைக் கல்பம் இரவு என குழந்தைகள் அறிவார்கள். விளையாட்டும் அப்படித் தான் இருக்கிறது, இல்லற மார்க்கத்தவர்களைப் பற்றி சந்நியாசி களுக்குத் தெரியாது. அவர்கள் துறவற மார்க்கத்தவர்கள். அவர்களுக்கு சொர்க்கம் மற்றும் நரகத்தின் விசயங்கள் தெரியாது. சொர்க்கம் எங்கிருந்து வந்தது என அவர்கள் சொல்கின்றனர், ஏனென்றால் சாஸ்திரங்களில் சத்யுகத்தையும் கூட நரகமாக ஆக்கி விட்டனர். இப்போது தந்தை இனிமை யிலும் இனிமையான விசயங்களை சொல்கிறார். குழந்தைகளே, நான் நிராகாரமான ஞானக் கடலாக இருக்கிறேன் என சொல்கிறார். ஞானத்தைக் கொடுக்கக் கூடிய என்னுடைய நடிப்பு இப்போது வெளிப்படுகிறது. தந்தை தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில் என்னுடைய ஞானம் வெளிப்படுவதில்லை (இமர்ஜ் ஆவ தில்லை). அப்போது பக்தி மார்க்கத்தின் பழக்க வழக்கம் நடைபெறுகிறது. டிராமாவில் உள்ளபடி எந்த பாவனையில் வழிபாடு நடக்கிறதோ அதன் சாக்ஷ்த்காரம் செய்ய கடமைப்பட்டுள்ளேன். அச்சமயம் என் ஆத்மாவில் ஞானத்தின் பாகம் வெளிப்படுவதில்லை. இது இப்போது தான் வெளிப்படுகிறது. எப்படி உங்களுடைய 84 பிறவிகளின் (ரீல்) பதிவு நாடகத்தில் நிரம்பியிருக் கிறதோ, என்னுடைய நடிப்பும் கூட என்னென்ன இருக்கிறதோ, எப்போது என பதிவாகி யிருக்கிறதோ அது அந்த சமயத்தில்தான் நடக்கிறது. இதில் சந்தேகத்தின் விஷயம் கிடையாது. ஒருவேளை எனக்குள் ஞானம் வெளிப்படும் என்றால் பக்தி மார்க்கத்தில் கூட அப்போது யாருக்காவது சொல்லியிருப்பேன். இலட்சுமி, நாராயணருக்கு அங்கே இந்த ஞானம் இருப்பதே இல்லை. நாடகத்தில் பதிவாகவே இல்லை. எங்களுக்கு இன்ன குரு சத்கதியைக் கொடுக்கிறார் என மனிதர்களுக்கு ஒரு வேளை யாராவது சொல்லலாம். ஆனால் குருமார்கள் சத்கதி எப்படி வழங்க முடியும்? அவர்களுக்கும் நடிப்பு உள்ளது. மேலும் சிலர் சொல்கின்றனர் - உலகம் மீண்டும் மீண்டும் நடக்கும், இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும் என்று. அவர்கள் பிறகு இராட்டையை வைத்து விட்டார்கள். சிருஷ்டியினுடையது தான் சக்கரம் ஆகும். அதிசயத்தைப் பாருங்கள், இராட்டையை சுற்றும்போது வயிற்றுக்குப் பூஜை நடக்கிறது (உணவு கிடைக்கிறது), இங்கே இந்த சிருஷ்டிச் சக்கரத்தை தெரிந்து கொள்வதன் மூலம் 21 பிறவிகளுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கிறது. பாபா சரியான விதத்தில் அமர்ந்து அர்த்தத்தைச் சொல்கிறார். மற்றபடி அனைவரும் அர்த்தமற்றதை சொல்கின்றனர். உங்களுடைய புத்தியின் பூட்டு திறந்து விட்டது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார், பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சுமவதன வாசிகள். பிறகு ஸ்தூல வதனத்தில் முதலில் இலட்சுமி-நாராயணர், பிறகு ஜகத் அம்பா, ஜகத்பிதா ஆவர். இவர்கள் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர்கள். மனிதர்கள்தான். பல புஜங்கள் முதலானவை எதுவும் கிடையாது. பிரம்மாவுக்கும் கூட இரண்டு புஜங்கள் உள்ளன. பக்தி மார்க்கத்தின் படங்களில் எவ்வளவு புஜங்களைக் காட்டி விட்டனர். யாருக்காவது எட்டு புஜங்கள் இருந்தன என்றால் எட்டு கால்களும் இருக்க வேண்டும். அப்படி இருப்பது கிடையாது. இராவணனுக்கு 10 தலைகளைக் காட்டுகின்றனர், அப்போது கால் களும் 20 கொடுக்க வேண்டும். இவையனைத்தும் பொம்மைகளின் விளையாட்டாகும். கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. இராமாயணக் கதையை சொல்லும்போது பலரும் அழுகின்றனர். தந்தை புரிய வைக்கிறார் - இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும், எப்போதி லிருந்து நீங்கள் வாம மார்க்கத்தில் (விகாரத்தில்) விழுந்தீர்களோ அப்போதிலிருந்து காமச் சிதையில் அமர்ந்து நீங்கள் கருப்பாகி விட்டீர்கள். இப்போது ஒரு பிறவியில் ஞானச் சிதையின் கங்கணத்தைக் கட்டுவதன் மூலம் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. அங்கே ஆத்ம அபிமானி களாக இருப்பார்கள். ஒரு பழைய உடலை விட்டு விட்டு வேறொரு புதிய உடலை எடுக்கின்றனர். அழுவது முதலான எந்த விஷயமும் இருக்காது. இங்கே குழந்தை பிறந்தது என்றால் வாழ்த்துக்களை தெரிவிக் கின்றனர். தாம் தூம் என கொண்டாடு வார்கள். நாளை குழந்தை இறந்து விட்டது என்றால் ஆஹா இறைவா ! எனக் கதறுவார்கள். துக்க தாமமாக இருக்கிறது அல்லவா! பாரதத்தில்தான் முழு விளையாட்டும் உள்ளது என அறிவீர்கள். பாரதம் அழிவற்ற கண்டமாகும். அதில்தான் சுகம், துக்கம், நரகம், சொர்க்கத்தின் ஆஸ்தி இருக்கிறது. சொர்க்கத்தின் இறை தந்தைதான் கண்டிப்பாக சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார். இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமாக உள்ளது என்றால் ஒருவருக்கு எப்படி நினைவு இருக்கும்? சொர்க்கம் மீண்டும் எப்போது இருக்கப் போகிறது என யாருக்கும் தெரியாது. கலியுகத்தின் ஆயுள் இன்னும் 40000 வருடங்கள் உள்ளன எனச் சொல்லி விடுகின்றனர். 5000 வருடங்களில் 84 பிறவிகள் என்றால் இன்னும் 40 ஆயிரம் வருடங்களில் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்? இப்போது குழந்தை களாகிய உங்களுக்குப் புரிய வருகிறது. நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். மற்றபடி யாருக்கு ஞானம் இல்லையோ அவர்கள் அஞ்ஞான உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருக் கின்றனர். அஞ்ஞானத்தின் காரிருள் சூழ்ந்த இரவாக இருக்கிறது அதாவது சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் கிடையாது. நாம் நடிகர்கள், சிருஷ்டி சக்கரத்திற்கு நான்கு பாகங்கள் உள்ளன. இந்த விஷயங்களை மனிதர்கள்தான் தெரிந்து கொள்வார்கள். இப்போது குழந்தை களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள், தந்தை ஞானம் நிறைந்தவர் என. அவரிடம் என்னென்ன சிறப்புகள் (சொத்துக்கள்) இருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு தானம் செய்கிறார். ஞானக்கடலிட மிருந்து நீங்கள் ஆஸ்தி பெறு கின்றீர்கள். தேகதாரிகளை நினைவு செய்யாதீர்கள் என பாபா எப்போதும் சொல்கிறார். நானும் கூட தேகத்தின் மூலம்தான் சொல்கிறேன். ஆனால் நீங்கள் நிராகாரமான என்னைத்தான் நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்து கொண்டே இருந்தால் தாரணையும் ஏற்படும், புத்தியின் பூட்டும் திறக்கும். 15 நிமிடங்கள் அல்லது அரை மணி நேரத்திலிருந்து தொடங்குங்கள், பிறகு அதனை அதிகரித்தபடி செல்லுங்கள். கடைசி நேரத்தில் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் நினைவுக்கு வரக் கூடாது, அதனால் தான் சந்நியாசிகள் அனைத்தையும் விட்டு விடு கின்றனர். தபஸ்யாவில் அமர்ந்து விடுகின்றனர், சரீரத்தை விடும் போது அக்கம் பக்கத்தின் வாயுமண்டலம் அமைதியாகி விடுகிறது - ஏதோ ஒரு நகரத்தில் யாரோ ஒரு மகா புருஷர் சரீரம் விட்டது போல. உங்களுக்கு இப்போது ஞானம் இருக்கிறது. ஆத்மா அழிவற்றது, அது (பிரம்மத்தில்) ஐக்கியமாக முடியாது. அவர்களிடம் இந்த ஞானம் கிடையாது.

ஆத்மா ஒருபோதும் விநாசம் அடைவதில்லை என தந்தை புரிய வைக்கிறார். அவருக்குள் இருக்கும் ஞானமும் கூட ஒரு போதும் அழியாது. அழிவில்லாத நாடகமாக உள்ளது. சத்யுகம், திரேதா, துவாபர, கலியுகம் . . . இந்த சக்கரம் சுற்றியபடி இருக்கிறது. நீங்கள் பின்னர் இலட்சுமி நாராயணராக ஆகி விடுகிறீர்கள், பிறகு மற்ற தர்மத்தவர்கள் கூட வரிசைக்கிரமமாக வரு கின்றனர். இறை தந்தை ஒருவர் தான். சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை வளர்ச்சி அடைந்த படி இருக்கின்றனர், வேறொரு மரம் உருவாக முடியாது. சக்கரமும் ஒன்றே தான். ஒருவரைத் தான் நினைவும் செய்கின்றனர். குரு நானக்கை நினைவு செய் கின்றனர், ஆனால் அவர் மீண்டும் தம்முடைய நேரத்தில் தான் வரவேண்டியுள்ளது. பிறப்பு இறப்பில் அனைவரும் வர வேண்டியுள்ளது. கிருஷ்ணர் வந்திருக்கிறார் என உலகினர் புரிந்து கொள்கின்றனர். சிலர் ஒருவரை ஏற்கின்றனர், வேறு சிலர் மற்றொருவரை ஏற்கின்றனர். பாபா புரிய வைக்கிறார் - குழந்தைகளே, யுக்தியுடன் புரிய வையுங்கள் - அனைவருடைய ஈஸ்வரனும் ஒரு நிராகார மானவர். கீதையில் பகவானுடைய மகா வாக்கியம் என இருக்கிறது. ஆக கீதை அனைத் திற்கும் தாய் தந்தையாக உள்ளது, ஏனென்றால் அதிலிருந்துதான் அனைவருக்கும் சத்கதி கிடைக்கிறது. தந்தை அனைவருக்கும் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர். பாரதம் அனைவரு டைய தீர்த்த ஸ்தலம் ஆகும். சத்கதி தந்தை மூலதான் கிடைக்கும். இது அவரின் பிறப்பிடம் ஆகும். அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். தந்தைதான் வந்து அனை வரையும் இராவணனின் இராஜ்யத்திலிருந்து விடுவிக் கிறார். இப்போது இது கொடுமையான நரகமாக உள்ளது.

ஓ தேகதாரி ஆத்மாக்களே, இப்போது திரும்பிச் செல்ல வேண்டும், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். எப்போதும் தேகதாரியின் நினைவில் சிக்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அழ வேண்டியிருக்கும். ஒருவரை நினைவு செய்ய வேண்டும், அங்கே வர வேண்டும். உங்களின் அழுகை 21 பிறவிகளுக்கு நின்று போய் விடும். யாராவது இறந்தார்கள், நீங்கள் அழத் தொடங்கினீர்கள் என்றால் பிறகு அழுகையிலிருந்து விடுபட்டவராக ஆக மாட்டீர்கள். யாருடைய நினைவிலாவது அதிர்ச்சி யடைந்து இறந்தீர்கள் என்றால் துர்க்கதி ஏற்பட்டு விடும். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும் அல்லவா! மாரடைப்பும் ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் அமர்ந்திருந்தாலும் எழுந்து நடமாடிக் கொண்டிருந் தாலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவும் கூட புத்தியில் பதிய வைக்கப் படுகிறது, ஏனென்றால் முழு நாளில் நினைவு செய்யாவிட்டால் குழுவாக அமர வைக்கப் படுகின்றனர். அனைவருடைய சக்தியும் ஒருமித்து வலுவடைகிறது. ஒருவேளை யாருடைய நினைவாவது புத்தியில் இருந்தது என்றால் பிறகு பிறவி எடுக்க வேண்டியிருக்கும். என்ன நடந்தாலும் நிலையாக இருக்க வேண்டும். தேகத்தின் உணர்வு இருக்கக் கூடாது. எந்த அளவு தந்தையை நினைவு செய்கிறீர்களோ அந்த நினைவு பதிவேட்டில் பதிவாகி விடும். உங்களுக்கு குஷியும் நிறைய இருக்கும். நாம் விரைவில் சென்று விடுவோம். சென்று சிம்மாசனத்தில் அமரப் போகிறோம். தந்தை எப்போதும் சொல்வார் - குழந்தைகளே, நீங்கள் ஒரு போதும் அழக் கூடாது. அழுதீர்கள் என்றால் நீங்கள் விதவைகள். நீங்கள் அனைத்து குணங்களிலும் நிரம்பிய வர்களாக இங்கேயே ஆக வேண்டும், பின்னர் அது அழிவற்றதாக ஆகிவிடும். முயற்சி தேவை. தன் மீது கவனம் இருக்க வேண்டும், எந்த ஒரு பூதம் இருந்தாலும் உயர் பதவியை அடைய முடியாது. நாரதர் பக்தராக இருந்தார் - இலட்சுமியை மணமுடிக்க விரும்பினார். ஆனால் முகத்தைப் பார்த்தால் குரங்கு போல இருந்தது..... நீங்கள் இலட்சுமியை மணமுடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்குள் 5 பூதங்கள் இருக்கின்றனவோ அவர்கள் எப்படி இலட்சுமியை மணமுடிக்க முடியும்? மிகவும் உழைக்க வேண்டும். மிகப் பெரிய இலாட்டரியை அடைய முடியும். நாம் இராஜாவாக கண்டிப்பாக ஆக முடியும் எனும்போது பிரஜைகளும் கூட இருப்பார்கள். ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வளர்ச்சியடைந்த படி இருக்கும். யார் வந்தாலும் முதன் முதலில் அவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். பதீத பாவனர், பரமபிதா பரமாத்மாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? கண்டிப் பாக தந்தை என சொல்ல வேண்டியிருக்கும். நல்லது, எழுதுங்கள். ஒரு பதீத பாவனரே அனைவரையும் தூய்மையாக்கக் கூடியவர். எழுத வைத்தால் பிறகு யாரும் பேச்சு மாற மாட்டார்கள். நீங்கள் இங்கே கேட்க வந்திருக்கிறீர்களா அல்லது சொல்ல வந்திருக்கிறீர்களா? என கேளுங்கள். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு நிராகாரர் அல்லவா! அவர் ஒருபோதும் ஆகார, சாகாரத்தில் வருவது கிடையாது. நல்லது, பிறகு பரமபிதாவுடன் என்ன சம்பந்தம்? அவர் சாகார பாபா, இவர் நிராகார பாபா. நாம் ஒரு தந்தையை நினைவு செய்கிறோம். நம்முடைய இலட்சியம் குறிக்கோள் இதுவாகும். இவர் மூலம் நாம் இராஜ்யத்தை அடைவோம். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எந்த தேகதாரியை நினைத்தும் புத்தியை சிக்கிக் கொள்ள விடக் கூடாது. நினைவின் பதிவேட்டை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு போதும் அழக் கூடாது.

2. தன்னுடைய சுயதர்மமான அமைதியில் நிலைத்திருக்க வேண்டும். அமைதிக்காக அலையக் கூடாது. அனைவரையும் இப்படி அலைவதிலிருந்து விடுவிக்க வேண்டும். சாந்தி தாமம் மற்றும் சுக தாமத்தை நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:
பணிவு மூலம் புது உலகத்தை உருவாக்கக்கூடிய விரக்தி மற்றும் அபிமானத்திலிருந்து விடுப்பட்டவர் ஆகுக.

ஒருபொழுதும் முயற்சியில் விரக்தி (மன உளைச்சல்) அடைந்தவர் ஆக வேண்டாம். செய்தாக வேண்டும், செய்தே தீர வேண்டும், வெற்றி மாலையில் என்னுடைய நினைவு தான் இருக்கிறது என்ற இந்த நினைவினால் வெற்றியடைந்தவர் ஆகுங்கள். ஒரு நொடி மற்றும் நிமிடத்திற்காக மன உளைச்சலுக்கு தனக்குள் இடம் அளிக்காதீர்கள். அபிமானம் மற்றும் விரக்தி - இந்த இரண்டும் மிகப்பெரிய பலசாலி ஆக விடாது. அபிமானம் இருப்பவர்களுக்கு அவமானத்தின் உணர்வு (ஃபலீங்) அதிகம் ஏற்படுகிறது, ஆகையால் இந்த இரண்டு வியங் களிலிருந்து விடுப்பட்டவர் ஆகி பணிவுடையவர் ஆகுங்கள், அப்பொழுது புது உலகத்தை உருவாக்குவதற்கான செயல் செய்துக் கொண்டேயிருங்கள்.

சுலோகன்:
உலக சேவையின் சிம்மாசனதாரி ஆகிவிட்டீர்கள் என்றால் இராஜ்ய சிம்மாசனதாரி ஆகிவிடலாம்.