20-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இந்த ஆன்மீக படிப்பை ஒரு பொழுதும் தவறவிடாதீர்கள். இந்த படிப்பினால் தான் உலக அரசாட்சி கிடைக்கும்.

கேள்வி:
எந்தவொரு நிச்சயம் உறுதியாக இருந்தது என்றால் படிப்பை ஒரு பொழுதும் தவற விட மாட்டார்கள்?

பதில்:
நமக்கு சுயம் பகவான் ஆசிரியர் ரூபத்தில் படிப்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த படிப்பினால் தான் நமக்கு உலக அரசாட்சியின் ஆஸ்தி கிடைக்கும். மேலும் உயர்ந்த பதவியும் கிடைக்கும். தந்தை நம்மை கூடவே அழைத்துச் செல்வார் என்ற நிச்சயம் இருந்தது என்றால் படிப்பை ஒரு பொழுதும் தவற விட மாட்டார்கள். நிச்சயமில்லாத காரணத்தினால் படிப்பின் மீது கவனம் இருப்பதில்லை, தவற விட்டு விடுகிறார்கள்.

பாடல்:
நமது தீர்த்தம் தனிப்பட்டது .. .. ..

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் கடந்த காலத்தின் சத்சங்கம் மற்றும் இப்போதைய சத்சங்கத்தின் அனுபவம் உடையவர்கள் ஆவார்கள். கடந்த காலம் அதாவது இந்த சத்சங்கத்தில் வருவதற்கு முன்பு புத்தியில் என்ன இருந்தது, மேலும் இப்பொழுது புத்தியில் என்ன இருக்கிறது. இரவு பகலுக்கான இந்த வித்தியாசம் தென்படக் கூடும். அந்த சத்சங்கங்களிலோ கேட்டுக் கொண்டு மட்டுமே இருப்பார்கள். உள்ளத்தில் எந்தவொரு ஆசையும் இருப்பதில்லை. சத்சங்கத்திற்குப் போய் சாஸ்திரங்களினுடைய இரண்டு வாக்குகள் கேட்க வேண்டி இருக்கும், அவ்வளவு தான். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். புத்தியில் உள்ளது ஆத்மாக் களாகிய நாம் பாப்தாதாவிற்கு முன்னால் அமர்ந்துள்ளோம். மேலும் அவரிடமிருந்து நாம் சொர்க் கத்தின் ஆஸ்தி பெறுவதற்காக ஞானம் மற்றும் யோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். எப்படி பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் நாம் வழக்கறிஞர் அல்லது இன்ஜினியர் ஆவோம் என்று புரிந்திருப்பார்கள். ஏதாவது ஒன்றல்லது மற்றொரு தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த பதவி அடைவோம். இந்த சிந்தனை ஆத்மாவிற்கு வருகிறது. இப்பொழுது நாம் படித்து இன்னாராக ஆவோம். சத்சங்கத்தில் என்ன பிராப்தி ஆகும் என்று எந்த ஒரு லட்சியமும் இருப்பதில்லை. அப்படியே யாருக்காவது ஆசை இருந்தாலும், அது அல்ப காலத்தினுடையதாக இருக்கும். சாது சந்நியாசிகளிடம் கிருபை புரியுங்கள், ஆசீர்வாதம் கொடுங்கள் என்று வேண்டுவார்கள். இந்த பக்தி அல்லது சத்சங்கம் ஆகியவை செய்து இதுவரையும் வந்து சேர்ந்துள்ளீர்கள். இப்பொழுது நாம் தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளோம். ஆத்மாவிற்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான ஒரே ஒரு விருப்பம் உள்ளது. அந்த சத்சங்கங்களில் ஆஸ்தி பெறுவதற்கான விஷயம் இருப்ப தில்லை. பள்ளிக் கூடம் அல்லது கல்லூரியில் கூட ஆஸ்தி பெறுவதற்கான விஷயம் இருப்பதில்லை. அவரோ கற்பிக்கக் கூடிய ஆசிரியர் ஆவார். இச்சமயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் ஆஸ்தி பெறும் விருப்பம் கொண்டு அமர்ந்துள்ளீர்கள். உண்மையில் தந்தை நமக்கு மீண்டும் சதா சுகத்தின் சுயராஜ்யத்தை அளிக்க பரந்தாமத்திலிருந்து வந்து விட்டுள்ளார். இது குழந்தைகளின் புத்தியில் அவசியம் இருக்கும் அல்லவா? இருப்பினும் தந்தைக்கு முன்னால் செல்வதால் ஞானத்தின் நல்ல அம்புகள் பதியும் என்று நினைப்பார்கள். ஏனெனில் அவர் சர்வசக்திவான் ஆவார். குழந்தைகள் கூட ஞான அம்பு எய்தக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் வரிசைக்கிரமமாக, முயற்சிக்கேற்ப. இங்கு தான் நேரடியாக கேட்கிறீர்கள். பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைப்பார்கள். வேறு எந்த சத்சங்கம் அல்லது கல்லூரியில் இது போல நினைக்க மாட்டார்கள். நாம் எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இந்த சிருஷ்டி சக்கரத்தை அறிந்து விட்டோம். அந்த சத்சங்கங்களிலோ ஜன்ம ஜன்மாந்திரமாக சென்று கொண்டே இருக்கிறார்கள். இங்கு ஒரே ஒரு முறையின் விஷயம் ஆகும். பக்தி மார்க்கத்தில் எதெல்லாம் செய்கிறீர்களோ, அது முடிவடைகிறது. அதில் எந்த சாரமும் இல்லை. ஆனாலும் கூட அல்ப காலத்திற்காக மனிதர்கள் எவ்வளவு தலையிலடித்துக் கொள்கிறார்கள். நமக்கு பாபா கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பாபா தான் புத்தியில் நினைவிற்கு வருவார். மேலும் தங்களது இழந்து விட்டிருக்கும் இராஜதானி நினைவிற்கு வந்து விடும். இப்பொழுது நாம் எந்த அளவிற்கு முயற்சி செய்வோம், பாபாவை நினைவு செய்வோம் மற்றும் ஞானத்தின் தாரணையில் இருப்போம், மற்றவர்களுக்கும் ஞானத்தை தாரணை செய்விப்போமோ, அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவோம். இதுவோ ஒவ்வொருவருடைய புத்தியிலும் உள்ளது அல்லவா? தந்தை இந்த பிரஜாபிதா பிரம்மா மூலமாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு தாதா (மூத்த சகோதரர்) என்றே கூறுவார்கள். சிவபாபா இவருக்குள் பிரவேசமாகி நமக்கு படிப்பித்துக் கொண்டி ருக்கிறார். முதலில் இந்த விஷயங்கள் நம்முடைய புத்தியில் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாம் கூட நிறைய சத்சங்கங்கள் ஆகிய வற்றிற்குச் சென்று கொண்டி ருந்தோம். ஆனால் பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக எப்பொழுது வந்து கற்பிக்கிறார் என்பது எண்ணத்தில் கூட இருக்கவில்லை. இப்பொழுது தந்தை மற்றும் சமயத்தையும் அறிந்திருக்கிறோம். புதிய உலகமான சொர்க்கத்தின் சுயராஜ்யம் மீண்டும் நினைவிற்கு வருகிறது. உள்ளுக்குள் குஷி இருக்கிறது. யாரை பகவான் என்று கூறுகிறோமோ அந்த எல்லையில்லாத தந்தை நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். பாபா பதீதபாவனராகவோ இருக்கவே இருக்கிறார். பிறகு ஆசிரியரின் ரூபத்தில் வந்து, நமக்கு கற்பிக்கிறார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகத்தில் வேறு யாரும் இந்த எண்ணத்துடன் அமர்ந்திருக்க மாட்டார்கள். நீங்கள் எல்லையில்லாத தந்தையின் நினைவில் அமர்ந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாம் 84 பிறவி களின் பாகத்தை முடித்து விட்டுத் திரும்பச் செல்கிறோம் என்ற அறிவு உள்ளுக்குள் இருக் கிறது. பிறகு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக தந்தை நமக்கு இராஜயோகத்தின் கல்வியை அளித்துக் கொண்டிருக்கிறார். இராஜயோகத்தின் கல்வியை அளித்து சொர்க்கத்தின் மகாராஜா, மகாராணியாக ஆக்குபவர் தந்தையைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது, இயலாத காரியம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குவதற்காக பாபா ஒரே ஒரு முறை வந்து கற்பிக்கிறார். குழந்தைகளாகிய நாம் தந்தை மூலமாக எல்லை யில்லாத சிருஷ்டியின் சுயராஜ்யத்தைப் பெறுவதற்காக படிப்பை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருக்கிறது. இலட்சியம், நோக்கத்தின் பலத்தினால் தான் படிக்கிறோம். நாம் எங்கு அமர்ந்துள்ளோம் என்பது இப்பொழுது இனிமையிலும் இனிமையான குழந்தை களின் புத்தியில் உள்ளது. மனிதர்களின் சிந்தனையோ எங்கெங்கோ சென்று கொண்டே இருக்கிறது. படிக்கும் நேரத்தில் படிப்பின் சிந்தனை, விளையாடும் நேரத்தில் விளையாட்டின் சிந்தனை இருக்க வேண்டும்.

நாம் எல்லையில்லாத தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதற்கு முன்னால் அறியாமல் இருந்தீர்கள். பகவான் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார் என்பது எந்தவொரு மனிதனுக்கும் தெரியாது. பல பறவிகளாக நாம் பக்தி செய்து கொண்டே வந்துள்ளோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த ஞானத்தை வேறு யாரும் கொடுக்க முடியாது. தந்தை வராதவரையும் உலகத்தின் அதிபதி தன்மையின் ஆஸ்தி எப்படி கிடைக்க முடியும்? இது யாருடைய புத்தியிலும் வருவதும் இல்லை. நாம் பகவானின் குழந்தைகள் ஆவோம். அவர் சொர்க்கத்தின் படைப்புகர்த்தா ஆவார். பிறகு நாம் சொர்க்கத்தில் ஏன் இல்லை. நரகத்தில் ஏன் துக்கத்துடன் இருக்கிறோம்? ஹே பகவான், ஹே பதீத பாவனரே என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் ஏன் துக்கமுற்று இருக்கிறோம் என்பது புத்தியில் வருவதில்லை. தந்தை குழந்தை களுக்கு துக்கம் கொடுக்கிறாரா என்ன? தந்தை சிருஷ்டியை குழந்தைகளுக்காகப் படைக்கிறார். துக்கத் திற்காக படைக்கிறாரா என்ன? இதுவோ ஆக முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்படி நடப்பவர்கள் ஆவீர்கள். எங்கோ அலுவலகம் அல்லது தொழில் ஆகிய வற்றில் உட்கார்ந்திருந்தாலும் கூட நமக்கு படிப்பிப்பவர் பகவான் தந்தை ஆவார் என்பதோ புத்தியில் இருக்கிறது அல்லவா? நாம் தினமும் அதிகாலை வகுப்பிற்குச் செல்ல வேண்டியுள்ளது. வகுப்பிற்கு செல்பவர்களுக்குத் தான் நினைவு வந்து கொண்டிருக்கும். மற்றபடி யார் வகுப்பிற்கே வருவதில்லையோ அவர்கள் கல்வியையும் கற்பிப்பவரையும் எப்படி புரிந்து கொள்ள முடியும்? இவை புதிய வியங்கள் ஆகும். இவற்றை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். புதிய உலகைப் படைக்கக் கூடிய எல்லையில்லாத தந்தை வந்து புது உலகத்திற்காக நமது வாழ்க்கையை வைரம் போல ஆக்குகிறார். எப்பொழுதிலிருந்து மாயையின் பிரவேசம் ஆகியதோ, நாம் சோழி போல ஆகிக் கொண்டே வந்துள்ளோம். கலைகள் குறைந்து கொண்டே போயிற்று, மாயை எப்படி சாப்பிட்டுக் கொண்டே வந்துள்ளது என்றால், நமக்கு எதுவுமே தெரியவில்லை. இப்பொழுது தந்தை வந்து குழந்தைகளை அஞ்ஞானம் என்ற உறக்கத்திலிருந்து எழுப்பி உள்ளார். அந்த உறக்கம் அல்ல. அறியாமை என்ற உறக்கத்தில் உறங்கி இருந்தோம். ஞானத்தை ஞானக்கடலானவர் தான் அளிக்கிறார். வேறு யாரும் கொடுக்க முடியாது. ஒரேயொரு நம்முடைய மிகவும் அன்பிற்குரிய தந்தை ஞானக்கடல், பதீத பாவனர் மட்டுமே கொடுக்க முடியும். இந்த வழி முறை (யுக்தி) மூலமாக தந்தை நம்மை பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது குழந்தைகள் அறிந்து விட்டுள்ளார்கள். ஹே பதீத பாவன பாபாவே! வாருங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். ஆனால் எப்படி வந்து பாவனமாக ஆக்குவார் என்பதை புரியாமல் இருக்கிறார்கள். பதீதபாவனரே என்று கூறிக் கொண்டே இருப்பதால் மட்டுமே, பாவனமாக ஒன்றும் ஆகி விட மாட்டார்கள்.

இச்சமயம் எல்லோருமே பதீதமாக (தூய்மையற்றவராக) ப்ரஷ்ட்டாச்சாரி (இழிந்த நிலையில்) இருக்கிறார்கள். ஏனெனில் (ப்ரஷ்ட்டாசாரத்தினால்) விகாரத்தினால் பிறக்கிறார்கள். அவர்கள் காரியங்கள் கூட அவ்வாறே செய்வார்கள். இதை எல்லையில்லாத தந்தை வந்து புரிய வைக்கிறார். நீங்கள் இங்கு நேரடியாக அமர்ந்து கேட்கும் பொழுது உங்களுடைய புத்தியின் யோகம் தந்தையுடன் கூட இருக்கிறது. பிறகு தீய சேர்க்கையில் செல்லும் பொழுது, நிறைய பேரை சந்திப்பது சூழ்நிலைகள் பற்றி கேட்பது என்று ஆகும் பொழுது, நேரடியாக சந்திக்கும் பொழுது இருந்த நிலை மாறி விடுகிறது. இங்கோ முன்னால் அமர்ந்துள்ளீர்கள். சுயம் ஞானக் கடல் பரமபிதா பரமாத்மா வந்து ஞான அம்புகளை எய்கிறார். எனவே மதுபனுக்கு மகிமை உள்ளது. மதுபனில் புல்லாங்குழல் (முரளி) வாசிக்கப்பட்டது என்று பாடவும் செய்கிறார் கள் அல்லவா? முரளியோ நிறைய இடங்களில் வாசிக்கப்படுகிறது. ஆனால் இங்கு முன்னால் அமர்ந்து புரிய வைக்கிறார். மேலும் குழந்தைகளே ஜாக்கிரதையாக இருங்கள். எந்த ஒரு தப்பும் தவறுமான சேர்க்கையில் இருக்காதீர்கள் என்று குழந்தைகளுக்கு எச்சரிக்கையும் கொடுக்கிறார். மக்கள் உங்களுக்கு தவறான விஷயங்களைக் கூறி பயமுறுத்தி இந்த படிப் பிலிருந்தே விடுவித்து விடுவார்கள். நல்ல சேர்க்கை உயர்த்தும், தீய சேர்க்கை வீழ்த்தும். இங்கு இருப்பது சத்தியமான தந்தையின் சேர்க்கை. நாம் ஒருவரிடம் மட்டுமே கேட்போம் என்று நீங்கள் வாக்குறுதி கூட கொடுக்கிறீர்கள். ஒருவருடைய கட்டளையை மட்டுமே ஏற்போம். உங்கள் அனைவருக்கும் தந்தை, ஆசிரியர், சத்குரு அந்த ஒரே ஒருவர் ஆவார். அங்கோ அந்த குருமார்கள் சாஸ்திரங்களை மட்டுமே கூறிக் கொண்டு இருப்பார்கள். புதிய விஷயம் ஒன்றும் கிடையாது. தந்தையின் அறிமுகம் கொடுக்கவும் முடியாது. ஞானத்தின் விஷயங்களையும் அறியாமல் இருக்கிறார்கள். எல்லோருமே நேத்தி நேத்தி - தெரியவில்லை, தெரியவில்லை, என்றபடியே வந்துள்ளார்கள். எங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பு பற்றித் தெரியாது.எப்போது தந்தை வருகிறாரோ, அப்போதே புரிய வைக்கிறார். அந்த கலியுக குருமார்களிலும் கூட வரிசைக்கிரமமாக உள்ளார்கள். ஒரு சிலருக்கோ இலட்சக் கணக்கான சீடர்கள் இருக்கிறார்கள். நம்முடைய சத்குருவோ ஒரே ஒருவர் ஆவார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இறப்பது ஆகியவற்றின் விஷயமே கிடையாது. இந்த சரீரமோ சிவபாபா வினுடையது அல்ல. அவரோ அசரீரி அமரர் ஆவார். நமது ஆத்மாவிற்குக் கூட அமரகதை கூறி அமரராக ஆக்கிக் கொண்டிருக்கிறார். அமரபுரிக்குக் கூட்டிக் செல்கிறார். பிறகு சுகதாமத் திற்கு அனுப்பி விடுகிறார். நிர்வாண தாமம் என்பதே அமரபுரி ஆகும். ஆத்மாக்களாகிய நாம் சரீரத்தை விட்டு விட்டு தந்தையிடம் செல்வோம் என்பது இப்பொழுது உங்களது புத்தியில் உள்ளது. பிறகு யார் எந்த அளவு முயற்சி செய்திருப்பாரோ அதற்கேற்ப பதவி அடைவார். வகுப்பின் டிரான்ஸ்ஃபர் - மாற்றம் ஏற்படுகிறது. நம்முடைய படிப்பின் பதவி இந்த மரண உலகத்தில் கிடைப்பதில்லை. இந்த மரண உலகம் பிறகு அமரலோகம் ஆகி விடும். நாம் சத்யுகம் திரேதாவில் 21 பிறவிகள் ஆட்சி புரிந்தோம். பிறகு துவாபர கலியுகத்தில் வந்தோம் என்பது இப்பொழுது உங்களுக்கு நினைவில் வந்தது. இப்பொழுது இது நம்முடைய கடைசி பிறவியாகும். பிறகு நாம் திரும்பிச் செல்வோம். முக்தி தாமம் வழியாகச் சென்று பிறகு சுகதாமத் திற்கு வருவோம். தந்தை குழந்தைகளை எவ்வளவு புத்துணர்வு பெறச் செய்கிறார். நாம் 84ன் சக்கரத்தில் வருகிறோம் என்பதை ஆத்மா புரிந்துள்ளது. நான் இந்த சக்கரத்தில் வருவ தில்லை என்று பரமாத்மா கூறுகிறார். எனக்குள் இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் உள்ளது. பதீத பாவனர் எல்லையில்லாத தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே அவர் எல்லையில்லாதவற்றைத் தானே பாவனமாக ஆக்கக் கூடியவராக இருப்பார் அல்லவா? எந்தவொரு மனிதனும் எல்லையில்லாத தந்தையாக ஆக முடியாது. அந்த எல்லையில்லாத தந்தை ஒரே ஒருவர் ஆவார்.

ஆத்மாக்களாகிய நாம் அங்கு இருப்பவர்கள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கிருந்து பிறகு சரீரத்தில் வருகிறோம். முதன் முதலில் யார் பாகம் ஏற்று நடிக்க வந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாம் நிராகார உலகத்திலிருந்து பாகம் ஏற்று நடிக்க வந்துள்ளோம். இச்சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. எப்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு தர்மத்தினரும் அவரவர் பாகத்திற்கேற்ப வருகிறார்கள். இதற்கு அழிவற்ற நாடகம் என்று கூறப்படுகிறது. இது யாருடைய புத்தியிலும் இல்லை. நாம் எல்லையில்லாத நாடகத்தின் நடிகர்கள் ஆவோம். எல்லையில்லாத சரித்திரம் பூகோளத்தையும் அறியாமல் உள்ளார்கள். தங்களது பிறவிகளையும் அறியாமல் உள்ளார்கள். பாபா உங்களை எவ்வளவு (ரிஃப்ரெஷ்) புத்துணர்வுடையவராக ஆக்குகிறார். முயற்சிக்கேற்ப ஒரு சிலரோ மிகவும் குஷியில் இருக்கிறார்கள். பாபா நமக்கு சத்திய ஞானத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார். வேறு எந்த மனிதர்களும் இந்த ஞானத்தை அளிக்க முடியாது. எனவே இதற்கு அறியாமையின் இருள் என்று கூறப்படுகிறது. நாம் அறியாமையின் இருளில் எப்படி வந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். மீண்டும் ஞானம் என்ற வெளிச்சத்திற்கு எப்படி செல்ல வேண்டும் - இது கூட வரிசைக்கிரமமாக புரிந்து கொள்ள முடியும். கோரமான இருள் மற்றும் பட்டப்பகல் வெளிச்சம் என்று எதற்கு கூறப்படுகிறது - இந்த வார்த்தைகள் எல்லையில்லாதவற்றிற்குப் பொருந்துகிறது. அரைகல்பம் இரவு அரைகல்பம் பகல் அல்லது சூரியன் மறையும் மாலை மற்றும் விடியல் காலை என்று புரிந்து கொள்ளுங்கள். இது எல்லையில்லாத விஷயம் ஆகும். பாபா வந்து அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். தான புண்ணியங்கள் செய்கிறார்கள், சாஸ்திரங்கள் படிக்கிறார்கள். அவற்றாலோ அற்பகால சுகம் கிடைக்கிறது. இவற்றின் மூலமாக அவர்களை நான் உலகிற்கு அதிபதியாக ஆக்கி விடும் வகையில் நான் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அனைவரும் உலகத்திற்கு அதிபதி ஆக முடியாது என்பதையும் புரிந்துள்ளீர்கள். யாருக்கு தந்தை படிப்பிக்கிறாரோ அவர்கள் அதிபதி ஆகிறார்கள். அவர்கள் தான் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். முழு உலகமோ இராஜயோகத்தைக் கற்பதில்லை. கோடியில் ஒருவர் தான் படிக்கிறார். ஒரு சிலரோ 5-6 வருடங்கள், 10 வருடங்கள் இராஜயோகம் கற்கிறார்கள். பிறகும் படிப்பை விட்டு விடுகிறார்கள். மாயை மிகவும் பிரபலமானது. முற்றிலுமே அறிவிலியாக ஆக்கி விடுகிறது என்று தந்தை கூறுகிறார். கை விட்டு விடுகிறார்கள். ஆச்சரியப்படும் வகையில் தந்தை யினுடையவராக ஆனார்கள், ஞானம் கூறினார்கள், பிறகும் கைவிட்டுச் சென்றார்கள் என்று பழமொழி உள்ளது அல்லவா?

அவர்களுடையதும் குற்றம் இல்லை என்று தந்தை கூறுகிறார். இந்த மாயை புயல்களின் மூலம் தாக்குகிறது. எந்த மணமகள்களை அலங்காரம் செய்து சொர்க்கத்தின் மகாராணியாக ஆக்குகிறாரோ, அவர்கள் கூட கை விட்டு விடுகிறார்கள். பிறகும் தந்தை கூறுகிறார், யாருடன் நிச்சயதார்த்தம் செய்தீர்களோ அவரை நினைவு செய்ய வேண்டும். நினைவு ஒன்றும் சட்டென்று நிலைத்து விடாது. அரை கல்பமாக பெயர் ரூபத்தில் மாட்டிக் கொண்டே வந்துள்ளீர்கள். இப்பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வது என்பது மிகவும் கடினமாக உள்ளது. சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக ஆகிறீர்கள். ஆனால் பரமாத்மாவை அறியாமல் உள்ளீர்கள். பரமாத்மாவை ஒரேயொரு முறை மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. இங்கு நீங்கள் அரைகல்பம் தேக உணர்வுடையவராக ஆகி விடுகிறீர்கள். ஆத்மாக்கள் இந்த சரீரத்தை விட்டு மற்றொரு சரீரம் எடுத்து பாகத்தை நடிக்க வேண்டி உள்ளது என்பது கூட புரியாமல் உள்ளீர்கள். பின் அழ வேண்டிய அவசியம் இல்லை. தந்தை மூலமாக சுகதாமத்தின் ஆஸ்தி கிடைத்து கொண்டிருக்கும் பொழுது ஏன் முழுமையாக கவனம் கொடுக்கக் கூடாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒரு தந்தையின் கட்டளைப்படி மட்டுமே நடக்க வேண்டும். தந்தையிடம் மட்டுமே கேட்க வேண்டும். மனிதர்கள் கூறும் தவறான விஷயங்களைக் கேட்டு அவற்றின் தாக்கத்தில் வரக் கூடாது. தவறான சேர்க்கையில் சேரக் கூடாது.

2. கல்வி மற்றும் கற்பிப்பவரை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாலை எழுந்து அவசியம் வகுப்பிற்கு வர வேண்டும்.

வரதானம்:
சாதனங்களை ஆதாரமாக ஆக்குவதற்குப் பதிலாக நிமித்தமாத்திரம் காரியத்தில் பயன்படுத்தக் கூடிய சதா சாட்சி பார்வையாளர் ஆகுக.

பல குழந்தைகள் போகப் போக விதையை விட்டுவிட்டு கிளைகளால் கவர்ச்சிக்கப்பட்டு விடுகின்றனர், சிலர் யாராவது ஒரு ஆத்மாவை ஆதாரமாக ஆக்கிவிடுகின்றனர் மற்றும் சிலர் சாதனங்களை ஆதாரமாக ஆக்கிவிடுகின்றனர். ஏனெனில், விதையினுடைய ரூபம், வண்ணம் அழகாக இல்லை மற்றும் கிளைகளின் ரூபம், வண்ணம் மிகவும் அழகாக உள்ளது எனும்படியாக பொய்யான ஆதாரம் தான் உண்மையானதாக அனுபவம் ஆகும்படி மாயை புத்தியை மாற்றிவிடுகிறது. ஆகையினால், இப்பொழுது சாகார சொரூபத்தில் தந்தையினுடைய துணை மற்றும் சாட்சி பார்வை ஸ்திதியினுடைய அனுபவத்தை அதிகப்படுத்துங்கள், சாதனங்களை ஆதாரமாக ஆக்காதீர்கள், அவற்றை நிமித்தமாத்திரம் காரியத்தில் பயன்படுத்துங்கள்.

சுலோகன்:
ஆன்மிகப் பெருமையில் இருந்தீர்கள் என்றால் அபிமானத்தின் உணர்வு வராது