20.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது கலியுக எல்லை எனும் கரையில் நின்று கொண்டிருக் கிறீர்கள், இந்த கரையிலிருந்து அந்த கரைக்குச் செல்ல வேண்டும், வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

கேள்வி:

எந்த ஒரு விசயத்தை நினைவில் வைத்திருந்தால் மனநிலை ஆடாது, அசையாதிருக்கும்? ஆகிவிடும்?

 

பதில்:

கடந்தது கடந்து விட்டது. கடந்து முடிந்தவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டாம், முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும். சதா ஒருவரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் மனநிலை ஆடாது, அசையாத தாக ஆகிவிடும். நீங்கள் இப்பொழுது கலியுகத்தின் எல்லைக்குட்பட்டதை விட்டு விட்டீர்கள், பிறகு ஏன் கடந்தவைகளைத் திரும்பிப் பார்க்கிறீர்கள்? அதில் சிறிதும் புத்தி செல்லக் கூடாது - இது தான் சூட்சும படிப்பாகும்.

 

ஓம்சாந்தி.

காலம் மாறிக் கொண்டே செல்கிறது, நேரம் கடந்து கொண்டே செல்கிறது. சத்யுகத்திலிருந்து காலம் கடந்து கடந்து இப்பொழுது கலியுகத்தின் கரைக்கு வந்து நின்று விட்டோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இது சத்யுகம், திரேதா, துவாபரம், கலியுக சக்கரத்தின் மாடல் ஆகும். உலகம் மிகப் பெரியதாகும். அதன் மாடல் ரூபத்தை குழந்தைகள் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது கலியுகம் முடிவடையப் போகிறது என்பதை முன்பு தெரியாமல் இருந்தீர்கள். இப்பொழுது அறிந்து கொண்டீர்கள் எனில், குழந்தைகளும் புத்தியில் சத்யுகத்திலிருந்து கலியுகக் கடைசி என்ற கரைக்கு வந்து விட்டோம் என்பது புத்தியிலிருக்க வேண்டும். டிக் டிக் என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது, நாடகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பது புத்தியில் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன? சிறிது நாட்கள் தான் உள்ளன. முன்பு அறியாமல் இருந்தீர்கள். இப்பொழுது கடைசி முடிவிற்கு வந்து விட்டீர்கள் என்பதை தந்தை புரிய வைத்திருக் கின்றார். இந்த உலகிலிருந்து அந்த உலகிற்குச் செல்ல இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. இந்த ஞானமும் இப்பொழுது கிடைத்திருக்கிறது. நாம் சத்யுகத்திலிருந்து சக்கரத்தில் வந்து வந்து இப்பொழுது கலி யுகக் கடைசிக்கு வந்து விட்டோம். இப்பொழுது மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும். உள்ளே மற்றும் வெளியில் செல்வதற்கான வாசற் கதவு (கேட்) இருக்கும் அல்லவா! இங்கும் அப்படித் தான். இன்னும் சிறிது காலம் தான் என்பதை குழந்தைகள் புரிய வைக்க வேண்டும். இது புருஷோத்தம சங்கமயுகம் அல்லவா! இப்பொழுது நாம் கரையில் நின்று கொண்டிருக்கிறோம். மிகவும் குறுகிய காலம் இருக்கிறது. இப்பொழுது பழைய உலகின் மீது இருக்கும் பற்றுதலை நீக்க வேண்டும். இப்பொழுது புது உலகிற்குச் செல்ல வேண்டும். எளிதான முறையில் புரிய வைக்கப்படுகிறது. இவைகளை புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். புத்தியில் சக்கரத்தைச் சுற்ற வேண்டும். இப்பொழுது நீங்கள் கலியுகத்தில் இல்லை. நீங்கள் இந்த எல்லைக்குட்பட்டதை விட்டு விட்டீர்கள், பிறகு ஏன் அந்தப் பக்கமுள்ளவர்களை நினைவு செய்ய வேண்டும்? பழைய உலகை விட்டு விட்டீர்கள். நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறோம், பிறகு ஏன் கடந்தவைகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும்? புத்தி தொடர்பை விகார உலகில் ஏன் செலுத்த வேண்டும்? இது மிகவும் சூட்சும விசய மாகும். சிலர் ஒரு அனா அளவிற்கும் புரிந்து கொள்வது கிடையாது என்பதை பாபா அறிவார். கேட்கின்றனர் பிறகு மறந்து விடுகின்றனர். நீங்கள் கடந்தவைகளைப் பார்க்கக் கூடாது. புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும் அல்லவா! நாம் விலகிச் சென்று விட்டோம், பிறகு கடந்தவைகளை ஏன் பார்க்க வேண்டும்? கடந்தவைகள் கடந்து போய் விட்டன. எவ்வளவு ஆழமான விசயங்களைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இருப்பினும் குழந்தைகளின் தலை கடந்தவைகளின் பக்கம் ஏன் திரும்பி விடுகிறது? கலியுகத்தின் பக்கம் திரும்பி விடுகிறது. தலையை இந்த பக்கம் திருப்பி விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அந்த பழைய உலகம் உங்களுக்கு பயன்படப் போவது கிடையாது. பழைய உலகின் மீது பாபா வைராக்கியம் ஏற்படுத்துகின்றார். புது உலகம் எதிரில் இருக்கிறது, பழைய உலகின் மீது வைராக்கியம். இவ்வாறு எனது மன நிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள். கடந்தது கடந்து விட்டது என்று தந்தை கூறுகின்றார். கடந்து போன விசயங்களை சிந்திக்காதீர்கள். பழைய உலகில் எந்த ஆசையும் வைக்காதீர்கள். நான் சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே வைக்க வேண்டும். புத்தியில் சுக தாமத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கடந்தவைகளை ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்! ஆனால் பலருக்கு தலை திரும்பி விடுகிறது. நீங்கள் இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பழைய உலகிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! எங்கும் நின்று விடக் கூடாது. எதையும் பார்க்கக் கூடாது. கடந்தவைகளை நினைக்கக் கூடாது. முன்னேறிக் கொண்டே செல்லுங்கள், கடந்தவைகளை நினைக்காதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஒருவரையே பார்க்கும் பொழுது தான் ஆடாத, அசையாத மனநிலை ஏற்படும். அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தால் பழைய உலகின் உற்றார், உறவினர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கும். வரிசைக் கிரமம் இருக்கிறது அல்லவா! இன்று நன்றாக இருக்கின்றனர், நாளை கீழே விழுந்து விட்டால் முற்றிலும் உடைந்து போய் விடுகின்றனர். முரளி கேட்பதற்கும் உள்ளம் விரும்பாத அளவிற்கு கிரஹச்சாரம் பிடித்து விடுகிறது. இவ்வாறு ஏற்படுகிறது அல்லவா? சற்று சிந்தித்துப் பாருங்கள் !

 

தந்தை கூறுகின்றார் - நீங்கள் சங்கமத்தில் நின்று கொண்டிருப்பதால் முன்னால் இருப்பதைப் பார்க்க வேண்டும், முன்னால் புது உலகம் இருக்கிறது, அப்பொழுது தான் குஷி ஏற்படும். இப்பொழுது இன்னும் சிறிது தூரம் தான் இருக்கிறது. இப்பொழுது நமது தேசத்தின் மரம் தென்படுகிறது என்று கூறுகின்றனர் அல்லவா! உரக்கக் கூறும் பொழுது அவர்கள் கேட்பார்கள். பாதை எதிரில் இருக்கிறது. நீங்கள் நினைவு செய்கிறீர்கள், தேவதை கள் வந்து விடுகின்றனர். முன்பு இவ்வாறு வருவது கிடையாது. சூட்சும வதனத்தில் மாமியார் வீட்டைச் சார்ந்தவர்கள் (சுகதாமத்தைச் சார்ந்தவர்கள்) வருவார்களா என்ன? இப்பொழுது தாய் வீட்டினர் மற்றும் மாமியார் வீட்டைச் சார்ந்தவர்கள் சென்று சந்திக்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் மறந்து விடுகிறீர்கள். புத்தியானது கடந்தவைகளில் நிலைத்து விடுகிறது. உங்கள் அனைவருக்கும் இது கடைசிப் பிறப்பு என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் பின்னால் நின்று விடக் கூடாது. இப்பொழுது கடந்து செல்ல வேண்டும். இந்த கரையிலிருந்து அந்த கரைக்குச் செல்ல வேண்டும். மரணமும் எதிரில் வந்து கொண்டே இருக்கிறது. அடி எடுத்து வைத்தால் போதுமானது, படகு வருகிறது எனில் படகிற்குள் கால் அடி எடுத்து வைக்க வேண்டும் அல்லவா! அதற்கு குழந்தைகள் நீங்கள் கரையில் நிற்க வேண்டும். ஆத்மாக்கள் இனிய வீட்டிற்குச் செல்கிறோம் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. இந்த நினைவின் மூலம் ஏற்படும் குஷியானது உங்களை ஆடாது, அசையாதவர்களாக ஆக்கிவிடும். இந்த சிந்தனையே செய்து கொண்டிருக்க வேண்டும். இது புத்திக்கான விசயமாகும். ஆத்மாக்களாகிய நாம் சென்று கொண்டிருக் கிறோம். இப்பொழுது வெகு அருகாமையில் இருக்கிறோம். இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. இது தான் நினைவு யாத்திரை என்று கூறப்படுகிறது. இதையும் மறந்து விடுகிறீர் கள். சார்ட் எழுதவும் மறந்து விடுகிறீர்கள். தனது உள்ளத்தில் கை வைத்துக் கொண்டு கேளுங்கள் - பாபா கூறுவது போன்று அதாவது நாம் தரையில் (படகு துறையில்) நின்று கொண்டிருக் கிறோம் என்ற மனநிலை இருக்கிறதா? புத்தியில் ஒரு தந்தையின் நினைவு இருக்கிறதா? விதவிதமான முறையில் பாபா நினைவு யாத்திரை கற்றுக் கொடுக்கின்றார். இந்த நினைவு யாத்திரையில் தான் மூழ்கியிருக்க வேண்டும். நான் இப்பொழுது செல்ல வேண்டும், அவ்வளவு தான். இங்கு அனைத்தும் பொய்யான சம்மந்தமாகும். உண்மையானது சத்யுகத்தின் சம்மந்தமாகும். நான் எங்கு நின்று கொண்டிருக்கிறேன்? என்று தன்னைப் பாருங்கள். சத்யுகத்திருந்து இந்த சக்கரத்தைப் புத்தியில் நினைவு செய்யுங்கள். நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் அல்லவா! சத்யுகத்திருந்து சுற்றி வந்து இப்பொழுது கரையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். துறைமுகம் இருக்கிறது அல்லவா! சிலர் தனது நேரத்தை அதிகம் வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர். 5 - 10 நிமிடம் கூட நினைவிலிருப்பது கிடையாது. சுயதரிசன சக்கரதாரிகளாக முழு நாளும் ஆக வேண்டும். ஆனால் அவ்வாறு கிடையாது. பாபா விதவிதமான முறையில் புரிய வைக்கின்றார். ஆத்மாவிற்கான விசயமாகும். உங்களது புத்தியில் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. புத்தியில் இந்த நினைவு ஏன் இருக்கக் கூடாது? இப்பொழுது நாம் கரையில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த கரையின் நினைவு உங்களது புத்தியில் ஏன் இருப்பது கிடையாது. நாம் புருஷோத்தம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துள்ளதால் கரையில் சென்று நில்லுங்கள். தலைப் பேன் போன்று நடந்து கொண்டே செல்லுங்கள். இந்த பயிற்சி ஏன் செய்வது கிடையாது? புத்தியில் ஏன் சக்கரம் சுற்றி வருவது கிடையாது? இது சுயதரிசன சக்கரம் அல்லவா! பாபா ஆரம்பத்திலிருந்து முழு சக்ககரத் தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். உங்களது புத்தியானது முழு சக்கரத்திலும் சுற்றி வந்து கரையில் நின்று விட வேண்டும். வேறு எந்த வெளியுலக சூழ்நிலைகளின் மோதல்களும் இருக்கக் கூடாது. நாளுக்கு நாள் குழந்தைகளாகிய நீங்கள் அமைதியில் செல்ல வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. பழைய உலகை விட்டு விட்டு புது சம்மந்தத்தில் தனது புத்தி தொடர்பை ஈடுபடுத்த வேண்டும். யோகா செய்யவில்லையெனில் பிறகு பாவங்கள் எப்படி அழியும்? இந்த உலகம் அழியப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான மாடல் எவ்வளவு சிறியதாக இருக்கிறது. 5 ஆயிரம் ஆண்டிற்கான உலகமாகும். அஜ்மீரில் சொர்க்கத்தின் மாடல் இருக்கிறது. ஆனால் யாருக்காவது சொர்க்கத்தின் நினைவு வருமா என்ன? அவர் களுக்கு சொர்க்கத்தைப் பற்றி என்ன தெரியும்? 40 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு சொர்க்கம் வரும் என்று நினைக்கின்றனர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார், இந்த உலகில் காரியங்கள் செய்தாலும் இந்த உலகம் அழியப் போகிறது, இப்பொழுது செல்ல வேண்டும், நாம் கரையில் (இறுதி கட்டத்தில்) நின்று கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் பேன் போன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இலட்சியம் எவ்வளவு உயர்ந்தது! தந்தை இலட்சியத்தைப் பற்றி அறிவார் அல்லவா! தந்தையின் கூடவே தாதாவும் சேர்ந்திருக்கின்றார். அவர் புரிய வைக்கின்றார் எனில் இவரும் புரிய வைக்க முடியாதா? இவரும் கேட்கின்றார் அல்லவா! இவர் இவ்வாறெல்லாம் ஞானச் சிந்தனை செய்யமாட்டாரா? ஞானச் சிந்தனை செய்வதற்கான கருத்துகளை தந்தை உங்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றார். பாபா வெகு தொலைவில் இருக்கின்றார் என்று நினைக்காதீர்கள். அடே, நீங்கள் தான் அவரை பின் தொடர்கின்றீர்கள், அப்படியானால், தந்தை எப்படி தொலைவில் இருக்க முடியும்? இந்த ஆழமான விசயங்களை தாரணை செய்ய வேண்டும். தவறுகள் செய்வதை விட்டு விட வேண்டும். பாபாவிடம் 2 ஆண்டுகள் கழித்து வருகின்றனர். நாம் கரையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற நினைவு இருக்குமா என்ன? இப்பொழுது செல்ல வேண்டும். இப்படிப்பட்ட மனநிலை ஏற்பட்டு விட்டால் பிறகு என்ன வேண்டும்? இரட்டை கிரீடதாரிகள் ...... என்பதையும் பாபா புரிய வைத்திருக்கின்றார். இவ்வாறு பெயர் மட்டுமே இருக்கிறது, மற்றபடி அங்கு எந்த ஒளிக் கிரீடமும் இருக்காது. இது தூய்மையின் அடையாள மாகும். தர்ம ஸ்தாபகர்களாக இருப்பவர்களின் சித்திரத்தில் அவசியம் ஒளி காண்பிப்பர், ஏனெனில் அவர்கள் விகாரமற்றவர்கள், சதோ பிரதானமானவர்கள் என்று உணர்ந்துவதற்காக. பிறகு இரஜோ, தமோவில் வருகின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது, அதில் மூழ்கியிருக்க வேண்டும். நீங்கள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக் கலாம், ஆனால் புத்தியின் தொடர்பு அங்கு இருக்க வேண்டும். இதையும் கவனத்தில் வைக்க வேண்டும், யார் இந்த குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்கள் வெளிப்படுவார்கள். நாற்று நட வேண்டும். ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் முன் பின் அவசியம் வருவார்கள். கடைசியில் வருபவர்களும் முன்னால் வந்தவர்களை விட வேகமாகச் செல்வார்கள். இது கடைசி வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அவர்கள் பழையவர்களை விட வேகமாக அடி எடுத்து வைப்பார்கள். முழு தேர்வும் நினைவு யாத்திரையில் இருக்கிறது. தாமதமாக வந்திருக்கலாம், ஆனால் நினைவு யாத்திரையில் மூழ்கிவிட்டால், மற்ற அனைத்து தொழில்களையும் விட்டு விட்டு இந்த யாத்திரையில் அமர்ந்து விடலாம், ஆனால், உணவு சாப்பிட்டே ஆக வேண்டும் தானே! நல்ல முறையில் நினைவில் இருந்தால் இந்த குஷி போன்ற சத்தான உணவு வேறு எதுவும் கிடையாது. நாம் இப்பொழுது செல்கிறோம் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். 21 பிறவிகளுக்கான இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. லாட்டரி அடைந்தவர்களுக்கு குஷியின் அளவு அதிகரித்து விடுகிறது அல்லவா! நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். இது தான் கடைசி, விலை மதிக்க முடியாத வாழ்க்கை என்று கூறப் படுகிறது. நினைவு யாத்திரையில் மிகுந்த போதை இருக்கிறது. ஹனுமானும் முயற்சி செய்து செய்து உறுதி யானவராக ஆகிவிட்டார் அல்லவா! தீ வைத்து கொளுத்தினார், இராவண ராஜ்யம் எரிந்து விட்டது. இது ஒரு கதையாக உருவாக்கி விட்டனர். தந்தை யதார்த்த விசயத்தைப் புரிய வைக்கின்றார். இராவண ராஜ்யம் அழிந்து விடும். உறுதியான புத்தி என்று இது தான் கூறப்படுகிறது. இப்பொழுது கரை ஓரத்தில் இருக்கிறோம், நாம் சென்று கொண்டிருக்கிறோம், அவ்வளவு தான். இந்த நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள், அப்பொழுது குஷியின் அளவு அதிகரிக்கும், யோக பலத்தின் மூலம் ஆயுளும் அதிகரிக்கும். நீங்கள் இப்பொழுது தெய்வீக குணங்களை தாரணை செய்கிறீர்கள், பிறகு அது அரைக் கல்பத்திற்குக் கூடவே இருக்கும். இந்த ஒரு பிறவியில் நீங்கள் அதிகமாக முயற்சி செய்கிறீர்கள், சென்று லெட்சுமி நாராயணனாக ஆவீர்கள். ஆக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! இதில் தவறு அல்லது நேரம் வீணாக்கக் கூடாது. யார் செய்கிறார்களோ அவர்கள் அடைவார்கள். தந்தை கல்வியைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். நாம் கல்ப கல்பத்திற்கு உலகின் எஜமானர்களாக ஆகின்றோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள், இவ்வளவு குறுகிய காலத்தில் அதிசயம் செய்து விடுகிறீர்கள், முழு உலகையும் மாற்றி விடுகிறீர்கள். தந்தைக்கு ஒன்றும் பெரிய விசயமில்லை. கல்ப கல்பத்திற்கும் செய்கின்றார். நடந்தாலும்-காரியங்கள் செய்தாலும், சாப்பிட்டாலும்-குடித்தாலும் தனது புத்தியின் தொடர்பை தந்தையிடம் செலுத்துங்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இந்த குப்த விசயங்களை தந்தை தான் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். தனது மனநிலையை நல்ல முறையில் உருவாக்கிக் கொண்டே இருங்கள். இல்லையெனில் உயர்ந்த பதவி அடையமாட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக் கிரமமாகத் தான் முயற்சி செய்கிறீர்கள். நாம் இப்பொழுது கரையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்திருக்கிறீர்கள். பிறகு ஏன் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்? முன்னால் அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு உள்நோக்கு முகத்துடன் (சுய ஆய்வு) அதிகம் இருக்க வேண்டும், அதற்காகத் தான் ஆமையின் உதாரணம் இருக்கிறது. இந்த உதாரணம் அனைத்தும் உங்களுக்காகத் தான் இருக்கிறது. சந்நியாசிகளோ, ஹடயோகிகள், அவர்களால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. இதை அவர்கள் கேட்கின்ற பொழுது அவர்கள் நம்மை நிந்திப்பதாக நினைக்கின்றனர். ஆகையால் இதையும் யுக்தியாக எழுத வேண்டும். தந்தையைத் தவிர யாரும் இராஜ யோகத்தைக் கற்பிக்க முடியாது. மறைமுகமாகக் கூறும் பொழுது அவர்களுக்குத் தவறான எண்ணங்கள் வராது. யுக்தியாக நடந்து கொள்ள வேண்டும் அல்லவா! பாம்பும் இறக்க வேண்டும், கம்பும் உடையக் கூடாது. குடும்பத்தில் அனைவர் மீதும் அன்பும் வையுங்கள், ஆனால் புத்தியின் தொடர்பை தந்தையிடம் செலுத்த வேண்டும். நாம் இப்பொழுது ஒரே ஒருவரின் வழியில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது தேவதை ஆகக் கூடிய வழியாகும், இது தான் அத்துவைத (ஒரே) வழி என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தேவதைகளாக ஆக வேண்டும். எத்தனை முறை நீங்கள் ஆகியிருக்கிறீர்கள்? பல முறை. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இது கடைசிப் பிறவியாகும். இப்பொழுது செல்ல வேண்டும். ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? பார்த்தாலும் தனது உறுதியான நிலையில் நீங்கள் நிலைத்திருங்கள். இலட்சியத்தை மறந்து விடக் கூடாது. நீங்கள் தான் மகாவீரர்கள், மாயாவை வெல்கிறீர்கள். வெற்றி மற்றும் தோல்விக்கான இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். பாபாவின் ஞானம் எவ்வளவு அதிசயமானது! தன்னை பிந்து என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தோமா என்ன? இவ்வளவு சிறிய பிந்துவில் முழு பாகமும் பதிவாகியிருக்கிறது, அதன்படி சக்கரத்தில் சுற்றிக் கொண்டே வருகிறது. மிகவும் ஆச்சரியம் ஆகும்! ஆச்சரியம் என்று கூறி விடவும் வேண்டியிருக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்காண முக்கிய சாரம்:

1) திரும்பிப் பார்க்கக் கூடாது. ஏதேனும் விசயத்தினாலும் (இடையில்) நின்று விடக் கூடாது. ஒரு தந்தையை மட்டும் பார்த்து தனது மனநிலையை ஏக்ரஸ் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 

2) இப்பொழுது நாம் படகுத் துறையின் கரையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை புத்தியில் நினைவில் கொள்ள வேண்டும். வீட்டிற்குச் செல்ல வேண்டும், தவறு செய்வதை விட்டு விட வேண்டும். தனது (உறுதியான) மனநிலையை உருவாக்கிக் கொள்ளும் குப்தமான முயற்சி செய்ய வேண்டும்.

 

வரதானம்:

தீவிர சேவையின் மூலம் உலக மாற்றத்திற்கான காரியத்தை முழுமையாக்கக் கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

 

தீவிர வேகத்தில் சேவை செய்வதற்காக குழு ரூபத்தில் நினைவு மற்றும் ஞானம் (ரூப் மற்றும் பசந்த்) - இந்த இரண்டு விசயங்களிலும் சமநிலை இருக்க வேண்டும். எவ்வாறு ஞானத்தை ஒரே நேரத்தில் பல ஆத்மாக்களுக்கு செய்தி கொடுக்கும் காரியம் செய்கிறீர்களோ அவ்வாறு நினைவு பலத்தின் மூலம், சிரேஷ்ட சங்கல்பத்தின் பலத்தின் மூலம் தீவிர வேகத்தில் சேவை செய்யுங்கள். இதற்கான கண்டுபிடிப்பை சிந்திக்க வேண்டும், கூடவே குழு ரூபத்தின் திட சங்கல்பத்தின் மூலம் பழைய சன்ஸ்காரம், சுபாவம் அல்லது பழைய நடத்தை என்ற எள் அல்லது தானியத்தை யக்ஞத்தில் யக்ஞத்தில் அர்பணிக்கும் போது தான் உலக மாற்றத்திற்கான காரியம் முழுமையடையும், அதாவது யக்ஞம் சமாப்தியாகும்.

 

சுலோகன்:

குழந்தை மற்றும் எஜமான் என்ற சமநிலையின் மூலம் திட்டங்களை நடைமுறையில் கொண்டு வாருங்கள்.

 

ஓம்சாந்தி