21-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தேவதைகளை விட உயர்ந்தது உங்களது இந்த பிராமண வாழ்க்கையாகும், ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் மூன்று உலகம் மற்றும் மூன்று காலத்தையும் அறிவீர்கள், நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகளாக இருக்கிறீர்கள் (வம்சத்தவர்)

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எந்த ஒரு உயர்ந்த ஏற்றத்தில் (விசயத்தில்) ஏறுகிறீர்கள் (முன்னேறுகிறீர்கள்) ?

பதில்:
மனிதனிலிருந்து தேவதையாக ஆவது தான் உயர்ந்த முன்னேற்றமாகும், இதில் நீங்கள் ஏறிக் கொண்டிருக்கிறீர்கள். அன்பு இரசனையில் முன்னேறினால் ....... என்றும் கூறுகின்றனர். இது மிகவும் நீண்ட பயணமாகும். ஆனால் அதிசயம் என்னவெனில் ஏறுவது ஒரு விநாடியில், கீழே இறங்குவதற்கு நேரம் ஏற்படு கிறது.

கேள்வி:
பாவத்தின் மண்பானை உடையும் போது தான் வெற்றி ஏற்படும், இதற்கான எந்த அடையாளம் பக்திமார்க்கத்தில் இருக்கிறது?

பதில்:
பானையிலிருந்து சீதை வெளிபட்டார்...... அதாவது எப்போது பாவம் என்ற பானை நிறைந்து உடைந்து விடுகிறதோ அப்போது சீதை மற்றும் இராதையின் பிறப்பு ஏற்படும். இது பக்தி மார்க்கத்திலுள்ள அடையாளம்.

பாடல்:
இந்த பாவம் நிறைந்த உலகிலிருந்து .......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய குழந்தைகள் பக்தி மார்க்கத்தின் பாட்டு கேட்டீர்களா! இந்த (பாவம் நிறைந்துள்ள) தூய்மை இல்லாத உலகிலிருந்து தூய்மையான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கின்றனர். அசாந்தியான உலகிலிருந்து சாந்தியான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். வேறு ஏதோ உலகம் இருக்கிறது, அங்கு அமைதியும் இருந்தது, சுகமும் இருந்தது என்று புத்தியில் பதிந்திருக்கிறது. மகாராஜா, மகாராணி இலட்சுமி, நாராயணனின் இராஜ்யம் இருந்தது, அவர்களது சிலைகளும் இங்கு இருக்கிறது. மனிதர்கள் படிக்கும் சரித்திர பூகோளமானது உலகின் கால் பங்கு வரலாறுக்கானது. பாதி கல்பத்திற் கானதும் கூட கிடையாது. சத்யுகம், திரேதா பற்றி யாருக்கும் தெரியாது. காது களைப் போன்று கண்களும் மூடியிருக்கின்றன. உலகின் சரித்திர, பூகோளத்தை யாரும் அறியவேயில்லை. உலகம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! புது உலகம் எப்போது பழையதாக ஆனது? பிறகு பழையதிலிருந்து எப்போது புதியதாக ஆனது? என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவசியம் அப்படி ஆகும் அல்லவா! தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பில் வந்தே ஆக வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு அவசியம் சத்யுகம் மீண்டும் ஏற்படும். சங்கமத்தில் சத்யுகம் ஸ்தாபனை செய்பவர் வருவார். இதைப் புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி தேவை. கலியுகத்தை சத்யுகமாக ஆக்கக் கூடியவர் தந்தை மட்டுமே. இவ்வளவு எளிய விசயம் கூட யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. ஏனெனில் புத்திக்கு மாயையின் பூட்டு போடப் பட்டிருக்கிறது. பரம்பிதா பரமாத்மாவின் மகிமையும் பாடுகின்றனர், ஹே பரம்பிதா பரமாத்மா! புத்திசாலிகளுக்கெல்லாம் புத்திசாலியானவர்கள் நீங்கள்! புத்தியற்றவர்களுக்கு நீங்கள் புத்தி கொடுங் கள். மற்ற அனைவரும் அசுர வழி கொடுக்கக் கூடியவர்கள், சிரேஷ்ட வழி கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். மனிதர்கள் பாடுகின்றனர், ஆனால் புரிந்து கொள்வது எதுவும் கிடையாது.

குழந்தைகளாகிய உங்களிடம் இப்போது மூன்று காலத்தின் ஞானம் இருக்கிறது. உலக சம்மந்தப்பட்ட ஞானம் தான் இருக்கிறது என்று கிடையாது, உலகத்திற்கும் மேலான விசயங் களை நீங்கள் அறிவீர்கள். மூல வதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனம் இந்த மூன்று லோகங் களின் ஞானமும் புத்தியில் இருக்கிறது. யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவர்களது புத்தியில் இருக்கிறது. நீங்கள் பள்ளியில் படிக்கிறீர்கள், ஆக படிப்பு முழுமையான முறையில் புத்தியில் இருக்க வேண்டும். மூன்று காலங்களின் ஞானம் உங்களது புத்தியில் இருக்கிறது. நீங்கள் திரிகாலதர்சிகளாக ஆகிறீர்கள். உங்களை திரிலோகிநாத் (மூன்று லோகத்திற்கும் அதிபதி) என்று கூற முடியாது. திரிலோகிநாத் ஆக யாரும் ஆவது கிடையாது. திரிகாலதர்சி என்ற வார்த்தை சரியானது. மூன்று லோகம், மூன்று காலங்களை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் நாம் மூலவதனத்தில் இருக்கக் கூடியவர்கள். ஆத்மாக்களாகிய நாம் அங்கு வசித்தோம். இந்த ஞானம் வேறு யாருடைய புத்தியிலும் கிடையாது. பரம்பிதா பரமாத்மா திரிகாலதரிசி என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல்லிஇடைலிகடை, மூன்று காலம் மற்றும் மூன்று உகங்களை அறிவீர்கள். இலட்சுமி நாராயணனை வைகுண்டநாதன் என்ற கூற முடியுமே தவிர திரிலோகநாத் என்று கூற முடியாது. அவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்கள். தந்தையை சொர்க்கத்திற்கு எஜமான் என்று கூற முடியாது. ஆக இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். பரமாத்மாவைப் போன்று எந்த மனிதனும் இருக்க முடியாது. பரமாத்மா அனைத்தையும் அறிந்தவர், ஞானம் நிறைந்தவர் என்றும் கூறுகின்றனர், ஆனால் பொருள் புரிந்து கொள்வது கிடையாது. அனைத்தையும் அறிந்தவர் என்றால் அனைவரின் உள்ளத்தையும் அறிந்திருப்பார் என்று நினைக்கின்றனர். சர்வவியாபி என்று கூறி நிந்தனை செய்து விட்டனர்.

இப்போது நீங்கள் ஈஸ்வரிய வம்சத்தினர்களாக இருக்கிறீர்கள், பிறகு தெய்வீக வம்சத் தினர்களாக ஆவீர்கள். ஈஸ்வரன் உயர்ந்தவரா? அல்லது சத்யுகத்தின் தேவதைகள் உயர்ந்தவர் களா? அந்த தேவதைகளை விட உயர்ந்தவர் சூட்சுமவதனவாசி தேவதைகள். சூட்சுமவதனவாசி பிரம்மா உயர்ந்தவர் என்று கூறுவீர்கள் அல்லவா! அவர் தான் அவ்யக்த மானவர். இவர் சாகாரமானவர் (சரீரமுடையவர்) அல்லவா! இவர் எப்போது தூய்மையான, ஃபரிஸ்தாவாக ஆகிறாரோ அப்போது மகிமை ஏற்படுகிறது. பிராமணர்களுக்கு இப்போது அலங்காரம் கொடுக்கப்பட்டால் அந்த ஆயுதங்கள் அழகானதாக இருக்காது. அதனால் தான் விஷ்ணுவிற்கு சுயதரிசன சக்கரம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்றைவகளின் பொருளையும் இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். சத்யுகத்தில் இலட்சுமி, நாராயணனுக்கு ஆயுதங்களை கொடுப்பதில்லை. இது இப்போதைக் கான விசயமாகும். உண்மையில் இந்த ஞானம் தான் ஆயுதங்களாகும். ஸ்தூல ஆயுதங் களுக்கான விசயம் கிடையாது. சாஸ்திரங்களில் ஸ்தூல ஆயுதம் போன்றவைகள் உள்ளன. பாண்டவர்கள் மற்றும் கௌரவர் களின் சேனை காண்பித்திருக்கின்றனர். ஆனால் அதில் பெண்களை காண்பிக்கவில்லை. பாண்டவ சேனையில் ஆண்களைக் காண்பிக்கின்றனர். மற்றபடி சக்தி சேனைகள் எங்கு சென்றனர்? இது குப்தமானது. இந்த சிவசக்திகள் எங்கு சென்றனர்? என்பது யாருக்கும் தெரியாது. இவர்களது சரித்திரம் பற்றி எதையும் காண்பிப்பது கிடையாது. சக்திகள் எப்படி யுத்தம் செய்தனர்? சேனையைக் காண்பிக்கின்றனர் அல்லவா! யாரும் புரிந்து கொள்வது கிடையாது, யார் என்ன கூறினார்களோ அதை எழுதி விட்டனர். சரியான முறையில் இப்போது நீங்கள் அறிவீர்கள். நாம் அனைவரும் நடிகர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவருக்கான பாகம் கிடைத்திருக்கிறது. படைப்பவர், டைரக்டர், முக்கிய நடிகர் என்று கூறப்படுகின்ற பாபாவின் மூலம் நீங்கள் முழு நாடகத்தின் இரகசியங்களையும் அறிவீர்கள். இதில் 4 யுகங்கள் உள்ளன, அதாவது 4 பாகங்கள் உள்ளன, அதை எபிக் (யுகம்) என்று கூறுகின்றனர். உண்மையில் இருப்பது 5 ஆகும், ஐந்தாவதாக இருக்கும் இந்த யுகம் கல்யாணகாரி யுகமாகும். சத்யுகம் மற்றும் திரேதாவின் சங்கமத்திற்கு கல்யாணகாரி என்று கூறமாட்டோம், ஏனெனில் இறங்கும் கலை ஏற்பட்டு விடுகிறது. சதோ பிரதானம், சதோ, இரஜோ, தமோ என்பது ஏணியாகும். ஆக ஏணியில் இறங்கியே ஆக வேண்டும். ஞானத்தில் நீங்கள் ஒரே ஒரு முறை தீவிர முயற்சி செய்து முன்னேறுகிறீர்கள், பிறகு ஏணியில் மேலே ஏறியதும் கீழே இறங்க ஆரம்பித்து விடுகிறீர்கள். ஏணியில் இறங்குவது மிகவும் எளிதாக இருக்கும். ஏறுவது தான் கடினமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்! மனிதனிலிருந்து தேவதையாக ஆவது உயர்ந்த ஏற்றம் அல்லவா! முன்னேறினால் அன்பின் சுவையான ரசம் என்றும் கூறுகின்றனர் அல்லவா! இப்போது நாம் ஏறிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். பிறகு ஒரேயடியாக கீழே விழும் போது எலும்புகள் உடைந்து விடுகிறது. எவ்வளவு காலம் தேவைப்படுகிறது! இது மிகவும் நீண்ட ஏற்றமாகும். இப்போது நாம் ஏறிக் கொண்டிருக்கிறோம், பிறகு இறங்குவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏறுவதற்கு விநாடி ஆகிறது, தாமதமாக வருபவர்கள் விநாடியில் ஏறிவிட முடியும். அபலைகள் மீது, தாய்மார்களின் மீது எவ்வளவு கொடுமை ஏற்படுகிறது! பாபா, அவமானத்திலிருந்து (துன்பத்திலிருந்து) காப்பாற்றுங்கள் என்று சகோதரிகள் அழைக்கின்றனர். அபலைகளை மீது அதிக கொடுமை படுத்துகின்றனர், அடிக்கின்றனர் எனில் அவர்களுக்கு பாவத்தின் கணக்கு நிறைந்து விடுகிறது, அது நிறைந்து பிறகு உடைந்து விடுகிறது. பானையிலிருந்து சீதை வெளிப் பட்டதாக காண்பிக்கின்றனர் அல்லவா! இப்போது உண்மையிலும் உண்மையான சீதை களாகிய நீங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இராதையும் வெளிப்படுகிறார், சீதையும் வெளிப்படுகிறார். இரகுபதி இராகவ இராஜாராம் என்று எழுதி சீதையின் பெயர் சேர்த்து விட்டனர். ஜெகதம்பா, ஜெகத்பிதாவே பிறகு இராஜராஜேஸ்வர், இராஜராஜேஸ்வரி ஆகின்றனர். இவர்களே இலட்சுமி, நாராயணனாக இருந்தனர், பிறகு கடைசியில் பாருங்கள் என்ன ஆகிவிட்டனர்! சத்யுகத்தில் இந்த அளவிற்கு 33 கோடி மனிதர்கள் இருப்பது கிடையாது. அங்கு மிகவும் குறைவாக இருப்பர். பிறகு தான் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தெய்வீக வம்சத்தினர்களே மறுபிறவி எடுத்து எடுத்து பிறகு அசுர வம்சத்தினர்களாக ஆகிவிடுகின்றனர். இப்போது அசுர வம்சத்தினர்களை மீண்டும் தெய்வீக வம்சத்தினர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வாறு உயர்த்துகிறார். உங்களது புத்தியில் முழு ஞானமும் வந்து விட்டது. நீங்கள் தான் திரிகால தர்சிகளாக ஆகிறீர்கள். மூன்று காலங்களின் ஞானமும் கிடைத்திருக்கிறது. நாம் பூஜைக்குரிய, வைகுண்டநாதர்களாக இருந்தோம், இப்போது பூஜாரி, நரகவாசிகளாக ஆகிவிட்டோம் என்று நீங்கள் கூறுவீர்கள். நாம் தான் ...... என்பதன் யதார்த்தமான பொருளை அறியாத காரணத்தினால் ஆத்மாக்களாகிய நாம் தான் பரமாத்மா என்று கூறிவிட்டனர். எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டனர்! இப்போது உங்களுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது, இது உலக சரித்திர பூகோளமாகும். நீங்கள் இந்த எல்லையற்ற சக்கரத்தையும் அறிந்து கொண்டீர்கள். மூன்று லோகங்கள், மூன்று காலங்களையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.

இந்த குப்தமான விசயங்களை தந்தை கற்பிக்கின்றார். கீதையில் இப்படிப்பட்ட விசயங்கள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. இந்த ஞானம் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் தான் கற்பிக்க முடியும். பிறகு தனது பாகத்தை அதே போன்று தான் திரும்பவும் நடிப்பார். கிறிஸ்து தனது பாகத்தை தனது நேரத்தில் திரும்பவும் நடிப்பார். நாம் சூரியவம்சி, சந்திரவம்சி, வைஷ்யா, சூத்ரவம்சிகளாக ஆகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாமி, பௌத்தர்கள் திரும்பவும் தங்களது பாகத்தை நடிப்பர். எதுவரை தேவி தேவதா தர்மம் இருக்குமோ அதுவரை மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்காது. உலகம் ஒன்றே ஒன்று தான். தந்தை படைப்பவர், மேலும் படைப்புகளின் இரகசியத்தைப் புரிய வைத்திருக்கின்றார். ஒவ்வொரு மனிதனும் எல்லைக்குட்பட்ட பிரம்மாவாக இருக்கின்றனர். குழந்தைகளை படைக்கின்றார், பிறகு அவர்களை பாலனை செய்கின்றார். படைப்புகளுக்கு படைக்கும் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். சகோதரன், சகோதரனுக்கு ஆஸ்தி கொடுத்தார் என்று எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒன்று எல்லைக்குட்பட்ட தந்தை என்பதை குழந்தைகள் புரிந்திருக் கிறீர்கள். இது அனைவருக்கும் தெரியும். எல்லைக்குட்பட்ட தந்தை யிடமிருந்து எல்லைக் குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. லௌகீக ஆசிரியர் கற்பிக்கின்றார், கற்பிப்பதன் மூலம் யாரும் முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆகிவிடுவது கிடையாது. இது எல்லையற்ற விசயமாகும். எல்லைக்குட்பட்ட அனைவரும் அந்த எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றனர். அவரைத் தான் பாபா, சிவபாபா என்று கூறுகின்றனர். படைப்பவரை பாபா என்று கூறுவர் அல்லவா! பாபா என்பது சாதாரண பெயராகும், அதனால் தான் சிவபாபா என்று கூறுகிறோம். அவர் நிராகாராக இருக்கின்றார். சிவபாபாவிடத்தில் உங்களுக்கு என்ன சம்மந்தம் இருக்கிறது? என்று கேட்கப்படுகிறது. சிவபாபா! பையை நிறைத்து விடுங்கள் என்று கூறுகின்றனர் அல்லவா! பாபாவிற்கு சிவன் என்ற பெயர் மிகவும் பொருத்தமானது. சங்கரின் சித்திரம் தனிப்பட்டது. சிவனையும் சங்கரையும் இணைத்து சிவசங்கர் என்று கூறுவது மிகப் பெரிய தவறாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை மறந்து விட்டனர். சித்திரம் மிகவும் நன்றாக இருக்கிறது. பிரம்மாவின் மூலம் இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஞானமும் இப்போது தான் கிடைக்கும். நீங்கள் இப்போது பிராமணர் களாக ஆகியிருக்கிறீர்கள். பிராமணர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களை தத்தெடுக்கிறேன். பிரம்மாவையும் தத்தெடுத்திருக்கிறேன். பிரம்மாவின் மூலம் பிராமணர்கள் உருவாகின்றனர். நாம் இப்போது பிரஜாபிதா பிரம்மா குமார், குமாரிகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரஜாபிதா என்ற வார்த்தை அவசியம் போட வேண்டும். பிரம்மா என்று போடும் போது பலருக்கு பிரம்மா என்ற பெயர் இருக்கிறது. பிரஜாபிதா என்ற பெயர் யாருக்கும் இருக்காது. இவர் மனிதர் அல்லவா! ருத்ரன் சிவபாபா இந்த ஞான யக்ஞத்தை படைத்திருக்கின்றார். அவசியம் பிரம்மா தேவை. பிராமணர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். யக்ஞம் பிராமணர்களின் மூலம் உருவாக்கப்படுகிறது. பிராமணர் களாகிய நீங்களே பிறகு தேவதைகளாக ஆக வேண்டும். இந்த உலகிற்கு வந்தே ஆக வேண்டும், பிறகு அனை வரும் எங்கு செல்வார்கள்? இந்த ருத்ர ஞான யக்ஞத்தில் அனைத்தும் சுவாஹா ஆகிவிடும். இந்த ருத்ர ஞான யக்ஞத்தில் பழைய உலகம் பலிபொருள் ஆகிவிடும். இந்த ருத்ர ஞான யக்ஞத்தின் மூலம் தான் விநாச நெருப்பு வெளிப்படும். சங்கர் மூலம் விநாசம் என்று பாடப்பட்டிருக்கிறது. ஒத்திகையைப் பார்க்கிறீர்கள். இது அதே நேரமாகும். ஐரோப்பியர்கள் யாதவர்கள், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் என்றும் பாடப்பட்டிருக்கிறது. பாரதவாசிகள் தங்களது தர்மத்தையே மறந்து விட்டனர். சிலைகளும் உள்ளன, ஆனால் யாருக்கும் தெரியாது. தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்பது. ஆனால் அவர்களுக்கு இந்த இராஜ்யத்தைக் கொடுத்தது யார்? தேவி தேவதா தர்மம் எப்படி ஸ்தாபனை ஆனது? என்பதை முற்றிலும் அறியவில்லை. தர்மத்தை யார் ஸ்தாபனை செய்கிறார்களோ அவரே புரிய வைக்கின்றார். வேறு யாரும் உலகின் சரித்திர, பூகோளத்தை புரிய வைக்க முடியாது. மூன்று லோகங்களின் ஞானம் யாரும் கொடுக்க முடியாது. அனைவரின் பாகத்தையும் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது பாகத்தை நடிப்பதற்கு வருவார்கள். நாட்கள் செல்லச் செல்ல உங்களது மகிமை அதிகரித்துக் கொண்டே செல்லும். விரைவாக அதிகமாக வளர வேண்டும். ஆக எவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்ட வேண்டியிருக்கும்! நாடகத்தில் பாகம் இருக்கிறது. எவ்வளவு குழந்தைகள் வருவார்கள் என்பதைப் புரிந்திருக்கிறீர்களா! வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். (அறிவுரை) ஞானம் பெறுவதற்காகவே வருவார்கள். மற்றபடி பலர் சுற்றிப் பார்ப்பதற்காக வருவார்கள். கல்வித் துறை அமைச்சர் வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவருக்கும் ஞானம் புரிய வைக்க வேண்டும். நம்முடையது உலக சரித்திர, பூகோளமாகும். முழு கல்ப சக்கரத்தைப் பற்றி யாரும் அறியவில்லை. நீங்கள் இப்போது ஞானக் கடலின் மூலம் மாஸ்டர் ஞானக் கடலாக ஆகிவிட்டீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எல்லையற்ற சரித்திர, பூகோளத்தை படிக்க வேண்டும் மற்றும் மற்றவர்களுக்கு கற்பிக்கவும் வேண்டும். அனைத்து அலங்காரங்களையும் தாரணை செய்வதற்காக தூய்மையான ஃபரிஸ்தா ஆக வேண்டும்.

2) புத்திசாலிகளுக்கெல்லாம் புத்திசாலி ஒரே ஒரு தந்தையே ஆவார், அவரது ஸ்ரீமத் படி மட்டுமே நடந்து புத்திசாலிகளாக ஆக வேண்டும். இந்த பிராமண வாழ்க்கை விலைமதிப்பற்றது என்ற போதையில் இருக்க வேண்டும்.

வரதானம்:
நிறம் மற்றும் தோற்றத்துடன் கூட கூடவே முழுமையான தூய்மையின் நறுமணத்தை தாரணை செய்யக் கூடிய ஆகர்சண மூர்த்தி ஆவீர்களாக.

பிராமணர் ஆகி இருக்கும் காரணத்தால் அனைவருக்கும் நிறமும் வந்து விட்டது மற்றும் தோற்றத்தில் கூட மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனால் நறுமணம் வரிசைக்கிரமமாக உள்ளது. ஆகர்சணமூர்த்தி ஆக வேண்டும் என்றால், நிறம் மற்றும் ரூபத்துடன் கூடவே முழுமையான தூய்மையின் நறுமணம் வேண்டும். தூய்மை என்றால் பிரம்மசாரியாக இருப்பது மட்டுமல்ல, ஆனால் தேகத்தின் பற்றுதலிலிருந்தும் விலகி இருத்தல். மனம் தந்தையைத் தவிர வேறு எந்தவிதமான பற்றுதலில் போகக் கூடாது. உடலாலும் பிரம்மசாரி, சம்பந்தத்திலும் பிரம்மசாரி மற்றும் சம்ஸ்காரங்களில் கூட பிரம்மசாரி - அப்பேர்ப் பட்ட நறுமணம் உடைய ஆன்மீக ரோஜா மலர்களே ஆகர்சண (கவர்ந்திழுக்கும்) மூர்த்தி ஆகிறார்கள்.

சுலோகன்:
சரியான (யதார்த்தமான) சத்தியத்தை பகுத்தறிந்து கொண்டீர்கள் என்றால் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்வது சுலபமானதாக ஆகி விடும்.