21.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! இந்த சங்கமயுகம் சர்வோத்தமர்களாக ஆவதற்கான சுப (அநுகூலமான) சமயமாகும், ஏனென்றால் இந்த சமயத்தில் தான் பாபா உங்களுக்கு நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான கல்வியை கற்பிக்கின்றார்

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களிடத்தில் எந்தவொரு ஞானம் இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எப்படிப் பட்ட சூழ்நிலையானாலும் அழ முடியாது? (அழுவதில்லை)

 

பதில்:

உங்களிடத்தில் இந்த உருவாக்கப்பட்ட நாடகத்தின் ஞானம் இருக்கிறது, இந்த நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதனுடைய நடிப்பு இருக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், பாபா நமக்கு சுகத்தின் ஆஸ்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிறகு நாம் எப்படி அழ முடியும். தூரத்தில் இருக்கும் பிரம்மத்தில் இருப்பவரைப் பற்றி கவலை இருந்தது, இப்போது அவரே கிடைத்து விட்டார் எனும்போது வேறு என்ன வேண்டும். பாக்கியசாலி குழந்தைகள் ஒருபோதும் அழுவதில்லை.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுக்கு ஒரு விசயத்தைப் புரியவைக் கின்றார். சித்திரங்களில் கூட திருமூர்த்தி சிவபாபா குழந்தைகளுக்காகப் புரிய வைக்கின்றார் என்று எழுத வேண்டும். நீங்களும் கூட யாருக்காவது புரிய வைக்கின்றீர்கள் என்றால், சிவபாபா இப்படி கூறுகின்றார் என்று ஆத்மாக்களாகிய நீங்கள் சொல்வீர்கள். இந்த பிரம்மா பாபாவும் கூட - பாபா உங்களுக்குப் புரிய வைக்கின்றார் என்று சொல்வார். இங்கே மனிதர்கள் மனிதர்களுக்குப் புரிய வைப்பதில்லை ஆனால் பரமாத்மா ஆத்மாக் களுக்குப் புரிய வைக் கின்றார் அல்லது ஆத்மா, ஆத்மாவிற்குப் புரிய வைக்கின்றது. சிவ பாபா தான் ஞானக்கடலாவார் மேலும் அவர் ஆன்மீக தந்தையாவார். இந்த சமயத்தில் ஆன்மீகத் தந்தையிடமிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. இங்கே தேக அகங்காரத்தை விட வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் ஆத்ம- அபிமானியாக ஆகி பாபாவை நினைவு செய்ய வேண்டும். கர்மத்தையும் செய்யுங்கள், தொழில் போன்ற வற்றைக் கூட செய்யுங்கள், மற்றபடி எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அதில் தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். சிவபாபா இவருக்குள் வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர் சத்திய மானவராக இருக்கின்றார், உயிரோட்டமுள்ளவராக இருக்கின்றார். சத்-சித் ஆனந்த சொரூபம் என்று சொல்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் அல்லது வேறு எந்த மனிதருக்கும் இந்த மகிமை கிடையாது. உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஒருவர் மட்டுமே. அவர் பரம் ஆத்மா ஆவார். இந்த ஞானம் கூட உங்களுக்கு இந்த சமயத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. பிறகு வேறு எப்போதும் கிடைக்காது. உங்களை ஆத்ம அபிமானிகளாக்கி பாபாவை நினைவு செய்ய வைக்க, ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாபா வருகின்றார், இதன்மூலம் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகின்றீர்கள், வேறு எந்த வழியும் இல்லை. ஹே! தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று மனிதர்கள் என்னவோ அழைக்கிறார்கள் ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தூய்மையற்றவர் களை தூய்மையாக்கும் சீதாராம் என்று சொன்னாலும் சரியே ஆகும். நீங்கள் அனைவரும் சீதைகள் அல்லது பக்தைகளாவீர்கள். அவர் ஒருவர் தான் இராமர், பகவான், பக்தர்களாகிய உங்களுக்கு பகவானின் மூலம் பலன் வேண்டும். அந்தப் பலன் முக்தி அல்லது ஜீவன் முக்தியாகும். முக்தி-ஜீவன் முக்தியை வழங்கும் வள்ளல் அந்த ஒரு தந்தையே ஆவார். நாடகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த நடிப்பை உடையவர்களும் இருக்கிறார் கள் என்றால் கீழான நடிப்பை உடையவர்களும் இருக்கிறார்கள். இது எல்லையற்ற நாடகமாகும், இதை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் இந்த சமயத்தில் தமோபிரதான (கீழான) நிலையிலிருந்து சதோபிரதான புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சதோபிரதானமானவர்களைத் தான் சர்வோத்தமர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் சர்வோத்தமர்கள் இல்லை. பாபா உங்களை சர்வோத் தமர்களாக ஆக்குகின்றார். இந்த நாடகச் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை யாருமே தெரிந்திருக்கவில்லை. கலியுகம், சங்கமயுகம் பிறகு சத்யுகம் வருகிறது. பழையதை யார் புதியதாக்குவது? பாபாவைத் தவிர வேறு யாரும் மாற்ற முடியாது. பாபா தான் சங்கம யுகத்தில் வந்து படிப்பிக்கின்றார். பாபா சத்யுகத்திலும் வருவதில்லை, கலியுகத்திலும் வருவதில்லை. என்னுடைய நடிப்பே சங்கமயுகத்தில் தான் ஆகும் எனவே தான் சங்கம யுகத்தை கல்யாணகாரி யுகம்(நன்மைக்கான யுகம்) என்று சொல்லப்படுகிறது. இது நன்மைக் கான, மிகவும் உயர்வான அநுகூலமான நன்மை பயக்கும் கால சங்கமயுகமாகும். இச்சமயத்தில் தான் பாபா வந்து குழந்தைகளாகிய உங்களை நரனிலிருந்து நாராயணனாக மாற்று கின்றார். மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருப்பார்கள் ஆனால் சத்யுகத்தில் தெய்வீக குணமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள், அவர்களை ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றேன், அதற்காக கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒரு பாபாவே தான். மற்றவர்கள் அனவரும் மணமகள்கள், பக்தைகளாவர். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் சீதா-ராமன் என்று சொல்வதும் சரியே ஆகும். ஆனால் கடைசியில் ரகுபதி ராகவ ராஜா ராம் என்று சொல்லி விடுகிறார்கள், அது தான் தவறாகி விடுகிறது. மனிதர்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள், அர்த்த மில்லாமல் வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரவம்ச தர்மம் கூட இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா வந்து பிராமண குலத்தை ஸ்தாபனை செய்கின்றார், இதை இராஜ்யம் என்று சொல்ல முடியாது. இது குடும்பமாகும், இங்கே பாண்டவர்களுடைய அல்லது கௌரவர்களுடைய இராஜ்யமோ இல்லை. யார் கீதையை படித்திருப்பார்களோ, அவர்களுக்கு இந்த விசயங்கள் சீக்கிரம் புரிய வரும். இது கூட கீதையே ஆகும். யார் சொல்வது? பகவான் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முதல்-முதலில் பகவான் யார்? என்ற ஞானத்தையே கொடுக்க வேண்டும். அவர்கள் கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்கிறார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தில் இருப்பார். அவருக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றதாகும். சரீரத்தினுடைய பெயர் தான் மாறுகிறது. ஆத்மாவின் பெயர் ஒருபோதும் மாறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மாவின் சரீரம் சத்யுகத்தில் தான் இருக்கிறது. அவர் தான் முதல் நம்பரில் செல்கிறார். லஷ்மி-நாராயணன் ஒன்று பிறகு இரண்டாவது, மூன்றாவது என்று வருவார்கள். எனவே அவர்களுடைய மதிப்பெண்களும் அந்தளவிற்கு குறைவாக இருக்கும். மாலை உருவாகின்றது அல்லவா. ருண்ட (மனித மாலை) மாலையும் இருக்கிறது பிறகு ருத்ர மாலையும் இருக்கிறது என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். விஷ்ணுவின் கழுத்தில் ருண்ட மாலையை காட்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக விஷ்ணு புரிக்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். எனவே நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள். முதல்-முதலில் நீங்கள் சிவனின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள், அதனை ருத்ர மாலை என்றழைக்கப்படுகிறது, அதைத் தான் ஜபிக்கிறார்கள். மாலை பூஜிக்கப் படுவதில்லை, நினைத்து உருட்டப்படுகிறது. யார் விஷ்ணுபுரியின் இராஜ்யத்தில் வரிசைக் கிரமமாக வருகிறார்களோ, அவர்கள் தான் மாலையின் மணியாக ஆகின்றார்கள். மாலையில் முதலில் மலர் இருக்கிறது பிறகு ஜோடி (யுகல்) மணிகள் இருக்கின்றன. குடும்ப மார்க்கம் அல்லவா. குடும்ப மார்க்கம் பிரம்மா, சரஸ்வதி மற்றும் குழந்தைகளிலிருந்து ஆரம்பமாகிறது. இவர்கள் தான் பிறகு தேவதைகளாகிறார்கள். லஷ்மி-நாராயணன் தான் முதலாவது ஆகும். மேலே உள்ள மலர் சிவபாபா இருக்கின்றார். மாலையை உருட்டி- உருட்டி கடைசியில் மலருக்குத் தலை வணங்குகிறார்கள். சிவபாபா மலராக இருப்பவர் மறுபிறவியில் வருவ தில்லை, இவருக்குள் பிரவேசிக்கின்றார். அவர் தான் உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இவருடைய ஆத்மா தனிப்பட்டதாகும். அது தன்னுடைய சரீரத்தை நிர்வாகம் செய்கிறது, அவருடைய வேலை ஞானத்தை மட்டும் கொடுப்பதாகும். யாருடைய மனைவியோ அல்லது தந்தை போன்றவர்களோ இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுடைய ஆத்மாவை பிராமணருடைய உடலில் அழைப்பதைப் போல் ஆகும். முன்பு வந்தன, அவை ஒன்றும் சரீரத்தை விட்டு விட்டு வருவதில்லை. இது நாடகத்தில் முன்பே பதிவாகியிருக்கிறது. இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். அந்த ஆத்மா சென்று விட்டது, சென்று வேறொரு சரீரத்தை எடுத்திருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த ஞானம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது, ஆகையினால் யாராவது இறந்தால் கூட உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அம்மா இறந்தாலும் கூட அல்வா அதாவது (ஞானத்தைக் கேட்க வேண்டும்) சாப்பிட வேண்டும். (சாந்தா சகோதரியைப் போல்). நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று பி.கு. குழந்தை சென்று புரிய வைத்தது. அழுவதினால் திரும்பி வருவார்களா என்ன? பாக்கியசாலிகள் அழுவார்களா என்ன? எனவே அங்கே அனைவருடைய அழுகையையும் நிறுத்தி புரிய வைக்க ஆரம்பித்து விட்டார். இப்படி நிறைய குழந்தைகள் சென்று புரிய வைக்கிறார்கள். இப்போது அழுவதை நிறுத்துங்கள். பொய்யான பிராமணர்களுக்கு எதையும் கொடுக்காதீர்கள். நாங்கள் உண்மையான பிராமணர் களை அழைத்து வருகிறோம். பிறகு ஞானத்தை கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். இவர் சரியான விசயத்தைத் தான் பேசுகிறார் என்று புரிந்து கொள்கிறார்கள். ஞானத்தை கேட்டு-கேட்டு அமைதியாகி விடுகிறார்கள். 7 நாட்கள் ஏதாவது பாகவதம் போன்ற சொற்பொழிவுகள் வைத்தாலும் கூட மனிதர்களின் துக்கம் விலகுவதில்லை. இந்த பி.கு. குழந்தைகள் அனைவருடைய துக்கத்தையும் விலக்கி விடுகிறார்கள். அழுவதற்கான அவசியம் இல்லை என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது உருவாக்கப்பட்ட நாடகமாகும். ஒவ்வொருவரும் அவரவருடைய நடிப்பை நடிக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் அழக்கூடாது. எல்லையற்ற தந்தை-டீச்சர்-குரு கிடைத்திருக்கிறார், அவருக்காகத் தான் நீங்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். தூரத்திலிருக்கும் பிரம்மத்தில் இருக்கக் கூடிய பரமபிதா பரமாத்மா கிடைத்து விட்டார், வேறு என்ன வேண்டும். பாபா சுகத்தின் ஆஸ்தியையே தருகின்றார். நீங்கள் தந்தையை மறந்து விடுகிறீர்கள் எனவே தான் அழ வேண்டியிருக்கிறது. பாபாவை நினைவு செய்தால் தான் குஷி இருக்கும். ஆஹா! நான் உலகத்திற்கு எஜமானனாக ஆகின்றேன். பிறகு 21 தலைமுறைகளுக்கு ஒருபோதும் அழ மாட்டீர்கள். 21 தலைமுறை என்றால் முழுமையாக முதுமை அடையும் வரை அகால மரணம் நடப்பதில்லை, எனவே உள்ளுக்குள் எவ்வளவு மறைமுகமான குஷி இருக்க வேண்டும். நாம் மாயையின் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர்களாக ஆவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆயுதங்கள் போன்றவற்றின் விசயம் கிடையாது. நீங்கள் சிவசக்திகளாவீர்கள். உங்களிடம் ஞானக் கோடாரி, ஞானம் பானம் இருக்கிறது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் தேவிகளுக்கு ஸ்தூல அம்பு போன்றவற்றை கொடுத்து விட்டார்கள். ஞான வாளின் மூலம் விகாரங்களை வெல்ல வேண்டும், மற்றபடி தேவிகள் இம்சிப்பவர்களா என்ன, என்று பாபா கேட்கின்றார். இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். சாது- சன்னியாசிகள் போன்றவர்கள் துறவறமார்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர், அவர்கள் குடும்ப மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதே இல்லை. நீங்கள் பழைய உலகத்தை, பழைய சரீரத்தை சன்னியாசம் செய்கிறீர்கள். இப்போது தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஆத்மா தூய்மையாக ஆகி விடும். ஞானத்தினுடைய சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். அதன்படி புதிய உலகத்தில் பிறவி எடுப்பீர்கள். ஒருவேளை இங்கேயே பிறவி எடுத்தாலும் கூட ஏதாவது நல்ல குடுப்பத்தில் ராஜாவிடம் அல்லது தர்மம் நிறைந்த வீட்டிற்கு அந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பீர்கள். இவர்கள் தேவி என்று சொல்வார்கள். கிருஷ்ணருடைய மகிமை எவ்வளவு பாடுகிறார்கள். சிறுவயதில் வெண்ணெய் திருடினார், பானையை உடைத்தார், இதை செய்தார்... எவ்வளவு களங்கம் சுமத்தினார்கள். நல்லது, கிருஷ்ணரை ஏன் கருப்பாக உருவாக்கி யுள்ளார்கள்? அங்கே கிருஷ்ணர் வெள்ளையாக (தூய்மையாக) இருப்பார் அல்லவா. பிறகு சரீரம் மாறிக்கொண்டே இருக்கிறது, பெயரும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசனாக இருந்தார், அவரை ஏன் கருப்பாக உருவாக்கியுள்ளார்கள்? ஒருபோதும் யாரும் சொல்ல முடியாது. கருப்பாக மாற்ற அங்கே பாம்பு போன்றவைகள் கிடையாது. இங்கே விஷம் (விகாரம்) ஏறி விடுவதால் கருப்பாகி விடுகிறார்கள். அங்கே அதுபோன்ற விசயங்கள் நடக்க முடியாது. நீங்கள் இப்போது தெய்வீக சம்பிரதாயத்தவர் களாக ஆகக் கூடியவர்களாவீர்கள். இந்த பிராமண சம்பிரதாயத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதல்-முதலில் பாபா பிரம்மாவின் மூலம் பிராமணர்களை தத்தெடுக்கின்றார். பிரஜாபிதா என்றால் அவருடைய பிரஜைகளும் அதிக மானவர்கள் இருக்கிறார்கள். பிரம்மா வின் குழந்தை சரஸ்வதி என்று சொல்கிறார்கள். மனைவி கிடையாது. இது யாருக்குமே தெரியவில்லை. பிரஜாபிதா பிரம்மாவிற்கு அனைவருமே வாய்வழி வம்சத்தினர் ஆவர். மனைவியின் விசயமே கிடையாது. இவருக்குள் தந்தை பிரவேசித்து நீ என்னுடைய குழந்தை என்று கூறுகின்றார். நான் இவருடைய பெயரை பிரம்மா என்று வைத்துள்ளேன், யாரெல்லாம் குழந்தைகளாக ஆகிறார்களோ, அவர்களுடைய பெயர் அனைத்தையும் மாற்றியுள்ளேன். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது மாயையின் மீது வெற்றி அடைகிறீர்கள், இதைத்தான் தோல்வி மற்றும் வெற்றியின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. பாபா எவ்வளவு மலிவான வியாபாரம் செய்ய வைக்கின்றார். இருந்தாலும் மாயை தோல்வி யடையச் செய்து விடுகிறது எனும்போது ஓடி விடுகிறார்கள். 5 விகாரங்கள் எனும் மாயை தோல்வி அடையச் செய்கிறது. யாருக்குள் 5 விகாரங்கள் இருக்கிறதோ, அவர்களைத் தான் அசுர சம்பிரதாயத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. கோயில்களில் தேவிகளுக்கு முன்னால் சென்று கூட மகிமை பாடுகிறார்கள் - தாங்கள் சர்வகுணங்களும் நிறைந்தவர்கள்......... பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார் - நீங்கள் தான் பூஜிக்கத்தக்க தேவதைகளாக இருந்தீர்கள் பிறகு 63 பிறவிகள் பூஜாரிகளாக ஆனீர்கள், இப்போது மீண்டும் பூஜிக்கத்தக்கவர்களாக ஆகின்றீர்கள். தந்தை பூஜிக்கத்தக்கவர்களாக மாற்றுகின்றார். இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. பாபா எந்த சாஸ்திரங் களையும் படித்ததில்லை, அவர் இராவணன் பூஜாரியாக மாற்றுகிறான், சுயம் ஞானக்கடல் ஆவார். வேர்ல்ட் ஆல்மைட்டி அத்தாரிட்டி ஆவார். ஆல்மைட்டி என்றால் சர்வசக்திவான் ஆவார். நான் அனைத்து வேத- சாஸ்திரங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்திருக் கின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட் களாகும். நான் இந்த விசயங்கள் அனைத்தையும் தெரிந்துள்ளேன். துவாபர யுகத்திலிருந்து தான் நீங்கள் பூஜாரிகளாக ஆகின்றீர்கள். சத்யுகம்-திரேதாவில் பூஜையே நடப்பதில்லை. அது பூஜைக்குரிய வம்சமாகும். பிறகு பூஜாரி வம்சம் உருவாகிறது. இந்த சமயத்தில் அனைவரும் பூஜாரிகளாவர். இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது. பாபா தான் வந்து 84 பிறவிகளின் கதையை கூறுகின்றார். பூஜிக்கத்தக்கவர்கள் மற்றும் பூஜாரி என்பன போன்ற இந்த விளையாட்டு முழுவதும் உங்களைப் பற்றி தான் இருக்கிறது. ஹிந்து தர்மம் என்று சொல்லி விடுகிறார்கள். உண்மையில் பாரதத்தில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது, ஹிந்து தர்மம் அல்ல. எவ்வளவு விசயங்கள் புரிய வைக்க வேண்டியுள்ளது. இந்த படிப்பே ஒரு வினாடியினுடையதாகும். இருந்தாலும் எவ்வளவு காலம் ஆகி விடுகிறது. சிலர் கடலை மையாக்கி, காடு முழுவதையும் பேனாவாக்கி எழுதினாலும் ஞானத்தை முடிக்க முடியாது என்று சொல்கிறார்கள். உங்களுக்கு கடைசி வரை ஞானத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன். ஞானத்தின் புத்தகங்களை எவ்வளவு உருவாக்குவீர்கள். ஆரம்பத்தில் கூட பாபா அதிகாலையில் எழுந்து எழுதுவார், பிறகு மம்மா கூறுவார், அப்போதிலிருந்து அச்சடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. எவ்வளவு காகிதங்கள் அழிக்கப்பட்டிருக்கும். கீதை ஒன்றே ஒன்று எவ்வளவு சிறியதாக இருக்கிறது. கீதையின் லாக்கெட் கூட உருவாக்குகிறார்கள். கீதைக்கு அதிக தாக்கம் இருக்கிறது, ஆனால் கீதை ஞானத்தை வழங்கிய வள்ளலை மறந்து விட்டார்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஞான வாளின் மூலம் விகாரங்களை வெல்ல வேண்டும். ஞானத்தின் சம்ஸ்காரங்களை நிரப்ப வேண்டும். பழைய உலகம் மற்றும் பழைய சரீரத்தை சன்னியாசம் செய்ய வேண்டும்.

 

2) பாக்கியசாலிகளாக ஆகப்போகும் குஷியில் இருக்க வேண்டும், எந்தவொரு விசயத்தைப்பற்றியும் கவலைப்படக் கூடாது. யாராவது சரீரத்தை விட்டு விட்டால் கூட துக்கத்தினால் கண்ணீர் விடக்கூடாது.

 

வரதானம்:

கிரீடம் மற்றும் சிம்மாசனத்தை எப்பொழுதும் நிலையாக வைத்து இருக்கக்கூடிய நிரந்தரமான தானாகவே (இயல்பாகவே) நினைவு செய்யும் யோகி ஆகுக.

 

நிகழ்கால சமயத்தில் தந்தை மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் கிரீடம் மற்றும் சிம்மாசனம் கிடைத்துள்ளன. இப்போதைய இந்த கிரீடம் மற்றும் சிம்மாசனம் அனேக பிறவிகளுக்கான கிரீடம் மற்றும் சிம்மாசனத்தை அடையச் செய்கின்றது. விஷ்வ நன்மைக் கான பொறுப்பு கிரீடம் மற்றும் பாப்தாதாவின் இதய சிம்மாசனம் ஆகிய இரண்டும் எப்பொழுதும் நிலையாக இருக்க வேண்டும், அப்பொழுதே நிரந்தரமான, தானாகவே (இயல்பாக) நினைவு செய்யும் யோகி ஆகுவீர்கள். இத்தகையவர்கள் எவ்வித உழைப்பும் செய்வதற்கான விசயம் இருக்காது, ஏனெனில், ஒன்று சம்மந்தம் நெருக்கமானதாக இருக்கும், இரண்டாவதாக பிராப்தி அளவற்றதாக இருக்கும். எங்கு பிராப்தி இருக்குமோ, அங்கு தானாக நினைவும் இருக்கும்.

 

சுலோகன்:

தெளிவான புத்தியுடன் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தீர்கள் என்றால் அதில் வெற்றி அடங்கியுள்ளது.

 

ஓம்சாந்தி