21-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! விநாடியில் முக்தி, ஜீவன்முக்தியைப் பிராப்தியாக அடைவதற்கு மன்மனாபவ, மத்தியாஜீ பவ. தந்தையை யதார்த்தமாகப் புரிந்து கொண்டு நினைவு செய்யுங்கள் மற்றும் அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுங்கள்.

கேள்வி:
எந்த ஒரு போதையின் ஆதாரத்தின் மூலமே நீங்கள் தந்தையை வெளிப்படுத்த முடியும்?

பதில்:
இப்பொழுது நான் பகவானின் குழந்தையாக ஆகியிருக்கிறேன், அவர் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற போதை இருக்க வேண்டும். நான் தான் அனைத்து மனிதர்களுக்கும் உண்மையான வழியைக் கூற வேண்டும். நான் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறேன், நான் எனது இராயல் நடத்தையின் மூலம் தந்தையின் பெயரை வெளிப்படுத்த வேண்டும். தந்தை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமையை அனைவருக்கும் கூற வேண்டும்.

பாடல்:
வரக் கூடிய எதிர்காலத்தின் அதிஷ்டசாலிகள் நீங்கள் .......

ஓம் சாந்தி.
இந்த பாட்டு சுதந்திர வீரர்களுக்காக பாடப்பட்டிருக்கிறது. மற்றபடி உலகின் அதிஷ்டம் என்று எதற்கு கூறப்படுகிறது. என்பதை பாரதவாசிகள் அறியவில்லை. முழு உலகின் அதிஷ்டத்தை மாற்றி நரகத்திலிருந்து சொர்க்கமாக ஆக்கக் கூடியவர் எந்த மனிதனாகவும் இருக்க முடியாது. என்பது முழு உலகின் கேள்வியாக இருக்கிறது, இந்த மகிமை எந்த மனிதனுடையதும் கிடையாது. ஒருவேளை கிருஷ்ணருக்கானது எனில் யாரும் அவரை நிந்தனை செய்ய முடியாது. ஆனால் களங்கம் ஏற்படும் அளவிற்கு கிருஷ்ணர் நான்காம் பிறையை எப்படிப் பார்த்தார்? என்பதையும் புரிந்து கொள்வது கிடையாது. உண்மையில் களங்கம் ஏற்படுவது கிருஷ்ணருக்கு அல்ல, கீதையின் பகவானுக்கும் ஏற்படுவது கிடையாது. களங்கம் பிரம்மாவிற்குத் தான் ஏற்படு கிறது. (கோபிகளை) விரட்டுவதாக கிருஷ்ணர் மீது களங்கம் ஏற்படுத்தியிருக்கின்றனர். சிவபாபாவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஈஸ்வரனின் பின்னால் அவசியம் ஓடுகின்றனர், ஆனால் ஈஸ்வரனை நிந்திக்க முடியாது. ஈஸ்வரனை அல்லது கிருஷ்ணரை நிந்திக்க முடியாது. இருவரின் மகிமையும் உயர்ந்தது. கிருஷ்ணரின் மகிமையும் நம்பர் ஒன் ஆகும். இலட்சுமி நாராயணனுக்கு இந்த அளவிற்கு மகிமை கிடையாது. ஏனெனில் அவர் திருமணம் ஆனவர். கிருஷ்ணர் குமாரர் ஆவார். அதனால் தான் அவரது மகிமை அதிகமாக இருக்கிறது. இலட்சுமி நாராயணனுக்கும் மகிமை இருக்கிறது. 16 கலைகள் நிறைந்தவர், சம்பூர்ண நிர்விகாரி....... என்று பாடுவர். கிருஷ்ணரை துவாபரத்தில் கூறுகின்றனர். இந்த மகிமை பரம்பரையாக நடைபெற்று வருவதாக நினைக்கின்றனர். இவையனைத்து விசயங்களையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது ஈஸ்வரிய ஞானமாகும், ஈஸ்வரன் தான் இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருக்கின்றார். இராம இராஜ்யத்தை மனிதர்கள் புரிந்து கொள்வது கிடையாது. தந்தை வந்து தான் இந்த அனைத்து அறிவையும் கொடுக்கின்றார். அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது கீதை யாகும், கீதையிலேயே தவறாக எழுதி வைத்து விட்டனர். கௌரவர்கள் மற்றும் பாண்டவர் களுக்கான யுத்தம் நடைபெறவே இல்லையெனும் பொழுது அர்ஜுனனுக்கான விசயமே கிடையாது. இங்கு பாடசாலையில் தந்தை வந்து படிப்பை கற்றுக் கொடுக்கின்றார். யுத்த மைதானத்தில் பாடசாலை இருக்க முடியாது. ஆம், இங்கு மாயை இராவணனிடம் யுத்தம் நடைபெறுகிறது. அதன் மீது வெற்றி அடைய வேண்டும். மாயாஜீத் ஜெகத்ஜீத் ஆக வேண்டும். ஆனால் இந்த விசயங்களை துளியளவும் புரிந்து கொள்ள முடியாது. நாடகத்தில் இவ்வாறு தான் பதிவாகி இருக்கிறது. அவர்கள் கடைசியில் வந்து தான் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிய வைக்க முடியும். பீஷ்ம பிதாமகன் போன்றவர்களை இம்சைக்கான அம்புகளால் கொல்லும் விசயம் கிடையாது. சாஸ்திரங்களில் பல விசயங்களை எழுதி வைத்து விட்டனர். தாய்மார்கள் அவர்களிடம் சென்று நேரம் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் இது சம்பந்தமாக உங்களிடம் பேச விரும்புகிறோம் என்று கூறுங்கள். இந்த கீதையை பகவான் கூறியிருக்கின்றார். பகவானுக்குத் தான் மகிமை இருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தனிப்பட்டவர். நமக்கு இந்த விசயத்தில் சந்தேகம் எழுகிறது. ருத்ர பகவானின் மகாவாக்கியம், இந்த ருத்ர ஞான யக்ஞம் அவருடையது ஆகும். நிராகார பரம்பிதா பரமாத்மாவின் ஞான யக்ஞம் இதுவாகும். மனிதர்கள் கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று கூறுகின்றனர். உண்மையில் பகவான் என்று ஒரே ஒருவரைத் தான் கூறுகிறோம். பிறகு அவரது மகிமையை எழுத வேண்டும். கிருஷ்ணரின் மகிமை இதுவாகும், இப்பொழுது இருவரில் கீதையின் பகவான் யார்? கீதையில் எளிய இராஜயோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. எல்லையற்ற சந்நியாசம் செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தேகம், மற்றும் தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், மன்மனாபவ, மத்தியாஜீ பவ. தந்தை மிக நல்ல முறையில் புரிய வைக்கின்றார். கீதையில் ஸ்ரீ பகவானின் மகாவாக்கியம் என்று இருக்கிறது. ஸ்ரீ என்றால் சிரேஷ்டம் என்று பரம்பிதா பரமாத்மா சிவனைத் தான் கூறுவோம். கிருஷ்ணர் தெய்வீக குணங்களுடைய மனிதர் ஆவார். கீதையின் பகவான் சிவன், அவர் தான் இராஜயோகம் கற்பித்திருக்கின்றார். கடைசியில் அனைத்து தர்மங்களும் விநாசம் ஆகி ஒரே ஒரு தர்மம் ஸ்தாபனை ஆகியிருக்கிறது. சத்யுகத்தில் ஒரே ஒரு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. அதை கிருஷ்ணர் அல்ல, பகவான் தான் ஸ்தாபனை செய்திருந்தார். அவரது மகிமை இதுவாகும். அவர் தான் தாயும் நீயே, தந்தையும் நீயே! என்று கூறப்படுகின்றார். கிருஷ்ணரைக் கூறுவதில்லை. நீங்கள் சத்திய தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பகவான் தான் விடுவிப்பவர் (கண்க்ஷங்ழ்ஹற்ர்ழ்) மற்றும் வழிகாட்டியாக (ஏன்ண்க்ங்) இருந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறார் என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். கொசுக்களைப் போன்று அனைவரையும் அழைத்துச் செல்வது என்பது சிவனின் காரியமாகும். சுப்ரீம் என்ற வார்த்தையும் மிக நன்றாக இருக்கிறது. ஆக பரம்பிதா பரமாத்மா சிவனின் மகிமை தனிப்பட்டது, கிருஷ்ணரின் மகிமை தனிப்பட்டது - இரண்டையும் நிரூபணம் செய்து புரிய வைக்க வேண்டும். சிவன் பிறப்பு இறப்பில் வராதவர். அவர் பதீத பாவன் ஆவார். கிருஷ்ணர் முழு 84 பிறவிகளும் எடுப்பவர். இப்பொழுது பரமாத்மா என்று யாரைக் கூறுவது? இதையும் எழுத வேண்டும். எல்லையற்ற தந்தையை அறியாத காரணத்தினால் தான் அநாதைகளாக, துக்கமானவர்களாக ஆகியிருக் கின்றனர். சத்யுகத்தில் எப்பொழுது செல்வந்தர்களாக ஆகிவிடுகிறீர்களோ அப்பொழுது அவசியம் சுகமானவர்களாக இருப்பீர்கள். இவ்வாறு தெளிவான வார்த்தைகள் இருக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். விநாடியில் ஜீவன்முக்தி, இப்பொழுதும் சிவபாபா இவ்வாறு கூறுகின்றார். முழு மகிமையும் எழுத வேண்டும். சிவாய நமஹ, அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இந்த சிருஷ்டிச் சக்கரத்தை புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆகிவிடுவீர்கள். சரியானது எது? என்று இப்பொழுது நீங்கள் முடிவெடுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் சந்நியாசிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும். சபைகளில் அவர்களுக்கு மிகுந்த கர்வம் இருக்கும்.

மனிதர்களுக்கு உண்மையான வழியை எப்படி காண்பிப்பது? என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்க வேண்டும். பகவானின் மகாவாக்கியம் - நான் இந்த சாது போன்றவர்களையும் முன்னேற்றம் செய்கிறேன். விடுவிப்பவர் என்ற வார்த்தையும் இருக்கிறது. என்னுடையவராக ஆகுங்கள் என்று எல்லையற்ற தந்தை தான் கூறுகின்றார். தந்தை குழந்தைகளை வெளிப்படுத்து வார், பிறகு குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை தந்தை என்று கூறுவது கிடையாது. பரம்பிதாவிற்கு அனைவரும் குழந்தைகளாக ஆகிவிட முடியும், ஆனால் மனிதனுக்கு அனைவரும் குழந்தைகளாக ஆக முடியாது. ஆக குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதில் மிகுந்த போதை இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் நாம், இராஜாவின் குழந்தையாகிய இராஜகுமாரரின் நடத்தை எவ்வளவு ராயலாக இருக்கும்! என்பதை நீங்கள் பாருங்கள். ஆனால் பாவம் அவரை (கிருஷ்ணரை) பாரதவாசிகள் களங்கப் படுத்தி விட்டனர். நீங்களும் பாரதவாசிகள் தானே என்று கேட்பர். ஆம், நாமும் தான், ஆனால் நாம் இப்பொழுது சங்கமத்தில் இருக்கிறோம் என்று கூறுங்கள். நாம் பகவானின் குழந்தைகளாக ஆகியிருக்கிறோம் மற்றும் அவரிடத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். பகவானின் மகா வாக்கியம் - உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். கிருஷ்ணரின் விசயமாக இருக்க முடியாது. நாளடைவில் புரிந்து கொள்வர். இராஜா ஜனகரும் சைகையினால் புரிந்து கொண்டார் அல்லவா! பரம்பிதா பரமாத்மாவை நினைவு செய்தார், பிறகு தியானத்தில் சென்று விட்டார். பலர் தியானத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். தியானத்தில் நிராகார உலகம் மற்றும் வைகுண்டத்தை பார்க்கின்றனர். நாம் நிராகார உலகில் வசிப்பவர்கள் என்பதை அறிவீர்கள். பரந்தாமத்திலிருந்து இங்கு வந்து நடிப்பு நடிக்கிறோம். விநாசமும் எதிரில் இருக்கிறது. விஞ்ஞானிகள் சந்திரனுக்குச் செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர், இது தான் விஞ்ஞானத்தின் மிகப் பெரிய கர்வம் ஆகும், பிறகு இதன் மூலம் தன்னையே அழித்துக் கொள்கின்றனர். மற்றபடி சந்திர மண்டலத்தில் எதுவும் கிடையாது. விசயங்கள் மிக நன்றாகத் தான் இருக்கின்றன, ஆனால் புரிய வைப்பதற்கு யுக்தி தேவை. நமக்கு கல்வி கொடுப்பவர் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். அவர் உங்களுக்கும் தந்தையாக இருக்கிறார். அவரது மகிமை தனிப்பட்டது, கிருஷ்ணரின் மகிமை தனிப்பட்டது. ருத்ர ஞான அவிநாசி யக்ஞமாகும். இதில் அனைத்தும் அர்ப்பணம் ஆக வேண்டும். நல்ல கருத்துக்கள் பல இருக்கின்றன, ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது.

ஒன்று ஆன்மீக யாத்திரை, மற்றொன்று உலகீய யாத்திரை என்ற கருத்தும் நன்றாக இருக்கிறது. தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும். ஆன்மீகத் தந்தையின்றி வேறு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. இந்த மாதிரியாக கருத்துக் களை எழுத வேண்டும். மன்மனாபவ-மத்தியாஜீபவ, இது முக்தி, ஜீவன்முக்திக்கான யாத்திரை யாகும். யாத்திரையை தந்தை தான் செய்விப்பார், கிருஷ்ணர் செய்விக்க முடியாது. நினைவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு நினைப்பீர்களோ அந்த அளவிற்கு குஷி ஏற்படும். ஆனால் மாயை நினைவு செய்ய விடுவது கிடையாது. நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். அனைவரும் சேவை செய்கிறீர்கள், ஆனால் உயர்ந்த மற்றும் சாதாரண சேவை இருக்கிறது அல்லவா! யாருக்காவது தந்தையின் அறிமுகம் கொடுப்பது மிக எளிதாகும். நல்லது ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

இரவு வகுப்பு:

மலைக்கு காற்று வாங்க, புத்துணர்வு பெறுவதற்காகச் செல்கின்றனர். வீடு மற்றும் அலுவலகத்தில் இருக்கும் பொழுது புத்திக்கு வேலை இருக்கிறது. வெளியில் செல்கின்ற பொழுது அலுவலக சிந்தனை யிலிருந்து ஓய்வாகி விடுகின்றனர். இங்கும் குழந்தைகள் புத்துணர்வு அடைவதற்காக வருகின்றனர். அரைக் கல்பம் பக்தி செய்து, செய்து களைப்படைந்து விட்டனர், புருஷோத்தம சங்கமயுகத்தில் ஞானம் கிடைக்கிறது. ஞானம் மற்றும் யோகா மூலம் நீங்கள் புத்துணர்வு அடைந்து விடுகிறீர்கள். இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும், புது உலகம் ஸ்தாபனை ஆகிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரளயம் ஏற்படாது. உலகம் ஒரேயடியாக அழிந்து போய் விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவ்வாறு ஆகாது. மாற்றம் ஏற்படும். இது நரகம், பழைய உலகமாகும். புது உலகம் மற்றும் பழைய உலகம் எப்படி இருக்கும்? என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கப் பட்டிருக்கிறது. உங்களது புத்தியில் விஸ்தாரமாக இருக்கிறது, அதுவும் வரிசைக்கிரமமாக. புரிய வைப்பதிலும் மிகுந்த நேர்த்தி தேவை. புத்தியில் உடனேயே அமரும் அளவிற்கு மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். சில குழந்தைகள் பக்குவமற்றவர்களாக இருக்கின்றனர், நாளடைவில் உடைந்து போய் விடுகின்றனர். பகவானின் மகாவாக்கியம் - ஆச்சரியத்துடன் கேட்பர், கூறுவர் ....... இங்கு மாயையிடம் யுத்தம் நடைபெறுகிறது. மாயையிடம் இறந்து ஈஸ்வரனுடையவர்களாக ஆகின்றனர். பிறகு மீண்டும் ஈஸ்வரனிடமிருந்து மாயை யினுடையவர்களாக ஆகிவிடுகின்றனர். தத்தெடுக்கப்பட்டு பிறகு மீண்டும் கை விட்டுச் சென்று விடுகின்றனர். மாயை மிகவும் பிரபலமானது, பலரை புயலில் கொண்டு வந்து விடுகிறது. வெற்றி-தோல்வி ஏற்படுகிறது என்பதைக் குழந்தைகளும் புரிந்திருக் கின்றனர். இந்த விளையாட்டே வெற்றி தோல்விக்கானது ஆகும். 5 விகாரங்களிடம் தோற்று விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் வெற்றி அடைவதற்கு முயற்சி செய்கிறீர்கள். கடைசியில் வெற்றி உங்களுக்குத் தான். தந்தையினுடையவர்களாக ஆகிவிட்டீர்கள் எனில் உறுதியாக ஆக வேண்டும். மாயை எவ்வளவு கவர்ச்சி செய்து வசப்படுத்துகிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். சில நேரங்களில் தியானம், காட்சியில் செல்வதன் மூலமாகவும் விளையாட்டு முடிவடைந்து விடுகிறது. இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தில் வந்து முடித்து விட்டோம் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். தேவதா, சத்ரியர், வைஷ்யர், சூத்ரர் ஆகியிருக்கிறீர்கள், இப்பொழுது சூத்ரனிலிருந்து பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள். பிராமணர்களாகி பிறகு தேவதைகளாக ஆகிவிடுவீர்கள். இதை மறந்து விடக் கூடாது. ஒருவேளை இதை மறந்து விட்டால் கால்கள் பின்னால் சென்று விடும், பிறகு உலகாய விசயங்களில் புத்தி ஈடுபட்டு விடும். முரளியும் நினைவில் இருக்காது. நினைவு யாத்திரையும் கடினமானதாக இருக்கும். இதுவும் ஆச்சரியமாக இருக்கிறது.

சில குழந்தைகள் பேட்ஜ் அணிந்து கொள்ள வெட்கப்படுகின்றனர். இதுவும் தேக அபிமானம் அல்லவா! திட்டு வாங்கியே தீர வேண்டும். கிருஷ்ணர் எவ்வளவு திட்டு வாங்கியிருக்கிறார்! அனைவரையும் விட அதிக திட்டு வாங்கியது சிவன். பிறகு கிருஷ்ணர். பிறகு அதிக திட்டுக்களை வாங்கியது இராமர். வரிசைக்கிரமம் இருக்கிறது. நிந்தனை செய்வதனால் பாரதம் எவ்வளவு நிந்திக்கப்பட்டு விட்டது. குழந்தைகளாகிய நீங்கள் இதில் பயப்படக் கூடாது. நல்லது இனிமை யிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் இரவு வணக்கம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) புத்தியினால் எல்லையற்ற சந்நியாசம் செய்து ஆன்மீக யாத்திரைக்கு தயாராக இருக்க வேண்டும். நினைவில் இருப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

2) தந்தை குழந்தைகளை வெளிப்படுத்துகிறார், குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்து கின்றனர். அனைவருக்கும் சத்திய தந்தையின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும். விநாடியில் ஜீவன் முக்திக்கான வழி கூற வேண்டும்.

வரதானம்:
மனம் மற்றும் சொல்லின் பொருத்தம் மூலமாக மாயா ஜாலம் செய்து விடக்கூடிய புதுமை மற்றும் விசேசத் தன்மையில் நிறைந்தவர் ஆவீர்களாக.

மனம் மற்றும் சொல் - இந்த இரண்டின் சேர்க்கை மாயாஜாலத்தின் காரியம் செய்கிறது. இதன் மூலமாக கூட்டமைப்பின் சிறு சிறு விˆயங்கள் எப்படி முடிந்து போய் விடும் என்றால், நீங்கள் இது என்ன மாயாஜாலம் போல ஆகி விட்டதே என்று யோசிப்பீர்கள். மனதின் மூலமாக சுப பாவனை அல்லது சுப ஆசிகள் கொடுப்பதில் பிஸி - மும்முரமாக ஆகி விட்டீர்கள் என்றால் மனதின் குழப்பம் முடிந்து போய் விடும். புருˆôர்த்தத்தில் (முயற்சி) ஒரு பொழுதும் மனமுடைந்து போக மாட்டீர்கள். கூட்டமைப்பில் ஒரு பொழுதும் பயப்பட மாட்டீர்கள். மனம் மற்றும் சொல்லின் ஒருங்கிணைந்த சேவை மூலமாக வேகமான பாதையில் சேவையின் தாக்கத்தை பார்ப்பீர்கள். இப்பொழுது சேவையின் இதே புதுமை மற்றும் விசேஷத் தன்மையில் நிறைந்த வராக ஆவீர்கள் என்றால், 9 இலட்சம் பிரஜைகள் சுலபமாக தயார் ஆகி விடுவார்கள்.

சுலோகன்:
எப்பொழுது முழுமையாக (வைஸ்லெஸ்) நிர்விகாரியாக இருப்பீர்களோ, அப்பொழுது தான் புத்தி சரியான முடிவெடுக்கும்.

மாதேஸ்வரிஜியின் மதுர மகாவாக்கியம் கலியுக சாரமற்ற உலகிலிருந்து, சத்யுக சாரம் நிறைந்த உலகிற்குச் செல்வது யாருடைய வேலை?

இந்த கலியுக உலகை சாரமற்ற உலகம் என்று ஏன் கூறுகின்றனர்? ஏனெனில் இந்த உலகில் எந்த சாரமும் இல்லை, அதாவது எந்த ஒரு பொருளிலும் சுகம், சாந்தி, தூய்மையின் சக்தியில்லை, இவ்வுலகில் ஏதோ ஒரு சமயத்தில் சுகம், சாந்தி, தூய்மை இம்மூன்றும் இருந்தது. இப்போது அந்த சக்திகள் இல்லை. ஏனெனில் இவ்வுலகில் 5 பூதங்கள் பிரவேசித்துள்ளன. அதனால்தான் இல்வுலகை பயத்தின் கடல் அதாவது கர்மபந்தனத்தின் கடல் எனக் கூறுகின்றனர். அதனால் தான் மனிதர்கள் கஷ்டப்படுகின்றனர். பரமாத்மா! எங்களை கட--ருந்து கரையேற்றுங்கள் என்று பரமாத்மாவை அழைக்கின்றனர். எனவே கண்டிப்பாக ஏதோ ஒரு சமயத்தில் பயமற்ற உலகம் கூட இருந்திருக்கிறது, அங்கு செல்ல விரும்புகின்றனர் என்பது நிரூபணமாகிறது. அதனால் இவ்வுலகை பாவ உலகம் என்று கூறுகின்றனர். இதைக் கடந்து புண்ணிய ஆத்மதாக்களின் உலகிற்குச் செல்ல விரும்புகின்றனர். ஆகவே உலகங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று சத்யுக சாரமுள்ள உலகம், மற்றொன்று கலியுக சாரமற்ற உலகம். இரண்டு உலகங்களும் இந்த சிருஷ்டியில் தான் இருக்கின்றன. நல்லது. ஓம் சாந்தி.