22-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

பாபாவிற்குரிய எந்த பட்டத்தை ஸ்ரீ கிருஷ்ணருக்கு தர முடியாது?

பதில்:

பாபா ஏழைப்பங்காளன். இப்படி ஸ்ரீ கிருஷ்ணரை கூற முடியாது. அவரோ மிகப் பெரிய செல்வந்தர். அவருடைய இராஜ்யத்தில் அனைவரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். பாபா வருகின்ற போது அனைத்தையும் விட ஏழ்மையாக பாரதம் இருக்கிறது. பாரதத்தை தான் செல்வ முடையதாக மாற்றுகிறார். நம்முடைய பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது இல்லை. மீண்டும் மாறப்போகிறது என நீங்கள் கூறுகிறீர்கள். ஏழை பங்காளனாகிய பாபாதான் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறார்.

பாடல்:

கடைசியில் அந்த நாள் வந்தது இன்று.....

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாடலைக் கேட்டீர்கள். ஆத்மா எப்படி மறைவாக இருக்கிறது, சரீரம் வெளியில் தெரிகிறது. ஆத்மாவை இந்த கண் களினால் பார்க்க முடிவதில்லை. மறைவாக இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது தான், ஆனால் இந்த சரீரம் என்ற ஆடையால் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே தான் ஆத்மா மறைவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆத்மா நான் நிராகாரமாக இருக்கிறேன், இங்கே சரீரத்தில் வந்து கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கிறேன் என்று ஆத்மாவே கூறுகிறது. ஆத்மாக்களின் உலகம் நிராகார உலகம் ஆகும். அதில் மறைவு என்ற விசயம் எதுவும் இல்லை. பரம்பிதா பரமாத்மா அங்கே தான் இருக்கிறார். அவருக்கு சுப்ரீம் என்று பெயர். உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா, எல்லா வற்றிலிருந்தும் விடுபட்டு இருக்கக் கூடிய பரமாத்மா, நீங்கள் எப்படி குப்தமாக இருக்கிறீர் களோ அவ்வாறே நானும் குப்தமாக வர வேண்டியிருக்கிறது என பாபா கூறுகிறார். நான் கர்ப்பசிறையில் வருவதில்லை. என்னுடைய பெயர் சிவன் என்ற ஒன்றே ஆகும். நான் இந்த உடலில் வருவதால் என்னுடைய பெயர் மாறுவதில்லை. இவருடைய ஆத்மா சரீரம் மாறும்போது பெயரும் மாறுகிறது. என்னை சிவன் என்று தான் கூறுகிறார்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கிறேன். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த உடலில் மறைமுகமாக இருக்கிறீர்கள். இந்த உடல் மூலமாக கர்மத்தை செய்கிறீர்கள். நானும் மறைமுகமாக இருக்கிறேன். குழந்தை களாகிய உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. ஆத்மா இந்த உடலினால் மறைக்கப் பட்டிருக் கிறது. ஆத்மா மறைமுகமானது. சரீரம் கண்களுக்குத் தெரியக் கூடியது. நான் அசரீரியாக இருக்கிறேன். பாபாவும் மறைமுகமாக இருக்கிறார். இந்த சரீரத்தின் மூலமாகப் பேசுகின்றார். நீங்களும் மறைமுகமாக இருக்கின்றீர்கள். சரீரத்தின் மூலமாக கேட்கிறீர்கள். மீண்டும் பாரதத்தை ஏழ்மையிலிருந்து செல்வமிக்கதாக மாற்றுவதற்காக பாபா வந்து விட்டார் என உங்களுக்குத் தெரியும். நம்முடைய பாரதம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் மாநிலத் திற்கு எங்கள் குஜராத், எங்கள் ராஜஸ்தான் என்கிறார்கள். எங்களுடையது, எங்களுடையது என்று கூறுவதால் பற்று ஏற்படுகிறது. நம்முடைய பாரதம் ஏழையாக இருக்கிறது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய பாரதம் எப்போது செல்வ செழிப்புடன் இருந்தது? எப்படி இருந்தது? என்பது யாருக்கும் தெரியவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு பெருமிதம் இருக்கிறது. நம்முடைய பாரதம் மிகவும் செல்வந்த நாடாக இருந்தது. துக்கம் என்ற பெயரே இல்லை. சத்யுகத்தில் வேறு எந்த தர்மமும் இல்லை. ஒரேயொரு தேவி தேவதா தர்மம் இருந்தது. இது யாருக்கும் தெரியவில்லை. இந்த உலகின் வரலாறு புவியியலை யாரும் அறியவில்லை. இப்போது நீங்கள் நன்கு புரிந்துக் கொள்கிறீர்கள். நம்முடைய பாரதம் மிகவும் செல்வந்த நாடாக இருந்தது. இப்போது மிகவும் ஏழையாகி விட்டது. இப்போது மீண்டும் செல்வ செழிப்புடையதாக மாற்றுவதற்காக பாபா வந்திருக்கிறார். சத்யுகத்தில் பாரதம் மிகப் அதிகமான செல்வமிகுந்த நாடாக இருந்தது. அப்போது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பிறகு அது எங்கே போயிற்று? இதை யாரும் அறியவில்லை. ரிஷி முனி போன்றோர் கூட நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி அறியவில்லை என்கிறார்கள். சத்யுகத்தில் தேவி தேவதைகளுக்கு படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடை ஞானம் இல்லை என்று பாபா கூறு கின்றார். ஒரு வேளை அவர்களுக்குள் நாம் படியில் இறங்கிக் கொண்டே கலியுகத்திற்கு சென்று விடுவோம் என்ற ஞானம் இருந்தால் சுகம் இருக்காது. கவலை ஏற்பட்டு விடும். இப்போது உங்களுக்கு நாம் சதோபிரதானமாக இருந்தோம். மீண்டும் நாம் சதோபிரதானமாக எப்படி மாறுவோம் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. இது 84 பிறவிகளின் ஏணிப்படியாகும். நாடகத்தின் படி ஒவ்வொரு நடிகரும் வரிசைக் கிரமத்தில் அவரவர் நேரத்தில் வந்து நடிப்பை நடிக்கிறார்கள். ஏழைப்பங்காளன் என்று யாருக்கு கூறப்படுகிறது என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது உலகத்தினருக்கு தெரியவில்லை. கடைசியில் அந்த நாள் வந்தது. எந்த நாளில் வழியை...... என்று பாட்டை கேட்டீர்கள். பகவான் எப்போது வந்து பக்தர்களாகிய நம்மை இந்த பக்தி மார்க்கத் தில் இருந்து விடுவித்து சத்கதிக்கு அழைத்துச் செல்வார் என்பதை இப்போது புரிய வைக்கிறார். பாபா மீண்டும் இவர் உடலில் வந்து விட்டார். சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள் என்றால் நிச்சய மாக வருவார். நான் கிருஷ்ணரின் உடலில் வருகிறேன் என்பது கிடையாது. கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவி களை எடுக்கிறது என பாபா கூறுகிறார். அவருடைய பல பிறவிகளின் கடைசியில் இவருடைய கடைசி பிறவி யாகும். யார் முதல் எண்ணில் இருந்தாரோ அவரே கடைசியில் இருக்கிறார். நான் சாதாரண உடலில் வருகிறேன். நீங்கள் எப்படி 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என உங்களுக்கு தெரிவிக்கிறேன். சர்தார் (சீக்கிய) மக்கள் கூட பரம்பிதா பரமாத்மா தந்தை ஓங்காரமானவர் என்று நினைக்கிறார்கள். அவர் நிச்சயம் மனிதனிலிருந்து தேவதையாக மாற்று கிறார். பிறகு ஏன் நாமும் கூட தேவதையாகக் கூடாது. யார் தேவதையாக ஆகக் கூடியவர்களோ அவர்கள் உடனடியாக ஆகிவிடுவார்கள். ஒருவர் கூட தன்னை தேவி தேவதா தர்மம் என புரிந்துக் கொள்ள வில்லை. மற்ற தர்மங்களின் சரித்திரம் மிகவும் சிறியது. சில 500 வருடங்களுடையது, சில 1250 வருடங்கள் உடையது. உங்களுடைய வரலாறோ 5000 வருடத்தினுடையதாகும் தேவதா தர்மத்தினுடையவர் தான் சொர்க்கத்தில் வருவார்கள். மற்ற தர்மத்தினர் பிற்காலத்தில் தான் வருவார்கள். தேவதா தர்மத்தினர் இப்போது மற்ற தர்மத்தில் நாடகத்தின் படி மாறியிருக்கிறார்கள். மீண்டும் அவ்வாறே மாறுவார்கள். பிறகு தங்களுடைய தர்மத்திற்குத் திரும்பி வருவார்கள்.

குழந்தைகளே ! நீங்கள் உலகத்திற்கே அதிபதியாக இருந்தீர்கள் என பாபா புரிய வைக்கிறார். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் என்றால் நாம் ஏன் சொர்க்கத்திற்குச் செல்லக் கூடாது என நீங்களும் புரிந்துக் கொள்கிறீர்கள். நிச்சயம் நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைவோம். இதிலிருந்து இவர்கள் நம்முடைய தர்மத்தினர் என்பது நிரூபணம் ஆகிறது. யார் நமது தர்மத்தினர் இல்லையோ அவர்கள் வர மாட்டார்கள். வேற்று தர்மத்தில் ஏன் போக வேண்டும் என கூறுவார் கள். சத்யுகம் புது உலகத்தில் தேவதைகளுக்கு நிறைய சுகம் இருந்தது. தங்க மாளிகை இருந்தது என உங்களுக்குத் தெரியும். சோம்நாத் கோவிலில் எவ்வளவு தங்கம் இருந்தது. இது போன்று வேறு எந்த தர்மத்திலும் இல்லை. சோம்நாத் கோவிலை போன்று இவ்வளவு பெரிய கோவில் வேறு எதுவும் இருக்க முடியாது. நிறைய வைர வைடூரியங்கள் இருந்தது. புத்தர் போன்றவர் களுக்கு வைர வைடூரியங்களில் மாளிகை கிடையாது. குழந்தைகளாகிய உங்களை மிக மிக உயர்ந்தவர் களாக மாற்றுகின்ற தந்தைக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா. நல்ல கர்மம் செய்து விட்டு சென்றுள்ளார் என நினைக்கிறார்கள். அனைவரையும் விட நல்ல கர்மங்கள் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் தந்தை தான் செய்து விட்டு செல்கிறார் என இப்போது உணர்கிறீர்கள். அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த சேவை எல்லையற்ற தந்தை வந்து செய்கிறார் என உங்களுடைய ஆத்மா கூறுகிறது. ஏழைகளாகிய நம்மை செல்வந்தர்களாகவும், பிச்சைக்காரனிலிருந்து இளவரசனாகவும் மாற்றி விடுகிறார். யார் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறாரோ அவருக்கு இப்போது மரியாதை கொடுப் பதில்லை. எதை உயர்ந்ததிலும் உயர்ந்த கோவில் என்று பாடப்பட்டதோ. அதைத் தான் கொள்ளை அடித்து சென்றனர் என நீங்கள் அறிகிறீர்கள். லஷ்மி நாராயணனின் கோவிலில் யாரும் ஒரு போதும் கொள்ளை அடிக்கவில்லை. சோம்நாத் கோவிலைத் தான் கொள்ளை அடித்திருக் கின்றனர். பக்திமார்க்கத்தில் கூட பலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ராஜாக்களிலும் வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள் அல்லவா. உயர்ந்த பதவியில் இருக்கக் கூடியவர்களுக்கு சிறிய பதவி வகிக்க கூடியவர்கள் மரியாதை அளிக்கிறார்கள். தர்பாரில் கூட வரிசைக் கிரமத்தில் அமர்கிறார் கள். பாபாவிற்கு அனுபவம் இருக்கிறது அல்லவா. இங்கே இருக்கக் கூடிய அரசவை தூய்மை இல்லாத அரசர்களுடையதாகும். பரிசுத்தமான ராஜாக்களின் அரசவை எப்படி இருக்கும். அவர் களிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது என்றால் அவர்களின் வீடும் நன்றாக இருக்கும். தந்தை நம்மை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக் கிறார் என இப்போது உங்களுக்குத் தெரியும். நாம் சொர்க்கத்தின் மகாராணி மகாராஜா ஆகிறோம். பிறகு ஏணிப்படியில் இறங்கி வந்து பக்தர்களாகிறோம். முதன் முதலில் சிவபாபாவின் பூஜாரி ஆகிறோம். யார் சொர்க்கத்திற்கு அதிபதியாக்குகிறாரோ அவருடைய பூஜை செய்வோம். அவர் நம்மை மிகவும் செல்வந்தராக மாற்றுகிறார். இப்போது பாரதம் எவ்வளவு ஏழையாக இருக்கிறது. 500 ரூபாய்க்கு வாங்கிய நிலம் 5000 ரூபாய்க்கும் அதிகமாகி விட்டது. இது அனைத்தும் செயற்கை யான விலையாகும். அங்கே பூமிக்கு மதிப்பு கிடையாது. யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம். நிறைய நிலம் இருக்கின்றது. இனிப்பான நீர் ஓடும் நதிக் கரையில் உங்களுடைய மாளிகை இருக்கும். மனிதர்களும் குறைவாகவே இருப்பார்கள். இயற்கை தத்துவங்கள் அடிமையாகி இருக்கும். பழம்-பூக்கள் போன்றவை மிக நல்லதாக கிடைக்கும். இப்போது எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. உழைத்தாலும் உணவு கிடைப்பதில்லை. மனிதர்கள் நிறைய பசி தாகத்தில் இருக்கிறார்கள். எனவே பாடல் கேட்பதால் உங்களுடைய உரோமங்கள் புல்லரித்து போக வேண்டும். தந்தையை ஏழை பங்காளன் என்கிறோம். ஏழை பங்காளனின் பொருள் புரிகிறது அல்லவா. யாரை செல்வந்தராக மாற்றுகிறார். நிச்சயம் எங்கே வரவேண்டுமோ அங்கே வருகிறாரோ அவர்களை செல்வந்தராக மாற்றுவார் அல்லவா. நாம் தூய்மையான நிலையிலிருந்து அழுக்காகுவதற்கு 5000 வருடங்கள் ஆகிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இப்போது உடனே தந்தை அழுக்கிலிருந்து தூய்மையாக மாற்றுகிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவராக மாற்றுகிறார். ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது. பாபா நான் உங்களுடையவன் என கூறுகின்றார்கள். குழந்தைகளே நீங்கள் உலகத் திற்கு அதிபதி என தந்தை கூறுகிறார். ஆண் குழந்தை பிறந்தது வாரிசாகி விட்டது. எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பெண் குழந்தையை பார்த்து முகம் வாடிப் போகிறது. இங்கேயோ அனைத்து ஆத்மாக்களும் குழந்தைகள் தான். நாம் 5000 வருடத்திற்கு முன்பு சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தோம் என இப்போது தெரிந்து விட்டது. பாபா இவ்வாறு மாற்றி இருக்கிறார். சிவ ஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் எப்போது வந்தார் என அறியவில்லை. லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இதை யாரும் அறியவில்லை. ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். லிங்கத்தை வைத்து பெரிய பெரிய கோவிலை கட்டுகிறார்கள். ஆனால் அவர் எப்படி வந்தார், வந்து என்ன செய்தார், எதையும் அறியவில்லை. இதற்குத் தான் குருட்டு நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று பெயர். நம்முடைய தர்மம் எது? எப்போது உருவாகியது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. புத்தர் எப்போது வந்தார் என்று மற்ற தர்மத்தினருக்குத் தெரிகிறது. தேதி, நாள் இருக்கிறது. சிவபாபா, லஷ்மி நாராயணனுடைய தேதியோ நாளோ இல்லை. 5000 வருடங்களின் விசயங்களை இலட்சக்கணக்கான வருடங்கள் என எழுதி விட்டனர். இலட்சக்கணக்கான வருடங்களின் விசயங்கள் யாருக்கு நினைவிருக்க முடியும். பாரதத்தில் தேவி தேவதா தர்மம் எப்போது இருந்தது. இதை புரிந்துக் கொள்ளவில்லை. இலட்சக்கணக்கான வருடங்கள் என்ற கணக்கு படி பார்த்தால் பாரதத்தின் மக்கள் தொகை எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்க வேண்டும். பாரதத்தின் நிலப்பரப்பு கூட எல்லாவற்றையும் விட பெரியதாக இருக்க வேண்டும். இலட்சக்கணககான வருடங்களில் எவ்வளவு மனிதர்கள் பிறப்பார்கள். எண்ணற்ற மக்களாகி விடுவார்கள். இப்போது இவ்வளவு கிடையாது. இன்னும் குறைவாகவே ஆகிவிட்டனர். இந்த விசயங்கள் அனைத்தையும் பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். மனிதர்கள் இவற்றை கேட்கும் போது இந்த விசயங்களை ஒரு போதும் கேட்பதில்லை, சாஸ்திரங்களில் படிக்கவும் இல்லை என கூறுகிறார்கள். இது அதிசயமான விசயம் ஆகும்.

இப்போது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் முழு சக்கரத்தின் ஞானமும் இருக்கிறது. இது பல பிறவிகளின் கடைசியிலும் கடைசியில் தூய்மையற்ற ஆத்மாவாகிவிட்டது. யார் சதோபிரதானமாக இருந்து இப்போது தமோபிரதானமாகி இருக்கிறார்களோ அவர்கள் மீண்டும் சதோபிரதானமாக வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்போது அறிவுரை கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா காதுகள் மூலமாக கேட்கிறது என்றால் சரீரம் ஆர்வத்தால் ஆடுகிறது. ஏனென்றால் ஆத்மா கேட்கிறது அல்லவா ! ஆத்மாக்களாகிய நாம் சரியாக 84 பிறவிகளை எடுக்கிறோம். 84 பிறவிகளில் 84 தாய் தந்தைகள் நிச்சயம் கிடைத்திருப்பார்கள். இதுவும் கணக்கிருக்கிறது அல்லவா. நாம் 84 பிறவிகள் எடுக்கிறோம். குறைந்த பிறவிகளை எடுப்பவர் களும் இருப்பார்கள். என்று புத்தியில் தோன்றுகிறது. இவ்வாறு அனைவரும் 84 பிறவிகளை எடுக்க மாட்டார்கள். சாஸ்திரங்களில் என்னென்னவோ எழுதிவிட்டார்கள் என பாபா புரிய வைக்கிறார். உங்களுக்காவது 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என கூறுகிறார்கள். எனக்கோ எண்ணற்ற பிறவிகள் என கூறிவிட்டார்கள். ஒவ்வொரு அணுவிலும் கல்லிலும் முள்ளிலும் இருப்பதாக கூறி விட்டனர். எங்கு பார்த்தாலும் நீயே, நீதான். கிருஷ்ணரே கிருஷ்ணர் தான். இவ்வாறு மதுரா, பிருந்தாவனத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். கிருஷ்ணர் தான் சர்வவியாபி. ராதை வழிப்படி நடப்பவர்கள் ராதையே ராதை என்பார்கள். நீயும் ராதை, நானும் ராதை என்பார்கள்.

ஒரு தந்தை தான் உண்மையில் ஏழை பங்காளன் ஆவார். பாரதம் அனைத்தையும் விட பணக்கார நாடாக இருந்தது. இப்போது அனைத்தையும் விட ஏழையாகி விட்டது. ஆகவே பாரதத்தில் தான் வர வேண்டியிருக்கிறது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும். இதில் சிறிது கூட வித்தியாசம் இருக்க முடியாது. நாடகம் நிச்சயிக்கப்பட்டது. அப்படியே திரும்ப நடக்கும். இதில் சிறிது கூட வித்தியாசப் படாது. நாடகத்தை பற்றிக் கூட தெரிந்திருக்க வேண்டும். நாடகம் என்றால் நாடகம். அது எல்லைக்குட்பட்ட நாடகமாகும். இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம் ஆகும். இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் முதல், இடை, கடையை யாரும் அறிய வில்லை. ஏழை பங்காளன் என்று நிராகார் பகவானைத் தான் ஏற்றுக் கொள்வார்கள். கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கிருஷ்ணரோ செல்வந்தர், சத்யுகத்தின் இளவரசன் ஆகிறார். பகவானிற்கோ தனக்கென்று உடல் கிடையாது. அவர் வந்து குழந்தைகளாகிய உங்களை செல்வந்தர்களாக மாற்றுகிறார். உங்களுக்கு இராஜயோகத்தை கற்பிக்கிறார். படிப்பினால் வக்கீல் ஆகி பிறகு சம்பாதிக்கிறார்கள். தந்தையும் உங்களை ஆன்மீகக் கல்வி கற்க வைக்கிறார். நீங்கள் எதிர் காலத்தில் நரனிலிருந்து நாராயணன் ஆகிறீர்கள். நீங்கள் பிறவி எடுப்பீர்கள் அல்லவா. சமுத்திரத்திலிருந்து சொர்க்கம் எதுவும் வராது. கிருஷ்ணர் கூட பிறவி எடுத்தார் அல்லவா. அச்சமயம் கம்சபுரி எதுவும் கிடையாது. கிருஷ்ணருக்கு எவ்வளவு பெயர்கள் புகழ் பாடப் பட்டிருக் கிறது. அவருடைய தந்தைக்கு அத்தனை பெருமைகள் இல்லை. அவருடைய தந்தை எங்கே? நிச்சயமாக கிருஷ்ணர் ஒருவருடைய குழந்தையாக இருப்பார் அல்லவா. கிருஷ்ணர் பிறவி எடுக்கும் போது சிலர் மிகவும் அழுக்காகவும் இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலுமாக அழிந்து போகும் போது அவர் சிம்மாசனத்தில் அமர்கிறார். தன்னுடைய இராஜ்யத்தை அடைகிறார். அப்போதிலிருந்து தான் அவருடைய சகாப்தம் ஆரம்பம் ஆகிறது. லஷ்மி நாராயணனிடமிருந்து தான் வருடம் ஆரம்பம் ஆகும். நீங்கள் முழு கணக்கும் எழுதுகிறீர்கள். இவர்களுடைய இராஜ்யம் இவ்வளவு காலம் இருந்தது. பிறகு இன்னொருடைய இராஜ்யம் இவ்வளவு காலம் என்று. இந்த கல்பத்தின் ஆயுள் நீண்டதாக இருக்க முடியாது என மனிதர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். 5000 வருடம் என்பதற்கு முழு கணக்கும் இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் புரிகிறது அல்லவா. நேற்று நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தோம். பாபா உருவாக்கினார். ஆகவே தான் நாம் சிவஜெயந்தி கொண்டாடுகிறோம். நீங்கள் அனைத்தையும் அறிகிறீர்கள். கிறிஸ்து, குருநானக் போன்றோர் மீண்டும் எப்போது வருவார்கள். இந்த ஞானம் உங்களுக்கு இருக்கிறது. உலகத்தின் வரலாறு புவியியல் திரும்ப நடக்கிறது. இந்த படிப்பு எவ்வளவு எளிதாக இருக்கிறது. நீங்கள் சொர்க்கத்தை அறிகிறீர்கள். நிச்சயம் பாரதம் சொர்க்கமாக இருந்தது. பாரதம் அழிவற்ற கண்டமாக இருக்கிறது. பாரத்திற்கு உள்ள மகிமைகள் போன்று வேறு எதற்கும் இல்லை. அனைவரையும் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக மாற்றக் கூடியவர் ஒரேயொரு தந்தை தான். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நாடகத்தின் முதல், இடை, கடை ஞானத்தை புத்தியில் வைத்துக் கொண்டு அனைத்து கவலைகளையும் விட்டுவிட வேண்டும். தூய்மையாக வேண்டும் என்ற ஒரு கவலை (சிந்தனை) மட்டும் இருக்க வேண்டும்.

2. ஏழை பங்களான் பாபா பாரதத்தை ஏழ்மையிலிருந்து செல்வமிக்கதாக மாற்ற வந்திருக்கிறார். அவருக்கு முழுமையிலும் முழுமையாக உதவியாளராக வேண்டும். தன்னுடைய புது உலகை நினைவு செய்து சதா மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.

வரதானம்:

ஒரே நேரத்தில் மூன்று விதத்தில் சேவை செய்யக் கூடிய மாஸ்டர் திரிமூர்த்தி ஆகுக.

பாபா எப்பொழுதுமே மூன்று சொரூபத்தின் மூலம் சேவைக்கு தயராக இருக்கிறார், தந்தை, ஆசிரியர், சத்குரு ரூபத்தில் இருக்கிறாரோ, குழந்தைகளாகிய நீங்களும் கூட ஒவ்வொரு நொடியும் மனம், சொல் மற்றும் செயல் மூன்று ரூபத்தின் மூலம் ஒரே நேரத்தில் சேவை செய்யும் பொழுது மாஸ்டர் திரிமூர்த்தி என்று சொல்லாம். மாஸ்டர் திரிமூர்த்தி ஆகி ஒவ்வொரு நொடியும் மூன்று விதமான சேவையில் யார் தயாராக இருக்கிறார்களோ, அவர்களால் தான் உலகத்திற்கு நன்மை செய்ய முடியும். ஏனெனில் இத்தனை பெரிய உலகத்திற்கு நன்மை செய்வதற்காக ஒரே நேரத்தில் மூன்று விதமான முறையில் சேவை செய்யும் பொழுது தான் இந்த சேவை நிறைவு பெறும்.

சுலோகன்:

யார் தன்னுடைய சக்தியின் மூலம் கெட்டதை நல்லதாக மாற்றம் செய்கின்றார்களோ அவர்களே உயர்ந்த பிராமணர்கள்.