22.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! தனிமையில் அமர்ந்து தனக்குத் தான் பேசிக் கொள்ளுங்கள், நான் அழிவற்ற ஆத்மா, பாபா சொல்வதைக் கேட்கிறேன் - இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்.

 

கேள்வி :

எந்தக் குழந்தைகள் பாபாவை நினைவு செய்வதில் கவனக் குறைவாக உள்ளனரோ, அவர்களின் வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தை வெளிவரும்?

 

பதில்:

அவர்கள் சொல்கின்றனர்-நான் சிவபாபாவின் குழந்தையாகத் தான் இருக்கிறேன், நினைவில் தான் இருக்கிறேன் என்று. ஆனால் பாபா சொல்கிறார், அதெல்லாம் பொய், கவனக் குறைவு. இதிலோ புருஷார்த்தம் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து தன்னை ஆத்மா என உணர்ந்து அமர வேண்டும். ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும். ஆத்மா தான் உரையாடுகின்றது. இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகிறீர்கள். ஆத்ம அபிமானிக் குழந்தைகள் தான் நினைவினுடைய சார்ட் வைப்பார்கள். வெறுமனே ஞானத்தை மட்டும் வாய்மொழியாகச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

 

பாடல் :

முகத்தைப் பார்த்துக் கொள் பிராணி........

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது, பிராமணன் எனச் சொல்லப்படுவது ஆத்மா. இப்போது பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். இந்தப் பாடல் பக்தி மார்க்கத்தினுடையவை. இதனுடைய சாரம் புரிய வைக்கப்படுகின்றது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போது தன்னை ஆத்மா என உணருங்கள். தேகத்தின் உணர்வை விட்டுவிட வேண்டும். நாம் ஆத்மா மிகச் சிறிய புள்ளி வடிவம். நான் தான் இந்த சரீரத்தின் மூலம் நடிப்பின் பாகத்தில் நடிக்கின்றேன். இந்த ஆத்மாவின் ஞானம் யாருக்கும் கிடையாது. இதை பாபா புரிய வைக்கிறார்-தன்னை ஆத்மா என உணருங்கள்-நான் சிறிய ஆத்மா. ஆத்மா தான் முழு பாகத்தையும் சரீரத்தின் மூலம் நடிக்கின்றது. எனவே தேக அபிமானம் நீங்கிவிட வேண்டும். இது தான் முயற்சி. நாம் ஆத்மா இந்த நாடகம் முழுவதின் நடிகர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்த நடிகர் பரமபிதா பரமாத்மா. புத்தியில் உள்ளது, அவரும் இவ்வளவு சிறிய புள்ளியாகவே உள்ளார். அவருடைய மகிமை எவ்வளவு பெரியது! ஞானத்தின் கடலாக, சுகத்தின் கடலாக உள்ளார். ஆனால் சிறிய புள்ளி. நம் ஆத்மாவும் சிறிய புள்ளி. ஆத்மாவை திவ்ய திருஷ்டியினாலன்றி பார்க்க இயலாது. இந்தப் புதுப்புது விசயங்களை இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திற்கு என்ன தெரியும்? உங்களிலும் கொஞ்சம் பேர் தான் யதார்த்த ரீதியில் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் புத்தியில் உள்ளது-நாம் ஆத்மா சிறிய புள்ளியாக இருக்கிறோம் என்று. நம்முடைய தந்தை இந்த டிராமாவில் முக்கிய நடிகர். உயர்ந்தவரிலும் உயர்ந்த நடிகர் தந்தை. அதன் பிறகு இன்னின்னார் வருகின்றனர். நீங்கள் அறிவீர்கள், தந்தை ஞானக்கடலாக இருக்கிறார். ஆனால் சரீரம் இல்லாமலோ ஞானம் சொல்ல முடியாது. சரீரத்தின் மூலம் தான் பேச முடியும். அசரீரி ஆவதால் உறுப்புகள் தனியாக ஆகி விடுகின்றன. பக்தி மார்க்கத்திலோ தேகதாரிகளைப் பற்றியே நினைக்கின்றனர். பரமபிதா பரமாத்மாவின் பெயர், வடிவம், தேசம், காலம் பற்றியே அறிந்து கொள்ளவில்லை. பரமாத்மா பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் எனச் சொல்லிவிடுகின்றனர். பாபா புரிய வைக்கிறார் - டிராமாவின் அனுசாரம் நம்பர் ஒன் சதோபிரதானமாக இருந்த நீங்கள் தான் மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆவதற்கு நீங்கள் மீண்டும் இந்த மன நிலையை உறுதியானதாக ஆக்க வேண்டும் நாம் ஆத்மா, ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் உரையாடுகின்றது. அதற்குள் ஞானம் உள்ளது. இந்த ஞானம் வேறு யாருடைய புத்தியிலும் கிடையாது-அதாவது ஆத்மாவாகிய நமக்குள் 84 பிறவிகளின் பார்ட் அழியாததாக பதிவாகியுள்ளது. இவை மிகவும் புதுப்புதுப் பாயின்ட்டுகளாகும். தனிமையில் அமர்ந்து தனக்குத் தானே இதுபோல் உரையாடல் செய்ய வேண்டும் - நான் ஆத்மா, பாபா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தாரணை ஆத்மாவாகிய எனக்குள் ஆகின்றது. ஆத்மாவாகிய எனக்குள் தான் பார்ட் அடங்கியுள்ளது. நான் ஆத்மா அவிநாசி. இது உள்ளுக்குள் மனப்பாடம் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். தேக அபிமானிக் குழந்தைகளுக்கு ஆத்மா பற்றிய ஞானம் கூட இல்லை. எவ்வளவு பெரிய-பெரிய புத்தகங்கள் தங்களிடம் வைத்துக் கொண்டுள்ளனர்! அகங்காரம் எவ்வளவு உள்ளது! இதுவே தமோபிரதான உலகம். உயர்ந்தவரிலும் உயர்ந்த ஆத்மாவோ யாருமே கிடையாது. நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் இப்போது தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். இவ்விசயத்தை உள்ளுக்குள் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஞானம் சொல்பவர்களோ அநேகம் பேர் உள்ளனர். ஆனால் (பாபாவின்) நினைவு கிடையாது. உள்ளுக்குள் அந்த உள்முக நோக்கு இருக்க வேண்டும். நாம் பாபாவின் நினைவினால் பதீததிலிருந்து பாவனமாக வேண்டும். வெறும் பண்டிதராக ஆகக் கூடாது. இதில் ஒரு பண்டிதரின் உதாரணமும் உள்ளது தாய்மார்களுக்குச் சொல்கிறார், ராம்-ராம் எனச் சொல்லிக் கொண்டே நதியைக் கடந்து சென்று விடலாம் என்று. ஆக, அதுபோல் வெறும் வாய்ச்சொல் வீரராக ஆகக் கூடாது. இதுபோல் அநேகர் உள்ளனர்.

 

மிக நன்றாகப் புரிய வைக்கிறார்கள். ஆனால் யோகா இல்லை. நாள் முழுவதும் தேக அபிமானத்தில் உள்ளனர். இல்லையென்றால் பாபாவுக்கு சார்ட் அனுப்ப வேண்டும் - நான் இன்ன நேரம் எழுந்திருக்கிறேன். இவ்வளவு நேரம் நினைவு செய்கிறேன். ஆனால் எந்த ஒரு செய்தியும் தருவதில்லை. ஞானத்தில் பொய் புரட்டு சரடு அதிகம் விடுகின்றனர். யோகம் இல்லை. மிகப்-பெரியவர்களுக்கெல்லாம் ஞானம் சொல்கின்றனர் என்ற போதிலும் யோகத்தில் பக்குவமில்லாமல் உள்ளனர். அதிகாலை எழுந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா, தாங்கள் எவ்வளவு மிகமிக அன்பானவராக இருக்கிறீர்கள்! எப்படி இந்த வியக்கத்தக்க டிராமா உருவாக்கப் பட்டுள்ளது! யாருமே இந்த இரகசியத்தை அறிந்திருக்கவில்லை. ஆத்மாவையும் தெரியாது, பரமாத்மாவையும் தெரியாது. இச்சமயம் மனிதர்கள் மிருகங்களை விடவும் மோசமாக உள்ளனர். நாமும் அதுபோல் தான் இருந்தோம். மாயாவின் இராஜ்யத்தில் எவ்வளவு மோசமான நிலை ஆகி விட்டது. இந்த ஞானத்தை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும். சொல்லுங்கள், ஆத்மா நீங்கள் இப்போது தமோபிரதானமாக இருக்கிறீர்கள். நீங்கள் சதோப்ரதானமாக ஆக வேண்டும். முதலிலோ தன்னை ஆத்மா என உணருங்கள். ஏழைகளுக்கோ இன்னும் கூட சுலபம். பணக்காரர்களுக்கோ சுமைகள் அதிகம் உள்ளன.

 

பாபா சொல்கிறார் - நான் வருவதே சாதாரண உடலில். அதிக ஏழையுமில்லை, அதிகப் பணக்காரரும் இல்லை. இப்போது நீங்கள் அறிவீர்கள், கல்ப-கல்பமாக பாபா வந்து நமக்கு இதே கல்வியைக் கற்றுத் தருகிறார்- பாவனமாக எப்படி ஆவது என்பது பற்றி. மற்றப்படி உங்கள் தொழில் முதலியவற்றில் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக பாபா வரவில்லை. நீங்களோ, பதீத பாவனா வாருங்கள் என்று தான் அழைக்கிறீர்கள். ஆகவே பாபா பாவனமாவதற்கான யுக்தி சொல்கிறார். இந்த பிரம்மா தாமே கூட எதையும் அறியாதிருந்தார். நடிகராக இருந்து கொண்டு டிராமாவின் முதல்-இடை-கடை பற்றி அறிந்திருக்கவில்லை என்றால், அவர்களை என்னவென்று சொல்வார்கள்? நாம் ஆத்மா இந்த சிருஷ்டிச் சக்கரத்தில் நடிகர்கள். இதையும் யாரும் அறிந்து கொள்ளவில்லை. ஆத்மா மூலவதனத்தில் வசிக்கிறது எனச் சொல்லி விடுகின்றனர் என்ற போதிலும் அதை அனுபவத்துடன் சொல்லவில்லை. நீங்களும் கூட நடைமுறையில் அறிவீர்கள் - நாம் ஆத்மா மூலவதனத்தில் வசிப்பவர்கள். நாம் ஆத்மா அவிநாசி. இதுவோ புத்தியில் நினைவிருக்க வேண்டும். அநேகருக்கு யோகம் முற்றிலும் இல்லை. தேக அபிமானத்தின் காரணத்தால் பிறகு தவறுகளும் அதிகம் நடைபெறுகின்றன. முக்கியமான விசயமே ஆத்ம அபிமானி ஆக வேண்டும். நாம் சதோபிரதானம் ஆக வேண்டும் என்ற அக்கறை இருக்க வேண்டும். எந்தக் குழந்தைகளுக்கு சதோபிரதானமாக ஆக வேண்டும் என்ற ஈடுபாடு உள்ளதோ, அவர்களின் வாயிலிருந்து ஒருபோதும் கல் (கடும் சொல்) வெளிப்படாது. ஏதேனும் தவறு நேர்ந்தால் உடனே பாபாவுக்குத் தெரியப் படுத்துவார்கள். பாபா, நான் இந்த தவறு செய்து விட்டேன். மன்னியுங்கள். மறைக்க மாட்டார்கள். மறைப்பதால் அது இன்னும் கூட விருத்தியடையும். பாபாவுக்கு செய்தியைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். பாபா பதில் எழுதி விடுவார்-உங்களது யோகம் சரியாக இல்லை. பாவனமாக வேண்டியது தான் முக்கிய விசயம். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் 84 பிறவிகளின் கதை உள்ளது. முடிந்த வரை இதே கவலை இருந்து கொண்டிருக்க வேண்டும் - நாம் சதோபிரதானமாக ஆக வேண்டும். தேக அபிமானத்தை விட்டுவிட வேண்டும். நீங்கள் இராஜரிஷிகள். ஹடயோகிகள் ஒருபோதும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. இராஜயோகத்தை பாபா தான் கற்பிக்கிறார். ஞானமும் பாபா தான் தருகிறார். மற்றப்படி இப்போது உள்ளது தமோபிரதானமான பக்தி. ஞானத்தை பாபா மட்டுமே சங்கமயுகத்தில் வந்து தருகிறார். பாபா வந்துள்ளார் என்றால் பக்தி முடிவடைந்தாக வேண்டும். இந்த உலகமும் முடிந்துவிடப் போகிறது. ஞானம் மற்றும் யோகத்தினால் சத்யுகத்தின் ஸ்தாபனை நடைபெறுகின்றது. பக்தி என்ற பொருளே வேறு. மனிதர்கள் பிறகு சொல்லி விடுகின்றனர், சுகம்-துக்கம் எல்லாமே இங்கே தான் என்று. இப்போது குழந்தைகள் உங்கள் மீது பெரிய பொறுப்பு உள்ளது. தனக்கு நன்மை செய்வதற்கான யுக்தியை உருவாக்கிக் கொண்டே இருங்கள். இதுவும் புரிய வைக்கப்பட்டுள்ளது-பாவன உலகம் சாந்திதாமம் மற்றும் சுகதாமம். இதுவோ அசாந்திதாமம், துக்கதாமம். முதல் முக்கிய விஷயம் யோகத்தினுடையது. யோகம் இல்லை என்றால் ஞானத்தின் வெறும் வார்த்தைகள் மட்டும் உள்ளன-பண்டிதரைப் போல் (நடைமுறையில் எதுவும் இல்லை). தற்சமயத்திலோ ரித்தி-சித்தி (செப்படி வித்தைகள்) கூட அதிகம் வெளிவந்துள்ளது. இதனுடன் ஞானத்தின் தொடர்பு எதுவும் கிடையாது. மனிதர்கள் எவ்வளவு பொய்யிலேயே சிக்கிக் கொண்டுள்ளனர்! பதித்தாக உள்ளனர். பாபா தாமே சொல்கிறார், நான் பதித் உலகில் பதித் சரீரத்தில் வருகிறேன். பாவனமானவர்களோ இங்கே யாருமே கிடையாது. இவரோ (பிரம்மா) தம்மை பகவான் எனச் சொல்வதில்லை. இவரும் சொல்கிறார், நானும் பதித், பாவனமானால் ஃபரிஸ்தா ஆகி விடுவேன். நீங்களும் ஃபரிஸ்தா ஆகி விடுவீர்கள். ஆக, முக்கிய விசயம் இது தான் - நாம் பாவனமாக எப்படி ஆவது? நினைவு மிகவும் அவசியம். எந்தக் குழந்தைகள் நினைவில் கவனக் குறைவாக உள்ளனரோ, அவர்கள் சொல்வார்கள் - நான் சிவபாபாவின் குழந்தையாகவே தான் இருக்கிறேன். நினைவில் தான் இருக்கிறேன். ஆனால் பாபா சொல்கிறார், அதெல்லாம் பொய். கவனக்குறைவு. இதிலோ முயற்சி செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து தன்னை ஆத்மா என உணர்ந்து அமர்ந்திருக்க வேண்டும். ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும். ஆத்மா தான் உரையாடுகின்றது இல்லையா? இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகிறீர்கள். யாருக்காவது நன்மை செய்பவர் என்றால் அவருக்கு மகிமையும் செய்யப் படுகின்றது இல்லையா? அது தேகத்தின் மகிமையாக உள்ளது. இதுவோ நிராகார் பரமபிதா பரமாத்மாவின் மகிமை. இதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த ஏணிப்படி வேறு யாருடைய புத்தியிலும் கிடையாது. நாம் 84 பிறவிகளை எப்படி எடுக்கிறோம்? கீழே இறங்கியே வருகின்றோம். இப்போதோ பாவங்களின் குடம் நிரம்பி விட்டுள்ளது. அது எப்படித் தூய்மையாவது? அதனால் பாபாவை அழைக்கின்றனர். நீங்கள் பாண்டவ சம்பிரதாயத்தினர். தர்மம் மற்றும் அரசியல் சார்ந்தவர் களாகவும் இருக்கிறீர்கள். பாபா அனைத்து தர்மங்களின் விசயத்தைப் புரிய வைக்கிறார். வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. மற்றப்படி அந்த தர்ம ஸ்தாபகர்கள் என்ன செய்கின்றனர்? அவர்களின் பின்னாலோ மற்றவர்களும் கீழே இறங்கி வரவேண்டி உள்ளது. மற்றப்படி அவர்கள் மோட்சம் எதுவும் தருவதில்லை. பாபா தான் கடைசியில் வந்து அனைவரையும் பவித்திரமாக்கி வீட்டுக்குத் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். அதனால் அந்த ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் மகிமை கிடையாது. பிரம்மாவுக்கோ அல்லது உங்களுக்கோ எந்த ஒரு மகிமையும் கிடையாது. பாபா வந்திருக்கவில்லை என்றால் நீங்களும் என்ன செய்திருப்பீர்கள்? இப்போது பாபா உங்களை உயரும் கலையில் கொண்டு செல்கிறார். உங்களால் அனைவருக்கும் நன்மை என்று. பாடவும் செய்கின்றனர், ஆனால் அர்த்தம் எதையும் புரிந்து கொள்ளவில்லை. மகிமையோ அதிகம் செய்கின்றனர்.

 

இப்போது பாபா புரிய வைத்துள்ளார், அழியாததோ ஆத்மா, அதனுடைய ஆசனம் இது. ஆத்மா அழியாதது. காலன் ஒருபோதும் சாப்பிடுவதில்லை. ஆத்மா ஒரு சரீரம் விட்டு வேறொரு பாகத்தை நடிப்பதற்காகச் சென்று விட்டது. அழுவதற்கான அவசியம் என்ன? நாம் ஆத்மா சகோதர-சகோதரன். இதையும் நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலமாகத் தனியாக இருந்து விட்டனர்....... தந்தை எங்காவது வந்து சந்திப்பார். இதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஒவ்வொரு விசயத்தின் புரிதலும் கிடைக்கின்றது. பல வருடங்களாக கேட்டே வந்திருக்கிறீர்கள்? எந்த ஒரு புத்தகம் முதலிய எதையும் அவர் எடுத்துக் கொள்வதில்லை. புரிய வைப்பதற்காக மட்டுமே மேற்கோள் காட்டுகிறார். பாபா உண்மையானவர் என்பதால் உண்மையான படைப்பினைப் படைக்கின்றார். உண்மையைச் சொல்கிறார். உண்மையினால் வெற்றி, பொய்யினால் தோல்வி. உண்மையான தந்தை உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்கிறார். இராவணனிடம் நீங்கள் அதிகமாகத் தோல்விகளை அடைந்திருக்கிறீர்கள். இந்த விளையாட்டுகள் அனைத்தும் உருவாக்கப் பட்டவை. இப்போது நீங்கள் அறிவீர்கள், நமது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பிறகு இதெல்லாம் இருக்காது. இவை அனைத்துமோ பின்னால் வந்தவை. இந்த சிருஷ்டிச் சக்கரத்தை புத்தியில் வைப்பது எவ்வளவு சுலபம்! நாம் ஞானமோ மிக நன்றாகச் சொல்கிறோம் என்று புருஷார்த்தி குழந்தைகள் இதில் மட்டுமே குஷியடைந்து விடமாட்டார்கள். அதோடு கூடவே யோகம் மற்றும் நன்னடத்தைகளைக் கூட தாரணை செய்வார்கள். நீங்கள் மிகமிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. அன்போடு புரிய வைக்க வேண்டும். பவித்திரமாவதில் எவ்வளவு தொந்தரவுகள் தரப் படுகின்றன! அதுவும் டிராமா அனுசாரம் நடைபெறுகின்றது. இது உருவாக்கப் பட்ட டிராமா இல்லையா? டிராமாவில் இருந்தால் கிடைக்கும் என்பதல்ல. முயற்சி செய்ய வேண்டும். தேவதைகளைப் போன்ற தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். உப்பு நீராக ஆகக் கூடாது. தன்னைப் பார்க்க வேண்டும், நாம் தலைகீழான நடத்தை மூலம் பாபாவின் கௌரவத்தைக் கெடுக்காமல் இருக்கிறோமா? சத்குருவுக்கு நிந்தனை செய்பவர்கள் நல்ல பதவி பெற முடியாது. இவரோ சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர். ஆத்மாவுக்கு இப்போது நினைவு உள்ளது. பாபா ஞானக்கடலாக, சுகத்தின் கடலாக உள்ளார். நிச்சயமாக ஞானம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளேன், அதனால் தான் பாடல் உள்ளது. இவருடைய (பிரம்மா) ஆத்மாவில் ஞானம் ஏதேனும் இருந்ததா என்ன? ஆத்மா என்பதென்ன, டிராமா என்பதென்ன, யாருமே அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் தான் அதை அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா? ருத்ர யக்ஞத்தைப் படைக்கின்றனர் என்றால் ஆத்மாக்களுக்குப் பூஜை செய்கின்றனர். அதனுடைய பூஜை நல்லதா, அல்லது தெய்வீக சரீரங்களின் பூஜை நல்லதா? இந்த சரீரமோ 5 தத்துவங்களாலானது. ஆகவே ஒரு சிவபாபாவின் பூஜை தான் கலப்படமற்ற பூஜையாகும். இப்போது அந்த ஒருவர் சொல்வதையே கேட்க வேண்டும். அதனால் தான் சொல்லப்படுகின்றது -தீயதைக் கேட்காதீர்கள்........ நிந்தனையின் எந்த ஒரு விசயத்தையும் கேட்காதீர்கள். நான் சொல்வதை மட்டுமே கேளுங்கள். இது கலப்படமற்ற ஞானம். முக்கிய விசயம், எப்போது தேக அபிமானம் விட்டுப் போகிறதோ, அப்போது தான் நீங்கள் குளிர்ச்சி அடைவீர்கள். பாபாவின் நினைவில் இருப்பீர்களானால் வாயால் கூட தலைகீழான வார்த்தைகளைப் பேச மாட்டீர்கள். தீய திருஷ்டி இருக்காது. பார்த்தாலும் பார்க்காதவராக இருப்பீர்கள். நமது ஞானத்தின் மூன்றாவது கண் திறந்து கொண்டு விட்டது. பாபா வந்து திரிநேத்திரி, திரிகாலதரிசி ஆக்கியுள்ளார். இப்போது உங்களுக்கு மூன்று காலங்களின், மூன்று உலகங்களின் ஞானம் உள்ளது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) ஞானம் சொல்வதோடு கூடவே யோகத்திலும் இருக்க வேண்டும். நல்ல நடத்தைகளை தாரணை செய்ய வேண்டும். மிக இனிமையானவராக ஆக வேண்டும். வாயிலிருந்து ஒருபோதும் கல் போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்தக் கூடாது.

 

2) உள்நோக்கு முகமுடையவராகி, தனிமையில் அமர்ந்து தனக்குத் தான் ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும். பாவனமாவதற்கான யுக்திகளை உருவாக்க வேண்டும். அதிகாலை எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைவு செய்ய வேண்டும்.

 

வரதானம்:

அனைவரின் உள்ளப் பூர்வமான அன்பை  பலனாக அடையக் கூடிய விடுபட்ட, அன்பான, எண்ணங்களற்றவர் ஆகுக .

 

எந்த குழந்தைகளிடம் விடுபட்ட மற்றும் அன்பாக இருக்கக் கூடிய குணம் இருக்கிறதோ அல்லது எண்ணங்களற்று இருக்கக் கூடிய விசேஷத்தன்மை இருக்கிறதோ அதாவது இந்த வரதானத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பிரியமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். ஏனெனில் விடுபட்டு இருப்பதனால் அனைவரின் உள்ளப்பூர்வமான அன்பு தானாகவே பலனாக கிடைத்து விடும். அவர்கள் தங்களது சக்திசாலி யான எண்ணங்களற்ற ஸ்திதியின் அல்லது உயர்ந்த செயலின் மூலம் பலருக்கு சேவை செய்வதற்கு நிமித்தமாகி விடுவர். ஆகையால் அவர்கள் தானும் திருப்தியாக இருப்பர் மற்றும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வர். அவர்களுக்கு ஒவ்வொரு காரியத்திலும் தானாகவே வெற்றி கிடைக்கும்.

 

சுலோகன்:

ஒரு பாபா என்ற வார்த்தை தான் அனைத்து பொக்கிஷங்களுக்கான சாவி ஆகும் இந்த சாவியை சதா பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

ஓம்சாந்தி