22-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை சொர்க்கத்தின் அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக் கின்றார், குழந்தைகளாகிய நீங்கள் உதவியாளர்களாகி தனது பங்கை சேமித்துக் கொள்ளுங்கள். ஈஸ்வரிய வழிப்படி நடந்து சிரேஷ்ட பிராப்தியை (பாக்கியத்தை) உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கேள்வி:
பாப்தாதாவிற்கு எப்படிபட்ட குழந்தைகளின் தேவை சதா இருக்கின்றது?

பதில்:
யார் மிக மிக இனிமையானவர்களாக, குளிர்ந்த சுபாவமுடைய, சேவாதாரி குழந்தை களாக இருக்கின்றார்களோ. இப்படிப்பட்ட குழந்தைகளின் தேவை தந்தைக்கு இருக்கின்றது. சேவாதாரிகள் குழந்தைகள் தான் தந்தையின் பெயரை வெளிப்படுத்து வார்கள். எந்த அளவிற்கு தந்தைக்கு உதவியாளர்களாக ஆகின்றீர்களோ, கட்டளைப்படி நடப்பவர்களாக, நன்றியுள்ளவர் களாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு அவர்கள் ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆகின்றனர்.

பாடல்:
ஓம் நமச் சிவாய .......

ஓம் சாந்தி.
ஓம் என்பதன் பொருளைக் கூறியது யார்? தந்தை. எப்பொழுது பாபா என்று கூறுகின்றீர்களோ அப்பொழுது அவருக்கு கண்டிப்பாக பெயரும் தேவை. சாகாரமோ அல்லது நிராகாரமோ கண்டிப்பாக பெயர் தேவை. வேறு எந்த ஆத்மாக்களுக்கும் பெயர் வைப்பது கிடையாது. ஆத்மா எப்பொழுது ஜீவாத்மாவாக ஆகின்றதோ அப்பொழுது சரீரத்தின் மீது பெயர் வைக்கப்படுகிறது. பிரம்ம தேவதாய நமஹ: என்று கூறுகின்றனர், விஷ்ணுவையும் தேவதை என்று கூறுகின்றனர். ஏனெனில் ஆகாரியாக இருக்கின்றார். ஆக ஆகார சரீரத்திற்கும் பெயர் வைக்கப்படுகிறது. எப்பொழுதும் பெயர் சரீரத்திற்குத் தான் வைக்கின்றனர். ஒரு நிராகார பரம்பிதா பரமாத்மாவிற்கு மட்டும் தான் பெயர் சிவன். ஒரே ஒரு இந்த ஆத்மாவிற்கு மட்டுமே பெயர் இருக்கின்றது, மற்றபடி அனைவருக்கும் தேகத்திற்கு பெயர் வைக்கப்படுகிறது. சரீரத்தை விட்டதும் பிறகு பெயர் மாறி விடும். பரமாத்மாவிற்கு ஒரே ஒரு பெயர் தான் கூறப்பட்டு வருகின்றது, ஒருபொழுதும் மாறுவது கிடையாது. அவர் ஒருபொழுதும் பிறப்பு இறப்பில் வருவ தில்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது. ஒருவேளை சுயம் பிறப்பு இறப்பில் வந்தால் மற்றவர்களை பிறப்பு இறப்பி-ருந்து விடுவிக்க முடியாது. அமரலோகத்தில் ஒரு பொழுதும் பிறப்பு இறப்பு என்று கூறப்படுவது கிடையாது. அங்கு மிக எளிய முறையில் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்பர். இங்கு தான் இறக்கின்றனர். இன்னார் இறந்து விட்டார் என்று சத்யுகத்தில் கூறப்படுவது கிடையாது. மரணம் என்ற சப்தம் துக்கமாகும். அங்கு பழைய சரீரத்தை விடுத்து அழகாக இருக்கக் கூடிய மற்றொரு சரீரத்தை எடுத்து விடுவார்கள். மகிழ்ச்சியாக்க கொண்டாடுவார்கள். பழைய உலகில் எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றனர்! இவர்கள் அனைவரும் அழிந்து போய் விடுவார்கள். யாதவர்கள் மற்றும் கௌரவர்கள் இருந்த தாகக் காண்பிக்கின்றனர். யுத்தத்தில் அவர்கள் அழிந்து விட்டனர் எனில் பாண்டவர்களுக்கு துன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்? இல்லை. பாண்டவர்களுக்கு இராஜ்யம் ஸ்தாபனை ஆயிற்று. இந்த நேரத்தில் நீங்கள் பிரம்மா வம்சி பிராமணர்கள், பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரிகள். பிரம்மாவிற்கு இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர் எனில், கண்டிப்பாக பிரஜாபிதா ஆகி விடுகின்றார் அல்லவா! பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு தந்தையானவர் சிவன். அவர் தான் பகவான் என்று கூறப்படுகின்றார். நாம் ஈஸ்வரிய குலத்தைச் சார்ந்தவர் கள் என்பதை நீங்கள் இந்த நேரத்தில் அறிந்திருக்கின்றீர்கள். நாம் பாபாவுடன், பாபாவின் வீடு நிர்வாண்தாமத்திற்கு செல்லக் கூடியவர்கள். பாபா வந்திருக்கின்றார், அவர் நாயகன் என்றும் கூறப்படுகின்றார். ஆனால் மிகச் சரியான சம்மந்தத்தில் அவர் தந்தையாக இருக் கின்றார். ஏனெனில் ஆஸ்தி நாயகிகளுக்குக் கிடைக்காது. குழந்தைகள் தான் ஆஸ்தி அடைகின்றனர், ஆக தந்தை என்று கூறுவது சரியானதாகும். தந்தையை மறந்து போவதன் மூலம் தான் மனிதர் கள் நாஸ்திகர்களாக ஆகியிருக்கின்றனர். கிருஷ்ணரின் சரித்திரம் பாடப் படுகிறது. ஆனால் கிருஷ்ணரின் சரித்திரம் எதுவுமில்லை. பாகவதத்தில் கிருஷ்ணரின் சரித்திரம் இருக்கிறது. ஆனால் சரித்திரம் சிவபாபாவிற்குத் தான் இருக்க வேண்டும். அவருக்கும் தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கின்றார். இதில் சரித்திரத்திற்கான விசயம் என்ன இருக்கிறது? கிருஷ்ணருக்கும் சரித்திரம் கிடையாது. அவரும் குழந்தையாக இருக்கிறார். எப்படி சிறிய குழந்தைகள் இருப்பார்களோ! அதுபோல குழந்தைகள் எப்பொழுதும் வினையாட்டுத் தனமாக (துரு துருவென்று) இருப்பார்கள், ஆக அனைவருக் கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். மண் பானையை உடைத்தார் என்று கிருஷ்ணரைப் பற்றி காண்பிப்பது போல எதுவும் கிடையாது. சிவபாபாவிற்கு என்ன சரித்திரம் இருக் கின்றது? கல்வி கற்பித்து பதீதத்தி-ருந்து பாவனமாக ஆக்குகின்றார் என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் நான் உங்களது பாவனைகளை நிறைவேற்றுகின்றேன் என்று கூறுகின்றார். மற்றபடி இங்கு நான் கற்பிக்கின்றேன். இந்த நேரத்தில் யார் எனது குழந்தைகளாக இருக்கின்றார்களோ அவர்கள் தான் என்னை நினைவு செய்கின்றனர். மற்ற அனைத்து நினைவுகளையும் மறந்து ஒரு தந்தை யின் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்கிறீர்கள். நான் சர்வவியாபியாக கிடையாது. என்னை யார் நினைவு செய்கின்றார் களோ அவர்களை நானும் நினைவு செய்கின்றேன். அதுவும் குழந்தைகளைத் தான் நினைவு செய்வேன். முக்கிய விசயம் ஒன்று தான். பெரிய மனிதர்களுக்கு புரிய வைத்து காண்பிக்கும் பொழுது தான் திறமைசா- என்று கூற முடியும். அனைத்திற்கும் ஆதாரம் கீதையாகும். கீதை நிராகார பரம்பிதா பரமாத்மாவினால் பாடப்பட்டதே தவிர மனிதனால் அல்ல. பகவான் ருத்ரன் என்று கூறப்படுகின்றார். கிருஷ்ணரை ருத்ரன் என்று கூறுவது கிடையாது. ருத்ர ஞான யக்ஞத்தின் மூலம் தான் விநாச நெருப்பு ஏற்பட்டது. சிலர் பரமாத்மாவை எஜமானராக நினைத்து நினைவு செய்கின்றனர். அந்த எஜமானருக்கு பெயர் கிடையாது என்று கூறு கின்றனர். சரி, அவர் எதற்கு எஜமானராக இருக்கின்றார்? அவர் அந்த உலகிற்கா? அல்லது முழு உலகிற்கா? பரம்பிதா பரமாத்மா சிருஷ்டிக்கு எஜமானராக ஆவது கிடையாது, சிருஷ்டிக்கு எஜமானர்களாக தேவி தேவதைகள் ஆகின்றனர். பரம்பிதா பரமாத்மா பிரம்மாண்டத்திற்கு எஜமானாக இருக்கின்றார். பிரம்ம தத்துவமானது தந்தைக்கு வீடு எனில் குழந்தைகளாகிய நமக்கு வீடாகும். பிரம்மாண்டம் தந்தையின் வீடாகும், அங்கு ஆத்மாக்களை முட்டை வடிவில் காண்பிக்கின்றனர். இவ்வாறு எதுவும் கிடையாது. ஜோதிர் பிந்து ஆத்மாக்களாகிய நாம் அங்கு வசிக்கின்றோம். நடிப்பு நடிப்பதற்காக நாம் கீழே இறங்குகின்றோம், நாம் ஒருவருக்கொருவர் பின்னால் வந்து கொண்டே இருக்கின்றோம். மரம் விருத்தியடைந்து கொண்டே இருக்கிறது. பாபா விதை ரூபமாக இருக்கின்றார், அஸ்திவாரம் என்று தேவி தேவதைகளைக் கூறினாலும் சரி அல்லது பிராமணர்களைக் கூறினாலும் சரியே. பிராமணர்கள் விதை தெளிக்கின்றனர். பிராமணர்கள் தான் பிறகு தேவதை களாக ஆகி இராஜ்யம் செய்கின்றனர். இப்பொழுது சிவபாபா நம் மூலமாக அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக்கின்றார். தேவதா தர்மம் அதாவது சொர்க்கத்தின் அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக்கின்றார். யார் எந்த அளவிற்கு உதவியாளர்களாக ஆகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்கள் தனது பங்கை எடுத்துக் கொள்கின்றனர். இல்லை யெனில் சூரியவம்சிகளாக எப்படி ஆக முடியும்? இப்பொழுது நீங்கள் அந்த உயர்ந்த பிராப்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு மனிதனும் முயற்சியின் படி பிராப்தியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். பிராப்தியை உருவாக்குவதற்காக நல்ல காரியங்கள் செய்து வந்தனர். தானம், புண்ணியம் செய்வது, தர்மசாலை போன்றவைகளை உருவாக்குவது. அனைத்தும் ஈஸ்வரனின் பெயரினாலேயே செய்கின்றனர். ஏனெனில் அதற்கான பலன் கொடுக்கக் கூடியவர் அவர். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்படி முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். மற்றபடி முழு உலகமும் மனித வழிப்படி முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதுவும் அசுர வழியாகும். ஈஸ்வரிய வழிக்குப் பிறகு தெய்வீக வழி, பிறகு அசுர வழி ஏற்பட்டு விடுகின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைக்கிறது. பாபா, மம்மாவும் கூட அந்த வழி மூலம் தான் சிரேஷ்டம் ஆகியிருக்கின்றனர். எந்த மனிதர்களும் தேவதைகளைப் போன்று சிரேஷ்டமானவர்களாக இருக்கவே முடியாது. தேவதைகளை சிரேஷ்டமானவர்களாக ஆக்கக் கூடியவர் யார்? இங்கு யாரும் சிரேஷ்டமானவர்கள் கிடையாது. ஸ்ரீ ஸ்ரீ எனப்படுபவர் ஒருவரே, அவர் தான் அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக் கின்றார். அவர் தான் ஸ்ரீ இலட்சுமி நாராயணனை உருவாக்கு கின்றார். இராமரையும் கூட ஸ்ரீ சீதை, ஸ்ரீ ராமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்குப் பின்னால் சத்ரியர்கள், சந்திரவம்சி என்று சேர்ந்து விடுகிறது. அந்த இலட்சுமி நாராயணன் 16 கலைகள் நிறைந்த சூரியவம்சி தேவதா குலத்தைச் சார்ந்தவர்கள், மேலும் இராமர் சீதை 14 கலைகள் உடைய சந்திரவம்சிகள் ஆவர். இரண்டு கலைகள் குறைந்து விட்டது, அதுவும் ஆகியே தீர வேண்டும் அல்லவா! சிருஷ்டி கீழே இறங்கும் கலையில் வருகிறது என்பது மனிதர்களுக்குத் தெரியாது. 16 கலைகளி-ருந்து 14 கலைகள் ஆகிவிடுகிறது எனில் கீழே இறங்கி விட்டது அல்லவா! இந்த நேரத்தில் முற்றிலுமாக சீர்கெட்டு இருக்கிறது. இது இராவண சம்பிரதாய மாகும். இராவண இராஜ்யம் அல்லவா! இராவண வழியைத் தான் அசுர வழி என்று கூறப்படுகிறது. அனைவரும் பதீதமாக இருக்கின்றனர். இந்த பதீத உலகில் யாரும் பாவனமாக இருக்க முடியாது. பாவனமாக இருந்த பாரதவாசிகள் தான் இப்பொழுது பதீதமாக ஆகியிருக் கின்றனர். பிறகு அவர்களைத் தான் நான் வந்து பாவனம் (தூய்மை) ஆக்குகின்றேன். பதீத பாவன் கிருஷ்ணர் என்று பாடப்படுவது கிடையாது. சரித்திரத்திற்கான விசயமும் கிடையாது. ஒரு பரமாத்மாவைத் தான் பதீத பாவன் என்று கூறுகின்றோம். ஆஹா பிரபு, உனது திருவிளை யாடல்கள் தனிப்பட்டது என்று கடைசியில் அனைவரும் கூறுவர். உங்களது படைப்புகளை யாரும் அறியவில்லை. அதனை இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இந்த ஞானம் முற்றிலும் புதுமையானது. புது பொருள் வெளிப் படுகின்ற பொழுது முத-ல் குறைவாகத் தான் இருக்கும், பிறகு அதிகரித்துக் கொண்டே செல்லும். நீங்களும் முத-ல் ஒரு மூலையில் இருந்தீர்கள். இப்பொழுது பல தேசங்களுக்கு விருத்தி அடைந்து கொண்டே இருப்பீர்கள். இராஜ்யம் கண்டிப்பாக ஸ்தாபனை ஆக வேண்டும். கீதையின் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்ற மூல விசயத்தை நிரூபணம் செய்ய வேண்டும். ஆஸ்தி தந்தை தான் கொடுப்பாரே தவிர கிருஷ்ணர் அல்ல! லெட்சுமி நாராயணனும் கூட தனது குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பர். அதுவும் இங்கு செய்யும் முயற்சியின் பலன் அடைகின்றீர்கள். சத்யுகம், திரேதாவில் எல்லை யற்ற ஆஸ்தியாகும். கோல்டன், சில்வர் ஜூப்ளி கொண்டாடுகின்றனர். இங்கு ஒரு நாள் கொண்டாடுகின்றனர். நாம் 1250 ஆண்டுகள் கோல்டன் ஜூப்ளி கொண்டாடுகின்றோம். குஷியாகக் கொண்டாடு கின்றோம். செல்வந்தர்களாக ஆகிவிடுகின்றோம். ஆக உள்ளுக்குள் இந்த குஷியிருக்கிறது. வெளியில் மட்டுமே விளக்குகள் போடப்பட்டிருக்கும் என்று கிடையாது. சொர்க்கத்தில் நாம் முற்றிலுமாக செல்வந்தர்களாக, மிகவும் சுகமானவர்களாக ஆகிவிடுவோம். தேவதா தர்மத்தைப் போன்று சுகம் கொடுப்பது வேறு எதுவும் கிடையாது. பிறகு சில்வர் ஜூப்ளி போன்றவைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வது கிடையாது. இப்பொழுது நீங்கள் அரைக்கல்பத்திற்கான ஜூப்ளி கொண்டாடுவதற்கான ஆஸ்தியை தந்தையிடமிருந்து அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆக புரிந்து கொள்வதற்கு முக்கிய விசயம் கீதையின் பகவான் சிவன் ஆவார். அவர் தான் இராஜயோகத்தைக் கற்பித்திருந்தார், அதனை மீண்டும் இப்பொழுது கற்பித்துக் கொண்டிருக் கின்றார். எப்பொழுது இராஜ்யம் என்பதே கிடையாதோ அப்பொழுது தான் கற்றுக் கொடுக்கின்றார். பிரஜையின் மீது பிரஜையின் இராஜ்யம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் தொப்பியை (தலைமையி-ருந்து) இறக்குவதில் தாமதப்படுத்துவது கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் அவரது வழிப்படி நடப்பதன் மூலம் சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். ஞானத்தை முழுமையாக தாரணை செய்யாதவர்களும் பலர் இருக் கின்றனர், ஆனால் சென்டருக்கு வந்து கொண்டே இருக் கின்றனர். ஒரே ஒரு குழந்தையை உருவாக்கி விட வேண்டும் என்று உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. திருமணம் செய்து ஒரு குழந்தைக்கான சுகத்தை அடைந்து விட வேண்டும் என்று மாயையின் தூண்டுதல் ஏற்படுகிறது. அரே, குழந்தை சுகம் தான் கொடுக்கும் என்ற உத்திரவாதம் கிடையாது. இரண்டு நான்கு ஆண்டுகளுக்குள் குழந்தை இறந்து விட்டால் மேலும் துக்கமாக ஆகி விடுவீர்கள். இன்று திருமணம் செய்கின்றனர், நாளை இறந்து விட்டால் அழ ஆரம்பித்து விடுகின்றனர். இது துக்க தாமமாகும். பாருங்கள், சாப்பிடுவதும் கூட எப்படி சாப்பிடுகின்றனர்! ஆக தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தை களே! இப்படிப்பட்ட ஆசைகளை வைக்காதீர்கள். மாயை பெரிய புயல்களைக் கொண்டு வரும். உடனடியாக விகாரத்தில் தள்ளி விடும். பிறகு வருவதற்கு வெட்கம் ஏற்பட்டு விடும். குலத்தை களங்கப்படுத்தி விட்டீர்கள் என்று அனைவரும் கூறுவர், பிறகு என்ன ஆஸ்தி அடைய முடியும்? பாபா, மம்மா என்று கூறுகின்றீர்கள் எனில் பிரம்மா குமார், குமாரிகள் தங்களுக்குள் சகோதரன் சகோதரிகளாக ஆகிவிடுகின்றீர்கள். பிறகு விகாரத்தில் கீழே விழுந்து விட்டால் இவ்வாறு குலத்தைக் களங்கப்படுத்தியவர்கள் மேலும் நூறு மடங்கு தண்டனைகளை அடைவர் மற்றும் பதவியும் தாழ்ந்ததாகி விடும். சிலர் விகாரத்தில் செல்கின்றனர், ஆனால் கூறுவது கிடையாது எனில், அதிக தண்டனை அடைபவர் களாக ஆகிவிடுகின்றனர். தர்மராஜ் பாபா யாரையும் விட்டு விட மாட்டார். அவர்கள் தண்டனை அடைந்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் இங்கிருப்பவர்களுக்கு அதிக கடுமையாக தண்டனை இருக்கிறது. இவ்வாறும் சென்டர்களில் பலர் வருகின்றனர். இப்படிப் பட்ட காரியங்கள் செய்யாதீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். நாம் ஈஸ்வரிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுகின்றீர்கள், பின்பு விகாரத்தில் செல்வது என்பது தன்னையே நாசம் செய்து கொள்வதாகும். ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால் உடனடியாக தந்தையிடத்தில் கூறி விடுங்கள். விகாரம் இல்லாமல் இருக்க முடியாது எனில் இங்கு வராமல் இருப்பது மேலானது ஆகும். இல்லையெனில் வாயுமண்டலம் கெட்டு விடுகிறது. உங்களுக்கிடையில் சில கொக்கு அல்லது அசுத்தத்தை சாப்பிடுபவர்கள் அமர்ந்தால் எவ்வளவு தீயதாகத்தோன்றும். இப்படிப் பட்டவர்களை அழைத்து வருபவர்கள் மீதும் தோஷம் வந்து விடும் என்று தந்தை கூறுகின்றார். உலகில் அப்படிப்பட்ட சத்சங்கம் அதிகம் இருக்கின்றது, அங்கு சென்று பக்தி செய்யுங்கள்.

பக்தியை நாம் வேண்டாம் என்று கூறுவது கிடையாது. தூய்மையாக்குவதற்காக பகவான் வருகின்றார், தூய்மையான வைகுண்டத்தின் ஆஸ்தி கொடுப்பதற்காக. தந்தை மட்டும் ஆஸ்தியை மட்டும் நினைத்தால் போதும் என்று தந்தை கூறுகின்றார். அவ்வளவு தான், மேலும் உணவின் பத்தியத்திற்கான யுக்திகளையும் கூறுகின்றார். பத்தியத்திற்காக பல விதமான யுக்திகளையும் வைத்துக் கொள்ளுங்கள். சரீரம் நன்றாக இல்லை, டாக்டர் சாப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். நீங்கள் கூறுவதற்காக நான் பழத்தை எடுத்துக் கொள்கிறேன். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இவ்வாறு கூறுவது என்பது பொய் கிடையாது. பாபா வேண்டாம் என்று கூறுவது கிடையாது. முற்றிலும் இனிமையாக, எந்த பழைய சுபாவமுமின்றி இருக்கும் குழந்தைகளை பாபா தேடுகின்றார். சேவாதாரி, நன்றியுள்ளவர், கட்டளைப்படி நடப்பவர்களாக இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த மாயாவி உலகத்தில் ஒவ்வொரு விசயத்திலும் துக்கம் உள்ளது. ஆகையினால், இந்தப் பழைய உலகத்தில் எந்தவித ஆசையும் வைக்க வேண்டாம். மாயையின் புயல் வந்தாலும், ஒருபொழுதும் குலத்துக்குக் களங்கம் ஏற்படுத்துபவர் ஆகக்கூடாது.

2. உணவுப் பழக்கத்தில் மிகுந்த பத்தியம் இருக்க வேண்டும். விருந்து போன்றவற்றிற்குச் சென்றாலும் மிகவும் யுக்தியுடன் நடக்க வேண்டும்.

வரதானம்:
தீமையிலும் தீமையைப் பார்க்காமல் நன்மையின் பாடத்தைப் படிக்கக் கூடிய அனுபவி மூர்த்தி ஆகுக.

விஷயம் முழுவதுமே கெட்டதாக இருந்தாலும் அதிலும் கூட ஓரிரு நன்மைகள் அவசியம் இருக்கவே செய்யும். பாடம் படிப்பதற்கான நன்மையோ ஒவ்வொரு விஷயத் திலும் நிறைந்திருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பிரச்சினையும் அனுபவசாலி ஆக்குவதற்காக நிமித்தம் ஆகிறது. பொறுமையின் பாடத்தைக் கற்றுத் தருகிறது. மற்றவர் ஆவேசமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் மற்றும் நீங்கள் அச்சமயம் பொறுமை அல்லது சகிப்புத் தன்மையின் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே சொல்கிறார்கள் - எது நடந்து கொண்டிருக்கிறதோ, அது நல்லது மற்றும் எது நடக்கவிருக்கிறதோ, அது இன்னும் நல்ல தாகவே இருக்கும். நல்லதை எடுத்துக் கொள்வதற்கான புத்தி மட்டும் வேண்டும். கெட்டதைப் பார்க்காமல் நல்லதை எடுத்துக் கொள்வீர்களானால் நம்பர் ஒன் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் அமைதி சக்தி மூலம் தீயதை நல்லதாக மாற்றி விடுங்கள்.