22.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே, (நிராகார்) உருவமில்லாத தந்தை தனியாக வரவில்லை, மனித உடலில் வந்து உங்களை இந்த நேரம் அலங்காரித்துக் கொண்டு இருக்கிறார்.

 

கேள்வி:

குழந்தைகள் நீங்கள் நினைவு யாத்திரையில் ஏன் அமர்கின்றீர்கள்?

 

பதில்:

1. ஏனென்றால் இந்த நினைவின் மூலமாகத்தான் நமக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது, நாம் நோயற்றவர்களாக ஆவோம் என நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

2. நினைவு செய்வதன் மூலமாக நம்முடைய பாவங்கள் நீங்கும், நாம் உண்மையான தங்கம் போல் ஆவோம், ஆத்மாவிலிருந்து ரஜோ தமோவின் அழுக்குகள் நீங்கி ஆத்மா சுத்தமாகி விடும்.

3. நினைவின் மூலமாகவே நீங்கள் தூய்மையான உலகிற்கு எஜமானர் ஆவீர்கள்.

4. நினைவின் மூலமாகவே நீங்கள் அலங்கரிக்கப்படுவீர்கள்.

5. நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக ஆவீர்கள், இந்த நினைவு தான் உங்களை பலமடங்கு பாக்கியசாலிகளாக ஆக்குகின்றது.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கின்றார். இங்கு நீங்கள் அமர்ந்து என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் வெறும் அமைதியில் மட்டும் அமரவில்லை, அர்த்தத்தைப் புரிந்து கொண்டு ஞானம் நிறைந்த மன நிலையில் அமர்ந்துள்ளீர்கள். தந்தையை நாம் ஏன் நினைவு செய்கின்றோம் என்பதன் ஞானம் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கிறது. தந்தை நமக்கு நீண்ட ஆயுளைத் தருகின்றார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நம்முடைய பாவங்கள் நீங்கும். நாம் உண்மையான தங்கம் போல், சதோபிரதானம் ஆவோம். உங்களுக்கு எவ்வளவு அலங்காரம் ஏற்படுகிறது. உங்களுடைய ஆயுள் காலமும் அதிகமாகி விடுகிறது, ஆத்மா சுத்தமாகி விடும். இப்பொழுது ஆத்மாவில் அழுக்கு படிந்துள்ளது. நினைவு யாத்திரையின் மூலம் ரஜோ, தமோவின் அனைத்து அழுக்குகளும் நீங்கி விடும், இந்தளவு உங்களுக்கு இலாபம் ஏற்படுகிறது, பிறகு ஆயுளும் அதிகமாகும். நீங்கள் சொர்க்கவாசியாகி மிகுந்த செல்வந்தர் ஆவீர்கள். நீங்கள் பத்மாபதம் பாக்கியசாலியாக ஆவீர்கள், எனவே தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ, மனதால் என் ஒருவனை நினைவு செய்யுங்கள். இந்த விஷயம் வேறு எந்த தேகதாரிகளுக்கும் சொல்லப்படுவதில்லை. தந்தைக்கு சரீரம் இல்லை. உங்களுடைய ஆத்மாவும் நிராகாரமாக இருந்தது, பிறகு மறு பிறவி எடுத்து தங்க புத்தியிலிருந்து கல்புத்தியாகி விட்டது. இப்பொழுது மீண்டும் சுத்தமாக வேண்டும். இப்பொழுது நீங்கள் தூய்மையாக ஆகின்றீர்கள். தண்ணீரில் பல பிறவிகளாக குளித்து வந்தீர்கள். இதன் மூலம் தூய்மை ஆவோம் என நினைத்து வந்தீர்கள், ஆனால் தூய்மை ஆவதற்குப் பதிலாக மேலும் தூய்மை இழந்து நஷ்டம் அடைந்தீர்கள். ஏனென்றால், இந்த உலகில் பொய்யான மாயை, பொய் சொல்லும் பழக்க வழக்கம் அனைவரிடத்திலும் இருக்கிறது. நான் உங்களை தூய்மை படுத்தி செல்கின்றேன் பிறகு உங்களை தூய்மையற்றவர்களாக ஆக்கியது யார்? என தந்தை கேட்கின்றார். எவ்வளவு கங்கா ஸ்நானம் செய்து வந்தோம் ஆனாலும் தூய்மையாக வில்லையே, என இப்பொழுது நீங்கள் உணருகின்றீர்கள் அல்லவா! தூய்மையாகித்தான் தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும். சாந்திதாமம், சுகதாமம் இரண்டும் தூய்மையான உலகம், இது தான் இராவணனின் உலகம், இதனை துக்கமான உலகம் என கூறப்படுகிறது. இவை எளிதாகவே புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமல்லவா! இதில் எந்த விதமான கடினமும் இல்லை. இதை சொல்வதிலும் கடினம் இல்லை. தன்னைத் தான் ஆத்மா என உணர்ந்து எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள் என யாரை சந்தித்தாலும் சொல்லுங்கள். ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா சிவன் ஆவார். ஓவ்வொரு சரீரத்திற்கும் வெவ்வேறு தந்தை இருக்கின்றனர். ஆத்மாக்களின் தந்தை ஒருவர் தான். எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது, மேலும் ஹிந்தியில் மட்டுமே புரிய வைக்கப் படுகிறது, ஹிந்தி பாஷை தான் முக்கிமானது. நீங்கள் பத்மாபதம் பாக்கியசாலி என இந்த தேவி-தேவதைகளைக் கூறுகின்றீர்கள் அல்லவா! ஆக இவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள். இவர்கள் சொர்க்கத்தின் எஜமானராக எவ்வாறு ஆனார்கள் என யாருக்கும் தெரியாது. இப்பொழுது தந்தை உங்களுக்குச் சொல்கின்றார், இந்த சகஜயோகத்தின் மூலம் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் இவ்வாறு ஆகின்றனர். இப்பொழுது பழைய உலகம் மற்றும் புதிய உலகிற்கான சங்கமம் இதுவாகும், பிறகு நீங்கள் புதிய உலகின் எஜமானர் ஆவீர்கள் இப்பொழுது இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகின்றார். கீதையில் கூட மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கிறது, வார்த்தையைப் படித்தாலும் முற்றிலும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. என்னை நினைவு செய்யுங்கள், ஏனென்றால் நான் மட்டுமே பதீத பாவனராக இருக்கிறேன். இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. என்னை நினைவு செய்வதால் நீங்கள் தூய்மையானவர்களாகி தூய்மையான உலகிற்குச் செல்வீர்கள் என தந்தை மட்டுமே கூற முடியும். முதன்முதலாக நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு மறுபிறவி எடுத்து தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது 84 பிறவிகள் எடுத்து மீண்டும் நீங்கள் புதிய உலகில் தேவாத்மாவாக ஆகின்றீர்கள்.

 

படைப்பவர் மற்றும் படைப்பு இவற்றை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆகவே இப்பொழுது நீங்கள் ஆஸ்திகராக ஆகிவிட்டீர்கள்; இதற்கு முன்பாக, பல பிறவிகளாக நீங்கள் நாஸ்திகராக இருந்தீர்கள். இந்த விஷயங்களை தந்தை கூறுகின்றார், வேறு யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், வேறு யாரும் உங்களுக்கு இந்த விஷயங்களைக் கூறமாட்டார்கள். இப்பொழுது இரண்டு தந்தைகளும் உங்களை அலங்கரிக்கின்றனர். முதலில் தந்தை தனியாகத் தான் இருந்தார், சரீரம் இல்லாமல் இருந்தார். மேலே இருந்துக் கொண்டு உங்களை அலங்கரிக்க முடியாது. மற்றபடி தூண்டுதல் மற்றும் சக்திக்கான விஷயம் இல்லை. மேலே இருந்து தூண்டுதல் கிடைக்க முடியாது. நிராகாரமான தந்தை ஸ்தூலமான சரீரத்தை ஆதாரமாக எடுத்த பிறகு உங்களை அலங்காரம் செய்கின்றார். பாபா நம்மை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார் என புரிந்துள்ளீர்கள். நாடகத்தின் திட்டப்படி பாபா கட்டுப்பட்டு இருக்கிறார்; அவருக்கு கடமை கிடைத்துள்ளது. ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைகளுக்காக வருகின்றார். இந்த யோக பலத்தால் நீங்கள் எவ்வளவு சுத்தமாகின்றீர்கள். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சுத்தமாகிவிடும், பிறகு கெட்டுப் போய்விடும். இந்த முயற்சியின் மூலம் நாம் அலங்கரிக்கப்பட்டவர்களாக ஆகின்றோம், என நீங்கள் சாட்சாத்காரம் பார்க்கின்றீகள். அங்கு கெட்ட பார்வை இருக்காது. சரீரத்தின் அங்கம் சரியான படி இருக்கும் இங்கு இராவண இராஜ்யத்தில் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர். இந்த லட்சுமி- நாராயணருடைய ஆடைகளைப் பாருங்கள் எவ்வளவு நன்றாக இருக்கிறது. அவர்களை தேக அபிமானி என கூற முடியாது. இங்கு அனைவரும் தேக அபிமானியாக இருக்கின்றனர். அவர்கள் இயற்கையான அழகு நிறைந்தவர்கள், தந்தை உங்களை அவ்வாறு இயற்கையான அழகானவர்களாக ஆக்குகின்றார். இன்றைய காலங்களில் உண்மையான நகைகளை யாரும் அணிந்து கொள்ள முடியவில்லை. யாராவது அவ்வாறு அணிந்தால் பறித்துச் சென்றுவிடுவார்கள். அங்கு இம்மாதிரியான விஷயங்கள் இல்லை. அப்படிப்பட்ட தந்தை உங்களுக்குக் கிடைத்துள்ளார், இவர் இல்லாமல் நீங்கள் இவ்வாறு ஆக முடியாது. நிறைய குழந்தைகள் நாங்கள் நேரடியாக சிவபாபாவிடமிருந்து எடுத்துக் கொள்வோம் என கூறுகின்றனர் ஆனால் அவர் எப்படி கொடுப்பார்? முடிந்தால் முயற்சி செய்து நேரடியாகக் கேட்டுப் பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். நாங்கள் சிவபாபாவிடமிருந்து பிராப்தி அடைகிறோம், பிரம்மாவிடம் கேட்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது என நிறைய குழந்தைகள் கூறுகின்றனர். சிவபாபா தூண்டுதல் மூலமாக ஏதாவது கொடுப்பார் என கூறுகின்றனர். நல்ல நல்ல பழைய குழந்தைகளைக் கூட மாயா அவ்வாறு கடித்துவிடுகிறது. ஒருவரை மட்டும் ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் ஒரு சிவபாபா என்ன செய்வார். தந்தை கூறுகின்றார், நான் மட்டும் எப்படி வர முடியும்? வாய் இல்லாமல் எப்படி பேச முடியும்? வாயால் பேசுவதற்கும் மகத்துவம் இருக்கிறது அல்லவா! பசு வாயிலிருந்து அமிர்தத்தை அடைவதற்கு எவ்வளவு அலைகின்றனர், பிறகு ஸ்ரீநாத் வாசலில் சென்று தரிசனம் செய்கின்றனர். அவருக்குள் ஆத்மா இல்லை ஆனால் அவரை தரிசனம் செய்வதால் என்ன கிடைக்கும்? இதைத்தான் பூஜை என கூறப்படுகிறது. மற்றபடி 5 தத்துவங்களால் உருவாக்கப் பட்டுள்ளது. ஆகவே இதனை மாயாவை நினைவு செய்வதாக அர்த்தம் ஆகின்றது. 5 தத்துவங்களும் இயற்கை அல்லவா! அதனை நினைவு செய்வதால் என்ன கிடைக்கும்? அனைவருக்கும் இயற்கையின் ஆதாரம் இருக்கிறது, ஆனால் அங்கு சதோபிரதானமான இயற்கை இருக்கும். இங்கு தமோபிரதானமான இயற்கை இருக்கிறது. சதோபிரதானமான இயற்கையை தந்தை ஒருபொழுதும் ஆதாரமாக எடுப்பதில்லை. இங்கு சதோபிரதானமான இயற்கையும் கிடைக்க முடியாது. இங்கு யாரெல்லாம் சாது-சந்நியாசிகளாக இருக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் நான் தான் விடுவிக்க வேண்டும் என தந்தை கூறுகின்றார்: நான் துறவற மார்க்கத்தில் நான் வருவதே இல்லை. இது இல்லற மார்க்கமாகும். அனைவரும் தூய்மையாக வேண்டும் என கூறப்படுகிறது. அங்கு பெயர் தோற்றம் அனைத்தும் மாறிவிடும். ஆக தந்தை புரிய வைக்கின்றார். இந்த நாடகம் எப்படி உருவாகி இருக்கிறது என பாருங்கள். ஒருவருடைய தோற்றம் போல் இன்னொருவருக்கு கிடைக்காது. இவ்வளவு கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள், அனைவருடைய தோற்றமும் தனிப்பட்டதாகும்; யார் என்ன செய்தாலும் ஒருவருடைய தோற்றம் போல் இன்னொருவருக்குக் கிடைக்க முடியாது. இதைத்தான் இயற்கை, அதிசயமானது என கூறப்படுகிறது. சொர்க்கத்தை அதிசயமானது என கூறப்படுகிறது, எவ்வளவு அழகானதாக இருக்கும். மாயாவுடைய ஏழு அதிசயம் இருக்கிறது, தந்தையின் அதிசயம் ஒன்றாகும். அந்த ஏழு அதிசயத்தைத் தராசு தட்டில் ஒருபக்கமும், பாபாவின் ஒரு அதிசயத்தை இன்னொரு தட்டிலும் வைத்தால் இந்த ஒரு அதிசயமே பளுவானதாக இருக்கும். ஒருபுறம் ஞானம் இன்னொரு புறம் பக்தியை வைத்தால், ஞானத்தின் பக்கம் பளுவானதாக இருக்கும். பக்தியை கற்றுத் தருவோர் நிறைய பேர் உள்ளனர்; ஞானத்தைத் தருபவர் ஒரு தந்தை மட்டுமே என இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆக தந்தை வந்து குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றார், அலங்கரிக்கின்றார்; தூய்மையாக ஆகுங்கள் என தந்தை கூறுகின்றார், ஆனாலும் இல்லை நாங்கள் அசுத்தமாக ஆவோம் என கூறுகின்றனர். கருட புராணத்தில் கொடிய விஷ நதியை காட்டியுள்ளனர், தேள், பாம்பு, பூராண் போன்றவை கடித்துக் கொண்டிருந்தன என கூறுகின்றனர். நீங்கள் எந்தளவு பிராப்தி இழந்தவர்களாக ஆகிவிட்டீர்கள் என தந்தை கூறுகின்றார். குழந்தைகள் உங்களுக்கு மட்டுமே தந்தை புரிய வைக்கின்றார்; வெளியில் யாருக்காவது நேரடியாக கூறினால் கோபித்துக் கொள்வர். மிகவும் யுக்தியோடு புரிய வைக்கப்படுகிறது. சில குழந்ழைதகளுக்கு பேசும் முறையே தெரியவில்லை. சிறிய குழந்தைகள் முற்றிலும் ஏதும் அறியாதவர்களாக இருப்பதால் அவர்களை மகாத்மா என கூறப்படுகிறது. கிருஷ்ணரை மகாத்மா என்பதற்கும் துறவற மார்க்கத்தைச் சேர்ந்த சந்நியாசிகளை மகாத்மா (சாமியார்) என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அவர் இல்லற மார்க்கத்தைச் சேர்ந்தவர், அவர் ஒருபொழுதும் விகாரத்தினால் பிறவி எடுப்பதில்லை. அவரைத் தான் சிரேஷ்டாச்சாரி என கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் சிரேஷ்டாச்சாரியாக ஆகின்றீர்கள். இங்கு பாப்தாதா இருவரும் சேர்ந்திருக்கின்றனர் என குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். இவர் அவசியம் நன்றாக அலங்காரம் செய்வார். யார் இந்த குழந்தைகளை அவ்வாறு அலங்காரம் செய்வித்தாரோ அவர் அருகில் நாம் ஏன் செல்லாமல் இருப்பது என அனைவர் மனதிலும் விருப்பம் இருக்கிறதல்லவா! எனவே நீங்கள் இங்கு புத்துணர்ச்சி அடைய வருகின்றீர்கள்; தந்தையின் அருகில் வர வேண்டும் என உள்ளம் ஈர்க்கப்படுகிறது. யாருக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் கூறுவார்கள் - எங்களை அடித்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, நாங்கள் உங்களுடைய துணையை ஒருபோதும் விட மாட்டோம். சிலர் காரணமின்றி விட்டுச் செல்கின்றனர். இதுவும் கூட நாடகத்தின் விளையாட்டில் பதிவாகி உள்ளது. கைவிடுதல் மற்றும் விவாகரத்து செய்து விடுகின்றனர்.

 

இவர்கள் இராவண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என தந்தை அறிந்திருக்கிறார்; கல்ப- கல்பமாக இவ்வாறு நடந்து வருகிறது, சிலர் மீண்டும் வந்துவிடுகின்றனர். கையை விட்டு விடுவதால் பதவி குறைந்துவிடும் என பாபா புரிய வைக்கின்றார். நேரில் வருகின்றனர், வாக்குறுதியும் செய்கின்றனர் - நாங்கள் அப்படிப்பட்ட தந்தையை ஒருபொழுதும் விட மாட்டோம் என்று ஆனால் மாயா இராவணனும் குறைந்தது அல்ல. திடீரென்று தன் பக்கம் இழுத்து விடுகின்றது. பிறகு நேரில் வரும்பொழுது அவர்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. தந்தை கம்பை எடுத்து அடிக்கவா முடியும்! தந்தை மீண்டும் அன்பாகவே புரிய வைப்பார், உங்களுக்கு மாயா என்ற முதலை விழுங்கி விடுகிறது, நல்லது தப்பித்து விட்டீர்கள். அடி வாங்கினால் பதவி குறைந்துவிடும். யார் எப்பொழுதும் ஏக்ரஸாக இருக்கின்றார்களோ அவர்கள் ஒரு பொழுதும் அசையமாட்டார்கள், கையை விடமாட்டார்கள். இங்கிருந்து தந்தையை விட்டு விட்டு, இறந்து மாயா இராவணனுடையவர்களாக ஆகின்றார்கள். ஆகவே அவர்களை மாயா இன்னும் வேகமாகச் சாப்பிட்டுவிடும். நான் உங்களை எவ்வளவு அலங்காரம் செய்கிறேன் என தந்தை கூறுகின்றார். நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள், யாருக்கும் துக்கம் தராதீர்கள் என புரிய வைக்கப்படுகிறது. இரத்தத்தினால் எழுதிக் கொடுத்து பிறகு பழையபடி ஆகி விட்டனர். மாயா பெரிய சக்தி வாய்ந்தது. காதையும், மூக்கையும் பிடித்து இழுத்து அலைக் கழித்து விடுகிறது. இப்பொழுது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கொடுக்கப்படுகிறது, எனவே கெட்ட பார்வை ஒருபொழுதும் கூடாது. உலகிற்கு எஜமானர் ஆகவேண்டுமானால் கொஞ்சம் உழைப்பு செய்ய வேண்டும் தானே! இப்பொழுது உங்கள் ஆத்மா மற்றும் சரீரம் தமோபிரதானமாக இருக்கிறது. அழுக்கு படிந்துள்ளது. இந்த அழுக்கை அழிக்க வேண்டுமானால் என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகின்றார். உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியவில்லையா! வெட்கம் வரவில்லையா? நினைவு செய்ய வில்லையெனில் மாயா என்ற பூதம் உங்களை விழுங்கிவிடும். நீங்கள் எவ்வளவு கெட்ட நிலை அடைந்து விட்டீர்கள், இராவண இராஜ்யத்தில் ஒருவர் கூட விகாரமின்றி பிறக்கவில்லை. அங்கு இந்த விகாரத்தின் பெயரும் கிடையாது, இராவணனும் இல்லை துவாபர யுகத்தில் தான் இராவண இராஜ்யம் ஏற்படுகிறது. ஒரு தந்தை மட்டுமே தூய்மையாக்குபவர் குழந்தைகளை இந்த ஒரு பிறவி மட்டும் தூய்மையாகுங்கள், இதன் பிறகு விகாரம் என்ற விஷயமே இருக்காது என தந்தை கூறுகின்றார். அதுதான் விகாரமில்லாத உலகம். இவர்கள் தூய்மையான தேவி- தேவதைகளாக இருந்தார்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து கீழே வந்து விட்டனர் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது தூய்மையின்றி இருப்பதனால் எங்களை இந்த தூய்மை இல்லாத உலகிலிருந்து விடுதலை செய்யுங்கள் என சிவபாபாவை அழைக்கின்றனர். எப்பொழுது தந்தை வந்தாரோ அப்பொழுது தான் உங்களுக்குப் புரிந்துள்ளது. அதாவது இது அசுத்தமான காரியம். இதற்கு முன் உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் நீங்கள் இராவண இராஜ்யத்தில் இருந்தீர்கள், சுக தாமத்திற்குச் செல்ல வேண்டுமானால் சீ சீ காரியங்கள் செய்வதை விட்டு விடுங்கள். அரைக் கல்பமாக நீங்கள் அசுத்தமான காரியங்களைத்தான் செய்து வந்தீர்கள். தலை மேல் பாவச் சுமையும் அதிகமாகிவிட்டது. மேலும் நீங்கள் மிகவும் நிந்தனை செய்தீர்கள். தந்தையை நிந்தனை செய்ததால் பாவம் அதிகமாகிவிட்டது, இதுவும் நாடகத்தில் பதிவாகி உள்ளது. உங்களுடைய ஆத்மாவிற்கு 84 பிறவிகளின் பங்கு கிடைத்துள்ளது, அதை நடித்தாக வேண்டும். ஒவ்வொரு வரும் தன்னுடைய பங்கை நடித்தாக வேண்டும். பிறகு நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்? சத்யுகத்தில் யாரும் அழுவதில்லை. ஞானத்தின் திசை முடிந்த பிறகு அழுவது, வருந்துவது ஆரம்பமாகின்றது. மோகத்தை வென்றவரின் கதையைக் கூட நீங்கள் கேட்டீர்கள். இதுவும் ஒரு பொய்யான தத்துவமாக உருவாக்கப்பட்டது. சத்யுகத்தில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. மோகத்தை வென்றவராக ஆக்குபவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே. பரமபிதா பரமாத்மாவின் வாரிசாக நீங்கள் ஆகின்றீர்கள், அவர் உங்களை உலகிற்கு எஜமானராக ஆக்குகின்றார். தன்னைத்தானே கேளுங்கள், ஆத்மாக்களாகிய நாம் அவருடைய வாரிசாக இருக்கிறோமா? மற்றபடி உலகீய படிப்பில் என்ன இருக்கிறது! இன்றைய காலங்களில் அழுக்கான மனிதர்களின் முகத்தைக் கூட பார்க்கவே கூடாது, குழந்தைகளுக்கும் காண்பிக்கக் கூடாது. நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம் என புத்தியின் மூலம் புரிந்து கொள்ளுங்கள். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்கிறோம். மேலும் மற்றவர்களைப் பார்த்தும் பார்ப்பதில்லை நாம் புது உலகத்தை மட்டுமே பார்க்கின்றோம். நாங்கள் தேவதைகளாக ஆகின்றோம், அந்த புது சம்மந்தங்களை மட்டும் பார்க்கின்றோம். பழைய சம்மந்தங்களை பார்த்தும் பார்க்காமல் இருக்கின்றோம். இவையனைத்தும் அழியப் போகிறது நாம் தனியாக வந்தோம், தனியாகவே செல்ல வேண்டும். தந்தை நம்மை அழைத்துச் செல்வதற்காக ஒரு முறை மட்டுமே வருகின்றார் இதனையே சிவபாபாவின் ஊர்வலம் என கூறப்படுகிறது. அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள். தந்தை உலக அரசாட்சியை கொடுக்கின்றார், மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகின்றார். இதற்கு முன் விஷத்தை குடித்தீர்கள், இப்பொழுது அமிர்தத்தைக் குடிக்கின்றீர்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தன்னைத் தான் சங்கமயுகவாசி எனப் புரிந்து கொள்ள வேண்டும். பழைய சம்மந்தங்களைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க வேண்டும். நாம் தனியாக வந்தோம், தனியாகவே செல்ல வேண்டும் என புத்தியில் இருக்க வேண்டும்.

 

2. ஆத்மா மற்றும் சரீரத்தை தூய்மையாக்க வேண்டுமானால் ஞானத்தின் மூன்றாவது கண் மூலமாக பார்க்கக் கூடிய பயிற்சி செய்ய வேண்டும். கெட்ட பார்வையை விட வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தினால் தன்னை அலங்காரம் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

தந்தையின் குடை நிழலில் சதா மகிழ்ச்சியின் அனுபவம் செய்து மற்றும் செய்விக்கக் கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.

எங்கு தந்தையின் குடை நிழல் இருக்கிறதோ அங்கு சதா மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள். குடை நிழலுக்குள் மாயை வர முடியாது. கடின உழைப்பிலிருந்து இயற்கையாகவே தூர விலகி விடுவீர்கள், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏனெனில் கடின உழைப்பு மகிழ்ச்சியாக இருக்க விடாது. குடை நிழலுக்குள் இருப்பவர்கள் மிகவும் விசேஷ ஆத்மாக்கள், அவர்கள் உயர்ந்த படிப்பு படித்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனெனில் நான் கல்ப கல்பம் வெற்றியடைந்தவன், தேர்ச்சியடைந்தவன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். எனவே சதா மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான செய்தியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதுவே சேவையாகும்.

 

சுலோகன்:

நாடகத்தின் இரகசியங்களை அறியாதவர்கள் தான் கோபப்படுவார்கள்.

 

ஓம்சாந்தி