22-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே- பிராமணர்களின் இது
புதிய விருட்சம் ஆகும், இதை நன்றாக வளர்க்க வேண்டும் பாதுகாக்க
வேண்டும் ஏனெனில் புதிய மரம் ஆனதால் பறவைகள் சாப்பிட்டுவிடும்
கேள்வி:
பிராமணர்களின் விருட்சத்தில்
இருந்து வெளிப்படும் இலைகள் வாடி விடுகின்றது ஏன்? காரணம்
மேலும் அதற்கு நிவாரணம் என்ன?
பதில்:
பாபா ஞானத்தில் அற்புதமான
இரகசியங்கள் கூறியிருக்கிறார் அதைப் புரிந்து கொள்ள வில்லை அதன்
காரணத்தினால் சந்தேகம் உருவாகிறது ஆகவே புதியலிபுதிய இலைகள்
கூட வாடி விடுகின்றது பிறகு படிப்பை விட்டுச்
சென்றுவிடுகிறார்கள். இதில் புரிய வைக்கக் கூடிய குழந்தைகள்
மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். ஒருவேளை ஒருவருக்கு
சந்தேகம் வந்தது என்றால் பெரியவர்களிடம் கேட்க வேண்டும். பதில்
கிடைக்கவில்லை என்றால் பாபாவிடம் கூடக் கேட்கலாம்.
பாடல்:
பிரியமானவரே வந்து சந்தியுங்கள்
ஓம் சாந்தி.
பாடலையோ குழந்தைகள் அநேக முறை கேட்டு இருக்கிறீர்கள்,
துன்பத்தில் பகவானை அனைவரும் அழைக்கின்றார்கள். அவர் தங்களிடம்
அமர்ந்துள்ளார். உங்களை அனைத்து வேதனையில் இருந்து விடுவித்துக்
கொண்டிருக்கிறார். துக்கதாமத்தில் இருந்து சுகதாமத்திற்கு
அவசியம் அழைத்துச் செல்லக் கூடியவர் சுகதாமத்திற்கு எஜமானர்
கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்
வந்துள்ளார், உங்கள் முன்னால் அமர்ந்துள்ளார் மேலும் இராஜயோகம்
கற்பித்துக் கொண்டிருக்கிறார். இது மனிதர்களின் காரியம்
கிடையாது. பரமபிதா பரமாத்மா நம்மை மனித நிலையில் இருந்து தேவதை
ஆக்குவதற்காக இராஜயோகம் கற்பிக் கிறார் என்பதை நீங்கள்
கூறுகிறீர்கள். மனிதன், மனிதனை தேவதை ஆக்க முடியாது. மனிதனை
தேவதையாக ஆக்கும் தருணத்தில் வந்துவிட்டார் இந்த மகிமை
எவருடையது? பாபாவுடையது. தேவதை அவசியம் சத்தியயுகத்தில் தான்
இருப்பார்கள். இந்த நேரத்தில் தேவதைகள் இருப்ப தில்லை. ஆகவே
அவசியம் சொர்கத்தைப் படைப்பவர் தான் மனிதனை தேவதையாக்க முடியும்.
பரமபிதா பரமாத்மாவைத் தான் சிவன் என்று அழைக்கின்றோம்,
பதீதர்களை பாவனம் ஆக்க அவருக்கு இங்கே வர வேண்டியுள்ளது.
இப்போது அவர் எவ்வாறு வருவார்? பதீத உலகத்தில் கிருஷ்ணரின் உடல்
கிடைக்காது. மனிதர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். இப்போது
குழந்தைகள் நீங்கள் முன்னால் அமர்ந்து கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலகத்தின் வரலாறு புவியியலை
அறிவீர்கள். சரித்திரத்துடன் அவசியம் பூகோளமும் இருக்கிறது
மேலும் மனித சிருஷ்டியில் சரித்திரம்-பூகோளம் அவசியம்
இருக்கிறது. பிரம்மா-விஷ்ணு-சங்கரரின் சூட்சும வதனத்தில்
சரித்திர-பூகோளம் இருக்கிறது என்று ஒருபோதும் கூறமாட்டார்கள்.
அது சூட்சும வதனம். அங்கே மூவி தான் இருக்கும் அங்கு பேச்சின்
சப்தம் இருக்காது. இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு பாபா முழு
உலகத்தின் சரித்திர-பூகோளம், மூலவதனத்தின் செய்தி, அதை மூன்று
லோகம் என்று கூறுகிறோம், அதனைப் பற்றி நமக்கு புரிய
வைக்கின்றார். இப்போது பிராமணர்களின் புதிய மரம் நடுகிறார். இதை
விருட்சம் என்று கூறப்படுகிறது. மற்ற மரங்களை விருட்சம் என்றுக்
கூறுவதில்லை. கிருஸ்துவர்கள் கிருஸ்மஸ் மரம் என்பது தனிப்பட்டது
என்று அறிகிறார்கள் ஆனால் இந்த அனைத்து கிளைகளும் அதனின் பெரிய
விருட்சத்தில் இருந்து வெளிப்பட்டது என்று அவர்களுக்குத்
தெரியாது. மனித சிருஷ்டி எவ்வாறு உருவானது என்று புரிய வைக்க
வேண்டும். தாய்-தந்தை மேலும் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக
உருவாக முடியாது. இரண்டில் இருந்து நான்கு, ஐந்து இலைகள்
உருவாகும் ஆனால் சிலவற்றை பறவைகள் சாப்பிட்டு விடுகின்றது. இது
மிகவும் சிறிய மரம் ஆகும். எவ்வாறு முதலில் வளர்ந்ததோ அதுபோன்று
மெல்ல-மெல்ல வளர்ச்சி அடைகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு
இப்போது எவ்வளவு ஞானம் கிடைக்கிறது! நீங்கள் திரிகாலதரிசி
ஆகிறீர்கள், மூன்று லோகத்தையும் அறிகிறீர்கள், திரிலோக நாதன்
அதாவது மூன்று லோகத்தையும் அறிகிறீர்கள். இலட்சுமி- நாராயணரை
திரிலோகநாதன், திரிகாலதரிசி என்று கூற முடியாது. மனிதரை மற்றும்
கிருஷ்ணரை திரிலோகநாதன் என்ற பெயரில் அழைக்கிறார்கள். எவர் சேவை
செய்கின்றார்களோ அவருக்கு பிரஜைகள் உருவாகிறார் கள். தனக்கு
வாரிசும் உருவாக்க வேண்டும், பிரஜைகளும் உருவாக்க வேண்டும்.
நாம் திரிலோக நாதன் என்பது தங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.
இந்த விஷயங்கள் மிகவும் அற்புதமானது. குழந்தைகள் நல்லவிதமாக
புரிந்து கொள்ளாமல் இருப்பதின் காரணத்தினால் உருவாக்குவதற்கு
பதிலாக அழித்து விடுகிறார்கள். வெளிப்படும் இலையை வாடச் செய்து
விடுகிறார்கள் பிறகு படிப்பை விட்டு விடுகிறார்கள்.
கல்பத்திற்கு முன்னாலும் கூட இவ்வாறு நடந்து இருக்கிறது என்று
நாம் கூறுகிறோம், கடந்ததை கடந்ததாகப் பாருங்கள். இப்போது
குழந்தைகள் நீங்கள் முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை அனைத்தும்
அறிவீர்கள், சரித்திரம்-பூகோளம் அறிகிறீர்கள். மற்றபடி
மனிதர்கள் நிறைய விஷயங்கள் உருவாக்கியுள்ளார்கள், என்னென்ன
எழுதுகிறார்கள், எவ்வாறு நாடகத்தை உருவாக்குகிறார்கள்!
பாரதத்தில் அநேகரை அவதாரம் எடுத்தார்கள் என்று ஏற்றுக்
கொள்கிறார்கள். பாரதம் தானே தனது படகை மூழ்கச் செய்துவிட்டது.
இப்போது குழந்தைகள் நீங்கள் முக்கியமாக பாரதத்தை, மற்றும் முழு
உலகத்திற்கு முக்தி தருகிறீர்கள், இந்த உலகம் சக்கரம் போன்று
சுற்றுகிறது, நாம் மேலே இருப்போம், நரகம் கீழே இருக்கும்.
எவ்வாறு சூரியன் மறையும் போது கீழே இறங்கும் போது அது
கடலுக்குள் செல்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது
கடலுக்குள் செல்வதில்லை. அது போன்று துவாரகை கூட நீரில்
மூழ்கிவிட்டது என்று கருதுகிறார்கள். மனிதரின் புத்தியும் கூட
அற்புதமாக இருக்கிறது அல்லவா! இப்போது நீங்கள் எவ்வளவு உயர்வு
அடைகிறீர்கள்! எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்! துன்பமான
நேரத்தில் உங்களுக்கு லாட்டரி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
தேவதைகளுக்கு கிடைத்துள்ளது. இங்கே தங்களுக்கு துன்பத்தில்
இருந்து எல்லையில்லாத சுகம் கிடைக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சி
இருக்கும், எதிர்காலத்தில் 21 பிறவிக்காக நாம் சொர்கத்தில்
எஜமானர்களாக இருப்போம்!
கீதையின் ஞானம் சத்சங்கத்தில் நடைபெறுகிறது என்று மனிதர்கள்
கருதுகிறார்கள். சாயி பாபாவின் சத்சங்கங் கள் ஆகியவைகள் எவ்வளவு
இருக்கிறது! நிறைய கடைகள் இருக்கிறது. இது ஒன்று தான்
பிரம்மாகுமாரிகளின் கடைத்தெரு ஆகும். ஜெகதம்பா பிரம்மாவின் முக
வம்சாவளி ஆவார். பிரம்மாவின் மகள் சரஸ்வதி மிகவும் புகழ்
பெற்றவர். தாய்-தந்தையிடம் இருந்து நாம் அளவில்லாத சுகத்தை
அடைந்தோம் என்று நீங்கள் அறிவீர்கள். அப்பேர்ப்பட்ட தாய்-தந்தை
நமக்கு கிடைத்துள்ளார்கள். மிகவும் அளவில்லாத சுகத்தை
கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லது, தாய்-தந்தைக்கு ஜென்மம்
தருபவர் யார்? சிவபாபா. நமக்கு இரத்தினங்கள் சிவபாபா விடம்
இருந்து கிடைக்கிறது. நாம் பேரன்-பேத்திகள் ஆகிவிட்டோம். நாம்
இப்போது அளவில்லாத இந்த சுகத்தை எல்லையற்ற தந்தையிடம் இருந்து,
பிரம்மா சரஸ்வதி, தாய்-தந்தை மூலமாக அடைந்து கொண்டிருக்கிறோம்.
தருபவர் அவராக இருக்கிறார். எவ்வளவு எளிதான விஷயங்கள். பின்னர்
நாம் இந்த பாரதத்தை சொர்கமாக ஆக்குகிறோம் என்று புரிய வைக்க
வேண்டும். பிறகு நாம் அங்கே சென்று அளவில்லாத சுகத்தை அடைவோம்.
நாம் பாரதத்திற்கு சேவை செய்கிறோம். உடல்-மனம்-செல்வத்தால் நாம்
சேவை செய்கிறோம். காந்திக்கு கூட உதவி செய்தார்கள் அல்லவா!
யாதவர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள் என்ன செய்தார்கள் என்று
நீங்கள் புரிய வைக்க முடியும். பாண்டவர்கள் பக்கம் பரமபிதா
பரமாத்மா இருக்கிறார். பாண்டவர்கள் வினாசகாலத்தில் அன்புள்ள
புத்தி உள்ளவர்கள், கௌரவர்கள், யாதவர்கள் வினாசகாலத்தில்
விபரீதபுத்தி உள்ளவர்கள் ஆவார்கள். அவர்கள் பரமபிதா பரமாத்மாவை
ஏற்றுக் கொள்வதேயில்லை. கல்லிலும், முள்ளிலும் இருக்கிறார்
என்று கூறி விட்டார்கள். உங்களுக்கு அவரைத் தவிர வேறு எவரின்
மீதும் இப்போது அன்பு இல்லை. ஆகவே மிகவும் பெருமையுடன் இருக்க
வேண்டும். உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மகிழ்ச்சி அடைய
வேண்டும். குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள்
தாய்-தந்தை மூலமாக கேட்கிறீர்கள் ஆகவே தங்களுக்கு மகிழ்ச்சி
ஏற்படுகிறது. முழு உலகத்திலும் நம்மைப் போன்று சௌபாக்கியசா-கள்
வேறு எவரும் இருக்க முடியாது! நம்முள் சிலர் பத்மாபதம்
பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள், சிலர் சௌபாக்கிய சாலிகளாக
இருக்கிறார்கள், சிலர் பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள் மேலும்
துர்பாக்கியசாலி களாகவும் இருக்கிறார்கள். எவர் ஆச்சரியமாகக்
கேட்டுவிட்டு ஓடிவிடுகிறார்களோ அவர்களை மகான்
துர்பாக்கியசாலிகள் என்று கூறுவார். ஏதாவது காரணத்தால் பாபாவின்
கையை விட்டுச் சென்று விடுகிறார்கள். பாபா மிகவும் இனிமையானவர்.
அறிவுரை கூறினால் எங்கே ஓடிப் போய் விடுவாரோ என்று எண்ணுகிறார்.
நீங்கள் விகாரத்தில் போய் குலத்தின் பெயரைக் கெடுத்து
விடுகிறீர்கள் என்று புரிய வைக்கிறார். ஒருவேளை அவப்பெயரை
ஏற்படுத்தினால் மிகவும் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.
சத்குருவை நிந்தனை செய்பவர்கள் ஆஸ்தியை அடைய முடியாது .என்று
அதற்குத் தான் கூறப்படுகிறது ஆனால் அவர்கள் தனது லௌகீக
குருவுக்காக கூறப்பட்டுள்ளது என்று கருதுகிறார்கள். பெண்களை
ஆண்கள் கூட இவ்வாறு கூறி பயமுறுத்து கிறார்கள். அமரநாத் பாபா
இப்போது தங்களுக்கு அமரகதை கூறிக் கொண்டிருக்கிறார். நான்
டீச்சராகவும் இருக்கிறேன், வேலைக்காரனாகவும் இருக்கிறேன் என்று
கூறுகிறார். டீச்சரின் காலை யாராவது கழுவிக் குடிப்பார்களாக
என்ன? குழந்தைகள் எஜமானர் ஆகக் கூடியவர்கள் நான் என்ன அவர்களின்
மூலமாக காலைக் கழுவவைப்பேனா? இல்லை. நிராகாரமானவர்
நிர்அகங்காரியாக இருக்கிறார் என்று மகிமை செய்கிறார்கள். இவரும்
கூட அவரின் தொடர்பால் நிர்அகங்காரி ஆகிவிட்டார்.
அபலைப் பெண்களை கொடுமை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கல்பத்திற்கு முன்னாலும் கூட கொடுமை செய்யப்பட்டது. இரத்த
வெள்ளம் ஓடும், பாவம் என்ற பானை நிரம்பும். இப்போது நீங்கள்
யோக பலத்தால் எல்லையற்ற இராஜ்யத்தை அடைகிறீர்கள். நாம்
பாபாவிடம் இருந்து ஸ்திரமான-அகண்ட இராஜ்யத்தை அடைகிறோம் என்பதை
நீங்கள் அறிவீர்கள். நாம் சூர்ய-வம்சத்தை சேர்ந்தவர்கள்
ஆகின்றோம். ஆமாம், இதில் நம்பிக்கை வேண்டும். தன்னுடைய
முகத்தைப் பார்த்துக் கொண்டே இருங்கள்-நமக்குள் எந்தவொரு
விகாரமும் இல்லை தானே என்று பாருங்கள். எந்த விஷயத்திலாவது
சந்தேகம் இருந்தால் பெரியவர்களிடம் கேளுங்கள், தன்னுடைய
சந்தேகத்தை நீக்கி கொள்ளுங்கள். ஒருவேளை சகோதரிகளால் சந்தேகத்தை
நீக்க முடிய வில்லை என்றால் பாபாவிடம் கேளுங்கள். இப்போது
குழந்தைகள் நீங்கள் நிறைய விஷயங்கள் புரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது. எதுவரை உயிர் வாழ்கிறோமோ அதுவரை புரிய
வைத்துக் கொண்டே இருப்பார். இப்போது நாங்கள் படித்துக்
கொண்டிருக்கிறோம் என்றுச் சொல்லுங்கள். பாபாவிடம் நாங்கள்
கேட்கிறோம் அல்லது இதுவரை பாபா இந்த விஷயத்தை புரிய வைக்கவில்லை
என்று கூறுங்கள். வருங்காலத்தில் புரிய வைப்பார், பிறகு
கேளுங்கள். நிறைய பாயிண்ட் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
யுத்தம் எப்போது ஏற்படும் என்று சிலர் கேட்கிறார்கள், பாபா
திரிகாலதர்சி சொல்ல முடியும் அல்லவா! என்கிறார்கள், ஆனால்
இதுவரை பாபா அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. விண்ணப்பம்
நம்முடையது, கூற வேண்டியது அவரின் விருப்பம் ஆகும். இதிலிருந்து
எல்லாம் விடுபடுங்கள்.
பாபா ஞானக்கடல் என்றால் அவசியம் ஞானத்தின் டான்ஸ்
செய்திருப்பார் என்று தோட்டத்தில் அமர்ந்திருக்கும் போது பாபா
குழந்தைகளிடம் கேட்டார். நல்லது, பக்திமார்கத்தில் சிவபாபா
அனைவரின் மனவிருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பார்ட்டை
நடித்தார் அந்த நேரத்தில் அவருக்கு இந்த எண்ணம் உருவாகி
இருக்கும் நான் பாரதத்தில் சங்கமயுகத்தில் சென்று
குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்க வேண்டுமா?
சொர்க்கத்திற்கு எஜமானன் ஆக்க வேண்டுமா? என்ற இந்த எண்ணம்
எழும்புமா அல்லது தக்க நேரம் வரும்போது இந்த எண்ணம் தோன்றுமா?
இந்த எண்ணம் எப்போது தோன்றும் என்றால் அவருக்குள் இந்த ஞானம்
மறைந்து இருக்கும் ஆனால் அவர் வரக் கூடிய தருணத்தில் இந்த
எண்ணம் தோன்றும். இவ்வாறு தான் நமக்குள்ளும் கூட 84 பிறவிகளின்
பாகம் மறைந்து இருக்கிறது அல்லவா! பகவானுக்கு புதிய
சிருஷ்டியைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்று
கூறப்படுகிறது. அது எப்போது தக்க தருணம் வரும் போது அந்த எண்ணம்
தோன்றும். அவரும் கூட நாடகத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்.
இவைகள் மிகவும் ஆழ்ந்த இரகசியங்கள் ஆகும். நல்லது!
இனிமையிலும்-இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்-தந்தை
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மேலும் காலை வணக்கம். ஆன்மிக
தந்தை ஆன்மிக குழந்தைகளுக்கு நமஸ்காரம்.
இரவு-வகுப்பு 13.01.1969.
குழந்தைகள் எப்போது இங்கே வந்து அமர்கிறார்களோ அப்போது
குழந்தைகளே! சிவபாபாவின் நினைவு இருக்கிறதா? என்று பாபா
கேட்கின்றார். பின்னர் விஷ்வ இராஜ்யத்தை நினைவு செய்கிறீர்களா?
என்று கேட்கிறார். எல்லையற்ற தந்தையின் பெயர் சிவன். பின்னர்
மொழியின் காரணத்தினால் பலவிதமான பெயர்கள் வைத்துள்ளார்கள்.
எவ்வாறு பம்பாயில் பபுல்நாத் என்று அழைக்கிறார்கள் ஏனெனில் அவர்
முள்ளை மலராக ஆக்குகிறார். சத்தியயுகத்தில் அனைவரும் மலராக
இருக்கிறார்கள், இங்கே அனைவரும் முள்ளாக இருக்கிறார்கள். எனவே
பாபா ஆன்மிக குழந்தைகளிடம் எல்லையற்ற தந்தையின் நினைவில்
எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். அவருடைய பெயர்
சிவன், அவர் கல்யாணகாரி ஆக இருக்கிறார். நீங்கள் எவ்வளவு
நினைக்கிறீர்களோ அவ்வளவு பாவங்கள் அழியும். சத்தியயுகத்தில்
பாவங்கள் இருக்காது. அது புண்ணிய ஆத்மாக்களின் உலகம், இது பாவ
ஆத்மாக்களின் உலகம் ஆகும். பாவத்தைச் செய்விப்பவர் ஐந்து
விகாரம் ஆகும். சத்தியயுகத்தில் இராவணன் இருப்பதில்லை. இவர்
முழு உலகத்திற்கும் எதிரியாக இருக்கிறார். இந்த நேரத்தில் உலகம்
முழுவதும் இராவண இராஜ்யம் நடக்கிறது. அனைவரும் துன்பத்தில்
தமோபிரதானமாக இருக்கிறார்கள் இப்போது தான் என்னை நினைவு
செய்யுங்கள் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
தெரிவிக்கிறார். இது கீதையின் சொற்கள் ஆகும். பாபா தானே வந்து
தேகம் தேக சம்பந்தம் அனைத்தையும் விடுத்து (மாமேகம்) என்னை
நினைவு செய்யுங்கள் என்கிறார். முதன்-முதலில் நீங்கள் சுகமான
சம்பந்தத்தில் இருந்தீர்கள், பின்னர் இராவணனின் பந்தத்தில்
வந்து விட்டீர்கள். பின்னர் இப்போது மீண்டும் சுகத்தின்
சம்பந்தத்தில் வர வேண்டும். தன்னை ஆத்மா என்று நினைத்து தந்தையை
நினைவு செய்ய வேண்டும்- இந்தக் கல்வியை பாபா சங்கமயுகத்தில்
மட்டும் தான் வந்து தருகிறார். நான் பரந்தாமத்தில் வசிப்பவன்
என்று பாபா தானே தெரிவிக்கிறார், உங்களுக்குப் புரிய
வைப்பதற்காக நான் இந்த உடலில் பிரவேசம் செய்கிறேன் என்கிறார்.
நீங்கள் துôய்மை அடையாமல் என்னிடம் வர முடியாது என்று பாபா
கூறுகிறார். இப்போது துôய்மை எப்படி அடைவது? என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள் என்கிறார். பக்தி மார்கத்தில் கூட என்னை
மட்டும் முதலில் பூஜை செய்தீர்கள், அதை அவ்யபச்சார பக்தி (கலப்படமற்ற)
என்று சொல்லப் பட்டது. இப்போது நான் பதீத- பாவனன் ஆக
இருக்கிறேன். அதனால் என்னை நீங்கள் நினைவு செய்தால்
ஜென்ம-ஜென்மமான பாவங்கள் அழியும் என்கிறார். 63 பிறவிகளின்
பாவங்கள் உள்ளது. சன்யாசிகள் ஒருபோதும் இராஜயோகம் கற்பிக்க
முடியாது, பாபா தான் கற்பிக்க முடியும். உண்மையில் இந்த
சாஸ்த்திரம்- பக்தி ஆகியவைகள் இல்லறத்தைச் சேர்ந்தவர்களுக்காக
இருக்கிறது. சன்யாசிகள் காட்டில் போய் அமர்ந்து கொண்டு
பிரம்மத்தை நினைவு செய்கிறார்கள். நான் அனைவருக்கும் சத்கதியைத்
தருபவன்- என்னை நினைவு செய்தால் நீங்கள் இது (இலட்சுமி-நாராயணர்)
ஆகலாம் என்று தெரிவிக்கிறார். இலட்சியம் முன்னால் இருக்கிறது.
எந்தளவு ஞானத்தை படித்து- படிக்க வைக்கிறீர்களோ அவ்வளவு
உயர்ந்த பதவியை தெய்வீக இராஜ்யத்தில் அடைவீர்கள். ஒரு பாபா தான்
அல்ப்(தந்தையாக) உள்ளார். படைப்பின் மூலமாக படைப்பின் ஆஸ்தியை
பெற முடியாது. எல்லையற்ற தந்தை தான் எல்லையற்ற ஆஸ்தியைக்
கொடுக்க முடியும். நீங்கள் சொர்கத்தில் சத்கதியில் இருப்பீர்கள்.
மற்ற அனைத்து ஆத்மாக்களும் வீட்டிற்குத் திரும்பச் சென்று
விடுவார்கள். முக்தி-ஜீவன்முக்தி, கதி-சத்கதி என்ற வார்த்தைகள்
தான் சாந்திதாமம், சுகதாமத்தைக் குறிப்பதாகும். பாபாவை
நினைக்காமல் வீட்டிற்குத் திரும்பச் செல்ல முடியாது.
ஆத்மாவிற்கு துôய்மை அவசியம் ஆக வேண்டும். இங்கே அனைவரும்
நாஸ்திகர் களாக இருக்கிறார்கள். வினாச காலத்தில் விபரீத புத்தி
உள்ளவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்று பாடப்படுகிறது. இப்போது
வினாச காலம் அல்லவா! சக்கரம் அவசியம் சுற்றகிறது. வினாச
காலத்தில் எவருடைய புத்தி பிரீத்த(அன்பு) புத்தியாக உள்ளதோ
அவர்கள் வெற்றி அடைகிறார்கள். பாபா எவ்வளவு சுலபமாக புரிய
வைக்கிறார்! ஆனால் இராவணன் மறக்கச் செய்து விடுகிறது. இப்போது
இந்த பழைய உலகத்தின் முடிவு வந்து விடடது. அது அமரலோகம் அங்கே
காலன் வருவதே கிடையாது. பாபாவை அழைக்கின்றார்கள் வாருங்கள்
அனைவரும் சேர்ந்துச் செல்வோம் என்கிறார்கள். அவர் காலன்
ஆகிவிட்டார் அல்லவா. சத்தியயுகத்தில் எவ்வளவு சிறிய விருட்சமாக
இருக்கிறது. இப்போது மிகப்பெரிய மரமாக இருக்கிறது.
பிரம்மா மேலும் விஷ்ணுவின் கடமை என்ன? விஷ்ணுவை தேவதை
என்கிறார்கள். பிரம்மாவிற்கு எந்த ஆபரணங்களும் போடுவதில்லை.
அங்கே பிரம்மா இல்லை, விஷ்ணு இல்லை, சங்கரர் இல்லை. பிரஜாபிதா
பிரம்மா இங்கே தான் இருக்கிறார். சூட்சும வதனத்தின்
சாட்சாத்காரம் ஏற்படுகிறது. ஸ்துôல், சூட்சுமம், மூலவதனம் என்று
இருக்கிறது அல்லவா! சூட்சுமவதனம் என்பது மூவி. இவைகள்
புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள். இது கீதா பாடசாலை ஆகும்,
இங்கே நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொள்கிறீர்கள். சிவபாபா
கற்பிக்கிறார் என்றால் சிவபாபா நினைவு தானே வரும் அல்லவா.
நல்லது!
ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
இரவு வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) துன்பமான நேரத்தில் எல்லையில்லாத சுகத்தின்
லாட்டரி கிடைத்துள்ளது, ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு
ஏற்பட்டுள்ளது, இதை நினைத்து சதா மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.
2) பாப்தாதாவைப் போன்று நிராகாரி மேலும் நிர்அகங்காரி ஆக
வேண்டும். தைரியமாக விகாரங்களை வெல்ல வேண்டும். யோகபலத்தால்
இராஜ்யத்தை அடைய வேண்டும்.
வரதானம்:
கர்மம் செய்யும் போது சக்திசாலி நிலைத்திருந்து நிலைத்திருந்து
ஆன்மிகப் பர்சனாலிட்டியை அனுபவம் செய்விக்கக் கூடிய கர்மயோகி
ஆகுக.
குழந்தைகள் நீங்கள் கர்மம் மட்டும் செய்பவர்கள் இல்லை. ஆனால்
யோகயுக்த் நிலையில் இருந்து கர்மம் செய்யக்கூடிய கர்மயோகிகள்
நீங்கள். ஆக, உங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் ஆக
வேண்டும் -- இந்தக் காரியத்தையோ இவர் கையினால் செய்து கொண்டி
ருக்கிறார். ஆனால் காரியம் செய்தாலும் தமது சக்திசாலி ஸ்டேஜில்
நிலைத்திருக்கிறார். சாதாரண ரீதியில் சென்று கொண்டிருந்தாலும்
சரி, நின்று கொண்டிருந்தாலும் சரி, ஆனால் ஆன்மிகப் பர்சனாலிட்டி
தூரத்தில் இருந்தே அனுபவம் ஆக வேண்டும். எப்படி உலகாயத
பர்சனாலிட்டி கவர்ந்திழுக்கிறது, அது போல் உங்களது ஆன்மிகப்
பர்சனாலிட்டி, தூய்மையின் பர்சனாலிட்டி, ஞானம் மற்றும் யோகம்
நிறைந்த பர்சனாலிட்டி தானாகவே கவர்ந்து இழுக்கும்.
சுலோகன்:
சரியான வழியில் நடப்பவர் மற்றும் அனைவருக்கும் சரியான வழி
காட்டுபவர் உண்மையிலும் உண்மையான லைட் ஹவுஸ் ஆவார்.