23-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தூய்மை இல்லாமல் பாரதம் சொர்க்கம் ஆகமுடியாது. இல்லறத்தில் இருந்தாலும் தூய்மை ஆகுங்கள். இரண்டு பக்கமும் சமநிலை வையுங்கள் என்பது உங்களுக்கான ஸ்ரீமத் ஆகும்.

கேள்வி:
பிற சத்சங்கங்கள் மற்றும் ஆஸ்ரமங்களில் இருந்து, இங்கே உள்ள எந்த ஒரு பழக்கம் முற்றிலும் தனிப்பட்டதாக உள்ளது?

பதில்:
அந்த ஆஸ்ரமங்களில் மனிதர்கள் சென்று தங்குகின்றனர். தொடர்பு நன்றாக உள்ளது. வீடு போன்றவற்றின் தொல்லை இல்லை என்று நினைக்கின்றனர். இலட்சியம் எதுவும் இருக் காது. ஆனால், இங்கேயோ நீங்கள் மறுபிறவி எடுக்கிறீர்கள். நீங்கள் வீடு வாசலை விட வேண்டியதில்லை. வீட்டில் இருந்து கொண்டே நீங்கள் ஞான அமிர்தத்தைப் பருக வேண்டும், ஆன்மிக சேவை செய்ய வேண்டும். இந்த பழக்க வழக்கம் மற்ற சத்சங்கங்களில் கிடையாது.

ஓம் சாந்தி.
தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஏனெனில் இங்கே தந்தை தான் புரிய வைக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். ஆகையினால், அடிக்கடி சிவபகவானுடைய மகாவாக்கியம் என்று கூறுவது கூட நன்றாக இல்லை. கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று அந்த கீதை சொல்லக்கூடியவர்கள் கூறுவார்கள். அவரோ வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டார். கிருஷ்ணர் கீதை சொன்னார், இராஜயோகத்தைக் கற்பித்தார் என்று கூறுகின்றனர். சிவபாபா நமக்கு இராஜயோகத்தைக் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார் மற்றும் வேறு எந்த சத்சங்கத்திலும் இராஜயோகம் கற்பிக்கப்படுவதில்லை என்பதை இங்கே குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நான் உங்களை இராஜாக்களுக் கெல்லாம் இராஜா ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் - மன்மனாபவ என்று மட்டும் அவர்கள் கூறுவார்கள். எப்பொழுது கூறினார்? 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் என்று கூறுகின்றனர் அல்லது கிறிஸ்து பிறப்பிற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்று சிலர் கூறுகின்றனர். 2 ஆயிரம் ஆண்டுகள் என்று கூறுவதில்லை. ஏனெனில், இடையில் உள்ள ஒரு ஆயிரம் ஆண்டில் இஸ்லாமியர், பௌத்த தர்மத்தினர் வருகின்றனர். எனவே, கிறிஸ்து பிறப்பிலிருந்து 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சத்யுகம் இருந்தது என்பது நிரூபணம் ஆகிவிடுகிறது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கீதை சொல்லக் கூடிய பகவான் வந்திருந்தார், மேலும், வந்து தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்திருந் தார் என்று நாம் கூறுகின்றோம். இப்பொழுது 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் வரவேண்டியதாக உள்ளது. இது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கான சக்கரம் ஆகும். இதை தந்தை இவர் மூலம் புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிந்திருக் கின்றனர். உலகத்தில் அனேக விதமான சத்சங்கங்கள் உள்ளன. அங்கே மனிதர்கள் செல் கின்றனர். சிலர் ஆஸ்ரமங்களில் சென்று தங்கிவிடவும் செய்கின்றனர். அவர்கள் தாய், தந்தை யிடம் சென்று பிறப்பெடுத்து விட்டார்கள் என்றோ அல்லது அவர்களிடமிருந்து ஆஸ்தி கிடைக் கிறது என்றோ கூறமுடியாது. அவர்கள் தொடர்பு நன்றாக இருக்கிறது என்று மட்டும் புரிந்திருக் கின்றனர். அங்கே வீடு போன்றவற்றின் எந்த தொல்லையும் இருக்காது. மற்றபடி இலட்சியமோ எதுவுமே கிடையாது. இங்கேயோ, நாங்கள் தாய், தந்தையிடம் வந்திருக்கின்றோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது உங்கள் மறுபிறவி ஆகும். அந்த மனிதர்கள் குழந்தைகளைத் தத்தெடுக் கின்றனர். அந்தக் குழந்தை அவர்களுடைய வீட்டில் குடியேறுகிறது. தந்தை வீடு, மாமனார் வீட்டை விட்டு விட்டு இங்கே வந்து அமர்ந்துகொள்ளும் பழக்கம் இங்கே கிடையாது. இது நடக்க முடியாது. இங்கேயோ இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக இருக்க வேண்டும். குமாரியானாலும் அல்லது யாரானாலும் வீட்டில் இருந்து கொண்டு தினமும் ஞான அமிர்தத்தைப் பருகச் செல்லுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படுகிறது. ஞானத்தைப் புரிந்து கொண்டு பிறகு, பிறருக்குப் புரிய வைத்திடுங்கள். இரு பக்கமும் சமநிலை வையுங்கள். இல்லறத்திலும் இருக்க வேண்டும். இறுதி வரை இரு பக்கமும் சமநிலை வையுங்கள். இறுதியில் இங்கே இருந்தாலும் சரி, அங்கே இருந்தாலும் சரி, மரணமோ அனைவருக்கும் வந்து தான் ஆக வேண்டும். இராமர் சென்று விட்டார், இராவணன் சென்று விட்டார் என்று கூறுகின்றனர். அனைவரும் இங்கே வந்து தங்கலாம் என்பது கிடையாது. இவர்கள் விஷத்திற்காக துன்புறுத்தப்பட்டபொழுது வெளியேறி வந்தனர். கன்னிகைகள் கூட வீட்டில் இருக்க வேண்டும். உற்றார், உறவினருக்கு சேவை செய்ய வேண்டும். சமூக சேவகர்கள் அனேகர் உள்ளனர். அரசாங்கம் இவர்கள் அனைவரையும் தன்னிடம் வைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் தன்னுடைய வீட்டில் இருக்கின்றனர். பிறகு, சிலர் சேவையும் செய்கின்றனர். இங்கே நீங்கள் ஆன்மிக சேவை செய்ய வேண்டும். குடும்பத்திலும் இருக்க வேண்டும். ஆம், எப்பொழுது விகாரத்திற்காக மிகவும் தொல்லை செய்கிறார்களோ அப்பொழுது ஈஸ்வரனிடம் வந்து தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள். இங்கே விஷத்தின் காரணத்தினால் குழந்தைகள் (சகோதரிகள்) மிகவும் அடிவாங்குகிறார்கள். வேறு எங்கும் இந்த விசயம் கிடையாது. இங்கேயோ தூய்மையாக இருந்தாக வேண்டும். அரசாங்கம் கூட தூய்மையை விரும்புகிறது. ஆனால், இல்லறத்தில் இருந்தாலும் தூய்மை ஆக்குவதற்கான சக்தி ஈஸ்வரனிடத்தில் தான் உள்ளது. இப்பொழுது நேரம் அப்படி உள்ளது, குழந்தைகள் அதிகம் பிறக்கக்கூடாது என்பதை அரசாங்கம் கூட விரும்புகிறது. ஏனெனில், ஏழைகள் அதிகம் உள்ளனர். எனவே, பாரதத்தில் தூய்மை இருக்க வேண்டும், குழந்தைகள் குறைந்திட வேண்டும் என்று விரும்பு கின்றனர்.

குழந்தைகளே! தூய்மை ஆனீர்கள் என்றால் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த விசயம் அவர்களது புத்தியில் கிடையாது. பாரதம் தூய்மையாக இருந்தது, இப்பொழுது தூய்மையற்றதாக உள்ளது. அனைத்து ஆத்மாக் களும் சுயம் அவர்களே தூய்மையாக வேண்டும் என்று விரும்புகின்றனர். இங்கு துக்கம் அதிகம் உள்ளது. தூய்மை இல்லாமல் பாரதம் சொர்க்கம் ஆகமுடியாது என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நரகத்தில் இருப்பதே துக்கம் ஆகும். இப்பொழுது நரகம் என்பது வேறு எதுவும் கிடையாது. வைதரணி நதியில் மனிதர்கள் தத்தளிக்கின்றனர் என்பதாக கருட புராணத்தில் காண்பிக்கின்றனர். தண்டனை அடையும்படியான அத்தகைய எந்த நதியும் கிடையாது. தண்டனைகளோ கர்ப்பச் சிறையில் கிடைக்கிறன. சத்யுகத்திலோ தண்டனைகள் கிடைக்கும்படியான கர்ப்ப சிறை கிடையாது.. கர்ப்பம் மாளிகையாக இருக்கும். இந்த சமயத்தில் முழு உலகமும் உயிருள்ள நரகமாக உள்ளது. இங்கே மனிதர்கள் துக்கம் நிறைந்தவர்களாக, நோயாளிகளாக உள்ளனர். ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சொர்க்கத்தில் இது எதுவும் இருக்காது. நான் உங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவேன் என்று இப்பொழுது தந்தை புரியவைக்கின்றார். நான் படைப்பாளர் ஆவேன், எனவே, அவசியம் புது உலக சொர்க்கத்தைப் படைப்பேன். சொர்க்கத்திற்காக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைப் படைப்பேன். நீங்கள் தாய், தந்தை என்று கூறுகின்றனர். கல்ப கல்பமாக இந்த இராஜயோகத்தைக் கற்பித்தார். பிரம்மா மூலம் அமர்ந்து அனைத்து வேத சாஸ்திரங்களின் ஆதி, மத்திமம், அந்திமத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். முற்றிலும் படிக்காதவர் களுக்கு அமர்ந்து புரியவைக்கின்றார். ஹே பகவானே! வாருங்கள் என்று நீங்கள் கூறினீர்கள் அல்லவா! பதீதமானவர்கள் அங்கே செல்ல முடியாது. எனவே, தூய்மை ஆக்குவதற்காக அவர் அவசியம் இங்கே வரவேண்டிய தாக உள்ளது. கல்பத்திற்கு முன்பும் கூட உங்களுக்கு இராஜயோகம் கற்பித்தேன் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவுபடுத்துகின்றார். இதற்கு முன் இந்த ஞானத்தை எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? என்று கேட்கப்படுகின்றது. ஆம், 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் நாங்கள் இந்த ஞானத்தைப் பெற்றிருந்தோம் என்று கூறுகின்றனர். இந்த விசயங்கள் புதியவை ஆகும். புதியயுகம், புதியதர்மம் மீண்டும் ஸ்தாபனை ஆகிறது. ஈஸ்வரனைத் தவிர இந்த தெய்வீக தர்மத்தை வேறு எவரும் ஸ்தாபனை செய்ய முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட செய்யமுடியாது. ஏனெனில், சுயம் அந்த தேவதைகளே படைப்பு ஆவார்கள். சொர்க்கத்தின் படைப்பாளர்கள் தாய், தந்தை தேவை. உங்களுக்கு அளவிட முடியாத சுகம் கூட இங்கேயே வேண்டும். நான் கூட படைப்பாளர் ஆவேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களைக் கூட பிரம்மா வாய் மூலம் நான் படைத்திருக் கின்றேன். நான் மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவேன். ஒருவர் எவ்வளவு பெரிய சாது, சந்நியாசியாக இருக்கலாம், ஆனால், எவருடைய வாயிலிருந்தும் இவ்வாறு வெளிப்படாது. இது கீதையின் வார்த்தைகள் ஆகும். ஆனால், யார் கூறினாரோ, அவரே கூற முடியும். வேறு எவரும் கூற முடியாது. நிராகாரமானவருக்கு பதிலாக கிருஷ்ணரை பகவான் என்று கூறிவிடுகின்றனர் - இது மட்டுமே வித்தியாசம் ஆகும். நான் மனித சிருஷ்டியின் விதை ரூபம், பரந்தாமத்தில் இருக்கக்கூடிய நிராகாரமான பரமாத்மா ஆவேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் கூட புரிந்துகொள்ள முடியும். சாகார மனிதர் தன்னை விதை ரூபம் என்று கூறமுடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட கூற முடியாது. அனைவரையும் படைக்கக்கூடியவர் சிவபாபா ஆவார் என்பதை அறிந்துள்ளனர். நான் தெய்வீக தர்மத்தை ஸ்தாபனை செய்துகொண்டு இருக் கின்றேன். இவ்வாறு கூறுவதற்குக் கூட எவருக்கும் சக்தி கிடையாது. தன்னை கிருஷ்ணர் என்று அழைக்கச் செய்யலாம், பிரம்மா என்று அழைக்கச் செய்யலாம், சங்கரர் என்று கூறச் செய்யலாம் அனேகர் தன்னை அவதாரம் என்று கூட சொல்ல வைக்கின்றனர். ஆனால், அனைத்தும் பொய் ஆகும். இங்கே வந்து எப்பொழுது கேட்பார்களோ, அப்பொழுதே தந்தை ஒருவர், அவதாரமும் ஒன்று ஆகும் என்று புரிந்து கொள்வார்கள். நான் உங்களை உடன் அழைத்துச்செல்வேன் என்று அவர் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதற்கும் கூட எவருக்குள்ளும் சக்தி இல்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கூட கீதையின் பகவான் சிவபாபா கூறியிருந்தார், அவரே ஆதி சனாதன தர்மத்தை ஸ்தாபனை செய்திருந்தார். அவரே இப்பொழுது செய்துகொண்டு இருக்கின்றார். கொசுக் கூட்டம் போல ஆத்மாக்கள் சென்றன என்று மகிமை செய்யப்பட்டுள்ளது. எனவே, தந்தை வழிகாட்டியாகி அனைவரையும் வந்து விடுதலை செய்கின்றார். இப்பொழுது கலியுகத்தின் இறுதி ஆகும். இதற்குப் பிறகு சத்யுகம் வரப்போகிறது எனில் அவசியம் வந்து தூய்மையாக்கி தூய்மையான உலகிற்கு அழைத்துச் செல்வார். கீதையில் ஒரு சில வார்த்தைகள் சரியாக உள்ளன. இந்த தர்மத்திற்காக சாஸ்திரம் வேண்டும் அல்லவா என்று நினைக்கின்றனர். எனவே, கீதை சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கின்றனர். (கீதை) அனைத்து சாஸ்திரங்களின் சூடாமணி (உயர்ந்தது) முதல் எண் தாயாகும். ஆனால், பெயரை மாற்றிவிட்டனர். இந்த சமயத்தில் தந்தை என்ன செயல் செய் கின்றாரோ அதை துவாபரயுகத்தில் எழுதமாட்டார்கள். மீண்டும் அதே கீதை உருவாகும். நாடகத்தில் இதே கீதை பதிவாகியுள்ளது. எவ்வாறு தந்தை மீண்டும் மனிதரை தேவதை ஆக்குகின்றாரோ, அவ்வாறே சாஸ்திரங்களையும் கூட பின்னாளில் மீண்டும் எழுதுவார்கள். சத்யுகத்தில் எந்த சாஸ்திரமும் இருக்காது. முழு சக்கரத்தைப் பற்றிய இரகசியத்தை தந்தை அமர்ந்து புரியவைக்கின்றார். நாம் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்துவிட்டோம் என்பதை நீங்கள் புரிந்திருக் கிறீர்கள்.ஆதி சனாதன தேவி தேவதை தர்மத்தினர் தான் அதிக பட்சம் 84 பிறவிகளை எடுக்கின்றனர். மற்ற மனிதர்கள் பின்னால் விருத்தி அடைகின்றனர். அவர்கள் இத்தனை பிறவிகள் எடுக்க மாட்டார்கள். இந்த பிரம்மாவின் வாய் மூலமாக தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். இந்த தாதா, யாருடைய உடலை நான் கடனாகப் பெற்றிருக்கின்றேனோ, அவர் கூட தன்னுடைய பிறவிகளைப் பற்றி அறியாமல் இருந்தார். இவர் வியக்தமான பிரஜாபிதா பிரம்மா ஆவார். அவர் அவ்யக்த பிரம்மா ஆவார். இருவரும் ஒருவரே ஆவார்கள். நீங்களும் கூட இந்த ஞானத்தின் மூலம் சூட்சும வதனவாசி ஃபரிஸ்தா ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சூட்சுமவதனவாசிகளை ஃபரிஸ்தா என்று கூறுகின்றனர். ஏனெனில், எலும்பு, தசை இருக்காது. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குக் கூட எலும்பு, தசை கிடையாது. பிறகு, அவர்களுடைய சித்திரங்களை எவ்வாறு உருவாக்குகின்றனர்? சிவனுடைய சித்திரத்தையும் கூட உருவாக்கு கின்றனர். அவர் நட்சத்திரம் ஆவார். அவருடைய உருவத்தையும் உருவாக்குகின்றனர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரோ சூட்சுமமாக உள்ளனர். எவ்வாறு மனிதர்களுடைய உருவத்தை உருவாக்குகின்றனரோ, அவ்வாறு சங்கரருடைய உருவத்தை உருவாக்க முடியாது. ஏனெனில், அவருக்கு எலும்பு, தசையாலான சரீரமே கிடையாது. நாமோ புரியவைப்பதற்காக அவ்வாறு ஸ்தூலமாக (சரீரம் போன்று) உருவாக்குகின்றோம். ஆனால், அவர் சூட்சுமமானவர் என்பதை நீங்கள் கூட பார்க்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப் பிறகு தேடி கண்டெடுக்கப்பட்ட குழந்தை களுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

இரவு வகுப்பு - 13.07.1968

மனிதர்கள் இரண்டு விசயங்களை அவசியம் விரும்புகின்றனர். ஒன்று சாந்தி, மற்றொன்று சுகம். விஷ்வத்திற்கு சாந்தி அல்லது தனக்காக சாந்தி. விஷ்வத்திற்கு சுகம் அல்லது தனக்காக சுகத்தின் விருப்பம் மனிதர்களுக்கு உள்ளது. இப்பொழுது சாந்தி உள்ளதா என்று கேட்கப்படு கின்றது என்றால் அவசியம் எப்பொழுதாவது சாந்தி இருந்திருக்கும். ஆனால், எப்பொழுது, எவ்வாறு இருந்தது? ஏன் அசாந்தி ஏற்பட்டது? என்பது எவருக்குமே தெரியாது. ஏனெனில், காரிருளில் உள்ளனர். சாந்தி மற்றும் சுகத்திற்காக நீங்கள் மிக நல்ல வழியைக் கூறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு குஷி இருக்கின்றது. பிறகு தூய்மையும் ஆகவேண்டும் என்பதை எப்பொழுது கேட்கின்றனரோ அப்பொழுது அமைதியாகி விடுகின்றனர். இந்த விகாரம் என்பது அனைவருடைய எதிரியாகும். மேலும், பிறகு அனைவருடைய அன்பிற்குரியதாகவும் ஆகிவிடுகிறது. இதை விடுவதில் மன முடைந்தவர் ஆகிவிடுகின்றனர். பெயரே விஷம் என்பதாகும். ஆனாலும் கூட விடமறுக் கிறார்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக உழைக்கிறீர்கள்! ஆனாலும் கூட தோல்வி அடைந்து விடுகிறார்கள். அனைத்தும் தூய்மைக்கான விசயமே ஆகும். இதில் அதிகமானோர் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.. யாராவது கன்னிகைகளைப் பார்த்தார்கள் என்றால் கவர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. கோபம் அல்லது பேராசை அல்லது மோகத்தின் கவர்ச்சி ஏற்படுவதில்லை. காமம் என்பது மகா எதிரி ஆகும். இதன் மீது வெற்றி அடைவது என்பது மகாவீரரின் வேலை ஆகும். தேக அபிமானத்திற்குப் பிறகு முதலில் காமம் தான் வருகிறது. இதன் மீது வெற்றி அடைய வேண்டும். யார் தூய்மையாக இருக்கிறார்களோ, அவர்கள் முன் தூய்மை யற்றவர்கள், காம விகாரம் உள்ள மனிதர்கள் வணங்குகின்றனர். நாங்கள் விகாரிகள், நீங்கள் நிர்விகாரிகள் (விகாரமற்றவர்கள்) என்று கூறுகின்றனர். நாங்கள் கோபம் கொண்டவர்கள், பேராசைக் காரர்கள்.... என்று கூறுவதில்லை. அனைத்துமே விகாரத்தைப் பற்றிய விசயங் களாகும். திருமணம் செய்துகொள்வதே விகாரத்திற்காகத்தான். தாய், தந்தைக்கு இந்தக் கவலை உள்ளது. பெரியவர்கள் ஆக இருந்தால் பணமும் கொடுப்பார்கள், விகாரத்திலும் செல்வார்கள். விகாரத் திற்கு வசமாகவில்லை என்றால் சண்டை வெடித்துவிடும். இவர்கள் (தேவதைகள்) முழுமை யாக விகாரமற்றவர்களாக இருந்தனர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப் படுகிறது. உங்களிடம் இலட்சியம் எதிரே உள்ளது. நரனிலிருந்து நாராயணராக, இராஜாக்களுக் கெல்லாம் இராஜா ஆகவேண்டும். சித்திரம் எதிரில் உள்ளது. இதை சத்சங்கம் என்று கூறுவ தில்லை, பாடசாலை, சத்சங்கம் அங்கே இருக்காது. எப்பொழுது எதிரில் வந்து இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றாரோ அப்பொழுதே உண்மையான சத்சங்கம் உண்மையான துணை கிடைக்கிறது. சத்தியமானவரின் தொடர்பு வேண்டும். அவரே கீதை அதாவது இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றார். தந்தை (பக்தியின்) கீதை ஒன்றும் சொல்லவில்லை. கீதா பாடசாலை என்ற பெயருள்ளது, எனவே சென்று கீதையைக் கேட்கலாம் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். அந்தளவு கவர்ச்சி உள்ளது. இது உண்மையான கீதா பாடசாலை ஆகும். இங்கே ஒரு வினாடியில் சத்கதி, ஆரோக்கியம், ஆஸ்தி மற்றும் மகிழ்ச்சி (ஹெல்த், வெல்த் மற்றும் ஹேப்பினஸ்) கிடைக்கிறது. உண்மையான கீதா பாடசாலை என்று ஏன் எழுதியிருக் கிறீர்கள்? என்று கேட்பார்கள். கீதா பாடசாலை என்று மட்டும் எழுதுவது பொதுவானதாக (சாதாரணமானதாக) ஆகிவிடுகிறது. உண்மையான என்ற வார்த்தையைப் படிக்கும்பொழுது ஈர்ப்பு ஏற்படக்கூடும். ஒருவேளை பொய்யானவைகளும் இருக்கக்கூடும். எனவே, உண்மை யான என்ற வார்த்தையை அவசியம் எழுத வேண்டியுள்ளது. சத்யுகத்தைத் தூய்மையான உலகம் என்றும், கலியுகத்தைத் தூய்மையற்ற உலகம் என்றும் கூறப்படுகின்றது. சத்யுகத்தில் இந்த உலகம் தூய்மையாக இருந்தது. எப்படி உருவானது என்பதைக் கற்பிக்கின்றார். தந்தை பிரம்மா மூலம் கற்பிக்கின்றார். இல்லையென்றால் எவ்வாறு கற்பிப்பார்? இந்த யாத்திரையைக் கல்பத்திற்கு முன்பு யார் புரிந்துகொண்டார்களோ அவர்கள் தான் புரிந்துகொள்வார்கள். பக்தி மார்க்கத்தின் சகதியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர். பக்தியினுடைய பகட்டு அதிகம் உள்ளது. இவையெல்லாம் ஒன்றுமே இல்லை. இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஸ்மிருதியில் (நினைவில்) மட்டும் இருங்கள். தூய்மையாக ஆகிச் செல்ல வேண்டும். அதற்காக நினைவில் இருக்க வேண்டும். சொர்க்கத்திற்கு எஜமானராக ஆக்கக் கூடிய தந்தையை நினைவு செய்ய முடியாதா என்ன! முக்கியமான விசயம் இது தான். இதில் தான் உழைப்பு உள்ளது என்று அனைவரும் கூறுகின்றனர்,. குழந்தைகள் சொற்பொழிவு நன்றாக செய்கின்றனர். ஆனால், யோகத்தில் இருந்து புரியவைத்தீர்கள் என்றால் தாக்கம் கூட நன்றாக இருக்கும். நினைவில் உங்களுக்கு சக்தி கிடைக்கின்றது. சதோபிரதானம் ஆகுவதன் மூலம் சதோபிரதானமான உலகத்திற்கு எஜமானர் ஆகுவீர்கள். நினைவை நிஷ்டை என்று கூறுவோமா என்ன! நாங்கள் அரை மணி நேரம் நிஷ்டையில் அமர்ந்தோம் என்று கூறினால் அது தவறு ஆகும். நினைவில் இருங்கள் என்று மட்டும் தான் தந்தை கூறுகின்றார். எதிரில் அமர்ந்து கற்றுக் கொடுப்பதற்கான அவசியம் இல்லை. எல்லையற்ற தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும். ஏனெனில், அவர் நிறைய பொக்கிஷங்களைக் கொடுக் கின்றார். நினைவில் குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். அதீந்திரிய சுகத்தின் அனுபவம் கிடைக்கும். உங்களுடைய இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது, இதை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். எதுவரை உயிருடன் வாழ்வோமோ, அதுவரை பொக்கிஷங்களை அடைவோம். எப்பொழுது நாம் சதோபிரதானமாக ஆகின்றோமோ அப்பொழுது தான் பொக்கிஷங்கள் அனைத்துமே முழுமை யாகக் கிடைக்கும். முரளியில் கூட சக்தி உள்ளது. வாளில் கூர்மை இருக்கும் இல்லையா! உங்களிடம் கூட கூர்மையான நினைவு இருக்கும்பொழுது வாள் கூர்மையாக இருக்கும். ஞானத்தில் அந்த அளவிற்கு கூர்மை இல்லை என்பதால் ஒரு சிலருக்கு தாக்கம் ஏற்படுவ தில்லை. பிறகு, அவர்களுடைய நன்மைக்காக பாபா வரவேண்டியுள்ளது. எப்பொழுது நீங்கள் நினைவில் கூர்மையைத் தீட்டுகிறீர்களோ, அப்பொழுது வித்வான்கள், ஆச்சாரியார்கள் மற்றும் பலருக்கு அம்பு சென்று தைக்கும். ஆகையால், பாபா கூறுகின்றார் - சார்ட் வைத்திடுங்கள். பாபாவை மிகவும் நினைவு செய்கின்றோம், ஆனால், வாய் திறப்பதில்லை என்று சிலர் கூறுகின்றனர். நீங்கள் நினைவில் இருந்தீர்கள் என்றால் விகர்மம் வினாசம் ஆகும். நல்லது. குழந்தைகளுக்கு குட் நைட்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. வீட்டில் இருந்தாலும் ஆன்மிக சேவை செய்ய வேண்டும். தூய்மையாக ஆகவேண்டும் மற்றும்ஆக்கவேண்டும்.

2. இந்த உயிருள்ள நரகத்தில் வாழ்ந்துகொண்டே எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க் கத்தினுடைய ஆஸ்தியை அடைய வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக்கூடாது.

வரதானம்:
தனது அனைத்து விசேத்தன்மைகளை காரியத்தில் பயன்படுத்தி அதை விரிவு செய்யக்கூடிய வெற்றி சொரூபம் ஆகுக.

எந்தளவு தனது விசேத்தன்மைகளை மனதின் சேவை அல்லது வார்த்தைகள் மற்றும் கர்மத்தின் சேவையில் ஈடுபடுத்தினீர்கள் என்றால் அதை விரிவுப்படுத்திக் கொண்டே யிருங்கள். சேவையில் ஈடுபடுத்துவது என்றால் ஒரே ஒரு விதையிலிருந்து அதிகமான பழங்களை விளைய செய்கிறது. இந்த உயர்ந்த வாழ்க்கையில் விசேத்தன்மைகள் பிறப்பு உரிமையாக கிடைத்துள்ளது., அதை விதையாகவே வைத்துக்கொள்ளாதீர்கள். சேவை என்ற பூமியில் விதைத்தீர்கள் என்றால் பலன் சொரூபமாக அதாவது வெற்றி சொரூபத்தை அனுபவம் செய்வீர்கள்.

சுலோகன்:
விஸ்தாரத்தை பார்க்காமல் சாராம்சத்தை பாருங்கள் மற்றும் தனக்குள் மூழ்கி விடுங்கள் - இதைத்தான் தீவிரமாக முயற்சி செய்வதாகும்.