23-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எந்த குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் இருக்குமோ அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:

அவர்களால் வாயால் ஞானம் கூறாமல் இருக்க முடியாது. அவர்கள் ஆன்மீக சேவையில் தங்களுடைய எலும்புகளையும் அர்ப்பணம் செய்து விடுவார்கள். அவர்களுக்கு ஆன்மீக ஞானத்தை கூறுவதில் மிகுந்த குஷி ஏற்படும். குஷியிலேயே நடனமாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களை விட பெரியவர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருப்பார்கள். அவர்களிட மிருந்து கற்றுக் கொண்டே இருப்பார்கள்.

பாடல்:

உலகம் மாறினாலும் கூட .. .. ..

ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலின் இரண்டு வரிகள் கேட்டீர்கள். இது வாக்குறுதியின் கீதமாகும். எப்படி ஒருவருக்கு நிச்சயதார்த்தமாகி விட்டது என்றால், ஆண் பெண் ஒரு பொழுதும் ஒருவரை யொருவர் கை விட மாட்டோம் என்று உறுதி எடுக்கிறார்கள். ஒரு சிலருக்கு தங்களுக்குள் ஒத்து வரவில்லை என்றால் விட்டு விடவும் செய்கிறார்கள். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் யாரிடம் வாக்குறுதி அளிக்கிறீர்கள்? இறைவனிடம். அவருடன் குழந்தைகளாகிய உங்களுடைய அதாவது மணமகள்களின் நிச்சயதார்த்தமாகி உள்ளது. ஆனால் உலகிற்கு அதிபதியாக ஆக்கி விடும் அப்பேர்ப்பட்டவரை கூட கை விட்டு விடுகிறார்கள். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்துள் ளீர் கள். இப்பொழுது எல்லையில்லாத பாப்தாதா இதோ வந்து விட்டார் என்று நீங்கள் புரிந்திருப் பீர்கள். உங்களுக்கு இங்கு இருக்கும் மனோ நிலை வெளியில் சென்டரில் இருக்க முடியாது. இங்கு பாப்தாதா எதிரில் வந்துள்ளார் என உணர்வீர்கள். வெளியில் சென்டரில் இருப்பவர்கள் பாபா வாசித்திருக்கும் முரளி இதோ வந்து விட்டது என்று நினைப்பார்கள். இங்கே இருப்பதற்கும் அங்கு இருப்பதற்குமிடையே நிறைய வித்தியாசம் உள்ளது. ஏனெனில் இங்கு எல்லையில்லாத பாப்தாதாவிற்குமுன்னால் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். அங்கோ நீங்கள் முன்னால் இருப்பதில்லை. நேரிடையாக சென்று முரளி கேட்போம் என்று விரும்புகிறார்கள். பாபா இதோ வந்து விட்டார் என்று இங்கு குழந்தைகளின் புத்தியில் வந்தது. எப்படி மற்ற சத்சங்கங்கள் இருக்கின்றன - அங்கு குறிப்பிட்ட இந்த சுவாமி வரப் போகிறார் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த சிந்தனை கூட எல்லோருடையதும் ஒரே ரசனையுடன் இருக்காது. அநேகருடைய புத்தியோகம் பிற பக்கங்களில் அலைந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கு கணவன் நினைவிற்கு வருவார். ஒரு சிலருக்கு உறவினர்கள் நினைவிற்கு வருவார்கள். புத்தியோகம் ஒரு குருவிடம் நிலைப்பதில்லை. யாரோ ஒருவர் தான் சுவாமியின் நினைவில் அமர்ந்திருக்கக் கூடும். இங்கும் அவ்வாறே ! அப்படியின்றி எல்லோரும் சிவபாபாவின் நினைவில் இருக்கிறார்கள் என்பதல்ல. புத்தி எங்காவது ஓடிக் கொண்டே இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நினைவிற்கு வருவார்கள். நாள் முழுவதும் ஒரே ஒரு சிவபாபாவின் நினைவில் இருந்தார்கள் என்றால், அதற்கு பரம சௌபாக்கியம் என்று கூறலாம். நிலையான நினைவில் யாரோ ஒருவர் தான் இருக்கிறார்கள். இங்கு தந்தைக்கு முன்னால் இருப்பதால் மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். அதீந்திரிய சுகம் பற்றி கோப கோபியர்களிடம் கேளுங்கள் என்பது இதற்காகத்தான் பாடப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்துள்ளீர்கள். நாம் இப்பொழுது இறைவனின் மடியில் இருக்கிறோம். பிறகு தெய்வீக மடியில் இருப்போம் என்பதை அறிந்துள்ளீர்கள். ஒரு சிலருடைய புத்தியில், சேவையில் சிந்தனைகள் கூட வருகின்றது தான். இந்த படத்தில் இந்த திருத்தம் செய்யலாம், இதை எழுதலாம் .. ஆனால் நல்ல குழந்தைகளாக இருப்பவர்கள் இப்பொழுது தந்தை கூறுவதைத் தான் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். வேறு எந்த சங்கல்பமும் வர விட மாட்டார்கள். தந்தை ஞான ரத்தினங்களால் பையை நிரப்ப வந்துள்ளார். எனவே தந்தையிடம் தன் புத்தி யோகத்தை செலுத்த வேண்டும். தாரணை செய்பவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கவே இருப்பார் கள். ஒரு சிலர் நல்ல முறையில் கேட்டு தாரணை செய்கிறார்கள். ஒரு சிலர் குறைவாக தாரணை செய்கிறார்கள். புத்தியோகம் வேறு பக்கம் ஓடிக் கொண்டே இருந்தால் பின் தாரணை ஆகாது. பக்குவமில்லாதவர்களாக இருந்து விடுவார்கள். ஓரிருமுறை முரளி கேட்டார்கள். தாரணை ஆகவில்லை என்றால், பின் அந்த பழக்கம் உறுதி அடைந்து கொண்டே போகும். பிறகு எவ்வளவு தான் கேட்டுக் கொண்டே இருந்தாலும் தாரணை ஆகாது. பிறருக்கு (ஞானம்) கூற முடியாமல் இருப்பார்கள். யாருக்கு தாரணை ஆகுமோ அவர்களுக்கு பிறகு சேவையில் ஆர்வம் இருக்கும். துடித்துக் கொண்டே இருப்பார்கள், போய் ஞானச் செல்வத்தை தானம் செய்ய வேண்டும் என்ற யோசிப்பார்கள். ஏனெனில் இந்த செல்வம் ஒரு தந்தையை தவிர வேறு யாரிடமுமே கிடையாது. எல்லோருக்கும் தாரணை ஆக முடியாது என்பதையும் தந்தை அறிந்துள்ளார். எல்லோரும் ஒரே மாதிரி உயர்ந்த பதவியை அடைய முடியாது. எனவே புத்தி வேறு பக்கம் அலைந்து கொண்டே இருக்கிறது. வருங்கால அதிர்ஷ்டம் அந்த அளவிற்கு உயர்ந்ததாக அமைவ தில்லை. ஒரு சிலர் பிறகு ஸ்தூல சேவையில் தங்களுடைய எலும்புகளையும் கொடுக்கிறார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்துகிறார்கள். எப்படி உணவு சமைத்து உணவூட்டுகிறார்கள். இதுவும் சப்ஜெட்க் அல்லவா? யாருக்கு சேவையில் ஆர்வம் இருக்குமோ அவர்கள் வாயால் பிறருக்கு கூறாமல் இருக்க மாட்டார்கள். பிறகு பாபா தேக அபிமானம் ஒன்றும் இல்லையே என்பதையும் பார்க்கிறார். பெரியவர்கள் மீது மதிப்பு வைக்கிறார்களா இல்லையா? பெரிய மகாரதிகள் மீது மதிப்பு வைக்க வேண்டி இருக்கிறது. ஆம், ஒரு சிலர் சிறியவர்கள் கூட புத்திசாலியாகி விடுகிறார்கள். எனவே பெரியவர்கள் அவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டி இருக்கும். ஏனெனில் அவர்களுடைய புத்தி மிக வேகமாக செயல்படுகிறது. சேவையினுடைய ஆர்வத்தைப் பார்த்து தந்தை மகிழ்ச்சி அடைவார் அல்லவா? இவர் நன்றாக சேவை செய்வார். நாள் முழுவதும் கண்காட்சி மீது புரிய வைப்பதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். பிரஜைகள் ஏராளமாக உருவாகிறார்கள் அல்லவா? வேறு எந்த வழியும் கிடையாது. சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர், ராஜா, ராணி மற்றும் பிரஜைகள் எல்லோருமே இங்கே தயாராகிறார்கள். எவ்வளவு சேவை செய்ய வேண்டும். இப்பொழுது நாம் பிராமணராகி உள்ளோம் என்பது குழந்தைகளின் புத்தியில்உள்ளது. இல்லறத்தில் இருப்பதால் ஒவ்வொருவருடைய நிலையும் அவரவருடையதாக இருக்கும் அல்லவா? வீடு வாசலை ஒன்றும் விட வேண்டியது இல்லை. வீட்டில் தாராளமாக இருங்கள். ஆனால் பழைய உலகம் முடிந்து விட்டது போல புத்தியில் நிச்சயம் கொண்டிருக்க வேண்டும் என்று தந்தை கூறுகிறார். நமக்கு இப்பொழுது தந்தையிடம் தான் காரியமாக வேண்டி உள்ளது. முந்தைய கல்பத்தில் யார் ஞானம் எடுத்தார்களோ அவர்கள் எடுப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். விநாடிக்கு விநாடி மிகச் சரியாக திரும்ப நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் ஞானம் இருக்கிறது அல்லவா? தந்தையிடம் கூட ஞானம் இருக்கிறது. குழந்தை களாகிய நீங்கள் கூட தந்தையைப் போல ஆக வேண்டும். பாயிண்ட்ஸ் தாரணை செய்ய வேண்டும். எல்லா பாயிண்ட்களும் ஒரே நேரத்தில் புரிய வைக்கப்படுவதில்லை. விநாசம் கூட எதிரிலேயே உள்ளது. இது அதே விநாசமாகும். சத்யுக திரேதாவில் எந்த ஒரு சண்டையும் நடப்ப தில்லை. பின்னால் நிறைய தர்மங்களாகி விடும் பொழுது மற்றும் சேனைகளாகி விடும் பொழுது சண்டை ஆரம்பமாகிறது. முதன் முதலில் ஆத்மாக்கள் சதோபிரதான நிலையிலிருந்து இறங்கு கிறார்கள். பிறகு சதோ, ரஜோ, தமோ என்ற நிலைகள் ஆகிறது. எனவே இவை எல்லாமே புத்தியிலிருத்த வேண்டும். எப்படி ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்றால் சிவபாபா வந்து நமக்கு பொக்கிஷங்கள் அளிக்கிறார். அவற்றை புத்தியில் தாரணை செய்ய வேண்டும் என்பதை புத்தியில் வைத்திருக்க வேண்டும். நல்ல நல்ல குழந்தைகள் நோட்ஸ் (குறிப்புக்கள்) எழுதுகிறார்கள். எழுதுவது நல்லது. பின் புத்தியில் தலைப்புகள் (டாபிக்ஸ்) வந்து கொண்டே இருக்கும். இன்றைக்கு இந்த டாபிக் மீது புரிய வைப்போம். நான் உங்களுக்கு எவ்வளவு பொக்கிஷங்கள் அளித்திருந்தேன் என்று தந்தை கூறுகிறார். சத்யுக திரேதாவில் உங்களிடம் ஏராளமான செல்வம் இருந்தது. பிறகு வாம மார்க்கத் தில் செல்வதால் அது குறைந்து கொண்டே போயிற்று. குஷியும் குறைந்து கொண்டே போனது. கொஞ்சம் கொஞ்சமாக விகர்மங்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது. இறங்க இறங்க கலைகள் குறைந்து கொண்டே போகிறது. சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோ என்ற நிலைகள் ஏற்படுகின்றன. சதோவிலிருந்து ரஜோவில் வருகிறார்கள் என்றால் சட்டென்று வந்து விடுவார்கள் என்பதல்ல. மெது மெதுவாக இறங்குவார்கள். தமோ பிரதான நிலையில் கூட மெது மெதுவாக படி இறங்கி கொண்டே செல்கிறீர்கள். கலைகள் குறைந்து கொண்டே போகின்றன. நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இப்பொழுது தாண்டி குதிக்க வேண்டும். அதாவது, தமோ பிரதான நிலையிலிருந்து சதோ பிரதானமாக ஆக வேண்டும். அதற்காக நேரமும் வேண்டும். ஏறினால் ஒரேயடியாக வைகுண்ட நிலை... என்ற பாடல் உள்ளது. காமத்தினுடைய அடி விழுந்தது என்றால் ஒரேயடியாக சுக்கு நூறாக ஆகி விடுகிறார்கள். எலும்புகள் நொறுங்கி விடுகின்றன. ஒரு சில மனிதர்கள் தற்கொலை செய்கிறார்கள். தங்களது உடலை அழித்துக் கொள்கிறார்கள். ஆத்மாவை அல்ல. இங்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஏனெனில் தந்தையிடமிருந்து அரசாட்சி கிடைக்கிறது. நான் தந்தையை நினைவு செய்து வருங்காலத்திற்காக எவ்வளவு சம்பாதித்தேன் என்று நம்மையே நாம் கேட்க வேண்டும். எத்தனை குருடர்களுக்கு (வழிகாட்டி) கைத்தடி ஆனேன்.. .? இந்த பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை வீட்டுக்கு வீடு கொடுக்க வேண்டும். தந்தை புதிய உலகத்திற்காக ராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஏணிப்படியில் எல்லாமே காண்பிக்கப்பட்டுள்ளது. அதை தயாரிப் பதில் முயற்சி தேவைப்படுகிறது. எப்படி சுலபமாக தயாரித்தால் யார் வேண்டுமானாலும் புரிந்து கொண்டு விட முடியும் என்று நாள் முழுவதும் சிந்தனை நடந்து கொண்டே இருக்கிறது. முழு உலகமோ வராது. தேவி தேவதா தர்மத்தினர் தான் வருவார்கள். உங்களுடைய சேவை நிறைய நடக்க வேண்டி உள்ளது. நம்முடைய இந்த வகுப்பு எதுவரை நடக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் கல்பத்தின் ஆயுள் இலட்சக் கணக்கான வருடங்கள் என்று நினைக்கிறார்கள். எனவே சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். முடிவு ஏற்படும் பொழுது அனைவரின் சத்கதி தாதா வருவார் மற்றும் நமது சீடர்களுக்கு மோட்சம் கிடைத்து விடும். பிறகு நாம் கூட சென்று ஜோதியில் கலந்து விடுவோம் என்று நினைக் கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது. நாம் அமர தந்தை மூலமாக உண்மையிலும் உண்மையான அமர கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். எனவே அமர தந்தை கூறுவதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள், தூய்மை ஆகுங்கள் என்று மட்டுமே கூறுகிறார். இல்லை என்றால் தண்டனை யும் நிறைய வாங்க வேண்டி வரும். பதவியும் குறைந்ததாக கிடைக்கும். சேவையில் உழைப்பு தர வேண்டும். எப்படி ததீட்சி முனிவரின் உதாரணம் உள்ளது. எலும்புகளை கூட சேவையில் கொடுத்து விட்டார். தனது உடலை பற்றிக் கூட சிந்திக்காமல் நாள் முழுவதும் சேவையில் இருப்பது - அதற்கு தான் சேவையில் எலும்புகளை சமர்ப்பிப்பது என்று கூறுவார்கள். ஒன்று ஸ்தூல எலும்பு சேவை மற்றொன்று ஆன்மீக எலும்பு சேவை. ஆன்மீக சேவை செய்பவர் கள் ஆன்மீக ஞானத்தைக் கூறுவார்கள். செல்வத்தை தானம் செய்தபடியே குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள். உலகத்தில் மனிதர்கள் செய்யும் சேவை எல்லாமே ஸ்தூல சேவை யாகும். சாஸ்திரங்கள் கூறுகிறார்கள். அது ஒன்றும் ஆன்மீகமே கிடையாது. ஆன்மீக சேவையை தந்தை மட்டுமே வந்து கற்பிக்கிறார். ஆன்மீக தந்தை தான் வந்து ஆன்மீகக் குழந்தை களுக்கு (ஆத்மாக்களுக்கு) கற்பிக்கிறார்.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சத்யுக புது உலகத்திற்குச் செல்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள். அங்கு உங்கள் மூலமாக எந்த ஒரு விகர்மமும் ஏற்படாது. அது இருப்பதே இராம இராஜ்யமாக ! அங்கு குறைவானோர் தான் இருப்பார்கள். இப்பொழுது இராவண இராஜ்யத் தில் எல்லோருமே துக்கமானவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? இந்த முழு ஞானம் கூட உங்களது புத்தியில் வரிசைக்கிரமமான முயற்சிக்கேற்ப உள்ளது. இந்த ஏணிப்படியின் படத்தி லேயே முழு ஞானமும் வந்து விடுகிறது. இந்த கடைசி பிறவியில் தூய்மையாக ஆனீர்கள் என்றால், தூய்மையான உலகத்திற்கு அதிபதி ஆகிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். நாம் சதோ பிரதானமான நிலையிலிருந்து தமோ பிரதானமாக ஆகி உள்ளோம், மீண்டும் நினைவு யாத்திரையினால் தான் சதோபிரதானமாக ஆகிடுவோம் என்று மனிதர்களுக்கு தெரிய வரும் வகையில் நீங்கள் அவ்வாறு புரிய வைக்க வேண்டும். படத்தை பார்த்தார்கள் என்றால் புத்தி வேலை செய்யும் - இந்த ஞானம் வேறு யாரிடமும் இல்லை. இதில் (ஏணிபடியில்) மற்ற தர்மங்களின் சமாச்சாரம் எங்கே என்பார்கள்? அவை பிறகு இந்த கால சக்கரத்தில் எழுதப் பட்டுள்ளது. அவர்கள் புதிய உலகத்தில் வருவதில்லை. அவர்களுக்கு அமைதி கிடைக்கிறது. பாரதவாசிகள் தான் சொர்க்கத்தில் இருந்தார்கள் அல்லவா? தந்தை கூட பாரதத்தில் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். எனவே பாரதத்தினுடைய பழைமையான யோகத்தை எல்லோரும் விரும்புகிறார்கள். இந்த படங்கள் மூலமாக சுயம் தாங்களும் புரிந்து கொண்டே செல்வார்கள். உண்மையில் புது உலகத்தில் பாரதம் மட்டும் இருந்தது. தங்களுடைய தர்மத்தைப் பற்றியும் புரிந்து கொண்டே செல்வார்கள். கிறித்து தர்ம ஸ்தாபனை செய்ய வந்தார் என்றாலும் கூட இச்சமயம் அவரும் தமோபிரதானமாக இருக்கிறார். இது படைப்பவர் மற்றும் படைப்பினுடைய எவ்வளவு பெரிய ஞானம் ஆகும்.

எங்களுக்கு யாருடைய பணமும் அவசியம் இல்லை என்று நீங்கள் கூறலாம். பணத்தை நாம் என்ன செய்ய போகிறோம்? நீங்களும் கேளுங்கள் மற்றவர்களுக்கும் கூறுங்கள். இந்த படங்கள் ஆகியவற்றை அச்சிடுங்கள். இந்த படங்களால் காரியம் செய்ய வேண்டும். இந்த ஞானத்தை கூறும் வகையில் ஹால் அமையுங்கள். மற்றபடி நாங்கள் பணம் வாங்கி என்ன செய்வோம். உங்களுடைய வீட்டிற்குத் தான் நன்மை ஆகிறது. நீங்கள் ஏற்பாடு மட்டும் செய்து கொடுங்கள். நிறைய பேர் வந்து படைப்பவர் மற்றும் படிப்பினுடைய ஞானமோ மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதுவோ மனிதர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டினர் இந்த ஞானத்தை கேட்டு மிகவும் விரும்புவார்கள். மிகவும் குஷி அடைவார்கள். நாங்கள் கூட தந்தையுடன் யோகம் செய்தோம் என்றால், விகர்மங்கள் விநாசம் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டு விடுவார்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இந்த ஞானத்தை இறைவனைத் தவிர வேறு யாரும் அளிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு விடுவார்கள். குதா (கடவுள்) வந்து பஹிஷ்த் (சொர்க்கம்) ஸ்தாபனை செய்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் எப்படி வருகிறார் என்பது யாருக்குமே தெரியாது. உங்களுடைய விஷயங்களைக் கேட்டு குஷி அடைவார்கள். பிறகு முயற்சி செய்து யோகத்தைக் கற்று கொள் வார்கள். தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆவதற்கான முயற்சி செய்வார்கள். சேவைக்காக நிறைய சிந்தனை செய்ய வேண்டும். பாரதத்தில் திறமையை வெளிப்படுத்தினீர்கள் என்றால் பின் பாபா வெளிநாட்டிற்கும் அனுப்புவார். இந்த இயக்கம் வெளிநாடுகளுக்கும் கூட போகும். இப்பொழுது நேரம் இருக்கிறது அல்லவா? புது உலகம் அமைப்பதில் தாமதம் ஆகிறதா என்ன? எங்காவது பூகம்பம் ஆகியவை ஏற்பட்டால் 2 - 3 வருடங்களுக்குள் முற்றிலுமாக புதிய வீடுகள் ஆகியவற்றை அமைத்து விடுகிறார்கள். தொழிலாளிகள் நிறைய பேர் இருந்தால், பொருட்கள் எல்லாமே தயாராக இருந்தது என்றால் கட்டுவதில் தாமதம் ஏற்படுமா என்ன? வெளி நாட்டில் வீடுகள் எப்படி தயாராகின்றன ஒரு நிமிடத்தில் ஒரு மோட்டார் போல. அப்படியானால் சொர்க்கத்தில் எவ்வளவு சீக்கிரமாக அமைக்கப்பட கூடும்! தங்கம், வெள்ளி ஆகியவை உங்களுக்கு நிறைய கிடைத்து விடுகிறது. சுரங்கங்களிலிருந்து நீங்கள் தங்கம், வெள்ளி, வைரங்களை எடுத்து வருகிறீர்கள். கலைகளையோ எல்லோரும் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். விஞ்ஞானத் தினுடைய எவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஞ்ஞானம் பின்னால் அங்கு பயன்படும். இங்கு கற்று கொள்பவர்கள் பின் அடுத்த பிறவி அங்கு எடுத்து இதை பயன்படுத்து வார்கள். அச்சமயத்திலோ முழு உலகமே புதியதாக ஆகி விடுகிறது. இராவண இராஜ்யம் முடிந்து போய் விடுகிறது. 5 தத்துவங்கள் கூட முறைப்படி சேவையில் இருக்கும். சொர்க்கமாக ஆகி விடும். அங்கு இப்பேர்ப்பட்ட எந்த ஒரு உபத்திரவமும் இருக்காது. இராவண இராஜ்யமே இருக்காது. எல்லோரும் சதோபிரதானமாக இருப்பார்கள்.

எல்லாவற்றையும் விட நல்ல விஷயமாவது : குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையிடம் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். தந்தை பொக்கிஷத்தைத் தருகிறார். அதை தாரணை செய்து மற்றவர்களுக்கு தானமாக அளிக்க வேண்டும். எந்த அளவிற்கு தானம் அளிப்பீர்களோ அந்த அளவு சேமிப்பு ஆகிக் கொண்டே போகும். சேவையே செய்யவில்லை என்றால் தாரணை எப்படி ஆகும்? சேவையில் புத்தி ஈடுபட வேண்டும். சேவையோ நிறைய ஏராளமானது நடக்க முடியும். நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைய வேண்டும். தனக்கும் முன்னேற்றம் செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எப்பொழுதும் ஆன்மீக சேவையில் மும்முரமாக இருக்க வேண்டும். ஞான செல்வத்தை தானம் செய்து குஷியில் நடனமாட வேண்டும். சுயம் தாரணை செய்து மற்றவர்களுக்கு தாரணை செய்விக்க வேண்டும்.

2. தந்தை அளிக்கும் ஞான பொக்கிஷங்களால் தங்களது பையை நிரப்ப வேண்டும். நோட்ஸ் (குறிப்பு) எடுக்க வேண்டும். பிறகு தலைப்பு மீது புரிய வைக்க வேண்டும். ஞானச் செல்வத்தை தானம் செய்வதற்காக துடித்து கொண்டே இருக்க வேண்டும்.

வரதானம்:

நிராகாரமானவர் மற்றும் சாகாரமானவர் - இந்த மந்திரத்தின் நினைவு மூலமாக சேவையின் பாகம் ஏற்று நடிக்கும் ஆன்மீக சேவாதாரி ஆவீர்களாக.

எப்படி தந்தை நிராகார மற்றும் சாகாரமானவர் ஆகி சேவையின் பாகம் ஏற்று நடிக்கிறாரோ, அதே போல குழந்தைகள் கூட இந்த மந்திரத்தின் யந்திரத்தை நினைவில் கொண்டு சேவையின் பாகம் ஏற்று நடிக்க வேண்டும். இந்த சாகார படைப்பு சாகார உடல் ஒரு ஸ்டேஜ் - மேடை ஆகும். மேடை ஆதாரம் ஆகும். பாகம் ஏற்று நடிப்பவர் ஆதார மூர்த்தி ஆவார், எஜமானர் ஆவார். இந்த நினைவின் மூலமாக விலகியவராக ஆகி பார்ட் ஏற்று நடித்தீர்கள் என்றால் சென்ஸ் - அறிவுடன் கூட எஸன்ஸ்ஃபுல் - சாரத்துடன் கூடியவராக ஆகி ஆன்மீக சேவாதாரி ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:

ஸ்லோகன்: சாட்சி - பார்வையாளராக ஆகி ஒவ்வொரு விளையாட்டையும் பார்ப்பவர்களே சாட்சி திருஷ்டா - பார்வையாளராக இருந்து பார்ப்பவர் ஆவார்கள்.