23-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இங்கே இருக்கும் கோடி, பல கோடி பணம் உங்களுக்கு பயன் படாது. அனைத்தும் மண்ணோடு கலந்து போகும். ஆகவே, இப்போது நீங்கள் உண்மையான கண்டத்திற்கான உண்மையான வருமானத்தை சேமியுங்கள்.

கேள்வி:
எந்த ஒரு விஷயதின் காரணமாக பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளை விட உயர்ந்தவர்களாக போற்றப்படுகிறீர்கள்?

பதில்:
பிராமணர்களாகிய நாம் இப்போது அனைவருக்கும் ஆன்மீக சேவை செய்கிறோம். நாம் அனைத்து ஆத்மாக்களையும் பரம்பிதா பரமாத்மாவுடன் சந்திக்க வைக் கின்றோம். இந்த பொது சேவையை தேவதைகள் செய்வதில்லை. அங்கே இராஜா இராணி மற்றும் பிரஜைகள் இங்கே என்ன முயற்சி செய்தார்களோ அதனுடைய பிராப்தியை அனுபவிக்கிறார்கள். சேவை செய்வ தில்லை. ஆகவே, சேவாதாரி பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளை விட உயர்ந்தவர்கள்.

ஓம் சாந்தி.
இங்கு யாருடைய சபை கூடியிருக்கிறது. ஜீவ ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா உடையது. யாருக்கு சரீரம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜீவாத்மா என கூறப்படுகிறது. அவர்கள் மனிதர்கள். மேலும் அவரை பரமாத்மா என்கிறார்கள். ஜீவ ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா நீண்ட காலமாக பிரிந்திருந்தனர்..... இதற்கு மங்களமான சந்திப்பு என கூறப்படு கிறது. பரம்பிதா பரமாத்மாவை ஜீவ ஆத்மா என்று கூற முடியாது. ஏனென்றால், அவர் லோன் (கடனாக) எடுக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். உடலை ஆதாரமாக எடுக்கிறார். அவரே வந்து குழந்தைகளே நானும் இந்த இயற்கையை உடலை ஆதாரமாக எடுக்க வேண்டியிருக்கிறது. நான் கர்ப்பத்தில் போவதில்லை. நான் இவருக்குள் நுழைந்து உங்களுக்குப் புரிய வைக்கிறேன் சிவ பாபா என கூறுகிறார். ஜீவ ஆத்மாக்களாகிய உங்களுக்கு தனக்கென்று உடல் இருக்கிறது. எனக்கென்று உடல் இல்லை. எனவே, இது தனிப்பட்ட சபை அல்லவா! இங்கே எந்த குருவோ அல்லது சீடரோ இருக்கிறார் என்பதில்லை. இதுவோ பள்ளிக் கூடமாகும். குருவிற்கு பிறகு சிம்மாசனம் கிடைக்கும் என்பதில்லை. சிம்மாசனத்தின் விஷயம் கிடையாது. நம்மை யார் படிக்க வைக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் யாரும் வர முடியாது. ஜீவ ஆத்மாக்களின் வர்ணம் பிராமண வர்ணம். ஏனென்றால், பிரம்மா மூலமாக பரம்பிதா பரமாத்மா படைப்பைப் படைக்கிறார். பிராமணர்களாகிய நாம் அனைவரை யும் விட மிக உயர்ந்தவர்கள். தேவதைகளை விட உயர்ந்தவர்கள் என அறிகிறீர்கள். தேவதைகள் யாரும் பொது சேவை செய்யவில்லை. அங்கே இராஜா இராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். தனக்கான முயற்சியை செய்திருக்கிறார்கள். அதற்கேற்ப தனது பிராப்தியை அனுபவிக் கிறார்கள். சேவை யாரும் செய்வதில்லை. பிராமணர்கள் சேவை செய்கிறார்கள். நாம் எல்லை யற்ற தந்தையிடமிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு போலவே இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். நீங்கள் குழந்தைகள் தானே! இங்கே குரு சிஷ்யனின் விஷயம் இல்லை. பாபா அடிக்கடி குழந்தைகளே, குழந்தைகளே என கூறி புரிய வைக்கின்றார். இப்போது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகியிருக்கிறீர்கள். ஆத்மா அழிவற்றது. உடல் அழியக் கூடியது. உடலுக்கு உடை என்றுகூறப்படுகிறது. இது மிகவும் அழுக்கான உடையாகும். ஏனென்றால் ஆத்மா அசுர வழிப்படி விகாரங்களில் போகிறது. அழுக்காகிறது. தூய்மை மற்றும் அழுக்கு என்ற வார்த்தை விகாரங்களினால் வருகிறது. இப்போது மிக பதீதமாகாதீர்கள் என பாபா கூறுகின்றார். இப்போது அனைவரும் இராவணனின் சங்கிலியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இது இராவண இராஜ்யம் ஆகும். எனவே பாபா உங்களை இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறார். இறை தந்தையை விடுவிக்கக் கூடியவர் என்கிறார்கள். நான் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வேன் என்கிறார். அங்கே சென்று மீண்டும் புதிய தலைமுறையில் குழந்தை கள் அவரவர் நடிப்பை திரும்ப நடிக்கிறார்கள். முதன் முதலில் தேவதைகள் அவர்களின் நடிப்பை திரும்ப நடிக்க வேண்டும். அவர்களே முதலில் இருந்தனர். பிரம்மா மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிறது. கலியுகத்தின் அழிவு எதிரில் இருக்கிறது. மிகப் பெரிய இருளில் இருக்கிறார்கள். பதமாபதி, கோடீஸ்வரன் ஆகியிருக் கிறார்கள். இராவணனின் மிகப் பெரிய பகட்டு இருக்கிறது. இதில் தான் பேராசை அடைந்து விடுகிறார்கள். இந்த பொய்யான வருமானம் அனைத்தும் மண்ணில் கலக்கப் போகிறது என பாபா கூறுகிறார். அவர்களின் கையில் எதுவும் இருக்க போவதில்லை. நீங்கள் எதிர் காலத்திற்கு 21 பிறவிகளுக்கு பாபாவிட மிருந்து சொத்தை அடைய வந்துள்ளீர்கள். இது உண்மையான கண்டத்திற்கான உண்மையான வருமானம் ஆகும். அனைவரும் வீட்டிற்குப் போக வேண்டும். அனைவருக்கும் வானப் பிரஸ்த நிலையாகும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல் சத்குரு நான் தான் என பாபா கூறுகிறார். சாதுக்கள், பதீதர்கள் அனைவரையும் நானே சீர்திருத்துகிறேன். குழந்தைகளுக்குக் கூட சிவபாபாவை நினையுங்கள் என புரிய வைக்கப்படுகிறது. மற்ற அனைத்து சித்திரங் களையும் எடுத்து விடுங்கள். ஒரேயொரு சிவபாபா மட்டுமே வேறு யாரும் இல்லை.

நாம் பாபாவிடமிருந்து மீண்டும் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை அடைய வந்திருக் கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை பலமுறை அடைந்துள்ளீர்கள். இராவணணின் அசுர வழிப்படி பதீதமாகி வந்துள்ளீர்கள். மனிதர்கள் இந்த விஷயங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை. இராவணனை எரிக்கிறார்கள் என்றால் முழுமையாக எரிந்து விட வேண்டும் அல்லவா? மனிதர்களை எரிக்கிறார்கள் என்றால் அவர்களின் பெயர் ரூபம் அனைத்தும் அழிந்துபோகிறது. இராவணனின் பெயர் வடிவம் மறைந்து போகவில்லை. மீண்டும் மீண்டும் எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். 5 விகாரங்கள் என்ற இராவணன் உங்களுடைய 63 பிறவிகளின் எதிரி என பாபா கூறுகின்றார். பாரதத்திற்கு எதிரி என்றால் நமக்கும் எதிரி ஆகிவிட்டார். வாம மார்க்கம் வந்த போது இராவணனின் சிறையில் மாட்டி விட்டனர். உண்மையில் அரை கல்பமாக இராவண இராஜ்யமாக இருக்கிறது. இராவணன் எரிந்து விடவில்லை. இறக்கவும் இல்லை. இராவணனின் இராஜ்யத்தில் நாம் மிகவும் துக்கத்தில் இருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். இது சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டு. மாயையிடம் தோல்வி அடைந்தால் தோல்வி, மாயாவிடம் வெற்றி அடைந்தால் வெற்றி...... என பாடப் பட்டிருக்கிறது. இப்பேது நாம் மாயாவை வென்று நாம் மீண்டும் இராம இராஜ்யத்தை அடைகின்றோம். இராம் சீதாவின் இராஜ்யம் திரேதாவில் இருக்கிறது. சத்யுகத்தில் லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருக்கிறது. அங்கேயோ ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் தான் இருக்கிறது. அதற்கு ஈஸ்வரிய இராஜ்யம் என்கிறார்கள். அதை பாபா ஸ்தாபனை செய்திருக்கிறார். பாபாவை ஒரு போதும் சர்வ வியாபி என கூற முடியாது. சகோதரத்துவம் ஆகும். தந்தை ஒருவரே ! நீங்கள் அனைவரும் உங்களிடையே சகோதரர்கள் ஆவீர்கள். பாபா வந்து ஆத்மாக்களை படிக்க வைக்கிறார். பாபாவின் கட்டளை, என்னை நினையுங்கள் என்பதாகும். யார் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பக்தி செய்தார்களோ அவர்களுக்கு நான் பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். முதன் முதலில் நீங்கள் ஒரு சிவபாபாவின் பக்தியை செய்தீர்கள். சோமநாத் ஆலயம் எவ்வளவு செழிப்பாக இருக்கிறது என்றால் நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தோம் என சிந்திக்க வேண்டும். இப்போது ஏழையாக கிளிஞ்சல் போன்று மாறி விட்டோம். இப்போது உங்களுக்கு 84 பிறவிகளின் நினைவு வந்திருக்கிறது. இப்போது நாம் எப்படி வாழ்ந்து எப்படி ஆகிவிட்டோம் என நீங்கள் அறிகிறீர்கள்.

இப்போது உங்களுக்கு நினைவு வந்திருக்கிறது. நினைவு சொரூபம் என்ற வார்த்தை கூட இப்போதையதாகும். இதனுடைய பொருள் பகவான் வந்து சமஸ்கிருதத்தில் கீதையைக் கூறினார் என்பதில்லை. சம்ஸ்கிருதமாக இருந்தால் குழந்தைகளாகிய நீங்கள் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. இந்தி மொழிதான் முக்கியமானது. இந்த பிரம்மாவின் மொழி எதுவோ அந்த மொழியில் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாக இதே மொழியில் தான் புரிய வைக்கிறார். நாம் பாப்தாதாவிற்கு முன் அமர்ந்திருக்கிறோம் என குழந்தைகள் நீங்கள் அறிகிறீர்கள். மம்மா, பாபா, சகோதரன் மற்றும் சகோதரி என்றால் வீடாகும். அவ்வளவு தான் வேறு எந்த உறவும் இல்லை. எப்போது பிரஜாபிதா பிரம்மா வினுடையவர் ஆகிறோமோ அப்போது தான் சகோதரன் சகோதரி உறவு ஏற்படுகிறது. இல்லை என்றால் ஆத்மா என்ற உறவில் சகோதரன்-சகோதரன் ஆவீர்கள். தந்தையிட மிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டி ருக்கிறது. நம்முடைய தந்தை வந்திருக்கிறார் என ஆத்மா அறிகிறது. நீங்கள் பிரம்மாண்டத் திற்கு அதிபதியாக இருந்தீர்கள், பாபாவும் பிரம்மாண் டத்திற்கு அதிபதி அல்லவா? ஆத்மா எப்படி நிராகாரமாக இருக்கிறதோ அதே போன்று பரமாத்மாவும் நிராகாரமாக இருக்கிறார். பெயரே பரம்பிதா பரமாத்மா என்றால், எல்லா வற்றிலிருந்தும் விடுபட்டு கடந்து இருக்கக் கூடிய ஆத்மா. பரம ஆத்மா என்பதன் பொருளே பரமாத்மா. தந்தையிடமிருந்து சொத்து கிடைக்கிறது. இங்கே யாரும் சாது, சன்னியாசி மகாத்மா கிடையாது. குழந்தைகள் ஆவர். பாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். வேறுயாரும் ஆஸ்தியைக் கொடுக்க முடியாது. தந்தை தான் சத்யுகத்தை உருவாக்கக் கூடியவர். அப்பா எப்போதும் சுகத்தைத் தான் கொடுக்கிறார். சுக துக்கத்தை தந்தையே கொடுக்கிறார் என்பது கிடையாது. அவ்வாறு சட்டம் இல்லை. குழந்தைகளாகிய உங்களை முயற்சி செய்ய வைக்கிறேன். 21 பிறவிகளுக்கு தேவதையாக மாற்றுகிறேன் என சுயம் தந்தை கூறுகின்றார். எனவே சுக வள்ளல் ஆகிறார் அல்லவா! துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர். துக்கத்தை யார் கொடுக் கிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். இராவணன். இதற்கு விகார உலகம் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவருமே விகாரி ஆவர். சத்யுகத்தில் இருவரும் நிர்விகாரிகளாக இருந்தனர். லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது அல்லவா? அங்கே நியமப்படி இராஜ்யம் நடக்கிறது. இயற்கை உங்களுடைய கட்டளைப்படி நடக்கிறது. அங்கே எந்த துன்பமும் இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்தாபனையின் காட்சிகளைப் பார்த்திருக் கிறீர்கள். நிச்சயமாக வினாசமும் நடக்கும். ஹோலிகாவில் முழுமையாக உருவாக்குகிறார்கள் அல்லவா? இவர்களின் வயிற்றிலிருந்து என்ன வரும் என கேட்கிறார்கள். உலக்கை (இரும்பு தண்டு) என்று கூறினார். உண்மையான விஷயத்தை நீங்கள் அறிகிறீர்கள். அவர்களுடைய விஞ்ஞானம் எவ்வளவுவேகமாக இருக்கிறது. புத்தியின் வேலை அல்லவா? விஞ்ஞானம் எவ்வளவு ஆணவத்துடன் இருக்கிறது. விமானம் போன்று எத்தனை பொருள்களை சுகத்திற் காக தயாரிக்கிறார்கள். பிறகு இதே பொருட்களினால் அழிக்கவும் செய்கிறார்கள். கடைசியில் தன்னுடைய குலத்தையே அழிப்பார்கள். நீங்கள் குப்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் யாரிடமும் போர் செய்யக் கூடியவர்கள் அல்ல. நீங்கள் யாருக்கும் துக்கம் அளிக்க மாட்டீர்கள் எண்ணம், சொல், செயல் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது என பாபா கூறுகிறார். பாபா யாருக்காவது துக்கம் கொடுக்கிறாரா? சுக தாமத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றார். நீங்கள் அனைவருக்கும் சுகம் அளிக்க வேண்டும். யார் எதைக் கூறினாலும் அமைதியாக முக மலர்ச்சியாக இருக்க வேண்டும் என பாபா புரிய வைத்திருக் கிறார். யோகத்திலிருந்து புன்னகைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய யோக பலத்தினால் அவர்களும் அமைதி அடைவார்கள். முக்கியமாக ஆசிரியைகளின் நடத்தை மிகவும் நன்றாக இருக்க வேண்டும் யாரிடமும் வெறுப்பு இருக்கக் கூடாது. எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது என பாபா கூறுகிறார். அனைவரும் பதீதமானவர்கள் என அறிகிறார். இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் நடத்தை இப்படி இருக்கிறது என அறிகிறேன். உண்ணுதல், அருந்துதல் எவ்வளவு அழுக்காக இருக்கிறது. என்ன வருகிறதோ அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. வாழ்க்கை நமக்கு கூட மிகவும் பிடிக்கிறது. இதில் தான் நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும் என அறிகிறீர்கள். யோகத்தில் இருப்பதால் உங்களுடைய ஆயுள் அதிகரிக்கும். விகர்மம் குறையும். எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு ஆயுள் நீண்டதாக இருக்கும். முயற்சி இப்போது செய்ய வேண்டும். இதன் மூலம் பிறகு பிராப்தி கிடைக்கிறது. யோக பலத்தினால் நாம் ஆரோக்கியம் ஆகின்றோம். ஞானத்தினால் செல்வந்தர் ஆகிறோம், ஆரோக்கியம், செல்வத்தினால் சுகம் கிடைக்கிறது. செல்வம் மட்டும் கிடைத்தது, ஆரோக்கியம் இல்லை என்றால் சுகம் கிடைக்காது. இவ்வாறு பல இராஜாக்கள் பெரிய பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நொண்டியாகவும், நோயாளியாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விகர்மங்கள் செய்திருப்பதால் அதனுடைய பலன் கிடைத் திருக்கிறது என கூறப்படுகிறது. பாபா உங்களுக்கு நிறைய சொல்கின்றார். வெளியே சென்றதும் இங்கே கேட்டது இங்கேயே இருந்து விடக் கூடாது. இவ்வாறு நடக்கக் கூடாது அல்லவா? தாரணை செய்ய வேண்டும். வேறு எதுவும் நினைவு செய்ய கூடாது. நன்கு சிவபாபாவை நினையுங்கள். உள்ளே மிகவும் குப்தமான மகிமைகள் செய்ய வேண்டும். பாபா நீங்கள் வந்து படிக்க வைப்பீர்கள் என்பது மனதின் எண்ணத்தில் கூட இல்லை. நிராகார் பரம்பிதா பரமாத்மா வந்து படிக்க வைக்கின்றார் என்பது வேறு எந்த சாஸ்திரத்திலும் இல்லை. பாபா இப்போது நாங்கள் தெரிந்து கொண்டோம். பாபாவிற்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரை போட்டதால் கீதை துண்டிக்கப்பட்டு விட்டது. கிருஷ்ணரின் சரித்திரம் இருக்க முடியாது. கீதை இந்த சங்கமத்தின் சாஸ்திரம் ஆகும். ஆனால் அவர்கள் துவாபர யுகத்தில் காண்பித்து விட்டனர். குழந்தைகளே ! மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டுவிட்டு படிப்பின் மீது கவனம் வையுங்கள் என பாபாகூறுகின்றார். பாபாவின் நினைவு இல்லாமல், படிப்பில் மூழ்கி இல்லாமல் இருந்தால் நேரம் வீணாகிப் போகும். உங்களுடைய நேரம் விலை மதிப்பற்றதாகும். ஆகவே, வீணாக்காதீர்கள். சரீர நிர்வாகம் செய்யுங்கள். மற்றபடி வீண் விஷயங்களில் நேரத்தை இழக்காதீர்கள். உங்களுடைய ஒவ்வொருநொடியும் வைரம் போன்று மதிப்பு வாய்ந்ததாகும். மன்மனா பவ என பாபாகூறுகிறார். அவ்வளவு தான் அந்த நேரமே நன்மையானது. மற்ற நேரம் வீணாகப் போகிறது. நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்குகின்றோம் என சார்ட் வையுங்கள். வார்த்தை கூட மன்மனாபவ என்ற ஒன்று தான். அரை கல்பமாக ஜீவன் முக்தி இருந்தது பிறகு அரை கல்பமாக வாழ்க்கை பந்தனத்தில் வந்துள்ளீர்கள். சதோ பிரதானத்திலிருந்து சதோ ரஜோ தமோவில் வந்துள்ளீர் கள். மீண்டும் ஜீவன் முக்தி உடையவர் ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். மாற்றக் கூடியவர் பாபா தான். அனைவருக்கும் ஜீவன் முக்தி கிடைக்கிறது. அவரவர் தர்மத்திற்கு ஏற்ப முதன் முதலில் சுகத்தைப் பார்ப்பார்கள். பிறகு துக்கம். புதிய ஆத்மாக்கள் யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் சுகத்தை அனுபவிக்கிறார்கள். புதிய ஆத்மாவாக இருக்கக் கூடிய காரணத்தினால் சக்தி இருக்கிறது. அதனால் அவருடைய மகிமை பாடப் படுகிறது உங்களுக்குள்ளே மகிழ்ச்சியின் வாத்தியம் ஒலிக்க வேண்டும். நாம் பாப்தாதாவிற்கு முன்பு இருக்கின்றோம். இப்போது புதிய படைப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய இந்த நேரத்தின் மகிமை சத்யுகத்தை விட மிகவும் உயர்ந்தது. ஜகதம்பா, தேவிகள் அனைவரும் சங்கமத்தில் இருந்தனர். பிராமணர்களாக இருந்தனர். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கிறோம். மீண்டும் தேவதைகளாக பூஜைக்குரியவர்களாக தகுதி அடைவீர்கள் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு உங்களுடைய நினைவுச் சின்னம் கோவிலாக மாறிவிடுகிறது. நீங்கள் சைத்தன்ய தேவிகளாக மாறுகிறீர்கள். அவர்கள் ஜடமாக இருக்கிறார் கள். அவர்களிடம் இவர் எப்படி தேவியாக மாறினார் என கேளுங்கள். யாராவது பேசினார்கள் என்றால் நாமே பிராமணனாக இருந்தோம், மீண்டும் நாமே தேவதையாக மாறுகின்றோம் என புரிய வையுங்கள். நீங்கள் சைத்தன்யத்தில் இருக்கிறீர்கள். இந்த ஞானம் எவ்வளவு முதல் தரமானது என நீங்கள் கூறுகிறீர்கள். உண்மையில் நீங்கள் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபா நாங்கள் லஷ்மி நாராயணரை விட குறைந்த பதவி அடைய மாட்டோம் என குழந்தைகள் கூறுகிறார்கள். நாம் முழுமையாக சொத்தை அடைவோம். இந்த பள்ளிக் கூடமே இப்படி பட்டது. நாம் பழமையான இராஜயோகத்தைக் கற்றுக் கொள்வதற்காக வந்துள்ளோம் என அனைவரும் கூறுவார்கள். யோகத்தினால் தேவி தேவதைகளாக மாறுகின்றார்கள். இப்போது சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறீர்கள். பிறகு பிராமணனிலிருந்து தேவதையாகிறீர்கள். முக்கியமான விஷயம் நினைவினுடையது ஆகும். நினைவில் தான் மாயை தடைகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் மிகவும் முயற்சி செய்வீர்கள். பிறகும் கூட புத்தி எங்காவதுசென்றுவிடுகிறது. இதில் தான் அனைத்து உழைப்பும் இருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவிற்குச் சமமாக சுக வள்ளல் ஆக வேண்டும். எண்ணம், சொல், செயலில் யாருக்கும் துக்கம் அளிக்கக் கூடாது. எப்போதும் மனம் சாந்தமாகவும் முகம் மலர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

2. வீணான எண்ணங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். உள்ளுக்குள்ளிருந்து பாபாவை மகிமை செய்ய வேண்டும்.

வரதானம்:
சிரேஷ்ட வழிப்படி ஒவ்வொரு செயலையும் கர்மயோகி ஆகி செய்யக்கூடிய கர்மபந்தனத்திலிருந்து விடுப்பட்டவர் ஆகுக.

எந்த குழந்தைகள் சிரேஷ்ட வழிப்படி ஒவ்வொரு செயலையும் செய்துக் கொண்டே எல்லைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஆனந்தத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் காரியகள் செய்தாலும் கர்ம பந்தனத்தில் வரமாட்டார்கள். விடுப்பட்டவராகவும் அன்பானவராகவும் இருப்பார்கள். கர்ம யோகி ஆகி காரியம் செய்வதினால் அவர்களிடம் துக்கத்தின் அலைகள் வர முடியாது. அவர்கள் எப்பொழுதும் விடுப்பட்டவராகவும் அன்பானவராகவும் இருக் கிறார்கள். எந்தவொரு கர்மத்தின் பந்தனம் அவர்களை தனது பக்கம் ஈர்க்காது. சதா எஜமானராக இருந்து காரியம் செய்ய வைப்பார்கள். ஆகையால் பந்தன முக்தி மன நிலையை அனுபவம் ஆகும். அப்படிப் பட்ட ஆத்மாக்கள் தானும் எப்பொழுதும் குஷியாக இருப்பார்கள் மேலும் மற்றவர்களுக்கும் குஷியை கொடுப்பார்கள்.

சுலோகன்:
அனுபவங்களின் அத்தாரிட்டி (உரிமையாளர்) ஆகுங்கள், அப்பொழுது ஒருபொழுதும் தோல்வி அடைய மாட்டீர்கள்