24-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எந்தக் குழந்தைகளிடம் அலட்சியம் இருந்து கொண்டே இருக்கிறதோ, அவர்களின் வாயிலிருந்து எந்த வார்த்தைகள் தாமாக வெளிவந்து விடுகின்றன?

பதில்:

அதிர்ஷ்டத்தில் என்ன உள்ளதோ, அது கிடைத்து விடும். சொர்க்கத்திற்கோ எப்படி இருந்தாலும் போகத் தான் செய்வோம். பாபா சொல்கிறார், இந்த வார்த்தை புருஷார்த்திக் குழந்தை களுடையதல்ல. உயர்ந்த பதவி பெறுவதற்கான புருஷார்த்தம் தான் செய்ய வேண்டும். உயர்ந்த பதவி தருவதற்காக பாபா வந்துள்ளார் என்றால் அலட்சியமாக இருக்காதீர்கள்.

பாடல்:

குழந்தைப் பருவத்தின் நாட்களை மறந்துவிடக் கூடாது..........

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடல் வரியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். இப்போது உயிருடன் இருந்து கொண்டே எல்லையற்ற தந்தையுடைய வர்களாக ஆகியிருக்கிறீர்கள். முழுக் கல்பத்திலோ எல்லைக்குட்பட்ட தந்தையுடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். இப்போது பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் எல்லையற்ற தந்தையுடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் எல்லையற்ற ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம். தந்தையை கை விட்டு விட்டால் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்காது. நீங்கள் புரிய வைக்கத் தான் செய்கிறீர்கள். ஆனால் அவ்வளவு சுலபமாக யாரும் திருப்தி அடைய மாட்டார்கள். மனிதர்கள் செல்வத்தை விரும்புகின்றனர். செல்வம் இன்றி சுகம் இருக்க முடியாது. செல்வமும் வேண்டும், சாந்தியும் வேண்டும், நோயற்ற சரீரமும் வேண்டும். குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள், உலகத்தில் இன்று என்ன உள்ளது, நாளை என்ன நடக்கப் போகிறது என்று. விநாசமோ முன்னால் காத்துக் கொண்டுள்ளது. வேறு யாருடைய புத்தியிலும் இந்த விசயங்கள் இல்லை. விநாசம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருந்தாலும் கூட என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், எப்போது வேண்டுமானாலும் யுத்தம் வரலாம். சிறு தீப்பொறி தோன்றினாலும் பெரிய வெடிச்சத்தமாக ஆவதில் நேரம் பிடிக்காது. குழந்தைகள் அறிவார்கள், இந்தப் பழைய உலகம் இப்போது முடிந்தே விட்டது என்று. அதனால் இப்போது சீக்கிரமாகவே பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாபாவை சதா நினைவு செய்து கொண்டே இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தேக அபிமானத்தில் வருவதால் தந்தையை மறந்து துக்கத்தை அடைகிறீர்கள். எவ்வளவு தந்தையை நினைவு செய்வீர்களோ, அந்த அளவு எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தை அடைவீர்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதே இது போல் லட்சுமி-நாராயணன் ஆவதற்காக. இராஜா-ராணியின் மற்றும் பிரஜைகளின் வேலைக்காரர்களாக ஆவது - இதில் அதிக வேறுபாடு உள்ளது இல்லையா? இப்போதைய புருஷார்த்தம் பிறகு கல்ப-கல்பாந்தரமாக நிரந்தரமாகி விடும். கடைசியில் அனை வருக்கும் சாட்சாத்காரம் ஆகும் - நாம் எவ்வளவு புருஷார்த்தம் செய்தோம் என்று. இப்போதும் பாபா சொல்கிறார், தன்னுடைய நிலைப்பாட்டைப் பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமையிலும் இனிமையான பாபா, அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்றால் அவரை நாம் எவ்வளவு நினைவு செய்கிறோம்? உங்களுடைய அனைத்துமே நினைவின் ஆதாரத்தில் தான் உள்ளது. எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு குஷியும் இருக்கும். இப்போது (சத்யுகத்திற்கு) அருகில் வந்து சேர்ந்து விட்டோம் எனப் புரிந்து கொள்வீர்கள். சிலர் களைத்துப் போகவும் செய்கின்றனர். சென்றடைய வேண்டிய இலக்கு இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது எனத் தெரியவில்லை. சென்று சேர்ந்து விட்டால் முயற்சியும் பயனுள்ளதாகும். இப்போது எந்த இலக்கை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உலகத்திற்குத் தெரியாது. உலகத்திற்கு இதுவும் தெரியாது - பகவான் எனச் சொல்லப் படுபவர் யார்? பகவான் என்று சொல்லவும் செய்கின்றனர். பிறகு கல்-மண்ணில் எல்லாம் இருக்கிறார் எனச் சொல்லி விடுகின்றனர்.

இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் பாபாவுடையவர்களாக ஆகி விட்டோம். இப்போது பாபாவின் வழிமுறைப்படித் தான் நடக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் இருக்கலாம், அங்கே இருந்தாலும் கூட பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கின்றது. நினைவினாலன்றி ஆத்மா தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக முடியாது. நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, நாங்கள் உங்களிடமிருந்து முழுமையான ஆஸ்தியைப் பெறுவோம். எவ்வாறு மம்மா - பாபா ஆஸ்தி பெற்றனர் அதுபோல் நாங்களும் புருஷார்த்தம் செய்து அவர்களுடைய சிம்மாசனத்தில் நிச்சயமாக அமர்வோம் என்று. மம்மா-பாபா இராஜ-ராஜேஸ்வரி ஆகின்றனர் என்றால் நாமும் கூட ஆவோம். பரீட்சையோ அனை வருக்கும் ஒன்று தான். உங்களுக்கு மிகவும் எளிதாகவே கற்பிக்கப் படுகின்றது - பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள். இது சகஜ இராஜயோகத்தின் பலம் எனச் சொல்லப் படுகின்றது. யோகத்தின் மூலம் அதிக பலம் கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள். நாம் ஏதாவது விகர்மம் செய்தால் தண்டனை அதிகம் அடைவோம், பதவி கீழானதாக ஆகி விடும் என்பதைப் புரிந்து கொள்கின்றனர். நினைவில் தான் மாயா விக்னத்தை ஏற்படுத்துகின்றது. சத்குருவுக்கு நிந்தனை செய்பவர்கள் நல்ல பதவி பெற முடியாது எனப் பாடப்படுகின்றது. அவர்களும் கூட சொல் கின்றனர், குருவுக்கு நிந்தனை........... என்பதாக. ஆனால் நிராகார் பற்றி யாருக்கும் தெரியாது. பாடப் படவும் செய்கிறது - பக்தர்களுக்கு பலனைக் கொடுப்பவர் பகவான் என்று. சாது-சந்நியாசிகள் அனைவரும் பக்தர்கள் தான். பக்தர்கள் தான் கங்கா ஸ்நானம் செய்வதற்காகச் செல்கின்றனர். பக்தர்கள், பக்தர்களுக்கு பலனைத் தர முடியாது. பக்தர்களே பக்தர்களுக்கு பலன் கொடுப்பார் களானால் பிறகு பகவானை ஏன் நினைவு செய்ய வேண்டும்? இது பக்தி மார்க்கமாகும். அனைவரும் பக்தர்கள். பக்தர்களுக்கு பலனைத் தருபவர் பகவான். அதிகம் பக்தி செய்பவர்கள் கொஞ்சம் பக்தி செய்பவர்களுக்கு பலன் கொடுப்பார்கள் என்பது கிடையாது. பக்தி என்றால் பக்தி தான். படைப்பே இன்னொரு படைப்புக்கு எப்படி பலன் தர முடியும்? ஆஸ்தி படைப்பவரிடம் இருந்து தான் கிடைக்கும். இச்சமயம் அனைவரும் பக்தர்கள். எப்போது ஞானம் கிடைக்கின்றதோ, பிறகு பக்தி தானாகவே விடுபட்டுப் போகும். ஞானத்திற்கு வெற்றி முழக்கம் (புகழ்) கிடைத்து விடும். ஞானம் இல்லாமல் சத்கதி எப்படிக் கிடைக்கும்? அனைவரும் தங்களின் கணக்கு-வழக்கை முடித்து விட்டுச் சென்று விடுவார்கள். ஆக, இப்போது விநாசம் முன்னாலேயே தயாராக உள்ளது என்பதைக் குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். அதற்கு முன்னதாகவே புருஷார்த்தம் செய்து பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும்.

நீங்கள் அறிவீர்கள், நாம் தூய்மையான உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். யார் பிராமண ராக ஆகின்றனரோ, அவர்கள் தான் நிமித்தமாக (கடமைப்பட்டவர்) ஆவார்கள். பிரம்மா முக வம்சாவளி பிராமணர் ஆகாமல் நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தி பெற முடியாது. தந்தை குழந்தைகளைப் படைப்பதே ஆஸ்தி தருவதற்காக. சிவபாபாவினுடையவர்களாகவோ நாம் இருக்கவே செய்கிறோம். குழந்தைகளுக்கு ஆஸ்தி தருவதற் காகவே சிருஷ்டியைப் படைக்கிறார். சரீரதாரிக்குத் தான் ஆஸ்தி கொடுப்பார் இல்லையா? ஆத்மாக்களோ மேலே உள்ளனர். அங்கோ ஆஸ்தி அல்லது பலனடைவது என்ற விஷயமே கிடையாது. நீங்கள் இப்போது புருஷார்த்தம் செய்து பலனைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இது உலகத்திற்குத் தெரியாது. இப்போது சமயம் அருகில் வந்து கொண்டே இருக்கிறது. பாம்ஸ் (வெடிகுண்டுகள்) ஒன்றும் சும்மா வைத்திருப் பதற்காக அல்ல. ஏற்பாடுகள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இப்போது பாபா நமக்குக் கட்டளை இடுகிறார், என்னை நினைவு செய்யுங்கள். இல்லையென்றால் கடைசியில் மிகவும் அழ நேரிடும். அரசியல் தேர்வில் யாராவது ஃபெயிலாகி விட்டால் கோபத்தில் போய் முகத்தைக் காட்டாமல் மறைந்து கொள்வார்கள். இங்கே கோபத்தின் விஷயமே கிடையாது.. கடைசியில் உங்களுக்கு சாட்சாத்காரம் அதிகம் கிடைக்கும். நாம் என்னென்னவாக ஆகப் போகிறோம் என்பது தெரிந்து விடும். பாபாவின் வேலை புருஷார்த்தம் செய்ய வைப்பது. குழந்தை கள் சொல்கின்றனர், பாபா, நாங்கள் கர்மம் செய்யும் போது நினைவு செய்வதற்கு மறந்து போகிறோம். சிலர் பிறகு சொல்கின்றனர், நினைவு செய்வதற்கு நேரமே கிடைப்பதில்லை என்று. அதற்கு பாபா சொல்கிறார், நல்லது, நேரம் ஒதுக்கி நினைவில் அமருங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதும் கூட இதே முயற்சியைச் செய்யுங்கள். நாம் பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஒன்று கூடி அமர்வதன் மூலம் நீங்கள் நன்றாக நினைவு செய்வீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். முக்கியமான விஷயம் பாபாவை நினைவு செய்வதாகும். சிலர் வெளிநாடு செல்கின்றனர் என்றால் அங்கேயும் ஒரு விஷயம் மட்டும் நினைவு வையுங்கள். பாபாவின் நினைவு மூலம் தான் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆவீர்கள். பாபா சொல்கிறார், ஒரு விசயத்தை மட்டும் நினைவில் வையுங்கள் - பாபாவை நினைவு செய்யுங்கள். யோக பலத்தின் மூலம் பாவங்கள் பஸ்மமாகி விடும். பாபா சொல்கிறார், மன்மனாபவ. என்னை நினைவு செய்வீர்களானால் உலகத்தின் எஜமானர் ஆவீர்கள். நினைவினுடைய விசயம் தான் முக்கியமானதாகி விடுகின்றது. எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருங்கள். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள். தூய்மையாகவில்லை என்றால் நினைவு செய்ய முடியாது. அனைவருமே வகுப்பில் வந்து படிப்பார்கள் என்பதில்லை. மந்திரத்தைப் பெற்றுக் கொண்டு விட்டால் பிறகு எங்கு வேண்டு மானாலும் செல்லுங்கள். சதோபிரதான் ஆவதற்கான வழியையோ பாபா சொல்லியிருக்கிறார். அவ்வாறே சென்டருக்கு வருவதன் மூலம் புதுப்புதுப் பாயின்ட்டுகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏதேனும் காரணத்தால் வர முடியவில்லை, மழை பெய்கிறது, தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, யாரும் வெளியில் செல்ல இயலவில்லை என்றால் பிறகு என்ன செய்வீர்கள்? பாபா சொல்கிறார், எந்த ஒரு நஷ்டமும் இல்லை. சிவாலயத்தில் அபிஷேகம் செய்து தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை. எங்கே இருந்தாலும் நீங்கள் நினைவு செய்ய இயலும். நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் நினைவு செய்யுங்கள். மற்றவர்களுக்கும் இதையே சொல்லுங்கள் - தந்தையை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசமாகி விடும், மேலும் தேவதை ஆகி விடுவீர்கள். சொற்களே இரண்டு தான் - தந்தையாகிய படைப்பவரிட மிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டும். படைப்பவர் ஒருவர் தான். அவர் எவ்வளவு சுலபமான வழி சொல்கிறார்! தந்தையை நினைவு செய்வதற்கான மந்திரம் கிடைத்து விட்டது. தந்தை சொல்கிறார், இந்தக் குழந்தைப் பருவத்தை மறந்துவிடக் கூடாது. தந்தையை மறப்பீர்களானால். இன்று சிரிக்கிறீர்கள், நாளை அழ நேரிடும், தந்தையிடமிருந்து முழுமையாக ஆஸ்தியை அடைய வேண்டும். இது போல் அநேகர் உள்ளனர் - சொல்கின்றனர், சொர்க்கத்திற்கோ எப்படியும் செல்வோம் இல்லையா, எது அதிர்ஷ்டத்தில் உள்ளதோ.. இவ்வாறு சொல்பவர் ஒன்றும் புருஷார்த்தி எனச் சொல்லப்பட மாட்டார்கள். மனிதர்கள் முயற்சி செய்வதே உயர்ந்த பதவி பெறு வதற்காகத் தான். இப்போது பாபாவிடமிருந்து உயர்ந்த பதவி கிடைக்கிறதென்றால் ஏன் கவனக்குறைவாக இருக்க வேண்டும்? பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை என்றால் படித்தவர் முன் தலை வணங்கி நிற்க நேரிடும். தந்தையை முழுமையாக நினைவு செய்யவில்லை என்றால் அங்கு போய்ப் பிரஜைகளில் வேலைக்காரர்களாக ஆவார்கள். இதில் குஷியாகிவிடக் கூடாது. குழந்தைகள் முன்னிலையில் புத்துணர்வு பெற்றுச் செல்கின்றனர். பந்தனத்தில் உள்ள மாதாக்கள் அநேகர் உள்ளனர். நஷ்டம் எதுவும் இல்லை. வீட்டில் அமர்ந்தவாறே தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார்! மரணம் முன்னாலேயே உள்ளது, திடீரென்று சண்டை ஆரம்பமாகி விடும். சண்டை தொடங்கியே விட்டது என்பது பார்த்தாலே தெரிகிறது. வானொலி மூலமாகவும் அனைத்தும் தெரிய வருகின்றது. கொஞ்சம் குழப்பம் விளைவித்தாலும் கூட நாங்கள் இது போல் செய்வோம் என்று சொல்கின்றனர். முதலிலேயே சொல்லி விடுகின்றனர். வெடிகுண்டுகளின் கர்வம் அதிகம் உள்ளது. பாபாவும் சொல்கிறார், குழந்தைகள் யோக பலத்தில் இன்னும் திறமையுள்ளவர்களாக ஆகிவில்லை. யுத்தம் வரட்டும் என்றால், அது டிராமா அனுசாரம் என்றாகாது. குழந்தைகள் முழு ஆஸ்தியை இன்னும் பெற வில்லை. இன்னும் முழுமையாக இராஜதானி ஸ்தாபனை ஆகவில்லை. இன்னும் சிறிது காலம் வேண்டும். புருஷார்த்தம் செய்வித்துக் கொண்டே இருக்கிறார். எந்தச் சமயத்திலும் திடீரென ஏதேனும் நடந்து விட்டால், ஏரோப்ளேன், ரயில்கள் விழுந்து விடுகின்றன. மரணம் எவ்வளவு சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது ! பூமி அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நில அதிர்வு தான் அனைத்திலும் அதிகமான காரியம் செய்ய வேண்டியுள்ளது. நிலம் அசைந்தால் கட்டடங்கள் முழுவதுமாகக் கீழே விழுந்து விடும். மரணம் ஏற்படுவதற்கு முன்பாக பாபாவிடமிருந்து முழு ஆஸ்தி பெற வேண்டும். அதனால் மிகுந்த அன்போடு பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா, உங்களைத் தவிர எனக்கு வேறு யாரும் கிடையாது. பாபாவை மட்டும் நினைவு செய்து கொண்டே இருங்கள். எவ்வளவு எளிதான முறையில் சின்னச் சின்னக் குழந்தைகளுக்குச் சொல்வது போல் சொல்லிப் புரிய வைக்கிறார்! வேறு எந்த ஒரு கஷ்டத்தையும் நான் தரவில்லை. நினைவு மட்டும் செய்யுங்கள். மேலும் காமசிதையில் அமர்ந்து நீங்கள் எரிந்து விட்டிருக்கிறீர்கள். இப்போது ஞானசிதையில் அமர்ந்து தூய்மையாகுங்கள். உங்களுடைய நோக்கம் என்ன என்று உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள், அனைவரின் தந்தையாகிய சிவபாபா சொல்கிறார், என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகி விடும். மேலும் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகி விடுவீர்கள். கலியுகத்தில் அனைவரும் தமோபிர தானமாக உள்ளனர். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை மட்டுமே!

இப்போது பாபா சொலகிறார், என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் கறை நீங்கி விடும். இந்த செய்தியையோ உங்களால் கொடுக்க முடியும் இல்லையா? நீங்கள் நினைவு செய்தால் தான் மற்றவர்களை நினைவு செய்ய முடியும். சுயம் நினைவு செய்து கொண்டிருப்பார்களானால் மற்றவர்களுக்கு ஆர்வத்துடன் சொல்வார்கள். இல்லையென்றால் இதயபூர்வமாகச் சொல்ல மாட்டார்கள். பாபா புரிய வைக்கிறார், எங்கே இருந்தாலும் எவ்வளவு முடியுமோ, நினைவு மட்டும் செய்யுங்கள். யார் சந்திக்கிறார்களோ, அவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் - மரணம் நம்முன் நின்று கொண்டுள்ளது. பாபா சொல்கிறார், நீங்கள் அனைவரும் தமோபிரதான் தூய்மையற்றதாகி விட்டீர்கள். இப்போது என்னை நினைவு செய்யுங்கள், தூய்மையாகுங்கள். ஆத்மா தான் தூய்மை யற்றதாகி விட்டது. சத்யுகத்தில் இருப்பது தூய்மையான ஆத்மா. நினைவினால் தான் ஆத்மா தூய்மையாகும். வேறு எந்த ஓர் உபாயமும் கிடையாது என தந்தை சொல்கிறார். இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். அதனால் கூட அநேகருக்கு நன்மை செய்வீர்கள். வேறு எந்த ஒரு கஷ்டமும் கொடுக்கவில்லை. ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்குபவர் பதித-பாவனர் பாபா மட்டுமே. அனைவரிலும் உத்தமத்திலும் உத்தம ஆத்மாக்களாக ஆக்குபவர் பாபா. யார் பூஜைக்குரியவராக இருந்தார்களோ, அவர்கள் தான் பூஜாரியாக ஆகியிருக்கிறார்கள். இப்போது இராவண இராஜ்யத்தின் கடைசி. நாம் பூஜாரியில் இருந்து மீண்டும் பூஜைக்குரியவராக ஆகிறோம், பாபாவை நினைவு செய்வதன் மூலம். மற்றவர் களுக்கும் இந்த வழியைச் சொல்ல வேண்டும். வயது முதிர்ந்த தாய்மார்களுக்கும் கூட சேவை செய்ய வேண்டும். உற்றார்-உறவினருக்கும் கூட செய்தி கொடுக்க வேண்டும். சத்சங்கம், கோவில் கள் முதலியன கூட அநேக விதமாக உள்ளன. உங்களுடையது ஒரே விதமானது. தந்தையின் அறிமுகத்தை மட்டும் கொடுக்க வேண்டும். சிவபாபா சொல்கிறார், என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். நிராகார் சிவபாபா அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல். பாபா ஆத்மாக்களுக்குச் சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். இதைப் புரிய வைப்பதோ சுலபம் தான் இல்லையா? வயதான மாதர்கள் கூட சேவை செய்ய முடியும். முக்கியமான விசயம் இது தான். திருமணம் முதலிய நீங்கள் விரும்பும் இடங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். அங்குள்ளவர்களின் காதுகளில் இந்த விசயத்தைச் சொல்லுங் கள். கீதையின் பகவான் சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்று. இந்த விசயத்தை அனைவருமே விரும்புவார்கள். அதிகம் பேசுவதற்கான தேவையே கிடையாது. பாபாவின் செய்தியை மட்டும் சொல்ல வேண்டும். அதாவது என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். நல்லது, இதுபோல் சொல்லுங்கள், பகவான் தூண்டுதல் தருகிறார். கனவில் காட்சிகள் கிடைக்கின்றன. சப்தம் கேட்கிறது - அதாவது தந்தை சொல்கிறார், என்னை நினைவு செய்வீர் களானால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். நீங்கள் தாமாகவே கூட இதுபோல் சிந்தனை செய்து கொண்டே இருங்கள். அப்போது உங்கள் துன்பம் நீங்கி விடும். நாம் நடைமுறையில் எல்லையற்ற தந்தையுடையவர்களாக ஆகியிருக்கிறோம். மேலும் தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால் குஷி இருக்க வேண்டும். தந்தையை மறப்பதால் தான் கஷ்டங்கள் வருகின்றன. பாபா எவ்வளவு சகஜமாகப் புரியும்படி சொல்கிறார்! தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்வீர்களானால் ஆத்மா சதோபிரதானமாக ஆகி விடும். அனைவரும் புரிந்து கொள்வார்கள், இவர்களுக்கு வழியோ மிகச் சரியானதாகவே கிடைத்துள்ளது என்று. இந்த வழியை ஒரு போதும் யாராலும் சொல்ல இயலாது. அவர்கள், சிவபாபாவை நினைவு செய்யுங்கள் எனச் சொல்கிறார்கள் என்றால் பிறகு சாதுக்களிடம் யார் செல்வார்கள்? சமயம் அந்த மாதிரி இருக்கும், நீங்கள் வீட்டிலிருந்து வெளியில் கூடச் செல்ல முடியாது. தந்தையை நினைத்து-நினைத்தே சரீரத்தை விட்டு விடுவீர்கள். கடைசிக் காலத்தில் யார் சிவபாபாவை நினைவு செய்கிறார்களோ,......... அவர்கள் தான் பிறகு நாராயணர் உற்சாகம் நிறைந்த பிறவி எடுத்து பின் லட்சுமி-நாராயணரின் அரச பரம்பரையில் வருவார்கள் இல்லையா? அடிக்கடி இராஜ பதவி பெறுவார்கள். தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும் அன்பு வையுங்கள். நினைவு இல்லாமல் எப்படி அன்பு வைப்பீர்கள்? சுகம் கிடைப்பதால் அன்பு செய்யப்படுகிறது. துக்கம் தருபவரை நினைவு செய்யப் படுவதில்லை. பாபா சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறேன். அதனால் என் மீது அன்பு செலுத்துங்கள். தந்தையின் வழிமுறைப்படி நடக்க வேண்டும் இல்லையா? நல்லது..

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) குஷியில் இருப்பதற்கு நினைவின் முயற்சி செய்ய வேண்டும். நினைவின் பலம் ஆத்மாவை சதோபிரதான் ஆக்கக் கூடியதாகும். அன்போடு ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

2) உயர்ந்த பதவி பெறுவதற்காக படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டத்தில் என்ன உள்ளதோ, அது கிடைக்கட்டும் என்று இருக்கக் கூடாது. அலட்சியத்தை விட்டுவிட்டு முழு ஆஸ்திக்கு அதிகாரி ஆக வேண்டும்.

வரதானம்:

யோசிப்பது மற்றும் செய்வதற்கிடையில் உள்ள வித்தியாசத்தை முடித்துவிடக் கூடிய சுயமாற்றம் செய்பவர் மற்றும் உலக மாற்றம் செய்பவர் ஆகுக.

எந்த ஒரு சம்ஸ்காரம், சுபாவம், பேச்சு, அல்லது தொடர்பு யதார்த்தமாக இல்லாமல் வீணானதாக உள்ளதோ, அந்த வீணானதை மாற்றுவதற்கான மெஷினரியை வேகப் படுத்துங்கள். யோசித்ததும் அதைச் செய்து விட வேண்டும். அப்போது உலக மாற்றத்தின் மெஷினரி வேகமாகும். இப்போது ஸ்தாபனைக்கு நிமித்தமாகியுள்ள ஆத்மாக்களின் யோசிப்பது மற்றும் செய்வதில் வித்தியாசம் காணப்படுகிறது. இந்த வித்தியாசத்தைப் போக்குங்கள். அப்போது சுயமாற்றம் செய்பவரில் இருந்து உலக மாற்றம் செய்பவராக ஆக முடியும்.

சுலோகன்:

ஸ்லோகன்: யார் தமது வாழ்க்கையில் அனுபூதியைப் பரிசாக அடைந்திருக்கிறாரோ, அவர் தாம் அனைவரிலும் அதிர்ஷ்டசாலி ஆவார்.