24.05.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ் 15.01.1986 மதுபன்


  

மலிவான வியாபார ஒப்பந்தம் மற்றும் சேமிப்பிற்கான பட்ஜெட்

 

இரத்தின வியாபாரி பாபா தம்முடைய பெரியதிலும் பெரிய வியாபார ஒப்பந்தம் செய்யக்கூடிய வியாபாரிகளாகிய குழந்தைகளைப் பார்த்துப் புன்சிரித்துக் கொண்டு இருக்கிறார். வியாபாரம் எவ்வளவு பெரியது மற்றும் அதைச் செய்கிற வியாபாரிகள் உலகில் எவ்வளவு சாதாரணமாக, வெகுளியாக இருக்கிறார்கள்! பகவானோடு வியாபாரம் செய்யக்கூடிய எந்த ஆத்மாக்கள் பாக்கியவான் ஆகிறார்கள்? இதைப் பார்த்துப் புன்சிரித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பிறவியில் செய்யப்படும் இந்த வியாபாரம் 21 பிறவிகளுக்கு சதா செல்வந்தர் ஆக்குமளவுக்கு அவ்வளவு பெரியதாக உள்ளது. கொடுப்பது என்ன மற்றும் பெறுவது என்ன? அளவற்ற பல மடங்கு வருமானம் அல்லது பல மடங்கு வியாபாரத்தை எவ்வளவு சுலபமாகச் செய்கிறீர்கள்! வியாபாரம் செய்வதற்கு உண்மையில் ஒரு விநாடி தான் ஆகிறது. மேலும் எவ்வளவு மலிவான வியாபாரம் செய்தீர்கள்! ஒரு விநாடியில் மற்றும் ஒரு வார்த்தையில் வியாபாரம் செய்து முடித்து விட்டீர்கள் என்னுடைய பாபா என்று... மனதால் ஏற்றுக் கொண்டீர்கள், இந்த ஒரு வார்த்தை மூலம் இவ்வளவு பெரிய அளவற்ற கஜானாவுக்கான வியாபாரம் செய்து விடுகிறீர்கள்! மலிவான வியாபாரம் இல்லையா? கடின உழைப்பும் இல்லை, அதிக விலையும் இல்லை. நேரத்தைச் செலவழிக்கவும் தேவை இல்லை. வேறு எந்த ஒரு எல்லைக்குட்பட்ட வியாபாரமும் செய்தால் எவ்வளவு நேரம் செலவாகிறது! கடினமாக உழைக்கவும் வேண்டி உள்ளது. மேலும் விலைவாசியும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதுவும் எது வரை நடைபெறும்? ஒரு பிறவிக்கும் கூட கேரண்டி இல்லை. ஆக, இப்போது சிரேஷ்ட வியாபாரம் செய்து விட்டீர்களா, அல்லது இப்போது செய்யலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பக்கா வியாபாரம் செய்து விட்டீர்கள் இல்லையா? பாப்தாதா தம்முடைய வியாபாரிக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். வியாபாரிகளின் பட்டியலில் யார்-யார் புகழ் பெற்றவர்கள்? உலக மனிதர்களும் புகழ் பெற்றவர்களின் பட்டியலைத் தயாரிக்கின்றனர் இல்லையா? விசேஷ டைரக்டரியும் தயார் செய்கின்றனர். பாபாவின் டைரக்டரியில் யார்-யாருடைய பெயர்கள் உள்ளன? யார் மீது உலக மனிதர்களின் பார்வை செல்வதில்லையோ, அவர்கள் தாம் பாபாவுடன் வியாபாரம் செய்துள்ளனர் மற்றும் பரமாத்ம கண்களின் நட்சத்திரங்களாக ஆகி விட்டனர், கண்ணின் மணிகளாக ஆகி விட்டனர். நம்பிக்கையிழந்த ஆத்மாக்களை விசேஷ ஆத்மாக்களாக ஆக்கி விட்டார். அந்த மாதிரி நஷா (போதை) சதா உள்ளதா? பரமாத்ம டைரக்டரியின் விசேஷ வி..பி. நாம், அதனால் தான் கள்ளம்-கபடமற்றவர்களின் பகவான் எனப் பாடப் பட்டுள்ளார். சாமர்த்திய சாலிகளும் உள்ளனர், ஆனால் கள்ளம்-கபடற்றவர்களைத் தான் அவருக்குப் பிடித்திருக்கிறது. உலகத்தின் வெளிப்புற சாமர்த்தியம் பாபாவுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்குக் கலியுகத்தில் இராஜ்யம். அங்கே அவ்வப்போது லட்சாதிபதி, அவ்வப்போது ஒன்றுமில்லாதவர். ஆனால் நீங்கள் அனைவரும் சதா காலத்திற்கான பத்மாபதம்பதி (பல கோடிக்கு அதிபதி) ஆகி விடுகிறீர்கள். பயத்தின் இராஜ்யம் இல்லை. பயமற்றது.

 

இன்றைய உலகில் செல்வமும் உள்ளது, பயமும் உள்ளது. எவ்வளவு செல்வம் உள்ளதோ, அவ்வளவு பயத்திலேயே தான் உண்ணுகின்றனர், பயத்திலேயே தான் உறங்குகின்றனர். ஆனால் நீங்கள் கவலையற்ற மகாராஜா ஆகி விடுகிறீர்கள். பயமற்றவர்களாக ஆகி விடுகிறீர்கள். பயம் என்பது பூதம் என்றும் சொல்லப் படுகிறது. நீங்கள் அந்த பூதத்திடம் இருந்தும் விடுபட்டு விடுகிறீர்கள். ஏதாவது பயம் உள்ளதா? எங்கே எனது என்பது உள்ளதோ, அங்கே பயம் இருக்கும். மேரா பாபா (என்னுடைய பாபா). ஒரு சிவபாபா மட்டுமே பயமற்றவராக ஆக்குபவர். அவரைத் தவிர வேறு எந்த ஒரு தங்க மானாக இருந்தாலும் அது எனது என்றால் பயம் தான். ஆகவே சோதித்துப் பாருங்கள், எனது-எனது என்ற சம்ஸ்காரம் பிராமண வாழ்க்கையில், எந்த ஒரு சூட்சும ரூபத்திலும் இருந்து விடவில்லையே? வெள்ளி விழா, பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? வெள்ளியாக இருந்தாலும் தங்கமாக இருந்தாலும் அதை நெருப்பிட்டு, கலப்படத்தை நீக்கினால் தான் உண்மையானதாக ஆகும். உண்மையான வெள்ளி விழா, உண்மையான பொன்விழா இல்லையா? ஆக, விழாக் கொண்டாடுவதற்காக உண்மையான வெள்ளி, உண்மையான தங்கம் ஆகத்தான் வேண்டும். வெள்ளி விழாக் கொண்டாடுபவர்கள் வெள்ளி தான் என்பதில்லை. இதுவோ வருடங்களின் கணக்கின் படி வெள்ளி விழா எனச் சொல்கிறீர்கள். ஆனால் அனைவரும் பொன்யுகத்தின் அதிகாரி, பொன்யுகத்தினர். ஆகவே சோதித்துப் பாருங்கள், உண்மையான தங்கமாக எது வரை ஆகியிருக்கிறீர்கள்? வியாபாரமோ செய்திருக்கிறீர்கள், ஆனால் வந்ததை உடனே சாப்பிட்டு விட்டீர்கள் என்று அந்த மாதிரி இல்லையே? 21 தலைமுறைகளுக்கு சதா அனைத்தும் நிறைந்தவர்களாக இருக்குமளவு சேமித்திருக்கிறீர்களா? உங்கள் வம்சாவளியும் கூட மிகப்பெரும் செல்வந்தர்களாக இருக்க வேண்டும். 21 பிறவிகள் மட்டுமில்லை, ஆனால் துவாபரயுகத்திலும் கூட பக்த ஆத்மாக்களாக இருக்கும் காரணத்தால் எந்த ஒரு குறைவும் இருக்காது. அவ்வளவு செல்வம் துவாபரயுகத்திலும் இருக்கும் -- அதைக் கொண்டு தான-புண்ணியம் நன்கு செய்ய முடியும். கலியுகத்தின் கடைசியிலும் பாருங்கள், கடைசிப் பிறவியிலும் கூட பிச்சைக்காரர்களாக ஆகவில்லை தானே? இச்சமயத்தின் வருமானம் அல்லது வியாபாரம் முழுக் கல்பத்திலும் உங்களைப் பிச்சைக்காரராக ஆக்கி விடாது. அவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறீர்கள் -- கடைசிப் பிறவியிலும் கூட பருப்பு-ரொட்டி சாப்பிடுகிறீர்கள். இவ்வளவு சேமிப்பின் கணக்கு வைத்திருக்கிறீர்களா? பட்ஜெட் தயாரிப்பதற்கு வருகிறதா? சேமிப்பதில் சாமர்த்தியசாலிகள் தாம் இல்லையா? இல்லையென்றால் 21 பிறவிகளுக்கு என்ன செய்வீர்கள்? வருமானம் சம்பாதிப்பவர்களாக ஆவீர்களா அல்லது இராஜ்ய அதிகாரி ஆகி இராஜ்யம் செய்வீர்களா? இராயல் குடும்பத்திற்கு சம்பாதிப்பதற்கான அவசியம் இருக்காது. பிரஜைகள் சம்பாதிக்க வேண்டியதிருக்கும். அதிலும் நம்பர் உள்ளது. பணக்காரப் பிரஜை மற்றும் சாதாரணப் பிரஜை. ஏழையோ இருக்கவே மாட்டார்கள். ஆனால் இராயல் குடும்பம், புருஷார்த்தத்தின் பிராலப்தமாக இராஜ்யத்தை அடைவார்கள். பல பிறவிகளாக இராயல் குடும்பத்தின் அதிகாரி ஆகிறார்கள். இராஜ்ய சிம்மாசனத்தின் அதிகாரி ஒவ்வொரு ஜென்மத்திலும் ஆவதில்லை, ஆனால் இராயல் குடும்பத்தின் அதிகாரத்தை பல பிறவிகளுக்கு அடைகிறார்கள். ஆக, என்னவாக ஆவீர்கள்? இப்போது பட்ஜெட்டை உருவாக்குங்கள். பட்ஜெட்டின் திட்டத்தைத் தயார் செய்யுங்கள். இப்போதைய உலகத்தில் வீணானவற்றிலிருந்து சிறந்தவற்றை உருவாக்குகின்றனர். வீணானவற்றைத் தான் சேமிக்கின்றனர். ஆகவே நீங்கள் அனைவரும் கூட பட்ஜெட்டின் கணக்கை சதா ஸ்மிருதியில் வையுங்கள். பட்ஜெட் தயார் செய்யுங்கள். சங்கல்ப சக்தி, வாய்மொழியின் சக்தி, கர்மத்தின் சக்தி, சமயத்தின் சக்தி இவற்றை எப்படி எங்கே காரியத்தில் ஈடுபடுத்துவது? இத்தனை சக்திகளும் வீணாகிப் போகின்றன என்று இருக்கக் கூடாது. சங்கல்பம் கூட சாதாரணமானது என்றால், வீணானது என்றால் வீணானது மற்றும் சாதாரணம் இரண்டும் சேமிப்பு கிடையாது. ஆனால் இழந்து விட்டீர்கள். நாள் முழுவதிலும் தனது சார்ட்டை உருவாக்குங்கள். இந்த சக்திகளைக் காரியத்தில் ஈடுபடுத்தி எந்த அளவுக்கு அதிகரிக்கச் செய்தீர்கள்? ஏனென்றால் எவ்வளவு காரியத்தில் ஈடுபடுத்துவீர்களோ, அவ்வளவு சக்தி அதிகரிக்கும். அனைவரும் அறிந்திருக்கிறீர்கள், சங்கல்ப சக்தி உள்ளது என்று, ஆனால் காரியத்தில் ஈடுபடுத்துவதற்கான அப்பியாசம் -- இதில் நம்பர்வார் உள்ளனர். சிலர் பிறகு காரியத்திலும் ஈடுபடுத்துவதில்லை, பாவ காரியத்திலும் இழப்பதில்லை. ஆனால் சாதாரண தினசரி நடவடிக்கையில் சம்பாதிக்கவும் இல்லை, இழக்கவும் இல்லை. சேமிப்போ ஆகவில்லை இல்லையா? சாதாரண சேவையின் தினச்சரியா அல்லது சாதாரண செயல்பாடுகளின் தினச்சரியாவை பட்ஜெட் கணக்கு சேமிப்பானதாகச் சொல்ல மாட்டார்கள். தங்கள் சக்திக்கேற்றவாறு சேவையும் செய்தோமா, படிப்பையும் படித்தோமா என்பதை மட்டுமே சோதிக்காதீர்கள். யாருக்கும் துக்கம் தராமல் இருந்தோமா? எந்த ஒரு தலைகீழான காரியமும் செய்யாதிருந்தோமா? ஆனால் துக்கம் தராமல் இருந்த நாம் சுகம் கொடுத்தோமா? எவ்வளவு மற்றும் எத்தகைய சக்திசாசேவை செய்ய வேண்டுமோ, அவ்வளவு செய்தோமா? எப்படி பாப்தாதா சதா வழிகாட்டுதல் (டைரக்ஷன்) கொடுக்கிறார், நான், எனது என்பதைத் தியாகம் செய்வது தான் உண்மையான சேவை. அந்த மாதிரி சேவை செய்தோமா? தலைகீழான வார்த்தைகளைப் பேசவில்லை, ஆனால் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிற மாதிரி வார்த்தையைப் பேசினோமா? தைரியமற்றவர்களை தைரியசாலி ஆக்கி னோமா? குஷியின் ஊக்கம்-உற்சாகத்தில் யாரையாவது கொண்டு வந்தோமா? இது தான் சேமிப்பதாகும், சிக்கனம் மேற்கொள்வதாகும். அது போலவே இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் கடந்து விட்டது என்றால் அது சேமிப்பாகாது. அனைத்து சக்திகளையும் சிக்கனம் செய்து சேமித்து வையுங்கள். அந்த மாதிரி பட்ஜெட் தயார் செய்யுங்கள். இந்த வருடம் பட்ஜெட் தயாரித்துக் காரியம் செய்யுங்கள். ஒவ்வொரு சக்தியையும் எப்படிக் காரியத்தில் ஈடுபடுத்துவது என்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். உலகத்தின் ஒவ்வொரு ஆத்மாவும் ஏதேனும் பிராப்தியடைந்து உங்களது குணத்தைப் புகழ்ந்து பாடுகிற மாதிரி ஈஸ்வரிய பட்ஜெட்டை உருவாக்குங்கள். அனைவருக்கும் எதையாவது கொடுக்கத் தான் வேண்டும். முக்தி கொடுங்கள், அல்லது ஜீவன்முக்தி கொடுங்கள். மனித ஆத்மாக்களை மட்டுமென்ன, இயற்கையையும் கூட பாவனமாக்குகின்ற சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரிய பட்ஜெட், அதாவது சர்வ ஆத்மாக்களும், இயற்கையோடு கூடவே பாவனமாகி விடுகின்றனர். அந்த அரசாங்கத்தினர் பட்ஜெட் தயாரிக்கின்றனர் -- அதாவது இவ்வளவு தண்ணீர் கொடுப்போம். இவ்வளவு வீடுகள் கொடுப்போம். இவ்வளவு மின்சாரம் கொடுப்போம். நீங்கள் என்ன பட்ஜெட் தயாரிக்கிறீர்கள்? அனைவருக்கும் அநேகப் பிறவிகள் வரை முக்தி, ஜீவன்முக்தி கொடுப்போம். பிச்சைக்கார நிலையிலிருந்து, துக்கம், அசாந்தியிலிருந்து விடுவிப்போம். அரைக்கல்பம் ஓய்வாக இருப்போம். அவர்களின் ஆசையோ நிறை வேறவே செய்யும். இவர்களோ முக்தி தான் வேண்டுகின்றனர் இல்லையா? முக்தி பற்றித் தெரியாது, ஆனால் வேண்டுதல் வைக்கின்றனர் இல்லையா? ஆகவே தனக்காகவும் உலகத்திற்காகவும் ஈஸ்வரிய பட்ஜெட் தயார் செய்யுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? வெள்ளிவிழா மற்றும் பொன்விழா இதே வருடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆகவே இது மகத்துவமான வருடமாகும். நல்லது.

 

சதா சிரேஷ்ட வியாபாரத்தை நினைவில் வைக்கக் கூடிய, சதா சேமிப்புக் கணக்கை அதிகப் படுத்தக் கூடிய, சதா ஒவ்வொரு சக்தியையும் காரியத்தில் ஈடுபடுத்தி, விருத்தியை ஏற்படுத்தக் கூடிய, சதா சமயத்தின் மகத்துவத்தை அறிந்து, மகான் ஆகக்கூடிய மற்றும் ஆக்கக்கூடிய. அத்தகைய சிரேஷ்ட செல்வந்தர்கள், சிரேஷ்ட புத்திசாகளாகிய குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

 

குமார்களுடன் : குமார் வாழ்க்கையும் கூட அதிர்ஷ்டசாவாழ்க்கை தான். ஏனென்றால் தலைகீழான ஏணியில் ஏறுவதில் இருந்து தப்பித்துக் கொண்டீர்கள். தலைகீழான ஏணியில் ஏறுவதற்கான சங்கல்பம் ஒரு போதும் வருவதில்லை. ஏறுகிறவர்களும் இறங்கிக் கொண்டுள்ளனர். இல்லறவாசிகள் அனைவருமே கூடத் தங்களைக் குமார்-குமாரி எனச் சொல்லிக் கொள்கின்றனர் இல்லையா? ஆக, ஏணியில் இறங்கினார்கள் இல்லையா? ஆகவே சதா தன்னுடைய இந்த சிரேஷ்ட பாக்கியத்தை நினைவில் வையுங்கள். குமார் வாழ்க்கை என்றால் பந்தனங்களில் இருந்து தப்புவதற்கான வாழ்க்கை. இல்லையென்றால் பாருங்கள், எத்தனை பந்தனங்களில் உள்ளனர்! ஆக, பந்தனங்களில் ஈர்க்கப்படுவதில் இருந்து தப்பித்து விட்டனர். மனதாலும் சுதந்திரம், சம்மந்தத் தாலும் சுதந்திரம். குமார் வாழ்க்கை என்றாலே சுதந்திரமானது. ஒரு போதும் கனவில் கூட சிந்தனை வருவதில்லை -- கொஞ்சம் யாராவது சகயோகி கிடைத்து விட வேண்டும், யாராவது துணை கிடைத்து விட வேண்டும். நோயில் உதவி ஆகி விட வேண்டும் -- இது போல் எப்போதாவது யோசிக்கிறீர்களா? முற்றிலும் சிந்தனை வருவதில்லையா? குமார் வாழ்க்கை என்றால் சதா பறக்கும் பறவை, பந்தனத்தில் சிக்கிய நிலையில் இல்லை. ஒரு போதும் எந்த ஒரு சங்கல்பமும் வரக் கூடாது. சதா நிர்பந்தனமாகி, தீவிர வேகத்தில் முன்னேறிச் செல்லுங்கள். குமாரிகளுடன்: குமாரிகளுக்கு சேவையில் முன்னேறுவதற்கான லிஃப்ட் கிடைத்துள்ளது. இந்த லிஃப்ட் தான் உயர்ந்த கிஃப்ட். இந்த கிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்கு வருகிறது இல்லையா? எவ்வளவு தன்னை சக்திசாலி ஆக்குவீர்களோ, அவ்வளவு சேவையும் கூட சக்திசாலியாகச் செய்வீர்கள் தானே! ஏதாவது விஷயத்தில் பலவீனமாக இருப்பீர்களானால் சேவையும் பலவீனமாக இருக்கும். எனவே சக்திசாலி ஆகி, சக்திசாலி சேவாதாரி ஆகுங்கள். அந்த மாதிரி ஏற்பாடுகளைச் செய்து கொண்டே செல்லுங்கள். அப்போது சமயம் வரும் போது வெற்றிப் பூர்வமாக சேவையில் ஈடுபட்டு விடுங்கள் மற்றும் நம்பர் முன்னால் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போதோ படிப்பிற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. பிறகோ ஒரு வேலை மட்டுமே இருக்கும். எனவே எங்கே இருந்தாலும் பயிற்சி எடுத்துக் கொண்டே இருங்கள். நிமித்தமாகியுள்ள ஆத்மாக்களின் துணையில் ஏற்பாடுகள் செய்து கொண்டே இருங்கள். அப்போது தகுதியுள்ள சேவாதாரி ஆகி விடுவீர்கள். எவ்வளவு முன்னேறிச் செல்கிறீர்களோ, அவ்வளவு தனக்குத் தான் நன்மை.

 

சேவாதாரி - டீச்சர் சகோதரிகளுடன் : சேவாதாரி என்றால் சதா நிமித்தமாக இருப்பவர். நிமித்த உணர்வு சேவையில் தானாகவே வெற்றியை உருவாக்கும். நிமித்த உணர்வு இல்லை என்றால் வெற்றி இல்லை. சதா பாபாவுடைவர்களாக இருந்தீர்கள், பாபாவுடையவர்களாக இருக்கிறீர்கள், இனியும் பாபாவுடையவர்களாகவே இருப்பீர்கள் - அந்த மாதிரி உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? சேவாதாரி என்றால் ஒவ்வொரு அடியும் பாபாவின் அடி மீது வைப்பவர்கள். இதைத் தான் தந்தையைப் பின்பற்றுவது எனச் சொல்வது. நீங்கள் ஒவ்வொரு அடியிலும் சிரேஷ்ட வழிப்படி சிரேஷ்டமாக ஆக்குகிற சேவாதாரிகள் தாம் இல்லையா? சேவையில் வெற்றி பெறுவது தான் சேவாதாரியின் சிரேஷ்ட லட்சியம். ஆக, அனைவரும் சிரேஷ்ட லட்சியம் வைப்பவர்கள் தாம் இல்லையா? எவ்வளவு சேவையில் மற்றும் சுயத்தில் வீணானவை முடிந்து போகின்றனவோ, அவ்வளவு தான் சுயம் மற்றும் சேவை சக்திசாலி ஆகி ன்றது. ஆகவே வீணானவற்றை முடித்து விட்டு சதா சக்திசாலிஆக வேண்டும். இது தான் சேவாதாரிகளின் சிறப்பு. எவ்வளவு சுயம் நிமித்தமாகியிருக்கும் ஆத்மாக்கள் சக்திசாலியாக இருப்பார்களோ, அவ்வளவு சேவையும் கூட சக்திசாலியாக இருக்கும். சேவாதாரி என்பதன் அர்த்தமே சேவையில் சதா ஊக்கம்-உற்சாகத்தைக் கொண்டு வருவதாகும். சுயம் ஊக்கம்- உற்சாகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு ஊக்கம்-உற்சாகம் கொடுக்க முடியும். ஆகவே சதா பிரத்தியட்ச ரூபத்தில் ஊக்கம்-உற்சாகம் தென்பட வேண்டும். நான் உள்ளேயே இருக்கிறேன், ஆனால் வெளிப்புறத்தில் காணப்படவில்லை என்று அந்த மாதிரி இல்லை. குப்த புருஷார்த்தம் என்பது வேறு பொருள், ஆனால் ஊக்கம்-உற்சாகம் மறைந்திருக்க முடியாது. முகத்தின் மீது சதா ஊக்கம்-உற்சாகத்தின் பொலிவு தானாகவே தென்படும். சொன்னாலும் சரி, சொல்லா விட்டாலும் சரி, முகமே பேசும், முகத்தின் ஜொலிப்பு பேசும். அந்த மாதிரி சேவாதாரி தானே?

 

சேவைக்கான பொன்னான வாய்ப்பு, இதுவும் சிரேஷ்ட பாக்கியத்தின் அடையாளமாகும். சேவாதாரி ஆவதற்கான பாக்கியமோ கிடைத்து விட்டது. இந்த பாக்கியத்தையும் உருவாக்க வேண்டும் மற்றும் இப்போது நாம் சேவாதாரி நம்பர் ஒன்னா அல்லது நம்பர் டூவா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு பாக்கியம் மட்டுமன்று, ஆனால் பாக்கியத்தின் மேல் பாக்கியம் பிராப்தியாகின்றது. எவ்வளவு பாக்கியத்தை அடையச் செய்து கொண்டே செல்கிறீர்களோ, அவ்வளவு நம்பர் தானாகவே முன்னால் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதைத் தான் பத்மாபதம் பாக்கியவான் எனச் சொல்வது. ஒரு பாடத்தில் மட்டுமில்லை, அனைத்துப் பாடங்களிலும் வெற்றி சொரூபம். நல்லது.

 

2. அனைவரிலும் அதிகக் குஷி யாருக்கு உள்ளது? பாபாவுக்கா, உங்களுக்கா? எனக்கு என்று ஏன் நீங்கள் சொல்வதில்லை? துவாபரயுகத்திலிருந்து பக்தியில் அழைத்தீர்கள் மற்றும் இப்போது அடைந்து விட்டீர்கள் என்றால் எவ்வளவு குஷி இருக்கும்! 63 பிறவிகளாக அடைவதற்கான ஆசை இருந்தது மற்றும் 63 பிறவிகளின் ஆசை இப்போது நிறைவடைந்து விட்டது என்றால் குஷி உள்ளது இல்லையா? இந்தக் குஷி தான் உலகத்திற்குக் குஷி கொடுப்பதாகும். நீங்கள் குஷியடைகிறீர்கள் என்றால், முழு உலகமும் குஷி அடைந்து விடுகிறது. அந்த மாதிரி குஷி கிடைத்துள்ளது இல்லையா? எப்போது நீங்கள் மாறுகிறீர்களோ, அப்போது உலகமும் மாறி விடுகிறது. அதுவும் -- துக்கம்-அசாந்தியின் பெயர்-அடையாளமே இல்லை என்கிற மாதிரி மாறி விடுகிறது. ஆகவே சதா குஷியில் நடனமாடிக் கொண்டே இருங்கள். சதா தன்னுடைய சிரேஷ்ட கர்மங்களின் கணக்கைச் சேமித்துக் கொண்டே செல்லுங்கள். அனைவர்க்கும் குஷியின் கஜானாவைப் பகிர்ந்தளியுங்கள். இன்றைய உலகத்தில் குஷி இல்லை. அனைவரும் குஷிக்காக யாசிப்பவர்கள் தாம். அவர்களைக் குஷியினால் நிரப்புங்கள். சதா இதே சேவையில் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். மனச்சோர்வடைந்துள்ள ஆத்மாக்களுக்குள் ஊக்கம்-உற்சாகத்தைக் கொண்டு வந்து கொண்டே இருங்கள். எதையும் செய்ய முடியவில்லை, இது நடக்க முடியாது இது போல் மனச்சோர்வடைந்தவராக அவர்கள் ஆகிவிட்டுள்ளனர், ஆனால் நீங்கள் வெற்றியாளர் ஆகி, வெற்றியாளர் ஆக்குவதற்கான ஊக்கம்-உற்சாகத்தை அதிகப் படுத்துபவர்கள். சதா வெற்றியின் ஸ்மிருதி யினுடைய திலகம் அணிந்தவராக இருக்க வேண்டும். திலகதாரியும் கூட, மற்றும் சுயராஜ்ய ஆதிகாரியும் கூட -- இதே ஸ்மிருதியில் சதா இருங்கள்.

 

கேள்வி

சமீப நட்சத்திரங்களின் லட்சணம் என்னவாக இருக்கும்?

 

பதில்:

அவர்களிடம் சமநிலை காணப்படும். சமீப நட்சத்திரங்களிடம் பாப்தாதாவின் குணங்கள் மற்றும் காரியம் பிரத்தியட்சமாகக் காணப்படும். எவ்வளவு சமீபமோ, அவ்வளவு சமநிலை இருக்கும். அவர்களின் முகம் பாப்தாதாவின் சாட்சாத்காரம் செய்விக்கும் கண்ணாடியாக இருக்கும். அவர்களைப் பார்த்ததுமே பாப்தாதாவின் அறிமுகம் கிடைத்து விடும். உங்களைப் பார்க்கும் போது அவர்களுக்குக் கவர்ச்சி பாப்தாதாவின் பக்கம் இருக்கும். மகன் தந்தையை எடுத்துக் காட்டுவான் எனச் சொல்லப் படுவது இது தான். நீங்கள் யார் மீது அன்பு வைத்தாலும் அதன் முத்திரையானது நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் காணப்படும். எவ்வளவு புன்சிரித்த மூர்த்தியோ, அவ்வளவு கவர்ச்சி மூர்த்தி ஆகி விடுவீர்கள். நல்லது.

 

வரதானம் :

சேவையின் மூலம் அநேக ஆத்மாக்களின் ஆசீர்வாதம் பெற்று, சதா முன்னேறக்கூடிய மகாதானி ஆகுக.

 

மகாதானி ஆவது என்றால், மற்றவர்களுக்கு சேவை செய்வது. மற்றவர்களுக்கு சேவை செய்தால் தன்னுடைய சேவை தானாகவே நடந்து விடுகிறது. மகாதானி ஆவது என்றால் தன்னைப் பெரும் செல்வந்தர் ஆக்கிக் கொள்வது. எவ்வளவு ஆத்மாக்களுக்கு சுகம், சாந்தி மற்றும் ஞானத்தின் தானம் செய்வீர்களோ, அந்த அளவு ஆத்மாக்களின் பிராப்தியின் சப்தம் அல்லது நன்றி வெளிப்படுகிறது. அது உங்களுக்கு ஆசிர்வாதத்தின் ரூபம் ஆகி விடும். இந்த ஆசீர்வாதங்கள் தாம் முன்னேறுவதற்கான சாதனமாகும். யாருக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றனவோ, அவர்கள் சதா குஷியாக இருப்பார்கள். ஆகவே தினந்தோறும் அமிர்தவேளையில் மகாதானி ஆவதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். தானம் செய்யாத நேரம் அல்லது நாள் என்று எதுவும் இருக்கக் கூடாது.

 

சுலோகன்:

இப்போதைய பிரத்தியட்ச பலன், ஆத்மாவுக்கு பறக்கும் கலையின் பலனைக் கொடுக்கும்.

 

ஓம்சாந்தி