24.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு ஞான ரத்தினங்களைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறார். பாபா உங்களுக்கு என்ன கூறுகின்றாரோ அல்லது புரிய வைக்கின்றாரோ அதுவே ஞானம் ஆகும். ஞானக் கடலைத் தவிர வேறு யாரும் ஞான ரத்தினங்களைக் கொடுக்க முடியாது.

 

கேள்வி :

ஆத்மாவின் மதிப்பு குறைந்தமைக்கு முக்கிய காரணம் என்ன ?

 

பதில்:

துருபிடித்தமையால் மதிப்பு குறைந்துக் கொண்டே போகிறது. தங்கத்தில் கலப்படம் சேர்த்து நகைகளை உருவாக்கும் போது அதனுடைய மதிப்பு குறைகிறது. அவ்வாறே ஆத்மா உண்மையான தங்கமாக இருக்கிறது. அதில் அசுத்தத்தின் கலப்படம் சேரும் (தூய்மை இழக்கும்) போது அதனுடைய மதிப்பு குறைந்து போகிறது. இச்சமயம் தமோபிரதான ஆத்மாவிற்கு எந்த மதிப்பும் இல்லை. உடலுக்கும் எந்த மதிப்பும் இல்லை. இப்போது உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே நினைவினால் மதிப்புடையதாக மாறிக் கொண்டிருக்கின்றது.

 

பாடல் : இன்று யார் வந்தது அதிகாலையில்...

 

ஓம் சாந்தி.

இனிமையயிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். மேலும் நினைப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் அமர்ந்திருக் கிறார்கள். குழந்தைகளுக்குள் கள்ளம் கபடம் அற்ற சிவ தந்தை வந்திருக்கிறார். அரை மணி நேரம் அமைதியில் உட்கார்ந்து விட்டார்கள். எதுவும் பேசவில்லை. உங்களுக்குள், சிவபாபா ஏதாவது கொஞ்சம் பேச வேண்டும் என ஆத்மா கூறுகிறது. சிவபாபா வீற்றிருக்கிறார். ஆனால் பேச வில்லை என தெரிகிறது. இதுவும் உங்களுடைய நினைவு யாத்திரை அல்லவா! புத்தியில் சிவபாபாவின் நினைவிருக்கிறது. உள்ளுக்குள் பாபா ஏதாவது பேச வேண்டும், ஞான ரத்தினங்களைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞான ரத்தினங்களைக் கொடுப்பதற்காக பாபா வந்திருக்கிறார். அவர் ஞானக்கடல் அல்லவா ! குழந்தைகளே ஆத்ம அபிமானி ஆகுங்கள். தந்தையை நினையுங்கள் என கூறுகிறார். இது ஞானமாகி விட்டது. இந்த நாடக சக்கரத்தை, ஏணிப்படியை மற்றும் தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். இது ஞானம் ஆகிவிட்டது. பாபா என்ன புரிய வைக்கின்றாரோ அதை ஞானம் என்கிறார்கள். நினைவு யாத்திரையைக் கூட புரிய வைத் திருக்கிறார்கள். இது அனைத்தும் ஞான ரத்தினங்கள் ஆகும். நினைவிற்காக என்ன புரிய வைக்கின்றாரோ இந்த ரத்தினங்கள் மிக உயர்ந்தது. தன்னுடைய 84 பிறவிகளை நினையுங்கள் என தந்தை கூறுகிறார். நீங்கள் தூய்மையாக வந்தீர்கள். மீண்டும் தூய்மையாகித் தான் போக வேண்டும். கர்மாதீத நிலைக்குப் போக வேண்டும். மேலும் தந்தையிடமிருந்து முழு சொத்தும் அடைய வேண்டும். ஆத்மா நினைவின் சக்தியினால் சதோபிர தானமாகும் போது அது கிடைக்கும். இந்த வார்த்தைகள் மிகவும் விலை மதிப்பற்றது. குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஆத்மாவில் தான் தாரணை ஆகிறது. இந்த சரீரம் ஒரு உறுப்பாகும். அது அழிந்து போகின்றது. நல்ல சம்ஸ்காரமோ அல்லது கெட்டதோ ஆத்மாவில் பதிவாகிறது. பாபாவிற்குள் சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானம் நிறைந்திருக்கிறது. ஆகவே அவருக்கு நாலெட்ஜ்ஃபுல் என்று பெயர். பாபா 84-ன் சக்கரம் மிகவும் எளிது என சரியாகப் புரிய வைக்கின்றார். இப்போது 84- பிறவி சக்கரம் நிறைவடைகிறது. இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பி தந்தையிடம் போக வேண்டும். அழுக்கான ஆத்மா அங்கே போக முடியாது. உங்களுடைய ஆத்மா தூய்மையாகிவிடுகிறது என்றால், பிறகு சரீரத்தை விட்டு விடும். தூய்மையான உடல் இங்கே கிடைக்காது. இது பழைய செருப்பாகும். இதன் மீது வைராக்கியம் வந்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா தூய்மையாகி பிறகு எதிர் காலத்தில் நாம் தூய்மையான உடலை எடுக்க வேண்டும். சத்யுகத்தில் ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையாக இருந்தது. இச்சமயம் உங்களுடைய ஆத்மா அசுத்தமாகி விட்டது. சரீரமும் அசுத்தமாக இருக்கிறது. தங்கத்தின் தரத்தைப் போன்று நகை இருக்கும். அரசாங்கம் கூட சாதரண (தூய்மை இழந்து) தங்கத்தின் நகையை அணியுங்கள் என்று கூறுகிறது. அதனுடைய விலை குறைவாகும். இப்போது உங்களுடைய ஆத்மாவின் மதிப்பு குறைவாக இருக்கிறது. அங்கே உங்களுடைய ஆத்மாவிற்கு எவ்வளவு மதிப்பிருக்கிறது. சதோபிரதானமாக இருக்கிறது அல்லவா ! இப்போது தமோபிரதானமாக இருக்கிறது. துரு பிடித்து விட்டது. எதற்கும் பயனற்றதாக இருக்கிறது. அங்கே ஆத்மா தூய்மையாக இருக்கிறது. அதற்கு மதிப்பு அதிகம். இப்போது 9 காரட் ஆகிவிட்டது. எனவே மதிப்பில்லை. ஆகவே ஆத்மாவை தூய்மையாக்கினால் தான் உடலும் தூய்மையாகக் கிடைக்கும் என பாபா கூறுகிறார். இந்த ஞானத்தை வேறு யாரும் கொடுக்க முடியாது.

 

என்னை மட்டும் நினையுங்கள் என பாபா தான் கூறுகின்றார். கிருஷ்ணர் எப்படிக் கூறுவார். அவர் தேகத்தை உடையவர் அல்லவா? தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகின்றார். எந்த தேகதாரியையும் நினைக்காதீர்கள். இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்றால் பிறகு மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். சிவபாபா நிராகாரர் ஆவார். அவருடைய பிறப்பு அலௌகீக மானதாகும். குழந்தைகளாகிய உங்களுக்கும் அலௌகீக பிறப்பு கொடுக்கிறார். அலௌகீக தந்தை, அலௌகீக குழந்தைகள். லௌகீகம், பாரலௌகீகம் மற்றும் அலௌகீகம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு அலௌகீக பிறப்பு கிடைக்கிறது. தந்தை உங்களைத் தத்தெடுத்து ஆஸ்தி கொடுக்கிறார். பிராமணர்களாகிய நமக்கும் அலௌகீக பிறப்பு என நீங்கள் அறிகிறீர்கள். அலௌகீக தந்தையிடமிருந்து அலௌகீக சொத்து கிடைக்கிறது. பிரம்மா குமார் குமாரிகளைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்திற்கு அதிபதி ஆக முடியாது. மனிதர்கள் எதையும் புரிந்துக் கொள்ள வில்லை. பாபா உங்களுக்கு எவ்வளவு புரிய வைக்கின்றார். தூய்மையின்றி இருக்கக் கூடிய ஆத்மா தந்தையை நினைக்காமல் தூய்மையாக முடியாது. நினைக்க வில்லை என்றால் துரு அப்படியே இருக்கும். தூய்மையாகவில்லை என்றால் தண்டனைகள் கிடைக்கும். முழு உலகில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் தூய்மையாகி திரும்பப் போக வேண்டும். உடல் போக முடியாது. தன்னை ஆத்மா என்று உணர்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது என பாபா கூறுகின்றார். தொழில் செய்யும் போது அந்த மனநிலை (உணர்வு) இருப்பதில்லை. தன்னை ஆத்மா என்று நினைக்கவில்லை என்றாலும் சிவபாபாவையாவது நினையுங்கள் என்று பாபா கூறுகின்றார். வேலை போன்றவைகளை செய்துக் கொண்டே இந்த கடினமான முயற்சி செய்யுங்கள்- இந்த உடலினால் வேலை செய்கிறேன், நான் ஆத்மா தான் சிவபாபாவை நினைக்கிறேன். ஆத்மா முதன் முதலில் தூய்மையாக இருந்தது, இப்போது மீண்டும் தூய்மையாக வேண்டும். இதுவே கடினமான முயற்சி ஆகும். இதில் மிகப் பெரிய வருமானம் இருக்கிறது. இங்கே எவ்வளவு பணக்காரர்கள் இருக்கிறார்கள், கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுகமாக இல்லை. அனைவரின் தலையிலும் துக்கம் இருக்கிறது. பெரிய பெரிய ராஜாக்கள், குடியரசு தலைவர் போன்றோர்கள் இன்று இருக்கிறார்கள். நாளை அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். வெளிநாடுகளில் என்னென்ன நடக்கிறது. பணக்காரர்களுக்கும், ராஜாக்களுக்கும் கூட மிகவும் கஷ்டங்கள் இருக்கிறது. இங்கே கூட ராஜாக்களாக இருந்தவர்கள் பிரஜைகளாகி விட்டனர். இராஜாக்கள் மீது பிரஜைகளின் ஆட்சி ஆகிவிட்டது. நாடகத்தில் இவ்வாறும் நிச்சயிக்கப்ட்டிருக்கிறது. கடைசியில் இந்த நிலை ஏற்படுகிறது. பலர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். போன கல்பத்திலும் இவ்வாறு நடந்தது என உங்களுக்குத் தெரியும். நீங்கள் குப்த வேஷத்தில் மனப்பூர்வமாக உயிருக்குயிராக அன்போடு தாங்கள் இழந்த இராஜ்யத்தை அடைகிறீர்கள். நாம் அதிபதியாக இருந்தோம், சூரிய வம்சத்தின் தேவதையாக இருந்தோம் என்பதை அறிந்து கொண்டீர்கள். இப்போது மீண்டும் அவ்வாறு மாறுவதற்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் இங்கே நீங்கள் சத்திய நாராயணனின் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. பாபா மூலமாக நாம் நரனிலிருந்து எப்படி நாராயணனாக ஆவோம்? தந்தை வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். பக்தி மார்க்கத்தில் இதை யாரும் கற்பிக்க முடியாது. எந்த ஒரு மனிதரையும் அப்பா, டீச்சர், குரு என்று கூற முடியாது. பக்தியில் எவ்வளவு பழைய கதைகளை கூறுகிறார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓய்வெடுப்பதற்காக நிச்சயமாக தூய்மை ஆக வேண்டும்.

 

தன்னை ஆத்மா என உணருங்கள் என பாபா கூறுகின்றார், அரைக் கல்பம் நாடகத்தின் படி தேக உணர்வில் இருக்கிறீர்கள். இப்போது ஆத்ம உணர்வுடையவராகுங்கள். நாடகத்தின் படி இப்போது பழைய உலகத்தை மாற்றி புதியதாக்க வேண்டும். உலகம் ஒன்று தான், பழைய உலகத்திலிருந்து புதியதாக மாறுகிறது. புது உலகத்தில் புதிய பாரதம் இருந்தது. அங்கே தேவி தேவதைகள் இருந்தனர். தலைநகரத்தைக் கூட அறிகிறீர்கள். யமுனை ஆற்றங்கரையில் இருந்தது. அதற்கு சொர்க்கம் (தேவதைகளின் உலகம்) என்று பெயர். அங்கே இயற்கையான அழகு இருக்கிறது. ஆத்மா தூய்மையாகிறது என்றால் தூய்மையான ஆத்மாவிற்கு உடலும் தூய்மையாக கிடைக்கிறது. நான் வந்து உங்களை அழகான தேவி தேவதைகளாக மாற்றுகிறேன் என பாபா கூறுகிறார். நமக்குள் எந்த அவகுணமும் இல்லையே, நினைவில் இருக்கிறோமா என குழந்தைகளாகிய நீங்கள் உங்களை சோதித்துக் கொண்டே இருங்கள். படிப்பும் படிக்க வேண்டும். இது மிகப் பெரிய படிப்பாகும். இது ஒரே ஒரு படிப்பு தான். அந்த படிப்பில் எவ்வளவு புத்தகங்கள் போன்றவைகளைப் படிக்கிறார்கள். இந்த படிப்பு உயர்ந்ததிலும் உயர்ந்தது படிக்க வைக்கக் கூடியவரும் உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபா. சிவபாபா இந்த உலகத்திற்கு அதிபதி கிடையாது. நீங்கள் தான் உலகத்திற்கு அதிபதி ஆகிறீர்கள் அல்லவா? எவ்வளவு புதுப்புது ஆழமான விஷயங்களை உங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார். மனிதர்கள் பரமாத்மா சிருஷ்டிக்கே அதிபதி என நினைக்கிறார்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே நான் இந்த சிருஷ்டிக்கு அதிபதி கிடையாது என பாபா புரிய வைக்கிறார். நீங்கள் தான் அதிபதியாகிறீர்கள். பிறகு இராஜ்யத்தை இழக் கிறீர்கள். மீண்டும் தந்தை வந்து உலகத்திற்கு அதிபதியாக மாற்றுகிறார். இதற்குத் தான் உலகம் என்று பெயர். மூலவதனம் அல்லது சூட்சும வதனத்தின் விஷயம் அல்ல. மூல வதனத்திலிருந்து நீங்கள் இங்கே வந்து 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுழற்றுகிறீர்கள். பிறகு தந்தை வர வேண்டியிருக்கிறது. இப்போது மீண்டும் நீங்கள் இழந்த அந்த சொத்தை அடைவதற்காக உங்களை முயற்சி செய்ய வைக்கிறேன். வெற்றி தோல்வியின் விளையாட்டு அல்லவா? இந்த இராவண இராஜ்யம் முடியப் போகிறது. பாபா எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கின்றார். பாபா மீண்டும் வந்து கற்று தருகிறார்.அங்கே மனிதர்கள் மனிதர்களுக்கு பாடம் கற்று தருகிறார்கள். நீங்களும் மனிதர்களே. ஆனால் பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்கு கற்பிக்கின்றார். படிப்பின் அறிவுரை (ஞானம்) ஆத்மாவில் தான் பதிவாகின்றது. இப்போது நீங்கள் மிகவும் ஞானம் நிறைந்தவர்கள் (நாலெட்ஜ்ஃபுல்) அது அனைத்தும் பக்தியின் ஞானம், வருமானத்திற்காகக் கூட ஞானம் இருக்கிறது. சாஸ்திரங்களின் ஞானமும் இருக்கிறது. இது ஆன்மீக ஞானமாகும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆத்ம தந்தை வந்து ஞானம் வழங்குகிறார். 5000 வருடங்களுக்கு முன்பு கூட நீங்கள் கேட்டீர்கள். முழு உலகத்திலும் அனைத்து மனிதர்களையும் இவ்வாறு ஒரு போதும் யாரும் கற்க வைத்திருக்க மாட்டார்கள். யாருக்கும் தெரியவில்லை, ஈஸ்வரன் எப்படி படிக்க வைக்கின்றார்?

 

இப்போது இந்த படிப்பினால் இராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். யார் நன்கு படிக்கிறார்களோ ஸ்ரீமத்படி நடக்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். யார் பாபாவிற்கு நிந்தனை செய்விக்கிறார்களோ, கையை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் பிரஜைகளில் மிகவும் குறைந்த பதவி அடைவார்கள். பாபா ஒரேயொரு படிப்பை படிக்க வைக்கிறார். படிப்பில் எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. தெய்வீக இராஜ்யம் இருந்தது அல்லவா ! ஒரேயொரு தந்தை தான் இங்கு வந்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். மற்ற அனைத்தும் அழிய வேண்டும். குழந்தைகளே இப்போது சீக்கிரம் தயாராகுங்கள், கவனக் குறைவில் நேரத்தை வீணாக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். நினைக்கவில்லை என்றால் மிக மதிப்புமிக்க நேரம் வீணாகிறது. உடலைக் கவனிப்பதற்காக தொழில் போன்றவைகளை செய்யுங்கள். இருப்பினும் கைகள் வேலை செய்தாலும் மனம் தந்தையை நினைக்க வேண்டும். என்னை நினைத்தால் உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கும் என பாபா கூறுகிறார். இறைவன்-நண்பன் கதை கூட கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அல்லா அலாவுதீன் நாடகம் கூட காண்பிக்கிறார்கள். விளக்கை தேய்ப்பதால் பொக்கிஷம் வந்தது. இப்போது அல்லா உங்களைத் தேய்ப்பதால் எப்படி இருந்து எப்படி மாற்றுகிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். உடனே தெய்வீக திருஷ்டியினால் வைகுண்டத்திற்குச் செல்கிறீர்கள். முன்பு பெண் குழந்தைகள் தங்களுக்குள் ஒன்றாக அமர்வார்கள். பிறகு அவர்களாகவே தியானத்தில் சென்று விடுவார்கள். பிறகு மாயா ஜாலம் என கூறிவிட்டனர். எனவே அதை நிறுத்திவிட்டார். இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த நேரத்தினுடையதாகும். ஹாத்மத்தாயின் கதை கூட இருக்கிறது. வாயில் மணியை போட்டு விடுகின்றனர். மாயை மறைந்து போய்விட்டது. மணியை எடுத்துவிட்டால் மாயை வந்து விடுகிறது. யாருக்கும் இரகசியம் புரியவில்லை. குழந்தைகளே! வாயில் மணியை போட்டுக் கொள்ளுங்கள் என பாபா கூறுகிறார். நீங்கள் அமைதிக் கடல், ஆத்மா அமைதியில் தன்னுடைய சுய தர்மத்தில் இருக்கிறது. நாம் ஆத்மா என்பது சத்யுகத்தில் கூட அறிகிறார்கள். மற்றபடி பரமாத்மா பாபாவை யாரும் அறியவில்லை. எப்போதாவது யாராவது கேட்டால் அங்கே விகாரத்தின் பெயரே இல்லை என கூறுங்கள். விகாரமற்ற உலகம். 5 விகாரங்களுக்கு வசமாவதில்லை. தேக உணர்வும் இல்லை. மாயாவின் இராஜ்யத்தில் தேக உணர்வுடையவர்களாக மாறுகிறார்கள். அங்கே மோகத்தை வென்றவர்களாக இருக்கிறார்கள். இந்த பழைய உலகில் பற்றுதலில் இருந்து விடுபட வேண்டும். யார் வீடு வாசலைத் துறக்கிறார்களோ அவர்களுக்கு வைராக்கியம் வருகிறது. நீங்கள் வீடு வாசலை விட வேண்டியதில்லை. பாபாவின் நினைவிலிருந்து இந்த பழைய உடலை விட்டு விடுங்கள். அனைவரின் கணக்கு வழக்கும் முடிய வேண்டும். பிறகு வீட்டுக்குப் போவார்கள். கல்ப கல்பமாக நடக்கிறது. உங்களுடைய புத்தி இப்போது மிகத் தொலை தூரத்திற்கு அப்பால் மேலே செல்கிறது. அந்த மக்கள் கடல் எது வரை ஆழம் இருக்கிறது. சூரியன் சந்திரனில் என்ன இருக்கிறது என பார்க்கிறார்கள். இவைகள் தேவதைகள் என முன்பு நினைத்தார்கள். இது மேடையின் விளக்குகள் போல என நீங்கள் கூறுகிறீர்கள். இங்கே விளையாட்டு நடக்கிறது. எனவே விளக்குகள் இங்கே இருக்கிறது. மூலவதனம், சூட்சுவம வதனத்தில் இது கிடையாது. அங்கே விளையாட்டே இல்லை. இந்த முடிவற்ற விளையாட்டு நடந்துக் கொண்டே வருகிறது. சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது, பிரளயம் நடப்பதில்லை பாரதம் அழிவற்ற நாடு. இதில் மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர் மயமாவதில்லை, பசு பட்சி என்னென்ன இருக்கின்றதோ அனைத்தும் இருக்கும். மற்ற படி வேறு என்னென்ன கண்டங்கள் இருக்கிறதோ அவை சத்யுகத்தில் இருக்காது. நீங்கள் தெய்வீக திருஷ்டியில் பார்த்தீர்கள், அதை மீண்டும் நடைமுறையில் பார்ப்பீர்கள். நடைமுறையில் நீங்கள் வைகுண்டம் சென்று அரசாட்சி செய்வீர்கள். அதற்காக முயற்சி செய்துக் கொண்டே இருப்பீர்கள். நினைவில் தான் மிகவும் கடினமான முயற்சி இருக்கிறது என பாபா கூறுகின்றார். மாயை நினைக்க விடுவதில்லை. மிகவும் அன்போடு பாபாவை நினைக்க வேண்டும். அறியாமை காலத்தில் கூட அன்போடு பாபாவை மகிமை செய்கிறார்கள். இன்னார் இப்படி இருந்தார். இந்த பதவி உடையவராக இருந்தார். இப்போது உங்களுடைய புத்தியில் முழு சிருஷ்டி சக்கரமும் பதிந்து விட்டது. அனைத்து தர்மங்களின் ஞானம் இருக்கிறது. அங்கே ஆத்மாக்களின் குலம் இருப்பது போல இங்கே மனித சிருஷ்டியின் வம்சம் இருக்கிறது. கிரேட்கிரேட் கிராண்ட் ஃபாதர் பிரம்மா ஆவார். பிறகு உங்களுடைய வம்சம், சிருஷ்டி சென்றுக் கொண்டே இருக்கிறது அல்லவா? குழந்தைகளே நீங்கள், நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும் என்றால், என்ன சொல்கிறேனோ அதை செய்யுங்கள் என பாபா புரிய வைக்கிறார். முதலில் உங்களுடைய நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். பாபா நாங்கள் உங்களிடம் சொத்தை அடைந்தே தீருவோம் என்றால் அதற்கான நடத்தையும் வேண்டும். இந்த ஒரே படிப்பு தான் நரனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான படிப்பாகும். இதை பாபா தான் படிக்க வைக்கிறார். ராஜாக்களுக்கு ராஜாவாக நீங்கள் மாறுகிறீர்கள். வேறு எந்த கண்டமும் இல்லை. நீங்கள் தூய்மையான ராஜாவாக மாறுகிறீர்கள். பிறகு ஒளியற்ற அபவித்ர ராஜாக்கள் பவித்ர ராஜாக்களின் கோயில்களைக் கட்டி பூஜை செய்கிறார்கள். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை ஏன் மறக்கிறார்கள். பாபா, மாயை மறக்க வைத்து விடுகிறது என கூறுகிறார்கள். குற்றத்தை மாயையின் மீது சுமத்துகிறார்கள். அட ! நீங்கள் தான் நினைக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஒருவரே, மற்ற அனைவரும் உதவி ஆசிரியர்கள். தந்தையை மறந்து விடுகிறீர்கள், சரி ஆசிரியரை நினையுங்கள். உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றது. ஒருவரை மறந்தாலும் மற்றொருவரை நினையுங்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தந்தையிடமிருந்து முழு சொத்தையும் அடைய வேண்டும் என்றால், சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். இதற்கு முயற்சி செய்ய வேண்டும். மோகத்தை வென்றவராக வேண்டும்.

2. நாம் அமைதிக் கடலின் குழந்தைகள், நாம் அமைதியில் இருக்க வேண்டும் என்பது சதா நினைவில் வைக்க வேண்டும். வாயில் மணியை போட்டுக் கொள்ள வேண்டும். கவனக்குறைவாக (அலட்சியமாக இருந்து) தனது நேரத்தை வீணாக்கக் கூடாது.

 

வரதானம்:

அலைந்து கொண்டிருக்கக் கூடிய ஆத்மாக்களுக்கு ஒரு விநாடியில் கதி, சத்கதி (முக்தி, ஜீவன் முக்தி) கொடுக்கக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.

 

ஸ்தூலத்தில் (பாப்தாதா) சீசனை எதிர்ப்பார்க்கின்றோம், சேவாதாரி, பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்கிறோம். ஏனெனில் யாருக்கும் எந்த கஷ்டமும் ஏற்படக் கூடாது, நேரம் வீணாகி விடக் கூடாது. அதே போன்று இப்போது அனைத்து ஆத்மாக்களுக்கும் கதி, சத்கதி கொடுக்கும் கடைசி சீசன் வரயிருக்கிறது. அலையக் கூடிய ஆத்மாக்களுக்கு வரிசையில் நிற்கக் கூடிய கஷ்டத்தை கொடுக்கக் வேண்டாம்.வந்துக் கொண்டேயிருப்பார்கள், பெற்றுக்க்கொண்டேயிருப்பார்கள். இதற்கு எவரெடி (தயாராக) ஆகுங்கள். முயற்சியாளர் என்ற வாழ்க்கைக்கும் மேலாக இப்போது வள்ளல் தன்மையின் ஸ்திதியில் இருங்கள். ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு விநாடியில் மாஸ்டர் வள்ளல் ஆகி முன்னேறுங்கள்.

 

சுலோகன்:

பாபாவை புத்தியில் வைத்துக் கொண்டால் அனைத்து பிராப்திகளும் எப்போதும் தயார் நிலையில் (கிழ்படிந்த) இருக்கும்.

 

 

ஓம்சாந்தி