ஓம் சாந்தி.
ஓம் சாந்தி என்பதன் பொருளை புதியவர்கள் மற்றும் பழைய குழந்தைகள்
புரிந்துள்ளார்கள். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் பரமாத்மாவின்
குழந்தைகள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து
கொண்டுள்ளீர்கள். பரமாத்மா உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார்.
மேலும் அனைவருக்கும் மிகவுமே பிரியத்திலும் பிரியமான
பிரியதரிசனர் ஆவார். குழந்தைகளுக்கு ஞானம் மற்றும் பக்தியின்
இரகசியத்தைப் புரிய வைத்துள்ளார். ஞானம் என்றால் பகல், சத்யுகம்
திரேதா. பக்தி என்றால் இரவு, துவாபரம் மற்றும் கலியுகம் இது
பாரதத்தினுடைய விசயமாகும். மற்ற தர்மங்களுடன் உங்களுக்கு
அதிகமான சம்மந்தம் இல்லை. 84 பிறவிகள் கூட நீங்கள் தான்
அனுபவிக்கிறீர்கள். முதன் முதலாவதாகக் கூட பாரதவாசிகளாகிய
நீங்கள் தான் வந்துள்ளீர்கள். 84 பிறவிகளின் சக்கரம்
பாரதவாசிகளாகிய உங்களுடையதாக உள்ளது. இஸ்லாமியர், பௌத்தியர்
ஆகியோர் 84 பிறவிகள் எடுப்பார்கள் என்று யாருமே கூறமாட்டார்கள்.
இல்லை. பாரதவாசிகள் தான் எடுக்கிறார்கள். பாரதம் தான் அழியாத
கண்டம் ஆகும். இது ஒரு பொழுதும் அழிந்து போவதில்லை. மற்ற எல்லா
கண்டங் களும் அழிந்து போய் விடுகிறது. பாரதம் தான்
எல்லாவற்றையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தது ஆகும். (அவினாஷி)
அழியாதது ஆகும். பாரத கண்டம் தான் சொர்க்கமாக ஆகிறது. வேறு
எந்த கண்டமும் சொர்க்கம் ஆவதில்லை. புதிய உலகம் சத்யுகத்தில்
பாரதம் தான் இருக்கும் என்பது குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது. பாரதம் தான் சொர்க்கம் என்று
அழைக்கப்படுகிறது. அவர்களே பின்னர் 84 பிறவிகள் எடுக்கிறார்கள்.
கடைசியில் நரகவாசி ஆகிறார்கள். பிறகு அதே பாரதவாசிகள்
சொர்க்கவாசியாக ஆவார்கள். இச்சமயம் அனைவரும் நரகவாசிகளாக
உள்ளனர். மற்ற அனைத்து கண்டங்களும் அழிந்து போய் விடும்.
மற்றபடி பாரதம் மட்டும் இருக்கும். பாரத கண்டத்தின் மகிமை
அளவற்றது ஆகும். அதே போல பரமபிதா பரமாத்மாவின் மகிமை மேலும்
கீதையின் மகிமை கூட அளவற்றது ஆகும். ஆனால் அது உண்மையான
கீதையினுடைய மகிமை. பொய்யான கீதையோ கேட்டு, கேட்டு படித்து
படித்து கீழே இறங்கியபடியே வந்துள்ளோம். இப்பொழுது தந்தை
உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். இது கீதையின் புருஷாத்தம
சங்கமயுகம் ஆகும். பாரதம் தான் மீண்டும் புருஷோத்தமமாக
ஆகவிருக்கிறது. இப்பொழுது அந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்
இல்லை. இந்த தவறு கூட நாடகத்தில் உள்ளது என்று பாபா புரிய
வைத்துள்ளார். கீதையின் மீது மீண்டும் கிருஷ்ணரின் பெயரை
வைப்பார்கள். பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் பொழுது முதன் முதலில்
கீதை தான் இருக்கும். இப்பொழுது இந்த கீதை ஆகிய அனைத்து
சாஸ்திரங் களும் முடியப் போகிறது. மற்றபடி தேவி தேவதா தர்மம்
மட்டுமே இருக்கும். அப்படியின்றி அவற்றுடன் கீதை பாகவதம் ஆகியவை
கூட இருக்கும் என்பதல்ல. இல்லை. பிராப்தி கிடைத்து விட்டது,
சத்கதி ஆகி விட்டது என்றால் பின் எந்தவொரு சாஸ்திரங்கள்
ஆகியவற்றின் அவசியமே கிடையாது. சத்யுகத்தில் எந்தவொரு குரு,
சாஸ்திரங்கள் ஆகியவை இருப்பதில்லை. இச்சமயத்திலோ பக்தி
கற்பிக்கக் கூடிய அநேக குருக்கள் இருக்கிறார்கள். சத்கதி
அளிப்பவரோ ஒரே ஒரு ஆன்மீக தந்தை மட்டுமே. அவரது மகிமை அளவற்றது
ஆகும். அவருக்கு தான் வர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி -
உலகத்தின் சர்வசக்திவான் என்று கூறப்படுகிறது. பாரத வாசிகளில்
பெரும்பாலானோர் அவர் அந்தர்யாமி - அனைத்தும் அறிந்தவர் என்று
கூறி தவறு செய்கிறார்கள். எல்லோருக்குள்ளேயும் இருப்பதை
அறிந்துள்ளார் என்கிறார்கள். குழந்தைகளே எனக்கு யாருக்குள்ளே
என்ன இருக்கிறது என்பது ஒன்றும் தெரியாது என்று தந்தை
கூறுகிறார். என்னுடைய வேலையோ தூய்மையற்றவர்களை (பதீதர்களை)
தூய்மையாக ஆக்குவது தான். மற்றபடி நான் அந்தர்யாமி கிடையாது.
இது பக்திமார்க்கத்தின் தவறான மகிமை ஆகும். என்னை தூய்மை
இல்லாத உலகத்தில் தான் கூப்பிடுகிறார்கள். மேலும் நான் ஒரே ஒரு
முறை தான் பழைய உலகத்தை மீண்டும் புதியதாக உருவாக்க வேண்டி
யிருக்கும் பொழுது வருகிறேன். இந்த உலகம் புதியதிலிருந்து
பழையதாக, பழையதிலிருந்து புதியதாக எப்பொழுது ஆகிறது என்பது
மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு பொருள் கூட சதோ, ரஜோ,
தமோ நிலையில் அவசியம் வருகிறது. மனிதர்களும் அதுபோலவே ஆகின்றனர்.
குழந்தைகள் முத-ல் சதோ பிரதானமாகவும் பிறகு இளைஞன், முதுமை
அடைகின்றனர். அதாவது ரஜோ, தமோ ஆகின்றனர். முதுமையான உடல் ஆகும்
பொழுது அதை விட்டு விட்டு பிறகு குழந்தையாக பிறக்கிறார்கள்.
உலகம் கூட புதியதிலிருந்து பழைய தாக ஆகிறது. புது உலகத்தில்
பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது என்பதை குழந்தைகள்
அறிவார்கள். பாரதத்தினுடைய மகிமை அளவற்றது ஆகும். இவ்வளவு
செல்வம் உடைய சுகமான தூய்மையான கண்டம் வேறெதுவும் கிடையாது.
இப்பொழுது சதோபிரதான உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
திரிமூர்த்தியில் கூட பிரம்மா, விஷ்ணு, சங்கரனை
காண்பித்துள்ளார்கள். அதனுடைய அர்த்தம் யாருமே அறியாமல் இருக்
கிறார்கள். உண்மையில் திரிமூர்த்தி சிவன் என்றே கூற வேண்டுமே
அன்றி பிரம்மா அல்ல. பிரம்மா, விஷ்ணு, சங்கரனை யார்
படைத்தார்கள்.. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார்.
பிரம்மா தேவதாய நம, விஷ்ணு தேவதாய நம, சங்கர் தேவதாய நம, சிவ
பரமாத்மாய நம என்று கூறுகிறார்கள். எனவே அவர் உயர்ந்தவர் ஆனார்
அல்லவா? அவர் படைப்பு கர்த்தா ஆவார். பரமபிதா பரமாத்மா பிரம்மா
மூலமாக பிராமணர்களின் ஸ்தாபனை செய்கிறார் என்றும் பாடுகிறார்கள்.
பிறகு பரமாத்மா தந்தை மூலமாக ஆஸ்தியும் கிடைக்கிறது. பின் சுயம்
அவரே அமர்ந்து பிராமணர்களுக்கு கற்பிக்கிறார். ஏனெனில் அவர்
தந்தையும் ஆவார், மிக உயர்ந்த (சுப்ரீம்) ஆசிரியரும் ஆவார்.
உலக சரித்திரம், பூகோளம் எப்படி சக்கரம் சுற்றுகிறது என்பதை
அமர்ந்து புரிய வைக்கிறார். அவரே ஞானம் நிறைந்தவர் ஆவார்.
மற்றபடி அவர் அனைத்தும் அறிந்தவர் என்பதல்ல. இது கூட தவறு ஆகும்.
பக்தி மார்க்கத்தில் யாருடைய வாழ்க்கை சரிதம், தொழில் ஆகியவை
பற்றி அறியாமல் உள்ளார்கள். எனவே இது பொம்மை களின் பூஜை போல ஆகி
விடுகிறது. கல்கத்தாவில் பொம்மைகளுக்கு எவ்வளவு பூஜை ஆகிறது.
பிறகு அவைகளுக்கு பூஜை செய்து படையல் படைத்து பின்
சமுத்திரத்தில் மூழ்கடித்து விடுகிறார்கள். சிவபாபா மிகவும்
அன்பிற்குரியவர் ஆவார். எனக்குக் கூட மண்ணி னால் லிங்கம்
அமைத்து பூஜை ஆகியவை செய்து பிறகு உடைத்து போட்டு விடுகிறார்கள்.
காலையில் செய்கிறார்கள். மாலையில் உடைத்து விடுகிறார்கள். இவை
எல்லாமே பக்தி மார்க்கம், குருட்டு நம்பிக்கையின் பூஜை ஆகும்.
நீங்களே பூஜைக்குரியவர்கள், நீங்களே பூசாரி என்று மனிதர்கள்
பாடவும் செய்கிறார்கள். நானோ என்றைக்குமே பூஜைக்குரியவன் ஆவேன்
என்று தந்தை கூறுகிறார். நானோ வந்து பதீதர்களை (தூய்மையற்றவர்களை)
தூய்மையாக ஆக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறேன். 21
பிறவிகளுக்கான இராஜ்ய பாக்கியத்தை வழங்குகிறேன். பக்தியில்
இருப்பது குறுகிய கால சுகம். அதை சந்நியாசிகள் காக்கை எச்சத்
திற்கு சமானமான சுகம் என்று கூறு கிறார்கள். சந்நியாசிகள் வீடு
வாசல் விட்டு விடுகிறார் கள். அது எல்லைக்குட்பட்ட சந்நியாசம்
ஆகும். ஹடயோகி ஆவார்கள் அல்லவா? பகவானையோ அறியாமலே
இருக்கிறார்கள். பிரம்மத்தை நினைவு செய்கிறார்கள். பிரம்மமோ
பகவான் கிடையாது. பகவானோ ஒரே ஒரு நிராகார சிவன் ஆவார். அவர்
அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். பிரம்மம் என்பது
ஆத்மாக்களாகிய நாம் இருப்பதற்கான இடம் ஆகும். அது பிரம்மாண்டம்,
இனிமையான இல்லம் ஆகும். அங்கிருந்து ஆத்மாக்களாகிய நாம் இங்கு
பாகம் ஏற்று நடிக்க வருகிறோம். நான் ஒரு உடலை விட்டு மற்றொரு
உடலை எடுக்கிறேன் என்று ஆத்மா கூறுகிறது. 84 பிறவிகள் கூட
பாரதவாசிகளினுடையது ஆகும். யார் அதிகமாக பக்தி செய்துள்ளார்களோ
அவர்களே பிறகு ஞானமும் அதிகமாக ஏற்பார்கள். குழந்தைகளே இல்லற
விவகாரங்களில் தாராளமாக இருங்கள் ஆனால் ஸ்ரீமத் படி நடந்து
கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள்
அனைவரும் ஒரு பிரிய தரிசனரான பரமாத்மாவின் பிரியதரிசினிகள்
ஆவீர்கள். துவாபர முதற்கொண்டு நீங்கள் நினைவு செய்தபடியே
வந்துள்ளீர்கள். துக்கத்தில் ஆத்மா தந்தையை நினைவு செய்கிறார்.
இது இருப்பதே துக்கதாமமாக. ஆத்மாக்கள் உண்மை யில்
சாந்திதாமத்தின் நிவாசிகள் ஆவார்கள். பின்னால் சுகதாமத்தில்
வந்தார்கள். பிறகு நாம் 84 பிறவிகள் எடுத்தோம் ஹம் சோ, சோ ஹம்
- நானே அது, அதுவே நான் என்பதன் அர்த்தம் கூட புரிய
வைத்துள்ளார். அவர்கள் ஆத்மாவே பரமாத்மா, பரமாத்மாவே ஆத்மா
என்று கூறி விடுகிறார்கள். ஆத்மாவே பரமாத்மா எப்படி ஆக முடியும்
என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். பரமாத்மாவோ ஒருவர்
ஆவார். அனைவரும் அவரது குழந்தைகள் ஆவார்கள். சாது சந்நியாசிகள்
ஆகியோர் கூட ஹம் சோ என்பதன் அர்த்தம் தவறாகக் கூறு கிறார்கள்.
ஹம் சோ என்பதன் பொருளே நான் ஆத்மாவே, சத்யுகத்தில் நான் தான்
தேவி தேவதையாக இருந்தேன். பிறகு நானே க்ஷத்திரியர், நானே
வைசியர், நானே சூத்திரராக ஆனேன். இப்பொழுது தேவதை ஆவதற்காக நாம்
தான் பிராமண ராக ஆகி உள்ளோம். இது தான் சரியான அர்த்தம் ஆகும்.
அது முற்றிலும் தவறானது ஆகும். மனிதர்கள் இராவணனின் வழிப்படி
நடந்து எவ்வளவு பொய்யானவர்களாக ஆகி விட்டார்கள் என்று தந்தை
கூறுகிறார். எனவே பொய்யான மாயை, பொய்யான உடல்.. என்ற பழமொழி
உள்ளது. சத்யுகத்தில் அவ்வாறு கூற மாட்டார்கள். அது உண்மையான
கண்டம் ஆகும். அங்கு பொய்யினுடைய பெயர் அடையாளம் இல்லை. இங்கு
பின் உண்மையின் பெயர் இல்லை. பிறகும் மாவில் உப்பு என்று
கூறப்படுகிறது. சத்யுகத்தில் இருப்பவர்கள் தெய்வீக குணங்கள்
உடைய மனிதர்கள் ஆவார்கள். அவர்களினுடையது தேவதா தர்மம் ஆகும்.
பின்னால் மற்ற மற்ற தர்மங்கள் ஆகியன. எனவே த்வைதம் - பிரிவுகள்
ஆகியது. துவாபரத்திலிருந்து அசுர இராவண இராஜ்யம் ஆரம்பமாகி
விடுகிறது. சத்யுகத்தில் இராவண இராஜ்யமும் இல்லை. பின் 5
விகாரங்களும் இருக்க முடியாது. அவர்கள் சம்பூர்ண நிர்விகாரி
ஆவார்கள். இராமர் சீதைக்கு 14 கலை சம்பூர்ணம் என்று
கூறப்படுகிறது. இராமருக்கு ஏன் வில் அம்பு கொடுத்துள்ளார்கள்?
இது கூட யாருக்குமே தெரியாது. இம்சையினுடைய விஷயமோ கிடையாது.
நீங்கள் இறை மாணவர்கள் ஆவீர்கள், என்றால் தந்தையுமாகவும்
இருக்கிறார். மாணவர்கள் ஆவீர்கள் என்றால் அவர் ஆசிரியர் ஆகிறார்.
பிறகு குழந்தைகளாகிய உங்களுக்கு சத்கதி அளித்து சொர்க்கத்திற்கு
அழைத்து செல்கிறார். எனவே சத்குரு ஆகிறார். தந்தை, ஆசிரியர்,
குரு மூவருமாக ஆகி விட்டார். அவருக்கு நீங்கள் குழந்தைகளாக ஆகி
உள்ளீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்.
இப்பொழுது இருப்பது இராவண இராஜ்யம் ஆகும் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். இராவணன் பாரதத் தினுடைய எல்லாரையும்
விட பெரிய எதிரி ஆவான். இந்த ஞானம் கூட குழந்தைகளாகிய
உங்களுக்கு (நாலேஜ்ஃபுல்) ஞானம் நிறைந்த தந்தையிடமிருந்து
கிடைத்துள்ளது. அந்த தந்தை தான் ஞானக்கடல், ஆனந்த கடல் ஆவார்.
ஞானக் கடலிலிருந்து நீங்கள் மேகங்களாய் நிரம்பி பிறகு ஞான
மழையாய் பொழிகிறீர்கள். நீங்கள் ஞான கங்கைகள் ஆவீர்கள்.
உங்களுக்கு தான் மகிமை உள்ளது. மற்றபடி தண்ணீரின் கங்கையில்
ஸ்நானம் செய்வதால் தூய்மை யாகவோ யாரும் ஆவதே இல்லை. அழுக்கான
அசுத்தம் நிறைந்த தண்ணீரில் ஸ்நானம் செய்வதால் கூட நாங்கள்
தூய்மை ஆகிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். அருவி தண்ணீருக்கு
கூட நிறைய மகத்துவம் கொடுக்கிறார்கள். இவை எல்லாமே பக்தி
மார்க்கமாகும். சத்யுக திரேதாவில் பக்தி இருப்பதில்லை. அது
சம்பூர்ண நிர்விகாரி உலகம் ஆகும்.
குழந்தைகளே! நான் உங்களை இப்பொழுது தூய்மையாக்குவதற்காக
வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். இந்த ஒரு பிறவியில் என்னை
நினைவு செய்யுங்கள். மேலும் தூய்மை ஆகுங்கள் அப்பொழுது நீங்கள்
சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். நான் தான் பதீத பாவனன் ஆவேன்.
கூடுமானவரை நினைவு யாத்திரையை அதிகரியுங்கள். வாயால் சிவபாபா
சிவபாபா என்று கூறுவதல்ல. எப்படி பிரியதரிசினிகள் பிரியதரிசனரை
நினைவு செய்கிறார்கள். ஒரு முறை பார்த்தார் அவ்வளவு தான்.
புத்தியில் அவரது நினைவு இருக்கும். பக்தியில் யார் யாரை நினைவு
செய்கிறார்களோ, யார் யாருக்கு பூஜை செய்கிறார்களோ அவரது
சாட்சாத்காரம் ஆகி விடுகிறது. ஆனால் அவை எல்லாமே
அற்பகாலத்திற்கானது ஆகும். பக்தியினால் கீழே தான் இறங்கி
வந்துள்ளீர்கள். இப்பொழுதோ மரணம் முன்னால் நின்றுள்ளது. ஐயோ ஐயோ
என்பதற்கு பின்னால் தான் வெற்றி முழக்கம் (ஆகா ஆகா) என்று ஆகும்.
பாரதத்தில் தான் இரத்த ஆறுகள் பாயும். இப்பொழுது அனைவரும்
தமோபிர தானமாக ஆகி உள்ளார்கள். மீண்டும் அனைவரும் சதோபிரதானமாக
ஆக வேண்டி உள்ளது. ஆனால் யார் முந்தைய கல்பத்தில் தேவதையாக ஆகி
இருந்திருக்க கூடுமோ அவர்களே தான் மீண்டும் ஆவார்கள். அவர்கள்
தான் வந்து தந்தையிடமிருந்து முழுக்க முழுக்க ஆஸ்தி பெறுவார்கள்.
ஒரு வேளை பக்தி குறைவாக செய்திருந்தால் ஞானம் கூட முழுமையாக
எடுக்க மாட்டார்கள். பின் பிரஜையில் வரிசைக்கிரமமாக பதவி
அடைவார்கள். நல்ல முயற்சியாளர்கள் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்
படி நடந்து நல்ல பதவியை அடைவார்கள். நடத்தை கூட மிகவும்
நல்லதாக இருக்க வேண்டும். தெய்வீக குணங்களும் தாரணை செய்ய
வேண்டும். அது பிறகு 21 பிறவிகள் நடக்கும். இப்பொழுது
அனைவரினுடையதும் அசுர குணங்கள் ஆகும். ஏனெனில் பதீதமான (தூய்மையற்ற)
உலகமாக உள்ளது அல்லவா? குழந்தைகளாகிய உங்களுக்கு உலகத்தின்
சரித்திரம் பூகோளம் கூட புரிய வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளே
நினைவில் மிகுந்த முயற்சி செய்யுங்கள் அப்பொழுது நீங்கள்
உண்மையான தங்கமாக ஆகி விடுவீர்கள் என்று இச்சமயத்தில் தந்தை
கூறுகிறார். சத்யுகம் என்பது கோல்டன் ஏஜ் - உண்மையான தங்கம்.
பிறகு திரேதாவில் வெள்ளியின் கலப்பு ஏற்படும் பொழுது கலைகள்
குறைந்து கொண்டே போகின்றன. இப்பொழுதோ எந்த கலையும் இல்லை.
அப்பேர்ப்பட்ட நிலைமை ஏற்பட்டு விடும் பொழுது தந்தை வருகிறார்.
இதுவும் நாடகத்தில் பதிவாகி உள்ளது. நீங்கள் நடிகர்கள் ஆவீர்கள்
அல்லவா? நாம் இங்கு பாகம் ஏற்று நடிக்க வந்துள்ளோம். பாகம்
ஏற்று நடிப்பவர்களே நாடகத்தின் முதல் இடை கடையை அறியாமல்
இருந்தார்கள் என்றால் அவர்களை அறிவற்ற வர்கள் என்று கூறுவார்கள்.
எல்லாரும் எவ்வளவு அறிவற்றவர்களாக ஆகி விட்டனர் என்று
எல்லையில்லாத தந்தை கூறுகிறார். இப்பொழுது நான் உங்களை
அறிவாளியாக வைரம் போல ஆக்குகிறேன். பிறகு இராவணன் வந்து சோழி
போல ஆக்குகிறான். இப்பொழுது இந்த பழைய உலகத்தின் அழிவு ஏற்பட
போகிறது. எல்லாரையும் கொசுக் கூட்டம் போல கூட்டிச் செல்கிறேன்.
உங்களுடைய இலட்சியம் நோக்கம் முன்னால் உள்ளது. அது போல ஆக
வேண்டும். அப்பொழுது நீங்கள் சொர்க்கவாசி ஆகிடுவீர்கள்.
பி.கு.களாகிய நீங்கள் இந்த முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள்.
ஆனால் மனிதர்களின் புத்தி தமோபிரதானமாக ஆகி இருக்கும்
காரணத்தினால் இத்தனை பி.குக்கள் இருக்கிறார்கள் என்றால் அவசியம்
பிரஜாபிதா பிரம்மா கூட இருப்பார் என்பதை புரிந்து கொள்வதில்லை.
பிராமணர்கள் உயர்வானவர்கள். பிராமணர் பிறகு தேவதை. படங்களில்
பிராமணர்களையும் சிவனையும் இல்லாமல் செய்து விட்டார்கள்.
பிராமணர்கள் இப்பொழுது பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.