25.03.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே ! -நீங்கள் மனிதரிலிருந்து தேவதையாகக் கூடிய கல்வியைக் கற்க வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அனைவருக்கும் சுகதாமம் மற்றும் சாந்தி தாமத்திற்கான வழியைக் காண்பிக்க வேண்டும்.

 

கேள்வி :

சதோபிரதான முயற்சியாளர்களின் அடையாளம் என்ன?

 

பதில்:

அவர்கள் மற்றவர்களையும் தனக்குச் சமமாக மாற்றுவார்கள். அவர்கள் நிறைய பேருக்கு நன்மை செய்துக் கொண்டே இருப்பார்கள். ஞான செல்வத்தினால் பையை நிரப்பிக் கொண்டு தானம் செய்வார்கள். 21 பிறவிகளுக்கு சொத்து அடைவார்கள். மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.

 

பாட்டு:

ஓம் நமச்சிவாய......

 

ஓம் சாந்தி.

பக்தர்கள் யாருடைய மகிமையைச் செய்கிறார்களோ அவருக்கு முன்பு நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். சிவாய நமஹ என்று அவருக்குக் கூறுகிறார்கள். நீங்கள் வணங்க வேண்டியதில்லை. குழந்தைகள் தந்தையை நினைக்கிறார்கள். வணங்குவதில்லை. இவரும் தந்தையே! இவரிடமிருந்து உங்களுக்கு சொத்து கிடைக்கிறது. நீங்கள் வணங்குவதில்லை. நினைக்கிறீர்கள். ஜீவ ஆத்மா நினைக்கிறது. பாபா இந்த உடலை கடனாகப் பெற்றிருக்கிறார். தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்தை எப்படி பெறுவது என அவர் நமக்கு வழி காண்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் நன்கு புரிந்துக் கொள்கிறீர்கள். சத்யுகம் என்பது சுகதாமம் ஆகும். ஆத்மாக்கள் வசிக்கும் இடத்திற்கு சாந்திதாமம் என்று பெயர். நாம் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள் என உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இந்த கலியுகத்திற்கு துக்க தாமம் என்று பெயர். ஆத்மாக்களாகிய நாம் இப்போது சொர்க்கத்திற்குப் போவதற்காக, மனிதரிலிருந்து தேவதையாவதற்காக படித்துக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். இந்த லஷ்மி நாராயணன் தேவதைகள் அல்லவா? புது உலகிற்காக மனிதனிலிருந்து தேவதையாக மாற வேண்டும். பாபா மூலமாக நீங்கள் படிக்கிறீர்கள். எவ்வளவு படிக்கிறீர்களோ சிலர் படிப்பில் கூர்மையாக முயற்சி செய்கின்றனர். சிலர் மந்தமாக இருக்கின்றனர். சதோபிரதானமான முயற்சி செய்பவர்கள் மற்றவர்களையும் தனக்குச் சமமாக மாற்றுவதற்காக வரிசைக் கிரமத்தில் முயற்சி செய்விக்கிறார்கள். பலருக்கு நன்மை செய்கிறார்கள். எவ்வளவு ஞானத்தினால் பையை நிரப்பிக் கொண்டு தானம் செய்கிறார்களோ அவ்வளவு நன்மை நடக்கும். மனிதர்கள் தானம் செய்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த பிறவியில் அல்ப கலத்திற்கு கிடைக்கிறது. அதில் சிறிது சுகம் மற்றபடி துக்கமே துக்கமாகும். உங்களுக்கோ 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் சுகம் கிடைக்கிறது. சொர்க்கத்தின் சுகம் எங்கே, இந்த துக்கம் எங்கே. எல்லையற்ற தந்தை மூலமாக உங்களுக்கு சொர்க்கத்தில் எல்லையற்ற சுகம் கிடைக்கிறது. ஈஸ்வரன் பெயரில் தானம், புண்ணியம் செய்கிறீர்கள் அல்லவா? அங்கே மறைமுகமாக இருக்கிறது. இங்கே நீங்கள் நேர் எதிரில் இருக்கிறீர்கள் அல்லவா? பக்தி மார்க்கத்தில் ஈஸ்வரன் பெயரில் தானம்,புண்ணியம் செய்கிறார்கள். அது அடுத்த பிறவியில் கிடைக்கிறது என்பதை பாபா புரிய வைக்கிறார். சிலர் நன்கு செய்கிறார்கள். தீயவை, பாவங்கள் செய்யும் போது அதற்கேற்ற பலன் கிடைக்கிறது. இப்போது எதிர் கால சத்யுகத்தில் 21 பிறவிகளுக்கு சதா சுகமுடையவராக மாறுகிறீர்கள். அதனுடைய பெயரே சுகதாமம் ஆகும். சாந்தி தாமம் மற்றும் சுகதாமத்திற்கான வழி, சாந்தி தாமம் மற்றும் சுகதாமம் செல்வதற்கான எளிதான வழி இதுவே என நீங்கள் பட கண்காட்சிகளில் எழுதலாம். இப்போது கலியுகம் அல்லவா? கலியுகத்திலிருந்து சத்யுகம், அசுத்தமான உலகத்திலிருந்து பரிசுத்தமான உலகம் செல்வதற்கான ஒரு பைசா செலவில்லாத எளிய வழி என எழுதினால் மனிதர்கள் புரிந்துக் கொள்வார்கள். ஏனென்றால் கல்புத்தி அல்லவா? பாபா முற்றிலும் எளிதாக்கி புரிய வைக்கின்றார். இதன் பெயரே எளிய இராஜயோகம், எளிய ஞானம்.

 

பாபா குழந்தைகளாகிய உங்களை எவ்வளவு புத்திசாலியாக்குகிறார். இந்த லஷ்மி நாராயணன் புத்திசாலி அல்லவா ! ஆனால் கிருஷ்ணரைப் பற்றி என்னென்னவோ எழுதியுள்ளனர் அது அனைத்தும் பொய்யான களங்கம் ஆகும். கிருஷ்ணர், அம்மா நான் வெண்ணையை சாப்பிடவில்லை...... என கூறுகிறார். இப்போது இதன் பொருளையும் புரிந்துக் கொள்ளவில்லை. நான் வெண்ணெய் சாப்பிடவில்லை என்றால் யார் சாப்பிட்டது. குழந்தைகளுக்கு பால் புகட்டுவார்கள். குழந்தைகள் வெண்ணெய் சாப்பிடுவார்களா? பால் குடிப்பார்களா? பானையை உடைத்தார் என்று காட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற விசயங்களெல்லாம் கிடையாது. அவர் சொர்க்கத்தின் முதல் இளவரசன். மகிமை அனைத்தும் ஒரு சிவபாபாவினுடையது. உலகத்தில் வேறு யாருக்கும் மகிமை கிடையாது. இச்சமயம் அனைவரும் தூய்மையின்றி இருக்கிறார்கள். ஆனால் பக்தி மார்க்கத்திற்கும் பெருமை இருக்கிறது. பக்த மாலையின் புகழ் கூட பாடப்படுகிறது. பெண்களில் மீராவின் பெயர் கூட இருக்கிறது ஆண்களில் முக்கியமாக நாரதரின் பெயர் பாடப்பட்டு இருக்கிறது. ஒன்று பக்த மாலை இன்னொன்று ஞான மாலை என நீங்கள் அறிகிறீர்கள். பக்த மாலையிலிருந்து ருத்ர மாலையினராக மாறுகிறார்கள். பின் ருத்ர மாலையிலிருந்து விஷ்ணு மாலை உருவாகிறது. ருத்ர மாலை சங்கமயுத்தினுடையதாகும். இந்த ரகசியங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது. இந்த விசயங்களை பாபா உங்களுக்கு நேரடியாகப் புரிய வைக்கிறார் எதிரில் அமரும் போது உங்களுக்கு மெய் சிலிர்க்க வேண்டும். ஆஹா சௌபாக்கியம்! 100 சதவீதம் துர்பாக்கியசாலியிலிருந்து நாம் சௌபாக்கிய சாலியாக மாறுகின்றோம். குமாரிகள் காமவாளுக்கு வளைந்து கொடுக்கவில்லை. அது காம வாள் என்று பாபா கூறுகிறார். ஞானத்தின் வாள் என்கிறார்கள். ஞானத்தின் ஆயுதங்கள் என பாபாகூறியுள்ளார். அவர்கள் தேவிகளிடம் ஸ்தூல ஆயுதங்களைக் கொடுத்துள்ளனர். அவைகள் இம்சை கொடுக்கக் கூடிய பொருட்கள். சுயதரிசன சக்கரம் என்றால் என்ன என்று மனிதர்களுக்குத் தெரியவில்லை. சாஸ்திரங்களில் கிருஷ்ணருக்குக் கூட சுயதரிசன சக்கரத்தைத் தந்து இம்சையை காண்பித்துள்ளனர். உண்மையில் ஞான விசயம் ஆகும். இப்போது நீங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆகிறீர்கள். அவர்கள் இம்சையின் விசயத்தைக் காண்பித்துள்ளனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது சுயத்தைப்பற்றி அதாவது சக்கரத்தின் ஞானம் கிடைத்திருக்கின்றது. உங்களுக்கு பிரம்மா முக வம்சாவளி பிராமண குல பூசனம், சுயதரிசன சக்கரதாரி என பாபா கூறுகின்றார். இதனுடைய பொருளையும் நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளும் முழுமையாக 84 பிறவிகள் மற்றும் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் இருக்கிறது. முதலில் சத்யுகத்தில் ஒரேயொரு சூரிய வம்ச தர்மம் இருக்கிறது. பிறகு சந்திர வம்சம். இரண்டையும் சேர்த்து சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இந்த விசயங்கள் கூட உங்களுக்குள் வரிசைக் கிரமத்தில் புத்தியில் இருக்கின்றது. உங்களுக்கு பாபா படிக்க வைத்ததால் நீங்கள் படித்து புத்திசாலி ஆகியிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். பிரம்மாவின் வாய் வழி வம்சம் ஆகாதவரை சிவபாபாவின் சொத்தை எப்படி அடைய முடியும்? இப்போது நீங்கள் பிராமணன் ஆகியிருக்கிறீர்கள். சொத்து சிவபாபாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதை மறக்கக் கூடாது. கருத்துகளை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இது 84 பிறவிகளின் ஏணிப்படியாகும். படியில் இறங்குவது எளிதாக இருக்கிறது. படியில் ஏறும் போது இடுப்பில் கைவைத்து எப்படி ஏறுகிறார்கள். ஆனால் லிஃப்ட் கூட இருக்கிறது. இப்போது பாபா உங்களுக்கு லிஃப்ட் கொடுப்பதற்காக வருகிறார். நொடியில் ஏறும் கலை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நாம் ஏறும் கலையில் இருக்கின்றோம் என்ற குஷி இருக்க வேண்டும். மிகவும் அன்பான தந்தை கிடைத்திருக்கின்றார். அவரைப் போன்று அன்பான பொருள் எதுவும் இல்லை. சாது சன்னியாசிகள் போன்ற அனைவரும் அந்த ஒரு பிரியதர்ஷனை நினைக்கிறார்கள். அனைவரும் அவருடைய பிரியதர்ஷினிகள். ஆனால் அவர் யார் என்று புரிந்துக் கொள்ளவில்லை. சர்வவியாபி என்று மட்டும் கூறுகிறார்கள்.

 

சிவபாபா இவர் மூலமாக நம்மை படிக்க வைக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். சிவ பாபாவிற்கு தன்னுடையதென உடல் என்று இல்லை. அவர் பரம் ஆத்மா ஆவார். பரம் ஆத்மா என்றால் பரமாத்மா. மற்றபடி அனைத்து ஆத்மாக்களின் உடலுக்கு என்று தனித்தனி பெயர் இருக்கிறது. ஒரேயொரு பரமாத்மா தான் ! அவர் பெயர் சிவன். பிறகு மனிதர்கள் பல பெயர்களை வைத்து விட்டார்கள். விதவிதமான கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். இப்போது நீங்கள் பொருளைப் புரிந்துக் கொள்கிறீர்கள். பாம்பேயில் பாபுல்நாத் கோயிலில் இருக்கிறது. இச்சமயம் உங்களை முள்ளிலிருந்து மலராக மாற்றுகிறார். உலகத்திற்கு அதிபதியாக்குகிறார். முதலில் முக்கியமான விசயம் ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை ஒருவரே. அவரிடமிருந்து பாரதவாசிகளுக்கு சொத்துகிடைக்கிறது. இந்த லஷ்மி நாராயணன் பாரதத்திற்கு அதிபதி அல்லவா ! சீனாவிற்கு இல்லை! சீனாவினராக இருந்திருந்தால் முகம் வேறு விதமாக இருந்திருக்கும். இவர்கள் பாரதத்தைச் சார்ந்தவர்கள். முதன் முதலில் வெள்ளையாகவும், பிறகு கருப்பாகவும் மாறுகிறார்கள். ஆத்மாவில் அழுக்கு படிகிறது. கருப்பாகிறார்கள். அனைத்திற்கும் எடுத்துக் காட்டு இவரே. குளவி புழுவை மாற்றி தனக்குச் சமமாக உருவாக்குகிறது. சன்னியாசிகள் என்ன மாற்றுகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவர்களை காவி அணிய வைத்து தலை வணங்க வைக்கிறார்கள். நீங்கள் இந்த ஞானத்தை எடுக்கிறீர்கள். இந்த லஷ்மி நாராயணனைப் போன்று அழகுடையவராக மாறுகிறீர்கள். இப்போது இயற்கை கூட தமோபிரதானமாக இருக்கிறது. இந்த பூமியும் தமோபிரதானமாக இருக்கிறது. நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆகாயத்தில் புயல் அடித்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது. தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது இந்த உலகத்தில் துக்கம் நிறைந்திருக்கிறது. அங்கேயோ பரம சுகம் இருக்கும். பாபா பரம துக்கத்திலிருந்து பரம சுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். இது அழியப் போகிறது. பிறகு அனைத்தும் தூய்மையாகிவிடுகிறது. இப்போது நீங்கள் முயற்சி செய்து தந்தையிடமிருந்து எவ்வளவு சொத்து அடைகிறீர்களோ அவ்வளவு அடையுங்கள். இல்லை என்றால் கடைசியில் வருத்தப்பட வேண்டியிருக்கும். தந்தையே வந்தார். ஆனால் எதையும் அடையவில்லை. மூங்கில் காடு தீப்பற்றி எரியும். அப்போது கும்பகர்ணனின் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. பிறகு ஐயோ, ஐயோ என கதறிக் கொண்டே இறப்பார்கள். ஐயோவிற்குப் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும். கலியுகத்தில் ஐயோ, ஐயோ ! அல்லவா. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டே இருக்கின்றனர். நிறைய பேர் இறப்பார்கள். கலியுகத்திற்குப் பிறகு நிச்சயம் சத்யுகம் வரும். இடையில் இது சங்கமம் ஆகும். இதற்கு புருஷோத்தம யுகம் எனக் கூறப்படுகிறது. பாபா தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாறுவதற்கான வழியை நன்கு தெரிவிக்கிறார். என்னை நினையுங்கள், வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை என கூறுகிறார். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தலை வணங்க வேண்டியதில்லை. பாபா முன்பு யாராவது கை கூப்பினால், பாபா ஆத்மாவாகிய உனக்கும் கை இல்லை, தந்தைக்கும் இல்லை. பிறகு யாரை வணங்குகிறீர்கள். கலியுக பக்தி மார்க்கத்தின் அடையாளம் ஒன்று கூட இருக்கக் கூடாது. , ஆத்மா நீங்கள் ஏன் கை கூப்புகிறீர்கள். தந்தையாகிய என்னை மட்டும் நினையுங்கள். நினைத்தல் என்றால் கை கூப்புவது கிடையாது. மனிதர்கள் சூரியன் முன்பும் கை சேர்த்து வணங்குகிறார்கள். யாராவது மகாத்மா என்றாலும் வணங்குகிறார்கள். நீங்கள் கை வணங்க வேண்டியதில்லை. இது என்னால் கடனாகப் பெறப்பட்ட உடல் ஆகும். ஆனால் சிலர் கை வணங்கினால் ரிட்டனாக கை வணங்க வேண்டியிருக்கிறது. நாம் ஆத்மா. நாம் இந்த பந்தனத்திலிருந்து விடுபட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இதன் மீது வெறுப்பு வருகிறது. இந்த பழைய உடலை பாம்பைப் போன்று விட வேண்டும். குளவியிடம் எவ்வளவு அறிவிருந்தால் புழுவையும் குளவியாக மாற்றுகிறது ! குழந்தைகளாகிய நீங்களும் யார் விஷக்கடலில் மூழ்கி இருக்கிறார்களோ அவர்களை அதிருந்து பாற்கடலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். செல்லுங்கள், சாந்தி தாமத்திற்கு என இப்போது பாபா கூறுகிறார். மனிதர்கள் அமைதிக்காக எவ்வளவு தலையை உடைத்துக் கொள்கிறார்கள். சன்னியாசிகளுக்கு சொர்க்கத்தினுடைய ஜீவன் முக்தி கிடைப்பதில்லை. ஆம், முக்தி கிடைக்கிறது, துக்கத்திலிருந்து விடுபட்டு சாந்திதாமத்திற்குச் சென்று அமர்ந்துக் கொள்கிறார்கள். இருப்பினும் ஆத்மா முதன் முதலில் ஜீவன் முக்தியில் வருகிறது. பிறகு ஜீவன் பந்தனத்தில் வருகிறது. ஆத்மா சதோபிரதானமாக இருக்கிறது. பிறகு படியில் இறங்குகிறது. முதலில் சுகத்தை அனுபவித்து பிறகு மெல்ல மெல்ல இறங்கி தமோபிரதானமாகிவிடுகிறது. இப்போது அனைவரையும் மீண்டும் அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கிறார். என்னை நினையுங்கள், தூய்மையாகிவிடுவீர்கள் என பாபா கூறுகிறார்.

 

மனிதர்கள் சரீரத்தை விடும் போது மிகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஏன் என்றால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என பாபா புரிய வைத்துள்ளார். காசியில் கிணற்றில் விழுந்து இறக்கிறார்கள். ஏனென்றால் சிவனுக்கு அர்ப்பணம் ஆனால் முக்தி கிடைக்கும் என கேள்விப் பட்டிருக்கிறார்கள். இப்போது நீங்கள் அர்ப்பணம் ஆகிறீர்கள் அல்லவா? எனவே பக்தி மார்க்கத்தில் கூட அந்த விஷயங்கள் நடக்கிறது. எனவே சிவனிடம் சென்று அர்ப்பணம் ஆகிறார்கள். இப்போது யாரும் திரும்பிப் போக முடியாது என பாபா புரிய வைக்கிறார். ஆம், இவ்வளவு அர்ப்பணம் ஆகிறோம் என்றால் பாவங்கள் விலகுகின்றது. கணக்கு வழக்கு புதியதாக ஆரம்பம் ஆகிறது. நீங்கள் இந்த சிருஷ்டி சக்கரத்தை அறிந்துக் கொண்டீர்கள். இச்சமயம் அனைவருடையதும் இறங்கும் கலையாகும். நான் வந்து சத்கதி அளிக்கிறேன் என பாபா கூறுகிறார். அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். தூய்மை இல்லாதவர்களை உடன் அழைத்துச் செல்ல மாட்டேன். ஆகவே இப்போது தூய்மையாகிவிட்டால் உங்களுடைய ஜோதி எரிய ஆரம்பிக்கும். திருமணத்தின் போது பெண்ணின் தலையில் மண் விளக்கில் தீபம் ஏற்றுகிறார்கள், இந்த பழக்கம் இந்த பாரதத்தில் தான் இருக்கிறது. பெண்ணின் தலையில் மண் விளக்கில் தீபம் ஏற்றுகிறார்கள். கணவனின் தலையில் ஏற்றப்படுவதில்லை. ஏனென்றால் கணவனை ஈஸ்வரன் என கூறுகிறார்கள். ஈஸ்வர் மீது எப்படி ஜோதி ஏற்றுவார்கள். என்னுடைய ஜோதி எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். நான் உங்களுடைய ஜோதியை ஏற்றுகிறேன். பாபாவை ஜோதி என்றும் கூறுகிறார்கள், பிரம்ம சமாஜத்தினர் ஜோதியை ஏற்றுக் கொள்கிறார்கள். எப்போதும் ஜோதி எரிந்துக் கொண்டிருக்கிறது. அதைத் தான் நினைக்கிறார்கள். அதையே பகவான் என்றும் நினைக்கிறார்கள். ஒருசிலர் சிறிய ஜோதி பெரிய ஜோதியோடு கலந்து விடும் என நினைக்கிறார்கள். பல வழிகள் இருக்கின்றது. உங்களுடைய தர்மம் அளவற்ற சுகம் கொடுக்கக் கூடியது என பாபா கூறுகின்றார். நீங்கள் சொர்க்கத்தில் நிறைய சுகத்தைப் பார்க்கிறீர்கள். புது உலகத்தில் நீங்கள் தேவதையாகிறீர்கள். உங்களுடைய படிப்பே எதிர் கால புது உலகத்திற்கானதாகும். மற்ற படிப்புகள் அனைத்தும் இவ்வுலகத்திற்கானதாகும். இங்கே நீங்கள் படித்து எதிர்காலத்தில் பதவி அடைய வேண்டும். கீதையில் கூட உண்மையில் இராஜயோகம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் போர் ஏற்பட்டது. எதுவுமே இல்லை. பாண்டவர்களுடன் நாயைக் காண்பிக்கிறார்கள். இப்போது நான் உங்களை தேவி தேவதையாக மாற்றுகிறேன் என பாபா கூறுகின்றார். இங்கே பலவிதமான துக்கங்களைக் கொடுக்க கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். காம விகாரத்திற்காக எவ்வளவு துக்கம் கொடுக்கின்றனர். இப்போது எல்லையற்ற தந்தை ஞானக் கடல் நம்மை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற குஷி உங்களுக்கு இருக்க வேண்டும். மிகவும் அன்பான பிரிய தர்ஷனாக இருக்கிறார். பிரிய தர்ஷினிகள் அரைக் கல்பம் நினைக்கின்றோம். நீங்கள் நினைத்துக் கொண்டே வந்துள்ளீர்கள். இப்போது நான் வந்திருக்கிறேன். நீங்கள் என்னுடைய வழிப்படி செல்லுங்கள் என பாபா கூறுகிறார். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினையுங்கள். வேறு யாரும் இல்லை. என்னுடைய நினைவு இல்லாமல் உங்களுடைய பாவம் எரிந்து போகாது. ஒவ்வொரு விசயத்திலும் சர்ஜனிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டே இருங்கள். அதன்படி விடுபட்டும் பராமரித்துக் கொள்ளவும் செய்யுங்கள் என பாபா ஆலோசனை கொடுக்கிறார். ஒரு வேளை ஆலோசனைப் படி நடந்தால் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு கிடைக்கும். ஆலோசனை ஏற்றுக் கொண்டால் பொறுப்பிலிருந்து விடுபடலாம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்தை அடைய நேரடியாக ஈஸ்வரன் பெயரில் தானம், புண்ணியம் செய்ய வேண்டும். ஞானச் செல்வத்தினால் பையை நிரப்பிக் கொண்டு அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

 

2. இந்த புருஷோத்தம யுகத்தில் தன்னை அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, ஜீவன் முக்தி அடைய தயாராக வேண்டும். குளவியை போன்று பூம் பூம் என ஊதி தனக்குச் சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய முடியும்.

 

வரதானம்

சாதாரண காரியங்கள் செய்தாலும் கூட, உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடிய, சதா டபுள் லைட் ஆகுக.

 

எப்படி தந்தை சாதாரண சரீரத்தை எடுத்துக் கொள்கிறார், எப்படி நீங்கள் சொல்கிறீர்களோ, அவ்வாறே பேசுகிறார். அது போலவே நடந்து கொள்கிறார் என்றால், செயல்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் ஸ்திதி உயர்ந்ததாக உள்ளது. அதே போல் குழந்தைகள் உங்களுக்கும் கூட ஸ்திதி சதா உயர்ந்ததாக இருக்க வேண்டும். டபுள் லைட் ஆகி, உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருந்து, எந்த ஒரு சாதாரண காரியத்தையும் செய்யுங்கள். சதா மனதில் இதே நினைவு இருக்கட்டும் -- அவதரித்து, அவதாரம் ஆகி, சிரேஷ்ட கர்மம் செய்வதற்காக வந்துள்ளேன். அப்போது சாதாரண கர்மங்கள், அலௌகிக கர்மங்களாக மாறி விடும்.

 

சுலோகன்

ஆத்மிக திருஷ்டி-விருத்தியின் (பார்வை - மன நிலை) அப்பியாசம் செய்பவர் தான் தூய்மையை சுலபமாக தாரணை செய்ய முடியும்.

 

ஓம்சாந்தி