25.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - தங்களுடைய குறைகள் நீங்க வேண்டும் என்றால், உண்மையான மனதோடு பாபாவிடம் சொல்லுங்கள், பாபா உங்களுக்கு குறைகளை நீக்குவதற்கான யுக்தியை கூறுவார்.

 

கேள்வி:-

பாபாவினுடைய சக்தி (கரெண்ட்) எந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது?

 

பதில்:-

எந்த குழந்தைகள் நேர்மையாக டாக்டரிடம் (சிவபாபாவிடம்) தங்களுடைய வியாதியைக் கூறுகிறார்களோ, அவர்களுக்கு பாபா திருஷ்டி கொடுக்கின்றார். பாபாவிற்கு அந்த குழந்தைகள் மீது அதிக இரக்கம் வருகிறது. இந்த குழந்தையினுடைய இந்த பூதம் நீங்கி விடட்டும் என்று அவருக்குள் வருகிறது. பாபா அவர்களுக்கு சக்தி (கரெண்டு) கொடுக்கின்றார்.

 

ஓம் சாந்தி.

பாபா குழந்தைகளிடத்தில் கேட்டுக் கொண்டே இருக்கின்றார். பாபாவிடமிருந்து ஏதாவது கிடைத்ததா? என்று ஒவ்வொரு குழந்தையும் தங்களிடமே கேட்க வேண்டும். எந்தெந்த விஷயத்தில் குறை இருக்கிறது? ஒவ்வொருவரும் தங்களை சோதிக்க வேண்டும். நாரதரைப் போல், அவரிடம் நீ தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார் என்று சொல்லப்பட்டது - லஷ்மியை மணம் புரிய தகுதியானதாக இருக்கிறதா என்று? எனவே பாபாவும் குழந்தைகளாகிய உங்களிடத்தில் கேட்கின்றார் - லஷ்மியை மணம் புரிய தகுதியானவர்களாக இருக்கிறீர்களா, என்ன நினைக்கிறீர்கள்? ஒருவேளை தகுதி இல்லை யென்றால் என்னென்ன குறைகள் இருக்கின்றன? சிலர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். புதிய-புதிய குழந்தைகள், தங்களுக்குள் ஏதும் குறைகள் இல்லைதானே என்று பார்க்க வேண்டும் என்பது புரிய வைக்கப்படுகிறது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் முழுமையானவர்களாக ஆக வேண்டும். பாபா வருவதே முழுமையானவர்களாக மாற்றுவதற்கு! ஆகையினால் குறிக்கோளின் சித்திரம் கூட முன்னால் வைக்கப்பட்டுள்ளது. நாம் இவர்களைப் போல் முழுமையானவர்களாக ஆகியுள்ளோமா? என்று தங்களிடம் கேளுங்கள். அந்த உலகீய கல்வி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் போன்றோர் இந்த சமயத்தில் விகாரிகளாக இருக்கிறார்கள். இந்த லஷ்மி - நாராயணன் சம்பூரண நிர்விகாரிகளின் உதாரணமாக இருக்கிறார்கள். அரைக்கல்பம் நீங்கள் இவர்களின் மகிமை பாடினீர்கள். எனவே இப்போது தங்களையே கேளுங்கள் - நம்மிடத்தில் என்னென்ன குறைகள் இருக்கின்றன? அவற்றை நீக்கி நம்முடைய முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் பாபாவிடம், இந்த குறைகள் என்னிடத்தில் இருக்கின்றன, இது என்னிடமிருந்து நீங்கவில்லை, ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்க வேண்டும். வியாதி டாக்டரின் மூலம் தான் விடுபடும். சில துணை மருத்துவர்கள் கூட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். டாக்டரிடமிருந்து கம்பவுண்டர் கற்றுக் கொள்கிறார். புத்திசாலி மருத்துவராக ஆகி விடுகின்றனர். எனவே என்னிடத்தில் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்று நேர்மையாக தங்களை சோதனை செய்ய வேண்டும். அந்த காரணத்தினால் நான் இந்த பதவியை அடைய முடியாது என்று நான் புரிந்து கொள்கின்றேன். நீங்கள் இவரைப்போல் ஆக முடியும் என்று பாபா சொல்வார் அல்லவா! குறைகளை சொன்னால் தான் பாபா வழி சொல்வார். நிறைய வியாதிகள் இருக்கின்றன. நிறைய பேர்களிடத்தில் குறைகள் இருக்கின்றன. சிலரிடத்தில் நிறைய கோபம் இருக்கிறது, பேராசை........ அவர்கள் ஞானத்தின் தாரணை ஏற்பட முடியாது, அவர்கள் மற்றவர்களுக்கும் தாரணை செய்ய வைக்க முடியாது. பாபா தினமும் நிறைய விஷயங்களைப் புரிய வைக்கின்றார். உண்மையில் இவ்வளவு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிகிறது. மந்திரத்தின் அர்த்தத்தை பாபா புரிய வைத்து விட்டார். பாபா ஒருவரே ஆவார். எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் அவரிடமிருந்து ஆஸ்தியை அடைந்து நாம் இப்படி ஆக வேண்டும். மற்ற பள்ளிகளில் ஐந்து விகாரங்களை வெல்வதற்கான விஷயமே இருப்பதில்லை. இந்த விஷயம் இப்போது தான் நடக்கிறது, அதை பாபா வந்து புரிய வைக்கின்றார். உங்களிடத்தில் என்ன பூதம் இருக்கிறதோ, எது துக்கம் கொடுக்கிறதோ, அதைப்பற்றி சொன்னீர்கள் என்றால், அதனை நீக்குவதற்கான வழியை பாபா சொல்வார். பாபா இந்த-இந்த பூதங்கள் எங்களைத் துன்புறுத்துகின்றன. ஸ்தூல உலகில் பூதத்தை விரட்டுபவரிடம் சொல்லப்படுகிறது அல்லவா? உங்களிடம் அந்த பூதம் ஒன்றும் இல்லை. இந்த 5 விகாரங்கள் எனும் பூதம் பல-பிறவிகளாக உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நம்மிடம் என்ன பூதம் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதை நீக்குவதற்கு வழியைக் கேட்டு பெற வேண்டும். கண்கள் கூட அதிகம் ஏமாற்றக் கூடியதாகும். ஆகையினால் பாபா கூறுகின்றார், தங்களை ஆத்மா என்று புரிந்து மற்றவர்களையும் ஆத்மா என்று பார்க்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இந்த யுக்தியின் மூலம் உங்களுடைய இந்த வியாதி நீங்கிவிடும். நாம் அனைவரும் ஆத்மாக்கள் என்றால், ஆத்மா சகோதர- சகோதரர்கள் அல்லவா. நாம் சரீரம் அல்ல. ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் திரும்பிச் செல்லப்போகிறோம் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். எனவே நாம் சம்பூரணமாக ஆகியுள்ளோமா என்று தங்களைப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம்மிடத்தில் என்ன அவகுணம் இருக்கிறது? பாபாவும் அந்த ஆத்மாவை அமர்ந்து பார்க்கின்றார், இந்த ஆத்மாவிற்குள் இந்த குறை இருக்கிறது என்றால் அந்த ஆத்மாவிற்கு சக்தி (கரண்ட்) கொடுப்பார். இந்த குழந்தையின் இந்த தடை நீங்கி விடட்டும். ஒருவேளை டாக்டரிடமே மறைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் என்ன தான் செய்ய முடியும்? நீங்கள் தங்களுடைய அவகுணங்களை சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் பாபாவும் வழி சொல்வார். ஆத்மாக்களாகிய நீங்கள் எப்படி பாபாவை நினைவு செய்கிறீர்கள் - பாபா, தாங்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருக்கிறீர்கள்! எங்களை எந்த நிலையிலிருந்து என்னவாக மாற்றி விடுகிறீர்கள்! இப்படி பாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் பூதங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். ஏதாவதொரு பூதம் கண்டிப்பாக இருக்கிறது. தந்தையான டாக்டரிடம் சொல்லுங்கள், பாபா எங்களுக்கு இதற்கான யுக்தியை சொல்லுங்கள். இல்லை யென்றால் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும், சொல்வதின் மூலம் பாபாவிற்கும் கூட இரக்கம் ஏற்படும் - மாயையின் இந்த பூதம் இந்த குழந்தையைத் துன்புறுத்துகிறது. பூதங்களை விரட்டுபவர் ஒரு பாபாவே ஆவார். யுக்தியோடு விரட்டுகிறார். இந்த 5 பூதங்களை விரட்டுங்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. இருந்தாலும் அனைத்து பூதங்களையும் விரட்டமுடிவதில்லை. சிலரிடத்தில் விசேஷமாக இருக்கிறது, சிலரிடத்தில் குறைவாக இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக இருக்கிறது. இவரிடத்தில் இந்த பூதம் இருக்கிறது என்பதை பாபா பார்க்கின்றார். திருஷ்டி கொடுக்கும் நேரத்தில் மனதினுள் செல்கிறார் அல்லவா? இது மிகவும் நல்ல குழந்தையாக இருக்கிறது. மற்ற அனைத்தும் இந்த குழந்தையினுள் நல்ல - நல்ல குணங்கள் இருக்கிறது, ஆனால் எதையும் பேசுவதில்லை, யாருக்கும் புரிய வைக்க இயல வில்லை. மாயை இந்த குழந்தையினுடைய தொண்டையை அடைத்து வைத்து விட்டது, இதனுடைய தொண்டை திறக்கட்டும் மற்றவர்களுக்கும் சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மற்றவர்களுடைய சேவையில் தங்களுடைய சேவை இருக்கிறது, சிவபாபாவிற்கு சேவை செய்வதில்லை. சிவபாபா அவரே சேவை செய்ய வந்துள்ளார், இந்த பல-பிறவிகளின் பூதங்களை விரட்ட வேண்டும் என்று சொல்கிறார்.

 

மரம் மெது-மெதுவாக வளருகிறது என்பதை பாபா வந்து புரிய வைக்கின்றார் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கிறது. மாயை தடையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. உட்கார்ந்து கொண்டிருக்கும்போதே சிந்தனை மாறி விடுகிறது. சன்னியாசிகளுக்கு வெறுப்பு வருகிறது என்றால், ஒரேயடியாக மறைந்து விடுகிறார்கள் அல்லவா? காரணம் எதுவும் இல்லை, எதையும் பேசுவதுமில்லை. அனைவருடைய தொடர்பும் ஒரு பாபாவோடு இருக்கிறது. குழந்தைகள் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். அதுவும் கூட பாபாவிற்கு உண்மையை சொன்னால் அந்த குறைகள் நீங்கி விடும் மற்றும் உயர்ந்த பதவி அடையலாம். நிறைய பேர் சொல்லாத காரணத்தினால் தங்களுக்கு நிறைய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பாபா தெரிந்திருக்கின்றார். எவ்வளவு தான் புரிய வையுங்கள், ஆனாலும் அவர்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். மாயை பிடித்துக் கொள்கிறது. மாயை எனும் மலைப்பாம்பு அனைவரையும் விழுங்கி விடுகிறது. சேற்றில் கழுத்து வரை மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாபா எவ்வளவு புரிய வைக்கின்றார். வேறு ஒரு விஷயமும் இல்லை, இரண்டு தந்தை இருக்கின்றனர் என்று மட்டும் சொல்லுங்கள். ஒன்று லௌகீக தந்தை எப்போதும் இருக்கவே இருக்கின்றார், சத்யுகத்திலும் இருக்கின்றார் என்றால் கலியுகத்திலும் இருக்கின்றார். சத்யுகத்தில் பரலௌகீக தந்தை கிடைக்கின்றார் என்பது கிடையாது. பரலௌகீக தந்தை ஒரு முறை தான் வருகின்றார். பரலௌகீக தந்தை வந்து நரகத்தை சொர்க்கமாக மாற்றுகின்றார். பக்தி மார்க்கத்தில் அவருக்கு எவ்வளவு பூஜை செய்கிறார்கள். நினைவு செய்கிறார்கள். சிவனுடைய கோவில்கள் நிறைய இருக்கின்றன. சேவை இல்லை என்று குழந்தைகள் சொல்கிறார்கள். அட, சிவனுடைய கோயில்கள் ஆங்காங்கே இருக்கின்றன, அங்கே சென்று இவரை ஏன் பூஜிக்கிறீர்கள் என்று கேளுங்கள்? இவர் ஒன்று சரீரத்தையுடைவர் இல்லை. இவர் யார்? பரமாத்மா என்று சொல்வார்கள். இவரைத் தவிர வேறு யாரையும் சொல்ல மாட்டார்கள். இந்த பரமாத்மா தந்தை அல்லவா என்று கேளுங்கள். அவரை குதா என்று சொல்கிறார்கள், அல்லா என்று சொல்கிறார்கள். குறிப்பாக பரமபிதா பரமாத்மா என்று சொல்லப்படுகிறது, அவரிடமிருந்து என்ன கிடைக்கும், என்பது ஒன்றும் தெரியாது? பாரதத்தில் சிவனுடைய பெயரை அதிகம் பயன்படுத்துகிறார்கள், சிவஜெயந்தி பண்டிகையும் கொண்டாடுகிறார்கள். யாருக்கும் புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். பாபா வித-விதமாக நிறைய புரிய வைக்கின்றார். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் மிகவும் குளுமையாக (மென்மை யாக), பணிவோடு பேச வேண்டும். உங்களுடைய பெயர் பாரதத்தில் அதிகம் பிரபலமாகி யுள்ளது. கொஞ்சம் பேசினாலும் உடனே புரிந்து கொள்வார்கள் - இவர்கள் பி. கு. என்று. கிராமங்கள் பக்கம் அதிகம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே கோவில்களுக்குச் சென்று சேவை செய்வது மிகவும் சுலபமாகும். வந்தீர்கள் என்றால் நாங்கள் உங்களுக்கு சிவபாபாவின் வாழ்க்கைக் கதையைக் கூறுவோம். நீங்கள் சிவனுடைய பூஜை செய்கிறீர்கள், அவரிடம் என்ன கேட்கிறீர்கள்? நாங்கள் தங்களுக்கு இவருடைய முழு கதையையும் சொல்வோம். அடுத்த நாள் லஷ்மி - நாராயணனுடைய கோவிலுக்கு செல்லுங்கள். உங்களுக்குள் குஷி இருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகிறார்கள். அனைவருக்கும் அவரவருடைய அறிவு இருக்கிறது அல்லவா? முதன்- முதலில் சிவபாபாவின் கோவிலுக்கு செல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். பிறகு லஷ்மி - நாராயணனுடைய கோவிலுக்குச் சென்று கேளுங்கள் - இவர்களுக்கு இந்த ஆஸ்தி எப்படி கிடைத்தது? நீங்கள் வந்தீர்கள் என்றால் தங்களுக்கு இந்த தேவி-தேவதைகளின் 84 பிறவிகளின் கதையைச் சொல்வோம். கிராமத்தில் இருப்பவர்களையும் விழிக்கச் செய்ய வேண்டும். நீங்கள் சென்று அன்போடு புரிய வையுங்கள். நீங்கள் ஆத்மா, ஆத்மா தான் பேசுகிறது, இந்த சரீரம் அழியக்கூடியதாகும். இப்போது ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாகி பாபாவிடம் செல்ல வேண்டும். பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள். எனவே கேட்கும்போதே அவர்களுக்கு கவர்ச்சி ஏற்படும். நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம-அபிமானிகளாக ஆவீர்களோ அந்தளவிற்கு உங்களிடத்தில் கவர்ச்சி வரும். இப்போது அந்தளவிற்கு இந்த தேகம் போன்றவற்றிலிருந்து, பழைய உலகத்திலிருந்து முழுமையாக வைராக்கியம் வரவில்லை. இந்த பழைய சரீரத்தை விட வேண்டும் என்பதைத் தெரிந்துள்ளீர்கள், இதன் மீது என்ன பற்று வைப்பது. சரீரத்தில் இருந்துகொண்டே சரீரத்தின் மீது எந்த பற்றும் இருக்கக் கூடாது. உள்ளுக்குள் இந்த சிந்தனை இடைவிடாது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாகி நம்முடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட பாபாவை எப்படி விடுவது? என்பது மனதில் வருகிறது. இப்படிப்பட்ட பாபா பிறகு எப்போதும் கிடைக்க மாட்டார். ஆக இப்படியெல்லாம் சிந்தனை செய்வதின் மூலம் பாபாவும் நினைவுக்கு வருவார், வீடும் நினைவுக்கு வரும். இப்போது நாம் வீட்டிற்குச் செல்கிறோம். 84 பிறவிகள் முடிந்திருக்கிறது. பகலில் தங்களுடைய தொழில் முதலியவற்றை செய்யுங்கள். குடும்ப விவகாரங்களில் இருக்கத்தான் வேண்டும். அதில் இருந்துகொண்டே கூட இவையனைத்தும் அழியப்போகிறது என்பதை புத்தியில் வையுங்கள். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். குடும்ப விவகாரங்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பாபா கூறியுள்ளார். இல்லையென்றால் எங்கே செல்வீர்கள்? தொழில் போன்றவற்றை செய்யுங்கள், புத்தியில் இது நினைவிருக்கட்டும். இவையனைத்தும் அழியப்போகிறது என்பதை. முதலில் நாம் வீட்டிற்குச் செல்வோம் பிறகு சுகதாமத்திற்கு வருவோம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்களுக்குள் பேச வேண்டும். நிறைய நேரம் இருக்கிறது, 8 மணி நேரம் தொழில் செய்யுங்கள். 8 மணி நேரம் ஓய்வெடுங்கள். மீதமுள்ள 8 மணி நேரம் இந்த பாபாவோடு ஆன்மீக உரையாடல் செய்து, பிறகு ஆன்மீக சேவை செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அதில் சிவபாபாவின் கோவிலில், லஷ்மி-நாராயணனுடைய கோவிலுக்குச் சென்று சேவை செய்யுங்கள். உங்களுக்கு நிறைய கோவில் கிடைக்கும். நீங்கள் எங்கு சென்றாலும் சிவனுடைய கோவில் இருக்கும். குழந்தை களாகிய உங்களுக்கு முக்கியமானது நினைவு யாத்திரையாகும். நல்ல விதத்தில் நினைவு யாத்திரையில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். இயற்கை அடிமையாகி விடுகிறது. அவர்களுடைய முகம் கூட வசீகரிக்கக் கூடியதாக இருக்கிறது, எதையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சன்னியாசிகளில் கூட சிலர் முழுமையானவர்களாக இருக்கிறார்கள். நாம் பிரம்மத்தோடு சென்று ஐக்கியமாகி விட வேண்டும் என்ற உறுதியோடு அமருகிறார்கள். இந்த நிச்சயத்தில் நிறைய பேர் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி இருக்கிறது, நாம் இந்த சரீரத்தை விட்டு செல்கின்றோம். ஆனால் அவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். பிரம்மத்தில் ஐக்கியமாவதற்கு அதிகம் முயற்சி செய்கிறார்கள். பக்தியில் காட்சியைப் பார்ப்பதற்கு எவ்வளவு உழைக்கிறார்கள். உயிரையே கொடுத்து விடுகிறார்கள். ஆத்ம கொலை நடப்பதில்லை, சரீரத்தை கொலை (தற்கொலை) செய்து விடுகிறார்கள். ஆத்மா இருக்கத் தான் செய்கிறது, அது சென்று வேறொரு வாழ்க்கை அதாவது சரீரத்தை எடுக்கிறது.

 

எனவே குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்கான ஆர்வம் நன்றாக வையுங்கள், அப்போது பாபாவும் நினைவிற்கு வருவார். இங்கேயும் கூட நிறைய கோவில்கள் இருக்கின்றன. நீங்கள் முழுமையாக நினைவிலிருந்து யாருக்கும் எதையும் சொன்னீர்கள் என்றால், எந்த சிந்தனையும் வராது. யோகத்திலிருப்பவர்களின் ஞான அம்பு முழுமையாக தைக்கும். நீங்கள் நிறைய சேவை செய்யலாம். முயற்சி செய்து பாருங்கள், ஆனால் முதலில் தங்களுக்குள் பார்க்க வேண்டும் - நம்மிடத்தில் மாயையின் பூதங்கள் ஏதும் இல்லை தானே என்று? மாயையின் பூதமுடையவர்கள் வெற்றியடைய முடியுமா என்ன? நிறைய சேவை இருக்கின்றன. பாபா செல்ல முடியாது அல்லவா? ஏனென்றால், சிவபாபா கூடவே இருக்கின்றார். பாபாவை நாம் குப்பைகள் இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியுமா! யாருடன் பேசுவார்! பாபா குழந்தைகளிடத்தில் தான் பேச விரும்புகிறார். எனவே குழந்தைகள் சேவை செய்ய வேண்டும். மகன் தந்தையை வெளிக்காட்டுவார் என்று பாடப்பட்டுள்ளது. பாபா குழந்தைகளை புத்திசாலிகளாக்கியுள்ளார் அல்லவா? சேவையில் ஆர்வமுள்ள நல்ல - நல்ல குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் கிராமங்களுக்குச் சென்று சேவை செய்யலாமா என்று கேட்கிறார்கள். தாராளமாகச் செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். மடித்து வைக்கக் கூடிய சித்திரங்களை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். சித்திரம் இல்லாமல் யாருக்கும் புரிய வைப்பது கடினமாகும். இரவும்-பகலும் மற்றவர்களுடைய வாழ்க்கையை எப்படி உருவாக்குவது என்ற சிந்தனையே இருக்கிறது? நம்மிடமுள்ள குறைகளை எப்படி நீக்கி முன்னேற்றமடைவது? உங்களுக்கு குஷியும் இருக்கிறது. பாபா இவர் 8-9 மாத குழந்தையாவார். இப்படி நிறைய பேர் வருகிறார்கள். விரைவாக சேவைக்கு தகுதியானவர்களாகி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் நம்முடைய கிராமத்தை விழிப்படையச் செய்ய வேண்டும், சகோதரர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தானம் வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும். சேவைக்கான ஆர்வம் அதிகம் இருக்க வேண்டும். ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது. சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நேரம் மிகக்குறைவாக இருக்கிறது அல்லவா? அவர்களுடைய தங்குமிடம் எவ்வளவு பெரியதாக உருவாகி விடுகிறது. ஏதாவது படிப்பினை கொடுக்கும் ஆத்மா வந்து பிரவேசித்து விடுகிறது எனும்போது அவர்களுடைய பெயர் புகழ்பெற்று விடுகிறது. இவர் எல்லையற்ற தந்தை வந்து கல்பத்திற்கு முன் போல் படிப்பினை கொடுக்கின்றார். இந்த ஆன்மீக கல்ப விருட்சம் வளரும். நிராகார மரத்திலிருந்து ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாக வருகின்றன. சிவபாபாவின் மிகப்பெரிய மாலை அல்லது மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நினைவு செய்வதின் மூலம் கூட பாபா தான் நினைவுக்கு வருவார். விரைவாக முன்னேற்றம் ஏற்படும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) குறைந்தது 8 மணி நேரம் பாபாவோடு ஆன்மீக உரையாடல் செய்து குளிர்ச்சி மற்றும் பணிவோடு சேவை செய்ய வேண்டும். சேவையில் வெற்றி அடைவதற்கு உள்ளுக்குள் மாயையின் எந்தவொரு பூதமும் இருக்கக் கூடாது.

 

2) இங்கே எதையெல்லாம் நாம் பார்க்கிறோமோ, இவையனைத்தும் அழியக்கூடியவைகளாகும், நாம் நம்முடைய வீட்டிற்குச் செல்வோம் பிறகு சுகதாமத்திற்கு வருவோம் என்று தங்களுக்கு தாங்களே பேச வேண்டும்.

 

வரதானம்:

உலகில் ஈஸ்வர்ய குடும்ப சினேகத்தின் விதையை விதைக்கக் கூடிய விஷ்வ சேவாதாரி ஆகுக!

 

விளக்கம் :

விஷ்வ சேவாதாரி குழந்தைகளாகிய நீங்கள், உலகில் ஈஸ்வர்ய குடும்ப சினேகத்தை விதைக்கிறீர்கள். அவர்கள நாஸ்திகர்களாயினும் சரி, அலௌகீக ஆஸ்திகர் ஈஸ்வர்ய சினேகத்தின், சுயநலமற்ற சினேகத்தின் அனுபவத்தை செய்விப்பதே விதை விதைப்பதாகும். இந்த விதை சகயோகி ஆவதற்கான விருட்சத்தை தானாகவே வளரச் செய்கிறது. மேலும் சரியான நேரத்தில் சகயோகி ஆகும் பலன் தென்படுகிறது. சில பழங்கள் உடன் பழுக்கின்றன, சில சற்று தாமதமாக உருவாகின்றன.

 

சுலோகன்:

பாக்கிய வள்ளலை அறிவது, உணர்வது மேலும் அவரது, நேரடி குழந்தை ஆவது, இதுவே அனைத்திலும் சிறந்த பாக்கியமாகும்.

 

ஓம்சாந்தி