26-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சாந்தமும் சுத்தமும் நிறைந்த வாயு மண்டலமான அமிர்த வேளையில் நீங்கள் தேகம் உட்பட அனைத்தையும் மறந்து என்னை நினையுங்கள், அந்த நேரம் நினைவு மிக நன்றாக அமையும்.

கேள்வி:
தந்தையின் சக்தி பெற குழந்தைகளான நீங்கள் செய்ய வேண்டிய மிக நல்ல செயல் யாது?

பதில்:
தந்தையின் பொருட்டு உடல், மனம், பொருள் என தனது அனைத்தையும் அர்ப்பணம் செய்வதே அனைத்திலும் உயர்ந்த மிக நல்ல செயலாகும். நீங்கள் தனது அனைத்தையும் அர்ப்பணம் செய்வதற்கு கைமாறாக பாபா அளவிலா சக்தியை தருகின்றார், அதனால் நீங்கள் அகிலம் முழுவதையும் சுகம், சாந்தி நிறைந்த வகையில் நீண்ட கால இராஜ்யம் செய் கின்றீர்கள்.

கேள்வி:
பாபா குழந்தைகளான உங்களுக்கு எந்த மனிதர்களாலும் கற்பிக்க முடியாத எந்த சேவையை கற்பிக்கின்றார்?

பதில்:
ஆன்மீக சேவை ஆத்மாக்களான உங்களை விகாரங்களெனும் வியாதிகளி-ருந்து விடுவிக்க ஞான இன்ஜெக்சன் தருகின்றார் நீங்கள் ஆன்மீக சமூக நல சேவகர்கள். மனிதர்கள் உடல் சார்ந்த சேவை செய்கிறார்கள். ஆனால் ஞான இன்ஜெக்சன் கொடுத்து ஆத்மாக்களை சுடர் விடும் ஜோதியாக மாற்ற முடியாது. இந்த சேவையை தந்தை மட்டுமே குழந்தைகளுக்கு கற்பிக்கின்றார்.

ஓம் சாந்தி.
பகவான் வாக்கு - இது புரிய வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை ஒருபோதும் பகவான் என்று சொல்ல முடியாது. இது மனிதர்களின் உலகம், பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சும வதனத்தில் உள்ளனர். ஆத்மாக்களின் அழிவில்லா தந்தை சிவபாபா. அழியும் உடலுக்கான தந்தையும் அழிவிற்குரியவரே. இது அனைவரும் அறிந்ததே, உனது இந்த அழியும் உடலுக்கான தந்தை யார் என கேட்பார்கள்? ஆத்மாவின் தந்தை யார்? அவர் பரந்தாமத்தில் உள்ளார் என்பதை ஆத்மா அறிந்துள்ளது. இப்போது குழந்தைகளான உங்களை தேக அபிமானியாக மாற்றியது யார்? தேகத்தைப் படைத்தவர். இப்போது ஆத்மாபிமானியாக மாற்றுபவர் யார்? அவரே ஆத்மாக் களின் அழிவில்லா தந்தை யாருக்கு முதல், இடை, கடை இல்லையோ அவரே அழிவற்றவர் ஒருவேளை ஆத்மா பரமாத்மா ஆதி மத்யம் அந்திமம் எனக் கூறினால் படைப்பவரைப் பற்றிய கேள்வி எழும் அதனைத்தான் அவினாசி ஆத்மா, அவினாசி பரமாத்மா எனக் சொல்லப்படுகிறது. ஆத்மாவின் பெயர் ஆத்மா தான். ஆத்மா தன்னைப் பற்றி சரியாக ஆத்மா என புரிந்துள்ளது. எனது ஆத்மாவை துக்கப்படுத்தாதே என்பார்கள் நான் பாவாத்மா என சொல்வது ஆத்மா தான். சொர்க்கத்தில் எந்த ஆத்மாவும் ஒரு போதும் இது போன்ற வார்த்தைகளை சொல்லமாட்டார் கள் இப்போது தூய்மையற்ற ஆத்மாவே பிறகு தூய்மையடைகின்றது. துய்மையற்ற ஆத்மா தான் தூய ஆத்மாவினை மகிமை செய்கின்றனர். மனித ஆத்மாக்கள் அனைவரும் மறு பிறவியில் அவசியம் வந்தே ஆக வேண்டும். இந்த விசயங்கள் யாவும் புதுமையானதே தந்தை யின் அன்பு கட்டளை இருந்தாலும் எழுந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள். முன்பு நீங்கள் பூஜாரியாக இருந்தீர்கள். சிவாய நமஹ என்று சொல்- வந்தீர்கள். அனேக முறை சொல்- வந்தீர்கள். இப்போது எஜமான் உங்களை பூஜைக் குரியவராக மாற்றுகின்றேன். பூஜைக் குரியவர்கள் ஒருபோதும் நமஹ என சொல்வதில்லை! பூஜாரிகளே நமஹ மற்றும் நமஸ்தே சொல்வார்கள். நமஸ்தே என்பதன் பொருளே நமஹ என்பதாகும். தலையை சிறிதே சற்று கீழே இறக்கி குனிவார்கள். இப்போது குழந்தைகளான நீங்கள் நமஹ சொல்ல வேண்டிய அவசியமில்லை. லட்சுமி, நாராயணன் நமஹ என்றோ, விஷ்ணு தேவதாய நமஹ என்றோ, சங்கர் தேவதாய நமஹ என்றோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வார்த்தைகள் பூஜாரியின் அடையாளம் ஆகம். இப்போதோ நீங்கள் முழு உலகிற்கும் எஜமான் ஆக வேண்டும், தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். அவரே சர்வ வல்லமை உடையவர் என்பீர்கள், காலனுக்கெல்லாம் காலன், அகால மூர்த்தியும் அவரே. உலகை படைப்பவரும் அவரே, ஜோதி பிந்து சொரூபம், முன்பெல்லாம் அவரை மகிமை அதிகம் செய்தீர்கள், பிறகு எங்கும் நீங்கமற நிறைந்தவர், நாய், பூனையிலும் இருக்கின்றார் என கூறி அனைத்து மகிமையையும் அழித்தே விட்டீர்கள். இச்சமயத்தில் மனிதர்கள் அனைவருமே பாவாத்மாக்கள் எனும் போது பிறகு விலங்கிற்கு என்ன மகிமை இருக்கும் அனைத்தும் மனிதர்களைப் பற்றிய விசயமே ஆகும். ஆத்மா சொல்கிறது, நான் ஆத்மா, இது எனது உடல் ஆத்மா பிந்துவைப் போன்றே பரமபிதா பரமாத்மாவும் பிந்து ஆவார். அவரும் சொல்கிறார் நான் தூய்மையற்றவர்களை தூய்மை செய்ய சாதாரண உட-ல் வருகின்றேன் வந்து குழந்தைகளுக்கு கீழ்படியும் சேவகனாகி சேவை செய்கின்றேன் நான் ஆன்மீக சமூக நல சேவகன். குழந்தைகள் உங்களுக்கும் ஆன்மீக சேவை செய்ய கற்பிக்கின்றேன் மற்ற அனைவரும் எல்லைக்குட்பட்ட உடல் சார்ந்த சேவை செய்ய கற்பிப்பார்கள் உங்களுடையது ஆன்மீக சேவை, எனவே தான் ஞான மை சத்குரு கொடுத்தார் என்பார்கள்...... உண்மையான சத்குரு அவர் ஒருவரே. அவரே அத்தாரிட்டியுமாவார். அனைத்து ஆத்மாக்களுக்கும் வந்து இன்ஜெக்சன் தருகின்றார். ஆத்மாக்களில் தான் விகாரங்களெனும் வியாதி உள்ளது. இந்த ஞான இன்ஜெக்சன் வேறு யாரிடமும் இல்லை. தூய்மையிழப்பது ஆத்மாவே தவிர தேகம் அல்ல, அதற்கு இன்ஜெக்சன் போடப்படுகிறது. ஐந்து விகாரங்களெனும் கடும் வியாதி பீடித்துள்ளது. அதற்கான இன்ஜெக்சன் ஞானக் கடல் தந்தையின்றி வேறு யாரிடமும் இல்லை. தந்தை வந்து ஆத்மாக்களிடம் பேசுகின்றார், ஏ ஆத்மாக்களே நீங்கள் சுடர் விடும் தீபமாயிருந்தீர்கள், பிறகு மாயையின் நிழல் படிந்து நிழல் படிந்து, படிந்து உங்கள் புத்தி மிகவும் மங்களாகி விட்டது. மற்றபடி யுதிர்ஷ்டர், திருதாராஷ்டிரர் என்ற விசயம் எதுவும் இல்லை. இவை இராவணனின் விசயமே.

பாபா கூறுகின்றார், நான் சாதாரண முறையில் வருகின்றேன், என்னை கோடியில் ஒரு சிலரே தெரிந்து கொள்ள முடியும். சிவஜெயந்தி வேறு கிருஷ்ண ஜெயந்தி வேறு. பரமபிதா பரமாத்மா சிவனை ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைக்க முடியாது. அவர் நிராகார் புள்ளி, இவர் சாகார மனிதர் பாபா கூறுகின்றார், நான் நிராகார் என்னையே மகிமையும் செய்கின்றீர்கள்- ஏ பதீத பாவனரே வந்து இந்த பாரதத்தை மீண்டும் சத்யுக தெய்வீக ராஜஸ்தானாக மாற்றுங்கள். ஒரு சமயம் தெய்விக இராஜஸ்தான் இருந்தது, இப்போது இல்லை. மீண்டும் யார் ஸ்தாபனை செய்வார்? பரமபிதா பரமாத்மாதான் பிரம்ம மூலமாக புதிய உலகை ஸ்தாபனை செய்கின்றார் இப்போதோ தூய்மையற்ற பிரஜைகளை பிரஜைகளே இராஜ்யம் செய்கின்றனர், இதன் பெயரே இடுகாடு. மாயா அழித்து விட்டது. இப்போது நீங்கள் தேகம் உட்பட தேக சம்மந்தங்களை யெல்லாம் மறந்து தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். தேக நிர்வாகத்திற்காக காரியங் களையும் தாராளமாக செய்யுங்கள். மீதம் கிடைக்கும் நேரத்தில் என்னை நினைக்க முயலுங்கள். இந்த ஒன்று தான் நான் உங்களுக்கு தரும் யுக்தி ஆகும். மிக அதிகமாக என்னை நினைவில் நிறுத்தும் நேரம் அமிர்தவேளையாகும், ஏனெனில் அந்நேரமே சாந்தமானது, தூய்மையானது. அந்நேரத்தில் திருடன் திருடுவதில்லை. பாவம் யாரும் செய்வதில்லை, விகாரத்தில் யாரும் ஈடுபடுவதில்லை. உறக்க நேரம் ஆரம்பமாகும், அதனையே காரிருளான இரவு என சொல்லப் படும். இப்போது பாபா கூறுகின்றார்-குழந்தைகள் முடிந்தது முடிந்து போனது, பக்தி மார்க்கத்தில் விளையாட்டு முடிவடைந்தது. இப்போது இது உங்களுக்கு இறுதி பிறவி என புரிய வைக்கப்பட்டுள்ளது. உலகம் எப்படி விருத்தியடையும் என்ற கேள்வி எழுப்ப முடியாது. விருத்தி நடந்து கொண்டே இருக்கும். மே-ருக்கும் ஆத்மாக்கள் கீழே வந்தே ஆக வேண்டும். அனைவரும் வந்த பிறகு வினாசம் ஆரம்பம் ஆகும். பிறகு வரிசையாக அனைவரும் சென்றே ஆக வேண்டும். வழிகாட்டி அனைவருக்கும் முன்னால் இருப்பாரல்லவா.

பாபாவைத்தான் விடுவிப்பவர் என்று சொல்லப்படும், பதீப பாவனரும் அவரே. சொர்க்கமே தூய உலகமாகும். அதனை தந்தையன்றி வேறு யாரும் அமைக்க முடியாது. இப்போது நீங்கள் தந்தையின் சொல்படி உடல், மனம் பொருளால் பாரதத்திற்கு சேவை செய்கின்றீர்கள். காந்திஜியும் விரும்பினார் ஆனால் செய்ய முடியவில்லை. நாடகம் அப்படி அமைக்கப்பட்டிருந்தது. அது நடந்து முடிந்தது. தூய்மையற்ற ராஜாக்களின் இராஜ்யம் முடிய வேண்டியிருந்தது அதனுடைய பெயர் அடையாளமும் இல்லாமல் போனது. அவர்களது சொத்துக்களைப் பற்றியும் பெயர் அடையாளமும் இல்லை, லட்சுமி, நாராயணன் சொர்க்கத்தின் எஜமானாக இருந்தார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியும். ஆனால் அவர்களை அப்படி மாற்றியது யார் என்பது யாருக்கும் தெரியாது. அவசியம் சொர்க்கத்தினை படைப்பவரான தந்தையிடமிருந்தே ஆஸ்தி கிடைத்திருக்கக் கூடும், வேறு யாரும் இவ்வளவு பெரிய ஆஸ்தியை தர முடியாது. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இடம் பெறவில்லை. கீதையில் உள்ளது, ஆனால் பெயர் மாற்றி விட்டனர். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் இராஜாங்கம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு இருவருடைய இராஜ்யமும் இல்லை. இப்போது தந்தை மீண்டும் ஸ்தாபனை செய்கின்றார். குழந்தைகளான உங்களுக்கு குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். இப்போது நாடகம் முடிவடைய உள்ளது. நாம்இப்போது சொல்கிறோம். நாம் இனிமையான இல்லத்தில் வசிப்பவர்கள். அவர்கள் இன்னார் இயற்கை எய்தினார் என்றும் ஜோதியோடு ஜோதியாய் கலந்தார் என்றும் மோட்சம் அடைந்தார் என்றும் சொல்வார்கள். பாரதவாசிகளுக்கு சொர்க்கம் இனிமையானது, அவர்கள் சொர்க்கம் சென்றார் என்பார்கள் பாபா கூறுகின்றார் மோட்சத்தை யாரும் அடைந்ததில்லை. தந்தைதான் அனை வருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். அவர் அவசியம் அனைவருக்கும் சுகமே தருவார். ஒருவர் நிர்வாண தாமத்தில் அமர்வதும் மற்ற ஒருவர் துக்கம் அடைவதும் இதை தந்தையால் பொறுத்துக் கொள்ள முடியாது. தந்தை பதீத பாவனன் ஒன்று முக்திதாமம் தூய்மையானது, மற்றொன்று ஜீவன் முக்திதாமம் தூய்மையானது, துவாபர யுகத்திற்குப் பிறகு தூய்மையிழந்து விடுகின்றனர். ஐந்து தத்துவங்கள் அனைத்தும் தூய்மையிழக்கின்றது பிறகு தந்தை வந்து தூய்மை செய்கின்றார் பிறகு அங்கு சொர்க்கத்தில் தூய்மையான தத்துவங்களால் அழகான தூய்மையான உடல் கிடைக்கப் பெறுவீர்கள். இயற்கை அழகுடன் திகழ்வீர்கள். அதில் ஈர்ப்பு இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணரிடம் எவ்வளவு ஈர்ப்பு உள்ளது. பெயரே சொர்க்கம் எனும் போது வேறென்ன வேண்டும்? பரமாத்மாவை மகிமை அதிகம் செய்கின்றார்கள், அகாலமூர்த்தி என்பார்கள்.... பிறகு அவரையே கள்ளு, முள்ளெல்லாம் காண்பிப்பார்கள். தந்தையைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை, பிறகு தந்தை வரும்போதே புரிய வைக்கின்றார். லௌகீக தந்தையும் கூட குழந்தைகளை படைக்கும் பொழுதே தந்தையைப் பற்றிய வரலாறு அவர்களுக்கு தெரிய வருகிறது தந்தையல்லாமல் குழந்தைகளுக்கு தந்தையின் வரலாறு எப்படி தெரிய வரும். இப்போது லட்சுமி நாராயணரை மணம் செய்ய வேண்டுமெனில் முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்த குறிக்கோள் மிக உயர்ந்த வருமானம், சத்யுகத்தில் தூய இல்லறமார்க்கம் இருந்தது, தூய ராஜஸ்தான் இருந்தது. அதுவே இப்போது துய்மையிழந்து விட்டது. அனை வரும் விகாரியாகி விட்டனர். இதுவோ அசுர உலகம் மிகுதியான ஊழல் நிறைந்துள்ளது இராஜ்யத்தில் சக்தி வேண்டும். ஈஸ்வரிய சக்தி என்பதே இல்லை. பிரஜைகளை பிரஜைகளே ஆளும் இராஜ்யம். யர் தானம் புண்ணியம் என்ற நல்ல செயல் செய்வார்களோ அவர்களுக்கு இராஜா வீட்டில் பிறவி கிடைக்கின்றது. அந்த செய-ல் சக்தி உள்ளது. இப்போது நீங்கள் மிக உயர்ந்த செயல் செய்கின்றீர்கள். நீங்கள் உடல், மனம், பொருள் என தனதனைத்தையும் சிவ தந்தைக்கு அர்ப்பணம் செய்கின்றீர்கள். எனவே சிவ தந்தையும் குழந்தைகளுக்கு முன்னால் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் அவரிடமிருந்து சக்தி பெற்று நீண்ட காலத்திற்கு நிலையான சுகம், சாந்தி நிறைந்த இராஜ்யம் செய்வீர்கள். பிரஜைகளிடமிருந்து சக்தி எதுவும் இல்லை. செல்வத்தை தானம் செய்ததால் எம்.எல்.ஏ ஆனார் என கூற முடியாது. செல்வத்தை தானம் செய்வதால் செல்வந்தர் வீட்டில் பிறவி கிடைக்கின்றது. இப்போது இராஜ்யம் எதுவுமில்லை. இப்போது தந்தை உங்களுக்கு எவ்வளவு சக்தி தருகின்றார். நீங்கள், நாங்கள் நாராயணரை மணம் முடிப்போம் என்பீர்கள். நாம் மனிதரி-ருந்து தேவதையாகின்றோம். இவை யாவும் புத்தம் புதிய விசயங்களாகும். நாரதரைப் பற்றிய விசயமும் இப்போதே உள்ளது. இராமாயணமும் இப்போதைய விசயங்களேயாகும். சத்யுகம், திரேதாயுகத்தில் சாஸ்திரம ஏதுமில்லை. சாஸ்திரங்கள் அனைத்தும் இன்றைய காலத்துடன் தொடர்புடையது மரத்தை பார்த்தால் தெரியும், மடம், சங்கம் யாவும் பின்னால் வந்ததே. முக்கியமானது பிராமண குலம், தேவதா குலம், சத்திரிய குலம்..... பிராமணர்களின் உச்சி குடுமி பெயர் வாய்ந்தது. இந்த பிராமண குலம் அனைத்திலும் உயர்ந்தது அதைப் பற்றிய வர்ணனை எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. விராட ரூபத்திலும் பிராமணர்களை பறக்க விட்டார்கள். நாடகத்தில் அப்படி அமைந்துள்ளது பக்தியால் கீழிறங்குகிறோம் என்று உலக மக்களுக்கு தெரிவதில்லை. பக்தியால் பகவான் கிடைப்பார் என்பார்கள். அதிகம் அழைக்கின்றார்கள், துக்கத்தில் நினைக்கின்றார்கள். நீங்களும் அனுபவிகள். அங்கு துக்கமான விசயமேயில்லை, இங்கு அனைவரிடமும் கோபம் உள்ளது. ஒருவரையொருவர் வன் சொல்லால் வசை பாடுவார்கள்.

இப்போது நீங்கள் சிவாய நமஹ என்று சொல்வதில்லை. சிவன் உங்களது தந்தையாவார். தந்தையை எங்கும் நிறைந்தவர் என்தால் சகோதரத்துவம் பறந்தே போனது. பாரதத்தில் மிக நன்றாக சொல்வார்கள்- இந்து, சீனர் சகோதர சகோதரர்கள், சீனர், முஸ்லீம் சகோதரர்கள். சகோதரர் சகோதரர்கள் தானே. ஒரு தந்தையின் பிள்ளைகள். இப்போது நீங்கள் நாம் அனைவரும் ஒரு தந்தையின் பிள்ளைகள் என்பதை தெரிந்துள்ளீர்கள் இந்த பிராமண குலம் மீண்டும் ஸ்தாபனையாகின்றது. இந்த பிராமண தர்மத்தி-ருந்தே தேவி, தேவதா தர்மம் வருகின்றது. தேவி தேவதா தர்மத்தி-ருந்து சத்திரிய தர்மம், சத்திரியரி-ருந்து பிறகு இஸ்லாமிய தர்மம் வரும். மனித இனமல்லவா. பிறகு பௌத்த மறமும், கிறிஸ்தவர்களும் வருவர். இவ்வாறாக வளர்ந்து வளர்ந்து இவ்வளவு பெரிய மரமாயிற்று. இது மாபெரும் இனம், அது சிறிய இனம். இந்த விளக்கங்கள் யாவும் யாரால் புரிந்து கொள்ள முடியவில்லையோ அவர்களுக்கு தந்தை எளிமையான வழி சொல்கின்றார். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்தாலே சொர்க்கத்தில் நிச்சயம் வருவீர்கள் என்கின்றார். மற்றபடி உயர் பதவி பெற முயற்சி செய்ய வேண்டும். சிவ தந்தையும் உங்களுக்கு புரிய வைக்கின்றார், இந்த தந்தையும் (பிரம்மா) புரிய வைக்கின்றார் என்பதை குழந்தைகளான நீங்கள் தெரிந்துள்ளீர் கள். அதுவே எனது புத்தியிலும் உமது புத்தியிலும் உள்ளது. நாமும் சாஸ்திரங்கள் பலவும் படித்து வந்தோம் ஆனால் இவைகளால் பகவான் கிடைப்பதில்லை என்பதை தெரிந்துள் ளோம். தந்தை புரிய வைக்கின்றார், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே சிவ தந்தை யையும், ஆஸ்தியையும் நினைவு செய்து கொண்டேயிருங்கள். தந்தையே நீங்கள் மிகவும் இனிமையானவர், உங்களுடைய விந்தையே விந்தை என்று இவ்வாறெல்லாம தந்தையினை மகிமை செய்ய வேண்டும். குழந்தைகளான உங்களுக்கு ஈஸ்வரிய லாட்டரி கிடைத்துள்ளது. இப்போது ஞானம், யோகத்திற்காக முயற்சி செய்ய வேண்டும் இதில் மிக உன்னதமான பரிசு கிடைக்கிறது எனவே முயல வேண்டும். நல்லது !

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இப்போது நாடகம் முடிந்து கொண்டிருக்கின்றது. நாம் நமது இனிமையான இல்லத்திற்கு சென்று கொண்டிருக்கின்றோம். இந்த நினைவால் குஷியின் அளவு சதா அதிகரிக்கும்.

2. முடிந்ததை முடித்து விட்டு இந்த இறுதி பிறவியில் தந்தைக்கு தூய்மையெனும் உதவி செய்யவும். உடல், மனம், பொருளால் பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவையில் ஈடுபடவும்

வரதானம்:
அனைத்து பழைய கணக்குகளையும் எண்ணம் மற்றும்
சம்ஸ்கார வடிவத்திலும் அழித்து விடுபவராகி அகநோக்கு முகமாகுக !

பாப்தாதா குழந்தைகளிடம் அனைத்து தெள்ளத் தெளிவான கணக்கையும் பார்க்க விரும்புகின்றார். சிறிதளவும் பழைய கணக்கு அதாவது வெளி முகமான கணக்கு எண்ம் மற்றும் சம்ஸ்காரத்தின் வடிவிலும் இருந்து விடக் கூடாது. எப்போதும் அனைத்து பந்தனங் களி-ருந்தும் விடுபட்டு மற்றும் யோக நிலையி-ருப்பது. இதுவே அக நோக்கு முகமென சொல்லப்படும். எனவே சேவை நன்கு செய்யுங்கள் ஆனால் வெளிநோக்கு பார்வையில்லாது அகநோக்கு பார்வையுடன் செயல்படுங்கள். அகநோக்கு முகத்தின் மூலம் பாபாவின் பெயரை மிளிரச் செய்யுங்கள் ஆத்மாக்கள் தந்தையின் குழந்தைகளாக வேண்டும். அத்தகைய மனமும், முகமும் மலரச் செய்யுங்கள்.

சுலோகன்:
தனது மாற்றத்தின் மூலமாக எண்ணம், சொல், சம்மந்தம், தொடர்பில்
பயனைப் பெறுவதே வெற்றி மூர்த்தி ஆவதாகும்.