27.03.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! பாபா இப்பொழுது உங்களை (பாலனை) வளர்த்துக் கொண்டிருக்கின்றார், கல்வி கற்பிக்கின்றார், வீட்டில் அமர்ந்தபடியே வழி தருகின்றார். எனவே ஒவ்வொரு அடியிலும் வழி அடைந்துக் கொண்டேயிருங்கள். அப்போது உயர்ந்த பதவி கிடைக்கும்.

 

கேள்வி:

தண்டனையிலிருந்து விடுபட எந்தவொரு முயற்சி நீண்டகாலம் செய்ய வேண்டும்?

 

பதில்:

நஷ்டமோஹா (பற்றிலிருந்து விடுதலை) அடைவதற்கான முயற்சி. எதன் மீதும் பற்று இருக்கக் கூடாது. எனக்கு யார் மீதும் கவர்ச்சி இல்லை தானே? என்று தன்னைத்தான் கேளுங்கள். எந்தவொரு பழைய சம்மந்தமும் கடைசி நேரத்தில் நினைவுக்கு வரக்கூடாது. யோக பலத்தின் மூலம் அனைத்து கணக்கு வழக்குகளையும் முடித்துவிடுங்கள். அப்போதுதான் உயர்ந்த பதவி கிடைக்கும்.

 

ஓம் சாந்தி.

இப்பொழுது நீங்கள் யார் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். பாப்தாதாவிற்கு முன்னால். பாபா என்றும் சொல்ல வேண்டும், தாதா என்றுக் கூட சொல்ல வேண்டும். பாபாவும் கூட இந்த தாதா மூலமாக நம் முன்னால் அமர்ந்து இருக்கின்றார். வெளியில் இருக்கும்போது தந்தையை நினைவு செய்ய வேண்டும். கடிதம் எழுத வேண்டியுள்ளது. இங்க முன்பாக அமர்ந்துள்ளீர்கள். உரையாடல் செய்கின்றீர்கள் யாருடன்? பாப்தாதாவுடன், இவர்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த அதாரிட்டியாக இருக்கின்றார்கள். பிரம்மா சாகாரத்திலும் சிவபாபா நிராகாரமாக இருக்கிறார்கள் இப்பொழுது நீங்கள் உயர்ததிலும் உயர்ந்த அதாரிட்டியைத் தெரிந்து கொண்டீர்கள். பாபாவின் சந்திப்பு எப்படி நடைபெறுகின்றது. யாரை பதீத பாவனன் என்று அழைக்கின்றோமோ? அந்த எல்லையற்ற தந்தை உங்கள் முன்னால் அமர்ந்துள்ளார். தந்தை குழந்தைகளை வளர்க்கவும் செய்கிறார், படிக்க வைக்கவும் செய்கிறார். வீட்டில் இப்படி இப்படி நடந்துகொள்ளவும் என்று வீட்டில் அமர்ந்தபடியே குழந்தைகளுக்கு வழி கிடைக்கின்றது. இப்போது ஸ்ரீமத்படி நடந்தீர்கள் என்றால் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் இப்போது தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டால் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைந்து விடுவீர்கள். நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பாபா வழிப்படி நடந்து உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைகின்றோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். மனித உலகில் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி இந்த லட்சுமி நாராயணன் பதவி. இவர்கள் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். மனிதர்கள் சென்று இந்த உயர்ந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றார்கள். தூய்மைத்தான் முக்கியமான விஷயம். மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருக்கின்றார்கள். ஆனால் உலகின் எஜமான் எங்கே? இப்பொழுது இருக்கும் மனிதர்கள் எங்கே? பாரதம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்தது, நாம் தான் உலகிற்கு அதிபதியாக இருந்தோம், என்பது உங்கள் புத்தியில் இருக்கின்றது. வேறு யாருடைய புத்தியிலும் இந்த விஷயம் இல்லை. இவருக்குக் கூட தெரிந்திருக்கவில்லை? முற்றிலும் ஆழ்ந்த இருளில் இருந்தார்.

 

பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா எப்படி ஆகின்றார்கள் என்பதை பாபா வந்து புரிய வைக்கின்றார். இது மிக ஆழமான அழகான விஷயம். வேறு யாரும் இதைப் புரிந்துக் கொள்ள முடியாது. பாபாவைத் தவிர வேறு யாரும் இதனை கற்றுத்தர முடியாது. நிராகார தந்தை வந்து கற்பிக்கின்றார். கிருஷ்ண பகவான் மகாவாக்கியம் கிடையாது. பாபா சொல்கின்றார்- உங்களுக்கு படிப்பு கற்பித்து உங்களை சுகமானவர் களாக ஆக்குகின்றேன். பிறகு நான் என்னுடைய நிர்வாண தாமத்திற்குச் சென்று விடுகின்றேன். இப்பொழுது குழந்தைகள் சதோபிரதானமாகிக் கொண்டிருக்கின்றீர்கள். இதற்கு எந்த செலவுமில்லை. தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என்னை நினைவு செய்யுங்கள். ஒரு பைசா செலவு செய்யாமல் 21 பிறவிக்கு நீங்கள் உலகத்தினுடைய அதிகாரி ஆகின்றீர்கள். சிலர் பைசா அனுப்புகின்றனர். அதுவும் கூட தனது எதிர் காலத்தை உருவாக்க. கல்பத்திற்கு முன்பு யார் எவ்வளவு கஜானாவில் அளித்தார்களோ அவ்வளவே இப்பொழுதும் செய்கின்றார்கள். அதிகமாகவோ குறைவாகவோ அளிக்க முடியாது. புத்தியில் ஞானம் இருப்பதால் கவலைப் படுவதற்கான விஷயங்கள் எதுவுமில்லை. எந்தவித கவலையும் இல்லாமல் நாம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம். இதனை புத்தியில் நினைவு செய்ய வேண்டும். குழந்தைகள் நீங்கள் மிகுந்த குஷியில் இருக்க வேண்டும். பிறகு நஷ்டோ மோஹா ஆக வேண்டும். இங்கு நஷ்டோ மோஹா ஆவதன் மூலம் அங்கு மோஹ ஜீத் ராஜா ராணி ஆக முடியும். நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். இந்த பழைய உலகம் முடியப்போகின்றது. இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், இதன் மீது ஏன் நாம் மோஹம் (பற்று) வைக்க வேணடும்? யாருக்காவது வியாதி இருக்கின்றது டாக்டர் நம்பிக்கையில்லை என்று கூறிவிட்டால் அவர் மீதுள்ள பற்று விலகிவிடுகின்றது. புரிந்திருக்கின்றீகள் ஆத்மா ஒரு உடலை விட்டால் இன்னொன்றை எடுத்து விடுகின்றது. ஆத்மா அழியாதது அல்லவா? ஆத்மா சென்றுவிட்டது, சரீரம் அழிந்துவிட்டது, பிறகு அதனை நினைவு செய்வதால் என்ன பலன் இருக்கின்றது. பாபா கூறுகின்றார் இப்போது நீங்கள் நஷ்டோமோஹா ஆகவும். எனக்கு யார் மீதும் பற்றுதல் இல்லை தானே என்று தன்னைத் தான் கேட்கவும். கடைசியில் அவர்களின் நினைவு அவசியம் ஏற்படும். பற்றிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தால் இந்த பதவி அவசியம் கிடைக்கும். சொர்க்கத்திற்கு அனைவரும் வந்துவிடுவீர்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. தண்டனை அடையாமல் உயர்ந்த பதவியடைவது தான் முக்கியமான விஷயம். யோக பலத்தின் மூலம் தனது கணக்கு வழக்குகளை முடித்துவிட்டால் பிறகு தண்டனை அடைய மாட்டீர்கள். பழைய சம்மந்தங்கள் நினைவுக்கு வரக் கூடாது. இப்பொழுது நம்முடைய சம்மந்தம் பிராமணர்களுடன் இருக்கின்றது. பிறகு தேவதைகளுடன் இருக்கும். இப்பொழுதுள்ள சம்மந்தம் (உறவு) தான் மிக உயர்ந்தது.

 

இப்பொழுது நீங்கள் ஞானக்கடல் பாபாவுடையவர் ஆகியிருக்கின்றீர்கள். முழு ஞானமும் புத்தியில் இருக்கின்றது. உலக சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது என்பது இதற்கு முன்னால் தெரியாது. இப்பொழுது பாபா புரிய வைத்திருக்கின்றார். பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. எனவே தான் பாபா மீது அன்பு இருக்கின்றது. பாபா மூலமாக சொர்க்க இராஜ்யம் கிடைக்கின்றது. அவருக்கு இந்த ரதம் நிச்சயிக்கப்பட்டது. பாரதத்தில் தான் பாக்கியசாலி ரதம் என்ற புகழ் இருக்கின்றது. பாபா வருவதே பாரதத்தில் தான். குழந்தைகள் உங்களுடைய புத்தியில் 84 பிறவி ஏணிப்படியின் ஞானம் இருக்கின்றது. நாம் தான் 84 பிறவியின் சக்கரத்தைச் சுற்றி வருபவர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். 84 பிறவி சக்கரத்திலிருந்து யாரும் விடுபட முடியாது. உங்களுக்குத் தெரியும் ஏணிப்படியில் இறங்குவதற்கு நிறைய நேரம் ஆகின்றது. ஆனால் ஏறுவதற்கு இந்த கடைசி பிறவி மட்டுமே. எனவே தான் சொல்லப்படுகின்றது நீங்கள் மூன்று உலகிற்கும் தலைவன், மூன்று காலத்தை உணர்ந்தவன் ஆகின்றீர்கள். நான் மூன்று உலகத்திற்கு தலைவன் ஆகப்போகின்றேன் என்பது முதலில் உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது பாபா கிடைத்திருக்கின்றார், படிப்பு கற்றுத் தருகின்றார், அப்பொழுது நாம் புரிந்துக்கொள்கின்றோம். பாபாவிடம் சிலர் வரும் போது பாபா கேட்கின்றார், இதற்கு முன்னால் இந்த ஆடையில் இந்த வீட்டில் எப்போதாவது சந்தித்துள்ளீர்களா? ஆமாம் பாபா கல்ப கல்பமாக! சந்திக்கிறோம் என்று சொல்கின்றார்கள். எனவே புரிந்துக் கொள்ளப்படுகிறது பிரம்மாகுமாரிகள் சரியாக புரிய வைத்திருக்கின்றார்கள் என்று. இப்பொழுது குழந்தைகள் நீங்கள் சொர்க்கத்தின் மரத்தை முன்னால் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அருகில் இருக்கின்றதல்லவா? மனிதர்கள் பாபாவை சொல்கின்றார்கள்: பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்று, பிறகு குழந்தைகள் எங்கிருந்து வருவார்கள். அவர்களும் கூட பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் ஆகி விடுவார்கள். சொல்கின்ற வார்த்தைகள் அனைத்தும் தவறானது. யார் கல்பத்திற்கு முன்னால் புரிந்து கொண்டார்களோ அவர்களின் புத்தியில் தான் பதியும். கண்காட்சி பாருங்கள் எப்படியெல்லாம் வருகின்றார்கள். சிலர் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து எழுதிவிடுகின்றனர் இவையெல்லாம் கற்பனை என்று இவர்கள் நம் குலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். அநேகவிதமான மனிதர்கள் இருக்கின்றனர். உங்களுடைய புத்தியில் முழு மரம் நாடகம், 84 உடைய சக்கரம் வந்து விட்டது. இப்போது முயற்சி செய்ய வேண்டும். அதுவும் கூட நாடகத்தின் படி தான் நடக்கின்றது. நாடகத்தில் பதிவாகி உள்ளது. நாடகத்தில் இருந்தால் முயற்சி செய்வோம் இப்படி சொல்வது மிகவும் தவறு. நாடகத்தைச் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் அவர்களை நாஸ்திகர் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் பாபாவிடம் அன்பு வைக்க முடியாது. நாடகத்தின் ரகசியத்தை தவறாகப் புரிந்து கொள்வதால் கீழே விழுந்து விடுகின்றார்கள். பிறகு புரிய வைக்கப் படுகின்றது அவர்களுக்கு; அதிர்ஷ்டம் இல்லை. தடைகள் பலவிதத்தில் வரும். அதனை பொருட்படுத்தாதீர்கள். என்ன நல்ல விஷயங்களை நான் கூறுகின்றேனோ அதனை மட்டும் கேளுங்கள். பாபாவை நினைவு செய்வதால் அதிகமான குஷி இருக்கும். இப்பொழுது 84 ஜென்மம் முடியப் போன்றது, நாம் இப்போது நம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது நம் புத்தியில் இருக்கின்றது. இப்படி தனக்குத்தானே உரையாடல் செய்யவும். நீங்கள் பதீதமானவர்கள் என்றால் செல்ல முடியாது. முதலில் நாயகன் வேண்டும் பிறகு தான் ஊர்வலம் செல்லும். போலாநாத்தின் ஊர்வலம் என்ற புகழ் இருக்கின்றது. அனைவரும் நம்பர் பிரகாரம் செல்லத்தான் வேண்டும். இவ்வளவு ஆத்மாக்களின் கூட்டம் எப்படி நம்பர் பிரகாரம் செல்லும். மனிதர்கள் நிலத்தில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொள்கின்றார்கள். எவ்வளவு பர்னிச்சர் வசதிகள் தேவைப்படுகின்றது. ஆத்மா புள்ளி. அதற்கு என்ன வேண்டும். எதுவும் தேவையில்லை. ஆத்மா எவ்வளவு சிறிய இடத்தை எடுத்துக் கொள்கின்றது. இந்த சாகார மரம் மற்றும் நிராகார மரத்திற்கும் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளது. அது புள்ளிகளுடைய மரம். இந்த அனைத்து விஷயங்களையும் பாபா புத்தியில் அமர வைக்கின்றார். உங்களைத் தவிர வேறு யாரும் இந்த விஷயங்களைக் கேட்க முடியாது. பாபா இப்பொழுது நமது வீடு மற்றும் இராஜ்யத்தின் நினைவை ஏற்படுத்துகின்றார். குழந்தைகள் நீங்கள் படைப்பவரை தெரிந்து கொள்வதன் மூலம் படைப்பினுடைய ஆதி, மத்ய, அந்திமத்தை தெரிந்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் திரிகாலதரிசி, ஆஸ்திகர்களாக ஆகிவிட்டீர்கள். முழு உலகிலும் (வேறு)யாரும் ஆஸ்திகர்கள் கிடையாது. அது எல்லைகுட்பட்ட படிப்பு, இது எல்லைகப்பாற்பட்ட படிப்பு. அங்கு அநேக ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள், இங்கு கற்பிக்கக் கூடியவர் ஒரே ஒரு ஆசிரியர் தான். அவரும் அதிசயமானவராக, இருக்கின்றார். அவர் தந்தையாக, ஆசிரியராக, சத்குருவாக இருக்கின்றார். இந்த ஆசிரியர் முழு உலகிற்காக உள்ளார். ஆனால் அனைவரும் படிப்பதில்லை. பாப்தாதவை அனைவரும் தெரிந்துக்கொண்டால் ஓடி வருவார்கள் அவரைப் பார்ப்பதற்காக. கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் பிரம்மாவின் உடலில் பாபா வந்துள்ளார் என்பது தெரிந்தால் ஓடி வருவார்கள். எப்போது யுத்தம் ஆரம்பம் ஆகின்றதோ அப்போது பாபாவின் பிரத்யக்ஷ்தா (வெளிப்பாடு) ஏற்படும். பிறகு யாருமே வர முடியாது. உங்களுக்குத் தெரியும் இந்த பல தர்மத்தினுடைய வினாசம் ஏற்படத்தான் வேண்டும். முதன் முதலில் ஒரே ஒரு பாரதம் மட்டுமே இருந்தது. வேறு எந்த கண்டமும் இல்லை. இப்பொழுது உங்களுடைய புத்தியில் பக்திமார்க்கத்தினுடைய விஷயங்கள் இருக்கின்றன. புத்தியில் உள்ள எதையாவது மறக்க முடியுமா? ஆனால் இந்த நினைவுகள் இருந்தாலும் கூட பக்தி முடியப் போகின்றது, நாம் இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஞானம் புத்தியில் உள்ளது. இந்த பழைய உலகில் இருக்கக் கூடாது. வீட்டிற்குச் செல்வதற்கான சந்தோஷம் இருக்க வேண்டுமல்லவா? இப்பொழுது உங்களுக்கு இது வானபிரஸ்த நிலை என்பது புரிய வைக்கப்பட்டிருக்கின்றது. உங்களுடைய இரண்டு பைசாவை (குறைவான பணம்) இந்த இராஜ்யம் ஸ்தாபனை செய்வதில் ஈடுபடுத்துகின்றீர்கள், அதுவும் கல்பத்திற்கு முன்பு போலத்தான். நீங்களும் கல்பத்திற்கு முன்பு உள்ளவர்கள் தான். பாபா நீங்களும் கல்பத்திற்கு முன்பு உள்ளவர் தான் என்று குழந்தைகள் கூறுகின்றார்கள். நாம் கல்ப கல்பமாக பாபாவிடம் படிக்கின்றோம். ஸ்ரீமத்படி நடந்து உயர்ந்தவராக வேண்டும். இந்த விஷயங்கள் வேறு யாருடைய புத்தியிலும் இருக்க முடியாது. நாம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்ரீமத்படி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம் என்ற குஷி நம்மிடம் உள்ளது. பாபா தூய்மையாகுங்கள் என்பதை மட்டும் தான் சொல்கின்றார். நீங்கள் தூய்மையானால் முழு உலகமும் தூய்மையாகிவிடும். அனைவரும் வாபஸ் சென்றுவிடுவார்கள். மற்ற விஷயங்களில் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். எப்படி தண்டனைக் கிடைக்கும், என்னவாகும்? இதில் நமக்கு என்ன சிந்தனை? நாம் நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டும். மற்ற தர்மத்தின் விஷயங்களில் நாம் ஏன் செல்ல வேண்டும். நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். உண்மையில் இந்த பெயர் பாரதத்தில் இருக்கின்றது, பிறகு இந்துஸ்தான் என்று வைத்துவிட்டார்கள். நாம் இந்து தர்மத்தைச் சேர்ந்தவரல்ல. நாங்கள் தேவி தேவதா என்று நாம் எழுதினாலும் கூட அவர்கள் இந்து என்று எழுதிவிடுகின்றார்கள், ஏனென்றால் தேவி தேவதை தர்மம் எப்போது இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. யாரும் புரிந்து கொள்ளவுமில்லை. இப்பொழுது எத்தனை பி.கு. இருக்கின்றார்கள், இது குடும்பம் ஆகிறதல்லவா? வீடாகி விட்டது அல்லவா? பிரம்மா பிரஜாபிதாவாக உள்ளார். கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர். முதன் முதலில் நீங்கள் பிராமணன் ஆகின்றீர்கள். பிறகு வர்ணத்தில் வருகின்றீர்கள்.

 

உங்களுடைய அந்த கல்லூரி யுன்வர்சிட்டியாகவும் உள்ளது. மருத்துவமனையாகவும் உள்ளது. ஞான கண்மை சத்குரு கொடுத்ததால் அஞ்ஞானம் என்ற இருள் விலகியது என்று பழபொழி இருக்கின்றது. யோக சக்தி மூலமாக நீங்கள் சதா ஆரோக்கியமானவர், சதா செல்வந்தர் ஆகின்றீர்கள். நேச்சர் க்யூர் (இயற்கை வைத்தியம்) செய்கின்றார். இப்பொழுது உங்களுடைய ஆத்மா க்யூர் ஆவதால் சரீரமும் க்யூர் ஆகின்றது. அதுதான் ஆன்மீக நேச்சர் க்யூர், செல்வம், ஆரோக்கியம், மகிழ்சிசி 21 ஜென்மத்திற்குக் கிடைக்கின்றது. மேலே எழுதிப் போடுங்கள், ஆன்மீக, நேச்சர் க்யூர் மனிதர்களை தூய்மையாக்குவதற்கான யுக்தியை எழுதுவதில் ஒன்றும் தவறில்லை. ஆத்மாதான் தூய்மை இல்லாமல் இருக்கின்றது, எனவே தான் அழைக்கின்றார்கள். ஆத்மா சதோபிரதானமாக தூய்மையாக இருந்தது. பிறகு அசுத்தமாகிவிட்டது. பிறகு மீண்டும் எப்படி தூய்மை ஆகும்? பகவானுடைய மகாவாக்கியம்-மன்மனாபவ, என்னை நினைவு செய்தீர்களானால் நான் உத்திரவாதம் தருகின்றேன் நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள் இப்படியெல்லாம் போர்டு வையுங்கள் என்று பாபா எவ்வளவு யுக்திகளை கூறுகின்றார். ஆனால் இதுவரை யாரும் அப்படி போர்டு வைக்கவில்லை. சித்திரங்கள் முக்கியமானது வைத்திருக் கின்றீர்கள். உள்ளே யாராவது வந்தால் நீங்கள் ஆத்மா பரந்தாமத்தில் இருக்கக் கூடியவர்கள் என்று சொல்லுங்கள். இங்கு இந்த சரீரம் கிடைத்திருப்பது நம்முடைய நடிப்பை நடிப்பதற்காக. இந்த சரீரம் அழியக்கூடியதல்லவா? பாபாவை நினைவு செய்தீர்களென்றால் விகர்மம் வினாசம் ஆகிவிடும். இப்பொழுது உங்களுடைய ஆத்மா அசுத்தமாக இருக்கின்றது, தூய்மையானீர்கள் என்றால் வீட்டிற்குச் சென்றுவிடுவீர்கள். புரிய வைப்பது மிகவும் சகஜமானது. யார் கல்பத்திற்கு முன்பு உள்ளவர்களோ அவர்களே வந்து மலர் ஆகின்றார்கள். இதில் பயப்படுவதற்கு எந்த விஷயமும் இல்லை. நீங்கள் நல்ல விஷயத்தை எழுதுகின்றீர்கள். அந்த குருமார்கள் மந்திரங்கள் தருகின்றார்கள் அல்லவா? பாபா கூட மன்மனாபவ என்ற மந்திரத்தைக் கொடுத்து படைப்பவர் மற்றும் படைப்பினுடைய ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். இல்லற வாழ்வில் இருந்தாலும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். பிறருக்கு அறிமுகம் கொடுங்கள், லைட் ஹவுஸ் ஆகுங்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆவதற்கு நிறைய மறைமுக முயற்சி செய்யவும். எப்படி பாபா தெரிந்திருக்கின்றார், நான் ஆத்மாக்களுக்கு கற்பிக்கின்றேன். அப்படி குழந்தைகள் நீங்களும் கூட ஆத்ம அபிமானி ஆகவும். வாயினால் சிவா, சிவா என்று சொல்ல வேண்டாம். தலை மீது பாவத்தின் சுமை நிறைய இருக்கின்றது. எனவே தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினைவு செய்யவும். நினைவின் மூலமாகத் தான் தூய்மையாவீர்கள். கல்பத்திற்கு முன்பு யார் யார் எப்படி பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்தார்களோ அவர்களே அவரவர் நேரத்தின்படி அடைவார்கள். இதில் எந்த மாற்றமும் ஏற்பட முடியாது. முக்கியமான விஷயம் ஆத்ம அபிமானியாகி பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால், மாயாவினுடைய அடி விழாது. தேக அபிமானத்தில் வருவதால் ஏதாவது விகர்மம் ஏற்படுகின்றது பிறகு நூறு மடங்கு பாவமாகிவிடுகின்றது. ஏணிப்படியில் இறங்குவதற்கு 84 பிறவி ஆகின்றது. இப்போது ஏறுவதற்கான கலை ஒரு பிறவி. பாபா வந்திருக்கின்றார். எனவே லிஃப்ட் கூட கண்டுபிடித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இடுப்பில் கை வைத்து படியில் ஏறினார்கள். இப்பொழுது சகஜமான லிஃப்ட் வெளிப்பட்டுள்ளது. ஒரு வினாடியில் முக்தி மற்றும் ஜீவன்முக்தி ஒரு வினாடியில் கிடைக்கின்றது, இது கூட லிஃப்ட் ஆக உள்ளது. ஜீவன் பந்தனத்தில் வருவதற்கு 84 பிறவிகள் 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றது. ஜீவன்முக்தியில் வருவதற்கு ஒரு பிறவி மட்டுமே ஆகின்றது. எவ்வளவு சகஜமாக இருக்கின்றது. உங்களில் பின்னால் வருபவர்கள் கூட உடனே மேலே சென்றுவிடுகின்றார்கள். இழந்த பொருளை மீண்டும் கொடுப்பதற்காக பாபா வந்துள்ளார் என்பதைப் புரிந்திருக்கின்றீர்கள். அவருடைய வழிப்படி அவசியம் நடப்போம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எந்த கவலையுமில்லாமல் தனது குப்த இராஜ்யத்தை ஸ்ரீமத் படி ஸ்தாபனை செய்யவும். விக்னங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். கல்பத்திற்கு முன்பு யார் உதவி செய்தார்களோ அவர்கள் இப்பொழுது அவசியம் செய்வார்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

 

2. இப்போது என்னுடைய வானப்பிரஸ்த நிலை, நான் வாபஸ் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கின்றேன் என்ற குஷி இருக்க வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்கு குப்த (மறைவாக) முயற்சி செய்யவும். எந்த ஒரு விகர்மமும் செய்யாதீர்கள்.

 

வரதானம்:

அன்பு மற்றும் உதவியாளர் என்ற விதியின் மூலம் யக்ஞ சகயோகிகளாக ஆகக் கூடிய சகஜயோகி ஆகுக.

 

பாப்தாதாவிற்கு குழந்தைகளின் அன்பு தான் மிகவும் பிடித்தமானது. யார் யக்ஞத்திற்கு பிரியமானவர்களாக மற்றும் உதவியாளர்களாக ஆகிறார்களோ அவர்கள் சகஜயோகிகளாக ஆகிவிடுகின்றனர். சகயோகம் தான் சகஜயோகமாகும். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் (தில்வாலா) தந்தைக்கு உள்ளப்பூர்வமான அன்பு மற்றும் உள்ளப்பூர்வமான சகயோகம் தான் பிரியமானதாக இருக்கிறது. குறுகிய உள்ளமுடையவர்கள் சிறிது உதவி செய்து மகிழ்ச்சியடைந்து விடுவார்கள், பரந்த உள்ளமுடையவர்கள் எல்லையற்ற உதவி செய்வார்கள். மதிப்பு அன்பில் தான் இருக்கிறதே தவிர பொருளில் அல்ல. அதனால் தான் சுதாமாவின் அவல் பாடப்பட்டிருக்கிறது. ஒருவர் அதிகமாக கொடுத்து விட்டு அங்கு அன்பு இல்லையெனில் சேமிப்பு ஏற்படாது. அன்பாக சிறிது கொடுத்தாலும் அது பல மடங்காக ஆகிவிடும்.

 

சுலோகன்:

நேரம் மற்றும் சக்தி வீணாகி விடக் கூடாது, அதற்காக முதலில் சிந்தியுங்கள், பிறகு செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி