27.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! பாபாவின் பார்வை எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றையும் கடந்து செல்கிறது. நீங்கள் கூட எல்லை (சத்யுகம்) மற்றும் எல்லையற்றது (கலியுகம்) இவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

 

கேள்வி:

உயர்ந்ததிலும் உயர்ந்த ஞான ரத்தினங்களின் தாரணை எந்த குழந்தைகளுக்கு நன்றாக அமைகிறது?

 

பதில்:

யாருடைய புத்தியோகம் ஒரு தந்தையுடன் உள்ளதோ, தூய்மையாக ஆகியுள்ளார்களோ அவர்களுக்கு இந்த இரத்தினங்களின் தாரணை நன்றாக ஆகும். இந்த ஞானத்திற்காக சுத்தமான பாத்திரம் வேண்டும். தப்பும் தவறுமான சங்கல்பங்கள் கூட முடிந்து போய் விட வேண்டும். தந்தையுடன் யோகம் செய்து, செய்து பாத்திரம் தங்கமாகிவிடும் பொழுது தான் இரத்தினங்களை அதில் வைக்க முடியும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து தினந்தோறும் புரிய வைக்கிறார். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியத்தினுடையதாக இந்த சிருஷ்டி சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. புத்தியில் இந்த ஞானம் இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லை மற்றும் எல்லையில்லாததைக் கடந்து செல்ல வேண்டும். தந்தையோ எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றிற்கு அப்பாற்பட்டவர். அதனுடைய பொருளையும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். ஞானம், பக்திக்கு பின்னால் இருப்பது வைராக்கியம் என்ற தலைப்பு பற்றியும் புரிய வைக்க வேண்டும். ஞானத்திற்கு பகல் என்று கூறப்படுகிறது. அப்பொழுது புது உலகமாக இருக்கும். அதில் இந்த பக்தி என்ற அறியாமை இருக்காது. அது எல்லைக்குட்பட்ட உலகமாக இருக்கும். ஏனெனில் அங்கு மிகவும் குறைவானோர் இருப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல விருத்தி ஆகிறது. பாதி காலத்திற்குப் பிறகு பக்தி ஆரம்பமாகிறது. அங்கு சந்நியாச தர்மம் இருக்கவே இருக்காது. சந்நியாசம் அல்லது தியாகம் இருப்பதில்லை. பிறகு பின்னால் சிருஷ்டியின் விருத்தி ஆகிறது. மேலிருந்து ஆத்மாக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இங்கு விருத்தி ஆகிக் கொண்டே இருக்கிறது. எல்லைக்குட்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லைக்கப்பால் செல்கிறது. தந்தையினுடைய பார்வையோ எல்லை மற்றும் எல்லைக்கப்பாற்பட்டது, இவற்றையும் கடந்து செல்கிறது. எல்லைக்குட்பட்டதில் எவ்வளவு குறைவான குழந்தைகள் இருப்பார்கள், பின் இராவண இராஜ்யத்தில் எவ்வளவு விருத்தி ஆகி விடுகிறது என்பதை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றையும் கடந்து செல்ல வேண்டும். சத்யுகத்தில் எவ்வளவு சிறிய உலகமாக இருக்கும்! அங்கு சந்நியாசம் அல்லது வைராக்கியம் ஆகியவை இருக்காது. பின்னால் துவாபரயுக முதற் கொண்டு மற்ற தர்மங்கள் ஆரம்பமாகின்றன. சந்நியாச தர்மமும் இருக்கும். அவர்கள் வீடு வாசலின் சந்நியாசம் செய்கிறார்கள். எல்லோரையும் அறிந்து கொள்ளவோ வேண்டும் அல்லவா? அதற்கு ஹடயோகம் மற்றும் எல்லைக்குட்பட்ட சந்நியாசம் என்று கூறப்படுகிறது. வீடு வாசலை மட்டும் விட்டு விட்டு காட்டிற்குச் செல்கிறார்கள். துவாபர முதல் பக்தி ஆரம்பமாகிறது. ஞானமோ இருப்பதே இல்லை. ஞானம் என்றால் சத்யுகம். திரேதாயுகம். பக்தி என்றால் அறியாமை (அஞ்ஞானம்) மற்றும் துக்கம். இதை நல்ல முறையில் புரிய வைக்க வேண்டி உள்ளது. பிறகு துக்கம் மற்றும் சுகத்தைக் கடந்து செல்ல வேண்டும். எல்லைகள் மற்றும் எல்லையற்றவைகளைக் கடந்து செல்லுதல். மனிதர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் அல்லவா? எதுவரை சமுத்திரம் உள்ளது, ஆகாயம் உள்ளது.... நிறைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் முடிவை அடைய முடிவதில்லை. ஆகாய விமானத்தில் செல்கிறார்கள். அதில் கூட மீண்டும் திரும்பி வர முடியும் அளவிற்கு பெட்ரோல் வேண்டும் அல்லவா? மிகவும் தொலை தூரம் செல்கிறார்கள். ஆனால் எல்லைக்கப்பால் செல்ல முடியாது. எல்லைக்குட்பட்டவரை தான் செல்வார்கள். நீங்களோ எல்லைக்குட்பட்டது, எல்லையற்றது இரண்டையும் கடந்து செல்கிறீர்கள். முதல் புது உலகத்தில் எல்லை இருக்கும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். மிகவும் குறைவான மனிதர்கள் இருப்பார்கள். அதற்கு சத்யுகம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றிய ஞானம் இருக்க வேண்டும் அல்லவா! இந்த ஞானம் வேறு யாரிடமும் கிடையாது. உங்களுக்குப் புரிய வைப்பவர் தந்தை ஆவார். அந்த தந்தை எல்லைக் குட்பட்டது மற்றும் எல்லையற்றவற்றிற்கு அப்பாற்பட்டு இருக்கிறார். வேறு யாரும் புரிய வைக்க முடியாது. படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். பிறகு இவற்றைக் கடந்து செல்லுங்கள் என்று கூறுகிறார். அங்கோ எதுவும் இருப்பதில்லை. எவ்வளவு தான் தூரம் சென்றாலும் கூட ஆகாயமே ஆகாயம் தான் இருக்கும். இதற்கு எல்லை, எல்லையில்லாதவற்றிற்கு அப்பாற்பட்டது என்று கூறப்படுகிறது. எந்த முடிவையும் அடைய முடியாது. முடிவில்லாதது என்று கூறுவார்கள். முடிவில்லாதது என்று கூறுவதோ எளிது. ஆனால் முடிவு என்பதன் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களுக்கு தந்தை அறிவு அளிக்கிறார். நான் எல்லையையும் அறிந்துள்ளேன், எல்லையற்றவற்றை அறிந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். இன்னின்ன தர்மம் இன்னின்ன காலத்தில் ஸ்தாபனை ஆகி உள்ளது. சத்யுகத்தின் எல்லையை நோக்கி பார்வை செல்கிறது. பிறகு கலியுகத்தின் எல்லையில்லாததை நோக்கி பார்வை செல்கிறது. பிறகு நாம் கடந்து சென்று விடுவோம். அங்கு எதுவும் கிடையாது. சூரியன் சந்திரனுக்கும் மேலே நாம் செல்கிறோம். அங்கு நமது சாந்திதாமம் ஸ்வீட் ஹோம் (இனிய இல்லம்) உள்ளது. அப்படியும் சத்யுகம் கூட ஸ்வீட் ஹோம் (இனிய இல்லம்) ஆகும். அங்கு அமைதியும் இருக்கிறது. பின் இராஜ்ய பாக்கியத்தின் சுகமும் உள்ளது. இரண்டுமே உள்ளது. வீடு சென்றீர்கள் என்றால் அங்கு அமைதி மட்டும் இருக்கும். சுகத்தின் பெயர் எடுக்க மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் சாந்தியும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.மேலும் சுகம் சாந்தியும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். அங்கோ சாந்தியும் இருக்கும். சுகத்தின் இராஜ்யம் கூட இருக்கும். மூல வதனத்திலோ சுகத்தின் விஷயம் கிடையாது.

 

அரைக் கல்பம் உங்களுடைய இராஜ்யம் நடக்கிறது. பிறகு அரை கல்பத்திற்கு பிறகு இராவண ராஜ்யம் வருகிறது அசாந்தி இருப்பதே 5 விகாரங்களின் காரணமாக. 2500 வருடங்கள் நீங்கள் ஆட்சி புரிகிறீர்கள். பிறகு 2500 வருடங்களுக்குப் பிறகு இராவண ராஜ்யம் ஆகிறது. அவர்களோ இலட்சக்கணக்கான வருடங்கள் என்று எழுதி விட்டுள்ளார்கள். ஒரேயடியாக முட்டாள் போல ஆகி விட்டுள்ளார்கள். 5 ஆயிரம் வருடங்களின் கல்பத்தை இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விடுவது முட்டாள்தனம் என்றுதானே கூறுவார்கள் இல்லையா? சிறிதளவு கூட பண்பாடு இல்லை. தேவதைகளிடம் எவ்வளவு தெய்வீகப் பண்பாடு இருந்தது. அது இப்பொழுது பண்பாடற்றதாக ஆகி விட்டுள்ளது. ஒன்றுமே அறியாமல் உள்ளார்கள். அசுர குணங்கள் வந்து விட்டுள்ளன. இதற்கு முன்பு நீங்கள் கூட ஒன்றும் அறியாமல் இருந்தீர்கள். காம வாளை செலுத்தி முதல், இடை, கடை துக்கமுடையவர்களாக ஆக்கி விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு இராவண சம்பிரதாயம் என்றே கூறப்படுகிறது. இராமர் குரங்கு சேனையை எடுத்து கொண்டார் என்று காண்பித்துள்ளார்கள். இராமசந்திரர் திரேதாவினுடையவர் ஆவார். அங்கு பிறகு குரங்கு எங்கிருந்து வந்தது? மேலும் பிறகு கூறுகிறார்கள், இராமருடைய சீதை தூக்கிச் செல்லப்பட்டார் என்று. இப்பேர்ப்பட்ட விஷயங்களோ அங்கு நடக்கவே இல்லை. ஜீவராசிகள், மிருகங்கள் ஆகியவை இங்கு 84 இலட்சம் உயிரினங்கள் இருப்பது போல அங்கு சத்யுகம், திரேதாவில் அந்த அளவு இருக்குமா என்ன? இந்த முழு எல்லையில்லாத நாடகத்தை தந்தை வந்து புரிய வைக்கிறார். குழந்தைகள் மிகவுமே தொலைநோக்குடையவர் ஆக வேண்டும். இதற்கு முன்பு உங்களுக்கு எதுவுமே தெரியாமல் இருந்தது. மனிதர்களாக இருந்து கூட பெரியவர் யார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். சுலோகத்தில் கூட உன்னுடைய பெயர் மிக மேலானது.. என்றும் பாடுகிறார்கள் இப்பொழுது உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். தந்தை எல்லை மற்றும் எல்லையற்ற இரண்டின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். அதற்கு அப்பால் எதுவும் கிடையாது. அது நீங்கள் இருப்பதற்கான இடம் ஆகும். அதற்கு பிரம்மாண்டம் என்றும் கூறுகிறார்கள். எப்படி இங்கு நீங்கள் ஆகாய தத்துவத்தில் அமர்ந்துள்ளீர்கள். இதில் ஏதாவது தெரிய வருகிறதா என்ன? ரேடியோவில் "ஆகாஷ்வாணி"" என்கிறார்கள். இப்பொழுது இந்த ஆகாயமோ முடிவில்லாதது. முடிவை அடையவே முடியாது. எனவே ஆகாஷ்வாணி என்று கூறுவதால் மனிதர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? இந்த வாய் என்பது வெளி ஆகும். வாயிலிருந்து பேச்சு (குரல்) வெளிப்படுகிறது. இதுவோ சாதாரண விஷயம் ஆகும். வாயிலிருந்து குரல் வெளிப்படுவது இதற்கு ஆகாஷ்வாணி என்று கூறப்படுகிறது. தந்தை கூட ஆகாயம் மூலமாக வாணி நடத்த வேண்டி உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு தன்னைப் பற்றியும் முழு இரகசியம் கூறியுள்ளார். உங்களுக்கு நிச்சயம் ஆகிறது. மிகவும் சுலபமான விஷயம் ஆகும். எப்படி நாம் ஆத்மாவாக இருக்கிறோமோ அதே போல தந்தையும் பரம ஆத்மா ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா ஆவார் இல்லையா? அனைவருக்கும் அவரவர் பாகம் கிடைத்துள்ளது. எல்லோரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். பிறகு இல்லற மார்க்கத்தின் ஜோடி மேரு. பிறகு வரிசைக்கிரமமாக மாலையைப் பாருங்கள். எவ்வளவு சிறியதாக உள்ளது! பிறகு சிருஷ்டி பெருகி பெருகி எவ்வளவு பெரியதாக ஆகி விடுகிறது. எவ்வளவு கோடிக்கணக்கான மணிகள் அதாவது ஆத்மாக்களின் மாலை ஆகும்! இவை எல்லாம் படிப்பு ஆகும். தந்தை என்ன புரிய வைக்கிறாரோ அதை நல்ல முறையில் புத்தியில் தாரணை செய்யுங்கள். விருட்சத்தின் விளக்கமோ நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். விதை மேலே இருக்கிறார். இது பலவிதமான விருட்சம் ஆகும். இதனுடைய ஆயுள் எவ்வளவு? விருட்சம் விருத்தி அடைந்து கொண்டே இருக்கிறது. எனவே நாள் முழுவதும் புத்தியில் இதே இருக்க வேண்டும். இந்த சிருஷ்டி என்ற கல்ப விருட்சத்தின் ஆயுள் முற்றிலுமே மிகச் சரியாக உள்ளது. 5 ஆயிரம் வருடங்களில் ஒரு நொடியின் வித்தியாசம் கூட ஏற்பட முடியாது. குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இப்பொழுது எவ்வளவு ஞானம் உள்ளது! யார் மிகவும் திடமாக இருக்கிறார்களோ அவர்களுடைய புத்தியில் இருக்கும். திடமானவர்களாக எப்பொழுது ஆகமுடியும் என்றால், தூய்மையாக இருக்கும் பொழுது. இந்த ஞானத்தை தாரணை செய்ய வேண்டும் என்றால் தங்கப் பாத்திரம் வேண்டும். பிறகு எவ்வளவு சுலபமாக ஆகி விடும் என்றால் எப்படி பாபாவிற்கு சுலபமாக ஆகி விடுகிறதோ அது போல. பிறகு உங்களுக்கும் மாஸ்டர் நாலேஜ்ஃபுல் என்று கூறுவார்கள். பிறகு வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப மாலையின் மணி ஆகி விடுவீர்கள். இது போன்ற விஷயங்களை பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இந்த ஆத்மா கூட புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். தந்தை கூட இந்த சரீரத்தின் மூலமாகத் தான் புரிய வைக்கிறார். தேவதைகளின் சரீரத்தின் மூலமாக அல்ல. தந்தை நடிக்க வேண்டி உள்ளது. 5 ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் வந்து பாகத்தை ஏற்று நடிப்பார்.

 

உயர்ந்ததிலும் உயர்ந்தவர் நான் ஆவேன் என்று தந்தை புரிய வைக்கிறார். பிறகு இருப்பது மேரு. யார் ஆதியில் மகாராஜா மகாராணியாக இருக்கிறார்களோ அவர்களே மீண்டும் போய் கடைசியில் ஆதி தேவன் ஆதி தேவி ஆகிறார்கள். இந்த முழு ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புரிய வைத்தீர்கள் என்றால் ஆச்சரியப்படுவார்கள். இவர்களோ சரியாகத் தான் கூறுகிறார்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபமானவர் தான் (நாலேஜ் ஃபுல்) ஞானம் நிறைந்தவர் ஆவார். அவரைத் தவிர வேறு யாரும் ஞானம் அளிக்க முடியாது. இந்த எல்லா விஷயங்களையும் தாரணை செய்ய வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு தாரணை ஆவதில்லை. இருப்பதோ மிகவும் எளிதான விஷயங்கள். எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. ஒன்று இதில் யாத்திரை வேண்டும். அப்பொழுது தான் தூய்மையான பாத்திரத்தில் இரத்தினங்கள் நிலைக்க முடியும். இவர் உயர்ந்ததிலும் உயர்ந்த இரத்தினம் ஆவார்.பாபாவோ வைர வியாபாரியாக இருந்தார். மிகவும் நல்ல வைரங்கள், மாணிக்கங்கள் ஆகியவை வந்து கொண்டிருக்கும். அதை பின் வெள்ளி டப்பாவில் பஞ்சு ஆகியவை போட்டு நல்ல முறையில் வைத்திருப்பார். யாராவது பார்த்தார்கள் என்றால் இது (ஃபர்ஸ்ட் கிளாஸ்) முதல்தரமானது என்பார்கள். இதுவும் அவ்வாறே ஆகும். நல்ல பொருள் நல்ல பாத்திரத்தில் வைக்கப்படும் பொழுது அழகாக இருக்கும். உங்களுடைய காதுகள் கேட்கின்றன. அதில் தாரணை ஆகிறது. தூய்மையாக இருந்தீர்கள், புத்தியோகம் தந்தையிடம் இருந்தது என்றால் தாரணை நன்றாக ஆகும். இல்லை என்றால் எல்லாமே வெளியேறி விடும். ஆத்மா இருப்பதும் எவ்வளவு சிறியதாக! அதில் எவ்வளவு ஞானம் நிரம்பி உள்ளது! எவ்வளவு நல்ல தூய்மையான பாத்திரம் வேண்டும்! எந்த ஒரு சங்கல்பம் கூட எழக் கூடாது. தப்பும் தவறுமான சங்கல்பங்கள் அனைத்தும் நின்று போய் விட வேண்டும். அனைத்து பக்கங்களிலிருந்தும் புத்தியோகத்தை அகற்ற வேண்டும். என்னுடன் யோகம் செய்து செய்து பாத்திரத்தை தங்கமாக ஆக்கி விட்டீர்கள் என்றால் இரத்தினங்களை வைக்க முடியும். பிறகு மற்றவர்களுக்கு தானம் அளித்துக் கொண்டே இருப்பீர்கள். பாரதம் மகாதானி என்று ஏற்கப்பட்டுள்ளது. அந்த பணத்தின் தானமோ நிறைய பேர் செய்கிறார்கள். ஆனால் இது அவினாஷி ஞான ரத்தினங்களின் தானம் ஆகும். தேகம் உட்பட எதெல்லாம் உள்ளதோ அவை அனைத்தையும் விடுத்து ஒருவரிடம் புத்தியின் யோகம் இருக்க வேண்டும். நாமோ தந்தையினுடையவர்கள் ஆவோம். இதில் தான் உழைப்பு தேவைப்படுகிறது. (ஏய்ம் - ஆப்ஜெக்ட்) இலட்சியமோ தந்தை கூறி விடுகிறார். புருஷார்த்தம் (முயற்சி) செய்வது குழந்தைகளின் வேலை ஆகும். இப்பொழுது தான் இந்த அளவு உயர்ந்த பதவியை அடைய முடியும். எந்த ஒரு தப்பும் தவறுமான சங்கல்பங்கள் அல்லது விகல்பங்கள் (தீய எண்ணங்கள்) வரக் கூடாது. தந்தை தான் ஞானத்தின் கடல். எல்லை, எல்லையில்லாதது இவற்றைக் கடந்து இருக்கிறார். எல்லாமே அமர்ந்து புரிய வைக்கிறார். பாபா நம்மைப் பார்க்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நானோ எல்லை மற்றும் எல்லையற்றவைகளைக் கடந்து மேலே சென்று விடுகிறேன். நான் இருப்பதும் அங்கேயேதான். நீங்கள் கூட எல்லை, எல்லை இல்லாதவைகளைக் கடந்து சென்று விடுங்கள். சங்கல்பம், விகல்பங்கள் எதுவுமே வரக் கூடாது. இதில் உழைப்பு வேண்டும். இல்லற காரியங்களில் இருந்தபடியே தாமரை மலருக்குச் சமானமாக ஆக வேண்டும். கைகள் காரியம் செய்தபடியே இருக்க மனம் நினைவு செய்ய வேண்டும். இல்லறத்தினரோ நிறைய பேர் இருக்கிறார்கள். இல்லறத்தில் இருப்பவர்கள் ஞானத்தை ஏற்று நடக்கும் அளவிற்கு வீட்டில் இருக்கும் குழந்தைகள் (பாபா வீட்டில்) எடுப்பதில்லை. சென்டர் நடத்துபவர்கள், முரளி வகுப்பு எடுப்பவர்கள் கூட (ஃபெயில்) தோற்று விடுகிறார்கள். மேலும் படிப்பவர்கள் மேலே சென்று விடுகிறார்கள். இனி முன்னால் போகப் போக உங்களுக்கு எல்லாம் தெரிந்து கொண்டே போகும். பாபா முற்றிலுமே சரியாகக் கூறுகிறார். நமக்கு யார் கற்பித்துக் கொண்டிருந்தார்களோ அவர்களை மாயை சாப்பிட்டு விட்டது. மகாரதியை மாயை ஒரேயடியாக விழுங்கி விட்டுள்ளது. இப்பொழுது அவர்கள் இல்லாமலே போய் விட்டார்கள். மாயாவி துரோகி (டிரெய்ட்டர்) ஆகி விடுகிறார்கள். வெளி நாடுகளில் கூட துரோகி ஆகி விடுகிறார்கள் அல்லவா? எங்கெங்கோ சென்று அடைக்கலம் புகுகிறார்கள். யார் பவர்ஃபுல் (சக்திசாலியாக) இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் சென்று விடுகிறார்கள். இச்சமயத்திலோ இறப்பு எதிரிலேயே உள்ளது அல்லவா?எனவே மிகவும் வலிமை உடையவர்களிடம் செல்வார்கள். தந்தை தான் (பவர்ஃபுல்) சக்திவான் ஆவார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தை சர்வசக்திவான் ஆவார். நமக்குக் கற்பித்து கற்பித்து முழு உலகிற்கும் அதிபதியாக ஆக்கி விடுகிறார். அங்கு எல்லாமே கிடைத்து விடுகிறது. எந்த ஒரு பொருளையும் அடைவதற்கு நாம் (புருஷார்த்தம்) மிகுந்த முயற்சி செய்ய வேண்டிய வகையில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு பொருளும் இருக்காது. அதுவும் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப பதவி அடைகிறார்கள். தந்தையைத் தவிர இது போன்ற விஷயங்கள் யாருக்குமே தெரியாது. எல்லோருமே பூசாரி ஆவார்கள். பெரிய பெரிய சங்கராச்சாரியார்கள் ஆகியோர்கள் கூட இருக்கிறார்கள் தான். பாபா அவர்களுடைய மகிமையைக் கூட கூறுகிறார் முதலில் தூய்மையின் வலிமை யினால் பாரதத்தை மிகவும் நன்றாக தாங்குவதற்கு அவர்கள் கருவி ஆகிறார்கள். அதுவும் கூட சதோபிரதானமாக இருக்கும் பொழுது. இப்பொழுதோ தமோபிரதானமாக உள்ளார்கள். அவர்களிடம் என்ன வலிமை உள்ளது? இப்பொழுது உங்களது புத்தியிலோ முழு ஞானம் உள்ளது. புத்தியில் தாரணை ஆகி இருக்கட்டும். மேலும் நீங்கள் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். தந்தையையும் நினைவு செய்யுங்கள். தந்தை தான் முழு விருட்சத்தின் இரகசியத்தை புரிய வைக்கிறார். குழந்தைகள் இவர்களைப் போல இனிமையாகவும் ஆக வேண்டி உள்ளது. யுத்தம் நடக்கும் அல்லவா? மாயையின் புயல்கள் கூட நிறைய வருகின்றன. அனைத்தையுமே சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. தந்தையின் நினைவில் இருப்பதால் எல்லாப் புயல்களும் போய் விடும். ஹாதம்தாயி என்ற விளையாட்டு பற்றி கூறுகிறார்கள் அல்லவா? கூழாங்கல் (வாயில்) போட்டு கொண்டு விடுவார். அப்பொழுது மாயை போய் விடும். கூழாங்கல்லை எடுத்து விடும் பொழுது மாயை வந்து விடும். தொட்டாற் சிணுங்கி உள்ளது அல்லவா? கையில் தொட்டீர்கள் என்றால், வாடிப் போய் விடும். மாயை மிகவுமே கூர்மையாக உள்ளது. இவ்வளவு உயர்ந்த படிப்பை படிக்க படிக்க இருந்த இடத்திலேயே கீழே வீழ்த்தி விடுகிறது. எனவே தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். தங்களை சகோதர சகோதரர்கள் என்று உணருங்கள். பின் எல்லை மற்றும் எல்லையில்லாதவை இவற்றைக் கடந்து சென்று விடுவீர்கள். சரீரமே இல்லை என்றால் பின் பார்வை (திருஷ்டி) எங்கே போகும்? இவ்வளவு உழைப்பு செய்ய வேண்டும். கேட்டு விட்டு மனமுடைந்து போய் விடக் கூடாது. கல்ப கல்பமாக உங்களுடைய புருஷார்த்தம் (முயற்சி) நடக்கிறது மற்றும் நீங்கள் உங்களது பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். படித்திருப்பது அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். மற்றபடி எதை ஒரு பொழுதும் படித்திருக்கவில்லையோ அதைக் கேளுங்கள் மற்றும் நினைவு செய்யுங்கள். அதற்கு பக்தி மார்க்கம் என்று கூறப்படுகிறது. நீங்கள் இராஜரிஷி ஆவீர்கள் அல்லவா? தலைமுடி விரிந்திருக்கட்டும் முரளியையும் நடத்துங்கள். சாது சந்நியாசிகள் ஆகியோர் கூறுவதெல்லாம் மனிதர்களின் முரளி. இது எல்லையில்லாத தந்தையின் முரளி ஆகும். சத்யுக திரேதாவில் ஞானத்தின் முரளியின் அவசியமே இல்லை. அங்கு ஞானத்தின் அவசியமும் இல்லை. பக்தியின் அவசியமும் இல்லை. இந்த ஞானம் உங்களுக்கு இந்த சங்கமயுகத்தில் கிடைக்கிறது மற்றும் தந்தை தான் அளிப்பவர் ஆவார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. புத்தியில் ஞான ரத்தினங்களை தாரணை செய்து தானம் செய்ய வேண்டும். எல்லை, எல்லையில்லாதவை இவற்றை கடந்து எப்பேர்ப்பட்ட ஸ்திதியில் இருக்க வேண்டும் என்றால் ஒரு பொழுதும் தப்பும் தவறுமான சங்கல்பங்கள் அல்லது விகல்பங்கள் (தீய எண்ணங்கள்) வரக் கூடாது. ஆத்மாக்களாகிய நாம் சகோதர சகோதரர்கள் ஆவோம் என்ற இதே நினைவு இருக்கட்டும்.

 

2. மாயையின் புயல்களிலிருந்து தப்பித்து இருப்பதற்காக வாயில் தந்தையின் நினைவு என்ற கூழாங்கல்லைப் போட்டு விட வேண்டும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். தொட்டாற்சிணுங்கி போல ஆகக் கூடாது. மாயையிடம் தோற்று விட கூடாது.

 

வரதானம்

அனைத்து சக்திகளையும் (ஹன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) சகயோகி ஆக்கி, பிரத்தியட்சதாவின் (வெளிப்படுத்துவது) திரையை விலக்கக் கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

 

எப்போது அனைத்து சக்திகளும் சேர்ந்து சிரேஷ்ட சக்தி, ஈஸ்வரிய சக்தி, ஆத்மிக சக்தி ஒன்று உள்ளதென்றால் அது இந்தப் பரமாத்ம சக்தி தான் என்று எப்போது சொல்கிறார்களோ, அப்போது தான் பிரத்தியட்சதாவின் திரை விலகும். அனைவரும் ஒரு ஸ்டேஜ் மீது ஒன்று கூடி, அத்தகைய அன்பின் சந்திப்பை நிகழ்த்த வேண்டும். இதற்காக அனைவரையும் அன்பென்னும் கயிற்றில் கட்டி சமீபத்தில் கொண்டு வாருங்கள், சகயோகி ஆக்குங்கள். இந்த அன்பு தான் காந்தம் ஆகும். அதனால் அனைவரும் ஒன்றாக, குழு ரூபத்தில் பாபாவின் ஸ்டேஜ் மீது வந்து சேர்ந்து விடுவார்கள். ஆகவே இப்போது கடைசி பிரத்தியட்சதாவின் ஹீரோ பார்ட்டில் நிமித்தம் ஆவதற்கான சேவை செய்யுங்கள். அப்போது உண்மையான சேவாதாரி என்று உங்களைச் சொல்வார்கள்.

 

சுலோகன்

சேவையின் மூலம் அனைவரின் ஆசிர்வாதங்களைப் பெறுவதென்பது முன்னேற்றத்திற்கான லிஃப்ட் ஆகும்.

 

ஓம்சாந்தி