28.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய அனைத்துக் கஜானாக்களையும் நிரப்புவதற்காக சிவபாபா வந்திருக்கிறார். கஜானா நிரம்பினால் காலன் என்ற பகைவன் தூர விலகி விடுவான் என்று சொல்லவும் படுகின்றது.

 

கேள்வி :

ஞானவான் குழந்தைகளின் புத்தியில் எந்த ஒரு விசயத்தின் நிச்சயம் உறுதியாக இருக்கும்?

 

பதில் :

அவர்களுக்கு உறுதியான நிச்சயம் இருக்கும், அதாவது நம்முடைய இந்த நாடக பாகம் ஒரு போதும் தேய்வதோ அழிவதோ இல்லை. ஆத்மாவாகிய எனக்குள் 84 பிறவிகளின் அழியாத பாகம் அடங்கியுள்ளது. புத்தியில் இந்த ஞானம் இருக்குமானால் அவர் ஞானவான் ஆவார். இல்லையென்றால் முழு ஞானமும் புத்தியில் இருந்து பறந்து விடும்.

 

ஓம் சாந்தி.

பாபா வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு என்ன சொல்கிறார்? என்ன சேவை செய்கிறார்? இச்சமயம் பாபா இந்த ஆன்மீகப் படிப்பை சொல்லித் தருவதற்கான சேவை செய்து கொண்டிருக்கிறார். இதையும் நீங்கள் அறிவீர்கள். தந்தையின் பாகமும் உள்ளது, ஆசிரியரின் பாகமும் உள்ளது. மேலும் சத்குருவின் பாகமும் உள்ளது. மூன்று பாகங்களையும் நன்கு நடித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், அவர் தந்தையாக இருக்கிறார். சத்கதி அளிக்கக் கூடிய குருவாகவும் இருக்கிறார், மேலும் அனைவருக்காகவும் இருக்கிறார். சிறியவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் அவர் ஒருவர் தான் உள்ளார். சுப்ரீம் தந்தை, சுப்ரீம் டீச்சர். எல்லையற்ற கல்வியைக் கற்றுத் தருகிறார். நீங்கள் மகாநாடுகளில் கூடப் புரிய வைக்க முடியும், அதாவது அனைவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி அறிந்துள்ளோம். பரமபிதா பரமாத்மா சிவபாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அறிவோம். நம்பர்வார் அனைத்தும் புத்தியில் நினைவிருக்க வேண்டும். முழு விராட ரூபமும் நிச்சயமாக புத்தியில் நினைவிருக்கும். நாம் இப்போது பிராமணண் ஆகியிருக்கிறோம். பிறகு நாம் தேவதா ஆவோம். பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவோம். இதுவோ குழந்தைகளுக்கு நினைவிருக்கிறது தானே? குழந்தைகள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இவ்விஷயங்கள் நினைவிருக்காது. உயர்வு மற்றும் தாழ்வினுடைய முழு இரகசியமும் புத்தியில் இருக்க வேண்டும். நாம் உயர்வாக இருந்தோம். பிறகு தாழ்வில் வந்துவிட்டோம். இப்போது இடையில் உள்ளோம். சூத்திரரும் இல்லை, முழு பிராமணராகவும் ஆகவில்லை. இப்போது உறுதியான பிராமணராக இருந்தாலோ பிறகு சூத்திரத் தன்மையின் செயல்பாடு இருக்காது. பிராமணர்களிடமும் கூடப் பிறகு சூத்திரத் தன்மை வந்து விடுகின்றது. இதையும் நீங்கள் அறிவீர்கள், எப்போதிருந்து பாவம் செய்யத் தொடங்கியிருக்கிறோம்? எப்போதிலிருந்து காமச்சிதையில் ஏறியிருக்கிறீர்கள்? ஆக உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. மேலே இருப்பவர் பரமபிதா பரமாத்மா. பிறகு நீங்கள் ஆத்மாக்கள். இவ்விஷயங்கள் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் நிச்சயமாக நினைவிருக்க வேண்டும். இப்போது நாம் பிராமணர்கள். தேவதா ஆகிக் கொண்டிருக்கிறோம். பிறகு வைசிய, சூத்திர பரம்பரையில் வருவோம். பாபா வந்து நம்மை சூத்திரரில் இருந்து பிராமணர்களாக ஆக்குகிறார். பிறகு நாம் பிராமணராக இருந்து தேவதா ஆவோம். பிராமணராகி கர்மாதீத் நிலையை அடைந்து பிறகு திரும்பிச் செல்வோம். நீங்கள் பாபாவைப் பற்றியும் அறிவீர்கள். குட்டிக்கரணம் அல்லது 84 பிறவிகளின் சக்கரத்தையும் நீங்கள் அறிவீர்கள். குட்டிக்கரணத்தின் மூலம் உங்களுக்கு மிகவும் எளிமைப் படுத்திப் புரிய வைக்கிறார். உங்களை மிகவும் இலேசாக ஆக்குகிறார். இதனால் தங்களைப் புள்ளியாக உணர்ந்து உடனே ஓடுவீர்கள். மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருந்தால் புத்தியில் படிப்பு தான் நினைவிருக்கும். உங்களுக்கும் இந்தப் படிப்பு நினைவிருக்க வேண்டும். இப்போது நாம் சங்கமயுகத்தில் உள்ளோம். பிறகு நாம் அப்படியே சுற்றி வருவோம். இந்தச் சக்கரம் சதா சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தச் சக்கரம் முதலியவற்றி ன் ஞானம் பிராமணக் குழந்தைகளாகிய உங்களிடம் தான் உள்ளது, சூத்திரர்களிடம் கிடையாது. தேவதைகளிடமும் கூட இந்த ஞானம் கிடையாது. இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பக்தி மார்க்கத்தில் தயார் செய்துள்ள சித்திரங்கள் அனைத்தும் தவறானவை. உங்களிடம் இருப்பவை மிகச் சரியானவை. ஏனென்றால் நீங்கள் மிகச் சரியானவர்களாக ஆகிறீர்கள். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. அதனால் புரிந்து கொள்கிறீர்கள், பக்தி எனச் சொல்லப் படுவது எது, ஞானம் எனச் சொல்லப் படுவது எது என்று. ஞானம் தருபவராகிய பாபா ஞானக்கடல் இப்போது கிடைத்துள்ளார். பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் என்றால் நோக்கம் குறிக்கோள் பற்றி அறிந்துள்ளனர் இல்லையா? பக்தி மார்க்கத்திலோ நோக்கம் குறிக்கோள் என்பது கிடையாது. நாம் உயர்ந்த தேவதையாக இருந்தோம், பிறகு கீழே இறங்கி விட்டோம் என்பது உங்களுக்கு அப்போது தெரியாதிருந்தது. இப்போது பிராமணர் ஆனதும் தெரிந்து கொண்டீர்கள். பிரம்மாகுமார்-குமாரிகளாக நிச்சயமாக முன்பும் ஆகியிருக்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரோ புகழ் பெற்றதாகும். பிரஜாபிதாவோ மனிதர் தான் இல்லையா? அவருக்கு இவ்வளவு ஏராளமான குழந்தைகள் என்றால் நிச்சயமாகத் தத்தெடுக்கப் பட்டவர்களாகவே இருக்க வேண்டும். எவ்வளவு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்! ஆத்மா ரூபத்திலோ நீங்கள் அனைவரும் சகோதர-சகோதரர்கள். இப்போது உங்களுடைய புத்தி எவ்வளவு தூரம் செல்கிறது! எப்படி மேலே நட்சத்திரங்கள் நின்று கொண்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். தூரத்திலிருந்து எவ்வளவு சிறயதாகக் காணப் படுகின்றன! நீங்களும் மிகச் சிறிய ஆத்மாக்கள். ஆத்மா ஒருபோதும் சிறியது-பெரியதாக ஆவதில்லை. ஆம், உங்களுடைய பதவி மிக உயர்ந்தது. அவற்றையும் கூட சூரிய தேவதா, சந்திர தேவதா எனச் சொல்கின்றனர். சூரிய தந்தை, சந்திர தாய் எனச் சொல்வார்கள். மற்றப்படி ஆத்மாக்கள் அனைவரும் நட்சத்திரங்கள். ஆக, ஆத்மாக்கள் அனைத்தும் ஒரே மாதிரி சிறியவை. இங்கே வந்து பார்ட்தாரி ஆகின்றனர். தேவதைகளாகவோ நீங்கள் தான் ஆகிறீர்கள்.

 

நீங்கள் மிகவும் சக்திசாலியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதான தேவதைகளாக ஆகி விடுவீர்கள். நம்பர்வார் கொஞ்சம்-கொஞ்சம் வேறுபாடோ இருக்கவே செய்கிறது. சில ஆத்மாக்கள் பவித்திரமாகி சதோபிரதான தேவதையாக ஆகி விடுகிறார்கள். சில ஆத்மாக்கள் முழுப் பவித்திரமாக ஆவதில்லை. ஞானத்தைக் கொஞ்சம் கூட அறிந்து கொள்ளவில்லை. பாபா புரிய வைத்துள்ளார், பாபாவின் அறிமுகமோ அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கடைசியில் பாபாவையோ அறிந்து கொள்வார்கள் இல்லையா? விநாசத்தின் சமயம் அனைவருக்கும் தெரிய வரும், பாபா வந்திருக்கிறார் என்பது. இப்போதும் கூட ஒரு சிலர் சொல்கின்றனர், பகவான் நிச்சயமாக எங்கோ வந்திருக்கிறார் என்று. ஆனால் தெரியவில்லை. ஏதேனும் ரூபத்தில் வந்து விடுவார் எனப் புரிந்து கொண்டுள்ளனர். மனிதர்களின் வழிமுறைகளோ அதிகம் உள்ளன இல்லையா? உங்களுடையது ஒரே ஓர் ஈஸ்வரிய வழி முறை. நீங்கள் ஈஸ்வரிய வழி முறை ஸ்ரீமத் படி என்னவாக ஆகிறீர்கள்? ஒன்று மனித வழி, இன்னொன்று ஈஸ்வரிய வழி. மேலும் மூன்றாவது தேவதா வழி. தேவதைகளுக்கும் கூட வழிமுறையை (ஸ்ரீமத்) யார் கொடுத்தார்? பாபா. பாபாவின் ஸ்ரீமத்தே சிரேஷ்டமாக ஆக்கக் கூடியது. ஸ்ரீஸ்ரீ என்று பாபாவைத் தான் சொல்வார்கள். மனிதரையல்ல. ஸ்ரீஸ்ரீ தான் வந்து ஸ்ரீ ஆக்குகிறார். தேவதைகளை சிரேஷ்டமானவர்களாக ஆக்குபவர் பாபா தான், அவரை ஸ்ரீஸ்ரீ எனச் சொல்வார்கள். பாபா சொல்கிறார், நான் உங்களை அதுபோல் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறேன். அந்த மனிதர்கள் பிறகு தங்களுக்கு ஸ்ரீஸ்ரீ என்று டைட்டில் வைத்துக் கொள்கின்றனர். மகாநாடுகளிலும் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். நீங்கள் தான் புரிய வைப்பதற்காக நிமித்தமாக ஆகியிருக்கிறீர்கள். ஸ்ரீஸ்ரீ ஒரே ஒரு சிவபாபா தான். அவர் தான் இதுபோல் ஸ்ரீ தேவதை ஆக்குகிறார். அவர்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றின் படிப்பைப் படித்து விட்டு டைட்டில் கொண்டு வருகின்றனர். உங்களையோ ஸ்ரீஸ்ரீ பாபா தான் ஸ்ரீ அதாவது சிரேஷ்டமானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். இது தமோபிரதானமான மிகக் கீழான உலகம். தீய ஒழுக்கத்திலேயே பிறவி எடுப்பவர்கள். எங்கே பாபாவின் டைட்டில், எங்கே இந்த பதீத மனிதர்கள் தங்களுக்கே வைத்துக் கொள்கின்றனர்! உண்மையிலும் உண்மையான சிரேஷ்ட மகான் ஆத்மாக்களோ, தேவி-தேவதைகள் தான் அல்லவா? சதோபிரதான உலகத்தில் எந்த ஒரு தமோபிரதான மனிதரும் இருக்க முடியாது. இரஜோவின் மூலம் இரஜோ மனிதர் தான் இருப்பார்கள். தமோகுணி அல்ல. வர்ணங்களும் பாடப் படுகின்றன இல்லையா? இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், இதற்கு முன்போ எதையுமே புரிந்து கொள்ளவில்லை. இப்போது பாபா எவ்வளவு புத்திசாலிகளாக ஆக்குகிறார்! நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறீர்கள்! சிவபாபாவின் பண்டாரா (களஞ்சியம்) நிறைந்துள்ளது. சிவபாபாவின் பண்டாரா எது? (அவிநாசி ஞான இரத்தினங்களுடையது). சிவபாபாவின் பண்டாரா நிறைந்துள்ளது, அதனால் காலனாகிய பகைவன் தூர விலகி விடுவான். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானரத்தினங்கள் தருகிறார். தாமே கடலாக இருப்பவர். ஞான ரத்தினங்களின் கடல் அவர். குழந்தைகளின் புத்தி எல்லையற்றதில் செல்ல வேண்டும். இவ்வளவு கோடி ஆத்மாக்கள் அனைவரும் தங்கள்-தங்கள் சரீரமாகிய ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். இது எல்லையற்ற நாடகம். ஆத்மா இந்த ஆசனத்தில் வீற்றிருக்கின்றது. ஓர் ஆசனத்தைப் போல் மற்றொன்று இருக்காது. அனைவரின் தோற்ற அமைப்பும் தனிப்பட்டதாகும். இது இயற்கையின் அற்புதம் எனப்படும். ஒவ்வாருவருக்கும் எப்படிப்பட்ட அவிநாசி பாகம்! இவ்வளவு மிகச்சிறிய ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் பதிவுகள் அடங்கியுள்ளது. மிக சூட்சுமமானது. இதைவிட சூட்சும அதிசயம் வேறெதுவும் இருக்க முடியாது. இவ்வளவு சிறிய ஆத்மாவில் முழு பாகமும் நிரம்பியுள்ளது. அது இங்கேயே பாகத்தை நடிக்கின்றது. சூட்சுமவதனத்திலோ எந்த ஒரு பாகமும் நடிக்கப் படுவதில்லை. பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார்! பாபாவின் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். இது தான் ஞானம். அனைவரின் உள்ளுக்குள் உள்ளதை அறிந்திருக்கிறார் என்பதில்லை. இந்த ஞானத்தை அறிந்துள்ளார். அந்த ஞானம் உங்களுக்குள்ளும் வெளிப்படுகின்றது. இந்த ஞானத்தின் மூலம் தான் நீங்கள் இவ்வளவு உயர்ந்த பதவியைப் பெறுகிறீர்கள். இந்தப் புரிதலும் உள்ளது இல்லையா? பாபா விதை வடிவமாக உள்ளார். அவருக்குள் மரத்தின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் உள்ளது. மனிதர்களோ இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விட்டனர். அதனால் ஞானம் வர முடியாது. இப்போது உங்களுக்கு சங்கமயுகத்தில் இந்த முழு ஞானமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பாபா மூலம் நீங்கள் முழுச் சக்கரத்தையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். இதற்கு முன் நீங்கள் எதையும் அறியாதிருந்தீர்கள். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இது உங்களின் கடைசி ஜென்மம். புருஷார்த்தம் செய்து-செய்தே பிறகு நீங்கள் முழு பிராமணராக ஆகி விடுவீர்கள். இப்போது இல்லை. இப்போதோ நல்ல-நல்ல குழந்தைகளும் கூட பிராமணரில் இருந்து மீண்டும் சூத்திரராக ஆகி விடுகின்றனர். இது மாயாவிடம் தோல்வியடைதல் எனச் சொல்லப் படும். பாபாவின் மடியிலிருந்து தோல்வியடைந்து இராவணனின் மடியில் சென்று விடுகின்றனர். எங்கே பாபாவின் சிரேஷ்டமாவதற்கான மடி, எங்கே தாழ்ந்தவராக ஆவதற்கான மடி! ஒரு விநாடியில் ஜீவன்முக்தி. ஒரு விநாடியில் முழு துர்திசை ஆகி விடுகின்றது. பிராமணக் குழந்தைகள் நல்லபடியாகப் அறிந்துள்ளனர், எப்படி துர்திசை ஏற்படுகிறது என்று. இன்று பாபாவுடையவர்களாக ஆகின்றனர், நாளை பிறகு மாயாவின் கூண்டுக்குள் வந்து இராவணனுடையவர்களாக ஆகி விடுகின்றனர். பிறகு நீங்கள் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் ஒரு சிலர் காப்பாற்றவும் படுகிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்கள், மூழ்குகின்றனர் என்றால் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டே இருங்கள். எவ்வளவு மோதல் ஆகி விடுகின்றது!

 

பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இங்கே பள்ளிக்கூடத்தில் நீங்கள் படிக்கிறீர்கள் இல்லையா? எப்படி நாம் இந்தச் சக்கரத்தைச் சுற்றி வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்படி-இப்படிச் செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குக் கட்டளை கிடைக்கின்றது. பகவான் வாக்கோ நிச்சயமாக உள்ளது. அவருடைய ஸ்ரீமத் ஆகிறது இல்லையா? நான் குழந்தைகளாகிய உங்களை சூத்திரரில் இருந்து தேவதை ஆக்குவதற்காக வந்துள்ளேன். இப்போது கலியுகத்தில் உள்ளது சூத்திர சம்பிரதாயம். நீங்கள் அறிவீர்கள் கலியுகம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். பாபாவின் மூலம் இந்த ஞானம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. சாஸ்திரங்கள் என்னென்ன உருவாக்கியுள்ளனரோ, அவை அனைத்திலும் உள்ளது மனிதர்களின் வழிமுறை. ஈஸ்வரனோ சாஸ்திரத்தை உருவாக்குவதில்லை. ஒரு கீதைக்கு மட்டுமே எத்தனை பெயர் வைத்துள்ளனர். காந்தி கீதை, தாகூர் கீதை முதலான. ஏராளமான பெயர்கள். கீதையை மனிதர்கள் ஏன் இவ்வளவு படிக்கின்றனர்? எதையும் புரிந்து கொள்வதோ கிடையாது. அதே அத்தியாயத்தை எடுத்துக் கொண்டு அவரவர் அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டுள்ளனர். அவை அனைத்துமோ மனிதர்கள் உருவாக்கியவை இல்லையா? நீங்கள் சொல்ல முடியும், மனிதர்களின் வழிமுறையினால் உருவான கீதையைப் படித்ததால் இன்று இந்த நிலைமை உருவாகியுள்ளது. கீதை தான் முதல் நம்பர் சாஸ்திரம். அது தேவி-தேவதா தர்மத்தின் சாஸ்திரம். இது உங்களுடைய பிராமண குலம். இதுவும் பிராமண தர்மம் இல்லையா? எத்தனை தர்மங்கள்! யார்-யார் என்னென்ன தர்மங்களைப் படைத்தார்களோ, அவர்களின் பெயரால் அவை நடைபெறுகின்றன. ஜைனர்கள் மகாவீர் எனச் சொல்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் மகாவீர்-மகாவீரணிகள். உங்களுக்குக் கோவிலில் (தில்வாலா) ஞாபகார்த்தம் உள்ளது. இராஜயோகம் இல்லையா? கீழே யோக தபஸ்யாவில் அமர்ந்துள்ளனர். மேலே இராஜ்யத்தின் சித்திரம் உள்ளது. இராஜயோகத்தின் மிகச்சரியான கோவில். பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துள்ளனர். முற்றிலும் சரியான நினைவுச் சின்னம். புத்தியைப் பயன்படுத்தி சரியாக அமைத்துள்ளனர். பிறகு யார் என்ன பெயர் சொன்னார்களோ, அந்தப் பெயரை வைத்துள்ளனர். இதை மாடல் ரூபத்தில் செய்துள்ளனர். சொர்க்கம் மற்றும் சங்கமயுகத்தின் இராஜயோகத்தை அமைத்துள்ளனர். நீங்கள் முதல், இடை, கடை பற்றி அறிவீர்கள். ஆரம்பத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆரம்பம் என்று சங்கமயுகத்தைச் சொன்னாலும் சரி, சத்யுகத்தைச் சொன்னாலும் சரி. சங்கமயுகத்தின் காட்சியைக் கீழே காட்டுகின்றனர். பிறகு இராஜ்யம் மேலே காட்டப் பட்டுள்ளது. ஆக, சத்யுகம் என்பது ஆரம்பம், பிறகு இடையில் உள்ளது துவாபர யுகம். கடைசியை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். இவை அனைத்தும் அழிந்தாக வேண்டும். முழு ஞாபகார்த்தம் உருவாக்கப் பட்டுள்ளது. தேவி-தேவதைகள் தான் பிறகு வாமமார்க்கத்தில் செல்கின்றனர். துவாபரயுகத்திலிருந்து வாமமார்க்கம் ஆரம்பமாகின்றது. ஞாபகார்த்தம் முழுவதும் மிகச்சரியாக உள்ளது. ஞாபகார்த்தமாக அநேகக் கோவில்கள் கட்டியுள்ளனர். இங்கே தான் அனைத்து அடையாளங்களும் உள்ளன. கோவில்களும் இங்கே தான் கட்டுகின்றனர். தேவி-தேவதைகள் பாரதவாசிகள் தாம் இராஜ்யம் செய்து சென்றுள்ளனர் இல்லையா? பிறகு பின்னாளில் எத்தனைக் கோவில்கள் கட்டுகின்றனர்! சீக்கியர்கள் அநேகர் இருப்பார்களானால் அவர்கள் தங்களது கோவிலைக் கட்டி விடுவார்கள். இராணுவத்தினரும் கூட தங்கள் கோவிலைக் கட்டிக் கொள்கின்றனர். பாரதவாசிகள் தங்களின் கிருஷ்ணர் அல்லது இலட்சுமி-நாராயணரின் கோவிலைக் கட்டுவார்கள். ஹனுமான், கணேஷ் இவர்களின் கோவில் கட்டுவார்கள். இந்த சிருஷ்டிச் சக்கரம் முழுவதும் எப்படிச் சுற்றுகிறது, எப்படி படைத்தல், அழித்தல், காத்தல் நடைபெறுகின்றது - இதை நீங்கள் தான் அறிவீர்கள். இது இருள் நிறைந்த இரவு எனச் சொல்லப்படும். பிரம்மாவின் பகல் மற்றும் இரவு தான் பாடப்பட்டுள்ளது. ஏனென்றால் பிரம்மா தான் சக்கரத்தில் வருகிறார். இப்போது நீங்கள் பிராமணர்கள். பிறகு தேவதை ஆவீர்கள். முக்கியமானவரோ பிரம்மா ஆகிறார் இல்லையா? இரவு, பகல் என்பதை பிரம்மாவுடையதாக வைப்பதா, விஷ்ணுவுடையதாக வைப்பதா? பிரம்மா இரவினுடையவர், விஷ்ணு பகனுடையவர். அவரே இரவிலிருந்து பகலுக்கு வருகிறார். பகல் இருந்து 84 பிறவிகளுக்குப் பிறகு இரவில் வருகிறார். எவ்வளவு சுலபமான ஞானம்! இதையும் கூட முழுமையாக நினைவு செய்ய முடிவதில்லை. முழுமையான ரீதியில் படிக்கவில்லை என்றால் நம்பர்வார் புருஷார்த்தத்தின் படி பதவி பெறுகின்றனர். எவ்வளவு நினைவு செய்கின்றனரோ, அந்த அளவு சதோபிரதானமாக ஆவார்கள். சதோபிரதானமாக ஆனால் பாரதமும் சதோபிரதானமாகும். குழந்தைகளிடம் எவ்வளவு ஞானம் உள்ளது! இந்த ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும். இந்த ஞானம் புது உலகத்திற்கானது தான். அதை எல்லையற்ற தந்தை வந்து தருகிறார். மனிதர்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றனர். ஆங்கிலேயர்களும் அழைக்கின்றனர், ஓ காட்ஃபாதர், லிபரேட்டர், கைடு என்று. அர்த்தமோ குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. பாபா வந்து துக்கத்தின் உலகமாகிய இரும்பு யுகத்திலிருந்து பொன்யுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். பொன்யுகம் நிச்சயமாக இருந்து சென்றுள்ளது. அதனால் தான் நினைவு செய்கின்றனர் இல்லையா? குழந்தைகள் உங்களுக்கு உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். மேலும் தெய்வீக கர்மங்களையும் செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) பாபாவிடமிருந்து கிடைத்துள்ள அழிவற்ற ஞான ரத்தினங்களின் அளவற்ற கஜானாவை நினைவில் வைத்து புத்தியை எல்லையற்றதில் கொண்டு செல்ல வேண்டும். இந்த எல்லையற்ற நாடகத்தில் எப்படி ஆத்மாக்கள் அவரவர் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர் - இயற்கையின் இந்த அதிசயத்தை சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும்.

 

2) சதா புத்தியில் நினைவிருக்க வேண்டும், நாம் சங்கமயுக பிராமணர்கள் என்பது. நமக்கு பாபாவின் உயர்ந்த மடி கிடைத்துள்ளது. நாம் இராவணனின் மடியில் போகக் கூடாது. நமது கடமை, மூழ்குகிறவர்களையும் காப்பாற்றுவதாகும்.

 

வரதானம்:

சேவையின் பாவனையுடன் சேவை செய்தபடி முன்னேறக் கூடிய மற்றும் பிறரை முன்னேற்றக் கூடிய தடைகளற்ற சேவாதாரி ஆகுக.

 

சேவையின் பாவனை வெற்றியைக் கொடுக்கிறது. சேவையில் ஒரு வேளை அகம்பாவம் வந்துவிட்டது என்றால் அதை சேவை பாவனை என்று சொல்ல மாட்டோம். எந்த ஒரு சேவையிலும் ஒரு வேளை அகம்பாவம் கலந்திருந்தது என்றால் உழைப்பும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கும், நேரமும் அதிகமாக எடுக்கும், மேலும் தனக்குள் திருப்தியும் இருக்காது. சேவையின் பாவனையில் இருக்கும் குழந்தைகள் தாமும் முன்னேறுவார்கள், பிறரையும் முன்னேற்றுவார்கள். அவர்கள் எப்போதும் பறக்கும் கலையின் அனுபவம் செய்வார்கள். அவர்களின் ஊக்கம், உற்சாகம் சுயத்தை தடைகளற்றவர்களாக ஆக்குகிறது, பிறருக்கு நன்மை செய்கின்றது.

 

சுலோகன்:

யார் மிகவும் நுட்பமான மற்றும் கவர்ந்து ஈர்க்கக் கூடிய நூலிலிருந்தும் கூட விடுபட்டவரோ அவரே ஞானி ஆத்மா ஆவார்.

ஓம்சாந்தி