29.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! முதன் முதலில் அனைவருக்கும் தந்தையின் சரியான அறிமுகம் கொடுத்து கீதையின் பகவானை நிரூபியுங்கள், பிறகு உங்களது பெயர் பிரபலமாகும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் நான்கு யுகங்களையும் சுற்றி வந்திருக்கிறீர்கள், அதன் வழக்கம் பக்தி மார்க்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அது எது?

 

பதில்:

நீங்கள் நான்கு யுகங்களையும் சுற்றி வந்தீர்கள், அவர்கள் அனைத்து சாஸ்திரங்கள், சிலைகள் போன்றவைகளை வண்டியில் வைத்துக் கொண்டு நாலாபுறமும் ஊர்வலமாக சுற்றி வருகின்றனர். பிறகு வீட்டிற்குக் கொண்டு வந்து தூங்க வைத்து விடுகின்றனர். நீங்கள் பிராமணன், தேவதை, சத்திரியர் ஆகிறீர்கள். இந்த சக்கரத்திற்குப் பதிலாக அவர்கள் அவ்வாறு சுற்றி வர ஆரம்பித்து விட்டனர். இதுவும் வழக்கமாகி விட்டது.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். யாருக்காவது புரிய வைக்கின்ற பொழுது தந்தை ஒருவர் தான் என்பதை அந்தளவில் தெளிவாகப் புரிய வையுங்கள். தந்தை ஒருவரா? அல்லது பலரா? என்று கேட்கக் கூடாது. பலர் என்று கூறிவிடுவர். படைக்கும் இறை தந்தை ஒருவர் தான் என்று கூறியே ஆக வேண்டும். அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். அவர் பிந்துவாக (புள்ளி வடிவில்) இருக்கின்றார் என்று முதலிலேயே கூறிவிடக் கூடாது, இதில் குழப்பமடைந்து விடுவர். இரண்டு தந்தைகள் உள்ளனர் - லௌகீகம் மற்றும் பரலௌகீகம் என்பதை முதன் முதலில் நல்ல முறையில் புரிய வையுங்கள். ஒவ்வொருவருக்கும் லௌகீகம் இருக்கவே செய்கிறது. இவரை சிலர் குதா என்றும் சிலர் இறைவன் என்றும் கூறுகின்றனர். இருப்பதோ ஒருவர் தான். அனைவரும் ஒருவரைத் தான் நினைவு செய்கின்றனர். தந்தை தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் என்ற நம்பிக்கையை முதன் முதலில் உறுதிப்படுத்துங்கள். சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காகத் தான் அவர் இங்கு வருகின்றார். இதையே சிவஜெயந்தி என்றும் கூறுகின்றனர். சொர்க்கத்தை படைக்கும் தந்தை பாரதத்தில் தான் சொர்கத்தை படைக்கின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதில் தான் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஆக முதன் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். அவரது பெயர் சிவன். கீதையில் பகவானின் மகாவாக்கியம் இருக்கிறது அல்லவா! முதன் முதலில் இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி எழுதி வாங்க வேண்டும். கீதையில் பகவானின் மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் அதாவது நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றேன். இவ்வாறு யார் ஆக்க முடியும்? அவசியம் புரிய வைக்க வேண்டும். பிறகு பகவான் யார்? என்பதையும் புரிய வைக்க வேண்டியிருக்கும். சத்யுகத்தில் முதல் நம்பரில் இருந்த லெட்சுமி நாராயணன் தான் பிறகு 84 பிறவிகள் எடுப்பார். பிறகு தான் மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு இவ்வளவு பிறவிகள் இருக்க முடியாது. முதலில் வரக் கூடியவர்கள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றனர். சத்யுகத்தில் எதையும் கற்றுக் கொள்வது கிடையாது. அவசியம் சங்கமத்தில் தான் கற்றிருப்பர். ஆக முதன் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எவ்வாறு ஆத்மாவை பார்க்க முடியாதோ, புரிந்து கொள்ள முடியுமோ, அதே போன்று பரமாத்மாவையும் பார்க்க முடியாது. அவர் ஆத்மாக்களாகிய நமது தந்தை என்பதை நாம் புத்தியினால் புரிந்து கொள்கிறோம். அவர் பரம் ஆத்மா என்று கூறப்படுகின்றார். அவர் சைத்தன்ய பாவனமாக இருக்கின்றார். அவர் வந்து பதீத உலகை பாவனமாக்க வேண்டியிருக்கிறது. ஆக முதலில் தந்தை ஒருவர் என்பதை நிரூபித்து கூறுவதன் மூலம் கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல என்பதும் நிரூபணம் ஆகிவிடும். குழந்தைகளாகிய நீங்கள் நிரூபித்துக் கூற வேண்டும். ஒரு தந்தை தான் சத்தியமானவர் என்று கூறப்படுகின்றார். மற்ற கர்ம காண்டங்கள் அல்லது தீர்த்த யாத்திரை போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களில் இருக்கிறது. ஞானத்தில் இதற்கான வர்ணனைகள் எதுவும் கிடையாது. இங்கு எந்த சாஸ்திரமும் கிடையாது. தந்தை வந்து முழு ரகசியத்தையும் புரிய வைக்கின்றார். முதன் முதலில் குழந்தைகளாகிய நீங்கள் பகவான் ஒருவர் தான், அவர் நிராகாரமானவர், சாகாரமானவர் அல்ல என்ற விசயத்தில் வெற்றியடைய வேண்டும். பரம்பிதா பரமாத்மா சிவ பகவானின் மகாவாக்கியம், ஞானக் கடலானவர் அனைவருக்கும் தந்தையானவர் அவர். ஸ்ரீகிருஷ்ணர் அனைவருக்கும் தந்தையாக ஆகவிட முடியாது. தேகத்தின் அனைத்து தர்மத்தையும் விட்டு விட்டு என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று அவர் யாருக்கும் கூற முடியாது. மிக எளிய விசயம் தான். ஆனால் சாஸ்திரம் போன்றவைகள் படித்து, பக்தியில் உறுதியானவர்களாக ஆகிவிட்டனர். இன்றைய நாட்களில் சாஸ்திரம் போன்றவைகளை வண்டியில் வைத்துக் கொண்டு ஊர்வலம் வருகின்றனர். சிலைகளை, கிரந்தத்தையும் வைத்து வலம் வருகின்றனர். பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து தூங்க வைத்து விடுகின்றனர். நாம் தேவதையிலிருந்து சத்ரியர், வைஷ்யர், சூத்ரர்களாக ஆகிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த சக்கரத்தைச் சுற்றி வருகிறோம். சக்கரத்திற்குப் பதிலாக அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வீட்டில் வைத்து விடுகின்றனர். அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நாள் இருக்கிறது, அந்த நாளில் வலமாக எடுத்து வருகின்றனர். ஆக முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் கிடையாது, சிவ பகவானின் மகாவாக்கியம் என்பதை நிரூபணம் செய்து கூற வேண்டும். சிவன் தான் பிறப்பு இறப்பு அற்றவராக இருக்கின்றார். அவர் அவசியம் வருகின்றார், ஆனால் அவரது பிறப்பு தெய்வீகமானது. பாக்கிய ரதத்தில் வந்து சவாரி செய்கின்றார். வந்து பதீதமானவர்களை பாவனம் ஆக்குகின்றார். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் ரகசியத்தை புரிய வைக்கின்றார். இந்த ஞானத்தை வேறு யாரும் அறியவில்லை. தந்தை சுயம் வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முக்கிய விசயம் தந்தையின் அறிமுகம் ஆகும். அவர் தான் கீதையின் பகவான் ஆவார், அதை நீங்கள் நிரூபணம் செய்து கூறும் பொழுது உங்களது பெயர் மிகவும் பிரபலமாகி விடும். ஆக அந்த மாதிரியாக நோட்டீஸ் பிரிண்ட் செய்து அதில் சித்திரங்களும் வரைந்து பிறகு விமானத்திலிருந்து கீழே தூவ வேண்டும். தந்தை முக்கிய முக்கிய விசயங்களைப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். முக்கியமான ஒரு விசயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டால் போதும் நீங்கள் வெற்றியடைந்து விடுவீர்கள். இதில் உங்களது பெயர் மிகவும் பிரபலமாகி விடும். இதில் யாரும் உங்களுடன் சண்டையிட மாட்டார்கள். இது மிகவும் தெளிவான விசயமாகும். நான் சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்? என்று தந்தை கேட்கின்றார். நான் வந்து குழந்தைகளுக்கு ஞானம் கூறுகிறேன். வந்து பாவனம் ஆக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தைக் கூறுங்கள். தந்தையின் மகிமை தனிப்பட்டது, கிருஷ்ணரின் மகிமை தனிப்பட்டது. சிவபாபா வந்து பிறகு கிருஷ்ணராகவோ அல்லது நாராயணனாகவோ ஆகின்றார் என்பது கிடையாது, 84 பிறவிகளில் வருகின்றார் என்பதும் கிடையாது. இந்த எல்லா விசயங்களையும் புரிய வைப்பதில் உங்களது புத்தி ஈடுபட்டிருக்க வேண்டும். முக்கியமானது கீதை. பகவானின் மகாவாக்கியம், ஆக அவசியம் பகவானுக்கு உண்மையான கீதையைக் கூற வாய் தேவை அல்லவா! பகவான் நிராகாராக இருக்கின்றார். ஆத்மா வாயின்றி எப்படி பேச முடியும்? அதனால் தான் நான் சாதாரண உடலை ஆதாரமாக எடுக்கிறேன் என்று கூறுகின்றார். யார் முதலில் லெட்சுமி நாராயணனாக ஆகிறார்களோ அவர்களே 84 பிறவிகள் எடுத்து எடுத்து கடைசிக்கு வந்து விடுகின்றனர், பிறகு அவரது உடலில் தான் வருகிறேன். கிருஷ்ணரின் கடைசிப் பிறவியிலும் கடைசியில் வருகிறேன். எப்படியெல்லாம் மற்றவர்களுக்குப் புரிய வைப்பது? என்று சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு விசயத்தின் மூலம் உங்களது பெயர் பிரபலமாகி விடும். படைப்பவராகிய தந்தையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்து விடும். பிறகு உங்களிடத்தில் பலர் வருவார்கள். இங்கு வந்து சொற்பொழிவு செய்யுங்கள் என்று அழைப்பார்கள்.ஆகையால் முதன் முதலில் அல்லாவைப் பற்றி நிரூபணம் செய்து புரிய வையுங்கள். பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பின் பாரதத்தில் தான் பாக்கியசாலி ரதத்தில் வருகின்றார். இவர் சௌபாக்கியசாலியானவர், இந்த ரதத்தில் தான் பகவான் வந்து அமர்கின்றார். குறைந்த விசயமா என்ன! பகவான் இவரிடத்தில் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - நான் பல பிறவிகளின் கடைசியில் இவரிடத்தில் பிரவேசம் செய்கின்றேன். ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மாவின் ரதம் அல்லவா! அவர் சுயம் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. பல பிறவிகளின் கடைசியில் இருக்கின்றார். ஒவ்வொரு பிறவியிலும் முகம், தொழில் போன்றவைகள் மாறிக்கொண்டே இருக்கும். பல பிறவிகளின் கடைசியில் யாரிடத்தில் பிரவேசிக் கின்றேனோ அவர் பிறகு கிருஷ்ணராக ஆகின்றார். சங்கமயுகத்தில் வருகின்றார். நாமும் தந்தை யினுடையவராகி தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகிறோம். தந்தை கற்பித்து பிறகு கூடவே அழைத்து செல்கின்றார், கஷ்டத்திற்கான வேறு எந்த விசயமும் கிடையாது. என் ஒருவனை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார், ஆக எப்படியெல்லாம் எழுத வேண்டும்? என்று சிந்தனை செய்ய வேண்டும். இது தான் முக்கிய தவறாகும், இதனால் தான் பாரதம் அதர்மமானதாக, ஏழையானதாக ஆகிவிட்டது. தந்தை மீண்டும் வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். பாரதத்தை மீண்டும் உண்மையான தர்மமானதாக, செல்வம் மிக்கதாக ஆக்குகின்றார். முழு உலகையும் உண்மை தர்மத்தைச் சார்ந்ததாக ஆக்குகின்றார். அந்த நேரத்தில் முழு உலகிற்கும் நீங்கள் தான் எஜமானர்களாக இருப்பீர்கள். நீண்ட ஆயுளுடனும், சுகமாக இருப்பதற்கும் வாழ்த்துகிறேன் என்று உலகில் கூறுகின்றனர் அல்லவா! சதா உயிருடன் இருங்கள் என்று ஆசிர்வாதம் பாபா கொடுப்பது கிடையாது. அமரராக இருங்கள் என்று சாதுக்கள் கூறுகின்றனர். அமரர்கள் அவசியம் அமரபுரியில் தான் இருப்பார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். மரண உலகில் அமரர் என்று எப்படி கூற முடியும்? ஆக குழந்தைகள் கலந்து ஆலோசனை நடத்துகிறீர்கள் எனில் தந்தையிடம் வழிமுறைகளைக் கேட்கிறீர்கள். பாபா முன் கூட்டியே தன் கருத்தைக் கூறிவிடுகின்றார்: அனைவரும் அவரவர்களது கருத்துக்களை எழுதி அனுப்பி வையுங்கள், பிறகு ஒன்றாகவும் ஆக்கிக் கொள்ளலாம். முரளியில் எழுதுவதன் மூலம் கருத்துக்கள் அனைவரிடத் திலும் சென்றடைந்து விடுகிறது. 2-3 ஆயிரம் செலவு குறைந்து விடுகிறது. இந்த 2-3 ஆயிரம் மூலம் 2-3 சென்டர்களை திறந்து விட முடியும். ஊர் ஊராக சித்திரங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சூட்சுமவதன விசயங்களில் அதிக ஈடுபாடு காண்பிக்கக் கூடாது. பிரம்மா, விஷ்ணு, சங்கர் சித்திரம் இருக்கிறது எனில் இதைப் பற்றி சிறிது தான் புரிய வைக்கப்படுகிறது. இவர்களுக்கு பாகம் சிறிது தான். நீங்கள் செல்கிறீர்கள், சந்திக்கிறீர்கள், மற்றபடி வேறு எதுவும் கிடையாது. ஆகையால் இதில் அதிக ஆர்வம் கொடுக்கப்படுவது கிடையாது. இங்கு ஆத்மாவை அழைக்கப்படுகின்றனர், அவர்களையும் காண்பிக்கின்றனர், சிலர் வந்து அழவும் செய்கின்றனர். சிலர் அன்பாக சந்திப்பு செய்கின்றனர். சிலர் துக்கக் கண்ணீர் விடுகின்றனர். இவையனைத்தும் நாடகத்தில் பாகமாக இருக்கிறது. இது தான் ஞான உரையாடல் என்று கூறப்படுகிறது. அவர்கள் பிராமணர்களிடத்தில் வேறு எந்த ஆத்மாவையோ அழைக்கின்றனர், பிறகு அவரைப் போல உடை போன்றவைகளை உடுத்துவர். அந்த சரீரமோ அழிந்து விட்டது, மற்றபடி ஆடை அணிந்து கொள்வது யார்? உங்களிடத்தில் அந்த வழக்கம் கிடையாது. அழுவதற்கான விசயமே கிடையாது. ஆக உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக ஆக வேண்டும், எப்படி ஆவது? அவசியம் இடைப்பட்ட சங்கமயுகத்தில் தான் தூய்மையானவர்களாக ஆகிறீர்கள். நீங்கள் ஒரு விசயத்தை நிரூபணம் செய்யும் பொழுது இவர்கள் சரியாகத்தான் கூறுகிறார்கள் என்று கூறுவர். பகவான் ஒருபொழுதும் பொய் உரைக்க முடியாது. பிறகு பலருக்கு அன்பு ஏற்பட்டு விடும், பலர் வருவார்கள். தகுந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அனைத்து கருத்துக்களும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியில் என்ன என்ன நடக்கும்? என்பதையும் பார்ப்பீர்கள், சண்டை ஏற்படும், அணுகுண்டுகளை ஏவுவார்கள். அந்த பக்கம் தான் முதலில் மரணம் ஏற்படும். இங்கு ரத்த நதி பாயும், பிறகு நெய்யாறு பாலாறு ஓடும். ஆரம்பமும் (புகைவது) முதலில் அயல்நாட்டிலிருந்து தான் ஏற்படும், பயமும் அங்கு இருக்கிறது. எவ்வளவு பெரிய பெரிய ஏவுகனைகளை உருவாக்குகின்றனர். எதை எதையெல்லாம் அதில் கலக்கின்றனர், அது முற்றிலும் ஊரை அழித்து விடுகிறது. யார் சொர்க்கத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தது? என்பதையும் கூற வேண்டும். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் தந்தை அவசியம் சங்கமத்தில் தான் வருகின்றார். இப்பொழுது சங்கமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையின் நினைவு தான் முக்கியமானது என்று உங்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. இதன் மூலம் தான் பாவங்கள் அழியும். பகவான் எப்பொழுது வந்தாரோ அப்பொழுது என்னை நினைவு செய்தால் சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள் என்று கூறியிருந்தார். முக்திதாமத்திற்குச் சென்று விடுவீர்கள். பிறகு முதலிருந்து சக்கரம் சுற்ற ஆரம்பித்து விடும். தெய்வீக தர்மம், இஸ்லாமியம், பௌத்த தர்மம் ...  மாணவர்களாகிய உங்களது புத்தியில் இந்த முழு ஞானமும் இருக்க வேண்டும் அல்லவா! குஷியிருக்கிறது, நான் எவ்வளவு வருமானம் செய்கிறேன்! இந்த அமரக்கதை அமரர் பாபா உங்களுக்கு கூறுகின்றார். அவருக்கு நீங்கள் பல பெயர்களை வைத்து விட்டீர்கள். முதன்மையானது தெய்வீக தர்மம், பிறகு அனைவருடையதும் வளர்ச்சி அடைந்து அடைந்து மரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. பல தர்மங்கள், பல வழிமுறைகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த ஒரே தர்மம் ஒரு ஸ்ரீமத் மூலம் ஸ்தாபனை ஆகிறது. வேறுபாட்டிற்கான (மாறுபட்ட) விசயம் கிடையாது. இந்த ஆன்மீக ஞானம் ஆன்மீகத் தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு குஷியும் இருக்க வேண்டும்.

 

தந்தை நமக்கு படிப்பு கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அனுபவத்தில் கூறுவதால் பகவான் நமக்கு படிப்பு கற்பிக்கின்றார், வேறு என்ன வேண்டும்? என்ற சுத்தமான அகங்காரம் இருக்க வேண்டும். நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகின்றோம் எனில் ஏன் குஷியிருப்பது கிடையாது, அல்லது நம்பிக்கையில் எங்கேயோ சந்தேகம் இருக்கிறது. தந்தையின் மீது சந்தேகம் வரவே கூடாது. மாயை சந்தேகத்தில் கொண்டு வந்து மறக்க வைத்து விடுகிறது. மாயை கண்களின் மூலம் அதிகம் ஏமாற்றுகிறது என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். நல்ல பொருளை பார்க்கின்ற பொழுது சாப்பிட வேண்டும் என்று உள்ளம் விரும்புகிறது. கண்களால் பார்த்தவுடனேயே அடிக்க வேண்டும் என்ற கோபம் வந்து விடுகிறது. பார்க்கவேயில்லையெனில் எப்படி அடிக்க முடியும்? கண்களால் பார்க்கின்ற பொழுது தான் பேராசை, பற்றுதல் ஏற்படுகிறது. முக்கியமாக ஏமாற்றக் கூடியது கண்களாகும். இதன் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். ஆத்மாவிற்கு ஞானம் கிடைக்கிறது, பிறகு கெட்டப் பார்வை நீங்கிவிடுகிறது. அதற்காக கண்களை எடுத்து விட வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் கெட்டப் பார்வையை நல்ல பார்வையாக ஆக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்காண முக்கிய சாரம்:

1. எனக்கு பகவான் கற்பிக்கின்றார் என்ற போதை மற்றும் குஷியில் சதா இருக்க வேண்டும். எந்த விசயத்திலும் சந்தேக புத்தியுடையவர்களாக ஆகக் கூடாது. சுத்தமான அகங்காரத்துடன் இருக்க வேண்டும்.

 

2. சூட்சுமவதன விசயத்தில் அதிக ஆர்வம் காண்பிக்கக் கூடாது. ஆத்மாவை சதோ பிரதானம் ஆக்குவதற்கான முழுமையிலும் முழுமையான முயற்சி செய்ய வேண்டும். தங்களுக்குள் கலந்தாலோசித்து (ஒன்றுபட்ட கருத்தை) அனைவருக்கும் தந்தையின் சரியான அறிமுகம் கொடுக்க வேண்டும்.

 

வரதானம்:

சங்கமயுகத்தின் மகத்துவத்தை அறிந்து, ஒன்றுக்குப் பல மடங்கு பிரதிபலனை அடையக்கூடிய சர்வ பிராப்திகளும் நிறைந்தவர் ஆகுக.

 

சங்கமயுகத்தில் பாப்தாதாவின் உறுதிமொழி -- ஒன்றைக் கொடுங்கள், இலட்சம் பெறுங்கள். எப்படி சர்வ சிரேஷ்ட சமயம், சர்வ சிரேஷ்ட ஜென்மம், சர்வ சிரேஷ்ட டைட்டில் என்பவை இச்சமயத்தினுடையவையாக உள்ளனவோ, அது போல் சர்வ பிராப்திகளின் அனுபவம் இப்போது தான் ஆகிறது. இப்போது ஒன்றுக்கு லட்சம் மடங்கு மட்டுமில்லை, ஆனால் எப்போது விரும்புகிறீர்களோ, எதை விரும்புகிறீர்களோ, அதற்கு பாபா சேவகர் ரூபத்தில் கட்டுப் பட்டுள்ளார். ஒன்றுக்கு எண்ணற்ற மடங்கு பிரதிபலன் கிடைத்து விடுகிறது. ஏனென்றால் நிகழ்காலத்தில் வரங்களைத் தரும் வள்ளலே உங்களுடையவர். விதை உங்கள் கையில் உள்ளதென்றால் விதை மூலமாக எதை விரும்புகிறீர்களோ, அதை ஒரு விநாடியில் பெற்றுக் கொண்டு, சர்வ பிராப்திகளால் நிரம்பியவராக நீங்கள் ஆக முடியும்.

 

சுலோகன் :

முழுமையான வெற்றியை அடைய விருமிபினால் ஒருவர் மற்றவரின் கருத்துக்களை (விசயங்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும் மதிப்பு அளிக்க வேண்டும.

 

ஓம்சாந்தி