ஓம் சாந்தி

அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கின்ற ஒருவரால் சரியான முடிவுகளை எடுக்க முடிகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எதிர்மறையான சூழ்நிலைகளில் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் அனுபவிப்பது மனித மனதின் இயல்பான தன்மையாகும். சவாலான சூழ்நிலைகளில், மனதை அமைதியான நிலையில் வைத்திருப்பது இயற்கையாகவே சிரமமாகின்றது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தன்னுள் சென்று, அந்த உள்ளார்ந்த அமைதியை உணர முடிகின்ற ஒருவரால், தெளிவாக சிந்திக்க முடிவதோடு, சரியான முடிவுகளையும் எடுக்க முடியும்.

செயல்முறை:

என்னால் உள்ளார்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும்போது, தெளிவாக சிந்திக்கவும் முடிகின்றது. இந்தத் தெளிவின் மூலம், என் மனதில் இயற்கையாகவே சரியான முடிவுகளும் தீர்வுகளும் வெளிப்படுவதை காண்கிறேன். எனக்கு ஒருபோதும் முடிவெடுக்க வேண்டிய சிரமம் இல்லாதிருப்பதோடு, எல்லா முடிவுகளும் சுலபமாகவும் சரியானதாகவும் எடுக்க முடிகின்றது.