ஓம் சாந்தி

எப்போதும் ஆக்கப்பூர்வமானவற்றில் கவனம் செலுத்துவது என்றால், மன உளைச்சலில் இருந்து விடுபட்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

வீணான, எதிர்மறையான அல்லது சாதாரணமானவற்றை பற்றி சிந்திக்காமல், பேசாமல் மற்றும் செயற்படுத்தாமல் இருப்பது என்பது, கவனம் செலுத்துவது என்று பொருள்படும். இவ்விதத்தில் கவனம் செலுத்தும் ஒருவர், வெளிப்புறத்தில் இருக்கும் எதிர்மறையானவற்றையும் கூட உள்ளே அனுமதிக்காமல் இருக்கும்போது, மன உளைச்சலில் இருந்து எப்போதும் விடுபட்டிருக்கின்றார். அத்துடன், கிடைக்கக்கூடிய அனைத்தும் சரியான முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

செயல்முறை:

நான் தொடர்ந்து கவனம் செலுத்தும் அதே வேளையில், எனது உள்ளார்ந்த பொக்கிஷங்களை ஆக்கப்பூர்வமான லட்சியத்திற்கு என்னால் பயன்படுத்த முடியும் போது, உள்ளார்ந்த ஆற்றலின் உபயோகம் இருக்கிறது. சூரிய ஒளி இருளை அகற்றுவது போல், உள்ளார்ந்த ஆற்றலை அடையாளம் கண்டு, இவ்வாறு உபயோகப்படுத்தும்போது, எதிர்மறையானவை முடிந்துவிடுகிறது.