ஓம் சாந்தி

திடமான மனவுறுதியோடு இருப்பது என்பது, அனைத்து எண்ணங்களையும் நடைமுறைக்கு கொண்டுவருவது என்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமது மனதில் தோன்றும் பல எண்ணங்களும் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டியவையாகும்.  இந்த எண்ணங்கள், நேரத்தின் வற்புறுத்தலின் அடிப்படையில் அல்லது நம் தொடர்பில் வரும் மனிதர்களின் அடிப்படையில் வருகின்றன. ஆனால் இந்த எண்ணங்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஒரேவழி, திடமான மனஉறுதியை பயன்படுத்துவதாகும். எங்கு திடமான மனஉறுதி இருக்கிறதோ, அங்கு அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அந்த எண்ணங்களை மெய்யாகும் கடமையுணர்ச்சியும் இருக்கிறது.

செயல்முறை:

என்னால் திடமான மனவுறுதியோடு இருக்கமுடியும்போது, என்னுடைய உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்து, அவற்றை சரியான முறையில் என்னால் பயன்படுத்த முடிகிறது. ஏனென்றால், அனைத்து எண்ணங்களும் என்னுடைய சுய-முன்னேற்றதிற்காக இருப்பதால், இயற்கையாகவே என்னால் அவற்றை நடைமுறைப்படுத்தபடுத்த முடிகின்றது. இதனால் என்னால் தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்யமுடிகின்றது. நான் தற்காலிகமான பாதிப்புகளினால் எதையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், சுய-முன்னேற்றத்திற்காக என்னால் அனைத்தையும் செய்யமுடிகின்றது.