01.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

பெருந்தன்மை:

பெருந்தன்மை திருப்தியை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய வளங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது இயற்கையானது. இருப்பினும்நாம் ஏதாவது கொடுக்கும்போதுநாம் எதிர்பார்ப்பதிலிருந்து விடுபட்டிருப்பதில்லை. நாம் கொடுத்ததை ஈடுகட்டும் அளவிற்கு மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் மனப்போக்கு உள்ளது. நாம் கொடுத்ததை போன்றே மற்றவர்களிடமிருந்து எப்போதும் நாம் பெறுவதில்லை. ஏமாற்றம் தொடர்கின்றது.

செயல்முறை:

உண்மையான பெருந்தன்மை திருப்தியை கொண்டுவருகின்றது. கொடுப்பதில் சந்தோஷம் உள்ளது என்ற உண்மையை நான் பாராட்டுவது அவசியம். கொடுக்கக்கூடிய தன்மையை என்னால் சந்தோஷமாக அனுபவம் செய்ய முடியும்போதுஅதுவே வரவிற்கான ஆதாரமாக ஆகின்றது. மேலும் எனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளில் நான் சிக்கிக்கொள்ளவில்லை. கொடுப்பது என்பது என்னிடத்தில் உள்ளதை பாராட்டுவதோடு அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதாகும்.