01.05.22

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை

குதுகுலத்தோடு இருப்பதே அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பிரச்சனைகளை சந்திக்கும்போது உள்ளார்ந்த உற்சாகத்தை பேணுவது சிரமாக தோன்றலாம் மனமானது அதிகமான எதிர்மறைதன்மை, பயம் மற்றும் கவலைகளில் சிக்கிக்கொள்கிறது. இது பிரச்சனையை அவை இருப்பதைவிட பெரிதாக்கி காட்டும். மேலும் இவை தீர்வு காண்பதிலிருந்தும் பிரச்சனைகளை ஆக்கபூர்வமான முறையில் கையாள்வதிலிருந்தும் நம்மை தடுத்துவிடுகிறது.

செயல்முறை:

ஒரு பிரச்சனையை அறிந்துக்கொண்டவுடன், நான் முதலில் செய்யவேண்டியது, புன்சிரிப்போடு இருப்பதாகும். என்னக்குள் நான் சந்தோஷமாக இருந்து ஒவ்வொரு சூழ்நிலையும் எனக்கு எதையாவது கற்பிப்பதற்காக வந்திருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளும்போது நான் தீர்வுகளை உடனடியாகவும் சுலாபமாகவும் கண்டுபிடிப்பேன்.