01/08/20

இன்றைய சிந்தனைக்கு

கவனக்குறைவின் தளர்வான திருகை இறுக்குவது என்றால் சக்திவாய்ந்தவராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: கவனக்குறைவாக இருக்கும் ஒருவரால் தன்னிடம் இருக்கும் சக்திகளையும் திறன்களையும் பயன்படுத்த முடியாதுள்ளது. உள்ளிருக்கும் அனைத்து நேர்மறையான குணங்களும் வீணாக்கப்படுகின்றன,  ஏனென்றால் கவனக்குறைவாக இருக்கும் ஒருவரால் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த முடியாதுள்ளது. ஆனால் கவனக்குறைவின் தளர்வான திருகை இறுக்கக்கூடியவர் அவருக்குள் இருக்கும் திறன்களை அடையாளம் கண்டு பயன்படுத்த முடியும். எனவே அத்தகைய நபருக்குள் இருக்கும் சக்தி புலப்படும்.

அனுபவம்: நான் கவனக்குறைவிலிருந்து விடுபட முடிந்தால்,  லேசாகவும் மகிழ்ச்சியுடனும் என்னால் முன்னேற முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த சிரமமான அனுபவமும் இல்லை,  எந்தவொரு காரணத்தையும் கூறாமல் அனைத்தையும் என் திறனுக்கு ஏற்றவாறு செய்கிறேன். அனைத்து சூழ்நிலைகளிலும் நான் சக்திவாய்ந்தவனாக இருப்பதை அனுபவம் செய்ய முடிகிறது,  ஏனெனில் நான் சூழ்நிலையின் மாஸ்டர் ஆவேன்.