01/09/20

இன்றைய சிந்தனைக்கு

தன்னுடன் தன்னை ஒப்பீடு செய்வதே மிக சிறந்த ஒப்பீடு ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:  தான் எவ்வாறு இருந்தார் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்,  அவர் எவ்வாறு முன்னேற முடியும் அல்லது எப்படி முன்னேறினார் என்பதைப் பார்ப்பவர் தான் தனது சொந்த வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கொண்டு வருபவர். மாறாக,  தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்,  தொடர்ந்து சாக்கு போக்குகளைக் கண்டுபிடித்து,  ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை விட்டுவிடுகிறார்.

அனுபவம்: நான் சாக்கு போக்குகளிலிருந்து விடுபட்டு,  மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலிருந்து விடுபடும்போது,  மிகவும் சவாலான சூழ்நிலைகளில் கூட என்னால் லேசாக இருக்க முடிகிறது. எனது சொந்த தவறுகளில் அல்லது மற்றவர்களிடம் நான் சிக்ககொள்ளவில்லை,  ஆனால் எனது அனுபவங்களின் புதையல் கிடங்கில் தொடர்ந்து சேர்க்கவும்,  நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு புதிய சவாலுடன் அனுபவங்களில் நிறைந்தவராக இருக்க முடிகிறது.