01.10.20

இன்றைய சிந்தனைக்கு

 

வெற்றி:

அனைத்தையும் சரியான வழிமுறையில் செய்யும்போது வெற்றி இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் உடனடியாக வெற்றியை அனுபவம் செய்யாதபோதுநாம் சில சமயங்களில் குறுக்குவழியை தேர்ந்தெடுப்பதற்கு தூண்டப்படுகின்றோம். நாம் தற்காலிகமாக எதையாவது சாதிக்கும் போதிலும்நீண்ட காலத்திற்கு அவை நன்மை அளிப்பதில்லை - சில சமயங்களில் நாம் ஆசைபட்ட ஒன்றுக்கு எதிரான விளைவை கொண்டுள்ளது.

செயல்முறை:

நான் எப்பொழுதெல்லாம் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றேனோ அப்போது அதை சரியாக செய்துகொண்டிருக்கின்றேனா என உறுதிபடுத்திக்கொள்வது அவசியமாகும். அவ்வபொழுது நான் அவசரமாக செய்வதற்கு தூண்டப்பட்ட போதிலும்இது பின்னால் பிரச்சனைகளை உண்டாகும் என எனக்கு தெரிகின்றது. நான் சரியான வழிமுறையில் தொடர்வதற்கு முயற்சி செய்யும்போதுமுடிவில் இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிகின்றது. மேலும் அக்காரியத்தை முடிக்கும்போது நான் சாதித்ததை அதிகமாக உணர்வேன்.