01.11.23

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை

நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையானது, அவர்களிடமிருந்து ஒத்துழைப்பை பெற்று தருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பது என்றால், அவர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது என்றும் பொருள்படும். இது இயற்கையாகவே அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்து, உற்சாகத்தை உருவாக்குகின்றது. பின்னர் அவர்களால் நேர்மைறையான உணர்வுகளுக்கு சிறப்பாக செயல்பட முடிவதோடு, தங்களுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்த முடிகிறது.

செயல்முறை:

என்னுடன் பணியாற்றும் ஒருவர் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்காததை நான் கவனிக்கும் போது, அந்த நபரின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை சோதிப்பது அவசியம். என்னால் அவர்களிடம் உள்ள தனிப்பட்ட பண்புகளை பாராட்ட முடியும்போது, அந்த நபரின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கை வளர்கிறது. என்னுடைய நம்பிக்கை வளரும்போது, என்னைப் பற்றிய அவர்களின் மனப்போக்கும் வளர்கிறது. படிப்படியாக, நாம் நெருக்கமாகுவதோடு, சேர்ந்து பணியாற்றுவதும் மிகவும் சுலபமாகிவிடுகிறது.