01/12/19

இன்றைய சிந்தனைக்கு

அன்பு :

உண்மையான அன்பு அதைப் பெறுகின்ற அனைவராலும் உணரப்படுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில நேரங்களில் நாம் கொடுக்கும் அன்பிற்கு மற்றவர்கள் பதிலளிக்காமல் இருக்கும் சூழலில் நம்மை நாம் காண்கின்றோம். நாம் முடிந்தவரை அவர்களை புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முயலுகின்றோம், ஆனால் மற்றவர்கள் அதை அங்கீகரிப்பதாக தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் நாம் மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் அக்கறையற்ற தன்மையை குற்றம் சாட்ட தொடங்குகிறோம்.

தீர்வு:

நம்முடைய அன்பு மற்றும் அக்கறைக்கு கைம்மாறு கிடைக்காத நிலையில் மற்றவர்களை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, நாம் கொடுக்கும் அன்பின் தரத்தை நாம் சோதிக்க வேண்டும். நம் அன்பில் சுயநலத்திற்கான ஒரு சுவடு அல்லது எதிர்பார்ப்புகள் கலந்திருந்தால், அந்த அன்பானது மற்றவர்களின் இதயங்களைத் தொட இயலாது உள்ளது. எனவே, நம்முடைய அன்பு தூய்மையானதும் தன்னலமற்றதும் என்பதை நாம் உறுதிப்படுத்திகொள்ள வேண்டும்.