02.01.2021

நடைமுறை ஆன்மீகம்

லேசாகப் பயணிப்பது என்பது வாழ்க்கை பயணத்தை அனுபவிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடந்த கால மூட்டை முடிட்சுகளிலிருந்து விடுபடும்போது வாழ்க்கையில் வெகுதூரம் பயணிக்க முடியும். அனைத்திலிருந்தும் சாரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு, விஸ்தாரத்தை முழுமையாக மூட்டை கட்டிவிடவேண்டும். இதன்முலம் லேசாக இருக்க முடியும். இதனால் ஒருபோதும் எதற்காகவும் நின்றுவிட வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, அணைத்திலிருந்தும் கற்றுக்கொள்ளமுடியும், விஸ்தாரத்தை மூட்டை கட்டிவிட்டு முன்னேறுகிறேன்.

பயிற்சி:

இன்று நான் எனது கடந்த காலத்திலிருந்து ஒரு சுமையாக சுமந்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை தீர்ப்பேன். அதிலிருந்து நான் என்ன பாடத்தை கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்வேன். ஒருமுறை நான் அந்த பாடத்தை கற்றுக்கொண்டவுடன், அந்த சூழ்நிலையின் போது எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வுகளை நான் மீண்டும் அனுபவம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை இன்று என்னால் அதைத் தீர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் நாளை நடக்கும் என்று நம்பி நான் நம்பிக்கை வைக்கின்றேன். இது சூழ்நிலையின் சுமையை முடித்து, லேசான தன்மையைக் கொண்டுவருகிறது.